ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’

2 posters

Go down

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ Empty சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’

Post by Dr.S.Soundarapandian Mon Jun 06, 2022 1:52 pm

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’

1 . அந்தக்காலத்துச் சிறுவர்களிடையே ஒரு விளையாட்டு இருந்ததாம்! ‘எங்க வீட்டில் இது இருக்கிறது; உங்க வீட்டில் இருக்கா?’ என்று கேட்பதாம்; பதிலுக்கு அவன் ‘எங்க வீட்டில் இது இருக்கு; உங்க வீட்டில் இருக்கா?’என்று மடக்குவானாம்! இப்படி ஒரு விளையாட்டோடுதான் கதை தொடங்குகிறது!

2 . இந்த விளையாட்டின்போது , ராமசாமி என்ற ஐந்தாம் வகுப்புப் பையன், மாணவன் செல்லையாவிடம் , ‘எனக்குச் சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா?’ என்றான்! அப்போது, செல்லையாவின் தங்கை, இரண்டாம் வகுப்புப் படிப்பவள், இடையே வந்து தன் அண்ணன் செல்லையாவைக் காப்பாற்றுகிறாள்! இப்படி!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ M2UiHpO


தன் அண்ணனைக் காப்பாற்றிய மகிழ்வில், அவனோடு ஒட்டி நின்றுகொண்டாளாம்! பிறகு நடக்கும்போதும் சேர்ந்தே பெருமிதத்தோடு நடந்தாளாம்!

இதுதான் அழகிரிசாமி! இதுதான் அழகிரிசாமியின் முத்திரை! இதையெல்லாம் ‘உளவியல் ’ என்று ஒரு சொல்லாற் குறித்துவிட்டு நாம் மேலே சென்றுவிடுகிறோம்! அப்படி ஒருசொல்லால் அடக்குவது நல்ல திறனாய்வு ஆகாது! சின்னஞ்சிறு வயதில் , அதும் ஒரு பெண் , கொள்ளும் பெருமிதம் இது! இதே வயது ஆண் பையன் கொள்ளும் பெருமித இயல்பு வேறு! அது எப்படி இருக்கும் என அழகிரிசாமியைத்தான் கேட்கவேண்டும்!

3 . அடுத்து, ராமசாமி ஒரு கேள்வி போட்டான்! அதனையும் அதற்கு வந்த பதிலடியையும் பாருங்கள்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ 28aHTlF


ராமசாமி, பணக்கார ஜமீன் வீட்டுப் பிள்ளை! ஆனால் அவனையும் ஏழைவீட்டுப் பிள்ளைகள் தமது தன்னம்பிக்கையால் மடக்கிப் பெருமிதத்தோடு நிற்கின்ற காட்சியைக் கவனியுங்கள்! இதுதான் ஆசிரியர் நல்கும் காட்சி நுட்பம் !

4 . சக மாணவர்கள் நையாண்டி பண்ணுவது அவமானமாகிவிட்டது ராமசாமிக்கு!அவர்களுடன் வரும்போது, அவரவர் வீடு வரும்போது அந்தந்த மாணவன் சென்றுவிடவே , கூட்டம் குறையவே, ராமசாமியின் அவமானமும் குறைந்ததாம்! :
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ 1DPxXkk


‘அவமானம்’ என்பது மற்றவர்களுடனான ஒப்பீட்டு நிலையில்தான் எழுகிறது என்ற வாழ்க்கை நுடபத்தை இங்கு தெளிவாக்கிவிடுகிறார் ஆசிரியர்!

5 . செல்லையாவும் மற்ற தம்பி தங்கை இருவரும் தங்கள் வீட்டுக்கு வருகின்றனர்; தாய்க்காரி தாயம்மாள் குனிந்து வாசல் பெருக்கிக்கொண்டிருக்கிறாள்; அப்போது, மூவரில் தங்கை மங்கம்மா மட்டும் ஓடிப்போய் அம்மாக்காரியைக் கட்டிக்கொண்டாளாம்! :
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ WCWdMTE


ஒருதாயின் பிள்ளைகளாக இருந்தாலும், பெண் குழந்தைக்குத் தாயிடம் ஒட்டுதல் சற்று அதிகமாகவே இருக்கும்; இதை நமக்குக் கண்டு கூறுபவர் அழகிரியார்! ‘எதர்த்தத்தைக் கூறுகிறார்’ என்று சொல்லிவிட்டுப் போகக்கூடாது! எதர்த்தத்துக்குள் ஓடும் மன நெளிவு சுளிவுகள் , அதன் வெப்ப நிலை, அது பிற மனங்களைப் பாதிக்கும் அளவு இப்படி விரிவாக எத்தனையோ உள்ளனவே அவற்றையெல்லாம் அடிக்கோடிட்டுக் கண்டாக வேண்டும்!

6 . அம்மாவை மகள் கட்டிக்கொண்டபோது, தாயின் நிலை வேறுபடுகிறது! அந்த வேறுபாடு எப்படி இருக்கும்? :
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ ArRQJra

தாயின் முகத்தில் அழுகையும் சிரிப்பும் கலந்த ஒரு பாவமாம்! தாய்க்கு ஆனந்தம்! அந்த ஆனந்தத்தை எல்லை வகுத்துக் காட்ட ஒரு பொய்ச் சோகப் பாவனை! இந்தப் பொய்ச் சோகத்தைக் கண்ட மகளுக்குச் சிரிப்பு வந்ததாம்! எவ்வளவு நுணுக்கமான உணர்ச்சிக் கோடுகளை நமக்கு வரைந்து காட்டுகிறார் ஆசிரியர் ! அடடா!
7 . கதைத் தலைப்பில் குறிக்கப்படும் ‘ராஜா’ என்ற சிறுவனை நம் கண்ணில் நீர் வடியுமாறு , இப்படித்தான் காட்டுகிறார் ஆசிரியர்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ 19bBfBV


குளிரும் தரையில் உட்கார்ந்தால் உடம்பு தாங்காது என்று பாதம் மட்டும் தரையில் இருக்குமாறு உட்கார்ந்திருந்தானாம்! வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றும் ஒரு காரணத்தோடுதான் நடக்கிறது என்ற மிகப் பெரிய உண்மையை நமக்குச் சொல்கிறவர் அழகிரிசாமி! நாம் ஏதோ ‘எல்லாம் இப்படித்தான் நடக்கும்’ என்பதுபோலப் போய்க்கொண்டிருக்கிறோம்! உண்மை அல்ல அது! ஒவ்வொன்றுக்கும் காரணம் இருக்கிறது! அதை அறியும் திறந்தான் நம்மிடையே இல்லை!

8 . மழை சற்று வலுக்கவே, தாயானவள் வேகமாக வந்து , ‘கௌபீனச் சிறுவன்’ உட்படத் தன் இரு மகன்களயும் சேர்த்து வீட்டுக்குள் வந்தாள்.
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ YZPhk5v


மகன்களோடு வந்த அந்தச் சிறுவனின் உடம்பெல்லாம் ஒரே சிரங்காம்!

அந்தக் காலத்தில் சிரங்கு என்பது மக்களைத் துரத்திய நோய்! பெரியவர்கள் பலருக்குக் கைகளில் சிரங்கு இருக்கும்! கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை சிரங்கால் அவதியுற்றவரே!

இதுபோன்ற பல நோய்கள் நம் மண்ணிலிருந்து அகலக் காரணம் விடுதலைக்குப் பிந்தைய காங்கிரஸ் ஆட்சிதான் என்பதைச் சொல்லியாகவேண்டும்!

9 . தாயம்மாளின் பிள்ளைகள் ‘போடா’ என்று விரட்ட ஆரம்பித்தவுடன் அழலான் அந்தக் ‘கௌபீனச்’ சிறுவன். அவனுக்கு ஆறுதல் கூறித் தேற்றினாள் தாயம்மாள். சிறுவனின் அழுகை நின்றதாம்; ஆனால் பெருமூச்சு மட்டும் நிற்கவில்லையாம்! அழுவது , அவனின் மனக் கட்டுப்பாட்டில் இருந்தது! ஆனால் பெருமூச்சு விடுவது அவனது உடம்புக் கட்டுப்பாட்டுக்குப் போய்விட்டது! இந்த நுணுக்கத்தை ஆசிரியர் வரைகிறார் :
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ 2IC5Ddx



10 . அநாதையாக நிற்கும் அந்தப் பையன் – அவன் பெயர்தான் ராஜா- விளாத்திகுளத்திலிருந்து கழுகுமலைக்கு நடந்தே செல்கிறான்! இருபது மைல் வந்த நிலையில்தான் தாயம்மாள் அவனை வீட்டுக்குள் அழைத்து வந்தாள். கழுகுமலைக்கு, அவனின் அத்தை வீட்டுக்குப் போகிறனாம்; அந்த அத்தையை அவன் பார்த்ததே இல்லையாம்! அந்த அத்தை இவனுக்கு உதவுவாளா என்பதும் அவனுக்குத் தெரியாதாம்!
பார்த்தீர்களா எப்படிப்பட்டது நம் ‘பெருமைக் குரிய’ தமிழகம்! வெளியில் கேட்கும் ‘விளம்பரம்’ வேறு; உண்மை நிலை வேறு! ஏன் விளாத்திகுளத்தில் ஒரு சின்னஞ் சிறுவன் பிழைக்க முடியாதா?
இந்த நிலையை ஆசிரியர் வருமாறு வரைகிறார்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ 4xKdWFp

11 .மறுநாள்தான் தீபாவளி! ஆனால் முந்தின நாளிலேயே எங்கிருந்தோ வெடிச்சத்தம் கேட்கும்! உங்களுக்கும் இந்த அனுபவம் கிட்டியிருக்கும்! ஆனால் நமக்குக் கிட்டி என்ன பயன்? நாம் அதை என்றாவது நினைத்ததுண்டா? இன்று நினைக்கவைக்கிறார் அழகிரிசாமி!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ A1BHeGT

12 . வெளியில் பட்டாசுச் சத்தம் கேட்டு மகள் மங்கம்மாள் தனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்கவே அவளைத் தேற்றுகிறாள் தாய் தாயம்மாள்; தேற்றும்போது அவளின் மனநிலையை வெகு சிறப்பாகத் தீட்டுகிறார் அழகிரிசாமி! அவள் , தன் மகளைப் பார்த்துத்தான் பேசுகிறாள்; ஆனால், வருடக்கணக்கில் தான் அனுபவித்த துயரங்களைத் தன் அம்மாவிடமோ வேறு மூதாட்டியிடமோ கூறுவதுபோலக் கூறினாளாம்! இதோ அழகிரி வரிகள் –
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ EKOMr8g


கதாசிரியர் காட்டும் மன ஓட்டத்தைக் கண்டு நாம் வெலவெலத்துப் போகிறோம்! அதைப் புரிந்துகொள்ள நமக்குக் கொஞ்சம் நேரமாகிறது!

13 . தன் பிள்ளைகளுக்குப் போர்த்திவிடும் தாயம்மாள் , முன்பின் அறியாத அந்தச் சிறுவனுக்கும் சேர்த்துப் போர்த்தும் போது, ‘தாய்மை’ப் பண்பை ஓவியமாக்குகிறார் ஆசிரியர்!

14 . இரவில் மழைபெய்து முடிந்த நேரம்! அப்போது தூவானம் ஓலையில் பட்டுப் ‘பொட்டு பொட்டு’னு இடைவெளி விட்டு ஒரு சத்தம் வரும்! இதைக் கேட்டு அனுபவித்தவருக்கே நான் சொல்வது புரியும்! இதை எப்படி எழுத்தில் கொண்டுவருகிறார் அழகிரிசாமி பாருங்கள்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ GI63Px0

15 . அன்று தீபாவளி! காலையில் குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்க்கும்போது, அநாதையாக நிற்கும் ராஜாவுக்கும் தாயம்மாள் எண்ணெய் தேய்த்துவிடுகிறாள் ! அப்போது ஒரு மன ஓட்டம் அவளுக்குள்! :
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ Gn11Aqr

தான் ஒரு வித்தியாசமான செயல் செய்கிறாள்; அதற்கு ஏனோ ஒரு ஊக்கம் அவளுக்குத் தேவைப்படுகிறது! அந்த ஊக்கம்தான் ‘பிறருக்குச் சொல்வதுபோலத் தனக்குள் சொல்வது’! இதையெல்லாம் நமக்குக் கற்றுத்தருபவர் கு.அழகிரிசாமி எனும் மாபெரும் எழுத்தாளனே!

16 . தீபாவளியன்று அதிகாலை! மங்கிய வெளிச்சம்!ஆனால் ஓரிடத்தில் மட்டுமில்லை ! எங்கும்! இப்படி வரைகிறார் ஆசிரியர்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ GrqIK4c


17 . தாயம்மாளின் குழந்தைகளுக்கு ஏதோ ஒரு வகையில் புத்தாடை கொடுத்தாகிவிட்டது! அந்த அநாதைச் சிறுவன் ராஜா மட்டும் கோவணத்துடன் நிற்கிறான்! அவனுக்கு ஏதாவது உடுத்தக் கொடுக்கவேண்டும்! அப்போது தாயம்மாளின் மனப்பின்னல்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ Mrjkw3T


உண்மையில் தாயம்மாளுக்கு மனக்கசப்பு எதுவும் இல்லையாம்! ஆனால் ஏதோ மனதுக்குள் ஒரு தைரியம் தேவைப்படுகிறது அவளுக்கு! அதற்கு என்ன செய்வது ? அதற்குத்தான் ‘என்னைச் சோதிக்கவே வந்தாயடா நீ’ என்ற சொல்!
சொற்கள் எப்படி நம்மை ஆளுகின்றன எனும் அதிநுட்பமான கருத்தை அழகிரிசாமி சொல்லித்தான் நாம் அறிந்துகொள்கிறோம் !
16. அவ்வேளையில், மகள் மங்கம்மாள் , தாயின் காதோடு ஒன்றைக் கூறுகிறாள்! என்ன அது? :
“பாவம் ! அவனுக்கு அந்தத் துண்டைக் குடு அம்மா!”
‘அந்தத் துண்டு’ என்றது , மங்கம்மாளின் அப்பாவுக்கு என வாங்கிவைத்தது!
ராஜாவை முதலில் விரும்பாத மங்கம்மாளுக்கு, மற்றவர்கள் புத்தாடை கட்டிய வேளையில் இவன் மட்டும் கோவணத்துடன் நிற்பதைக் காணப் பொறுக்கவில்லை!
அங்கிருந்த தாயம்மாளின் மகன் செல்லையாவுக்கோ, தம்பையாவுக்கோ இப்படிக் கூறத் தோன்றவில்லை! சிறுமி மங்கம்மாளுக்கு மட்டும் தோன்றுகிறது! இதுதான் அழகிரிசாமி! எல்லாம் பிள்ளைகள்தான்! ஆனால், பெண்பிள்ளையின் மனம் வேறு ஆண்பிள்ளையின் மனம் வேறு! இளகிய மனம் என்பது பெண்மையின் சொத்து! பேருந்தில் இதை நீங்கள் பார்க்கலாம்! ஏதாவது அநீதி வண்டிக்குள் நடந்தால் முதலில் பெண் பயணியிடமிருந்துதான் எதிர்ப்புக் குரல் வரும்!
17 . மேல் துண்டு இல்லாமல், வெறும் வேட்டியோடு மட்டும் உலவுகிறார் தன் தந்தை என்று தெரிந்தும், யாரோ ஒரு பையனுக்கு , எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ,தந்தைக்கு என வாங்கியிருந்த அந்தத் துண்டைக் கொடுக்க முன் வருகிறாளே தன் மகள் என்பது ஒரு உள்ளத்து அதிர்ச்சியைக் கொடுத்தது தாயம்மாளுக்கு! ஆசிரியர் விவரிக்கிறார்:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ PvhOGAZ


தன் வீட்டு நிலையும், ராஜா என்ற அந்தச் சிறுவனின் நிலையும், தன் மகளின் பண்பு நலனும், தனது விருப்பமும் ஒன்றாகச் சேரவே , தாயம்மாளின் முகமே ‘கோரமானது’ ! அது மட்டுமல்ல! அவளின் ‘துக்கம்’ அந்த வீட்டையே ‘அடைத்ததாம்!’ இதுதான் புதுமையான எழுத்து! அந்த வீடு முழுதும் பரவி முட்டிக்கொண்டு நின்றதாம் அவளின் சோக நிலை! தனி ஆளோடு நிற்கும் சோகம்; ஆளைச் சுற்றிலும் உள்ள சோகம்; வீட்டையே அடைத்துக்கொண்டிருக்கும் சோகம் என்று சோக நிலைகள் பல உள என்பது ஆசிரியர் அழகிரிசாமியால் நாம் முதன்முதலாக உணர வருகிறோம் !

18 . தீபாவளிப் புத்தாடையுடன் பணக்கார வீட்டுப் பிள்ளை ராமசாமி, நம் மங்கம்மாளைப் பார்த்தான்! பர்த்ததும், ‘எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கார்’ என்றான்! அவன் ‘ராஜா’ என்றது, அவனின் அக்கா கணவரை; அக்கா கணவர் ஜமீன் வீட்டுப் பிள்ளை. ஆனால் இம்முறை முந்தைய போட்டி விளையாட்டுக்காக ராமசாமி சொல்லவில்லை. ஆனால் முந்தைய போட்டி விளையாட்டுக்காகத்தான் ராமசாமி தன்னை மட்டம் தட்டுகிறான் என நினைத்த மங்கம்மாள் சட்டென்று – “ஐயோ உங்க வீட்டுக்கு மட்டுந்தானா ராஜா வந்திருக்கார்? எங்க வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்கார்! வேணும்னா வந்து பாரு!” என்று ஏளனமாகக் கூறலானாள்!
இந்தத் தொடரைத்தான் கதையின் தலைப்பாகக் கொண்டுள்ளார் ஆசிரியர்!
கனமான தொடர்!
ஒரு தரப்பு – செல்வச் செழிப்பால் ராஜாவாக இருப்பவனை ‘ராஜா’ என அழைத்து மகிழ்ந்தது!
இன்னொரு தரப்பு – இருக்கட்டுமே? பராரியான ஒரு சிறுவனுக்கு ஆதரவு கொடுத்து அவனை எங்களில் ஒருவனாக நினைக்கிறோமே , அவன் பெயரளவில் ராஜாவாக இருந்தால் என்ன ? வந்து பார்! அவனை ‘ராஜா’ இல்லையென்று உன்னால் கூற முடியுமா? ……. என்றெல்லாம் கருத்தோட்டம்படப் பேசியது போட்டித் தொடராக!
ஆக- அந்தப் போட்டிப் பேச்சில் மங்கம்மாள் வென்றாள்!
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ Empty Re: சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’

Post by T.N.Balasubramanian Mon Jun 06, 2022 2:23 pm

ஆம் அய்யா அருமையான உளவியல் --கையாண்ட விதம் போற்றத்தக்கதே.

மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிற நடை.

நல்ல அலசல் .

நன்றி, முனைவர் அவர்களே.

@Dr.S.Soundarapandian


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum