புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_m10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10 
336 Posts - 79%
heezulia
கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_m10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_m10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_m10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10 
8 Posts - 2%
prajai
கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_m10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_m10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_m10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_m10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_m10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_m10கம்பன் கவிதையைக் கற்போம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பன் கவிதையைக் கற்போம்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jan 23, 2010 2:53 pm

"வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்" என்று தன்னை இனம் காண்பிக்கப் புகுந்த மகாகவி பாரதியார் "விண்ணில் திரிகின்ற மீனெலாம் நான்; அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்; அவை பிழையாமே சுழற்றுவோன் நான்" என்று தன் அகண்ட தன்மையை விவரித்துச் சொல்லுகையில், "கம்பன் இசைத்த கவியெலாம் நான்" என்று கூறுகிறார். கம்பனின் கவிதையையும் அகண்டத்தன்மையில் சேர்த்துக் கொள்கிறார். (முழு கவிதைக்கு பாரதியாரின் நான் என்ற கவிதையைப் பார்க்கவும்)

கம்பனின் எல்லையற்ற தன்மையை இன்னும் விளக்கமாகக் கூற விரும்பிய மகாகவி பாரதியார் தமிழச்சாதி பாடலில், "எல்லையன்றின்மை" எனும் பொருள் அதனைக் 'கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும்' என்று குறிப்பிட்டுத் தன் எண்ணத்தை உறுதிப் படுத்துகிறார். தமிழ்ச் சாதி அமரத்தன்மை வாய்ந்தது என்ற தனது உறுதிக்குக் காரணமாக சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும், கம்பனின் ராம காதையையும் மகாகவி சுட்டிக் காட்டும்போது அவற்றின் பெருமை நமக்குப் புலப்படுகிறது.

கம்பனின் எல்லையற்ற தன்மை இன்னும் உலகளாவிய அளவில் ஆராயப்படவில்லை. உலகக் கவனத்தை ஈர்க்கும் வகையில் உலகின் முன் எடுத்துச் சொல்லப்படவில்லை. தமிழன் செய்ய வேண்டிய முக்கியமான கடமை இது.

கம்பனின் எல்லையற்ற தன்மையைக் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் உலகளாவிய அளவில் பரவுவதற்கு முன்னர் "நாமமது தமிழரெனக் கொண்டு வாழும்" நம்மவர் அந்த எல்லையற்ற தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கம்பனின் எல்லையற்ற உத்திகளில் ஒரே ஒரு உத்தியை மட்டும் இங்கு பார்ப்போம். தன் காவிய நாயகனின் சொந்த நாடான கோசலத்தை வர்ணிக்க வந்த மகாகவி கம்பன், பெரும் பீடிகையுடன் கோசல நாட்டை வியந்து, "வரம்பெலாம் முத்தம்" (கழனிகளின் வரம்புகளில் எல்லாம் முத்துக்கள்); "தத்து மடையெலாம் பணிலம்" (தாவிப் பாயும் தன்மையுள்ள மதகுகளில் எல்லாம் சங்குகள்); "மாநீர் குரம்பெலாம் செம்பொன்" (பெரிய நீர்ப்பெருக்கையுடைய வாய்க்கால்களின் செய்கரைகளில் எல்லாம் செவ்விய தங்கக் கட்டிகள்) என்று வர்ணிக்கத் தொடங்குகிறான். கவிதைச் சுவையில் ஆழ்ந்து அவனைத் தொடர்ந்து கோசல நாட்டைச் சுற்றத் தொடங்க நாம் எண்ணும்போது நம்மிடம் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போடுகிறான்! கோசல நாட்டில் தானம் செய்வோர் யாருமே இல்லையாம்! வண்மை இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்கிறான். மனத்தில் ஈரம் இல்லா நாட்டவர் வாழும் நாடும் ஒரு நாடா? ராமனின் கோசலமா இப்படி? மனம் குடைகிறது. அடுத்து கம்பன் சொல்வது இன்னும் நம்மைத் திடுக்கிடச் செய்கிறது. அந்த நாட்டவருக்குத் திண்மையும் இல்லையாம். அதாவது பராக்கிரமும் இல்லையாம். அங்கு உண்மையும் இல்லையாம், ஒண்மை அதாவது அறிவுடைமையும் இல்லையாம்.

கம்பனின் இந்தக் கோசல நாட்டின் வர்ணனையைக் கேட்டு நாம் திகைக்கும் போது, அவனே அதற்கான காரணத்தையும் தருகிறான். வண்மை ஏன் இல்லை தெரியுமா? யாராவது எனக்குக் கொடு என்று கேட்டால்தானே கொடுக்க முடியும்? அங்கே இரப்பவர் யாருமே இல்லை! திண்மை இல்லை, யாராவது அந்த நாட்டின் மீது போர் தொடுத்தால்தானே பராக்கிரமத்தைக் காண்பிக்க முடியும்! உண்மை இல்லை, ஏனெனின் பொய் என்று சில பேர் சொன்னால்தானே உண்மை என்ற ஒன்றைப்பற்றி உரைக்க வேண்டிவரும். யாருமே பொய் பேசுவதில்லை என்னும் போது உண்மை என்ற சொல்லே அங்கே இல்லாது இருப்பது இயல்பு தானே! எல்லோரும் கல்வி அறிவும், கேள்வி அறிவும் மிக்கவராய் இருக்கும்போது ஒண்மை எனும் அறிவுடைமை அங்கு சிறந்து தோன்றவில்லையாம்! கம்பனின் பாடலை முழுவதுமாகப் பார்ப்போம்:

"வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை ஓர் பொய் உரை இலாமையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்"

கம்பனின் புதிய உத்தி இது. நம்மைத் திடுக்கிட வைத்து அந்தத் திகைப்பைப் போக்க அவன் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகும் போது பிரமிப்பின் உச்சத்திற்கே சென்று விடுகிறோம். இன்னொரு பாடலைப் பார்க்கலாம். ராவணனின் மைந்தன் அட்சகுமாரன் பெரும் படையுடன் அனுமனுடன் மோதக் கிளம்புகிறான். மூன்று கோடி தெருக்களை உடைய இலங்கையில், தங்கமாய் மின்னும் இலங்கையில், வைரமும் முத்தும் சிதறிக் கிடக்கும் இலங்கையில் சூரியனும் நுழையப் பயப்படுகிறான். அதிகமாக வெயில் அடித்து அது ராவணனுக்குப் பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்பது சூரியனின் கவலை. அப்படிப்பட்ட இலங்கையில் அட்சகுமாரனின் படையை யாராவது விளக்க முடியுமா?

விளக்க முடியும் என்கிறான் கம்பன். யாரால்தான் விளக்க முடியும் என்று நமக்கே சந்தேகம் வருகிறது. அட்சகுமாரனின் யானைகளின் எண்ணிக்கையைச் சுலபமாகச் சொல்லி விடலாம். பெரிய கடலில் உள்ள சுறாமீன்களை எண்ண முடியுமானால்! அட்சகுமாரனின் தேர்களின் எண்ணிக்கையைச் சுலபமாகச் சொல்லி விடலாம். பெரிய கடலில் உள்ள மீன்களை மட்டும் சரியாக எண்ண முடியுமானால்! அட்சகுமாரனின் காலாட் சேனையில் உள்ள வீரரின் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்லி விடலாம். கடலில் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்து உள்ள மணலின் எண்ணிக்கையை மட்டும் எண்ணிச் சரியாகச் சொல்லிவிட முடியும் என்றால்!
அட்சகுமாரனின் தாவிச் செல்லும் குதிரைகளின் எண்ணிக்கையைச் சுலபமாகச் சொல்லி விடலாம். கடலில் எழுந்து வந்து கொண்டே இருக்கும் அலைகளின் எண்ணிக்கையை மட்டும் எண்ணிச் சொல்லி விட முடியுமானால்!

பாடலைக் கம்பன் வாயிலாகக் கேட்போமா?

"பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை, பொங்கி
திரிவன மீன்கள் எண்ணில் எண்ணலாம் செம்பொன் திண் தேர்
உருவுறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவுத் தானை
வருதிரை மரபின் எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி"
(பூட்கை-யானை, உரவுத் தானை - வலிமை பொருந்திய காலாட் சேனை, வாவும் வாசி-தாவிச் செல்லும் குதிரைகள்)

"எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர் பிறவி அவதாரம்" என்று பிறவிகளின் எண்ணிக்கையைப் பின்னால் வந்த அருணகிரிநாதர் கடல் மணலின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார். கம்பனோ காலாட்படை வீரரின் எண்ணிக்கைக்கு அதை முன்னமேயே பயன்படுத்தி விட்டான். தாவி வரும் குதிரைளுக்குத் தாவி வரும் அலைகளை உவமையாக அவன் கூறுவது சிந்திக்கச் சிந்திக்க களிப்பைத் தரும் ஒன்றாகும்.

நம்மைத் திகைக்க வைத்து, காரணங்களைச் சொன்ன பின்னர் வியக்க வைக்கும் கம்பனின் உத்தி இலக்கிய உலகிற்குப் புதிது.

வடமொழியில் ஸம்பாவநாலங்காரம் என்று வழங்கப்படும் இந்த உத்தி வேறொரு பொருள் சித்திப்பதற்காக 'இப்படி இருந்தால் இன்னது ஆகும்' என்று வாய்பாடு படக் கூறுவது ஆகும். உலகின் இலக்கியங்கள் அனைத்தையும் எடுத்துப் பார்த்தால் இப்படிப்பட்ட 'திகைக்க வைத்து வியக்க வைக்கும்' உத்தியைத் திறம்படக் கையாண்ட மகாகவிஞன் கம்பன் ஒருவனே என்பது தெரிய வரும்.

கம்பன் கவிதையைக் கற்போம்! இதயம் களிப்போம்! உலகிற்கு அதைப் பரப்புவோம்!

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 23, 2010 2:58 pm

அஜித் சூப்பர் கம்பன் கவிதையைக் கற்போம் 677196 கம்பன் கவிதையைக் கற்போம் 677196

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jan 23, 2010 3:03 pm

thank you

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Jan 23, 2010 3:55 pm

வணக்கம்
ஒரு நல்ல பதிவு. திருக்குற்றாலம் டி கே சி அவர்கள் அடிக்கடி கூறும் வாசகம் தமிழுக்குக் கதி க் தி தான் என்று.
க - கம்பன்
தி - திருவள்ளுவர்
அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 23, 2010 4:01 pm

கம்பன் கவிதையைக் கற்போம்! இதயம் களிப்போம்! உலகிற்கு அதைப் பரப்புவோம்!

நிச்சயம் உலகம் அறியச் செய்வோம்!!! கம்பன் கவிதையைக் கற்போம் 677196



கம்பன் கவிதையைக் கற்போம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக