ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொல்லியல் துறை அறிவிப்புகள்... 'சமத்துவ நாள்' அறிவிப்பு எல்லாம் முழுதும் ஹிந்தியில்!

Go down

தொல்லியல் துறை அறிவிப்புகள்... 'சமத்துவ நாள்' அறிவிப்பு எல்லாம் முழுதும் ஹிந்தியில்! Empty தொல்லியல் துறை அறிவிப்புகள்... 'சமத்துவ நாள்' அறிவிப்பு எல்லாம் முழுதும் ஹிந்தியில்!

Post by ayyasamy ram Mon Apr 18, 2022 6:19 am

தொல்லியல் துறை அறிவிப்புகள்... 'சமத்துவ நாள்' அறிவிப்பு எல்லாம் முழுதும் ஹிந்தியில்! Tamil_News_large_3008857
-
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில்,
'தொல்லியல் துறை அறிவிப்புகள்; சமத்துவ நாள் அறிவிப்பு' என,
எல்லாம் ஹிந்தியில் வெளியிடப்படுகின்றன. '

தமிழகத்தில் ஹிந்தியை அனுமதிக்க மாட்டோம்' எனக் கூறும் தமிழக அரசு,
அதன் அறிவிப்புகளை ஹிந்தியில் வெளியிடுவது, மக்களிடையே
குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், இரு மொழிக் கொள்கை
பின்பற்றப்படுகிறது. மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசிய
கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

'தமிழ், ஆங்கிலம்' என, இரு மொழிக் கொள்கையில் இருந்து மாற மாட்டோம்
என, தமிழக அரசு உறுதியாக அறிவித்து விட்டது.முதல்வர் காட்டம்சமீபத்தில்,
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஆங்கிலத்துக்கு பதில் ஹிந்தி
மொழியை பயன்படுத்துங்கள்' எனக் கூறியதற்கு, 'ஆங்கிலத்துக்கு பதிலாக
ஹிந்தியை பயன்படுத்துங்கள் என மத்திய உள்துறை அமைச்சர் சொல்வது,

இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். 'இந்தியாவின்
பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை, பா.ஜ., தலைமை தொடர்ந்து
செய்கிறது' என முதல்வர் ஸ்டாலின் சாடினார்.மேலும், 'ஹிந்தி மாநிலங்கள்
போதும். இந்திய மாநிலங்கள் தேவையில்லை என அமைச்சர் அமித் ஷா
நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது, ஒற்றுமைக்கு உதவாது.

ஒற்றைத் தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது' என,
அவர் காட்டமாக தெரிவித்தார்.

குழப்பம்

தமிழகத்தில் ஹிந்தியை அனுமதிக்க மாட்டோம் எனக் கூறிக் கொண்டே,
தமிழக அரசு அறிவிப்புகள் ஹிந்தியில் வெளியிடப்படுவது, பொதுமக்களிடம்
கடும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு இந்தாண்டு பிப்., 11ல்,தமிழகத்தில் நடந்து வரும் தொல்லியல்
அகழாய்வு குறித்த தகவலை, அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ள
வசதியாக, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியிட்டது.

வழக்கமாக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை, சமூக வலைதளங்களில்
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், சிறிய செய்திகளாக முதல்வரின் அறிவிப்புகளை
வெளியிட்டு வந்தது. அன்று முதல் முறையாக, ஹிந்தியிலும் செய்தி
வெளியிட்டது.

அதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு எழாததைத் தொடர்ந்து,
முதல்வரின் அறிவிப்புகளையும், அதிகாரிகள்தொடர்ந்து ஹிந்தி யில் வெளியிட
துவங்கி உள்ளனர். தேசிய அளவில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

அடுத்து, 2024 லோக்சபா தேர்தலில், மாநில கட்சிகள் இணைந்து
மெகா கூட்டணி அமைக்க, மாநில கட்சி தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின்,
தன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள, 'அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு'
சார்பில், மாநில கட்சிகளை இணைக்க முயற்சி எடுத்து வருகிறார்.


Last edited by ayyasamy ram on Mon Apr 18, 2022 6:22 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தொல்லியல் துறை அறிவிப்புகள்... 'சமத்துவ நாள்' அறிவிப்பு எல்லாம் முழுதும் ஹிந்தியில்! Empty Re: தொல்லியல் துறை அறிவிப்புகள்... 'சமத்துவ நாள்' அறிவிப்பு எல்லாம் முழுதும் ஹிந்தியில்!

Post by ayyasamy ram Mon Apr 18, 2022 6:21 am

பிரபலமாக்க முடிவு

இந்நிலையில், முதல்வரை பிரபலப்படுத்த நியமிக்கப்பட்டு உள்ள குழுவினர்,
அவரை தேசிய அளவில் பிரபலப்படுத்த முடிவு செய்து உள்ளனர்.அதற்காக
முதல்வரின் அறிவிப்புகளை, வட மாநில மக்களும் அறிந்து கொள்ள வசதியாக,
அவை தமிழ், ஆங்கிலம் மட்டு மின்றி ஹிந்தியிலும் வெளியிடப்படுகின்றன.

கடந்த 13ம் தேதி, சட்டசபையில் 110 விதியின் கீழ், அம்பேத்கர் பிறந்த நாள்,
சமத்துவ நாளாகக்கொண்டாடப்படும் என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை
முதல்வர் வெளியிட்டார். இது தொடர்பான செய்தி, முதலில் செய்தி மக்கள்
தொடர்பு துறை சார்பில் தமிழில் வெளியிடப்பட்டது. அதன்பின் ஆங்கிலம்
மற்றும் ஹிந்தியில் வெளியிடப்பட்டு உள்ளது.

ஹிந்தியை அனுமதிக்க மாட்டோம் எனக் கூறிக் கொண்டே, முதல்வரை
பிரபலப்படுத்துவதற்காக, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையே,
முதல்வரின் அறிவிப்புகளை ஹிந்தியில் வெளியிடுவது முரணாக உள்ளது.
ஊருக்கு உபதேசம்அரசின் இந்தச் செயல், 'ஹிந்தி வேண்டாம் என்று ஊருக்கு
தான் உபதேசம்; ஆட்சியில் இருப்பவர்களுக்கு இல்லையா' என்ற கேள்வியை
எழுப்பி உள்ளது.

இது குறித்து, தி.மு.க.,வினர் கூறுகையில், 'ஹிந்தி படிப்பவர்களை நாங்கள்
தடுக்கவில்லை. விருப்பம் உள்ளவர்கள் படித்துக் கொள்ளலாம். ஹிந்தியை
திணிக்கத்தான் கூடாது' என்கின்றனர்.

ஆனால், 'அரசு பள்ளிகளில் ஏழை மாணவர்கள் ஹிந்தி படிக்க அனுமதிக்க மாட்டோம்.
'வசதி படைத்த மாணவர்கள், தனியார் பள்ளிகளில் படித்துக் கொள்ளலாம் என்பது,
எந்த மாதிரியான பகுத்தறிவு என்பது தெரியவில்லை.

மொழிக் கொள்கையில் தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது' என்று அனைத்து
தரப்பினரிடமும் கோபம் ஏற்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum