ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு!

3 posters

Go down

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! Empty சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு!

Post by Dr.S.Soundarapandian Mon May 30, 2022 12:56 pm

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு!

1 . கிராமத்தின் ‘அனாதையான’ சூழலை ஒரே வரியில் கதையின் தொடக்கத்தில் குறிக்கிறார் பாருங்கள்:

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! AhekPPh
    2. அந்தக்காலத்தில் , மாட்டுத் தொழுவத்தில் , ஏதுமற்ற ஏழைகளுக்கு வாடகை இல்லாமல் இடம் கொடுத்தார்கள்; ஆனால் அதுகூட இப்போது இல்லை! இப்போது மாட்டுத்தொழுவத்தில் இடம் கொடுத்தால், கொடுத்தவர் வீட்டின் வேலையைக் குறையில்லாமல் செய்யவேண்டும்; வெளியிலே அன்று சம்பாத்தியத்துக்கு வழி இருந்தாலும் போகக்கூடாது!
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! KTZk6G2

   ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குள் வேறு சமுதாயம் வந்துவிடுகிறது பாருங்கள்! ‘அந்தக் காலத்தில்’ என ஆசிரியர் எழுதியதைக் கவனியுங்கள்!  பரந்த மனப்பான்மையானது நம்மிடையே குறைந்துகொண்டே வருகிறது என்பதே இங்கு பாடம்!

    3 . பட்டினியாகப், போக்கிடம் இல்லாமல் இருக்கும் இரு சிறுவர்களுக்கு, மற்றவர்க்குப் பதில் சொல்லவே தெம்பற்ற நிலை உருவாகும் என்பதை , நம் மனதில் தைக்குமாறு பதிக்கிறார் அழகிரிசாமி!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! EuXl9jh


     4. உடுத்திக்கொள்ள ஆடை இல்லாமல், காய்ச்சலுடன், கந்தல் சாக்கைப் போர்த்திக்கொண்டு தாய் வெள்ளையம்மாள் சுருண்டு படுத்துக் கிடக்கிறாள்!ஆனால் அந்த அவளின் நிலைகூடச் சரியாகப் புரியவில்லை அவளின் இரு ஆண் குழந்தைகளுக்கும்!
இந் நிலையில்  பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த கஞ்சிச் சட்டியுடன் தாயை நோக்கி வருகிறான் இளைய மகன்!  ஆனால்,  ‘அடுத்தவர் கொடுக்கும் உணவை வாங்கக் கூடாது’ என்று சொல்லி வளர்த்ததும் நினைவுக்கு வருகிறது தம்பிக்காரனுக்கு!அண்ணனும் இன்னொருவர் கொடுத்த உணவை வாங்கக் கூடாது என்று சத்தம்போட்டுக்கொண்டே வருகிறான்!  அந்த மனப் போராட்டத்தைச் சித்திரிக்கிறார் ஆசிரியர் பாருங்கள்! அடடா அற்புதம்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! EvJLPYV

  இரண்டுநாள் பசியின் முன் தாயின் உபதேசம் பறந்துபோகிறது! அந்தப் பசி , தாய் சொல்லி வளர்த்ததையும், தன் அண்ணன் விரும்பாததையும் எதிர்ப்பதற்கு ஒரு சக்தியைக் கொடுக்கிறதாம்!
   இதைவிட எந்த உளவியல் அறிஞன் நமக்கு உளவியலைச் சொல்லித்தர முடியும்?  

    5 . தாய்க்குக் கஞ்சி கொண்டுபோன சிறுவர்கள், தாயின் நிலையைக் காண்கின்றனர்! நமக்குக் கண்ணீரை வரவழைக்கும் அக் காட்சி!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! FnPciDa

    சுருண்டு கிடக்கும் – உண்மையில் இறந்து கிடக்கும்- அம்மாவை அடித்து எழுப்புகிறார்களாம்! ‘அடிஅடி என்று அடிக்கிறார்கள்!’ – யார் கண்ணில் நீர் வராது!

    6 . என்ன அழுதும் அம்மா எழவில்லை! மாண்டவள் மீள்வாளா? ஆனால் அந்த நிலையைப் புரிந்துகொள்ளாது ‘செத்துப்போகாதே’ என்று கத்துகிறார்கள் பிள்ளைகள்! இளையமகன் கோபமாக தாய் போர்த்தியிருந்த கிழிந்த சாக்கைப் பிடித்து இழுத்து வெளியே போட்டுவிட்டான்! இப்போ தாய் ஆடையின்றிக் கிடக்கிறாள்!:
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! XLQkTUM

    7. தாய் வெள்ளையம்மாளின் இறந்த உடலுக்குப் போர்த்தப் புதிய வெள்ளை உடையை ஒரு வர் கொண்டுவந்து கொடுக்க, அது போர்த்தப்படுகிறது!
உயிரோடு சாகக் கிடந்தவளைக் கவனிக்க ஆளில்லை! ஆனால் செத்த பிறகு ‘சடங்கு செய்ய’ ஆள் வருகிறார்கள்! இறந்த உடலைப் போட்டுவைத்தால், மற்றவர்களின் மகிழ்ச்சி வாழ்க்கையும் பாதிக்கப்படும் அல்லவா?

    8 . பக்கத்துவீட்டுக்கார வேலப்பன்! அவன் என்ன செய்தான்? வெள்ளையம்மாள் இறப்பதற்கு முன் , மகன்களிடம் போகிற போக்கில் அதட்டிப் பேசிட்டுப் போனான்!
ஆனால், வெள்ளையம்மாள் இறந்த பிறகு அவனுக்குக் கரிசனம் வந்துவிட்டது! இரு மகன்களையும் , ‘அலாக்காக’ வீட்டுக்குக் கூட்டிச் சென்று , சுடசுட உணவளித்து, இரவில் தூங்கப் பாய் கொடுத்துப், போர்த்திக்கொள்ள நல்ல ஆடையையும் கொடுத்துத் தூங்கச் செய்கிறான்!
    இதெல்லாம் ஊர் ‘வழக்கம்’! எல்லா ஊர்களிலும் இப்படித்தான் நடக்கும்; நடக்கிறது! மக்களுக்குச் சடங்குகளில் உள்ள நம்பிக்கைதான் இதுவும்!

    9. வேலப்பன் வீட்டில் மகன்கள் தூங்கும் போது, இரு மன்கன்களின் கனவிலும் ஒரேசேர வருகிறாள் தாய் வெள்ளையம்மாள்!  அக் காட்சிதான் கதையின் உச்சம் (climax)!
இரு மகன்களின் கனவிலும் ஒரே நேரத்தில் வந்த வெள்ளையாம்மாள்  கூறிய காட்சி :
சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! JpLWQg8

    கல்லையும் கரைக்கும் சொற்கள் இவை!

வெள்ளையம்மாள் பாடையில் படுக்கவைக்கும்போது ஊரார் கொடுத்த வெள்ளைச் சேலைதான் இப்போ , செத்த பின்னர் , கனவில் வரும் வெள்ளையம்மாளின் ஒரே சொத்து! அதையும் தன் அன்பு மகன்களுக்காகக் கொடுக்கிறாள்! கொடுத்துவிட்டுப் பிறந்த மேனியாகப் பிரிந்து போய்விடுகிறாள்!
அப்போதுதான் ‘அம்மா’ என்று இரு மகன்களும் ஒரே நேரத்தில் கத்தலாயினர்! ‘இருவர் கண்ட  ஒரே கனவு’ இதுதான்!
     
    அன்றும் சரி இன்றும் சரி, சடங்குகளுக்கு மக்களை நன்கு பழக்கப் படுத்தி வைத்துள்ளார்களே தவிர, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது , மற்றவர்கள் எந்த நிலையில் உள்ளார்கள் என்று அறியச் செய்வதற்கு எந்தப் பழக்கத்தையும்  செய்து தரவில்லை!
இந்த அவலத்தைத்தான் நமக்கு இக் கதை  காட்டுகிறது!
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! Empty Re: சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு!

Post by ayyasamy ram Mon May 30, 2022 1:58 pm

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! 3838410834 சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! 103459460

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! Empty Re: சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு!

Post by T.N.Balasubramanian Mon May 30, 2022 5:50 pm

அழுகை அழுகை அழுகை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு! Empty Re: சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் இருவர் கண்ட ஒரே கனவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum