புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேம்பஸ் இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி?
Page 1 of 1 •
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
கேம்பஸ் இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி?
இன்றைக்கு லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில், வளாகத் தேர்வு எனப்படும் கேம்பஸ் இன்டர்வியூக்களுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.
பி.இ., பி.டெக்., போன்ற தொழிற்படிப்பு கற்கும் மாணவர்களை அவர்களின் இறுதி வருடப் படிப்பின்போது பிரபல நிறுவனங்கள், அந்தந்தக் கல்லூரி வளாகங்களிலேயே நேர்முகத் தேர்வுகள் மூலம் தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.
இப்போது 'கேம்பஸ் ஃபீவர்' நேரம். இன்றைய சூழலில் மாணவர்களிடம் பன்னாட்டு நிறுவனங்கள் (Mnc- Multinational companies) என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கின்றன ? பொதுவாக, மாணவர் களிடம் காணப்படும் குறைகள் என்ன? வளர்த்துக்கொள்ள வேண்டிய தகுதிகள் என்னென்ன?
பொறியியல் மாணவர்கள் வேலை பார்க்க விரும்பும் டாப் 3 நிறுவனங்களில் ஒன்று, 'காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்'. அந்த நிறுவனத்தின் ஹெச்.ஆர்.அசிஸ்டென்ட் வைஸ்பிரெசிடென்ட் ஸ்ரீராம் கூறுகையில் ''பொதுவாக, ஐ.டி. நிறுவனங்கள் உலகின் பல நாடுகளில் தங்கள் கிளைகளைச் செயல்படுத்துவதால், பல்வேறு கலாசாரங்களிலும் வேலை பார்க்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். எந்தச் சூழ்நிலையிலும், நேரத்திலும் வேலை பார்க்கத் தயங்காமல் இருப்பதை '24X7 attitude' என்பார்கள். ஆங்கிலத்தில் வெளுத்து வாங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. பாஸ் சொல்வதை, வாடிக்கையாளர் சொல்வதை, மேனேஜர் சொல்வதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஒட்டுமொத்தமாக 600 ஆங்கில வார்த்தைகள் தெரிந் திருந்தால்கூடப் போதும்; இதுபோன்ற பண்பு சார்ந்த தகுதிகளை சாஃப்ட் ஸ்கில்ஸ் (soft skills) என்போம்.
அடுத்து, ஒரு மாணவனின் கன்சிஸ்டென்ஸி குறித்து பரிசீலிப்பார்கள். பள்ளிப் பருவத்தில் இருந்து தற்போதைய செமஸ்டர் வரை ஒரு மாணவனின் மதிப்பெண் சதவிகிதங்களை அலசுவார்கள். சமயங்களில், கல்லூரிப் படிப்பில் எப்போதுமே அரியர் வைத்திருக்கக் கூடாது என்றும் கண்டிப்பு காட்டுவார்கள். எழுத்துத் தேர்வுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்க நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் வெவ்வேறு கட்டுப்பாடுகள் இவை. இதை criteria என்போம். இந்த ஏரியாவுக்குள் வரும் 61 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற மாணவனையும், 97 சதவிகிதம் பெற்ற மாணவனையும் எழுத்துத் தேர்வில் இருந்து அடுத்த கட்ட நேர்முகத் தேர்வில் சமமாகத்தான் நடத்துவோம்.
பொதுவாக, அனைத்து நிறுவனங்களும் மாணவர்களிடம் எதிர்பார்க்கும் முக்கியத் தகுதி, problem solving skills எனப்படும் பிரச்னைகளுக்கேற்ப முடிவெடுத்துச் செயல்படும் திறன். நேர்முகத் தேர்வு சமயம் மாணவர்கள் முன்வைக்கப்படும் பிரச்னையைத் தீர்க்க, அவர்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், என்ன மாதிரியான வியூகங்களை அமைக்கிறார்கள் என்பதைத்தான் கவனிப்பார்கள்.
ஒரு பிரச்னைக்கு எத்தனை விதத் தீர்வுகள் இருக்க முடியும், அவற்றை அந்த மாணவர் கச்சிதமாக விஷுவலைஸ் செய்கிறாரா, எல்லாத் தரப்புகளையும் கவனத்தில் கொள்கிறாரா, ஒரு கடினமான பெரிய பிரச்னையை சிறுசிறு பிரச்னைகளாகப் பிரித்துக்கொள்கிறாரா என்பதெல்லாம் அதில் அடங்கும்.
இதுவரையில் நீங்கள் சேகரித்த அனுபவங்கள், ஆளுமையின் பிரதிபலிப்புகளைத்தான் கேம்பஸ் இன்டர்வியூக்களில் சோதிப்பார்கள்.
அதனால் எந்தப் பதற்றமும் பரபரப்பும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். நிச்சயம் ஜெயிப்பீர்கள்!'' என்று நம்பிக்கை வார்த்தைகள் சொல்கிறார் ஸ்ரீராம்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவி அதியா. முன்னணி ஐ.டி. நிறுவனம் ஒன்றின் ஹெச்.ஆராக இருக்கும் இவரின் கருத்துக்கள் மாணவர்களுக்கு இன்னும் அதிக வைட்டமின் நம்பிக்கை அளிக்கிறது.
'"Learn,unlearn,releam என்பதுதான் தற்போதைய ஐ.டி. நிறுவன ஊழியரின் மாடல்.
நீங்கள் உங்கள் குழுவினரோடு இணைந்து நன்றாக வேலை செய்யக்கூடியவரா, தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகளைவிட, குழுவின் வெற்றி தான் முக்கியம் என்று செயல்படுபவரா என்றெல்லாம் கவனிப்பார்கள். இதை team dynamics என்பார்கள்.
கேம்பஸ் இன்டர்வியூவில் உங்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது அநேகமாக நீங்கள் உங்கள் சுயவிவரக் குறிப்புகளாக வழங்கும் 'ரெஸ்யூம்'தான்.
அதில் நீங்கள் உங்களைப்பற்றிக் குறிப்பிடும் ஒவ்வொரு வார்த்தையிலும் கவனமாக இருங்கள்.
உதாரணமாக, ஜாவாவில் ஏதேனும் கோர்ஸ் படித்திருப்பதாக உங்கள் ரெஸ்யூமில் தகவல் இருந்தால், நிச்சயம் ஜாவா தொடர்பான ஏதேனும் ஒரு கேள்வி உங்கள் நேர்முகத் தேர்வில் இடம்பெறும்.
நேர்முகத் தேர்வுக்கு அணிந்து செல்லும் உடை விஷயத்தில் கவனமாக இருங்கள். கவனத்தை ஈர்க்கும் பளீர் நிறங்கள், புதிய ஆடைகளைத் தவிர்ப்பதே நல்லது.
இன்டர்வியூவில், பெரும்பாலும் அவர்களின் முதல் கேள்விக்கான உங்கள் பதிலில் இருந்தே இரண்டாவது கேள்வியைக் கேட்பார்கள்.
தெரியாத கேள்விகளுக்குத் 'தெரியாது' என்று தைரியமாகச் சொல்லுங்கள்.
கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, உங்களை இன்டர்வியூ செய்பவரின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
இன்டர்வியூவின் ஆரம்பத்தில் நேரத்துக்கு ஏற்றாற்போல, 'குட் மார்னிங்', 'குட் ஆஃப்டர்நூன்' சொல்லுங்கள். முடிவில் நன்றி கூறுங்கள்.
சிலர் 'என் கேள்விகளைக் கேட்டுவிட்டேன். எனக்காக உங்களிடம் ஏதாவது கேள்விகள் இருக்கின்றனவா?' என்றுகூடக் கேட்பார்கள். அந்த இடத்தில் ஏதேனும் கேட்பதாக இருந்தால், முன்பே அது என்ன என்று முடிவுசெய்துவிடுங்கள்.
இல்லையென்றால், 'நோ தேங்க்ஸ்' சொல்லி விடைபெறுங்கள். சின்னப் புன்னகை, பெரிய நம்பிக்கையோடு எதிர்கொண்டால் கேம்பஸ் இன்டர்வியூக்களில் எளிதில் சாதிக்கலாம்!'' என்கிறார் அதியா.
சமீபத்திய கேம்பஸ் இன்டர் வியூக்களில் பிரபல கம்பெனி களில் ப்ளேஸ் ஆகியிருக்கும் சில மாணவர்களின் சக்சஸ் டிப்ஸ் :
விஜித்தா (டெலாய்ட் கன்சல்ட்டிங் - வருடச் சம்பளம் 5 லட்சம் ரூபாய்):
''இன்டர்வியூவில் எல்லாரும் ஃப்ரெண்ட்லியாதான் பேசினாங்க. பாதி இன்டர்வியூவில் ஸ்நாக்ஸ் கொண்டுவந்து வெச்சாங்க. என்னையும் சாப்பிடச் சொன்னாங்க. 'வேண்டாம்'னு நான் சொன்னாலும் கம்பெல் பண்ணாங்க. நான் ஒரு வாய் சாப்பிட ஆரம்பிச்சதும், உடனே அடுத்த கேள்வியைக் கேட்டாங்க. ஆனா, நான் பொறுமையா வாய்ல இருந்த ஸ்நாக்ஸை சாப்பிட்டு முடிச்சுட்டுத்தான் அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னேன். பதில் சொல்லி முடிச்சதும் 'குட்'னு சொன்னாங்க. அது நான் சொன்ன பதிலுக்கு இல்லை. அந்த மாதிரி இக்கட்டான சூழ் நிலையில் நாம எப்படி நடந்துக்குறோம்னு பார்க்கிறதுக்காகத்தான் அப்படி நடந்துப்பாங்களாம்!''
சௌபர்ணிகா (அமேசான், வருடச் சம்பளம் 9.5 லட்சம்):
''அமேசான் கம்பெனிபத்தி எனக்கு என்ன தெரியும்னு கேட் டாங்க. எனக்குத் தெரிந்த சில தகவல்களை மட்டும் சொன்னேன். 'அவ்வளவுதான் தெரியுமா?'ன்னு கேட்டாங்க. நான் இன்டர்வியூ பதற்றத்தில், அவங்களே அவங்க கம்பெனிபத்தி விளக்கியதைக் கவனிக்கலை. 'அமேசான்ல வேலை கிடைச்சுட்டா, நீங்க கம்பெனிபத்தி சொல்லாத இன்னும் பல விஷயங்களையும் தெரிஞ்சுக்குவேன்'னு சொன்னேன். சிரிச்சுட்டே அடுத்த கேள்விக்குப் போயிட்டாங்க. ரிசல்ட் வந்தப்போ நான் அமேசான்ல ப்ளேஸ்டு!''
வாசு (காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், வருட வருமானம் 3.01 லட்சம் ரூபாய்):
''நான் பெரிய படிப்ஸ்லாம் கிடையாது. ரிட்டன் எக்ஸாமுக்கு முந்தின நாள்தான் சில ஃபார்முலாக்களையே படிச்சேன். காலேஜ் வெரைட்டி ஷோ டீம்ல நானும் ஒரு பெர்ஃபார்மர். எங்க காலேஜ் டெக்னாலஜி திருவிழாவான குரு«க்ஷத்ராவில் மார்க்கெட்டிங் கோர் மெம்பரா இருக்கேன். அந்த அனுபவங்களைப்பத்தி மட்டுமே அரை மணி நேரம் பேசினாங்க. இப்போ வேலை கன்ஃபார்ம்டு!''
ராம்நாத் (கேட்டர்பில்லர், வருட வருமானம் 6.17 லட்சம் ரூபாய்):
''ரெண்டு ரவுண்ட் குரூப் டிஸ்கஷன். '20 வருஷம் கழிச்சு இந்தி யாவில் அரிசி இறக்குமதி பண்றாங்க. இதுபத்தி உங்க கருத்து என்ன?', 'இந்தியாவில் கார்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?'னெல்லாம் கேட்டாங்க. இப்படியெல்லாம் கேட்டாலும் கேட்பாங்கன்னு ஒரு வாரமா தான் பேப்பர் படிக்க ஆரம்பிச்சேன். அதனால அது சம்பந்தமான விஷயங்களைச் சொல்லிச் சமாளிச்சேன்!''
சந்தியா (சி.டி.எஸ்., வருட வருமானம் 3.01 லட்ச ரூபாய்):
''என் இன்டர்வியூவர் பக்கத்தில் நான் போய் நின்னதும், அவர் ஸ்நாக்ஸை எடுத்துச் சாப்பிட ஆரம்பிச்சுட்டார். என்ன செய்யறதுன்னு தெரியாம நான் சும்மா நின்னுட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு அவரே என்னை உட்காரச் சொல்லிட்டு, 'டெல் மீ அபவுட் யுவர்செல்ஃப்'னு ஆரம்பிச்சார். அந்தக் கேள்விக்கு கண்ணாடி முன் 15 தடவையாவது ரிகர்சல் பார்த்திருப்பேன். அதனால, தெளிவா, நிதானமாகச் சொல்லிமுடிச்சேன். டெக்னிக்கலான கேள்விகளில் பதில் தெரியாத கேள்விகளுக்குத் 'தெரியலை'னு சொல்லிட்டேன். என்னை செலெக்ட் பண்ணிட்டாங்க!''
அகிலா (எல் அண்ட் டி, வருட வருமானம் 3.3 லட்சம் ரூபாய்):
''நான் அட்டெண்ட் பண்ண ஒவ்வொரு கம்பெனிக்கு ஏத்த மாதிரி தனித்தனி ரெஸ்யூம் தயாரிச்சிருந்தேன். எங்க வீட்ல அம்மா பேரையும் இனிஷியல்ல போடுவாங்க. 'இப்போதானே அதுக்குச் சட்டம் வந்திருக்கு. நீங்க எப்படி இத்தனை வருஷம் முன்னாடி இருந்தே இனிஷியல் யூஸ் பண்றீங்க?'ன்னு கேட்டாங்க. ரொம்ப ஃப்ரெண்ட்லியான இன்டர்வியூதான் எனக்கு அமைஞ்சது!''
எதிர்காலத்தில் கேம்பஸ் இன்டர்வியூக்களின் போக்கு குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரான மன்னர் ஜவஹரிடம் பேசியபோது, ''இந்த வருடம் இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும் நான்கு கல்லூரிகளில் 1,350 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு இன்னும் அதிக அளவில் மாணவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
எந்த நிறுவனத்தின் இன்டர்வியூவுக்குச் செல்கிறீர்களோ, அந்த நிறுவனத்தின் பணியில் இருக்கும் சீனியர் எவரையாவது தொடர்புகொண்டு, டிப்ஸ் கேட்கத் தவறாதீர்கள்.
கிராமப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் ஒரு துளியும் தாழ்வாக எண்ண வேண்டாம்.
சொல்லப்போனால், நம்பிக்கை, பற்று, விசுவாசம் ஆகியவை கிராமப்புற மாணவர்களிடம்தான் அதிகம் இருக்கும் என்று எம்.என்.சி நிறுவனங்கள் நம்புகின்றன.
இவர்கள் எதிராளியிடம் தைரியமாகப் பேசும் தகுதியை மட்டும் வளர்த்துக் கொண்டால், மிகச் சுலபமாக வேலைவாய்ப்பு பெற்றுவிடலாம்!'' என்கிறார்.
நண்பர்களே... உங்கள் வளமான எதிர்காலத்துக்கு ஆல் தி பெஸ்ட்!
இன்டர்வியூ தினத்தன்று கடைப்பிடிக்க வேண்டியவை! 1) ஆடைகள் மிகவும் புரொஃபஷனலாக இருக்க வேண்டும். ஷு, ஹேர்ஸ்டைல், பெல்ட் போன்றவற்றிலும் கவனம் அவசியம். 2) உங்கள் ரெஸ்யூமில் இருக்கும் எந்த வார்த்தையில் இருந்து கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல ஆயத்தமாக இருங்கள். 3) கையில் ஒரு பேனா, வெள்ளை பேப்பர் வைத் திருங்கள். 4) இன்டர்வியூ அறைக்குள் நுழைந்ததும், வணக்கம் சொல்லி, அமரச் சொன்ன பிறகே அமருங்கள். முடிவில் நன்றி கூறி விடைபெறுங்கள். 5) அமர்ந்தவுடன் நீங்களே பேச ஆரம்பித்துவிடாதீர்கள். கேள்விகள் கேட்கப்படும் வரை புன்னகையுடன்பொறுமை யாக இருங்கள். 6) ஒரு கேள்விக்குத் தெரியாது என்று கூறினாலும், அடுத்த கேள்விக்கு ஆர்வம் குறையாமல் பதில் கூறுங்கள். 7) சிறிய புரொகிராம் அல்லது விளக்கப் படம் வரையச் சொன்னால், பயந்துவிடாமல் சும்மாவேனும் முயற்சியுங்கள். 8) பேனாவை விரல்களில் சுழற்றுவது, காலாட்டுவது, மேஜை மேல் இருக்கும் பொருட்களை நோட்டமிடுவது போன்றவை வேண்டாம். 9) ‘டெல் மீ அபவுட் யுவர்செல்ஃப்’ என்பதுதான் கிட்டத்தட்ட அனைத்து இன்டர்வியூக்களின் முதல் கேள்வியாக இருப்பதால், அதற்குப் பக்காவாகத் தயாராகிக்கொள்ளுங்கள். 10) எக்காரணம்கொண்டும் இன்டர்வியூ தினத் தன்று சாப்பிடாமல் செல்லாதீர்கள். சமயங்களில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தால், உங்கள் முறை வரும்போது சோர்வாக உணர்வீர்கள்! |
மூலம் : ஆனந்த விகடன் (நன்றி)
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
படிக்கறது எதுக்கு.. அறிவை வளர்த்துக்கன்னு சிலபேரு சொல்வாங்க. அது உண்மைதான். அதேநேரம் படிப்புக்கு செலவழிக்கிற காசையும் திரும்ப எடுக்கனுமே..
ஒரு இண்டர்வியூவுக்கு போறதுங்கறது, நம்மளை நாமளே மார்க்கெட்டிங் பண்றதுமாதிரி. ஒருத்தர் நம்மக்கிட்ட ஒரு எலெக்ட்ரானிக் பொருளை விற்குகுறாரன்னு வைங்க. பார்த்த உடனே வாங்கிடுவோமா..? எவ்ளோ நாள் உழைக்கும், நல்லா ஓடுமா, வாரெண்டி இருக்கா, அப்படீன்னு எத்தனை கேள்வி கேப்போம் ? அது மாதிரிதான் நம்மளை வேலைக்கு எடுக்கற கம்பெனியும. நாம நல்லா வேலை செய்வோமா, கம்பெனிக்கு நம்பிக்கையா இருப்போமா அப்படின்னு பல மேட்டர்களையும் பார்த்துதான் நமக்கு வேலையும், சம்பளமும் தராங்க.பொருளை கடைக்காரர் நம்மக்கிட்ட விற்பதற்கு முதல் படி, ஷோரூம் நல்லாருக்கனும், நல்ல ஏ.சி. இருக்கனும், கடை பார்க்க நல்ல லுக்கா இருக்கனும். அப்பதானே கடைக்குள்ள நாம போவோம். அதுமாதிரி, நம்ம ரெஸ்யூம் சும்மா 'நச்'னு இருந்தாத்தான், இந்த கேண்டிடேட்டை கூப்புடலாமான்னு யோசிப்பாங்க. மொக்கையா ஒரு ரெஸ்யூமை அனுப்பிட்டு, 'என்னடா இந்த கம்பெனிக்காரன் இன்னும் கூப்புடலையே'னுன்னு தேவுடு காக்குறதுல அர்த்தமில்லை.
மேட்டருக்கு வருவோம். எல்லா ப்ரெஷ்ஷர் ரெஸ்யூமும் ஒரே மாதிரி இருக்கனும்னு அவசியம் இல்ல. ஒரு நல்ல 'சரக்கான' ரெஸ்யூம, அது பிரெஷ்ஷர் ரெஸ்யூமா இருந்தாலும் சரி, எக்ஸ்பீரியன்ஸ் போட்டிருந்தாலும் சரி, கில்லியா இருக்கும். இண்டர்வியூவுக்கு முன்னாலயே, நம்மளோட நேர்த்தியான ரெஸ்யூமால இம்ரஸ் அள்ளிடலாம்.
ஒரு நல்ல ரெஸ்யூம்ல இருக்க வேண்டிய மேட்டர்ஸ்.
1. உருப்புடியான "Objective"
2. நல்ல டேபிள்ல அழகா அலைன் செய்யப்பட்ட "Qualification" டீட்டெயில்ஸ்
3. நேரடியா என்ன தெரியும், என்ன தெரியாதுன்னு சொல்ற "Skills and Experiences"
4. ஏற்கெனவே வேலை பார்த்திருந்தா அந்த "Work History"
5. ஏதாவது நல்ல "Trainings" , அப்புறம் "Education Extra" மேட்டர்ஸ்
6. படிப்ப விட வேற எதுவும் தெரிஞ்சிருந்தா "Extra Carricular Activities", "Interesting Hobbies"
7. பர்ஸனல் டீட்டெயில்ஸ் - டாடி மம்மி பேரு, மெரிட்டல் ஸ்டேட்டஸ், பர்த் டே, பாஸ்போர்ட், போன் நம்பர்ஸ், அட்ரஸ்
அப்புறம் ரெஸ்யூமை வித்யாசப்படுத்துறேன்னு ஏதாவது மொக்கையா எழுதி வைக்காம, நீட் அண்ட் க்ளீனா இருக்கமாதிரி பார்த்துக்கோங்க.
பாஸ்போட் சைஸ் கலர் போட்டோவை ஸ்கேன் பண்ணி ரெஸ்யூமுக்கு மேலே டாப்புல ஒரு கட்டம் கட்டி வச்சீங்கன்னா நல்லா இருக்கும். ரெஸ்யூம்ல எதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வராம பார்த்துக்கோங்க.
ரெஸ்யூமை பார்மேட் பண்ணும்போது இடம் விடவேண்டிய இடங்களில் ஸ்பேஸ் பாரை அழுத்தி அழுத்தி இடம் விட்டீங்கன்னா, திரும்ப ரெஸ்யூமை வேற ரெஸல்யூஷன் இருக்க கம்ப்யூட்டர்ல ஓப்பன் பண்ணி பார்த்தா ரொம்ப மொக்கையா இருக்கும். அதனால டேப் (TAB) கீயை யூஸ் பண்ணுங்க. எஜுக்கேஷனல் குவாலிபிகேஷனுக்கும், ஸ்கில்ஸுக்கும் எம்.எஸ். வேர்ட்ல இருக்க டேபிள் யூஸ் பண்ணுங்க, நல்லா இருக்கும். ஒரு சில கம்பெனிகள் எல்லா செமஸ்டர் மார்க்கும் கேப்பாங்க. அதனால செமஸ்டர் வைஸ் மார்க் டிஸ்ப்ளே பண்ணுங்க.
ஏரியல், டைம்ஸ் நீயூ ரோமன், வெர்டனா மாதிரி காமன் பாண்ட்ஸ் யூஸ் பண்ணுங்க. உங்க ரெஸ்யூமுக்கு ஒரு பிளஸண்ட் லுக் கிடைக்கும். அதிகபட்சமா ரெண்டு பக்கம் இருந்தா போதும். அதிக பக்கம் இருக்க ரெஸ்யூமை ரிவ்யூ பண்றவங்களுக்கு / ஹெச்.ஆர் டீமுக்கு சலிப்பை வரவெச்சுரும். ஒவ்வொரு பக்கத்துலயும் பேஜ் நெம்பர் வர்ரமாதிரி பார்த்துக்கோங்க.
'ரெபரன்ஸ்' அப்படீன்னு கடைசியில ஒரு Section போட்டு, அதுல காலேஜ் ஹெச்.ஓ.டி. பேரை போடுறது, அமெரிக்காவுல இருக்க மாமா பையன் பேரை போடுறது எல்லாம் அவுட் ஆப் பேஷன். அதை எல்லாம் இப்ப போட்டு ரெஸ்யூமை கலீஜ் பண்ணாதீங்க. அப்புறம் கடைசியா கவரிங் லெட்டர் அப்படீன்ற காண்ஸெப்ட் இப்ப இல்லாம போயிருச்சு. அதனால அதெல்லாம் வேலை மெனக்கட்டு டைப்பிக்கிட்டு இருக்காதீங்க.
Your Resume is a Visiting Card for your Job Search !
சும்மா 'நச்' னு ஒரு ரெஸ்யூமை போட்டு உங்களோட கேரீயரை 'கில்லியா' ஆரம்பிங்க.
வாழ்த்துக்கள்!

அம்மா, அப்பாவுக்குக் கூட பயப்பட மாட்டோம், 'இண்டர்வியூ'ங்குற ஒரு வார்த்தையை கேட்டவுடனே அடி வயித்துல 'லகலகலக'தான். இண்டர்வியூல போய் உட்கார்ந்த உடனே நாக்குல தண்ணி எல்லாம் வத்திப்போயி, 'பே..பே..'ன்னு ஊமை மாதிரி நாம பேச, இண்டர்வியூ எடுக்கறவர் நமக்கு பெப்பே காட்டிட்டு வேற ஆளை செலக்ட் பண்ணிடுவார். இத்தனைக்கும் நமக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும். நம்மளை விட 'சரக்கு' கம்மியா, பர்ஸண்டேஜ் கம்மியா, கம்யூனிக்கேஷன் ஸ்கில் கம்மியா இருக்குற ஒருத்தர் அந்த வேலையை கொத்திட்டு போயிடுவார். அப்ப நாம என்ன தப்பு பண்ணினோம்..? 'தவறான பாதையில் வேகமாக ஓடி என்ன பயன்..?' அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு... அதேதான். ஏன் நமக்கு மட்டும் இண்டர்வியூ ஊத்திக்கிது..? நெட்வொர் புக்கை பிரிச்சு மேஞ்சிருப்போம், நெட்வொர்க்கிங் பேப்பர்ல 90% தூக்கியிருப்போம். ஆனா இண்டர்வியூவுல "வாட் ஈஸ் த செவன் லேயர்ஸ்" னு கேட்டாங்கன்னா, நாக்கு மேல் அண்ணத்துல ஒட்டிக்கும். அரை மணி நேரம் பேருக்கு கேள்விகளை கேட்டுட்டு, 'எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்'னு நம்மளை வெளிய அனுச்சுட்டு, வேற யாராவது மொக்கைக்கு ஆஃபரை கொடுத்துருவாங்க. எப்படி இதை சரி செய்யறது..? 1.நேரத்துக்கு போயிடனும். 9 மணிக்கு இண்டர்வியூன்னா 8 மணிக்கே கில்லியா இண்டர்வீயூ ஹால் முன்னாடி இருந்தோம்னா, தேவையில்லாத டென்ஷனை தவிர்க்கலாம். 2. அழுக்கு ஜீன்ஸ் எல்லாம் ஊர் சுத்த ஓ.கே. இண்டர்வியூவுக்கு நல்ல தூய்மையான ட்ரெஸ் போட்டுட்டு போங்க. 3. தன்னம்பிக்கையோடவும், சிரிச்ச முகத்தோடவும் (பயத்தை வெளிய காட்டக்கூடாதுல்ல...) இண்டர்வியூ பண்றவங்களை எதிர்கொள்ளுங்க. (அதுக்காக 'அடிக்கடி' சிரிச்சுக்க வேணாம்). 4. கேள்வி கேட்டா மட்டும் பதிலை ஆரம்பிங்க. இண்டர்வியூ ரூம்குள்ள போனவுடனே, 'ஐயாம் சங்கீதா அண்டு ஐ ஹாவ் ஒன் ஃபாதர் அண்ட் ஒன் மதர்'னு ஆரம்பிக்க வேணாம். 5. உங்க எக்ஸாம்பிள்ஸ்/ பதில் கேள்விக்கு ரிலேட்டிவ்வா இருக்கட்டும். அவசியமில்லாத விஷயங்களை அள்ளிவிட வேண்டாம். 6. உடல் மொழின்னு ஒன்னு இருக்கு. அதாங்க பாடி லாங்வேஜ். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வைன்னு நம்ம பழங்காலத்துலயே பாடி லாங்வேஜ் பத்தி 'பாடி' வெச்சிருக்காங்க நம்ம புலவர்கள். ஐ காண்டாக்ட் (Eye Contact) ரொம்ப முக்கியம். இண்டர்வியூ எடுக்கறவங்களை நேரா பார்த்து பேசுங்க. எங்கேயோ வானத்தை பார்த்துக்கிட்டு பதில் சொல்ல வேண்டாம். 7. நல்லா கம்பர்ட்டபிளா சேர்ல உட்காருங்க. ரொம்ப மரியாதை கொடுக்கறமாதிரி, சேர் நுனியில உக்கார்ந்து, அப்புறம் கீழ விழுந்துட போறீங்க. அதுக்காக வீட்டு ஹால்ல டி.வி. பார்க்குற மாதிரி கால் கால் தூக்கிப் போட்டுகிட்டும் உட்கார வேண்டாம்.நீங்க உட்கார்ந்திருக்க தோரணையிலயே உங்க தன்னம்பிக்கை வெளிப்படனும். 8. இண்டர்வியூல எப்போதும் பாசிட்டிவ்வா பேசுங்க. 'உங்க க்ளாஸ்ல எத்தனை பேர் பெயில்?'னு கேட்டா, எத்தனை பேர் பாஸ்னு பதில் சொல்லனும். அதுக்காக மறுத்து பேசக்கூடாதுன்னு இல்ல. நீங்க முழுமையா நம்புற ஒரு விஷயத்தை இண்டர்வியூ பண்றவர் தப்புன்னு சொன்னா தயங்காம அதை மறுத்துப் பேசலாம். 'ஆமாம் சாமி' கோஷ்டிகளை விட நல்லா விவாதம் செய்பவர்களையே கம்பெனிகள் விரும்பும். 9. எந்த கேள்விக்கும் தயங்கி, தயங்கி பதில் சொல்லாதீங்க. தெரியும்னா தெரியும், தெரியாதுன்னா தெரியாது. தலையை ஒன்னு ஆமான்னு ஆட்டுங்க, இல்லைன்னா இல்லைன்னு ஆட்டுங்க. ரெண்டு பக்கமும் ஆட்டி குழப்(ம்)பாதீங்க. இது உங்களோட தன்னம்பிக்கையை சோதிக்கும் முக்கியமான டெஸ்ட். 10. 'நீங்க ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா?' என்று கேட்டா, கண்டிப்பா உங்களுக்கு தோன்றியதை கேளுங்க. 'இன்னைக்கு புதன் கிழமைதானே'னு டுபுக்கு கேள்விகளா கேட்காம, உருப்புடியா 'இந்த நிறுவனத்தில் என்னுடைய வேலை என்னவாக இருக்கும்?' அப்படிங்குற மாதிரி கேளுங்க. 11. உங்களை போகச்சொன்னவுடன் 'நன்றி' சொல்லிட்டு, வெளிய வாங்க. கடைசி ட்ரிக்: இண்டர்வியூ நடக்கும்போது நீங்க கம்பர்ட்டபுளா இல்லைன்னு நினைச்சீங்கன்னா ஒரு க்ளாஸ் தண்ணீர் கேளுங்க. அவங்களும் ஒரு காலத்துல இண்டர்வியூ அட்டர்ண் பண்ணவங்கதான். கண்டிப்பாக உதவுவாங்க. நீங்களும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்க நேரம் கிடைக்கும். இண்டர்வியூவர் மைண்ட் செட் சரியில்லைன்னா (அவர் ஏதாவது பர்சனலா ஓகேவா இல்லைன்னா...) இந்த சின்ன கேப் அதை சரி பண்ண உதவும். இந்த கார்டும் ஒர்க் அவுட் ஆகலைன்னா, இந்த ஏஸ் கார்டை போட்டுப் பார்க்கலாம். வாழ்த்துக்கள்! |
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
நன்றி! நன்றி! நன்றி!
- sweetgeeபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 01/07/2009
Very nice and useful ...Ida padichadum enakkey next job ready aaganum nu mind la vanthuruchi...Hats off....
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
சொல்லப்போனால், நம்பிக்கை,
பற்று, விசுவாசம் ஆகியவை கிராமப்புற மாணவர்களிடம்தான் அதிகம் இருக்கும்
என்று எம்.என்.சி நிறுவனங்கள் நம்புகின்றன.
Very nice article:)
பற்று, விசுவாசம் ஆகியவை கிராமப்புற மாணவர்களிடம்தான் அதிகம் இருக்கும்
என்று எம்.என்.சி நிறுவனங்கள் நம்புகின்றன.
Very nice article:)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1