Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு
First topic message reminder :
அன்புடையீர்,
எனக்கு பல தாய்மார்கள் இருக்கிறார்கள்..
1) என்னைப் படைத்த உலகாளும் அகிலாண்டேஸ்வரியான அம்பிகை ஒரு தாய்..
2) என்னையும் உங்களையும் தாங்கும் பூமித்தாயான பூமாதேவி ஒரு தாய்.
3) நமக்காக ரத்தம் சிந்திய பல தியாகிகளின் தவப்பயனால் தலைநிமிர்ந்த என் பாரதத்தாய் ஒரு தாய்.
4) சங்கத்தில் பூப்படைந்து இன்று எங்கும் நிறைந்திருக்கும் சிங்கத் தமிழ்த்தாயும் ஒரு தாய்.
5) என்னைப் பத்து மாதம் சுமந்து, சத்தான பாலூட்டி
அதனால் எத்தனையோ இடர்பட்டு என்னை வளர்த்து வித்தகனாக்கிய என் பெற்ற தாய் என் முதல் தாய்..
6) நான் காதலிக்கும் அன்பிற்குரிய பெண்ணாய், என் அன்னைக்கு மருமகளாகவும் எனக்கு மறுதாயாகவும் விளங்கும் எந்தன் ஆருயிர் இன்னொரு தாய்..
இப்படி பல தாய்களுக்கு மகனாகத் திகழ எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்? என் தமிழை அரங்கேற்ற வாய்ப்பு கொடுத்த ஈகரையையும் தாயாக நினைப்பதில் எனக்கு மகிழ்ச்சி...
அதனால், கடந்த சில மாதங்களில் நான் எழுதிய அனைத்துக் கவிதைகளையும் ஒரே பதிவில் பதிவு செய்ய ஆசை கொண்டு இதைப் பதிவு செய்கிறேன். உங்களது கருத்துகள் மற்றும் அறிவுரைகளை வரவேற்கிறேன்.. இதே பதிவில் அடுத்தடுத்து என் கவிதைகளை வெளியிடுகிறேன்...
அன்புடையீர்,
எனக்கு பல தாய்மார்கள் இருக்கிறார்கள்..
1) என்னைப் படைத்த உலகாளும் அகிலாண்டேஸ்வரியான அம்பிகை ஒரு தாய்..
2) என்னையும் உங்களையும் தாங்கும் பூமித்தாயான பூமாதேவி ஒரு தாய்.
3) நமக்காக ரத்தம் சிந்திய பல தியாகிகளின் தவப்பயனால் தலைநிமிர்ந்த என் பாரதத்தாய் ஒரு தாய்.
4) சங்கத்தில் பூப்படைந்து இன்று எங்கும் நிறைந்திருக்கும் சிங்கத் தமிழ்த்தாயும் ஒரு தாய்.
5) என்னைப் பத்து மாதம் சுமந்து, சத்தான பாலூட்டி
அதனால் எத்தனையோ இடர்பட்டு என்னை வளர்த்து வித்தகனாக்கிய என் பெற்ற தாய் என் முதல் தாய்..
6) நான் காதலிக்கும் அன்பிற்குரிய பெண்ணாய், என் அன்னைக்கு மருமகளாகவும் எனக்கு மறுதாயாகவும் விளங்கும் எந்தன் ஆருயிர் இன்னொரு தாய்..
இப்படி பல தாய்களுக்கு மகனாகத் திகழ எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்? என் தமிழை அரங்கேற்ற வாய்ப்பு கொடுத்த ஈகரையையும் தாயாக நினைப்பதில் எனக்கு மகிழ்ச்சி...
அதனால், கடந்த சில மாதங்களில் நான் எழுதிய அனைத்துக் கவிதைகளையும் ஒரே பதிவில் பதிவு செய்ய ஆசை கொண்டு இதைப் பதிவு செய்கிறேன். உங்களது கருத்துகள் மற்றும் அறிவுரைகளை வரவேற்கிறேன்.. இதே பதிவில் அடுத்தடுத்து என் கவிதைகளை வெளியிடுகிறேன்...
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு
நீயும் இயற்கையும் - தமிழ்க் கவிதை
*******************************************************
அந்த மானுக் கருகினிலென்
அன்பே புயலாய் மாறியதோ?
எந்தன் காதல் நீராகி
எங்கும் மழையாய்ப் பொழிகிறதோ?
சிந்திய கண்ணீர் துளிகள்தான்
சாலையில் தேங்கிக் கிடக்கிறதோ?
எந்தன் இதயம் பிழிந்ததனால்
ஈரம் நாட்டை நனைக்கிறதோ?
காற்றில் ஆடும் கிளையுந்தன்
கலையை ரசித்தே வீசியதோ?
சேற்றில் பூக்கும் தாமரையுன்
செவ்விதழ் சாயம் பூசியதோ?
ஊற்றில் ஓடும் நீரோசை
உன்னிடம் ஏதோ பேசியதோ?
சீற்றம் கொண்டவுன் விழிபார்த்து
சூரிய னின்கண் கூசியதோ?
நிலவுன் யோசனை கேட்டுத்தான்
நித்தம் ஒப்பனை செய்கிறதோ?
செலவாய்ப் போகும் ஒளிசேர்க்க
சூரியனும் கடன் கேட்கிறதோ?
உலவும் தென்றல் குளிர்சேர்க்க
உந்தன் உதவியை நாடியதோ?
சிலநாள் உன்னிடம் கற்றுத்தான்
சோலைக் குயிலும் கூவியதோ?
காட்டு மயிலுன் அசைவுகளைக்
கவனித் தேதினம் ஆடியதோ?
தீட்டிய வாளுன் பார்வையினைத்
திருடிக் கூர்மை சேர்க்கிறதோ?
தோட்டத் தின்பூ உன்வண்ணம்
தேடி எடுத்துப் பூக்கிறதோ?
நாட்டின் பட்டாம் பூச்சியெல்லாம்
நீதேன் என்று குழம்பியதோ?
*******************************************************
அந்த மானுக் கருகினிலென்
அன்பே புயலாய் மாறியதோ?
எந்தன் காதல் நீராகி
எங்கும் மழையாய்ப் பொழிகிறதோ?
சிந்திய கண்ணீர் துளிகள்தான்
சாலையில் தேங்கிக் கிடக்கிறதோ?
எந்தன் இதயம் பிழிந்ததனால்
ஈரம் நாட்டை நனைக்கிறதோ?
காற்றில் ஆடும் கிளையுந்தன்
கலையை ரசித்தே வீசியதோ?
சேற்றில் பூக்கும் தாமரையுன்
செவ்விதழ் சாயம் பூசியதோ?
ஊற்றில் ஓடும் நீரோசை
உன்னிடம் ஏதோ பேசியதோ?
சீற்றம் கொண்டவுன் விழிபார்த்து
சூரிய னின்கண் கூசியதோ?
நிலவுன் யோசனை கேட்டுத்தான்
நித்தம் ஒப்பனை செய்கிறதோ?
செலவாய்ப் போகும் ஒளிசேர்க்க
சூரியனும் கடன் கேட்கிறதோ?
உலவும் தென்றல் குளிர்சேர்க்க
உந்தன் உதவியை நாடியதோ?
சிலநாள் உன்னிடம் கற்றுத்தான்
சோலைக் குயிலும் கூவியதோ?
காட்டு மயிலுன் அசைவுகளைக்
கவனித் தேதினம் ஆடியதோ?
தீட்டிய வாளுன் பார்வையினைத்
திருடிக் கூர்மை சேர்க்கிறதோ?
தோட்டத் தின்பூ உன்வண்ணம்
தேடி எடுத்துப் பூக்கிறதோ?
நாட்டின் பட்டாம் பூச்சியெல்லாம்
நீதேன் என்று குழம்பியதோ?
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு
அனுமன் விடு தூது
***************************
காத்திருந்து காத்திருந்து காலமோடிப் போனது;
பூத்துநின்ற காதலின்று போர்க்களத்தில் வாடுது;
பாத்திரத்தில் ஒன்றிபோய் நடிக்கும் ஒர் கலைஞன்போல்
கூத்தனைத் துதிக்கும் நீயென் நெஞ்சில் ஒன்றினாயடி!
உன்னைப் பார்த்த நாள்முதல் நான் முன்னைப் போல இல்லையே;
அன்னமே உன்போல பூமி தன்னில் யாரும் இல்லையே;
பின்னி நீண்ட உந்தன் கூந்தல் பூவும் கூட பாடுமே!
தென்னகத்தின் தீபமே! நீ நீங்க நெஞ்சம் வாடுமே!
பாட்டினால் என் நெஞ்சை வென்று கைது செய்து பூட்டினாய்;
வீட்டு நாயைப் போல என்னைக் கட்டிக் காதல் ஊட்டினாய்;
ஈட்டி போன்ற உந்தன் பார்வை கொண்டென் ஆவி தாக்கினாய்;
மீட்ட வீணை வேண்டும் என்றேன் மேனி வெட்டி மீட்டினாய்!
காதல் செய்ய யாருமில்லை என்று நானும் ஏங்கவே
ஆதவன்போல் நீயுதித்து வாழ்வில் தீபம் ஏற்றினாய்!
பாதியாய்நான் என்னை செய்து உன்னிடம் கொடுக்கவா?
சேதி சொல்ல ஆஞ்சனேயன் மூலம் தூதனுப்பவா?
***************************
காத்திருந்து காத்திருந்து காலமோடிப் போனது;
பூத்துநின்ற காதலின்று போர்க்களத்தில் வாடுது;
பாத்திரத்தில் ஒன்றிபோய் நடிக்கும் ஒர் கலைஞன்போல்
கூத்தனைத் துதிக்கும் நீயென் நெஞ்சில் ஒன்றினாயடி!
உன்னைப் பார்த்த நாள்முதல் நான் முன்னைப் போல இல்லையே;
அன்னமே உன்போல பூமி தன்னில் யாரும் இல்லையே;
பின்னி நீண்ட உந்தன் கூந்தல் பூவும் கூட பாடுமே!
தென்னகத்தின் தீபமே! நீ நீங்க நெஞ்சம் வாடுமே!
பாட்டினால் என் நெஞ்சை வென்று கைது செய்து பூட்டினாய்;
வீட்டு நாயைப் போல என்னைக் கட்டிக் காதல் ஊட்டினாய்;
ஈட்டி போன்ற உந்தன் பார்வை கொண்டென் ஆவி தாக்கினாய்;
மீட்ட வீணை வேண்டும் என்றேன் மேனி வெட்டி மீட்டினாய்!
காதல் செய்ய யாருமில்லை என்று நானும் ஏங்கவே
ஆதவன்போல் நீயுதித்து வாழ்வில் தீபம் ஏற்றினாய்!
பாதியாய்நான் என்னை செய்து உன்னிடம் கொடுக்கவா?
சேதி சொல்ல ஆஞ்சனேயன் மூலம் தூதனுப்பவா?
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு
ஆண்டவன் சூழ்ச்சி
******************************
விதம் விதமாயுனைக் காதலிக்கும்
விதியை எவனோ எழுதிவிட்டான்;
பதங்களை சேர்த்தே பாட்டாக்கும்
பணியைக் கொடுத்தொரு சாபமிட்டான்;
நிதமுனை நினைத்தே நானுருகும்
நிலைமையைத் தலையில் பொருத்தி விட்டான்;
இதனால் வடிக்கும் கண்ணிரால்
இனிநான் நனைய ஆணையிட்டான்!
வாழ்க்கை என்பது விடுகதைதான்;
வலிகள் நிறைந்த தொடர்கதைதான்;
தாழ்வும் உயர்வும் தருவதுதான்
தெய்வம் செய்த விதியெனவே
ஆழ்ந்து நினைத்துத் தெளிந்தேன்நான்;
ஆண்டவன் சூழ்ச்சியை அறிந்தேன்நான்;
ஊழ்வினை ஊட்டிய காதலினால்
உயிர் போ னதுபோல் தவித்தேன்நான்!
நீயில் லாமல் நானில்லை;
நீபோ னால்வாழ் வேயில்லை;
தாயின் அன்பே அறியாத
தனியொரு வன்நான்; தெருமுனையின்
நாய்போல் நாதி கெட்டவன்நான்;
நரக நெருப்பில் வெந்தவன்நான்;
பாயும் காவிரி வெள்ளம்போல்
பாடல் எழுதும் ஏழைநான்.
மழைபோல் மனதில் பெய்தவளே!
மதுபோல் போதை தந்தவளே!
குழையின் அசைவை ஆயுதமாய்
கொண்டொரு கொடும்போர் கொடுத்தவளே!
நுழைந்தென் நெஞ்சை வசமாக்கி
நிலையாய் நீகுடி யேறிவிட்டாய்;
உழைப்பால் கிடைத்த ஊதியம் போல்
உள்ளங் கையில் நிறைந்துவிட்டாய்!
******************************
விதம் விதமாயுனைக் காதலிக்கும்
விதியை எவனோ எழுதிவிட்டான்;
பதங்களை சேர்த்தே பாட்டாக்கும்
பணியைக் கொடுத்தொரு சாபமிட்டான்;
நிதமுனை நினைத்தே நானுருகும்
நிலைமையைத் தலையில் பொருத்தி விட்டான்;
இதனால் வடிக்கும் கண்ணிரால்
இனிநான் நனைய ஆணையிட்டான்!
வாழ்க்கை என்பது விடுகதைதான்;
வலிகள் நிறைந்த தொடர்கதைதான்;
தாழ்வும் உயர்வும் தருவதுதான்
தெய்வம் செய்த விதியெனவே
ஆழ்ந்து நினைத்துத் தெளிந்தேன்நான்;
ஆண்டவன் சூழ்ச்சியை அறிந்தேன்நான்;
ஊழ்வினை ஊட்டிய காதலினால்
உயிர் போ னதுபோல் தவித்தேன்நான்!
நீயில் லாமல் நானில்லை;
நீபோ னால்வாழ் வேயில்லை;
தாயின் அன்பே அறியாத
தனியொரு வன்நான்; தெருமுனையின்
நாய்போல் நாதி கெட்டவன்நான்;
நரக நெருப்பில் வெந்தவன்நான்;
பாயும் காவிரி வெள்ளம்போல்
பாடல் எழுதும் ஏழைநான்.
மழைபோல் மனதில் பெய்தவளே!
மதுபோல் போதை தந்தவளே!
குழையின் அசைவை ஆயுதமாய்
கொண்டொரு கொடும்போர் கொடுத்தவளே!
நுழைந்தென் நெஞ்சை வசமாக்கி
நிலையாய் நீகுடி யேறிவிட்டாய்;
உழைப்பால் கிடைத்த ஊதியம் போல்
உள்ளங் கையில் நிறைந்துவிட்டாய்!
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு
காதல் விடுகதை
******************************************************
நீங்கள் பாதையில் நடந்து போகும் பொழுது
ஒரு விலை மதிப்பில்லாத தங்கச் சிலையைக் கண்டெடுத்தால் எப்படி உணர்வீர்கள்?
ஒரு பெண்ணை நான் பார்த்த பிறகு,
அப்படித்தான் நான் உணர்ந்தேன்...
அவளைப் பார்க்கும் முன் நான் வாழ்ந்த வாழ்க்கை,
பார்த்த பிறகு நான் வாழ்ந்த வாழ்க்கை என்று,
என் வாழ்க்கையையே
கிமு கிபி போல
இரண்டாக பிரித்து விடலாம்...
அந்த அளவுக்கு அவளது அறிமுகம்
என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது...
நான் ஒரு முழுமையான மனிதன் என
அவளைப் பார்க்கும் வரை நினைத்துக் கொண்டிருந்தேன்..
அவளைப் பார்த்த பின்புதான்
நான் ஒரு பாதி எனவும்
அவளே என் மீதியெனவும்
அறிந்து கொண்டேன்...
ஆயிரம் காதல், ஆயிரம் மோகம், ஆயிரம் சபலம் என
அதுவரை என் வாழ்க்கை போயிருக்கலாம்;
ஆனால்
அவளை நான் நினைக்கும் பொழுது
மனதில் தோன்றும் உணர்வு,
இதுவரை நான் உணராத உணர்வு..
அவளுக்கும் எனக்கும் உள்ள உறவுக்கு
என்ன பெயர் வைக்கலாம் என்று
ஒவ்வொரு தமிழ் அகராதியிலும்
இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்...
விதியை எழுதும் ஆண்டவன்தான்
விடைசொல்ல வேண்டுமென
நான்
வணங்காத தெய்வமில்லை;
போகாத கோவிலில்லை;
வலியால் விழைந்தயென் கண்ணீர் தான்
வளிமண்டல சுழற்சிக்கும்,
விடாத மழைக்கும் காரணமோ என
அடிக்கடி எனக்கு ஐயம் தோன்றியது;
விடுகதையா என் வாழ்க்கையென
என எண்ண எண்ண
விரக்தியில் மனம்வெந்து
வேதனையில் வெடித்தது....
உண்மையை நான் சொன்னேன்;
ஊர் என்னைப் பழித்தது;
அவளது
கண்மையின் இருட்டிலே என்
கனவெல்லாம் தொலைந்தது...
உயிர் எங்கே இருக்கிறது?
சிலர் கழுத்தில் இருக்கிறது என்றார்கள்..
சிலர் இதயத்தில் இருக்கிறது
என்றார்கள்;
சிலர் அடிவயிற்றில் தான் உயிர் கருவாகும் என்றார்கள்..
ஆனால்,
அவளைப் பார்த்த பின்புதான் எனக்குத் தெரியும்,
என் உயிர் அவள் விரல் நுனியில்
ஊசலாடிக் கொண்டு இருக்கிறது என.
******************************************************
நீங்கள் பாதையில் நடந்து போகும் பொழுது
ஒரு விலை மதிப்பில்லாத தங்கச் சிலையைக் கண்டெடுத்தால் எப்படி உணர்வீர்கள்?
ஒரு பெண்ணை நான் பார்த்த பிறகு,
அப்படித்தான் நான் உணர்ந்தேன்...
அவளைப் பார்க்கும் முன் நான் வாழ்ந்த வாழ்க்கை,
பார்த்த பிறகு நான் வாழ்ந்த வாழ்க்கை என்று,
என் வாழ்க்கையையே
கிமு கிபி போல
இரண்டாக பிரித்து விடலாம்...
அந்த அளவுக்கு அவளது அறிமுகம்
என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது...
நான் ஒரு முழுமையான மனிதன் என
அவளைப் பார்க்கும் வரை நினைத்துக் கொண்டிருந்தேன்..
அவளைப் பார்த்த பின்புதான்
நான் ஒரு பாதி எனவும்
அவளே என் மீதியெனவும்
அறிந்து கொண்டேன்...
ஆயிரம் காதல், ஆயிரம் மோகம், ஆயிரம் சபலம் என
அதுவரை என் வாழ்க்கை போயிருக்கலாம்;
ஆனால்
அவளை நான் நினைக்கும் பொழுது
மனதில் தோன்றும் உணர்வு,
இதுவரை நான் உணராத உணர்வு..
அவளுக்கும் எனக்கும் உள்ள உறவுக்கு
என்ன பெயர் வைக்கலாம் என்று
ஒவ்வொரு தமிழ் அகராதியிலும்
இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்...
விதியை எழுதும் ஆண்டவன்தான்
விடைசொல்ல வேண்டுமென
நான்
வணங்காத தெய்வமில்லை;
போகாத கோவிலில்லை;
வலியால் விழைந்தயென் கண்ணீர் தான்
வளிமண்டல சுழற்சிக்கும்,
விடாத மழைக்கும் காரணமோ என
அடிக்கடி எனக்கு ஐயம் தோன்றியது;
விடுகதையா என் வாழ்க்கையென
என எண்ண எண்ண
விரக்தியில் மனம்வெந்து
வேதனையில் வெடித்தது....
உண்மையை நான் சொன்னேன்;
ஊர் என்னைப் பழித்தது;
அவளது
கண்மையின் இருட்டிலே என்
கனவெல்லாம் தொலைந்தது...
உயிர் எங்கே இருக்கிறது?
சிலர் கழுத்தில் இருக்கிறது என்றார்கள்..
சிலர் இதயத்தில் இருக்கிறது
என்றார்கள்;
சிலர் அடிவயிற்றில் தான் உயிர் கருவாகும் என்றார்கள்..
ஆனால்,
அவளைப் பார்த்த பின்புதான் எனக்குத் தெரியும்,
என் உயிர் அவள் விரல் நுனியில்
ஊசலாடிக் கொண்டு இருக்கிறது என.
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
*********************************************
தென்றல் நீயென் துணையென சொல்லி
தினமும் மெதுவாய் வீசியது;
அன்றில் பறவை போலே நாமென
ஆழ்கடல் அலையும் பேசியது;
குன்றில் நிற்கும் குமரன் அருளால்
காதல் என்னை அணைக்கிறது;
ஒன்றாய் நாமினி வாழ்வோம் என்றே
விதிநமை சேர்த்துப் பிணைக்கிறது.
வானில் தோன்றும் வீண்மீன் எல்லாம்
வெளிச்சம் வேண்டி உனைக்கேட்கும்;
தேனின் இனிப்பு போதா தென்றே
தேனியெல் லாமுன் துணைதேடும்;
மான்கள் எல்லாம் உன்னைப் பார்த்து
மலைத்தே மூக்கில் விரல் வைக்கும்;
ஏன்நீ பெண்ணாய் வந்து பிறந்தாய்
என்றே கேள்வியென் மனம்தாக்கும்.
யுத்தம் செய்யும் போர்க்கலை தன்னை
எங்கே உன்கண் கற்றதுசொல்;
சத்தத்தை சங்கீதம் ஆக்கும்
சாதனை எப்படி செய்தாய் சொல்;
சத்திய சோதனை செய்யும் காதல்
சாபம் ஏன்நீ தந்தாய்சொல்;
எத்தனை நாட்கள் என்னைப் பிரிவில்
ஏங்க விடுப்பாய்? பதிலைச்சொல்!
தீரா வலியால் தவித்தயென் வாழ்வில்
தீபா வளி போல் வந்தாயே!
போராட் டத்தில் பட்ட ரணத்தை
போக்கும் மருந்தைத் தந்தாயே!
தேராய் எந்தன் எண்ணப் பாதை
தன்னில் தினமும் நகர்ந்தாயே!
ஈரே ழுலகும் ஆளும் ராணி
இனி நீ தானடி என்தாயே!
*********************************************
தென்றல் நீயென் துணையென சொல்லி
தினமும் மெதுவாய் வீசியது;
அன்றில் பறவை போலே நாமென
ஆழ்கடல் அலையும் பேசியது;
குன்றில் நிற்கும் குமரன் அருளால்
காதல் என்னை அணைக்கிறது;
ஒன்றாய் நாமினி வாழ்வோம் என்றே
விதிநமை சேர்த்துப் பிணைக்கிறது.
வானில் தோன்றும் வீண்மீன் எல்லாம்
வெளிச்சம் வேண்டி உனைக்கேட்கும்;
தேனின் இனிப்பு போதா தென்றே
தேனியெல் லாமுன் துணைதேடும்;
மான்கள் எல்லாம் உன்னைப் பார்த்து
மலைத்தே மூக்கில் விரல் வைக்கும்;
ஏன்நீ பெண்ணாய் வந்து பிறந்தாய்
என்றே கேள்வியென் மனம்தாக்கும்.
யுத்தம் செய்யும் போர்க்கலை தன்னை
எங்கே உன்கண் கற்றதுசொல்;
சத்தத்தை சங்கீதம் ஆக்கும்
சாதனை எப்படி செய்தாய் சொல்;
சத்திய சோதனை செய்யும் காதல்
சாபம் ஏன்நீ தந்தாய்சொல்;
எத்தனை நாட்கள் என்னைப் பிரிவில்
ஏங்க விடுப்பாய்? பதிலைச்சொல்!
தீரா வலியால் தவித்தயென் வாழ்வில்
தீபா வளி போல் வந்தாயே!
போராட் டத்தில் பட்ட ரணத்தை
போக்கும் மருந்தைத் தந்தாயே!
தேராய் எந்தன் எண்ணப் பாதை
தன்னில் தினமும் நகர்ந்தாயே!
ஈரே ழுலகும் ஆளும் ராணி
இனி நீ தானடி என்தாயே!
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு
நெஞ்சில் நீந்திய நெத்திலிமீன்
**********************************************
பத்தரை மாற்றுத் தங்கத் துண்டே
பெண்ணாய் வயிற்றில் கருவாச்சா?
நித்திலம் கோடி சேர்ந்துன் வாயின்
அத்தனை பல்லும் உருவாச்சா?
பத்தடி நீளப் பாம்பும் உன்னைப்
பார்த்து பயந்திடும் தெரியாதா?
பத்திர மாயுனைப் பார்த்துக் கொள்ள
பிறந்தவன் நான்; இது புரியாதா?
சுத்தியல் அடித்தசிற் றாணியைப் போல்மன
சுவற்றைக் குத்தி இறங்கிவிட்டாய்;
புத்தியின் மத்தியில் பாயைப் போட்டதில்
பச்சிள மகவாய்ப் படுத்துவிட்டாய்;
உத்தரவின் றியென் உச்சியில் ஏறி
உயிரை உருவி எடுத்துவிட்டாய்;
இத்தனை நாளாய் என்னை ஏன்நீ
இப்படி பாடாய் படுத்திவிட்டாய்?
முத்தம் கேட்டுன் பக்கம் வந்தால்
மெல்லிய இதழைக் குவிப்பாயா?
சத்தம் போட்டே ஊரைக் கூட்டி
மத்திய சிறையில் அடைப்பாயா?
உத்தமி போலே நடித்தே இப்படி
உயிரை எடுப்பது ஒருபிழைப்பா?
தித்திக் கின்ற தேன்துளியே!இனி
தப்பித்திடலாம் எனநினைப்பா?
கத்தியைக் காட்டி வழிப்பறி செய்யும்
கொள்ளைக் காரன் போலென்னை
அத்தனை அழகும் சேர்த்துக் காட்டி
அபகரித்தாயே இதுமுறையா?
செத்தால் கூட சேர்ந்திருப் போமென
சத்தியம் செய்வேன் கரம்நீட்டு!
நித்தமும் இனியுன் மடியில் தூங்க
நீயிசை பாடித் தாலாட்டு!
மெத்தை வேண்டாம்; மடியே போதும்
மலர் வேண்டாம் உன் முகம்போதும்;
மத்தளம் வேண்டாம்; தாளம் தட்ட
முதுகைத் தந்தால் அதுபோதும்;
சித்திரம் வேண்டாம் சிந்தும் உந்தன்
சிரிப்பைப் பார்க்கும் வரம்போதும்;
சொத்தும் வேண்டாம்; பணமும் வேண்டாம்;
சேர்ந்தினி வாழும் சுகம்போதும்!
புத்தனைப் போலே நானிருந்தேன் எனைப்
போர்வீரன் போல் ஆக்கிவிட்டாய்!
சித்தனைப் போலே நானிருந்தேன் எனை
சிறகுகள் தந்து பறக்கவிட்டாய்!
பித்தளை போல நானிருந்தேன் எனைப்
பொன்னாய் மாற்றி மின்னவிட்டாய்!
இத்தனை நாளாய் தவமிருந்தேன் நீ
இறைவன் போலத் தோன்றிவிட்டாய்!
அத்தி மலர்ந்தது போலென் வாழ்வில்
அற்புதமாக நீபூத்தாய்;
வித்தை செய்தென் விதியை மாற்றி
வேடிக்கைதான் நீபார்த்தாய்;
நித்தம் உன்னை நினைக்கும் பணியில்
நிரந்தர மாயெனை அமர்த்திவிட்டாய்;
நெத்திலி மீன்போல் நெஞ்சில் நீந்தி
நினைவில் நிலையாய் அமர்ந்துவிட்டாய்!
**********************************************
பத்தரை மாற்றுத் தங்கத் துண்டே
பெண்ணாய் வயிற்றில் கருவாச்சா?
நித்திலம் கோடி சேர்ந்துன் வாயின்
அத்தனை பல்லும் உருவாச்சா?
பத்தடி நீளப் பாம்பும் உன்னைப்
பார்த்து பயந்திடும் தெரியாதா?
பத்திர மாயுனைப் பார்த்துக் கொள்ள
பிறந்தவன் நான்; இது புரியாதா?
சுத்தியல் அடித்தசிற் றாணியைப் போல்மன
சுவற்றைக் குத்தி இறங்கிவிட்டாய்;
புத்தியின் மத்தியில் பாயைப் போட்டதில்
பச்சிள மகவாய்ப் படுத்துவிட்டாய்;
உத்தரவின் றியென் உச்சியில் ஏறி
உயிரை உருவி எடுத்துவிட்டாய்;
இத்தனை நாளாய் என்னை ஏன்நீ
இப்படி பாடாய் படுத்திவிட்டாய்?
முத்தம் கேட்டுன் பக்கம் வந்தால்
மெல்லிய இதழைக் குவிப்பாயா?
சத்தம் போட்டே ஊரைக் கூட்டி
மத்திய சிறையில் அடைப்பாயா?
உத்தமி போலே நடித்தே இப்படி
உயிரை எடுப்பது ஒருபிழைப்பா?
தித்திக் கின்ற தேன்துளியே!இனி
தப்பித்திடலாம் எனநினைப்பா?
கத்தியைக் காட்டி வழிப்பறி செய்யும்
கொள்ளைக் காரன் போலென்னை
அத்தனை அழகும் சேர்த்துக் காட்டி
அபகரித்தாயே இதுமுறையா?
செத்தால் கூட சேர்ந்திருப் போமென
சத்தியம் செய்வேன் கரம்நீட்டு!
நித்தமும் இனியுன் மடியில் தூங்க
நீயிசை பாடித் தாலாட்டு!
மெத்தை வேண்டாம்; மடியே போதும்
மலர் வேண்டாம் உன் முகம்போதும்;
மத்தளம் வேண்டாம்; தாளம் தட்ட
முதுகைத் தந்தால் அதுபோதும்;
சித்திரம் வேண்டாம் சிந்தும் உந்தன்
சிரிப்பைப் பார்க்கும் வரம்போதும்;
சொத்தும் வேண்டாம்; பணமும் வேண்டாம்;
சேர்ந்தினி வாழும் சுகம்போதும்!
புத்தனைப் போலே நானிருந்தேன் எனைப்
போர்வீரன் போல் ஆக்கிவிட்டாய்!
சித்தனைப் போலே நானிருந்தேன் எனை
சிறகுகள் தந்து பறக்கவிட்டாய்!
பித்தளை போல நானிருந்தேன் எனைப்
பொன்னாய் மாற்றி மின்னவிட்டாய்!
இத்தனை நாளாய் தவமிருந்தேன் நீ
இறைவன் போலத் தோன்றிவிட்டாய்!
அத்தி மலர்ந்தது போலென் வாழ்வில்
அற்புதமாக நீபூத்தாய்;
வித்தை செய்தென் விதியை மாற்றி
வேடிக்கைதான் நீபார்த்தாய்;
நித்தம் உன்னை நினைக்கும் பணியில்
நிரந்தர மாயெனை அமர்த்திவிட்டாய்;
நெத்திலி மீன்போல் நெஞ்சில் நீந்தி
நினைவில் நிலையாய் அமர்ந்துவிட்டாய்!
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு
காதலி வாழ்த்து (கடவுள் வாழ்த்தைப் பின்பற்றி உருவாக்கிய புதிய படைப்பு)
**********************************************************************************************
கண்டபடி கவிதைவரும் உன்னைப் பார்த்தால்;
கள்வடியும் உன்னிதழில் முறுவல் பூத்தால்;
உண்டதுபோல் பசிதீரும் உன்கை தொட்டால்;
உலகம்நீ எனத்தோன்றும் உன்தோள் சாய்ந்தால்;
வண்டெல்லாம் திசைமாறும் உன்னைக் கண்டால்;
வான்கீழே இறங்கிவரும் நீகூப் பிட்டால்;
மண்ணில்நீ நடந்தாலே மலர்கள் பூக்கும்;
மழைமேகம் உனையருந்தி தாகம் தீர்க்கும்!
அன்பேவுன் இன்னிசையைக் கொஞ்சம் கேட்டால்
ஆகாயச் சூரியனும் உன்னைச் சுற்றும்;
முன்பனியுன் முகம்பார்த்தால் குளிரில் வாடும்;
மல்லிகைக்கு மணம்தீர்ந்தால் உன்னைத் தேடும்;
ஒன்பதுகோள் ஒளிவேண்டி உன்னை நாடும்;
ஓரக்கண் நீகாட்ட உலையும் வேகும்;
தென்பாண்டிச் சீமையிலே ஓடும் ஆறு
தேவதையே! உனைப்பார்த்தால் திசையை மாற்றும்!
தும்பைப்பூ உனைபார்த்தால் உன்னைக் கொய்து
தலைமேலே பூவாக சூடிக் கொள்ளும்;
அம்பைநீ கண்ணாலே கொஞ்சம் வீச
ஆதவனை அதுதாக்கி அடிமை ஆக்கும்;
கும்பத்தை தலைமேலே தாங்கும் கோவில்
கும்பிடவே உன்வீட்டு வாசல் சேரும்;
நம்பிக்கை வைப்பாயா எந்தன் மேலே?
நானுன்னை மணந்தால்நம் உலகம் மாறும்!
பூட்டைத்தான் உடைத்துள்ளே நுழையும் கள்வன்
போல்நீயோர் பொல்லாத குற்றம் செய்தாய்;
பாட்டாலே எனைதாக்கி எந்தன் நெஞ்சை
பறித்தெங்கோ தலைமறைவாய் ஓடிப் போனாய்!
கூட்டத்தில் கழுத்துநகை திருடும் ஆள்போல்
கண்ணிமைக்கும் நேரத்தில் இதயம் தூக்க
தீட்டியவோர் சதித்திட்டம் அறிந்தேன் கண்ணே!
தண்டனையாய் உனைத்தேடி மணப்பேன் பெண்ணே!
ஆழத்தை தெரியாமல் காலை விட்டால்
ஆழ்கடலில் மூழ்கியுடன் ஆயுள் போகும்;
வேழத்தின் பலத்தைநீ குறைவாய் எண்ண
வெறும்காலால் உனைமிதித்தே உடனே கொல்லும்;
கூழைநீ குடித்தாலும் குளிக்கா மல்நீ
குடித்தால்நீ சோம்பேறி எனத்தீர் வாகும்;
வாழவொரு பெண்மேலே காதல் கொண்டால்
வலியாலே உன்னிதயம் துடித்தே மாளும்!
சத்தத்தை இசையோடு சேர்த்தால் இன்ப
சங்கீதம் ஆகுமெனும் உண்மை தன்னை
எத்தனையோ பேர்சொல்லி இருந்தால் கூட
என்னவளே! நீசொல்ல உண்மை தேர்ந்தேன்;
எத்தனையோ பெண்களைநான் பார்த்தேன் ஆனால்
ஏனோநீ தானெந்தன் மனைவி என்று
சத்தியமாய் உணர்ந்தேன்நான்; சாவில் கூட
சேர்ந்தேநாம் உயிர்துறப்போம் சேரப் பூவே!
நீசிந்தும் புன்னகையை சேமிக் கத்தான்
நான்தினமும் அலைகின்றேன் அறிவாயாநீ?
காசியிலெ பாய்கின்ற கங்கை போலெ
கண்ணில்நீ பாய்ந்ததையே மறந்தா யோநீ!
மாசில்லா மரகதமே! உன்னைச் சேர
முடியாதோ என்றேநான் கவலைப் பட்டு
யோசித்தே யோசித்தே இளைத்துப் போனேன்;
யாசகமாய் உனைக்கேட்கும் ஏழை ஆனேன்!
நள்ளிரவில் நிலவுவர வில்லை என்றால்
நிலத்தினிலே வெளிச்சம்தான் இருக்கா தென்றே
தெள்ளமுதே! இதுவரைநான் நினைத்தே மாந்தேன்;
தெரியாமல் அறியாமை நோயில் வாழ்ந்தேன்;
உள்ளத்தில் ஒளிசேர்த்த உன்னைப் பார்த்தே
உண்மையினை அறிந்துன்னை விளக்காய் ஏற்றி
கள்ளழகர் வாழும்மலை மேலே வைத்தேன்;
காதலியே! உனையெந்தன் உடையாய் தைத்தேன்
இளநீரின் இனிப்பைப்போல் நாவில் ஊறி
இலைசேர்ந்த விருந்தைப்போல் இசையைத் தூறி
குளமாக என்கண்கள் கண்ணீர் பூத்து
குடமெல்லாம் நிறைந்துவிட செய்தாய் கண்ணே!
இளமைபோய் முதுமைதான் வந்தால் கூட
இணைபிரியா தம்பதியாய் நாம்வாழ் வோமா?
அளவெடுத்து தைத்தசிறு சட்டை போலே
அணிந்திடவா உன்னைநான் எந்தன் தாயே!
**********************************************************************************************
கண்டபடி கவிதைவரும் உன்னைப் பார்த்தால்;
கள்வடியும் உன்னிதழில் முறுவல் பூத்தால்;
உண்டதுபோல் பசிதீரும் உன்கை தொட்டால்;
உலகம்நீ எனத்தோன்றும் உன்தோள் சாய்ந்தால்;
வண்டெல்லாம் திசைமாறும் உன்னைக் கண்டால்;
வான்கீழே இறங்கிவரும் நீகூப் பிட்டால்;
மண்ணில்நீ நடந்தாலே மலர்கள் பூக்கும்;
மழைமேகம் உனையருந்தி தாகம் தீர்க்கும்!
அன்பேவுன் இன்னிசையைக் கொஞ்சம் கேட்டால்
ஆகாயச் சூரியனும் உன்னைச் சுற்றும்;
முன்பனியுன் முகம்பார்த்தால் குளிரில் வாடும்;
மல்லிகைக்கு மணம்தீர்ந்தால் உன்னைத் தேடும்;
ஒன்பதுகோள் ஒளிவேண்டி உன்னை நாடும்;
ஓரக்கண் நீகாட்ட உலையும் வேகும்;
தென்பாண்டிச் சீமையிலே ஓடும் ஆறு
தேவதையே! உனைப்பார்த்தால் திசையை மாற்றும்!
தும்பைப்பூ உனைபார்த்தால் உன்னைக் கொய்து
தலைமேலே பூவாக சூடிக் கொள்ளும்;
அம்பைநீ கண்ணாலே கொஞ்சம் வீச
ஆதவனை அதுதாக்கி அடிமை ஆக்கும்;
கும்பத்தை தலைமேலே தாங்கும் கோவில்
கும்பிடவே உன்வீட்டு வாசல் சேரும்;
நம்பிக்கை வைப்பாயா எந்தன் மேலே?
நானுன்னை மணந்தால்நம் உலகம் மாறும்!
பூட்டைத்தான் உடைத்துள்ளே நுழையும் கள்வன்
போல்நீயோர் பொல்லாத குற்றம் செய்தாய்;
பாட்டாலே எனைதாக்கி எந்தன் நெஞ்சை
பறித்தெங்கோ தலைமறைவாய் ஓடிப் போனாய்!
கூட்டத்தில் கழுத்துநகை திருடும் ஆள்போல்
கண்ணிமைக்கும் நேரத்தில் இதயம் தூக்க
தீட்டியவோர் சதித்திட்டம் அறிந்தேன் கண்ணே!
தண்டனையாய் உனைத்தேடி மணப்பேன் பெண்ணே!
ஆழத்தை தெரியாமல் காலை விட்டால்
ஆழ்கடலில் மூழ்கியுடன் ஆயுள் போகும்;
வேழத்தின் பலத்தைநீ குறைவாய் எண்ண
வெறும்காலால் உனைமிதித்தே உடனே கொல்லும்;
கூழைநீ குடித்தாலும் குளிக்கா மல்நீ
குடித்தால்நீ சோம்பேறி எனத்தீர் வாகும்;
வாழவொரு பெண்மேலே காதல் கொண்டால்
வலியாலே உன்னிதயம் துடித்தே மாளும்!
சத்தத்தை இசையோடு சேர்த்தால் இன்ப
சங்கீதம் ஆகுமெனும் உண்மை தன்னை
எத்தனையோ பேர்சொல்லி இருந்தால் கூட
என்னவளே! நீசொல்ல உண்மை தேர்ந்தேன்;
எத்தனையோ பெண்களைநான் பார்த்தேன் ஆனால்
ஏனோநீ தானெந்தன் மனைவி என்று
சத்தியமாய் உணர்ந்தேன்நான்; சாவில் கூட
சேர்ந்தேநாம் உயிர்துறப்போம் சேரப் பூவே!
நீசிந்தும் புன்னகையை சேமிக் கத்தான்
நான்தினமும் அலைகின்றேன் அறிவாயாநீ?
காசியிலெ பாய்கின்ற கங்கை போலெ
கண்ணில்நீ பாய்ந்ததையே மறந்தா யோநீ!
மாசில்லா மரகதமே! உன்னைச் சேர
முடியாதோ என்றேநான் கவலைப் பட்டு
யோசித்தே யோசித்தே இளைத்துப் போனேன்;
யாசகமாய் உனைக்கேட்கும் ஏழை ஆனேன்!
நள்ளிரவில் நிலவுவர வில்லை என்றால்
நிலத்தினிலே வெளிச்சம்தான் இருக்கா தென்றே
தெள்ளமுதே! இதுவரைநான் நினைத்தே மாந்தேன்;
தெரியாமல் அறியாமை நோயில் வாழ்ந்தேன்;
உள்ளத்தில் ஒளிசேர்த்த உன்னைப் பார்த்தே
உண்மையினை அறிந்துன்னை விளக்காய் ஏற்றி
கள்ளழகர் வாழும்மலை மேலே வைத்தேன்;
காதலியே! உனையெந்தன் உடையாய் தைத்தேன்
இளநீரின் இனிப்பைப்போல் நாவில் ஊறி
இலைசேர்ந்த விருந்தைப்போல் இசையைத் தூறி
குளமாக என்கண்கள் கண்ணீர் பூத்து
குடமெல்லாம் நிறைந்துவிட செய்தாய் கண்ணே!
இளமைபோய் முதுமைதான் வந்தால் கூட
இணைபிரியா தம்பதியாய் நாம்வாழ் வோமா?
அளவெடுத்து தைத்தசிறு சட்டை போலே
அணிந்திடவா உன்னைநான் எந்தன் தாயே!
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு
காதல் சரித்திரம் - தமிழ்க் கவிதை
************************************************
சரவெடியை மனதிற்குள் பற்றவைத்த கண்மணியே!
சிரிப்பாலே எனைக்குத்தி சாகடித்த மின்மினியே!
மரங்கொத்தி போலேன்னை கொத்திவிட்ட மோகினியே!
மதம்பிடித்த கண்கொண்டே மிதித்த மாய வாரணமே!
இரவினிலே பயம்காட்டும் பொல்லாத பேய்போலே
இருவிழியால் எனைமிரட்டி கதறவிட்ட ராட்சசியே!
வரம்பின்றி பேரழகால் வன்கொடுமை செய்தாயே!
வாளைமீன் பொரியல்போல் எனைசெய்து தின்றாயே!
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமிட்டு நெஞ்சத்தில்
காதலியாய் மூடிசூட்டி சாதனைதான் செய்தாயே!
புத்தகத்தில் கதையாக அதையெழுதி வெளியிட்டால்
பிரச்சனையா உனக்கெதுவும்? யோசித்து பதில்சொல் நீ!
எத்தனையோ கதைகள்நம் பூமியிலே இருந்தாலும்
என்னவளே நம்காதல் கதைபோலே வருமாசொல்!
சத்தியமாய் சொல்கின்றேன்; நம்வாழ்க்கை ஒர்புதிய
சரித்திரமே படைக்குமடி! சந்தேகம் இல்லையடி!
வீதியிலே நாம்சேர்ந்து நடக்கின்ற தோரணையை
வேடிக்கை பார்க்கவொரு பெருங்கூட்டம் கூடுமடி!
மோதிரமும் விரலும்போல் நாம்சேர்ந்தே வாழ்வதினை
மலைப்பாக பார்த்திந்த உலகேகை தட்டுமடி!
சாதிசனம் எல்லாம்நாம் சிறப்பான ஜோடியேன
சாலையிலே தினம்கூடி கரகோஷம் போடுமடி!
வேதியியல் பிணைப்பைப்போல் நாம்வாழ்ந்த கதையினையே
வரலாற்றுப் பாடமென குழந்தைகள் படிக்குமடி!
************************************************
சரவெடியை மனதிற்குள் பற்றவைத்த கண்மணியே!
சிரிப்பாலே எனைக்குத்தி சாகடித்த மின்மினியே!
மரங்கொத்தி போலேன்னை கொத்திவிட்ட மோகினியே!
மதம்பிடித்த கண்கொண்டே மிதித்த மாய வாரணமே!
இரவினிலே பயம்காட்டும் பொல்லாத பேய்போலே
இருவிழியால் எனைமிரட்டி கதறவிட்ட ராட்சசியே!
வரம்பின்றி பேரழகால் வன்கொடுமை செய்தாயே!
வாளைமீன் பொரியல்போல் எனைசெய்து தின்றாயே!
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமிட்டு நெஞ்சத்தில்
காதலியாய் மூடிசூட்டி சாதனைதான் செய்தாயே!
புத்தகத்தில் கதையாக அதையெழுதி வெளியிட்டால்
பிரச்சனையா உனக்கெதுவும்? யோசித்து பதில்சொல் நீ!
எத்தனையோ கதைகள்நம் பூமியிலே இருந்தாலும்
என்னவளே நம்காதல் கதைபோலே வருமாசொல்!
சத்தியமாய் சொல்கின்றேன்; நம்வாழ்க்கை ஒர்புதிய
சரித்திரமே படைக்குமடி! சந்தேகம் இல்லையடி!
வீதியிலே நாம்சேர்ந்து நடக்கின்ற தோரணையை
வேடிக்கை பார்க்கவொரு பெருங்கூட்டம் கூடுமடி!
மோதிரமும் விரலும்போல் நாம்சேர்ந்தே வாழ்வதினை
மலைப்பாக பார்த்திந்த உலகேகை தட்டுமடி!
சாதிசனம் எல்லாம்நாம் சிறப்பான ஜோடியேன
சாலையிலே தினம்கூடி கரகோஷம் போடுமடி!
வேதியியல் பிணைப்பைப்போல் நாம்வாழ்ந்த கதையினையே
வரலாற்றுப் பாடமென குழந்தைகள் படிக்குமடி!
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு
» அப்பாவைப் புனிதப்படுத்துதல் – லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைத் தொகுப்பு.
» ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு
» தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி – சில்வியா பிளாத் கவிதைத் தொகுப்பு தமிழில் .
» தென்றலின் வேகம் மற்றும் கல்லறை நெருஞ்சிகள் - இரு கவிதைத் தொகுப்பு நூலினை தரவிறக்க
» அப்பாவைப் புனிதப்படுத்துதல் – லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைத் தொகுப்பு.
» ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு
» தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி – சில்வியா பிளாத் கவிதைத் தொகுப்பு தமிழில் .
» தென்றலின் வேகம் மற்றும் கல்லறை நெருஞ்சிகள் - இரு கவிதைத் தொகுப்பு நூலினை தரவிறக்க
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum