ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருங்கும் வரித்தாக்கல் தேதி... கடைசி நேரக் கேள்விகளும், அதற்கான விளக்கங்களும்!

Go down

நெருங்கும் வரித்தாக்கல் தேதி... கடைசி நேரக் கேள்விகளும், அதற்கான விளக்கங்களும்! Empty நெருங்கும் வரித்தாக்கல் தேதி... கடைசி நேரக் கேள்விகளும், அதற்கான விளக்கங்களும்!

Post by ayyasamy ram Sun Jul 17, 2022 8:44 pm


-முகைதீன் சேக் தாவூது . ப
நன்றி-விகடன்
-----------------------
வரித்தாக்கல் செய்யாமல் இருப்பவர்களுக்கு புதிய வழிமுறை
ஒன்றை அமலாக்கம் செய்துள்ளது வருமான வரித்துறை.
இதற்குப் பிறகும், வரித்தாக்கல் செய்யத் தவறினால் அபராதம்,
கட்டணம், வட்டி, கூடுதல் வரியுடன் வருமான வரித்துறையின்
நடவடிக்கையும் தொடரக்கூடும்.
-
சம்பளதாரர்கள், பென்ஷன்தாரர்கள், சம்பளதாரராக இருந்து பென்ஷன்தாரர் ஆகிவிட்டவர்கள், கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு இன்னமும் வரித்தாக்கல் செய்யாமலே இருப்பவர்கள் என பலவகை வரிதாரர்கள் தனது கேள்விக்கான விடை தெரியாமலே, கடைசி தேதி வரை வரித்தாக்கல் செய்வதை தாமதிக்கக்கூடும் அல்லது கடைசி தேதிக்குப் பிறகு அபராதத்துடன் வரித்தாக்கல் செய்யக்கூடும். இன்னும் ஒரு பிரிவினர் பல்வேறு காரணங்களால் வரித்தாக்கல் செய்யாமலே இருந்துவிடவும் கூடும்.
-
இவ்வாறு வரித்தாக்கல் செய்யாமல் இருப்பவர்களுக்கு புதிய வழிமுறை ஒன்றை அமலாக்கம் செய்துள்ளது வருமான வரித்துறை. இதற்குப் பிறகும், வரித்தாக்கல் செய்யத் தவறினால் அபராதம், கட்டணம், வட்டி, கூடுதல் வரியுடன் வருமான வரித்துறையின் நடவடிக்கையும் தொடரக்கூடும். எனவே, தாமதம் தவிர்க்கவல்ல சில கேள்விகளுக்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நெருங்கும் வரித்தாக்கல் தேதி... கடைசி நேரக் கேள்விகளும், அதற்கான விளக்கங்களும்! Empty Re: நெருங்கும் வரித்தாக்கல் தேதி... கடைசி நேரக் கேள்விகளும், அதற்கான விளக்கங்களும்!

Post by ayyasamy ram Sun Jul 17, 2022 8:45 pm

கேள்வி 1: அக்டோபர் 2021-க்கான விடுப்பு சம்பளம் ஏப்ரல் 2022-ல் தான் தரப்பட்டது. அதற்கான வரியும் சம்பளப்பட்டியலிலேயே பிடித்தமும் செய்யப்பட்டது. ஆனால், படிவம் 26-As-ல் எனது விடுப்பு சம்பளத்துக்குப் பிடித்தம் செய்யப்பட்ட வரி இடம் பெறவில்லை. அக்டோபர் 2021 சம்பளத்தையும் சேர்த்து 2021-22க்கு வரித்தாக்கல் செய்யலாமா, பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி 2021-22 கணக்கில் சேர்ந்துவிடுமா?

பதில்: (அ) அரசுக் கருவூலம் மூலம் சம்பளம் பெறுபவர்களிடம் இருந்து 01.04.2021 முதல் 31.03.2022 வரை பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி மட்டுமே தற்போதைய படிவம் 26AS-ல் இடம்பெற்றிருக்கும். 01.04.2022-க்குப்பிறகு பிடித்தம் செய்யப்படும் வருமான வரி அடுத்த நிதியாண்டுக்கான படிவம் 26AS-ல்தான் இடம்பெறும்.
-
ஆ) ஒரு நிதியாண்டில் பெற்றுக் கொண்ட சம்பளத்துடன் பெறவேண்டிய சம்பளத்தையும் கணக்கிட்டுத்தான் வருமான வரிப்பிடித்தம் செய்திருக்க வேண்டும். இந்த விதியின்படி, 2021-22 நிதியாண்டுக்கான கடைசி மாத சம்பளத்திலேயே (விடுபட்ட) அக்டோபர் 2021-க்கான வருமான வரியை பிடித்தம் செய்யும்படி, அலுவலக சம்பளப்பிரிவில் விண்ணப்பித்திருக்க வேண்டும். இப்போது என்ன செய்யலாம் என்றால், அக்டோபர் 2021-க்கான சம்பளத்துக்கு உரிய வரியை வருமான வரி செல்லான் மூலம் செலுத்திவிட்டு 2021-22 நிதியாண்டுக்கு வரித்தாக்கல் செய்யலாம். தற்போது பிடித்தம் செய்யப்பட்டுள்ள வருமான வரியை 2022-23 நிதியாண்டுக் கணக்கில் சரிக்கட்டிக் கொள்ளலாம்.

இ) வருமானத்துக்கான வரியை அது பெறவேண்டிய (Due Basis) அடிப்படை அல்லது வருமானம் பெற்ற (Drawn Basis) அடிப்படை ஆகிய இரு முறையில் கணக்கிட்டு செலுத்தலாம். அந்த வகையில் அக்டோபர் 21க்கான நிலுவை சம்பளத்தை, அந்த வருமானம் கைக்கு கிடைத்த 2022-23 நிதியாண்டு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நெருங்கும் வரித்தாக்கல் தேதி... கடைசி நேரக் கேள்விகளும், அதற்கான விளக்கங்களும்! Empty Re: நெருங்கும் வரித்தாக்கல் தேதி... கடைசி நேரக் கேள்விகளும், அதற்கான விளக்கங்களும்!

Post by ayyasamy ram Sun Jul 17, 2022 8:46 pm

கேள்வி 2: கடந்த நிதியாண்டுக்கு தற்போது செலான் மூலம் வரி செலுத்தினால் 2021-22 நிதியாண்டு கணக்கில் சேர்ந்துவிடும் என்கிறபோது 2021-22ல் விடுப்பட்ட இன்ஷுரன்ஸ் பிரிமியத்தை தற்போது கருவூல செலான் மூலம் செலுத்தி 2021-22 நிதியாண்டு கணக்கில் சேர்க்க முடியுமா?

பதில்: முடியாது. வருமான வரி செலான் மூலம் செலுத்தப்படும் வரித் தொகை மட்டுமே, கடந்த மதிப்பீட்டு ஆண்டு கணக்கில் சேரும். 01.04.2022க்குப் பிறகு செலான் மூலம் செலுத்தப்படும் பிற இனங்கள் 2022-23 நிதியாண்டு கணக்கில்தான் சேரும்.
-
கேள்வி 3: நான் கடந்த இரண்டு வருடங்களாக வரித்தாக்கல் செய்யவில்லை. இப்போது வரித்தாக்கல் செய்தால் பிரச்னை வருமா?

பதில்: ஒரு பிரச்னையும் வராது. உங்களைப் போல் வரித்தாக்கல் செய்ய விடுபட்டவர்களுக்காக ‘அப்டேட்டெட் ரிடர்ன்’ என்ற வரித்தாக்கல் முறை தற்போது அமலாக்கம் பெற்றுள்ளது. இதற்காக தனிப் படிவம் ‘U’ வெளியிடப்பட்டு விட்டது. 2019-2020 நிதியாண்டு (மதிப்பீட்டு ஆண்டு 2020-21) மற்றும் 2020-21 நிதியாண்டு (மதிப்பீட்டு ஆண்டு 2021-22)க்கு 31.03.2023 வரை அப்டேட்டட் (Updated) ரிடர்ன் தாக்கல் செய்யலாம். 2019-20 நிதியாண்டுக்கு 50% உபரி வரியும், 2020-21-க்கு 25% உபரி வரியும் செலுத்தவேண்டி இருக்கும்.

கடைசித் தேதியை தவற விட்டுவிடாமல் 2021-22 நிதியாண்டுக்கு உடனடியாக வரித்தாக்கல் செய்யுங்கள், தவற விட்ட வரித்தாக்கல் இரண்டையும் 31.03.2023-க்குள் செய்துவிடலாம்.

கேள்வி 4: மைனர் பிள்ளைகள் மூலம் வரப்பெற்ற வருமானத்தையும் சேர்த்துத்தான் வரி வரம்பு கணக்கிட வேண்டுமா?

பதில்: ஆம். உங்களுடைய வருமானம் ரூ.2.48 லட்சமாக இருந்து மைனர் குழந்தை மூலமான வருமானம் ரூ.3,000 எனில் உங்களது வருமானம் ரூ.2.51 லட்சம் என்றாகும். எனவே, வரித்தாக்கல் செய்ய வேண்டும்.

கேள்வி 5: சம்பளதாரரான என் வயது 59. 2021-22க்கான சம்பள வருமானம் ரூ.4 லட்சம் ஸ்டாண்டர்ட் டிடக்சன், வீட்டுக் கடன் வட்டி, வீட்டு வாடகைக்கான சம்பளக் கழிவு மற்றும் தொழில் வரி ஆகியவற்றின் கூட்டுத் தொகை ரூ.1.55 லட்சம். நான் வரித்தாக்கல் செய்வது அவசியமா?

பதில்: அவசியமல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ள வீட்டு வாடகைக்கான சம்பளக் கழிவு (பிரிவு 10(13A)), ஸ்டாண்டர்டு டிடெக்சன், தொழில்வரி (வருமான வரிப்பிரிவு 16) வீட்டுக்கடன் வட்டி (பிரிவு 24b) ஆகிய அனைத்தும் வருமானக் கழிவு. மொத்த சம்பள வருமானத்தில் வருமானக் கழிவு போக நிகரத் தொகைதான் ஒட்டு மொத்த வருமானம் 60 வயதுக்கு உட்பட்ட ஒரு சம்பளதாரரின் ஒட்டு மொத்த வருமானம் வரி வரம்பு தொகையான 2.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் வரித்தாக்கல் அவசியமல்ல. உங்களது ஒட்டுமொத்த வருமானம் (4.0 (-) 1.55 = ) 2.45 லட்சம் என்பதால் வரித்தாக்கல் கட்டாயமல்ல.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நெருங்கும் வரித்தாக்கல் தேதி... கடைசி நேரக் கேள்விகளும், அதற்கான விளக்கங்களும்! Empty Re: நெருங்கும் வரித்தாக்கல் தேதி... கடைசி நேரக் கேள்விகளும், அதற்கான விளக்கங்களும்!

Post by ayyasamy ram Sun Jul 17, 2022 8:47 pm

கேள்வி 6: பென்ஷன்தாரரான என் வயது 68. பென்ஷன் வருமானம் 4.1 லட்சம் ஸ்டாண்டர்ட் டிடக்சன் 50,000. ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு அஞ்சலக 5 வருட டெபாசிட் ஆகியவற்றின் மொத்த தொகை ரூ.70,000. நிகர வருமானம் ரூ.2.9 லட்சம். நான்வரித்தாக்கல் செய்ய வேண்டுமா?

பதில்: மூத்த குடிமகனான உங்களுக்கான வரி வரம்பு ரூ.3 லட்சம். உங்களது பென்ஷன் வருமானத்தில் ஸ்டாண்டர்ட் டிடக்சனை கழித்தது போக ஒட்டுமொத்த வருமானம் (4.10 (-) 0.50 = 3.60 லட்சம். நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆயுள் காப்பீடும், அஞ்சலக டெபாசிட்டும் வருமான பிரிவு 80C-யின் கீழ் வருபவை. மருத்துவக் காப்பீடு பிரிவு 80Dல் உள்ளது. பிரிவு 80C முதல் 80U வரையான வரிச்சலுகைகளை கழிப்பதற்கு முந்தைய வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருந்தால் மட்டுமே மூத்த குடிமகனான நீங்கள் வரித்தாக்கல் செய்வது அவசியமாக இருக்காது. ஆனால், பிரிவு 80C மற்றும் 80D வரிச் சலுகையை கழிப்பதற்கு முந்தைய உங்களது பென்ஷன் வருமானம் (ஸ்டாண்டர்டு டிடக்சன் கழித்ததுபோக) ரூ.3.6 லட்சம் என்றிருப்பதால் வரித்தாக்கல் உங்களுக்குக் கட்டாயம்.

கேள்வி 7: நானும் என் மனைவியும் சம்பளதாரர்கள். வருமான வரிப் பிரிவு 10 (13A)-ன் கீழ் தரப்படும் வீட்டு வாடகைக்கான சலுகையை நானும் கழித்துவிட்டேன். தவறுதலாக என் மனைவியும் இந்த சலுகைக்கான வரியைக் குறைத்துக் கொண்டு விட்டார். இதனை இப்போது சரிசெய்துகொள்ளலாமா?

பதில்: வரித்தாக்கலுக்குமுன் அவசியம் சரி செய்ய வேண்டும். அதற்கான வரியைச் செலுத்திய பின்னரே வரித்தாக்கல் செய்ய வேண்டும். முன்னதாக, வரித்தாக்கல் செய்திருந்தாலும் பிழை திருத்திய (Revised) ரிடர்ன் தாக்கல் செய்யலாம்.
-
கேள்வி 8: 31.03-2022-டன் நிதியாண்டு முடிந்துவிட்ட நிலையில் விடுபட்ட வருமான வரியை இப்போது செலுத்தினால் அதற்கு வட்டி சேர்த்து கட்ட வேண்டுமா?

பதில்: 31.07.2022-க்குள் செலுத்தப்படும் வரிக்கு வட்டி சேர்த்து கட்டத் தேவையில்லை.

கேள்வி 9: வருமான வரியைத் தவிர்ப்பதற்காக, வரிக்குரிய வருமானத்தை ரூ.5 லட்சத்துக்குள் கட்டுப்படுத்திக் கொள்ளத் தேவையான வரி சேமிப்பு இனங்களான என்.பி.எஸ்., இன்ஷுரன்ஸ், மருத்துவக் காப்பீடு, என்.எஸ்.சி., பி.பி.எப்., முதலானவற்றைக் கடைப்பிடித்து வருகிறேன். கடந்த மார்ச் 2022-ல் செலுத்த வேண்டிய ஒரு வரிச்சேமிப்பு இனத்தைக் கட்டமறந்துவிட்டேன். இதனால் வரிக்குரிய என் வருமானம் ரூ.5,01,500 ஆகிவிட்டது. எனவே, நான் ரூ.12,800 வரி செலுத்த வேண்டியதாகிறது. வரியைத் தவிர்க்க விடுபட்ட வரிச்சேமிப்பு இனத்தை இப்போது கட்ட முடியுமா, மாற்று வழி உண்டா?

பதில்: வரி செலுத்துவதுதான் ஒரே வழி.

கேள்வி 10: வருமான வரி செலுத்தும்போது அதிகமாகச் செலுத்திய வரி தொகை ரூ.100-க்குக் குறைவாக இருந்தால் ‘ரீபண்ட’ வராது என்கிறார்கள். அப்படியானால்,தற்போது நான் வரிக்கணக்கு சரிபார்க்கும்போது ரூ.80 வரி குறைவாக கட்டியுள்ளது தெரிய வருகிறது. இந்த 80 ரூபாயை பொருட்படுத்தாமல் (அதாவது செலுத்தாமலே) வரித் தாக்கல் செய்யலாமா?

பதில்: வருமான வரியை முழுமையாக செலுத்திவிட்டுத்தான் வரித்தாக்கல் செய்ய வேண்டும் என்பதே விதி.
கேள்வி 11: பணியிலிருந்து ஓய்வுபெற்று பென்ஷனராகி விட்டேன். பணியிலிருந்த போது வரிச் சேமிப்புக்காக செய்திருந்த முதலீடுகளையும் திரும்பப் பெற்றுவிட்டேன். தற்போதைய வரித்தாக்கலில், பழைய வரித் திட்டத்திலிருந்து புதிய வரித்திட்டத்துக்கு மாறிக் கொள்ளலாமா?

பதில்: மாறிக் கொள்ளலாம்.

கேள்வி 12: வரித்தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி எது?

31.07.2022 என்பதில் தற்போது வரை எந்த மாற்றம் ஏதுமில்லை.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நெருங்கும் வரித்தாக்கல் தேதி... கடைசி நேரக் கேள்விகளும், அதற்கான விளக்கங்களும்! Empty Re: நெருங்கும் வரித்தாக்கல் தேதி... கடைசி நேரக் கேள்விகளும், அதற்கான விளக்கங்களும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேலன்:-கேன்சர் பற்றிய 100 கேள்விகளும் அதற்கான பதில்களும்
» சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்பில் சேர கடைசி தேதி நீட்டிப்பு ஜுலை 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
» மேல் சபை வாக்காளார் பட்டியல் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு- கடைசி தேதி நீட்டிப்பு- டிசம்பர் - 7
»  ரயன் ராதிகா நடத்தும் ராடான் குறும்பட விழா – கடைசி தேதி டிசம்பர் 20

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum