ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 3 Empty கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு

Post by சண்முகம்.ப Mon Oct 17, 2022 3:01 pm

First topic message reminder :

அன்புடையீர்,

எனக்கு பல தாய்மார்கள் இருக்கிறார்கள்..

1) என்னைப் படைத்த உலகாளும் அகிலாண்டேஸ்வரியான அம்பிகை ஒரு தாய்..
2) என்னையும் உங்களையும் தாங்கும் பூமித்தாயான பூமாதேவி ஒரு தாய்.
3) நமக்காக ரத்தம் சிந்திய பல தியாகிகளின் தவப்பயனால் தலைநிமிர்ந்த என் பாரதத்தாய் ஒரு தாய்.
4) சங்கத்தில் பூப்படைந்து இன்று எங்கும் நிறைந்திருக்கும் சிங்கத் தமிழ்த்தாயும் ஒரு தாய்.
5) என்னைப் பத்து மாதம் சுமந்து, சத்தான பாலூட்டி
அதனால் எத்தனையோ இடர்பட்டு என்னை வளர்த்து வித்தகனாக்கிய என் பெற்ற தாய் என் முதல் தாய்..
6) நான் காதலிக்கும் அன்பிற்குரிய பெண்ணாய், என் அன்னைக்கு மருமகளாகவும் எனக்கு மறுதாயாகவும் விளங்கும் எந்தன் ஆருயிர் இன்னொரு தாய்..

இப்படி பல தாய்களுக்கு மகனாகத் திகழ எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்? என் தமிழை அரங்கேற்ற வாய்ப்பு கொடுத்த ஈகரையையும் தாயாக நினைப்பதில் எனக்கு மகிழ்ச்சி...

அதனால், கடந்த சில மாதங்களில் நான் எழுதிய அனைத்துக் கவிதைகளையும் ஒரே பதிவில் பதிவு செய்ய ஆசை கொண்டு இதைப் பதிவு செய்கிறேன். உங்களது கருத்துகள் மற்றும் அறிவுரைகளை வரவேற்கிறேன்.. இதே பதிவில் அடுத்தடுத்து என் கவிதைகளை வெளியிடுகிறேன்...


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down


கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 3 Empty Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு

Post by சண்முகம்.ப Mon Oct 17, 2022 4:25 pm

பிறகேன் இத்தனை வாதம்? – கவிதை
********************************************************

மனிதனைப் போலே உருவம் கொண்டக்
கடவுள் பலரைப் படைத்தோம்;
ஆளாளுக்கு ஒருபுத்தகத்தைக்
கடவுள் வாக்கெனப் படித்தோம்;
ஒன்றாய் இருந்த மனிதகுலம் நாம்
மதமென இனமெனப் பிரிந்தோம்;
மதங்களின் போதனை அன்பே என்ற
மூல உண்மையை மறந்தோம்!

உன்னையும் போலே பிறரையும் நேசி
என்றார் அண்ணல் ஏசு;
ஒன்றே கடவுள் அனைவரும் ஓர்குலம்
என்றார் நபிகள் அன்று;
ஒன்றே உண்மை பெயர்கள் பலவென
சொன்னது நம் ரிக் வேதம்;
மூவர் சொன்னதில என்ன விரோதம்
பிறகேன் இத்தனை வாதம்?

பரந்த பூமி நிறைந்த செல்வம்
எல்லாம் உண்டு இங்கே;
பரம்பொருளை நம் வாழ்வில் உணரப்
பாதைகள் பலப்பல இங்கே;
கற்றுக் கொள்ள ஆயிரம் வழிகள்
ஆயிரம் நூல்கள் இங்கே;
ஆனாலும் ஏன் இத்தனை சண்டை
இத்தனை வெறுப்பு இங்கே?

விஞ்ஞானத்தால் அதிசயம் கோடி
கண்முன் நிகழச் செய்தோம்;
கையளவுள்ளக் கருவியின் துணையால்
உலகை தினம் வலம் வந்தோம்;
நிலவைத் தொட்டோம், வானை அளந்தோம்,
விண்ணுலகை நாம் ஆண்டோம்;
இத்தனை செய்தோம் ஒற்றுமை என்னும்
பலத்தை நாம் ஏன் மறந்தோம்?


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 3 Empty Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு

Post by சண்முகம்.ப Mon Oct 17, 2022 4:26 pm

குறியீடாய் மாறினாய்
**********************************
கண்ணெதிரெ அன்றொருநாள் தோன்றினாய்;
களையானத் திருமுகத்தைக் காட்டினாய்!
தண்ணீராய் மனமெங்கும் தாவினாய்;
தீடீரென்று பிரிந்தெங்கோ ஒடினாய்!
எண்ணத்தில் கற்பனையாய் ஆகினாய்;
எழுதுகிறக் கவிதைகளாய் மாறினாய்!
விண்வெளியில் கலந்தொன்றாய் ஆகினாய்;
வாழ்க்கையிலே குறியீடாய் மாறினாய்!

சிந்தனையின் இடுக்குகளில் தேங்கினாய்;
சிலசமயம் கனவில்முகம் காட்டினாய்!
மந்திரமாய் என்வாழ்வை மாற்றினாய்;
மழைத் தூரல் போல் மனதில் தூறினாய்!
சந்தமெனக் கவிதைகளில் ஏறினாய்;
சொர்க்கத்தின் குறியீடு ஆகினாய்!
பாதையெலாம் மைல்கல்லாய் மாறினாய்;
பரம்பொருளை உன்மூலம் காட்டினாய்!


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 3 Empty Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு

Post by சண்முகம்.ப Mon Oct 17, 2022 4:27 pm

குண்டூசி – கவிதை (ஆசிரியப்பா)
************************************************
குண்டூசி ஒன்று குருவாய் ஆனது;
குறியீடாய்க் கோடி உண்மை சொன்னது;
அறிவின் கூர்மையைச் சிந்தனை நுண்மையைக்
குறித்துக் காட்டும் உவமைநான் என்றது;
கூரிய அறிவே பூமியைத் தலைமேல்
நேரிய முறையில் வைத்துத் தாங்கும்
என்ற உண்மையை அதன்மேல் இருக்கும்
உருண்டைத் தலையும் உரக்கச் சொன்னது;
வைக்கோல் போரில் தான்போய்த் தொலைந்தால்
வருடம் கழிந்திடும் தேடும் முயற்சியில்;
பொய்களின் குவியலில் உண்மை என்னும்
பொக்கிஷம் தேடும் பயணமும் அதைப் போல்
மிகமிகக் கடினம் என்றது; அந்த
மெய்மையின் சின்னமும் தானே என்றது
சிற்சில சமயம் தன்னைப் போல
உண்மையும் கொஞ்சம் குத்தும் என்றது!
“பனிபோல் மின்னும் வெள்ளைக் காகிதம்
பார்வையைப் பறிக்கும் மஞ்சள் காகிதம்
வண்ணம் பற்பல எனினும் அவற்றை
வானவில் போல ஒன்றாய் இணைப்பேன்
செய்தித் தாளையும் காகித மடலையும்
சாமான் எழுதியத் துண்டுச் சீட்டையும்
அடிக்கடி சாலையில் சிலபேர் கொடுக்கும்
அறிவிப்பு ஏந்திய வண்ணச் சீட்டையும்
பயணச் சீட்டையும் கட்டணச் சீட்டையும்
பரிட்சைத் தாளையும் கேள்வித் தாளையும்
ஒன்றாய்த் தொகுத்து வேற்றுமை களையும்
ஒற்றுமைச் சின்னமும் நானே” என்றது;
“வாரியல் குச்சிபோல் இருக்கும் என்னையே
குண்டூசி என்று உலகம் அழைக்கும்;
புத்தனாய் காந்தியாய் நீ ஆனாலும்
பலரது வாய்மொழி உன்னையும் பழிக்கும்!
அடுத்தவர் கருத்தைப் பொருட்படுத்தாமல்
அடுத்தவர் பேச்சால் மனம் கலங்காமல்
அறிவைத் தேடி உண்மையைத் தேடி
அனைத்துலகத்தின் ஒற்றுமை தேடி
அறநெறி வாழ்வதே வாழ்வு; எனைபோல்
அன்பாய் அணைத்து வாழ்வதே வாழ்வு!”
என்று பேசி போதனை முடித்தது;
என்கை நழுவித் தொலைந்து போனது!


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 3 Empty Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு

Post by சண்முகம்.ப Mon Oct 17, 2022 4:29 pm

கவிதை மந்திரம் – ஆசிரியப்பா
********************************************
கவிதையின் ஆழம் அறியத் தேடிக்
கற்பனைப் படகில் கடல்பலக் கடந்து,
அவ்வப் போது மூழ்கி முத்தெடுத்துநான்
ஆவல் பொங்கப் பயணித்து இருந்ததில்
மெல்ல மெல்ல அறிந்த உண்மைகளை
முத்தமிழ்க் கவியில் உரைப்பேன் கேட்பீர்!
ஓவிய மாக இயற்கை வரைந்த
ஒவ்வொரு அழகிலும் உள்ளது கவிதை;
நாடக மாக இயற்கை இயற்றிய
நமது வாழ்க்கையே மாபெரும் கவிதை;
இருட்டு மறைந்ததும் பறவைகள் நடத்தும்
இசைக் கச்சேரியில் இனித்திடும் கவிதை;
ஒவ்வொரு சிரிப்பிலும் விடும் கண்ணீரிலும்
ஒர்வரி சேரத் தொடர்ந்திடும் கவிதை;
மலர்கனி யாகி மரத்தினில் இருந்து
மண்ணில் விழுந்திட முளைவிடுமே விதை;
மறுபடி அவ்விதை மரமாய் ஆகும்
மாயத் திற்குள் மந்திரக் கவிதை!
இல்லாத கடவுளும் கவிஞன் வரையும்
சொல்லோ வியத்தில் தோன்றிட முடியும்;
கடலையும் நிலவையும் மலரையும் பனியையும்
கவிதையால் பேச வைத்திட முடியும்;
கோடி மன்னர்கள் கட்டாத கோட்டையைக்
கற்பனைச் செங்கலால் கட்டிட முடியும்;
கவிதை வரிகளால் சிந்தனை உளியால்
கோவில் பல உருவாக்கவும் முடியும்!
உருவகம் என்ற தந்திரத் தாலே
உள்ள இயற்கையைத் தாயாய் மாற்றும்;
உண்மை என்ற ஓர் பரம்பொருளை
உருவம் உள்ள இறைவனாய் மாற்றும்;
எதிர்ப்படும் காட்சியின் அழகையெல்லாம் ஒரு
எதுகை மோனை மாலையாய் மாற்றும்;
இப்படிப் பலப்பல அற்புதங்களை
இனியதோர்க் கவிதை இயல்பாய்ச் செய்யும்!
கடவுள் என்பதே ஒர் கவிதைதான்;
கவிதையில் அவனொரு அழகிய உருவகம்;
அவனது படைப்பால் ஆன இவ்வுலகும்
அழகிய அதிசய முடிவிலாக் கவிதை!
எங்கே கடவுள் என்றெனைக் கேட்டால்,
எங்கே கவிதை என்றெனைக் கேட்டால்,
இரு வினாக்களுக்கும் என்பதில் ஒன்றுதான்;
கடவுளும் அவனது கவிதையும்
எங்குதான் இல்லை ஒரிடம் காட்ட?


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 3 Empty Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு

Post by சண்முகம்.ப Mon Oct 17, 2022 4:30 pm

உலக ஓற்றுமை
**********************

நாம் யார்?



ஆப்பிரிக்கக் காடுகளில்

ஒரினமாய் வாழ்ந்து,

பூமியை நிரப்ப பிரிந்துபோய்

பல்வண்ணம் பெற்று,

பன்மொழிக் கூட்டமாய்ப் பிரிந்து,

ஒரிறைவனுக்கு பல்பெயர் சூட்டி,

பலவேடம் கற்பித்து,

பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு

இந்த மண்ணில் ஒன்று சேர்ந்து இருக்கிறோம்!



நவீனத் தொழில்நுட்பமும்

நவீனத் திறன்பேசியும்

உலகை ஒரு குடும்பமாக

உருமாற்றம் செய்திருக்கிறது!



இது சேரும் நேரம்,

பிரியும் நேரமன்று!

இது சமாதானத்தின் தருணம்,

சண்டையிடும் தருணமன்று!



நம் சண்டைகளை

எப்போது நிறுத்துவோமென

கடவுளின் ராஜ்யம் காத்திருக்கிறது!



ஆத்திகம் பேசும் அடியவர்களுக்கு

அவனே அன்பு!

நாத்திகம் பேசும் நல்லவர்களுக்கு

அன்பென்னும் குணமாக அவன்

அவதாரம் எடுக்கிறான்!

முன்பு பாடலில் சொன்னதைக்

கவிதையில் வழிமொழிகிறேன்…



ஒன்றாய் இருக்கும் தன்மையினால்தான்

மனிதன் மற்ற உயிர்களைவிட உயர்ந்து நிற்கிறான்.

பரிணாமத்தின் கடைசிப்படி உலக ஒற்றுமை.



பழமையைப் பிடித்து

எத்தனை காலம் நாம்

தொங்கிக் கொண்டிருப்பது?

மூடத்தனத்தில் எத்தனை காலம்

மதிமயங்கி இருப்பது?



‘கையளவு மனது’ என்றத்

தொலைக்காட்சித் தொடரை,

நம் பழைய இல்லங்களில்,

தொன்னூறுகளில்,

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்

பார்த்திருப்போம்…



வறுமையில் வாடும் இளம்விதவை

தன் குழந்தைகளை

வெவ்வேறு பெண்களுக்குத்

தத்துக் கொடுத்து விடுகிறாள்…

அக்குழந்தைகள் பலவிதமாய் வளர்ந்து

பெரியவர்களாகி,

ஒருவரை ஒருவர் அறிந்து ஒன்றாய்ச் சேர்ந்து,

தங்களது அன்னையைத் தேடும்

உணர்ச்சிக் காவியம் அது!



அந்தக் கதையில் வருவது போல,

நாமெல்லோரும் இந்த பூமித்தாயின் குழந்தைகள்!

வெவ்வேறு இடங்களில் குடிபெயர்ந்து வளர்ந்த

இறைவனின் குழந்தைகள் நாம்!



இப்போது ஒன்றாய்ச் சேர்ந்திருக்கும் நாம்

அன்பில் தேடுவோம் அவனை!

நமக்குள் தேடுவோம் அவனை!



அல்லாவும், கர்த்தரும், அரியும் சிவனும்

ஓர்பொருள் குறித்த பல பெயர்கள்…

இதைத்தான் ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னார்;

விவேகானந்தர் சொன்னார்;

ரமண மகரிஷி சொன்னார்;

குரு நானக் சொன்னார்;

பாடல்களில் பாரதியும் புகன்றார்;

காந்தியும் கலாமும் அதை ஏற்று நடந்ததால்தான்

வரலாறு அவர்களை உயர்த்திக் காட்டுகிறது.



இன்னும் எத்தனைபேர் வந்து இதையே சொல்ல வேண்டும்?

யார் வந்து சொன்னால் நமக்கெல்லாம் புரியும்?



பூமி ஒரு குடும்பம் என்கிறது மகா உபநிடதம்;

ஒவ்வொரு ஊரும் நம் ஊர், ஒவ்வொருவனும் நம் உறவினன் என்று பாடுகிறது புறநானூறு;

உண்மை ஒன்றே,

அதை ஞானிகள்

பலபெயர்களால் அழைப்பார்கள் என்று

உரக்கச் சொல்கிறது ரிக்வேதம்!



உற்று நோக்கினால் தெரியும்,

இஸ்லாமும் கிருத்தவமும் இதையே

வழிமொழிகின்றன என்று!



ஆக, இம்மண்ணின் தர்மம் சொல்வது ஒன்று;

அதன் பெயரால் நாம் செய்வது வேறொன்று!

உங்கள் இறைவன் சொல்வது ஒன்று;

அவன் பெயரால் நீங்கள் செய்வது வேறொன்று!



போதும்!

வேறுபாடுகள் தரும் போதையில் காட்டிய

வெறித்தனங்கள் போதும்!

எனது மதம், எனது சாதி,

எனது மொழி, எனது நாடு என்று

சுயவிளம்பரம் செய்து,

தற்பெருமை பேசி

ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு

காலம் கழித்தது போதும்!



நாய் சிறுநீர் கழித்துத் தன்

எல்லையைக் , குறித்துக் கொள்கிறது;

மனிதன் வேறுபாடுகள் கற்பித்துத் தன்

எல்லைகளைக் குறித்துக் கொள்கிறான்;

இரண்டுக்கும் என்ன பெரிய வேறுபாடு?



வாழ்க்கை என்பது குதிரைப் பந்தயம் அன்று;

மதங்களையும் இனங்களையும்

குதிரைகளாய் ஓடவிட்டு,

எது ஜெயிக்கும் என்று வேடிக்கைப் பார்க்க

இங்கு நாம் வரவில்லை!



இந்த பூமியும் ஒரு நாள் அழியும்;

அதன் ஆயுளை நீட்டிப்போம்!

இருக்கும் வரை நன்றாய், ஒன்றாய், அன்பாய்

வாழ்வோம்!


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 3 Empty Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு

Post by சண்முகம்.ப Mon Oct 17, 2022 4:30 pm

ஒற்றுமைக் கும்மிபாடல்
**************************************
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 3 E0ae95e0af81e0aeaee0af8de0aeaee0aebfe0aeafe0ae9fe0aebf-1

கும்மியடி இந்த பூமியில் எல்லோரும்
கூடிக் களித்திடக் கும்மியடி!
நம்மைப் பிரிக்கின்ற பேதங்களை எல்லாம்
நாசம் செய்வோமென்று கும்மியடி!

(கும்மியடி)

1) ஆயிரம் சாதி மதங்கள் இருப்பினும்
அன்பிற்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை;
கோயிலிலும் பள்ளி வாசலிலும் நாங்கள்
காட்டிடும் பக்தியில் பேதமில்லை!

(கும்மியடி)

2. அன்பே சிவமென்ற உண்மை உணர்ந்தபின்
அந்நியன் என்றிங்கு யாருமில்லை;
உன்னையும் என்னையும் ஒன்று சேர்க்கும் இந்த
உண்மையைப் பாடிநீ கும்மியடி!

(கும்மியடி)

3. யாதும் ஊரெ என்று நீ அறிவாய் இங்கு
யாவரும் கேளிரென்றெ உணர்வாய்!
போதும் யுத்தம் செய்து மாண்டதெல்லாம் மத
போதை தெளிந்திடக் கும்மியடி!

(கும்மியடி)

4. பூமி முழுவதும் ஓர்குடும்பம் என்ற
பொன்மொழியே என்றும் நம்மந்திரம்;
சாமி நமக்கெல்லாம் ஒன்று என்ற உண்மைச்
சொல்லிச் சொல்லி தினம் கும்மியடி!

(கும்மியடி)

5. வேற்றுமையில் காணும் ஒற்றுமைதான் நம்மை
வாழ வைக்கும் என்று கும்மியடி!
காற்றைப்போல் எங்கும் கலந்தவனை அன்பில்
கண்டறிவோம் என்று கும்மியடி!

(கும்மியடி)


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 3 Empty Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு

Post by சண்முகம்.ப Mon Oct 17, 2022 4:31 pm

காதலில் விழுந்தேன்
**********************************

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 3 Love-permission

ஏதோ

சதுரங்கக் காய்களை நகர்த்துவதுபோல்

சோற்றுப் பருக்கைகளுக்கு இடையே விரல் வைத்து

உணவருந்தத் தொடங்கினாள் அவள்.

நான் தூரத்தில் நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.



காற்றுவெளியில் கோடு கிழித்தபடிக்

கைத்துடுப்பு வீசிக் கால்களால் நீந்திச்

சாலையில் அவள் நடந்தாள்.

நான் தூரத்தில் இருந்தபடியே

பின் தொடர்ந்தேன்,



வார்த்தைகளை எண்ணி எண்ணி

என்னுடன் அவள் பேசும்பொழுதெல்லாம்

தூரத்தில் நின்றபடியே பதில்கொடுத்தேன்.

‘அருகில் வா’ என்று அழைத்தது அழகு;

நான் இன்னும் கொஞ்சம் விலகிச் சென்றேன்.



நான் அவளிடம் பேசும்

வார்த்தைகளுக்கு இடையே

காதல் சின்னஞ்சிறு தலைநீட்டி

எட்டிப்பார்த்தது;

கையை நீட்டி விளித்து

‘கவனி என்னை’ என்றது;

‘கரம், சிரம், புறம் நீட்டாதே’

என்று கடிந்து கொண்டேன் நான்.



கவிதை எழுதச் சொல்லிக்

காகிதங்கள் அழைத்தன;

நான் வேண்டுமென்றே என்

பேனாவைத் தொலைத்தேன்.



பூங்கா நாற்காலியில்

அவள் விட்டுச் சென்ற கைக்குட்டை

எதேச்சையாய்த் தென்பட்டபோது

‘வேண்டாம்’ என்றும், ‘எடுத்துக்கொள்’ எனவும்

இருவேறு குரல்கள் மனதிற்குள்.

ஆனால், ஏனோ தெரியவில்லை,

என்னுடைய கைக்குட்டையையும்

அதனருகே விட்டுச் சென்றேன்.



அன்று அவள்

கனவில் வந்துவிட்டாள்;

மறுநாள் நான் அச்சத்தில்

தூங்காமல் விழித்திருந்தேன்.



காதலிக்கலாமே என்று

கெஞ்சியது நெஞ்சம்;

வேண்டாம் என மறுத்துவிட

வாயெடுத்தேன்;

சற்றுப் பின்வாங்கிச் சரியென்று

சம்மதித்தேன்.


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 3 Empty Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு

Post by சண்முகம்.ப Mon Oct 17, 2022 4:31 pm

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 3 Adipatta-kadhal


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 3 Empty Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு

Post by சண்முகம்.ப Mon Oct 17, 2022 4:32 pm

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 3 1-e0aea4e0aea9e0af8de0aea9e0af88-e0ae89e0aea3e0aeb0e0af8de0aea8e0af8de0aea4e0aeb1e0aebfe0aea8e0af8de0aea4e0af81-e0aea8e0aebee0aea9


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 3 Empty Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு

Post by சண்முகம்.ப Mon Oct 17, 2022 4:32 pm

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 3 Poem2


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 3 Empty Re: கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு
» அப்பாவைப் புனிதப்படுத்துதல் – லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைத் தொகுப்பு.
» ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் - இரா.முருகனின் கவிதைத் தொகுப்பு
» தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி – சில்வியா பிளாத் கவிதைத் தொகுப்பு தமிழில் .
» தென்றலின் வேகம் மற்றும் கல்லறை நெருஞ்சிகள் - இரு கவிதைத் தொகுப்பு நூலினை தரவிறக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum