ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிந்ததை இணைக்கும் ஊக்கு! - திலகா

Go down

பிரிந்ததை இணைக்கும் ஊக்கு! - திலகா Empty பிரிந்ததை இணைக்கும் ஊக்கு! - திலகா

Post by ayyasamy ram Sat Jun 04, 2022 3:31 pm

பிரிந்ததை இணைக்கும் ஊக்கு! - திலகா 809620

ரோஜா பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள்.
சீருடைச் சட்டையில் பட்டன் இல்லை என்பதை அப்போதுதான்
கவனித்தாள். வேறு சட்டையும் அழுக்காக இருந்தது. பட்டன்
வைத்து தைப்பதற்கு நேரமும் இல்லை. என்ன செய்வது என்று
யோசித்தவளின் கண் முன்னே ஊக்கு ஒன்று கிடந்தது.

சட்டென்று ரோஜா நிம்மதி அடைந்தாள். பட்டனுக்குப் பதிலாக
ஊக்கைப் பயன்படுத்திவிட்டு, பள்ளிக்குக் கிளம்பிவிட்டாள்.
சாதாரணமாக நாம் நினைக்கும் ஓர் ஊக்கு, தேவையான
நேரத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து
விடுகிறது!

இப்படி ஊக்கைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது.
பழங்காலத்தில் இருந்தே ஊக்கு போன்ற ஒரு பொருளை
மனிதர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

துணி, தோலாடைகளை இணைக்க செப்புக் கம்பியால் ஆன
ஊக்குப் பயன்பட்டிருக்கிறது என்பதைத் தொல்லியல்
ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

நவீன ஊக்கை உருவாக்கிய பெருமை அமெரிக்காவைச்
சேர்ந்த வால்டர் ஹண்ட்டைச் சேரும். இவர் ஏராளமான
பொருட்களைக் கண்டுபிடித்திருக்கிறார்.

1849ஆம் ஆண்டு பணக் கஷ்டத்தில் இருந்தார் வால்டர்.
ஒரு நாள் தன்னுடைய பட்டறையில் அமர்ந்து, நண்பரிடம்
வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று யோசித்துக்
கொண்டிருந்தார்.

அவர் கையில் நீண்ட வயர் ஒன்று இருந்தது. அதை வைத்து
ஏதேதோ உருவங்களைச் செய்வதும் பிரிப்பதுமாக இருந்தார்.
அதில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
பல்வேறு வடிவங்களைத் தாளில் வரைந்து பார்த்தார்.

இறுதியில் ஊக்கின் (Safety Pin) வடிவத்தை
உருவாக்கினார். 1849, ஏப்ரல் 10 அன்று தன்னுடைய கண்டு
பிடிப்புக்குக் காப்புரிமையைப் பெற்றார். பிறகு அந்தக்
காப்புரிமையை டபிள்யூ.ஆர். கிரேஸ் நிறுவனத்துக்கு விற்று
விட்டார். அதில் கிடைத்த பணத்தை வைத்து கடனை
அடைத்தார்.

இவர் கண்டுபிடித்த ஊக்கின் வடிவம்தான் இன்றுவரை
பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரிந்ததை இணைக்கும் ஊக்கு! - திலகா Empty Re: பிரிந்ததை இணைக்கும் ஊக்கு! - திலகா

Post by ayyasamy ram Sat Jun 04, 2022 3:33 pm

பிரிந்ததை இணைக்கும் ஊக்கு! - திலகா 16543333933070
வால்டர் ஹண்ட்
--
ஆரம்பத்தில் ஊக்கு, விலை உயர்ந்த பொருளாக இருந்தது.
ஜனவரி முதல் அல்லது இரண்டாவது நாளில் ஊக்கை வாங்கி
வைத்துக்கொண்டால், ஆண்டு முழுவதும் ஊக்கை வாங்கி
வைக்கும் அளவுக்குச் செல்வம் பெருகும் என்று மக்கள்
நம்பினர்.

நியூயார்க்கில் சாமுவேல் சோல்கம் ஊக்குத் தயாரிக்கும்
நிறுவனத்தை ஆரம்பித்தார். ஒரு நாளைக்கு ஒரு லட்சம்
ஊக்குகள் தயாரிக்கப்பட்டன.

வால்டர் கண்டுபிடித்த ஊக்கில் மிகச் சிறிய மாற்றங்கள்
ஏற்பட்டன. இரும்பு, செம்பு, எஃகு போன்றவற்றில் ஊக்குகள்
உருவாக்கப்பட்டன. மிகச் சிறிய ஊக்கில் இருந்து மிகப்
பெரிய ஊக்குகள்வரை அளவிலும் மாற்றங்கள் வந்தன.

ஊக்கின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க விலையும் குறைந்து
போனது. இன்று ஒரு நாளைக்கு 30 லட்சம் ஊக்குகள் உற்பத்தி
செய்யும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

துணிகளை வேகமாக இணைக்க வெல்க்ரோ போன்றவை
வந்துவிட்டாலும் இன்றும் ஊக்கின் பயன்பாடு உலக அளவில்
அதிகமாகவே இருக்கிறது.

இந்தியாவில் ஊசியையும் ஊக்கையும் அடுத்தடுத்த
தலைமுறைக்கு, தாய் மகளுக்குச் சீதனமாகக் கொடுக்கும்
பழக்கம் இருந்துவருகிறது.

உக்ரைனில் குழந்தைகளின் சட்டையில் ஊக்கை மாட்டினால்,
அது கெட்ட சக்திகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றும்
என்று நம்புகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் ஊக்கு
அதிர்ஷ்டத்தைத் தருவதாக நினைக்கிறார்கள்.
-
நன்றி-இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum