ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் அதிகரிக்க வாய்ப்பு

Go down

மீண்டும் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் அதிகரிக்க வாய்ப்பு Empty மீண்டும் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் அதிகரிக்க வாய்ப்பு

Post by ayyasamy ram Thu Jun 09, 2022 11:59 am

மீண்டும் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் அதிகரிக்க வாய்ப்பு 811270
மும்பை
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம்
0.5% ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அடிப்படை வட்டி விகிதம்
4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான
வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் இரண்டு மாதங்களுக்கு
ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் அடிப்படை வட்டி
விகிதம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 2020 மே மாதம் நடந்த
கூட்டத்தில் வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரெப்போ விகிதம் மாற்றப்படாமல் இருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த முறை நடந்த நிதிக் கொள்கைக்
குழுக் கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.

பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதைச் சமாளிக்கும் நோக்கில்
ரெப்போ (வட்டி) விகித்தை 0.40 சதவீதம் உயர்த்தியது. இதனால் ரெப்போ
விகிதம் 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக உயர்ந்தது. இந்தநிலையில்
பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் வட்டி விகிதம் மேலும்
அதிகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்தநிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் இன்று
மும்பையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 0.5 சதவீதம்
உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து
4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு
விதிக்கப்படும் வட்டி விகிதமாகவும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ
விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் தாங்கள் மக்களுக்கு
வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம்
மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மீண்டும் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் அதிகரிக்க வாய்ப்பு Empty Re: மீண்டும் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் அதிகரிக்க வாய்ப்பு

Post by ayyasamy ram Thu Jun 09, 2022 12:00 pm


அக்கூட்டத்தின் முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக உலகப் பொருளாதார மீட்சி
பாதிக்கப்பட்டுள்ளது. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
காரணமாக சர்வதேச அளவில் நுகர்வுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பதற்கு
பெரும்பகுதி உக்ரைன் போர் காரணமாக இருக்கலாம். போரால் விநியோக
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் பணவீக்கம் 6.7% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இது 5.7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டது. பணவீக்க மதிப்பீடு இ
ரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டதில் ஆச்சரியமில்லை.
ஏனெனில் இந்த உயர்வு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் பணவீக்கம்
6 சதவீதத்திற்கு மேல் இருக்கும். பணவீக்கத்தை எதிர்பார்க்கப்படும் அளவுக்கு
கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்படும்.

தற்போதைய உக்ரைன் போர் மற்றும் கரோனா தொற்று பாதிப்பு இருந்த
போதிலும் இந்தியப் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் இருக்கிறது. பொருளாதார
மீட்சி வேகத்தை எட்டியுள்ளது. ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என்ற
கணபிப்பில் மாற்றம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நாட்டில் பணவீக்கம் எதிர்பார்த்த அளவைவிடவும் அதிகரித்து வருகிறது.
பிப்ரவரி மாதத்தில் 6.07 சதவீதமாக இருந்த பணவீக்கம் மார்ச் மாதத்தில் 6.95 சத
வீதமாக உயர்ந்தது. இது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத உயர்வு ஆகும்.
பண வீக்கத்தை கட்டுப்படுத்தவே ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டு வருவது
குறிப்பிடத்தக்கது.

-இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் 50 புள்ளிகள் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி... காஸ்ட்லியாகும் கடன்கள்!!
» வட்டி வீதங்களை மீண்டும் உயர்த்தியது ரிசர்வ் வங்கி-வீட்டுக் கடன் வட்டி உயரும்!
» வட்டியை திடீரென உயர்த்திய ரிசர்வ் வங்கி : பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சி
» வங்கி செக் "ரிட்டர்ன்' ரிசர்வ் வங்கி உத்தரவு
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum