உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 03/07/2022by mohamed nizamudeen Today at 9:12 am
» தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Today at 7:03 am
» நீ சாதிக்கப் பிறந்தவன்! துணிந்து நில்!!! ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்
by ayyasamy ram Today at 6:09 am
» நேரம் நிற்பதில்லை!- கவிதை
by ayyasamy ram Today at 6:04 am
» மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’
by ayyasamy ram Today at 6:00 am
» புலி வருது, புலி வருது!
by ayyasamy ram Today at 5:46 am
» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 12:25 pm
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm
» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:43 pm
» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm
» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm
» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:40 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Pradepa |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்ல விசேஷம் - அசலை நெருங்க ‘முயன்ற’ கலகலப்பு சினிமா
2 posters
வீட்ல விசேஷம் - அசலை நெருங்க ‘முயன்ற’ கலகலப்பு சினிமா

காலம் கடந்த வயதில் கர்ப்பமாகும் பெண்ணை அவரது
பிள்ளைகளும் இச்சமூகமும் எப்படி பார்க்கிறது? அந்தத் தாயும்,
அவரது கணவரும் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? -
இதுதான் 'வீட்ல விசேஷம்' படத்தின் ஒன்லைன்.
ரயில்வே டிடிஆராக இருக்கும் சத்யராஜ் - ஊர்வசி தம்பதியினருக்கு
திருமண வயதில் ஒரு மகனும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்
ஒரு மகனும் உள்ளனர். இவர்களுடன் சத்யராஜின் அம்மா கேபிஏசி
லலிதாவும் வாழ்கிறார்.
இந்நிலையில், திடீரென ஒருநாள் ஊர்வசி கர்ப்பமாக இருக்கும்
செய்தி தெரியவர, தம்பதியினர் அதிர்ச்சியடைகின்றனர். இந்தச்
செய்தியை தன் மகன்களிடமும், தன் அம்மாவிடமும் சத்யராஜ்
எப்படி கொண்டு போய் சேர்க்கிறார், அதற்கு அவர்கள் ரியாக்ஷன்ஸ்
என்ன? இதை பொதுச் சமூகம் எப்படி அணுகுகிறது என்பதை
எல்லாம் நகைச்சுவை கலந்து எமோஷனலாக சொல்லும் படம் தான்
'வீட்ல விசேஷம்'.
கடந்த 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான
'பதாய் ஹோ' படத்தின் ரீமேக் தான் இந்தப் படம்.
பள்ளி ஆசிரியரான ஆர்.ஜே.பாலாஜிக்கு நகைச்சுவை காட்சிகள்
நன்றாகவே பொருந்தி வருகின்றன. எமோஷனல் காட்சிகளிலும்,
ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிப்பில் வறட்சி தெரிகிறது.
கூடுதல் எக்ஸ்பிரஷன்ஸ்களின் தேவையை காட்சிகள் உறுதி
செய்கின்றன. அதேசமயம் சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டும்
அபர்ணா பாலமுரளியின் நடிப்பும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை.
அப்பாவி தந்தையாகவும், அம்மா - மனைவியுடன் சிக்கித்தவிக்கும்
ஆணாகவும், குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சிகளில் நம்மை சிரிக்க
வைத்து ஸ்கோர் செய்கிறார் சத்யராஜ். மனைவியின் கர்ப்பத்தை
சொல்லும் காட்சிகளில் ஈர்க்கிறார்.
ஊர்வசி நடிப்பில் மிரட்டுகிறார். தாய்மையை புனிதப்படுத்தும்
காட்சிகளில், 'ஆம்பள தடியா' என மிரட்டிப் பேசுவது, சங்கடமான
சூழல்களை எதிர்கொள்வது, கர்ப்பத்தால் உண்டான ஒருவித
சோர்வை முகத்தில் சுமந்திரிப்பது என நடிப்பில் உச்சம் தொடுகிறார்.
க்ளைமாக்ஸ் காட்சி முழுவதுமே ஊர்வசிதான் ஆக்கிரமித்திருக்கிறார்.
Re: வீட்ல விசேஷம் - அசலை நெருங்க ‘முயன்ற’ கலகலப்பு சினிமா

-
படத்தின் முதல் பாதி நகைச்சுவையாகவும், இரண்டாம் பாதி
எமோஷனலுடனும் நகர்த்தியிருக்கிறார்கள். பெரும்பாலான
காமெடிக் காட்சிகள் பொதுப் பார்வையாளர்களை ரசிக்க
வைத்திருக்கின்றன.
ஆனால், எமோஷனல் காட்சிகளில் அசலின் உயிர்ப்பை
வார்த்தெடுக்க முடியவில்லை. உதாரணமாக 'பதாய் ஹோ' படத்தில்
சத்யராஜின் தாய் கதாபாத்திரத்தின் நிறம் மாறும்போது அவர் பேசும்
வசனம் நம்மை கலங்க வைக்கும்.
ஆனால், அதன் ரீமேக்கான இந்தப் படத்தில் அந்த காட்சிகள் ஒரு
சிரீயலைப் பார்ப்பது போன்ற உணர்வை கடத்துவதை தவிர்க்க
முடியவில்லை. அடிப்படையில் இரண்டு படங்களையும் ஒப்பீடு
செய்வது பொருத்தமானதில்லை என்றாலும், வசனம் முதற்கொண்டு
அப்படியே ரீமேக் செய்திருக்கும் வேளையில் தமிழ்
பார்வையாளர்களுக்கு ஏற்றார்போல வசனங்களையும்,
காட்சிகளையும் மாற்றியிருந்தால் கூடுதல் கவனம் பெற்றிருக்கும்.
இந்த பிரச்சினை 'பதாய் ஹோ' படத்தைப்பார்த்துவிட்டு அதே
மைண்ட் செட்டில் திரையரங்குகளுக்குள் நுழைபவர்களுக்குத்தான்.
அந்தப் படத்தை பார்க்காமல், புதிதாக 'வீட்ல விசேஷம்' படத்தை
பார்ப்பவர்களுக்கு மேற்கண்ட துறுத்தல்கள் பெரிய அளவில்
இருக்கும் வாய்ப்பு குறைவு.
தவிர, படம் போகிற போக்கில் விஷத்தை நகைச்சுவை
பாணியில் விதைக்க முயற்சிப்பது ஆபத்தானது. குறிப்பாக,
ஊர்வசி குழந்தையை பெற்றெடுக்கும் காட்சியில்,
மருத்துவமனையில் பிரசவ வலியால் துடித்துகொண்டிருக்கும்
போது, கடவுளே என ஒரிடத்தில் சொல்வார்.
அப்போது அருகிலிருக்கும் நர்ஸ் ஒருவர், 'அப்படித்தான் மேடம்,
'ஏசப்பா'ன்னு சொல்லுங்க சீக்கிரம் நல்லபடியாக குழந்தை
பொறக்கும். 'ஏசப்பா' சொல்லுங்க' என கூறும்போது, அவருக்கு
எதிர்புறமாக நின்றிருக்கும் சத்யராஜ், 'முருகன் சொல்லு முருகா
முருகா' என கூறும் வகையில் அந்தக் காட்சி அமைக்கப்
பட்டிருக்கும்.
'பதாய் ஹோ' படத்தில் இல்லாத எக்ஸ்ட்ரா பிட்டிங் காட்சி இது.
ஆபத்தான காட்சியும் கூட. தேவையில்லாத இந்த ஆணியை
சேர்த்திருப்பது ஏன் என தெரியவில்லை. அதை பார்வையாளர்கள்
எப்படி உள்வாங்குவார்கள் என்பதை இயக்குநர்கள் உணர்வதில்லை.
Re: வீட்ல விசேஷம் - அசலை நெருங்க ‘முயன்ற’ கலகலப்பு சினிமா

-
படம் சொல்ல முயலும் கருத்து முக்கியமானது.
''ஒரு பொண்ணு 25 வயசுக்கு முன்னாடி குழந்தை பெற்றுக்
கொள்ளவில்லை என்றாலும் தப்பா பேசுவார்கள்; 50 வயதுக்கு
பின்னால் குழந்தை பெற்றுக்கொண்டாலும் தவறாக
பேசுவார்கள்'',
''50 வயசுல மனைவிய கர்ப்பமாக்கின ஆண்களை ஆம்பள
சிங்கம் என்றும், பெண்களை உனக்கு அறிவில்லையா, குடும்ப
கௌரவம் என்னாவது'' - இப்படித்தான் இந்தப் பொதுசமூகம்
பேசும் என்ற ஊர்வசியின் வசனங்கள் தெறிக்கவிடுகின்றன.
மருத்துவமனையில் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருக்கும்
ஒரு சூழலில், இதுபோன்ற மத மோதல்களை ஏற்படுத்தும்
வகையிலான காட்சிகள் தேவைதானா ஆர்ஜே பாலாஜி? அதுவும்,
அந்தச் சூழலிலும் கூட கிறிஸ்துவர்கள் மத மாற்றத்தில்
ஈடுபடுவார்கள் என்ற நுண்ணரசியலை பேசும் தேவையற்ற
காட்சிகள் முகச்சுளிப்பையே ஏற்படுத்துகின்றன.
கார்த்திக் முத்துகுமாரன் ஒளிப்பதிவில் கதைக்கு தேவையானதை
செய்து கொடுத்திருக்கிறார். க்ரீஷ் கோபாலாகிருஷ்ணனின்
இசையில் க்ளைமாக்ஸ் பாடல் எமோஷனல் கனெக்ட் கொடுத்தாலும்,
முக்கியமான சில இடங்களில் அவரது பின்னணி இசை சிரீயலுக்கான
உணர்வை கடத்துவது உறுத்தல். பின்னணி இசையில், இன்னும்
கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம் என தோன்றுகிறது.
மொத்ததில் அசல் படைப்பை பார்க்காதவர்களுக்கு இப்படம்
புதிய அனுபவத்தையும், அசல் படைப்பை பார்ப்பவர்களுக்கு பாதி
திருப்தியையும் ஏற்படுத்தும். எப்படியிருந்தாலும், இப்படத்தைப்
பார்ப்பவர்கள் 'பதாய் ஹோ' என்ற அசல் படைப்பை பார்த்தால்
இரண்டின் மேக்கிங்கையும் புரிந்து கொள்ளமுடியும்.
நன்றி:-இந்து தமிழ் திசை
Re: வீட்ல விசேஷம் - அசலை நெருங்க ‘முயன்ற’ கலகலப்பு சினிமா
எந்த ஒரு கதைக்கும் ஒரு அடிப்படை விஷயம் இருக்கும்.
அந்த ஐந்து நிமிட கருவை எடுத்து 110--130 நிமிடம் சுவைபட
ஓட்டுவதில்தான் கதாசிரியரும் இயக்குனரும் நடிக நடிகையர்
வருகின்றனர்.
அந்த ஐந்து நிமிட கருவை எடுத்து 110--130 நிமிடம் சுவைபட
ஓட்டுவதில்தான் கதாசிரியரும் இயக்குனரும் நடிக நடிகையர்
வருகின்றனர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32595
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12054
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|