புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 9:52
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோழியா, காதலியா?
Page 1 of 1 •
நான் எதிர்பார்த்த பதிலைத் தான், அப்பாவும், அம்மாவும் கூறினர்...
"சம்யுக்தாவை நான் கல்யாணம் செய்து கொள்ளட்டுமா?' என்று கேட்ட போது, "கூடவே கூடாது... நம் ஜாதியென்ன, அவள் குலமென்ன? ஊரில் நாலுபேர் என்ன சொல்வர்! உறவுக்காரர்கள் மத்தியில், தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? எல்லாவற்றையும் மீறிப் பண்ணிக் கொள்வேன் என்றால், நாங்க இருக்கறதை மறந்துடு...' என்றனர்.
எல்லாமே, எதிர்பார்த்த, பார்க்கக்கூடிய, "க்ளீஷே' வசனங்கள் தான்.
"என் சந்தோஷம் தானப்பா முக்கியம்ன்னு சொல்றேள்... அப்பறம், என் மனசுக்குப் பிடிச்சவளை, முக்கியமாக, என்னை, எனக்காகப் பிடிச்ச பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கறதில என்னம்மா தப்பு?' என்று கேட்டேன்.
"தப்புத்தான்...' என்று அடித்துக் கூறினார் அப்பா.
"இந்த இருபத்தி ஆறு வயசில உனக்கு உலகம் தெரிஞ்சுடுத்தோ?' என்றாள் அம்மா.
எனக்குக் கோபம் வரவில்லை; புன்னகை தான் எட்டிப் பார்த்தது.
"இவர்களுக்கு என்ன உலகம் தெரியும்!' என்று மனசுக்குள் கேள்வி எழுந்தது.
இந்த 25 வயதில் நான் வாங்கும் சம்பளத்தில், அறுபது சதவீதமே வாங்கும் சென்னை தாண்டாத அப்பா; கருத்தட்டான்குடி, கும்பகோணம், சென்னையை தவிர, வேறு எந்த ஊரையுமே பார்த்திராத அம்மா... வேலையில் சேர்ந்த இரண்டு வருடத்தில், ஒரு வருடம் சிட்னியிலும், இன்னொரு ஆறு மாசம் மிஷிகனும் போய்விட்டு வந்திருக்கும் என்னிடம், "உலகம் உனக்கு ரொம்பத் தெரிஞ்சுடுத்தோ?' என்று கேட்கின்றனர். பரிதாபமாகத் தான் இருந்தது.
"சம்யுக்தாவின் ஜாதி தான், உங்க அப்ஜக்ஷனுக்குக் காரணமா?' என்றேன்.
"ஆமாம்!' என்றாள் அம்மா.
"உன்னை விட ஆறு மாசம் பெரியவள்ன்னு, நீ தானே சொன்னே?' என்று சீறினார் அப்பா.
எனக்கு ஆயாசமாக இருந்தது.
"இதையெல்லாம் நீங்க பெரிசா எடுத்துப்பேள்ன்னு நான் நினைக்கலப்பா... சம்யுக்தா, எத்தனை தடவை இங்க வந்திருக்கா... நீங்களும், நன்றாகப் பேசிப் பழகி, எல்லாம் செஞ்சிருக்கேள்... அப்படியிருந்துமா இப்படிப் பேசறேள்?'
"அவ, இப்படி ஒரு திட்டம் போட்டு உன்னோட பழகினான்னு, எங்களுக்கு எப்படிடா தெரியும்?' என்று சிடுசிடுத்தாள் அம்மா.
"சாரிம்மா... அந்த மாதிரி திட்டத்தோடல்லாம் நாங்க பழகல்ல... அவளுக்கு, அவ வீட்டில மாப்பிளை பாக்கறச்ச தான், அவ என்கிட்ட வந்து கேட்டா... எனக்கும், அதில என்ன தப்பு... பண்ணிண்டா என்னன்னு தோணித்து. நல்ல நண்பர்கள், கணவன் - மனைவியாறது பெட்டர் இல்லையாப்பா?' என்று லாஜிக் பேசிப் பார்த்தேன்.
"போறும்... போறும்! விவஸ்தை இல்லாம உளறாதே! கூடாது... வேண்டாம்... அவ்வளவு தான். நாங்க இப்பவே, உனக்கு ஏத்த பொண்ணா பார்த்து, ஜாம், ஜாம்ன்னு பண்ணி வைக்கறோம்...' என்றார், அப்பா.
"இப்ப என் பதில்ல தான், சம்யுக்தாவின் கல்யாணம் இருக்கு...' என்றேன்.
"போய்ச் சொல்லு... எங்காத்தில இதில் உடன்பாடு இல்லன்னு... அவ, யார வேணா பண்ணிண்டு போகட்டும்; உனக்கு வேண்டாம்!'
"எதுக்கும் நீங்க, யோசிச்சு, ஒரு வாரத்தில சொல்லுங்களேன்...' என்றேன்.
"ம்க்கும்... டயம் தர்றீயா? ஒரு வாரமில்ல, ஒரு வருஷம் கழிச்சுக் கேட்டாலும், இதே பதில் தான். முடியாது, கூடாது, வேண்டாம்; லீவ் ஹர்...' என்றார் அப்பா அழுத்தமாக.
எனக்கு, அப்பா குணம் தெரியும்.
பதில் சொல்லாமல், எழுந்து ஆபீசுக்குக் கிளம்பினேன்.
""உன் வீட்ல என்ன சொன்னா சம்யுக்தா?'' என்றேன். அவள் முகம், நடந்ததை ஓரளவு பிரதிபலித்தது.
எதிரேயிருந்த காபி கப்பைப் பார்த்தபடி, வறட்சியாகச் சிரித்தாள்.
""எங்கப்பா, என்னைக் கன்னத்தில் அறைந்தார்!'' என்றாள்.
""மைகாட்... ஆர் தே ப்ரிமிடிவ்?'' என்றேன் அதிர்ச்சியுடன்.
""பெர்ஹாப்ஸ்... உங்க வீட்ல?''
""அடிக்கலை... ஆனால், நெகடிவ் ரிப்ளை தான்!''
சற்று நேரம் மவுனத்தில் கரைந்தது. மெதுவாகச் சொன்னாள் சம்யுக்தா...
""நான் தான் இந்தக் குழப்பம் ஏற்படக் காரணம்ன்னு நினைக்கிறேன்... வெரி சாரி அருண்!''
""சே... சே... டோன்ட் பீல் லைக் தட்...'' என்றேன்.
உண்மையில், வேலையில் சேர்ந்த நாட்களிலிருந்து, நாங்கள் இருவரும், நல்ல நண்பர்களாகத் தான் பழகி வந்தோம்... கல்யாணம் என்ற பேச்சு சம்யுக்தாவின் வீட்டில் எழுந்த போது தான், என்னிடம் வந்து அவள் கேட்டாள்.
"என் வீட்டில் எனக்குக் கல்யாணத்திற்குப் பார்க்கின்றனர் அருண்... எனக்கு என்னவோ, முன்பின் தெரியாத ஒருவனைக் கல்யாணம் பண்ணிக்கறதில் உடன்பாடு இல்ல... ஐ லவ் அன்ட் லைக் யு அருண்... நாம கல்யாணம் பண்ணிகிட்டா என்ன?' என்றாள் தீவிரமாக.
கேலி, கிண்டல், சண்டை, வாக்குவாதம், வேலை நிமித்தம் சேர்ந்து பயணம், மண்டையைப் பிய்த்து, "ப்ரோக்ராம்' எழுதுவது, பரபரவென்று வேலை முடித்தது, சாப்பிட்டது, கலாட்டா பண்ணியது என்று பல சந்தர்ப்பங்கள் கடந்த போதும், தோன்றாத எண்ணம் திடீரென்று சம்யுக்தாவுக்கு எப்படி உதயமானது?
ஆனால், அந்தக் கேள்வியை அவள் கேட்ட போது, அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை; மாறாக, நாங்கள் இருவரும் சேர்ந்து, பல வேலைகளில் தர்க்கம் செய்து எடுக்கும் முடிவுக்காக ஒரு கேள்வி எழுந்தது போல் தான் இருந்தது.
ஏன் கூடாது?
எனக்கு அவளையும், அவளுக்கு என்னையும், என் குணத்தையும் நன்கு தெரியும். எனக்கும் அப்படியே! இரு குடும்பங்களுக்கும் கூட, நாங்கள் நண்பர்கள் என்பதும் தெரியும். அதனால், இது ஒரு பெரிய பிரச்னை ஆகாது என்று தான், இருவரும் நினைத்தோம்; ஆனால், அது தப்பு என்று இப்போது தெரிந்தது. 21ம் நூற்றாண்டாக இருந்தாலும், சில மனிதர்கள் மாறுவதில்லை அல்லது மாற விரும்புவதில்லை என்பது தான் நிதர்சனம்.
யோசனைகளைக் கலைக்கும் விதமாக கேட்டாள் சம்யுக்தா.
""இப்ப என்ன செய்யலாம் அருண்?''
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
""இரண்டு குடும்பத்தையும் பகைச்சுண்டு நாம கல்யாணம் பண்ணிக்கணும்... அப்புறம், கொஞ்ச நாளில், மனசு மாறலாம்; மாறாமலும் போகலாம். எல்லாம் ஒரு நம்பிக்கை தான்,'' என, ஏதோ, எனக்கு நானே பேசிக் கொள்வது போல் கூறினேன்.
சம்யுக்தாவின் முகம் தெளிவாகி இருந்தது.
""இல்லை, அருண்... நாம் நல்ல பிரண்ட்சாக இருந்தோம்... இந்த கல்யாண எண்ணம் வந்தது திடீர்னு தான்... அதனால்...'' என்று நிறுத்தினாள்.
""அதனால்?''
""நாம இதை, விட்டு விடுவோம்... எங்கப்பா பார்க்கற பையனையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்... நீயும், உன் பேரன்ட்ஸ் சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ... வீண் சண்டை, விவாதம், மனஸ்தாபம் எதுவும் வராது.''
நான், சம்யுக்தாவை வியப்புடன் பார்த்தேன்.
""என்ன நீ... உன்னால, எப்படி, இப்படி திடீர்ன்னு முடிவெடுத்துப் பேச முடியறது?'' என்றேன்.
புன்னகைத்தாள் சம்யுக்தா.
""நான் ரொம்ப யதார்த்தவாதி... கல்யாணம்ங்கறது, சந்தோஷமான சமாச்சாரம்... அதை, ஆயிரம் பிரச்னை, மனக்கலக்கம், எதிர்ப்பு, சாபம், கோபம் இவற்றுக்கு நடுவில் செய்து கொள்ள இஷ்டமில்லை அருண்... உனக்கு இஷ்டமா?''
""இல்லை தான்... ஆனால்...''
""ஆனால், என்ன அருண்... நாம் என்ன ஆரம்பத்திலிருந்தே காதலிச்சோமா! நண்பர்களாகத்தானே பழகினோம்...!''
""ம்...''
""பல விஷயங்களில், நாம் பலகோணங்களில் சிந்திப்பதில்லையா... இதை ஒரு ஆப்ஷனாக நான் நினைத்தேன்... அவ்வளவு தான். அது ஒர்க் - அவுட் ஆறதில பிரச்னைகள் நிறைய இருக்கு. சோ... லெட் அஸ் கன்டின்யு அஸ் பிரண்ட்ஸ்,'' என்றாள்.
சம்யுக்தாவைப் போல், என்னால் அதை அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
""எனக்குக் குழப்பமாக இருக்கிறது சம்யுக்தா...'' என்றேன்.
""ஒரு நாள் நன்றாக யோசனை பண்ணலாம் அருண்... நாளைக்குப் பேசலாம்...'' என்ற இருவரையும், வேலை வந்து அழைத்துக் கொண்டது.
அன்று இரவு எனக்கு, தூக்கம் சரியாக வரவில்லை. இது என்ன சிக்கலான சந்தர்ப்பம்? இது தேவையா? நாங்களே வரவழைத்துக் கொண்ட பிரச்னை தானே!
சம்யுக்தாவின் வார்த்தைகளில், உண்மை இருக்கிறது. ஆயிரம் பிரச்னைகளுடன், மண வாழ்க்கையைத் துவங்க வேண்டுமா? எனக்கும் அதில் பிடித்தமில்லை தான்.
மறுநாள் மாலை, பீச்சில் உட்கார்ந்து பேசினோம்.
""எனக்கு பார்த்திருக்க பையன் பேர் கார்த்திக்... பெங்களூரில், விப்ரோவில் வேலை பார்க்கிறான். ஒரே பையன். எனக்கும் அங்கேயே ட்ரை பண்ணலாம்ங்கறான். ஹி லுக்ஸ் ஸ்மார்ட்... போட்டோ பார்த்தேன்... சாட் பண்ணினேன்...'' என்றாள் சம்யுக்தா.
சட்டென்று, ஆண்களுக்கே உரிய பொறாமை தலை தூக்கியது.
""ஐ சீ...'' என்றேன் மையமாக.
என்னைப் பார்த்துச் சிரித்தாள் சம்யுக்தா.
""ஜெலசி...?''என்றவள், ""ஏய், என்ன ஆச்சு அருண்... பார்த்தியா, நண்பனாக இருந்தவரை இல்லாத குணம் எல்லாம், இப்ப தலைகாட்டுது பார்...''
நான் பதில் சொல்லவில்லை.
""டேக் இட் ஈசி மேன்... நாமென்ன காவியக் காதலர்களா... ரோமியோ - ஜூலியட், அம்பிகாபதி - அமராவதி போல, காதல் போனா சாதல்ன்னு வாழணுமா? ஐ டோன்ட் அக்ரீ... நம்ம வாழ்க்கையை நாம் தான் சந்தோஷமாக்கிக்கணும்... பிகாஸ், வி லிவ் ஒன்லி ஒன்ஸ். அதைக் குழப்பிக் கொள்வது மடத்தனம்.''
""சரி... நீ தானே கல்யாண விஷயத்தைக் கிளப்பினே?''
""ஆமாம், இல்லைங்கல... நேத்து சொன்னாப்பல, அது ஒரு ஆப்ஷன்... ஆனா, ப்ராப்ளம்ன்னு தெரிஞ்சப்பறம், அதைத் தொடரதுல அர்த்தம் இருக்கா... நிஜத்தைச் சொல்லப் போனா, நாம இரண்டு பேருமே, நம்ப எதிர்காலத்தை, நம் காதல், நட்பு இதையெல்லாம் விடத் தீவிரமாகக் காதலிக்கிறோம்; அதை ஒத்துக்கற இல்ல அருண்?''
""வாஸ்தவம் தான்...''
""காதலா ஆரம்பிச்சு, அது முறிஞ்சு நட்பாகக் கன்டின்யூ பண்றது சிரமம்... ஆனால், நட்பா ஆரம்பிச்சுக் காதல்ன்னா தேவலை... பழையபடி நட்புக்கே போயிடலாம்... என்ன சொல்ற...?''
""சோ...'' என்றேன், ஒரு நிமிட மவுனத்திற்குப் பின்.
""லெட் அஸ் பர்கெட் திஸ்... ஐயம் லுக்கிங் பார் எ பெட்டர் பொசிஷன்... கார்த்திக் மூலம் எனக்கு அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா மிஸ் பண்ணுவானேன்...?''
சற்று நேரம் மவுனமாக இருந்தோம்.
""போகலாமா?'' என்றாள் சம்யுக்தா.
""மனசு கொஞ்சம் வலிக்கறாப்பல இருக்கு சம்யுக்தா...'' என்றேன் நான்.
""நீ ரொம்ப தமிழ்க் காதல் சினிமாக்களப் பார்க்கற அருண்...'' என்று சிரித்தாள் சம்யுக்தா.
""ஜோக்ஸ் அபார்ட்... எனக்கும் கொஞ்சம் வருத்தமாக இருக்கு... அது, நட்புக்குள் காதல் சிறகுகள முளைக்க வைத்தால், அது முறியும் போது, சற்று வலிக்கத்தாம்ப்பா செய்யும்... கொஞ்சம் நாளில் சரியாகி விடும்...'' என்றாள் சம்யுக்தா.
நான், அவளை வியப்புடன் பார்த்தேன். பெண்கள் ஆழமானவர்கள் என்பது நிஜம் என்று தோன்றியது.
ஒரு மாசத்தில், சம்யுக்தாவின் கல்யாணம் பெங்களூரில் நடந்தது; நான் போகவில்லை. சம்யுக்தா, என் வாழ்த்து செய்திக்குப் பதிலாக அனுப்பிய குறுந்தகவல்..."ஐ அண்டர் ஸ்டாண்ட் யூ... பட், பி சியர் புல்!'
மூன்று மாசம் கழித்து, என்னிடம் கல்யாணப் பேச்சை எடுத்தார் அப்பா.
""சாரிப்பா... நான் இரண்டு வருஷம் எம்.எஸ்., பண்ண, யு.எஸ்., போறதா இருக்கேன்... இப்ப வேண்டாம்,'' என்றேன்.
""ஏன், இன்னும் அந்தப் பொண்ணை மனசில நெனச்சிண்டு இருக்கியா?'' என்றார் சற்று ஏளனமாக.
""இல்லை...''
""பின்ன?''
""எனக்கு என்னமோ, இப்ப கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு எண்ணம் வரல்ல...''
""அப்ப வந்ததே?''
""வந்தது... இப்ப இல்ல...''
""அவதான், வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிண்டு போய்ட்டாளே... அப்புறம், என்ன பெரிய்ய காதல்?''
நான் புன்னகை செய்தேன்.
""காதல் இல்லைப்பா... நட்போ, காதலோ எதுவாக இருந்தாலும், முறியும் போது சற்று வலிக்கும்; அந்த வலி, ஆளுக்கு, ஆள் மாறுபடும்...''
""என்ன பேச்சு இது... எனக்கு ஒண்ணும் புரியலை,'' என்றார் அப்பா எரிச்சலுடன்.
""புரியாது...'' என்றேன் நான் புன்னகை மாறாமல். அது சோகமாக இருந்ததும், அப்பாவுக்குப் புரிந்திருக்காது.
***
- தேவவிரதன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1