புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_m10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_m10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_m10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10 
181 Posts - 77%
heezulia
தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_m10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_m10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10 
10 Posts - 4%
prajai
தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_m10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_m10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_m10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_m10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_m10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10 
2 Posts - 1%
sram_1977
தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_m10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10 
1 Post - 0%
Shivanya
தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_m10தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் உயருது மின்கட்டணம்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 18, 2022 8:19 pm


தமிழகத்தில் மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட உள்ளது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஜூலை 18) தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தவும் மாற்றி அமைக்கவும் 28 முறை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
*100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் மாற்றம் இல்லை.
*601-700 யூனிட்டிற்கு ரூ.275 (இரு மாதத்திற்கு)
*501-600 யூனிட்டிற்கு ரூ.155 (இரு மாததிற்கு)
*500 யூனிட்டிற்கு மேல்- ரூ.298.50, (மாதத்திற்கு)
*301-400 யூனிட்டிற்கு ரூ.147.50(மாதத்திற்கு)
200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50(மாதத்திற்கு) உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே மற்றும் கல்விநிறுவனங்களுக்கு யூனிட்டிற்கு 65 காசுகள் உயரும்.

விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

நன்றி தினமலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 18, 2022 8:28 pm

சரி அய்யா ,28 முறை மத்திய அரசு கூறிவிட்டது. அதுதான் சாக்கு போக்கு.
அது எப்படி சொல்லும் ? நீ 100 ரூபாய்க்கு வாங்கவேண்டிய நிலக்கரியை
500 ரூபாய் வாங்கும் போது அதை சரிக்கட்ட இப்பிடி உயர்த்து /அப்பிடி உயர்த்து என்று அறிவுரை வழங்கும். நீயே 500 கு பதிலாக 300 வாங்கினால் ,ஏன் ஏற்ற சொல்லப்போகிறது மத்திய அரசு. பஞ்சாபில் எல்லோருக்கும் இலவச மின்சாரம்.
இங்கே இந்த 12 -15 மாதமாக சொத்து வரி /குடிநீர் /மின்கட்டணம் என்று எல்லாமே உயருகிறது.
சமாளிக்க முடியவில்லை போலிருக்கிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 18, 2022 9:58 pm

" நீ 100 ரூபாய்க்கு வாங்கவேண்டிய நிலக்கரியை
500 ரூபாய் வாங்கும் போது அதை சரிக்கட்ட "......
100 ரூபாய்க்கு வாங்கவேண்டியதை 500 ரூக்கு வாங்கினால், அது தவறில்லையா?
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 19, 2022 7:23 am

சென்னை,
தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது வீட்டு பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 85 பைசா வரையிலும், வணிக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.72 வரையிலும் அதிகரித்தது. மீண்டும் உயருகிறது

அதன்பின்னர் 8 ஆண்டுகளாக மின்சார கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது மின்சார வாரியத்தின் நிதி நிலைமையை காரணம் காட்டி மின்சார கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட இருக்கிறது. இதுதொடர்பாக சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

100 யூனிட் வரை இலவச மின்சாரம் தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில் ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை. அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.

வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதியின் படி நிலை கட்டணம் 2 மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவார்கள், தற்போது குடிசை விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டு தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

எவ்வளவு உயர்த்தப்படும்?

2 மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.27.50-ம், 300 யூனிட்டுகள் வரை மின்நுகர்வு செய்யும் 36.25 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.72.50-ம், 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.147.50-ம், 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.297.50-ம், 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) ரூ.155-ம் மட்டுமே கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

2 மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.275-ம், மொத்தம் 800 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.395-ம், 900 யூனிட்டுகள் வரை நுகர்வு செய்யும் 84 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதத்துக்கு ரூ.565-ம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஒரே மின் கட்டணம் தற்போது வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணமாக மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மின் நுகர்வு 500 யூனிட்டில் இருந்து 501 ஆக அதிகரிக்கும்போது அதற்கான மின் கட்டண தொகையானது 58.10 சதவீதம் அதிகரித்து மொத்தம் ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது.

500 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட் கூடுதலாக பயன்படுத்தினாலும் மின் நுகர்வோர் கூடுதலாக ரூ.656.60 செலுத்தி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றி அமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஊரகம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இயங்கி வரும் நூலகங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.5.75 ஆகவும், நிலை கட்டணமாக மாதத்துக்கு ரூ.60 ஆகவும் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் படிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வணிக ரீதியில் இயங்காத நூலகங்களுக்கான மின் கட்டணத்தை மானியம் இல்லா வீட்டு விகிதப்பட்டியலில் கணக்கீடு அதாவது 30 சதவீதம் குறைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

93 சதவீதம் (2.26 லட்சம்) சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு, குறைந்த அளவாக யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 53 சதவீதம் (19.28 லட்சம்) வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு... தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு சிறிய தொகையாக ரூ.1 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதற்கு மேல், யூனிட் ஒன்றுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு, தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு குறைந்த அளவில், யூனிட் ஒன்றுக்கு ரூ.1.15 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில், யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 65 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

உயரழுத்த வணிகப் பிரிவு நுகர்வோர்களுக்கான, மின் கட்டணமானது யூனிட் ஒன்றுக்கு குறைந்த அளவாக 50 காசுகள் மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தாமாக விட்டுக்கொடுக்கும் திட்டம் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குறைக்கப்பட்ட மின்சாரத்துக்குரிய மின் மானியத்தை நுகர்வோர் விரும்பும் பட்சத்தில் ''மின் மானியத்தை தாமாக விட்டுக்கொடுக்கும்'' திட்டம் மூலம் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வீட்டு நுகர்வோர்கள் தங்கள் மின் வாகனத்தை தங்கள் வீட்டிலேயே அதே விகித பட்டியலில் மின்னேற்றம் செய்து கொள்வதற்கும், அதேபோல், வணிக நுகர்வோர்கள் அதே விகித பட்டியலில் பொது மின்னேற்றம் செய்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, இயக்குனர் (நிதி) சுந்தரவதனம் ஆகியோர் உடனிருந்தனர்.
-
தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 19, 2022 9:35 am

எந்தன் நேற்றைய பதிவுடன் உங்கள் இன்றைய பதிவு இணைக்கப்படுகிறது,ராம், பார்வையாளர்கள் ஒரு சேர படிக்கமுடியும்.

@ayyasamy ram



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 19, 2022 9:42 am

Dr.S.Soundarapandian wrote: " நீ 100 ரூபாய்க்கு வாங்கவேண்டிய நிலக்கரியை
500 ரூபாய் வாங்கும் போது அதை சரிக்கட்ட "......
100 ரூபாய்க்கு வாங்கவேண்டியதை 500 ரூக்கு வாங்கினால், அது தவறில்லையா?
மேற்கோள் செய்த பதிவு: 1365206

அரசியலில் நேற்றைய தவறு இன்று சரியாவதும்
இன்று, சரியானது என்ற நம்பப்படுவது, நாளை தவறு என்று
நிரூபணம் ஆவதும் ,.................

தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Comedy-legend-goundamani-memes-photos_1653461086130

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 19, 2022 12:19 pm

தமிழகத்தில் உயருது மின்கட்டணம். Main-qimg-87fd35d924b319396ec3d0482c28eca4

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 20, 2022 8:24 pm

தமிழகத்தில் உயருது மின்கட்டணம். 1651293054-1211

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் அழுத்தம் காரணமாகத் தான் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்த வில்லை என்றும் மத்திய அரசிடம் பணம் வாங்க வேண்டுமென்றால் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதாக மட்டுமே செய்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் மின்சார வாரியத்தில் ஏற்படும் நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவது சரியா என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நன்றி வெப்துனியா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 20, 2022 8:57 pm

" மத்திய அரசிடம் பணம் வாங்க வேண்டுமென்றால் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதாக மட்டுமே செய்தது "-

பெரியோரால் நடத்தப்படும் நல்ல ...... இது! - என்ற திருவிளையாடல் வசனம் .....!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக