ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தவாரம் என்ன என்ன சினிமா திரையில் ஓடிடியில் பார்க்கலாம்…

Go down

இந்தவாரம் என்ன என்ன சினிமா திரையில் ஓடிடியில் பார்க்கலாம்… Empty இந்தவாரம் என்ன என்ன சினிமா திரையில் ஓடிடியில் பார்க்கலாம்…

Post by ayyasamy ram Mon Sep 26, 2022 7:16 am

இந்தவாரம் என்ன என்ன சினிமா திரையில் ஓடிடியில் பார்க்கலாம்… EaNJJMh
-
வரும் செப்டம்பர் 30இல் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், இதற்கு ஒருநாள் முன்னதாக தனுஷ் நடித்த நானே வருவேன் ஆகிய படங்கள் வெளியாகவிருப்பதால், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தாத சிறிய படங்களே வெளியாகியுள்ளன. ஆனால், ஓடிடிகளில் ஏகப்பட்ட படங்களும் தொடர்களும் வந்து குவிந்திருக்கின்றன. இந்த வார இறுதியில் ஓடிடிகளிலும் திரையரங்குகளிலும் என்ன படங்களைப் பார்க்கலாம்?

ட்ரிகர்: டார்லிங், 100, கூர்க்கா படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கியுள்ள படம் இது. அதர்வா, தன்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த், முனீஸ்காந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஆக்ஷன் – த்ரில்லர் திரைப்படம் இது.

பபூன்: வைபவ், அனகா, ஜோஜு ஜார்ஜ், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்திருக்கும் படம் இது. ஒரு நகைச்சுவைத் திரைப்படத்திற்கான தலைப்பு இருந்தாலும், ஒரு அரசியல் – த்ரில்லர் திரைப்படம் என்கிறார்கள். படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார்.

ரெண்டகம்: அரவிந்த் சாமி, குஞ்சக்கோ போபன் நடிப்பில் இயக்குநர் டி.பி. பெலினி இயக்கத்தில் மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற பெயரில் வெளியான திரைப்படம்தான் ‘ரெண்டகம்’. பழையதையெல்லாம் மறந்துவிட்ட அரவிந்த் சாமியிடம் குஞ்சக்கோ போபனை அனுப்பி, அந்த நினைவுகளை மீட்க முயல்கிறார்கள். கடந்த காலத்தில் அரவிந்த் சாமி என்னவாக இருந்தார், அவருக்கும் குஞ்சக்கோ போபனுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் கதை.

ஆதார்: கருணாஸ், ரித்விகா, இனியா ஆகியோர் நடித்திருக்கும் படம். கட்டடத் தொழிலாளியின் மனைவிக்கு குழந்தை பிறந்த பிறகு அவர் காணாமல் போகிறார். அவர் வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாக அவருடைய கணவரிடம் சொல்கிறது காவல்துறை. ஆனால், அதை நம்பாத கணவர், மனைவியைத் தேடுகிறார். உண்மையில் என்ன நடந்தது என்பதுதான் கதை. இந்தக் க்ரைம் – த்ரில்லரை ராம்நாத் பழனிக்குமார் இயக்கியிருக்கிறார்.

குழலி: காக்கா முட்டை படத்தில் நடித்த விக்னேஷ் இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். ஆரா நாயகியாக நடித்திருக்கிறார். காதலையும் ஜாதியையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தப் படம் கவனிக்கப்பட்டிருக்கிறது.


Last edited by ayyasamy ram on Mon Sep 26, 2022 7:19 am; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தவாரம் என்ன என்ன சினிமா திரையில் ஓடிடியில் பார்க்கலாம்… Empty Re: இந்தவாரம் என்ன என்ன சினிமா திரையில் ஓடிடியில் பார்க்கலாம்…

Post by ayyasamy ram Mon Sep 26, 2022 7:17 am

CHUP (Hindi): சினிமா விமர்சகர்கள் மிகக் கொடூரமான முறையில் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். மிகத் துல்லியமாக கொலைகள் நிறைவேற்றப்படுவதால் யார் அதைச் செய்தது என்பது தெரியவில்லை. க்ரைம் – த்ரில்லர் திரைப்படம். சன்னி தியோல், துல்கர் சல்மான், பூஜா பட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பால்கி இயக்கியிருக்கிறார்.

Drama: கிஷோர், சார்லி, ஜெய்பாலா, காவ்யா பெல்லு ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை அஜு கிழுமலா இயக்கியிருக்கிறார். ஓரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்கிறார்கள். காவல் நிலையத்தில் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் நடக்கும்போது, திடீரென மின்சாரம் போய்விட, அங்கிருக்கும் காவலர் ஒருவர் கொல்லப்படுகிறார். யார், எதற்காக கொன்றார்கள் என்பதுதான் கதை. மர்மம் – க்ரைம் – த்ரில்லர் திரைப்படம்.

Dhoka: Round D Corner (Hindi): மாதவன், அபர்சக்தி குரானா, தர்ஷன் குமார் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் கூக்கி குலாடி. தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்து தப்பிய பயங்கரவாதி, மனநலம் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர் ஒருவரை பிணைக் கைதியாக பிடிக்கிறான். அந்தப் பெண்ணின் கணவருக்கும் இந்த விவகாரத்திற்கும் என்ன தொடர்பு என்று நகர்கிறது இந்தப் படம்.

Jamtara: Subka Number Ayega (Season – 2): தொலைபேசிகளில் அழைத்து, கிரெடிட் கார்டு மோசடி செய்வதைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Jamtara தொடர் Netflixல் வெளியாகி ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாவது சீஸன் இப்போது வெளியாகிறது.

Babli Bouncer (Disney + Hotstar): பப்களில் பவுன்சர்களாக ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஒரு பெண் பவுன்சர் இருந்தால் எப்படியிருக்கும், என்ன பிரச்சனைகள் வரும் என்பதை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படம்தான் இந்த பப்ளி பவுன்சர். தமன்னா பவுன்சராக நடித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பது மதூர் பண்டார்கர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது.

Atithi Bhooto Bhava (Zee 5): கதாநாயகன் ஒரு நடுத்தர வயது பேயிடம் சிக்கிக் கொள்கிறான். முந்தைய பிறவியில், அவனுடைய பேரன்தான் நான் என்கிறது அந்தப் பேய். இப்போது, தன்னுடைய காதலியைக் கண்டுபிடிக்க உதவ வேண்டுமென்றும் கேட்கிறது. காமடி – பேய் படம். பிரதீக் காந்தியும் ஜாக்கி ஷெராஃபும் நடித்திருக்கிறார்கள்.

Hush Hush (Prime Video): பெரும் பணமும் செல்வாக்கும் கொண்ட நான்கு தோழிகள் ஒரு குற்றத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்களால் மீள முடிகிறதா என்பதுதான் ஏழு எபிசோட்களைக் கொண்ட இந்தத் தொடரின் கதை. ஜூஹி சாவ்லா, சோஹா அலி கான், க்ருத்திகா கம்ரா ஆகியோர் நடித்த இந்தத் தொடரை தனுஜா சந்திரா இயக்கியிருக்கிறார்.

இவை தவிர ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் லைகர் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியிலும் டைரி Aha ஓடிடியிலும் தெலுங்குப் படங்களான கலாபுரம் Zee5 ஓடிடியிலும் First Day first show திரைப்படம் Aha ஓடிடியிலும் வெளியாகின்றன.

இவை தவிர, கொரிய தொடரான
Sky Castle (Prime Video),
ஸ்வீடிஷ் தொடரான Snabba Cash – Season 2 (Netflix)
அமெரிக்கத் தொடரான Big Sky – Season 3 (Disney + Hotstar),
தாய்லாந்து குகையில் சிக்கியவர்களை மீட்பது குறித்த Thai Cave Rescue (Netflix),
ஜெர்மனிய திரைப்படமான The Perfumier ( Netflix),
The Bling Ring HollywoodHeist (Netflix),
அமெரிக்கத் தொடரான Andor Season 01 (Disney+ Hotstar),
நார்வேஜிய திரைப்படமான The North Sea (Pime video) ஆகியவையும்
இந்த வாரம் வெளியாகின்றன.
-
நன்றி: ‘தினசரி’
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 'சைரன்' முதல் 'சபா நாயகன்' வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
» (சினிமா) – என்ன செய்கிறார்கள் இவர்கள்
» தொடக்க இயக்கத்தின்போது ஒரு சிலபயன்பாடுகளை இயக்கமுடியவில்லை என்ற செய்தியை திரையில் காண்பித்தால் என்ன செய்வது
» இது என்ன நிறுவனம் கண்டு பிடிங்கள் பார்க்கலாம்..
» இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum