புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய பாதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 03, 2022 8:15 pm

புதிய பாதை! 261021299_2104453176368589_4265475359164042800_n.jpg?_nc_cat=106&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=yDix5B-PD9MAX8CK1W1&_nc_ht=scontent.fmaa3-2
-

புதிய பாதை


"ஏங்க, நம்ம பையனும், பெண்ணும் பம்பாய், டில்லின்னு
செட்டில் ஆயிட்டாங்க. அவங்க யாரும் இந்த கிராமத்துக்கு
வரப்போறதுல்ல. நமக்கும் வயசாயிக்கிட்டே வருது.

இப்ப எதுக்கு இந்தத் தோட்டத்தை வாங்கறீங்க? நமக்கு
அப்புறம் யார் இந்த ஊருக்கு வந்து இந்தத் தோட்டத்தைப்
பராமரிக்கப் போறாங்க?" என்றாள் அகிலா.

"ஆத்தங்கரைப் பக்கத்தில அமைஞ்சிருக்கிற அருமையான
இடம் அது. பெரிய தோட்டம். வாழை மரம், தென்னை மரம்,
மாமரம், கொய்யா மரம்னு நிறைய மரங்கள் இருக்கு.
பொன்னுசாமி உயிரோட இருக்கறப்பவே கேட்டேன். அவர்
கொடுக்க மாட்டேன்னுட்டாரு.

இப்ப அவர் போனதும், வெளியூர்ல இருக்கற அவர் பையங்க
எல்லா சொத்தையும் விக்கப் போறதாகச் சொன்னதால
அந்தத் தோட்டத்தை நாம வாங்கலாம்னு நினைச்சேன்"
என்றார் கணபதி.

"அதான் எதுக்குன்னு கேக்கறேன். நமக்கு இருக்கிற
நிலபுலன்களை நாம பாத்துக்கிட்டாய் போதாதா?"
"ஒரு நல்ல முதலீடா இருக்கட்டுமேன்னுதான்" என்றார்
கணபதி.

"நீங்க இப்படியெல்லாம் முதலீடு, லாபம்னு அலைய ஆள்
இல்லையே?" என்றாள் அகிலா கொஞ்சம் வியப்புடன்.
கணபதி பதில் சொல்லவில்லை.
சில நாட்களில் கணபதி அந்தத் தோட்டத்தை வாங்கி விட்டார்.
-
பத்திரப் பதிவு முடிந்த சில நாட்களில், கணபதி தோட்டத்தின்
மத்தியில் ஒரு பாதையை அமைத்து இரண்டு புறமும் வேலி
கட்டினார். அதற்குப் பிறகு, தோட்டம் மூன்று பகுதிகளாகக்
காட்சி அளித்தது. இரண்டு புறமும் வேலிக்குள் தோட்டங்கள்,
நடுவில் ஒரு பாதை என்று.
"எதுக்கு இப்படிப் பண்றீங்க?" என்றாள் அகிலா.
-
"தோட்டத்துக்கு நடுவில, ரெண்டு மூணு பேர் நடந்து போற
அகலத்துக்கு ஒரு பாதை அமைச்சிருக்கேன்" என்றார் கணபதி.
"அதான் எதுக்குன்னு கேக்கறேன்?'
-
"அகிலா! தோட்டத்துக்கு ஒரு பக்கம் ரோடு இருக்கு. இன்னொரு
பக்கம் ஆத்தங்கரை. நம் ஊர்ப்பெண்கள் ஆத்துக்குத் தண்ணி
எடுக்கப் போகறப்ப கிட்டத்தட்ட ஒரு மைல் சுத்திப் போக வேண்டி
இருக்கு. இப்ப நம் தோட்டத்துக்கு நடுவில இருக்கற பாதை வழியா
அவங்க ஆத்துக்குப் போகலாம். ஒரு மைல் சுத்திப் போக வேண்டி
இருக்காது."
-
"அது எப்படி? அது நம் நிலமாச்சே! அது வழியா ஊர்க்காரங்கல்லாம்
எப்படிப் போக முடியும்?"
-
"அதுக்குத்தான் தோட்டத்தை மூணாப் பிரிச்சு, ரெண்டு பக்கம்
தோட்டம், நடுவில பாதைன்னு உண்டாக்கி இருக்கேன். அந்தப்
பாதையை இந்த ஊர்ப் பஞ்சாயத்து பேர்ல பதிவு பண்ணிடப்
போறேன். அப்புறம் அது ஊருக்குப் பொது இடமா ஆயிடும்.
அதில யார் வேணா நடந்து போகலாம்."
-
"ஏங்க, நம்ப நிலத்தில, இருநூறு முன்னூறு சதுர அடி பொதுவுக்குப்
போயிடுமே! காசு கொடுத்து நிலத்தை வாங்கிட்டு எதுக்கு இப்படி
தானம் பண்றீங்க?" என்றாள் அகிலா சற்று வருத்தத்துடனும்,
கோபத்துடனும்.

"நம் ஊர் ஜனங்க, குறிப்பா பெண்கள் குளிக்கவும், தண்ணி எடுக்கவும்
ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தடவை ஆத்துக்குப் போறாங்க.
ஒவ்வொரு தடவையும் ஒரு மைல் தூரம் சுத்திப் போக வேண்டி இருக்கு.
வெயில், மழைன்னு பாக்காம தண்ணிக் குடத்தைத் தூக்கிக்கிட்டு
சின்னவங்க, பெரியவங்க, வயசானவங்க, உடம்பு சரியில்லாதவங்கன்னு
எல்லாரும் கஷ்டப்படறதை பாக்க எனக்கு எப்பவுமே மனசுக்குக் கஷ்டமா
இருக்கும்.

"பொன்னுசாமி கிட்ட இந்தத் தோட்டம் இருந்தப்ப, தோட்டத்துக்கு
நடுவில ஜனங்க ஆத்துக்குப் போக ஒரு பாதை போட்டுக் கொடுக்கச்
சொல்லி அவர்கிட்ட கேட்டேன். அவரு ஒத்துக்கல. சரி, நாம தோட்டத்தை
விலைக்கு வாங்கி, பாதை அமைச்சு கொடுக்கலாம்னு நினைச்சு
அவர்கிட்ட தோட்டத்தை விலைக்குக் கேட்டேன். அவரு கொடுக்க
மாட்டேன்னுட்டாரு.

இப்ப அவர் இறந்ததும், அவர் பசங்க அதை விக்கறாங்கன்னதும்,
அதை வாங்கி நான் நினைச்ச மாதிரி ஊர் ஜனங்களுக்குப் பாதை
போட்டுக் கொடுத்திருக்கேன்!" என்றார் கணபதி.

"நாம நம்ம வீட்டுக் கிணத்துத் தண்ணியைத்தான் பயன்படுத்தறோம்.
நீங்களோ நானோ தண்ணி எடுக்கவோ, குளிக்கவோ ஆத்துக்குப்
போறதில்ல. யாரோ கஷ்டப்படறாங்கங்கறதுக்காக இப்படி ஒரு
காரியத்தைப் பண்ணி இருக்கீங்க?" என்றாள் அகிலா வியப்புடனும்,
பிரமிப்புடனும்.

"கஷ்டப்படறது மத்தவங்களா இருந்தா என்ன? அவங்களோட
கஷ்டத்தை நம்மால உணர முடியாதா? அதுக்கு நாம எதுவும் செய்யக்
கூடாதா?" என்றார் கணபதி.
-
நீதி :
-
பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல் ஒருவன் உணர்ந்து நடந்து
கொள்ளாவிட்டால், அவனுடைய அறிவினால் அவனுக்கு என்ன பயன்?
-
நன்றி: முகநூல்- லட்சம் கதைகள்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக