புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- சண்முகம்.பபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
First topic message reminder :
அன்புடையீர்,
எனக்கு பல தாய்மார்கள் இருக்கிறார்கள்..
1) என்னைப் படைத்த உலகாளும் அகிலாண்டேஸ்வரியான அம்பிகை ஒரு தாய்..
2) என்னையும் உங்களையும் தாங்கும் பூமித்தாயான பூமாதேவி ஒரு தாய்.
3) நமக்காக ரத்தம் சிந்திய பல தியாகிகளின் தவப்பயனால் தலைநிமிர்ந்த என் பாரதத்தாய் ஒரு தாய்.
4) சங்கத்தில் பூப்படைந்து இன்று எங்கும் நிறைந்திருக்கும் சிங்கத் தமிழ்த்தாயும் ஒரு தாய்.
5) என்னைப் பத்து மாதம் சுமந்து, சத்தான பாலூட்டி
அதனால் எத்தனையோ இடர்பட்டு என்னை வளர்த்து வித்தகனாக்கிய என் பெற்ற தாய் என் முதல் தாய்..
6) நான் காதலிக்கும் அன்பிற்குரிய பெண்ணாய், என் அன்னைக்கு மருமகளாகவும் எனக்கு மறுதாயாகவும் விளங்கும் எந்தன் ஆருயிர் இன்னொரு தாய்..
இப்படி பல தாய்களுக்கு மகனாகத் திகழ எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்? என் தமிழை அரங்கேற்ற வாய்ப்பு கொடுத்த ஈகரையையும் தாயாக நினைப்பதில் எனக்கு மகிழ்ச்சி...
அதனால், கடந்த சில மாதங்களில் நான் எழுதிய அனைத்துக் கவிதைகளையும் ஒரே பதிவில் பதிவு செய்ய ஆசை கொண்டு இதைப் பதிவு செய்கிறேன். உங்களது கருத்துகள் மற்றும் அறிவுரைகளை வரவேற்கிறேன்.. இதே பதிவில் அடுத்தடுத்து என் கவிதைகளை வெளியிடுகிறேன்...
அன்புடையீர்,
எனக்கு பல தாய்மார்கள் இருக்கிறார்கள்..
1) என்னைப் படைத்த உலகாளும் அகிலாண்டேஸ்வரியான அம்பிகை ஒரு தாய்..
2) என்னையும் உங்களையும் தாங்கும் பூமித்தாயான பூமாதேவி ஒரு தாய்.
3) நமக்காக ரத்தம் சிந்திய பல தியாகிகளின் தவப்பயனால் தலைநிமிர்ந்த என் பாரதத்தாய் ஒரு தாய்.
4) சங்கத்தில் பூப்படைந்து இன்று எங்கும் நிறைந்திருக்கும் சிங்கத் தமிழ்த்தாயும் ஒரு தாய்.
5) என்னைப் பத்து மாதம் சுமந்து, சத்தான பாலூட்டி
அதனால் எத்தனையோ இடர்பட்டு என்னை வளர்த்து வித்தகனாக்கிய என் பெற்ற தாய் என் முதல் தாய்..
6) நான் காதலிக்கும் அன்பிற்குரிய பெண்ணாய், என் அன்னைக்கு மருமகளாகவும் எனக்கு மறுதாயாகவும் விளங்கும் எந்தன் ஆருயிர் இன்னொரு தாய்..
இப்படி பல தாய்களுக்கு மகனாகத் திகழ எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்? என் தமிழை அரங்கேற்ற வாய்ப்பு கொடுத்த ஈகரையையும் தாயாக நினைப்பதில் எனக்கு மகிழ்ச்சி...
அதனால், கடந்த சில மாதங்களில் நான் எழுதிய அனைத்துக் கவிதைகளையும் ஒரே பதிவில் பதிவு செய்ய ஆசை கொண்டு இதைப் பதிவு செய்கிறேன். உங்களது கருத்துகள் மற்றும் அறிவுரைகளை வரவேற்கிறேன்.. இதே பதிவில் அடுத்தடுத்து என் கவிதைகளை வெளியிடுகிறேன்...
- சண்முகம்.பபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
- சண்முகம்.பபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
- சண்முகம்.பபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
- சண்முகம்.பபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
- சண்முகம்.பபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
- சண்முகம்.பபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
- சண்முகம்.பபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
கால பைரவாஷ்டகம் – எண்சீர் விருத்தம்
************************************************************
சந்தனமாய் மணம்வீசி மனதில் நின்றாய்!
சாகாதக் காதலினால் தினமும் கொன்றாய்!
பந்ததல்ல பரலியென பாடல் பாடி
படையெடுத்த மன்னன்போல் மனதை வென்றாய்!
வந்துவிழும் வார்த்தையெலாம் கவிதை ஆகும்
வரம்தந்தாய்! வாணியென நாவில் நின்றாய்..
செந்தமிழும் மலையாள மொழியும் சேர
சேரனது வில்பற்றி அம்பும் விட்டாய்..
இதயத்தைத் திருடிபெரும் குற்றம் செய்த
இளமதியே! உனைக்கைது செய்ய வேண்டி
நிதம்தனியே யோசித்துத் திட்டம் தீட்டி
நானுன்னை இருவிழியால் விலங்கு பூட்ட
பதறிப்போய் நீநின்ற கோலம் தன்னைப்
பார்த்ததினால் புன்னகையில் வயிறும் நோக
இதனாலே சினம்கொண்ட இறைவன் உன்னை
இலவசமாய் எனக்கெனவே தந்தான் கண்ணே!
இனிநீயென் எல்லைதனைத் தாண்ட மாட்டாய்!
இதயத்தை விட்டென்றும் நீங்க மாட்டாய்!
தனிமையிலே என்றும்நீ தூங்க மாட்டாய்!
தேன்மலரே! எனையினிமேல் பிரிய மாட்டாய்!
உதயத்தில் முகம்காட்டும் கதிரே! எந்தன்
உதிரத்தில் என்றோநீ கலந்து விட்டாய்!
விதம்விதமாய் உனைப்பாடி வெண்பா செய்தே
வருங்காலம் முழுதும்நான் கழிப்பேன் கண்ணே!
பூக்கின்ற பூவெல்லாம் உந்தன் கூந்தல்
போய்ச்சேர பரமனிடம் வரம்நான் கேட்பேன்;
காக்கின்ற கிராமத்து தெய்வம் எல்லாம்
கண்ணேவுன் உடன்நிற்க தவமும் செய்வேன்;
தேக்காலே ஓரில்லம் உனக்காய்க் கட்டி
தேவதையே! உனையதிலே தூங்க வைப்பேன்;
பாக்கோடு வெற்றிலையும் சேர்த்தே உன்னைப்
பெண்கேட்க புரமேரி வருவேன் பெண்ணே!
குரலாலே மனவசியம் செய்யும் இந்தக்
கலையைநீ யார்மூலம் கற்றாய் கண்ணே?
விரலாலே வீணைதனை மீட்டும் எந்தன்
வாணிமுகம் எங்கேநீ பெற்றாய் பெண்ணே?
புரமேரி என்றசிறு ஊரில் தோன்றி
பூவாக பூத்ததுயேன்! பதில்சொல் வாயா?
நரபலியாய் எனைக்கொல்லும் திட்டம் தீட்டி
நல்லவள்போல் நடிப்பதுயேன்? நீயே சொல்சொல்!
ராமனைநீ பாட்டாலே பூசை செய்தாய்!
ராதையெனக் கண்ணனையும் காதல் செய்தாய்!
பூமலர்ந்த நாழிகையே அவற்றைக் கொய்து
பகவதியின் கழுத்திற்கு மாலை செய்தாய்!
நாமகளைப் போல்நீயும் வீணை மீட்டி
நாள்தோறும் நாதத்தால் யாகம் செய்தாய்!
காமனது கணையாலே வீழ்ந்தேன் உன்னால்;
காப்பாற்றா மல்யேன்நீ துரோகம் செய்தாய்?
விலையேன்ன வென்றாலும் கொடுத்தே உன்னை
வாங்கிவிட நான்முடிவு செய்து விட்டேன்;
மலையைவோர் கடுகாக்கும் உந்தன் பார்வை
மீதெந்தென் சிந்தையினைச் செலுத்தி விட்டேன்;
சிலையாக உனைச்செய்து செதுக்க எண்ணி
சிற்பிகளை அழைத்திடவும் முடிவு செய்தேன்;
கலைமகளாய் நீவந்தாய் எந்தன் வாழ்வில்;
காத்திருந்து கரம்பிடிப்பேன் உன்னை ஓர்நாள்!
பல்லாண்டு நாம்சேர்ந்து வாழ வேண்டி
பைரவரைத் தேய்பிறையின் எட்டாம் நாளில்
நல்லவொரு பொழுதினிலே நான்கும்
பிட்டேன்!
நினைப்பெல்லாம் நடந்தேற அழுது தீர்த்தேன்!
இல்லத்தை ஆள்கின்ற மனையா ளாக
இன்னிசைபோல் நீவிரைவில் வரவே வேண்டிச்
சொல்லியே நான்தொழுதேன், சொல்லின் செல்வி!
செல்லாதே இனியென்றும் என்னை விட்டு.
************************************************************
சந்தனமாய் மணம்வீசி மனதில் நின்றாய்!
சாகாதக் காதலினால் தினமும் கொன்றாய்!
பந்ததல்ல பரலியென பாடல் பாடி
படையெடுத்த மன்னன்போல் மனதை வென்றாய்!
வந்துவிழும் வார்த்தையெலாம் கவிதை ஆகும்
வரம்தந்தாய்! வாணியென நாவில் நின்றாய்..
செந்தமிழும் மலையாள மொழியும் சேர
சேரனது வில்பற்றி அம்பும் விட்டாய்..
இதயத்தைத் திருடிபெரும் குற்றம் செய்த
இளமதியே! உனைக்கைது செய்ய வேண்டி
நிதம்தனியே யோசித்துத் திட்டம் தீட்டி
நானுன்னை இருவிழியால் விலங்கு பூட்ட
பதறிப்போய் நீநின்ற கோலம் தன்னைப்
பார்த்ததினால் புன்னகையில் வயிறும் நோக
இதனாலே சினம்கொண்ட இறைவன் உன்னை
இலவசமாய் எனக்கெனவே தந்தான் கண்ணே!
இனிநீயென் எல்லைதனைத் தாண்ட மாட்டாய்!
இதயத்தை விட்டென்றும் நீங்க மாட்டாய்!
தனிமையிலே என்றும்நீ தூங்க மாட்டாய்!
தேன்மலரே! எனையினிமேல் பிரிய மாட்டாய்!
உதயத்தில் முகம்காட்டும் கதிரே! எந்தன்
உதிரத்தில் என்றோநீ கலந்து விட்டாய்!
விதம்விதமாய் உனைப்பாடி வெண்பா செய்தே
வருங்காலம் முழுதும்நான் கழிப்பேன் கண்ணே!
பூக்கின்ற பூவெல்லாம் உந்தன் கூந்தல்
போய்ச்சேர பரமனிடம் வரம்நான் கேட்பேன்;
காக்கின்ற கிராமத்து தெய்வம் எல்லாம்
கண்ணேவுன் உடன்நிற்க தவமும் செய்வேன்;
தேக்காலே ஓரில்லம் உனக்காய்க் கட்டி
தேவதையே! உனையதிலே தூங்க வைப்பேன்;
பாக்கோடு வெற்றிலையும் சேர்த்தே உன்னைப்
பெண்கேட்க புரமேரி வருவேன் பெண்ணே!
குரலாலே மனவசியம் செய்யும் இந்தக்
கலையைநீ யார்மூலம் கற்றாய் கண்ணே?
விரலாலே வீணைதனை மீட்டும் எந்தன்
வாணிமுகம் எங்கேநீ பெற்றாய் பெண்ணே?
புரமேரி என்றசிறு ஊரில் தோன்றி
பூவாக பூத்ததுயேன்! பதில்சொல் வாயா?
நரபலியாய் எனைக்கொல்லும் திட்டம் தீட்டி
நல்லவள்போல் நடிப்பதுயேன்? நீயே சொல்சொல்!
ராமனைநீ பாட்டாலே பூசை செய்தாய்!
ராதையெனக் கண்ணனையும் காதல் செய்தாய்!
பூமலர்ந்த நாழிகையே அவற்றைக் கொய்து
பகவதியின் கழுத்திற்கு மாலை செய்தாய்!
நாமகளைப் போல்நீயும் வீணை மீட்டி
நாள்தோறும் நாதத்தால் யாகம் செய்தாய்!
காமனது கணையாலே வீழ்ந்தேன் உன்னால்;
காப்பாற்றா மல்யேன்நீ துரோகம் செய்தாய்?
விலையேன்ன வென்றாலும் கொடுத்தே உன்னை
வாங்கிவிட நான்முடிவு செய்து விட்டேன்;
மலையைவோர் கடுகாக்கும் உந்தன் பார்வை
மீதெந்தென் சிந்தையினைச் செலுத்தி விட்டேன்;
சிலையாக உனைச்செய்து செதுக்க எண்ணி
சிற்பிகளை அழைத்திடவும் முடிவு செய்தேன்;
கலைமகளாய் நீவந்தாய் எந்தன் வாழ்வில்;
காத்திருந்து கரம்பிடிப்பேன் உன்னை ஓர்நாள்!
பல்லாண்டு நாம்சேர்ந்து வாழ வேண்டி
பைரவரைத் தேய்பிறையின் எட்டாம் நாளில்
நல்லவொரு பொழுதினிலே நான்கும்
பிட்டேன்!
நினைப்பெல்லாம் நடந்தேற அழுது தீர்த்தேன்!
இல்லத்தை ஆள்கின்ற மனையா ளாக
இன்னிசைபோல் நீவிரைவில் வரவே வேண்டிச்
சொல்லியே நான்தொழுதேன், சொல்லின் செல்வி!
செல்லாதே இனியென்றும் என்னை விட்டு.
- சண்முகம்.பபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
அடைக்கல அகவல் - (சிவபெருமானிடம் சில கேள்விகள்)
*******************************************
கயிலை மலைவாழ்க் கடவுளே ஈசா!
காமனை எரித்த காலசம் ஹாரா!
மயிலையில் கோவில் கொண்டம கேசா!
மனதிலே தோன்றிய ஐயம் தீர்ப்பாய்!
உனைச்சில கேள்விகள் கேட்க நினைத்தேன்;
உண்மை விளக்கிநீ உதவிட வேண்டும்!
ஒருநாள் நானொரு மங்கையைக் கண்டேன்;
ஒளியிலே அவள்முகம் மின்னுதல் கண்டேன்;
ஆதி சங்கரர் ஆக்கிய பாடலை
அழகிய குரலில் பாடிடக் கேட்டேன்;
இசையும் அவளே அமைத்திருந் தாளெனும்
விசயம் அறிந்ததும் வியப்பினில் ஆழ்ந்தேன்;
கால பைரவா! உன்னட் டகத்தை
குயில்போல் பாடும் அவள்திறம் கண்டேன்.
கோபிகோ பாலம் எனும்பெயர் கொண்ட
கீதம் இசைத்தாள்; அதில்மெய் மறந்தேன்!
உனைக்கா ணாமல் நானில் லையென
விதையில் லாமல் வேரில் லையென
எழில்மிக அவள்பின் பாடிடக் கேட்டென்;
விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.
இதுநே ராமல் இந்தப் பிறவியின்
இனிவரும் காலம் முழுவது மாகப்
போயிருந் தாலது மிகமிகக் கொடுமை;
பார்த்தபின் னால்வீண் ஏக்கம் ஏனெனும்
பாடல் வரிகளைத் தொடர்ந்தவள் பாட
பனித்தயென் கண்களில் அருவி வழிந்தது;
நானென் மனதில் நினைத்த எண்ணமே
நங்கையின் பாடலின் பொருளும் ஆனதால்
கடவுளைக் கண்ட பக்தனைப் போலக்
களிப்பிலும் வியப்பிலும் உள்ளம் ஆழ்ந்தது;
அவளைக் காணா திந்தவோர் பிறவியே
முடிந்துபோ யிருந்தால் வாழ்க்கையே வீண்தான்;
மடிந்துபோய் என்னுடல் மண்ணில் புதையுமுன்
மனமெலாம் குளிர அவளைநான் கண்டேன்;
என்னள வெடுத்து நெய்தவோர் ஆடைபோல்
எத்தனை பொருத்தம் எங்களுக் குள்ளே!
இப்படி ஒருத்தி இருக்கி றாளென
இதுவரை எனக்கேன் தெரிய வில்லையோ!
கடவுளே! உந்தன் பரிசவள் என்று
கொஞ்சமும் ஐயமே இன்றி விளங்க
அந்த நொடியிலே அவளது குரலின்
ஆழத் தில்நான் இதயம் தொலைத்தேன்;
முந்திய பிறவியில் பழகிய தொடர்ச்சியால்
வந்தவள் இவளோ என்று வியந்தேன்;
காமனின் கரும்புவில் மலர்க்கணைப் பாய்ச்ச
தாமத மின்றிநான் காதலில் விழுந்தேன்;
ஆனால் இதிலொரு சிக்கல் இருப்பதால்
ஆண்டவ நேவுன் அருளை நாடினேன்;
பதினா றேயப் பெண்ணின் அகவை;
பாவி எனக்கோ வயது நாற்பது;
உலகம் இதனை ஏற்குமோ என்றென்
உள்ளம் வலிக்கவோர் ஐயம் பிறந்தது;
இருவரும் இணைந்தால் இருக்கும் நாளெலாம்
இறைத் தொண்டாற்றி இசையில் நனையலாம்;
இதனை உலகம் ஏற்றுக் கொள்ள
இனிவுனை யன்றி யாரருள் புரிவார்?
காளி பக்தனாம் ராம கிருஷ்ணனைக்
குமரி சாரதை மணந்தது போல,
கடவுள் தூதனாம் முகமது கரத்தைக்
கன்னி ஆயிஷா பிடித்தது போல,
தந்தைப் பெரியார் மணியம் மைதனைத்
திருமணம் செய்து வாழ்ந்தது போல,
சிந்தை கவர்ந்தயென் சின்னக் குயிலுடன்
சேர்ந்துநான் வாழ்வதில் தவறெதும் உண்டா?
மரபுக் கவிதைகள் ஆக்கும் திறமையை
வரமாய் எனக்குநீ அளித்தருள் செய்தாய்;
மெல்லிசை யாலே மகிழ்ச்சியைப் பரப்பும்
மாபெரும் பொறுப்பை அவளுக் களித்தாய்;
கவிதையும் இசையும் இணைந்தால் உலகில்
கலைகள் வளரும்; காவியம் மலரும்;
நாங்கள் இணைந்தால் நாட்டிற் கேபல
நன்மையும் பெருமையும் மேன்மையும் சேரும்;
இதனை உலகம் ஏற்கும் வகையில்
இன்றே நல்ல வழிசெய் வாயா?
இனிமே லாவது எந்தன் வாழ்வின்
தனிமை போகத் துணைசெய் வாயா?
உன்மேல் வைத்த நம்பிக் கையினால்
உலகம் பழிப்பதைப் பொருட்படுத் தாமல்,
என்னவள் சிந்தும் இசையினில் களித்தேன்;
என்னிசைத் திறனும் அதனால் வளர்ந்தது;
கண்மணி அவளை நினைக்க நினைக்க
கவிதை மழையாய்க் கொட்டித் தீர்த்தது;
வெண்பா விருத்தம் எனப்பல பாக்கள்
வெள்ளமாய்ப் பெருகித் தமிழ்க்கடல் சேர்ந்தது;
இருந்த சஞ்சலம் போகா மல்நான்
வருந்தி வாய்க்கு வந்ததைப் பேசினேன்;
காதலைச் சொல்லும் வழிதெரி யாத
கவலையால் பலர்முன் அழுது புலம்பினேன்;
மதுவை நாடி மயக்கம் அடைந்ததால்
புதுப்புது சோதனை வாழ்வில் வந்தன;
பழியும் அவமா னங்களும் என்னைப்
புரட்டி யெடுத்துக் கசக்கிப் பிழிந்தன;
எந்தன் நோக்கம் என்னவென் றறிவாய்!
எந்தன் பக்தியின் ஆழமும் அறிவாய்!
கலைகளை வளர்க்கும் குறிக்கோ ளுடன்நான்
கனவுகள் சுமந்து திரிவதும் அறிவாய்!
எல்லாம் அறிந்தும் இத்தனை சோதனை
என்னை அண்டிட விடுவது முறையோ!
அல்லல் படுமுன் அடியவர் துயரை
அழிப்பது தானே உனதுப ழக்கம்?
அன்பே சிவமாய் ஒளிரும் ஜோதியே?
அடைக்கலம் நீயே! நல்வழி காட்டு;
உன்னை முழுவது மாக நம்பினேன்;
உதவி நாடியுன் காலடி பிடித்தேன்;
என்னை நீகை விட்டுவி டாதே!
இனியும் எனைநீ சோதிக் காதே!
அண்ணா மலையில் தோன்றிய நெருப்பே!
ஆனைக் காவில் வழியும் நீரே!
காஞ்சி புரத்து நெல்வயல் மண்ணே!
காள கத்தியில் வீசும் காற்றே!
சிதம்பர வானின் நீல நிறத்தைச்
சந்தனம் போலக் கழுத்தில் பூசிய
சம்போ! சிவனே! சண்முகன் தந்தையே!
சரணம் அடைந்தேன்; எனைக்காப் பாற்று!
*******************************************
கயிலை மலைவாழ்க் கடவுளே ஈசா!
காமனை எரித்த காலசம் ஹாரா!
மயிலையில் கோவில் கொண்டம கேசா!
மனதிலே தோன்றிய ஐயம் தீர்ப்பாய்!
உனைச்சில கேள்விகள் கேட்க நினைத்தேன்;
உண்மை விளக்கிநீ உதவிட வேண்டும்!
ஒருநாள் நானொரு மங்கையைக் கண்டேன்;
ஒளியிலே அவள்முகம் மின்னுதல் கண்டேன்;
ஆதி சங்கரர் ஆக்கிய பாடலை
அழகிய குரலில் பாடிடக் கேட்டேன்;
இசையும் அவளே அமைத்திருந் தாளெனும்
விசயம் அறிந்ததும் வியப்பினில் ஆழ்ந்தேன்;
கால பைரவா! உன்னட் டகத்தை
குயில்போல் பாடும் அவள்திறம் கண்டேன்.
கோபிகோ பாலம் எனும்பெயர் கொண்ட
கீதம் இசைத்தாள்; அதில்மெய் மறந்தேன்!
உனைக்கா ணாமல் நானில் லையென
விதையில் லாமல் வேரில் லையென
எழில்மிக அவள்பின் பாடிடக் கேட்டென்;
விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.
இதுநே ராமல் இந்தப் பிறவியின்
இனிவரும் காலம் முழுவது மாகப்
போயிருந் தாலது மிகமிகக் கொடுமை;
பார்த்தபின் னால்வீண் ஏக்கம் ஏனெனும்
பாடல் வரிகளைத் தொடர்ந்தவள் பாட
பனித்தயென் கண்களில் அருவி வழிந்தது;
நானென் மனதில் நினைத்த எண்ணமே
நங்கையின் பாடலின் பொருளும் ஆனதால்
கடவுளைக் கண்ட பக்தனைப் போலக்
களிப்பிலும் வியப்பிலும் உள்ளம் ஆழ்ந்தது;
அவளைக் காணா திந்தவோர் பிறவியே
முடிந்துபோ யிருந்தால் வாழ்க்கையே வீண்தான்;
மடிந்துபோய் என்னுடல் மண்ணில் புதையுமுன்
மனமெலாம் குளிர அவளைநான் கண்டேன்;
என்னள வெடுத்து நெய்தவோர் ஆடைபோல்
எத்தனை பொருத்தம் எங்களுக் குள்ளே!
இப்படி ஒருத்தி இருக்கி றாளென
இதுவரை எனக்கேன் தெரிய வில்லையோ!
கடவுளே! உந்தன் பரிசவள் என்று
கொஞ்சமும் ஐயமே இன்றி விளங்க
அந்த நொடியிலே அவளது குரலின்
ஆழத் தில்நான் இதயம் தொலைத்தேன்;
முந்திய பிறவியில் பழகிய தொடர்ச்சியால்
வந்தவள் இவளோ என்று வியந்தேன்;
காமனின் கரும்புவில் மலர்க்கணைப் பாய்ச்ச
தாமத மின்றிநான் காதலில் விழுந்தேன்;
ஆனால் இதிலொரு சிக்கல் இருப்பதால்
ஆண்டவ நேவுன் அருளை நாடினேன்;
பதினா றேயப் பெண்ணின் அகவை;
பாவி எனக்கோ வயது நாற்பது;
உலகம் இதனை ஏற்குமோ என்றென்
உள்ளம் வலிக்கவோர் ஐயம் பிறந்தது;
இருவரும் இணைந்தால் இருக்கும் நாளெலாம்
இறைத் தொண்டாற்றி இசையில் நனையலாம்;
இதனை உலகம் ஏற்றுக் கொள்ள
இனிவுனை யன்றி யாரருள் புரிவார்?
காளி பக்தனாம் ராம கிருஷ்ணனைக்
குமரி சாரதை மணந்தது போல,
கடவுள் தூதனாம் முகமது கரத்தைக்
கன்னி ஆயிஷா பிடித்தது போல,
தந்தைப் பெரியார் மணியம் மைதனைத்
திருமணம் செய்து வாழ்ந்தது போல,
சிந்தை கவர்ந்தயென் சின்னக் குயிலுடன்
சேர்ந்துநான் வாழ்வதில் தவறெதும் உண்டா?
மரபுக் கவிதைகள் ஆக்கும் திறமையை
வரமாய் எனக்குநீ அளித்தருள் செய்தாய்;
மெல்லிசை யாலே மகிழ்ச்சியைப் பரப்பும்
மாபெரும் பொறுப்பை அவளுக் களித்தாய்;
கவிதையும் இசையும் இணைந்தால் உலகில்
கலைகள் வளரும்; காவியம் மலரும்;
நாங்கள் இணைந்தால் நாட்டிற் கேபல
நன்மையும் பெருமையும் மேன்மையும் சேரும்;
இதனை உலகம் ஏற்கும் வகையில்
இன்றே நல்ல வழிசெய் வாயா?
இனிமே லாவது எந்தன் வாழ்வின்
தனிமை போகத் துணைசெய் வாயா?
உன்மேல் வைத்த நம்பிக் கையினால்
உலகம் பழிப்பதைப் பொருட்படுத் தாமல்,
என்னவள் சிந்தும் இசையினில் களித்தேன்;
என்னிசைத் திறனும் அதனால் வளர்ந்தது;
கண்மணி அவளை நினைக்க நினைக்க
கவிதை மழையாய்க் கொட்டித் தீர்த்தது;
வெண்பா விருத்தம் எனப்பல பாக்கள்
வெள்ளமாய்ப் பெருகித் தமிழ்க்கடல் சேர்ந்தது;
இருந்த சஞ்சலம் போகா மல்நான்
வருந்தி வாய்க்கு வந்ததைப் பேசினேன்;
காதலைச் சொல்லும் வழிதெரி யாத
கவலையால் பலர்முன் அழுது புலம்பினேன்;
மதுவை நாடி மயக்கம் அடைந்ததால்
புதுப்புது சோதனை வாழ்வில் வந்தன;
பழியும் அவமா னங்களும் என்னைப்
புரட்டி யெடுத்துக் கசக்கிப் பிழிந்தன;
எந்தன் நோக்கம் என்னவென் றறிவாய்!
எந்தன் பக்தியின் ஆழமும் அறிவாய்!
கலைகளை வளர்க்கும் குறிக்கோ ளுடன்நான்
கனவுகள் சுமந்து திரிவதும் அறிவாய்!
எல்லாம் அறிந்தும் இத்தனை சோதனை
என்னை அண்டிட விடுவது முறையோ!
அல்லல் படுமுன் அடியவர் துயரை
அழிப்பது தானே உனதுப ழக்கம்?
அன்பே சிவமாய் ஒளிரும் ஜோதியே?
அடைக்கலம் நீயே! நல்வழி காட்டு;
உன்னை முழுவது மாக நம்பினேன்;
உதவி நாடியுன் காலடி பிடித்தேன்;
என்னை நீகை விட்டுவி டாதே!
இனியும் எனைநீ சோதிக் காதே!
அண்ணா மலையில் தோன்றிய நெருப்பே!
ஆனைக் காவில் வழியும் நீரே!
காஞ்சி புரத்து நெல்வயல் மண்ணே!
காள கத்தியில் வீசும் காற்றே!
சிதம்பர வானின் நீல நிறத்தைச்
சந்தனம் போலக் கழுத்தில் பூசிய
சம்போ! சிவனே! சண்முகன் தந்தையே!
சரணம் அடைந்தேன்; எனைக்காப் பாற்று!
- சண்முகம்.பபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
தமிழ்மண்ணின் ராமாயணம் – நேரிசை வெண்பா (தமிழ்க் கவிதை)
****************************************
வரமா விதிதந்த சாபமா என்றே
தெரியாமல் நான்குழம்பி நின்றேன் - உரமாய்
என்நெஞ்சில் நீவிழவே காதல் செடிமுளைத்துப்
பொன்நிறத்தில் பூத்ததுபூ இன்று.
அனுமன் துணையோடு சீதையின் காதல்
வனம்கடந்து ஊர்சேரும் முன்பே - தனுவை
வளைத்தவன் துன்பத்தை யாரறிவார்? என்னைத்
துளைத்தவலி நீயறிவாய் இன்று.
கடல்தாண்ட மாருதி கைகொடுத்தான் எந்தன்
மடல்தூதை உன்னிடம் சேர்க்க - திடமாக
நானவனை நம்பினேன்; நெஞ்சில் புதைந்தவளே!
வானரனை நீயும் துதி.
வனவாசம் போக வனம்தேவை இல்லை
மனம்காதல் நோயுற்றால் போதும் - கனவேநீ
இல்லாத வாழ்க்கை காட்டிலே வாழ்வதுபோல்;
கொல்லுதடி என்னைப் பிரிவு.
வில்லை வளைப்பதெல்லாம் சின்ன விசயமடி!
கல்லாகப் போனவுன் நெஞ்சத்தை - சொல்லில்
நல்லபழஞ் செந்தமிழால் வெல்வதற்கு வேங்கைபோல்
வல்லமை வேண்டும் உணர்.
கல்லாகப் போன அகலிகையை ராமன்கால்
மெல்ல எழுப்பியதோர் அற்புதமா? - சொல்லிலே
இன்னிசை சேர்த்தென் இதயம் எழுப்பியது
முன்யாரும் செய்யாத மாண்பு.
சஞ்சீவி என்ற மலைதூக்கி மண்காத்த
அஞ்சனை மைந்தனை நான்தொழுதேன் - நெஞ்சத்தை
நீயொரு ராவணனாய் தூக்கி சிறைவைத்த
தீயவினை தீர்ந்திடும் என்று.
வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றதுபோல்
போலித் தனமில்லை என்மனதில் - வேலி
பயிரையே மேய்வதுபோல் நான்மேய மாட்டேன்;
உயிரேநீ எந்தன் உயிர்.
செருப்பை அரசாள சிம்மாச னத்தில்
விருப்பமாய் வைத்தான் பரதன் - கருப்பை
தனக்குள் உனைவைத்துத் தாங்கியவுன் தாய்முன்
எனக்கவன் கால்தூசு தான்.
இதிகாசக் காதலில் என்ன சிறப்பு?
மிதியடியை மண்ணாள விட்ட - விதிபோன்று
நம்விதி இல்லையடி நாம்நூறு காப்பியம்
செம்மொழியில் செய்யலாம் வா.
****************************************
வரமா விதிதந்த சாபமா என்றே
தெரியாமல் நான்குழம்பி நின்றேன் - உரமாய்
என்நெஞ்சில் நீவிழவே காதல் செடிமுளைத்துப்
பொன்நிறத்தில் பூத்ததுபூ இன்று.
அனுமன் துணையோடு சீதையின் காதல்
வனம்கடந்து ஊர்சேரும் முன்பே - தனுவை
வளைத்தவன் துன்பத்தை யாரறிவார்? என்னைத்
துளைத்தவலி நீயறிவாய் இன்று.
கடல்தாண்ட மாருதி கைகொடுத்தான் எந்தன்
மடல்தூதை உன்னிடம் சேர்க்க - திடமாக
நானவனை நம்பினேன்; நெஞ்சில் புதைந்தவளே!
வானரனை நீயும் துதி.
வனவாசம் போக வனம்தேவை இல்லை
மனம்காதல் நோயுற்றால் போதும் - கனவேநீ
இல்லாத வாழ்க்கை காட்டிலே வாழ்வதுபோல்;
கொல்லுதடி என்னைப் பிரிவு.
வில்லை வளைப்பதெல்லாம் சின்ன விசயமடி!
கல்லாகப் போனவுன் நெஞ்சத்தை - சொல்லில்
நல்லபழஞ் செந்தமிழால் வெல்வதற்கு வேங்கைபோல்
வல்லமை வேண்டும் உணர்.
கல்லாகப் போன அகலிகையை ராமன்கால்
மெல்ல எழுப்பியதோர் அற்புதமா? - சொல்லிலே
இன்னிசை சேர்த்தென் இதயம் எழுப்பியது
முன்யாரும் செய்யாத மாண்பு.
சஞ்சீவி என்ற மலைதூக்கி மண்காத்த
அஞ்சனை மைந்தனை நான்தொழுதேன் - நெஞ்சத்தை
நீயொரு ராவணனாய் தூக்கி சிறைவைத்த
தீயவினை தீர்ந்திடும் என்று.
வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றதுபோல்
போலித் தனமில்லை என்மனதில் - வேலி
பயிரையே மேய்வதுபோல் நான்மேய மாட்டேன்;
உயிரேநீ எந்தன் உயிர்.
செருப்பை அரசாள சிம்மாச னத்தில்
விருப்பமாய் வைத்தான் பரதன் - கருப்பை
தனக்குள் உனைவைத்துத் தாங்கியவுன் தாய்முன்
எனக்கவன் கால்தூசு தான்.
இதிகாசக் காதலில் என்ன சிறப்பு?
மிதியடியை மண்ணாள விட்ட - விதிபோன்று
நம்விதி இல்லையடி நாம்நூறு காப்பியம்
செம்மொழியில் செய்யலாம் வா.
- சண்முகம்.பபண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
பாண்டிய நாட்டு மருமகள் - தமிழ்க் கவிதை
**************************************
முழுதாய் மனதைப் பறித்தவெண் மதியே
மனம்நாள் தோறும் உனைநாடும்;
அழுதே அழுதே தேகம் எல்லாம்
ஆயிரம் நதிகள் வழிந்தோடும்;
எழுதும் கவிதை வரியில் எல்லாம்
எதுகை மோனை கூத்தாடும்;
புழுவைத் தேடும் சேவல் போல
பெண்ணே இதயம் உனைத்தேடும்!
உந்தன் பாடல் கேட்கும் நேரம்
உள்ளத் திற்குள் தேன்பாயும்;
சந்தன வதனச் சிரிப்பைப் பார்த்தே
சந்திரன் மங்கி தினம்தேயும்;
மந்திர விழியில் தெரியும் தீயில்
மலரே என்னுடல் குளிர்காயும்;
நந்தவ னத்தின் பூவுனைப் பார்த்தால்
நாணிக் குறுகித் தலைசாயும்!
வாய்திறந் தேநீ பேசும் ஒவ்வொரு
வாக்கிய மும்வொரு புதுவேதம்;
ஓய்வில் லாமல் எந்தன் மனதில்
ஒலிக்கும் தினமும் உன்நாதம்;
மேயும் மாடாய் என்விழி உன்னை
மேய்ந்ததில் ஆச்சே பெரும்சேதம்;
நீயில் லாமல் வாழ்வதென் றாலிவ்
வாழ்க்கை என்ப தினிபோதும்!
கல்லில் செதுக்கிய சிற்பம் போலே
கண்மணி யேநீ கருவானாய்;
சொல்லில் செதுக்கிய கவிதையி லெல்லாம்
சேர்ந்தே பொருளாய் உருவானாய்;
மெல்லிசைக் கலையை நான்கற் றிடவே
முத்தே நீயே குருவானாய்;
நல்ல வெயில்தான் அடிக்கும் பொழுது
நீயே நிழல்தரும் தருவானாய்!
ஆண்டவன் உன்னைப் படைத்திட வேண்டி
ஆழ்கடல் முத்தை எடுத்தானா?
வேண்டிய செல்வம் எல்லாம் சேர்த்தே
வெண்ணில வுன்னைத் தொடுத்தானா?
பாண்டிய நாட்டின் மருமக ளாக
பூவே உனையவன் கொடுத்தானா?
பூண்ட தவத்தை தடுக்க மன்மதன்
பூவால் அம்பு விடுத்தானா?
சங்கீ தத்தை மழையாய் சிந்தும்
சாதனை செய்த மேகம்நீ!
எங்கும் வாசனை வீசும் பூவை
எடுத்துரு வாக்கிய தேகம்நீ!
தங்க நகைமேல் ரத்தினம் சேர்க்கத்
தேடிய தீய நாகம்நீ!
வங்கக் கடலில் மையம் கொண்டே
வீசும் புயலின் வேகம்நீ!
உன்னைச் சூழ்ந்தே உலவும் எண்ணம்
உனைவிட் டேயினி கலையாதா?
தன்னை மறந்தே நானலை கின்ற
துன்பம் இனிபோய் தொலையாதா?
என்னை விரும்பும் காதல் உன்னுள்
ஏறிப் பயிராய் விளையாதா?
பொன்மான் தேடிய ராமன் வில்போல்
பெண்ணே உன்மனம் வளையாதா?
**************************************
முழுதாய் மனதைப் பறித்தவெண் மதியே
மனம்நாள் தோறும் உனைநாடும்;
அழுதே அழுதே தேகம் எல்லாம்
ஆயிரம் நதிகள் வழிந்தோடும்;
எழுதும் கவிதை வரியில் எல்லாம்
எதுகை மோனை கூத்தாடும்;
புழுவைத் தேடும் சேவல் போல
பெண்ணே இதயம் உனைத்தேடும்!
உந்தன் பாடல் கேட்கும் நேரம்
உள்ளத் திற்குள் தேன்பாயும்;
சந்தன வதனச் சிரிப்பைப் பார்த்தே
சந்திரன் மங்கி தினம்தேயும்;
மந்திர விழியில் தெரியும் தீயில்
மலரே என்னுடல் குளிர்காயும்;
நந்தவ னத்தின் பூவுனைப் பார்த்தால்
நாணிக் குறுகித் தலைசாயும்!
வாய்திறந் தேநீ பேசும் ஒவ்வொரு
வாக்கிய மும்வொரு புதுவேதம்;
ஓய்வில் லாமல் எந்தன் மனதில்
ஒலிக்கும் தினமும் உன்நாதம்;
மேயும் மாடாய் என்விழி உன்னை
மேய்ந்ததில் ஆச்சே பெரும்சேதம்;
நீயில் லாமல் வாழ்வதென் றாலிவ்
வாழ்க்கை என்ப தினிபோதும்!
கல்லில் செதுக்கிய சிற்பம் போலே
கண்மணி யேநீ கருவானாய்;
சொல்லில் செதுக்கிய கவிதையி லெல்லாம்
சேர்ந்தே பொருளாய் உருவானாய்;
மெல்லிசைக் கலையை நான்கற் றிடவே
முத்தே நீயே குருவானாய்;
நல்ல வெயில்தான் அடிக்கும் பொழுது
நீயே நிழல்தரும் தருவானாய்!
ஆண்டவன் உன்னைப் படைத்திட வேண்டி
ஆழ்கடல் முத்தை எடுத்தானா?
வேண்டிய செல்வம் எல்லாம் சேர்த்தே
வெண்ணில வுன்னைத் தொடுத்தானா?
பாண்டிய நாட்டின் மருமக ளாக
பூவே உனையவன் கொடுத்தானா?
பூண்ட தவத்தை தடுக்க மன்மதன்
பூவால் அம்பு விடுத்தானா?
சங்கீ தத்தை மழையாய் சிந்தும்
சாதனை செய்த மேகம்நீ!
எங்கும் வாசனை வீசும் பூவை
எடுத்துரு வாக்கிய தேகம்நீ!
தங்க நகைமேல் ரத்தினம் சேர்க்கத்
தேடிய தீய நாகம்நீ!
வங்கக் கடலில் மையம் கொண்டே
வீசும் புயலின் வேகம்நீ!
உன்னைச் சூழ்ந்தே உலவும் எண்ணம்
உனைவிட் டேயினி கலையாதா?
தன்னை மறந்தே நானலை கின்ற
துன்பம் இனிபோய் தொலையாதா?
என்னை விரும்பும் காதல் உன்னுள்
ஏறிப் பயிராய் விளையாதா?
பொன்மான் தேடிய ராமன் வில்போல்
பெண்ணே உன்மனம் வளையாதா?
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு
» அப்பாவைப் புனிதப்படுத்துதல் – லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைத் தொகுப்பு.
» ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு
» தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி – சில்வியா பிளாத் கவிதைத் தொகுப்பு தமிழில் .
» தென்றலின் வேகம் மற்றும் கல்லறை நெருஞ்சிகள் - இரு கவிதைத் தொகுப்பு நூலினை தரவிறக்க
» அப்பாவைப் புனிதப்படுத்துதல் – லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைத் தொகுப்பு.
» ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு
» தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி – சில்வியா பிளாத் கவிதைத் தொகுப்பு தமிழில் .
» தென்றலின் வேகம் மற்றும் கல்லறை நெருஞ்சிகள் - இரு கவிதைத் தொகுப்பு நூலினை தரவிறக்க
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5