புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_m10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10 
25 Posts - 69%
heezulia
திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_m10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_m10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_m10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10 
361 Posts - 78%
heezulia
திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_m10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_m10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_m10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10 
8 Posts - 2%
prajai
திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_m10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_m10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_m10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_m10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_m10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_m10திரை விமர்சனம்: இரவின் நிழல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனம்: இரவின் நிழல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 14, 2022 11:10 pm

திரை விமர்சனம்: இரவின் நிழல் Vikatan%2F2022-07%2F6d3dd78a-a1ea-4374-9745-bdc4c1e6f7d5%2F62d7ac2d49387.jpg?rect=0%2C0%2C3125%2C1758&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர்.
அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர்,
அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன்
தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம், ஊடகங்களில்
பேசுபொருளாகிறது.

இயக்குநரின் தற்கொலைக்கு நந்துதான் காரணம் என நம்பும்
அவருடைய மனைவியும் மகளும் அவரை வெறுத்து வீட்டைவிட்டு
வெளியேறி காணாமல் போய் விடுகிறார்கள். ஃபைனான்சியர்
நந்துவைக் கைது செய்ய போலீஸ் துரத்துகிறது.

தனது கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கிளம்பும் நந்து,
ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்து தற்போது பாழடைந்து,
புதர்மண்டிக் கிடக்கும் தனக்கு மிகவும் பரிச்சயமான
ஆசிரமத்துக்குள் போய் ஒளிந்துகொள்கிறார். அங்கிருந்து,
ஊடகங்கள்அறிந்திராத, தன் வாழ்க்கைக் கதையை தனது
திறன்பேசியில் ‘ஆடியோ’வாகப் பதிந்தபடி விவரிக்கத்
தொடங்குகிறார்.

1971-ல் கதை தொடங்குகிறது…
கணவனால் கொலையுண்டு ரத்தச் சகதியாகக் கிடக்கும் தன்னுடைய
தாயின் சடலத்தில் பால் குடிக்க முயலும் ஆறு மாதக் குழந்தையாக
நமக்கு அறிமுகமாகும் நந்துவின் 10 வயது, 18 வயது, 30 வயது,
40 வயதுபருவங்களின் ‘ரோலர் கோஸ்டர்’ வாழ்க்கையில், அவர்
எப்படி ‘இரவின் பிரதி’யாக மாறிப்போனார், அவருடைய ‘நிழல்’
அவரை எதுவரை துரத்திக்கொண்டு வந்தது என்பதை கதை
விவரிக்கிறது.

கதை நிகழும் காலம் சமகாலமாக இருந்து, கதைநிகழும் களமும்
ஒரே இடமாக இருந்து, நிகழும் சம்பவங்களின் வரிசை ஒரே நேர்
கோட்டில் சொல்லப்பட்டால், அதை ‘எளிய விவரிப்பு முறை’
என்கிறோம்.

அதுவே கதாபாத்திரங்கள் உலவும் நிலமும் காலமும் வெவ்வேறு கால
கட்டமாகவும் இடங்களாகவும் இருந்து, அதில் சம்பவங்களின்
வரிசையை முன்பின்னாகக் கலைத்துச் சொன்னால் அதை
‘நான் லீனியர்’ விவரிப்பு என்கிறோம்.

இந்த இரண்டில், எளிய விவரிப்பு முறை கொண்டகதைகளை உலகின்
பல நாடுகளில் ஒரே ஷாட்டில்படமாக எடுத்திருக்கிறார்கள். ஆனால்,
‘நான் – லீனியர்’ திரைக்கதை விவரிப்பைக் கொண்ட ‘இரவின் நிழல்’
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதைக் காணும்போது, முதல் நொடியில்
தொடங்கி, கதை முடியும் கடைசி நொடி வரை வியப்பூட்டக்கூடிய
திரை அனுபவமாக திரையில் விரிகிறது.

முதலில் இப்படியொரு ‘சிங்கிள் ஷாட்’ படத்தை எடுக்க முடியும் என்று
நம்பியதற்காகவே இயக்குநர் பார்த்திபனை உச்சி முகர்ந்து பாராட்டலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 14, 2022 11:11 pm

திரை விமர்சனம்: இரவின் நிழல் 826167
-
திரை விமர்சனம்: இரவின் நிழல் Iravin-nilal-1
-
ஒரு திரைப்படத்தின் மிக முக்கியமான ‘காட்சி அனுபவம்’ என்பது,
‘ஷாட் பை ஷாட்’ உணர்வைக் கொடுப்பதாக இருக்க வேண்டும்.
இதை, கேமரா கோணங்களை மாற்றி அமைப்பதன் வழியாக, தனித்
தனியாக எடுக்கப்பட்ட ஷாட்களை ‘எடிட்டிங்’ மூலம் வெட்டி –
இணைப்பதன் வழியாக சாத்தியப்படுத்த முடியும்.

ஆனால், ஒரு திரைப்படத்தையே ‘சிங்கிள் ஷாட்’ எனும் முயற்சியில்
செய்யும்போது, ‘ஷாட் பை ஷாட்’ மற்றும் ஒரு காட்சி முடிந்து அடுத்த
காட்சிக்கு பார்வையாளரை மடை மாற்றும் ‘சேஞ்ச் ஓவர்’ (change over)
உத்தி ஆகியவற்றை கடை பிடிப்பது பெரும் சவால்!

இந்த இரண்டையுமே தனது ‘விஷுவலைசேஷன்’ கற்பனை வழியாகச்
சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.

ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் கொண்ட இந்த ‘சிங்கிள் ஷாட்’
திரைப்படத்தை படக்குழு எப்படி படமாக்கியது என்பதை விவரிக்கும்
முதல் 30 நிமிட ‘மேக்கிங்’ காட்சிகள், கற்பனைக்கும் தொழில்நுட்பத்
தேர்ச்சிக்கும் ஹாலிவுட்டுக்கு தமிழ் சினிமா சற்றும் குறைந்ததல்ல
என்பதைக் காட்டுகின்றன.

ஒரே இடத்தில் 64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட 50 வகையான,
நகரும், நகராத அரங்குகளில் (Sets) உருவாக்கப்பட்ட கதைக் களம்,
பல இடங்களில் ‘செட்’ எனத் தெரிந்தாலுமே கூட, அதைப்
பற்றியெல்லாம் அக்கறைகொள்ள நமக்கு அவகாசம் தராமல் நகர்கிறது
திரைக்கதை.

ஒரே ஷாட் எனும்போது அதில் எடிட்டிங் என்பது எழுத்திலேயே
அதாவது திரைக்கதையிலேயே முடிவு செய்யப்பட வேண்டிய
காட்டாயத்தை உணர்ந்து அதைக் கச்சிதமாகவும் வசனங்களை
தனக்கேயுரிய நக்கலும் விமர்சனமுமும் கொண்டதாகவும் கொடுப்பதில்
பார்த்திபன் மீண்டும் வெற்றிப்பெற்றிருக்கிறார்.

சென்னையிலிருந்து ஆந்திராவுக்கும், ஆந்திராவிலிருந்து சென்னைக்கும்
சென்று திரும்பும் நந்துவும் அவருடைய வாழ்க்கையில் வந்து செல்லும்
கதாபாத்திரங்களும் அவர்கள் எதிர்கொள்ளும் விளிம்பு வாழ்க்கையும்
முதிய நந்துவின் விவரிப்பில் நம் முன் ரத்தமும் சதையுமாகத்
தோன்றுகிறார்கள்.

நந்துவின் பல வயது பிரதிகள், அவர்களுடைய வாழ்க்கையில் வந்து
செல்லும் பெண்கள், துணைக்கதாபாத்திரங்கள், சிறார் நடிகர்கள்
எனப் பெரும்பாலானவர்களை புதுமுகங்களாக அறிமுகப்படுத்தியிருப்பது
கதையின் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிக்க உதவுகிறது.

குறிப்பாக 30 வயது நந்துவாக வரும் அனந்த கிருஷ்ணன், லட்சுமியாக
வரும் சினேகா குமார், சிலக்கம்மாவாக வரும் பிரிகடா சகா என
புதுமுகக் கலைஞர்கள் மனம் ஈர்க்கிறார்கள்.

ஐம்பது வயது நந்து ஒளிந்திருக்கும் பாழடைந்த ஆசிரமத்தின் அரங்க
அமைப்பின் தொடர்ச்சி, ‘சேஞ்ச் ஓவர்’களில் அவர் இடையிடையே
வந்து கதை சொல்லும் உத்தி, அவர் முன்பாகவே கடந்த காலத்தின்
நிகழ்வுகளும் கதாபாத்திரங்களும் ‘நியோ – நாய்ர்’ தன்மையுடன்
விரிவது என இயக்குநர் பார்த்திபன் அசரடிக்கிறார்.
அதற்கு கைகொடுத்திருக்கிறது ஆர்.கே.விஜய்முருகனின் கலை
இயக்கம்.

ஆர்தர் ஏ.வில்சனின் ஒளிப்பதிவில், ‘கிம்பள்’ சாதனத்தில் பொருத்தப்
பட்ட கேமராவை உடலில் பொருத்திக்கொண்ட அந்த தொழில்நுட்பக்
கலைஞர் (ஏ.கே.ஆகாஷ்), அவருக்கு காட்சிகள் சரியாகத் துலங்க
‘போகஸ் புல்லர்’ பணியைச் செய்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு
(சங்கரன் டிசோசா, ராஜேஷ்) பாராட்டுக்கள்.

படத்தில் ‘ஷாட் பை ஷாட்’ தன்மையை இன்னும்மேம்படுத்திக்
கொடுப்பதில் ரஹ்மானின் பின்னணி இசையும், கதையின்
மையத்தையும் அதன் உணர்வுகளையும் துலங்கச் செய்வதில் அவர்
தந்திருக்கும் பாடல்களும் படத்தை உயர்ந்த இடத்தில் வைக் கின்றன.

வாழ்வின் பல கட்டங்களில் சிதிலங்களை மட்டுமே அதிகம் கடந்து
வந்த முதன்மைக் கதாபாத்திரம், ‘மோனோலாக்’ ஆக தன் கதை
கூறும் இத்திரைப்படத்தில் இருக்கும் குறைகளை ஆராய்வதைவிட,
இப்படியொரு சாத்தியமற்ற முயற்சியை சாத்தியமாக்கி ஆச்சரியப்
படுத்திக் காட்டியதற்காகவே இந்தப் படத்தை பார்த்து வியக்கலாம்

-இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக