ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கு பல பலன்கள் அளிக்கும் ஓரிதழ் தாமரை..!

Go down

ஆண்களுக்கு பல பலன்கள் அளிக்கும் ஓரிதழ் தாமரை..! Empty ஆண்களுக்கு பல பலன்கள் அளிக்கும் ஓரிதழ் தாமரை..!

Post by ayyasamy ram Thu Jun 16, 2022 8:18 am

ஆண்களுக்கு பல பலன்கள் அளிக்கும் ஓரிதழ் தாமரை..! Vikatan%2F2019-05%2F6281919f-278d-457c-a753-63065c96385c%2F84398_thumb.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-

ஓரிதழ் தாமரை... பெயரைக்கேட்டதும் இது தாமரையில் ஒரு
வகையா? அப்படியானால் ஏன் தாமரையைப்போல தண்ணீரில்
வளரவில்லை என்பார்கள்.

இது நிலத்தில் வளரக்கூடிய சிறு செடியினத்தைச் சேர்ந்த இதன் பூ
சிவந்த நிறமும் நடுவில் நாமம் போன்றும் காணப்படும். இதன் காய்
ஒற்றைக்கல் மூக்குத்தி போலிருக்கும். வயல்வெளி மற்றும் சதுப்பு
நிலங்களில் வளரக்கூடிய இந்த மூலிகைக்கு `ரத்தின புருஷ்' என்ற
வேறு பெயரும் உள்ளது.

ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் மட்டுமன்றி முழுச்
செடியுமே மருத்துவக்குணம் வாய்ந்தது.

இரவு பகல் பாராமலும் தூக்கத்தைத் தொலைத்து உழைப்பவர்களும்,
சரியாக உணவு உண்ணாமை போன்ற காரணங்களால் பலரது
உடல்நிலை பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் இளம் வயதில் க
ட்டுக்கடங்காத பருவ உணர்ச்சி வெளிப்பாடுகளால் உடல்ரீதியாக
அவர்கள் செய்யும் சில செயல்களால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும்.

இதனால் உடல் மெலிந்து காணப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களில்
சிலர் திருமண வயதை எட்டும்போது அவர்களால் தாம்பத்ய உறவில்
ஈடுபட முடியாத ஒரு நிலை ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு ஓரிதழ்
தாமரை மூலிகை நல்ல பலன் தரும்.

* ஓரிதழ்தாமரையின் இலையை அதிகாலையில் மென்று
சாப்பிட்டு, பால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதேபோல், ஓரிதழ் தாமரையின் சமூலத்தையும் (வேர் முதல்
பூ வரை) உண்டு வரலாம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆண்களுக்கு பல பலன்கள் அளிக்கும் ஓரிதழ் தாமரை..! Empty Re: ஆண்களுக்கு பல பலன்கள் அளிக்கும் ஓரிதழ் தாமரை..!

Post by ayyasamy ram Thu Jun 16, 2022 8:18 am


* ஏதாவது நோய்களால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட்டவர்கள்,
உடலைத் தேற்ற ஓரிதழ்தாமரை சமூலத்தை உண்பதன்மூலம்
நிவாரணம் பெறலாம். இதே சமூலத்தை கஷாயம் செய்து குடித்து
வந்தால் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம்
பெறலாம்.

*ஆஸ்துமா நோயாளிகளுக்கும் இந்த கஷாயம் நல்லதொரு
மருந்தாகும். உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுப்பவர்கள்
இதே கஷாயத்தை அருந்தி கைமேல் பலன் பெறலாம்.

* ஓரிதழ்தாமரையுடன் சமஅளவு கீழாநெல்லி இலையைச்
சேர்த்து சிறு உருண்டையாக்கி தினமும் அதிகாலை சாப்பிட்டு
வந்தாலும் மேலே சொன்ன பிரச்னைகள் தீரும்.

* உணவு, சூழல், பொருளாதாரம் காரணமாக சில இளைஞர்கள்
இளம்வயதிலேயே முதியவர்கள்போல காணப்படுவார்கள்.
அப்படிப்பட்டவர்கள் இதே ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி
உருண்டைகளைச் சாப்பிட்டு வந்தால் பலன் பெறலாம்.

* பாதுகாப்பற்ற உறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களை
பாடாய்ப்படுத்தும் நோய்களில் ஒன்று மேகவெட்டை
(பாலியல் நோய்). பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய்ப் பகுதிகளில்
வரக்கூடிய இந்த மேகவெட்டை நோய்க்கு ஓரிதழ்தாமரை சமூலம்
பலன் தரும்.

* ஓரிதழ்தாமரை சமூலத்துடன் பச்சைக் கற்பூரம், கோரோஜனை
(நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்) சம அளவு எடுத்து அரைத்து
அதனுடன் பசு நெய் சேர்த்து பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி வந்தால்
நல்ல நிவாரணம் கிடைக்கும்.

* ஆண்மைக்குறைபாடு, குழந்தையின்மை பிரச்னை, தாம்பத்யத்தில்
ஈடுபட இயலாமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இந்த ஓரிதழ்தாமரை
பலனளிக்கும்.

* இலை, தண்டு, வேர், பூ, காய் என ஓரிதழ் தாமரையின் முழு
சமூலத்தை நிழலில் உலர்த்திப் பொடி செய்து இரவு தூங்கச்
செல்வதற்குமுன் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இதைத் தொடர்ந்து
ஒரு மண்டலம் செய்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.

இதே சமூலத்தை (வேர் முதல் பூ வரை) அரைத்து சுண்டைக்காய் அளவு
எடுத்து பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று
நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை
ஒழுக்கு, அடி வயிறு வலி போன்றவை சரியாகும்.

சமூலத்தை 21 நாட்கள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு 50 மில்லி
ஆட்டுப்பால் குடித்து வருவதன்மூலம் இழந்தை ஆண்மை சக்தி திரும்பக்
கிடைக்கும்.

- எம்.மரிய பெல்சின்
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum