ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’

2 posters

Go down

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Empty சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’

Post by Dr.S.Soundarapandian Tue May 31, 2022 6:03 pm

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’


1 . ஒரு ‘குமாஸ்தா’ , தன் வாழ்வில் பாட்ட பாடுகளே இக் கதை!அவர் மனம் கந்தல் கந்தல் ஆனதே ‘சிறுமை’.

2 . இக் கதையில் நான்கு அம்சங்கள் உள்ளன.

ஒன்று – செய்யாத தவறுகளுக்கெல்லாம் ‘இனிமேல் செய்ய மாட்டேன்’ என எழுதிக்கொடுக்க நேர்வது!
இரண்டாவது – உடன் பணியாளர்களின் காட்டிக்கொடுக்கும் இழிவான குணம்!
மூன்றாவது- வீட்டுவேலைக்காரி, ரிக்ஷாக்காரன் போன்றவர்கள் , நினைத்த நேரத்தில் ‘போய்யா நீயும் உன் வேலையும்’ என உதறிவிட்டுப் போவது போல, அலுவலகப் பணியாளர்கள் போக முடியாத சிறை!
நான்காவது – சாதி!
தன் சாதிக்காரனுக்குப் பதவி உயர்வு கொடுக்கவேண்டும் என்பதற்காகச், சூழ்ச்சி செய்து, வழியை ஏற்படுத்துவது!

3 . குமாஸ்தா, மேலதிகாரி , தேவையில்லாமல் சீறுவது, குற்றம் சுமத்துவது போன்றவை பற்றிப் பேச்சுவாக்கில் , ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததை அப்படியே போட்டுக் கொடுத்துவிட்டார் அதிகாரியிடம் உடன் பணியாற்றும் அந்த ‘நண்பர்’! போட்டுக் கொடுப்பவருக்கு இதில் என்ன கிடைக்கும்? பாருங்கள்!:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ TVOJLTD


4 . நம் அப்பாவிக் குமாஸ்தாவுக்குக் கீழே உள்ளவன் , மேலதிகாரியின் சாதிக்காரன்! இதற்காக அப்பாவிக் குமாஸ்தா மீது குற்றங்கள் சுமத்துவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்கிறார் மேலதிகாரி! பாருங்கள்-

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ XamAjq6

இது அன்று மட்டுமல்ல இன்றும் தொடர்வதுதான்! சொல்லப்போனால் இன்று அதிகமாயுள்ளது! சாதிக்கு எதிராக வரிந்து கட்டியவர்கள் எல்லாம் பூச்சியமாயுள்ளனர்! இதைக் கண்டும் காணாமல் , ஊடகத் துணையோடும் அதிகாரத் துணையோடும் ‘வாழ்வது’தான் நம் ‘பெரியவர்கள். சாத்னை!

5 . தன சகப் பணியாளர்கள் , எதிரில் வீராவேசம் பேசுவதையும், மறைவில் வேறொரு விதமாக நடந்துகொள்வதையும் கண்டு நம் அப்பாவிக் குமாஸ்தா வெதும்புகிறார்! “இந்த அதிகாரி என்ன நினைக்கிறார்? இன்னொரு முறை என்னைத் திட்டினால் நான் அவரை அறைவதாக இருக்கிறேன் ஜெயிலுக்குப் போனாலும் சரி!” என்று பேசினார் ஒரு உடன் பணியாளர் ! அவரது காட்சி வருகிறது !:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Nva4p4v

6 . ‘நீ வேலைகளைச் சரியாகச் செய்வதில்லை!’ என அபாண்டமாகக் குற்றம் சுமத்தி , திட்டுதிட்டு என்று மேலதிகாரி திட்டுவதைப் பொறுத்துக் கொண்டுதான் அப்பாவி அலுவலர்கள் போகவேண்டியுள்ளது! சரியான காரணத்தைச் சொன்னால், ‘எதிர்த்து பேசினார்; இது இத்தனாவது விதியின் கீழ்த் தவறு’என்று நடவடிக்கைக்குக் கொண்டுவந்து விடுவார்கள்! நம் குமாஸ்தாவைக் கவனியுங்கள்!:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ S1NGK9J


7 . ஆயிற்று! தன் சாதிக்காரனுக்குப் பதவி உயர்வு கொடுத்தாகிவிட்டது! இனியாவது அதிகாரியின் வீண் சீற்றம் தணியுமா? தணிந்ததா? ஆசிரியர் வரைவு:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ R1M2yaY


8 .சரி! தன்னோடு பணியாற்றுவோர் உயிர்த்துடிப்போடு இருக்கின்றனரா? ஆனாலும் அவர்களிடம் குறையைக் கூறுவதைத் தவிர நம் குமாஸ்தாவுக்கு வேறு வழி இல்லை!

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ H71E4oC

சமுதாயக் கட்டமைப்பில் ‘அவரவர் பாடு’ என்று ஒதுங்கிப் போவது தவறு என்பதே இங்கு கு.அழகிரிசாமி கூறவரும் கருத்து!

9 . உள்நோக்கோடு அதிகாரி அவமானப் படுத்துவதும், சகப் பணியாளர்களால் காட்டிக்கொடுக்கப் படுவதும், ‘உன் வேலை சரியில்லை’ என்று பொய்க் குற்றம் சுமத்துவது முதலியவற்றால் மனம் நொந்து அழுகிறார் நம் குமாஸ்தா!:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ 29aPt3d

தலைப்பு கூறும் ‘சிறுமை’ இதுதான்!

10. தன் வீட்டுக்கு வரும் வேலைக்காரி , இரண்டு நாட்கள் வராமற் போகவே , தடுமாறிப் போகிறார் நம் குமாஸ்தா! அவர் வீட்டு நிலை அப்படி! மனைவிக்கு உடல் சரியில்லை! மகனுக்கும் சரியில்லை! அவர் துடிப்பு!:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Dic0QNk


11. இரண்டுநாள் கழித்து வந்த வேலைக்காரியைத் திட்டிவிடுகிறார் நம் குமாஸ்தா! அதற்கு வேலைக்காரி என்ன சொன்னாள்?:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ 8OmS2iS


12 . மேலதிகாரியிடம் திட்டுவாங்கவும் , மன்னிப்பு எழுதிக்கொடுக்கவும், தண்டனை பெறவும்தான் தன்னால் முடிகிறதே அல்லாமல் ஒரு வேலைக்காரி நிமிர்ந்து நிற்பதுபோல நம்மால் நிற்க என்றாவது முடிந்ததா? நம் குமாஸ்தாவின் புலப்பம்!:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Y7hZGMn

13. பக்கத்து வீட்டுக்காரர் , ‘நாம் ஒருநாள் ஆபீசுக்குப் போகலைனா சும்மா விடுவான்களா சார்?’ என்று குமாஸ்தா வீட்டுக்கு வேலைக்காரி வராத துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார்! அதற்கு நம் குமாஸ்தா – ‘விடறதாவது? காலில் விழுந்தாலும் மன்னிக்க மாட்டேங்கிறான்!’ என்றார்.

அதற்கு அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் என்ன சொன்னார்? –

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ QUY2zRl

பொதுவாகப் பக்கத்து வீட்டுக்காரர்கள் நெருங்கிப் பழகமாட்டார்கள்! என்றாவது, அவர்களுக்கும் ஒரு மன உந்துதல் அல்லது தேவை இருந்தால்தான் வாயைத் திறப்பார்கள்! அப்படி வாயைத் திறந்தவரோடுதான் பேசியுள்ளார் நம் குமாஸ்தா!

சமுதாயத்தை நுட்பமாகப் படம் பிடிப்பதில் அழகிரிசாமியை யாரும் விஞ்சமுடியாது!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Empty Re: சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’

Post by T.N.Balasubramanian Tue May 31, 2022 7:29 pm

மிகவும் யதார்த்தமான கதை.
இக்காலங்களில் வேலையும் செய்யாமல் கொடி பிடிக்க யூனியன்கள் உண்டு..
அக்காலங்களில் வேலை கிடைப்பதும் அதை பாதுகாப்பதும் குதிரை கொம்புதான்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Empty Re: சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’

Post by Dr.S.Soundarapandian Tue May 31, 2022 8:46 pm

நன்றி இரமணியன் அவர்களே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’ Empty Re: சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘சிறுமைக் கதை’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum