ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுத்த சத்தம் விமர்சனம்: கௌதம் கார்த்திக், பார்த்திபன், எழில் கூட்டணி... ஆனாலும் ஏன் இப்படி?

2 posters

Go down

யுத்த சத்தம் விமர்சனம்: கௌதம் கார்த்திக், பார்த்திபன், எழில் கூட்டணி...  ஆனாலும் ஏன் இப்படி? Empty யுத்த சத்தம் விமர்சனம்: கௌதம் கார்த்திக், பார்த்திபன், எழில் கூட்டணி... ஆனாலும் ஏன் இப்படி?

Post by ayyasamy ram Mon Mar 28, 2022 8:55 am

யுத்த சத்தம் விமர்சனம்: கௌதம் கார்த்திக், பார்த்திபன், எழில் கூட்டணி...  ஆனாலும் ஏன் இப்படி? Vikatan%2F2022-03%2F9c194bc9-fd9f-4418-9366-b655568fce5a%2FWhatsApp_Image_2022_03_21_at_3_16_32_PM.jpeg?rect=0%2C0%2C1138%2C640&auto=format%2Ccompress&w=700&dpr=1
-
ஷூட் எடுக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக படத்தில் ஆங்காங்கே
பாடல்கள் வருகின்றன. War decibel, போதை இசை, டிஜிட்டல் டிரக்
என நாவலில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயங்கள் படத்தில் காமெடிக்
காட்சிகளைப் போல் இருக்கின்றன.

காவல் நிலையத்தின் முன் ஒரு பெண் கொடூரமாகக் கொலை செய்யப்
படுகிறார். அந்தக் கொலைக்கான காரணத்தையும், கொலையாளியையும்
ஒரு இன்ஸ்பெக்டரும், அந்தப் பெண்ணின் காதலரும் தனித்தனியாய்
தேடுகிறார்கள். இறுதியில் யார் வில்லன் என்பதுதான் எழில்
இயக்கியிருக்கும் 'யுத்த சத்தம்' படத்தின் கதை.

காவல் நிலையத்துக்கு ஒரு பெண் புகார் தர வருகிறார். ஆனால், காவல்
நிலையத்திலேயே வைத்து அவரைக் கொலை செய்கிறது ஒரு கும்பல்.
ஏற்கெனவே மன அழுத்தத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டர் பார்த்திபன்,
தன் காவல் நிலையத்தில் நடந்த கொலையால் அதீத மன அழுத்தத்துக்கு
ஆளாகிறார்.

பார்த்திபனுக்கு ஒரு பிளாஷ்பேக், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு
ஒரு பிளாஷ்பேக், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும், அவரின்
காதலருக்கும் ஒரு பிளாஷ்பேக். காவல் நிலையத்தில் இருக்கும் ஏட்டுகளுக்கு
ஒரு பிளாஷ்பேக் என நம்மை தெளிய வைத்து தெளிய வைத்து பிளாஷ்பேக்
சொல்லி அயர்ச்சிக்குள்ளாக்குகிறது இந்த 'யுத்த சத்தம்'.

படத்தின் ஒரே ஆறுதல் பார்த்திபன்தான். அவருக்கான வசனங்களை
அவரே எழுதிக்கொண்டாரா தெரியவில்லை. ஜாலியாகப் பேசி நடித்துக்
கொடுத்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இல்லை
என்றாலும், ஏனோதானோவென செல்லும் கதையில் அவர் பேசும்
ஒன்லைனர்கள்தான் கொஞ்சம் சிரிக்க வைக்கின்றன.

கௌதம் கார்த்திக்கும் படத்தில் நடித்திருக்கிறார் அவ்வளவே. ரோபோ சங்கர்
தொடர்ந்து எல்லா படத்திலும் பெண்களிடம் வழிவதை மட்டுமே
கதாபாத்திரமாக நடித்துவருகிறார். அதை காமெடி என அவராவது நம்புகிறாரா
எனத் தெரியவில்லை. படத்தின் நாயகிக்கும் நாயகனுக்கும் காதல் வர, கதை
ஊட்டிக்கெல்லாம் போகிறது. நமக்குத்தான் சென்னையிலே முடித்துக்
கொள்ளலாமே பாஸ் எனத் தோன்றுகிறது.

கோலிவுட் இயக்குநர்களுக்கு IT வேலைக்கும் பிபிஓ வேலைக்கும் வித்தியாசம்
தெரியாது என்பதைக் கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம்.
இந்தப் படத்தில் ஒருபடி மேலே போய், IT வேலையில் இரு கம்பெனிகள்
டெண்டர் விடுவதைப் போல, எதிர் கம்பெனி பணியாளர்களை வேவு
பார்க்கிறார்கள். வேவு பார்க்கும் பெண்மணியோ வீட்டுப் பணியாள் எனக்
காவல்துறையிடம் நாடகமாடுகிறார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யுத்த சத்தம் விமர்சனம்: கௌதம் கார்த்திக், பார்த்திபன், எழில் கூட்டணி...  ஆனாலும் ஏன் இப்படி? Empty Re: யுத்த சத்தம் விமர்சனம்: கௌதம் கார்த்திக், பார்த்திபன், எழில் கூட்டணி... ஆனாலும் ஏன் இப்படி?

Post by ayyasamy ram Mon Mar 28, 2022 8:56 am

யுத்த சத்தம் விமர்சனம்: கௌதம் கார்த்திக், பார்த்திபன், எழில் கூட்டணி...  ஆனாலும் ஏன் இப்படி? Vikatan%2F2022-03%2F845c006e-634e-40d6-9708-f9cba07729bd%2Fyutha_satham_729695.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
யுத்த சத்தம் விமர்சனம்: கௌதம் கார்த்திக், பார்த்திபன், எழில் கூட்டணி...  ஆனாலும் ஏன் இப்படி? Vikatan%2F2022-03%2F7aad9899-7c2c-44c7-b195-00d358cb41ec%2FWhatsApp_Image_2022_03_21_at_3_17_14_PM.jpeg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
யுத்த சத்தம் விமர்சனம்: கௌதம் கார்த்திக், பார்த்திபன், எழில் கூட்டணி...  ஆனாலும் ஏன் இப்படி? Vikatan%2F2022-03%2Fb1abe7bd-0c52-4267-9355-cb59937092fd%2FWhatsApp_Image_2022_03_21_at_3_16_54_PM.jpeg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-

'இதற்கு இல்லையா ஒரு எண்டு' என்பதாக நீள்கின்றன அந்தக் காட்சிகள்.
நாவலைப் படமாக்குவதெல்லாம் நல்ல விஷயம்தான். அதே சமயம் குறைந்த
பட்சம் சில வேலைகள் எப்படிப்பட்டது என்பதை யாரிடமாவது கேட்டுத்
தெரிந்துகொண்டு காட்சிகள் அமைப்பது நல்லது. அபத்தமாகவும்
செயற்கையாவும் படம் முழுக்க அத்தனை காட்சிகள் வந்து விழுந்து கொண்டே
இருக்கின்றன.

இமானின் இசையில் பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும்,
பின்னணி இசையில் த்ரில்லருக்கான உழைப்பு தெரிகிறது. இன்னும் எத்தனை
நாளைக்கு ஆள் மாறாட்ட அடல்ட் காமெடிகளை படைப்பாளிகள் எழுதிக்
கொண்டிருப்பார்கள் எனத் தெரியவில்லை. அவை காமெடியாகவும் இல்லை
என்பது அடுத்த விஷயம்.

ஷூட் எடுக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக படத்தில் ஆங்காங்கே பாடல்கள்
வருகின்றன. War decibel, போதை இசை, டிஜிட்டல் டிரக் என நாவலில்
அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயங்கள் படத்தில் காமெடிக் காட்சிகளைப் போல்
இருக்கின்றன.

எழில் அவர் ஏரியாவான காமெடியிலிருந்து விலகி ஒரு த்ரில்லர் செய்ய
வேண்டும் என நினைத்தது ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால் அது
த்ரில்லராகவும் இல்லாமல், காமெடியாகவும் இல்லாமல் இருப்பதால் எவ்விதமான
உணர்ச்சிகளையும் கடத்த மறுக்கிறது.

நன்றி-விகடன்

யுத்த சத்தம் விமர்சனம்: கௌதம் கார்த்திக், பார்த்திபன், எழில் கூட்டணி...  ஆனாலும் ஏன் இப்படி? End_ba10
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யுத்த சத்தம் விமர்சனம்: கௌதம் கார்த்திக், பார்த்திபன், எழில் கூட்டணி...  ஆனாலும் ஏன் இப்படி? Empty Re: யுத்த சத்தம் விமர்சனம்: கௌதம் கார்த்திக், பார்த்திபன், எழில் கூட்டணி... ஆனாலும் ஏன் இப்படி?

Post by krishnaamma Mon Mar 28, 2022 11:24 am

பார்திபன் படம் நன்றாக இருக்கும் என்று நினத்தேன்....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யுத்த சத்தம் விமர்சனம்: கௌதம் கார்த்திக், பார்த்திபன், எழில் கூட்டணி...  ஆனாலும் ஏன் இப்படி? Empty Re: யுத்த சத்தம் விமர்சனம்: கௌதம் கார்த்திக், பார்த்திபன், எழில் கூட்டணி... ஆனாலும் ஏன் இப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum