புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_m10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen
இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_m10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10 
1 Post - 7%
Barushree
இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_m10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10 
1 Post - 7%
kavithasankar
இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_m10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_m10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10 
65 Posts - 83%
mohamed nizamudeen
இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_m10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_m10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_m10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10 
2 Posts - 3%
prajai
இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_m10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_m10இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84580
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 21, 2022 5:31 pm

இந்தியாவின், 14வது ஜனாதிபதியான, ராம்நாத் கோவிந்த் ஓய்வு
பெற போகிறார். சுப்ரீம் கோர்ட்டில், வக்கீலாக பணிபுரிந்தவர்;
பீகார் கவர்னராகவும் இருந்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி யார் என்பதற்கான தேர்தல் நாளை நடைபெற
இருக்கிறது.

இந்தியாவின் முந்தைய ஜனாதிபதிகளைப் பற்றி பார்ப்போம்...

* டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1950 - 1962:
இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த பெருமை இவருக்கு உண்டு.
வெள்ளையனே வெளியேறு - 1942; உப்பு சத்தியாகிரகம் - 1930 உட்பட,
பல போராட்டங்களில் முக்கிய பங்கேற்று, சிறை சென்றவர்.
பாரத ரத்னா விருதை பெற்றவர்களில், ராஜேந்திர பிரசாத்தும் ஒருவர்.

* டாக்டர் ராதாகிருஷ்ணன் 1962 - 1967:
இரண்டு முறை துணை ஜனாதிபதியாக இருந்து, பிறகு ஜனாதிபதியாக உயர்ந்தவர்,
டாக்டர் ராதாகிருஷ்ணன். ஆசிரியர் மற்றும் தத்துவ ஞானி. 'தத்துவ ஞானிகளுக்கு
கிடைத்த கவுரவம், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி பதவியை பெற்றது...'
என, பிரபல தத்துவ ஞானி, பெர்டிராண்ட் ரஸ்ஸல் பாராட்டியுள்ளார்.

* டாக்டர் ஜாகிர் ஹுசைன்:
பதவியில் இருக்கும்போதே இறந்த ஜனாதிபதி, இவர். மிக குறுகிய காலமான,
மே 13, 1967 - மே 3, 1969 வரை ஜனாதிபதியாக இருந்தவரும், இவர் தான்!

* வி.வி.கிரி 1969 - 1974:
ஜனாதிபதி ஜாகிர் ஹுசைன் இறந்தபோது, மே 3ம் தேதி, ஆக்டிங் ஜனாதிபதியாக
பதவியேற்றார், வி.வி.கிரி. ஜூலை 20, 1969ல், ஆக்டிங் ஜனாதிபதி பதவியை
ராஜினாமா செய்து, சுயேச்சையாக ஜனாதிபதி தேர்தலில் நின்றார்.
அதுமட்டுமல்ல, சுயேச்சையாக ஜெயித்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையும்
பெற்றார். இவர் எழுதிய, 'மை லைப் அண்ட் டைம்ஸ்' என்ற சுயசரிதை நுால்,
மிக பரபரப்பாக பேசப்பட்டது.

* பக்ருதீன் அலி அகமத் 1974 - 1977:
இந்தியாவில், இந்திரா அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டபோது,
பதவி வகித்தவர், பக்ருதீன் அலி அகமது. அரசியல் தவிர, சங்கீதம்,
நுண் கலைகள், கவிதை மற்றும் விளையாட்டுகளிலும் மிகுந்த ஈடுபாடு
கொண்டிருந்தார்.

* நீலம் சஞ்சீவ ரெட்டி 1977 - 1982:
எதிர்ப்பு இல்லாமல் தேர்வு பெற்ற முதல் ஜனாதிபதி. 64 வயதில் தேர்வு பெற்றதன்
மூலம், மிக இள வயது ஜனாதிபதி என்ற பெருமையும் பெற்றார். தன் சம்பளத்தில்,
70 சதவீதம் வேண்டாம் என, மறுத்து விட்டவர்; ராஷ்டிரபதி பவனில் தங்காதவர்.

* கியானி ஜெயில்சிங் 1982 - 1987:
முதலில் பஞ்சாப் முதல்வராக இருந்தவர். 'கியானி' என்றால் நன்கு கற்றவர்
என்று பொருள். சீக்கிய கொள்கைகள், தத்துவங்களை கரைத்து குடித்தவர்.
சீக்கியர்களின் புத்தகமான, 'குரு க்ராந்த் சாகிப்'பை முழுவதுமாக விளக்கும்
திறன் பெற்றவராக திகழ்ந்தார்.

* ஆர்.வெங்கட்ராமன் 1987 - 1992:
முதலில் துணை ஜனாதிபதியாக இருந்து, பிறகு ஜனாதிபதி ஆனவர்.
இவருடைய பதவி காலத்தில், நான்கு பிரதமர்களை கண்டவர்.
நரசிம்மராவ், சந்திரசேகர், ராஜிவ் மற்றும் வி.பி.சிங்.

* டாக்டர் சங்கர் தயாள் சர்மா 1992 - 1997:
இந்திய பல்கலை கழகங்களில் இவர் பெயரில் தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.
சிறந்த கல்வியாளர்.

* கே.ஆர்.நாராயணன் 1997 - 2002:
கேரளாவிலிருந்து ஜனாதிபதி பதவி பெற்ற முதல் பிரபலம். ஏராளமான
புத்தகங்களை எழுதியுள்ளார். துணை ஜனாதிபதி பதவியிலிருந்து உயர்ந்தவர்.

* டாக்டர் அப்துல் கலாம் 2002 - 2007:
விஞ்ஞானியாக இருந்து, ஜனாதிபதி ஆனவர். பத்ம பூஷண், பத்ம விபூஷண்
மற்றும் பாரத ரத்னா விருதுகளை பெற்றவர். பொதுமக்களிடம், தன்னுடைய
எளிமையால் மிகவும் பிரபலமானவர்.

* பிரதிபா பாட்டீல் 2007 - 2012:
வக்கீல் மற்றும் ராஜஸ்தானின் கவர்னராக இருந்தவர். இந்தியாவின் முதல்
பெண் ஜனாதிபதி.

* பிரணாப் முகர்ஜி 2012 - 2017:
வேலையில் மிகுந்த அக்கறை கொண்டவர். தினமும், 18 மணி நேரம் உழைப்பவர்.
பத்திரிகையில் பணிபுரிந்த அனுபவம் உண்டு; புத்தகங்களும் எழுதியுள்ளார்.

* ஐந்து ஏக்கரில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவன், உலகிலுள்ள மிகப்பெரிய
ஜனாதிபதி மாளிகைகளுள் இதுவும் ஒன்று. இதில் மொத்தம், 340 அறைகள்
உள்ளன.

* ராஷ்டிரபதி பவனில் நுழையும் கேட்டின் எண்: 35.
முதலில் ராஷ்டிரபதி பவனின் பெயர், 'வைஸ்ராய் ஹவுஸ்' என்றிருந்தது.
இந்திய முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவி ஏற்றது முதல்,
ராஷ்டிரபதி பவன் என அழைக்கப்படுகிறது.

* இதுவரை பதவியேற்றுள்ள, 14 ஜனாதிபதிகளில், 6 பேர் காங்கிரஸ் கட்சியை
சேர்ந்தவர்கள், ஒருவர் - ஜனதா கட்சி, மற்றொருவர் - பா.ஜ., மற்றவர்கள்
பொது வாழ்விலிருந்து வந்தவர்கள்.

* கடந்த, 1977ம் ஆண்டு வரை, ஜனாதிபதி தேர்தல், மே மாதத்தில் நடந்தது.
அதன்பின், ஜூலை மாதத்துக்கு மாற்றப்பட்டது.

நடுத்தெரு நாராயணன்
நன்றி: வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக