ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை-உன்னோடு நானிருப்பேன்!

Go down

சிறுகதை-உன்னோடு நானிருப்பேன்! Empty சிறுகதை-உன்னோடு நானிருப்பேன்!

Post by ayyasamy ram Sat Mar 26, 2022 9:41 pm


சிறுகதை-உன்னோடு நானிருப்பேன்! 749RuMk
-



சத்யாவிற்கு பத்தொன்பது வயது. பொறியியல் மாணவன். கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் அனு நினைவாக இருந்தான். அவன் பேக்கில் இருந்த லெட்டர் பேடை வெளியே எடுத்தான். இரு இதயங்கள் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டு பேப்பர் முழுவதும் சிதறி கிடந்தன. சத்யா ஒரு சேஃப்டி பின்னை எடுத்து தன் வலது ஆள்காட்டி விரலில் குத்தினான். ரத்தம் வேகமாய் வெளியே வந்தது.‘அனு ...அனு ..அனு’ என்று ரத்தத்தால் அந்த லெட்டர் பேப்பர் முழுவதிலும் எழுதினான். அவனுக்கு அவள் பெயரை ரத்தத்தால் எழுதுவது பிடித்திருந்தது.

அனு என்று அவளது பெயரை உச்சரிப்பது பிடித்தது. அனுவை பார்க்க வேண்டும் போல் இருந்தது ... அனு தன்னை பற்றி கீழ்த்தரமாக நினைத்துவிட்டால் அசிங்கமாயிற்றே என்று நினைத்தான்.
அவனுடைய சித்தி,டேய் எருமைமாட்டு பயலே வந்து வீட்டை பெருக்குடா என்றாள்... சித்தியின் கடுமையான குரலை கேட்டதும் அவன் நடுங்கினான் “இதோ வந்துட்டேன் சித்தி ...” என்றான். அவன் குரல் அவனுக்கே கேட்கலை.

சித்தியின் கொடுமையையும் ஆசிரியர்களின் அதட்டலான பேச்சையும் அனுபவித்தவனுக்கு அனுவின் புன்னகை முகம் ஈர்த்தது. அவள் சிரிப்பில் தெரிந்த அன்பிற்காகவே அனுவின் பின்னால் சுற்ற தொடங்கினான். “நான் உன்னை காதலிக்கிறேன்...கடைசிவரைக்கும் என் கூட வருவியா அனு” என கேட்டான். அந்த வார்த்தையிலே மனம் உருகி சத்யாவை காதலித்தாள் அனு.அனு புன்னகையுடன் சத்யாவிடம் பேசும் போதெல்லாம் அவன் மனதிற்கு இதமாகவும் ஆனந்தமாகவும் இருக்கும்.

அனு ஃபேன்சி ஸ்டோர் போவதற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள். அவளுக்கு கலர் கலராக நெய்ல் பாலீஷ் வாங்குவது பிடிக்கும். தன் அழகான விரல் நகங்களில் நெய்ல் பாலீஷை தீட்டி சத்யாவிடம் ஆசையாக காண்பிக்க வேண்டும் ... அவன் அதை பார்த்து விட்டு “ஹேய் ரொம்ப அழகா இருக்குன்னு” சொல்லுவான் ... அதை கேட்டு அவள் சந்தோஷப்படுவாள். ஸ்கூட்டியை வெளியே எடுத்தாள் அனு.வண்டியை ஸ்டார்ட் பண்ணி கிளம்பும்போது அவளுக்கு சத்யா நியாபகமா இருந்தது.

அவன் அதே தெருவில் எங்கோ இருப்பது போலவும் தனக்கு தெரியாமல் தன்னை பார்த்துக் கொண்டிருப்பது போலவும் ஒரு உணர்வு ஏற்பட்டது. ஸ்கூட்டியை மெல்ல செலுத்திக் கொண்டே அவள் கண்கள் சத்யாவை தேடின . ‘நான் அவனை நினைப்பதால் அவன் இங்கு எங்கோ இருப்பது போல தோன்றுகிறதா ...’ ஸ்கூட்டியை ஒரு ஓரமாக நிறுத்தினாள் அனு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறுகதை-உன்னோடு நானிருப்பேன்! Empty Re: சிறுகதை-உன்னோடு நானிருப்பேன்!

Post by ayyasamy ram Sat Mar 26, 2022 9:43 pm


சத்யாவிற்கு போன் பண்ணினாள்
“ஹாய் அனு... ”
“எங்கடா இருக்க?”
“என் வீட்டில்!”
“பொய் சொல்லாத நீ இங்க தான்
எங்கேயோ இருக்க ...என்னால் நல்லா உணர முடியுது... ”

“நோ சான்செஸ்! நான் என்
வீட்டில் தான் இருக்கேன் ... போனை வை...
சித்தி வர்றாங்க... ”
“நிஜமாவே நீ உன் வீட்டில் தான்
இருக்கீயாடா ...என்னை பார்க்க வர மாட்டியாடா”... மனதுக்குள் ஏக்கத்துடன்
ஸ்கூட்டியை ஓட்டினாள் அனு.

திருப்பத்தில் வேகமாய் வந்த காரை எதிர்பார்க்காததால் ஸ்கூட்டியை எந்த திசையில் திருப்புவது என தெரியாமல் வண்டியின் பேலன்சை தவறவிட்டு ஸ்கூட்டியோடு நடு ரோட்டில் விழுந்தாள். கார்காரன் அவளை கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விட்டான்.ஒரு இளைஞன் வேகமாய் ஓடி வந்தான். அவன் அனுவின் ஸ்கூட்டியை தூக்கி நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு உதவினான். அனுவின் முழங்கையில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் கசிந்தது.

“பார்த்து போகக் கூடாது ... காயம்
ஆயிருச்சே .... வலிக்குமே ... எப்படி
தாங்கிப்பீங்க .....”

அவன் நிஜமாகவே அனுவுக்காக வருத்தப்பட்டான் . அனு அவனை நிமிர்ந்து பார்த்தாள் .அவன் தன் முகத்தை வெள்ளை நிற கர்ச்சீப்பால் மூடி இருந்தான்... அவன் கேசத்தை கோதுவது போல் தன் முகத்தை மேலும் கையால் மறைக்க முயன்றான்.அவனது பூனை கண்கள் கரகரப்பான குரல் எல்லாம் அவளுக்குள் ஒரு உந்துதலை ஏற்படுத்த...கர்ச்சீப்பை பட்டென அவன் முகத்தில் இருந்து உருவினாள் அனு. அது சத்யா தான்! அவனை அங்கே பார்த்ததும் அனுவிற்கு சந்தோஷமாக இருந்தது.

“அ.... அனு எனக்கு உன்னை பார்க்கணும் போல் இருந்தது... அதான் இப்படி... ”“எனக்கும் யாரை பார்த்தாலும் உன் முகமாகத்தான் தெரிஞ்சது சத்யா! உன் முகத்தை பார்த்து விட மாட்டோமான்னு தவிப்பாய் இருந்தது... நல்ல வேளை நீயே வந்துட்டே டா... ”சத்யா அனுவின் முழங்கையில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிவிட்டு சிராய்ப்பில் ஊதி விட்டான்.

ரோட்டில் சென்றவர்கள் சத்யா-அனு காதல் ஜோடியை பார்த்தபடி சென்றார்கள். இரண்டு பேரின் இளமையும் அழகும் காதலும் அவர்களுக்கு பார்க்க பிடித்திருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. சத்யா அனுவை ரெஸ்டாரெண்டிற்கு கூட்டி சென்றான். அவனுக்கு ஆர்டர் பண்ண மட்டன் பிரியாணி முதலில் வந்தது.அனுவிற்கு ஆர்டர் பண்ண சிக்கன் ஃபிரைட் ரைஸ் வரும் வரை காத்திருந்து அவளுடன் சேர்ந்து சாப்பிட்டான். அனு சத்யாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறுகதை-உன்னோடு நானிருப்பேன்! Empty Re: சிறுகதை-உன்னோடு நானிருப்பேன்!

Post by ayyasamy ram Sat Mar 26, 2022 9:43 pm

“இரண்டு ப்ளோர் ஏறி வந்தது டயர்டா இருக்குடா... ”
சத்யா ஃபிரைட் ரைஸை ஸ்பூனில் எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்.

சத்யாவின் தோளில் சாய்ந்து கொண்டே
அனு சாப்பிட்டாள்...நடுவில் அவள் அவன் விரலை கடித்து சிரித்தாள்.

“இன்னிக்கு காலையில எத்தனை மணிக்குடா எந்திரிச்ச?”
“சீக்கிரமே எந்திரிச்சுட்டேன்...காலையில உன்னை பற்றி நினைச்சேன் !”

“அப்படி என்னடா நினைச்சே?”“கொட்ற பனியில் ஒரு நீளமான சாலையில் நாம இரண்டு பேரும் பேசிக்கொண்டே நடக்கிறோம்...அந்த ரோடு இன்னும் கொஞ்ச நேரம் போகத்தானு இருந்தது...உன் கூட இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கணும் போல் இருந்துச்சு...”“என் கூட பேச உனக்கு அவ்ளோ பிடிக்குமா சத்யா...”“உன் கூட விடிய விடிய பேச சொன்னா கூட எனக்கு போர் அடிக்காது அனு ... அதுவும் உன் முகத்தை பார்த்து பேசிக்கிட்டு இருக்கணும். அது இன்னும் பிடிக்கும்.”அனு பரவசத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தாள். அப்போ தான் அதை கவனித்தாள்.சத்யாவின் இடது கையில் நீளமான தீ காயம் இருந்தது.

“என்னடா இது ? பார்க்கவே பயங்கரமா இருக்கு... எப்படி ஆச்சு?” “எங்க சித்தி சூடு போட்டுடுச்சு...”“அவங்க ஏன்டா உன்னை இப்படி கொடுமைப்படுத்துறாங்க... ” “நான் அவங்க பையனை விட நல்லா படிக்கிறேனாம் ... அவனை விட நான் அழகா இருக்கேனாம் ...என் அப்பாவை என் பக்கம் இழுத்துருவேனான்னு அவங்களுக்குள்ள ஒரு இன்செக்யூர்ட் பீலிங்ஸ் என்னை போட்டு பாடாய் படுத்துறாங்க ...” “இந்த மாதிரி நேரத்துல நீ உன் அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேல சத்யா?”

“நீ என் லைஃப்பில் வந்த பிறகு என் அம்மா நியாபகம் அவ்வளவா வர்றதில்லை அனு!” “ஏன்டா அப்படி?”“ஏன் அப்படின்னா என் அம்மாகிட்ட கிடைக்கிற அன்பு, பாசம், சிரிப்பு, கருணை, காதல் எல்லாம் உன்கிட்ட கிடைக்குது அனு... எனக்கு வேற யாரும் வேண்டாம் அனு... நீ மட்டும் போதும்...நீ என்னை விட்டுட்டு போயிட மாட்டேல...”“உனக்கு ஏன்டா இந்த பயம் வருது... ”“நாம இரண்டு பேரும் பிரிஞ்சிடுவோமுனு ஒரு பயம் இருந்து கிட்டே இருக்கு அனு!”
“நான் உன்னை விட்டு போக மாட்டேன் சத்யா .. எனக்கும் வேற யாரும் வேண்டாம் நீ மட்டும் போதும்டா...”“நாம இரண்டு பேரும் கடைசி வரைக்கும் இதே அன்பு , இதே பாசம் , இதே காதலோடு இருப்போமா அனு !” இருவரும் விரல்களை இறுக கோர்த்துக்கொண்டார்கள்.

மறுநாள் கிளாசில் ப்ரொபஸர் மும்முரமாக பாடம் நடத்திக் கொண்டிருந்தாள்.தனக்கு முன்னால் இருந்த மாணவியின் பின் தன்னை மறைத்து உட்கார்ந்து கொண்டாள் அனு. ஒரு நோட்டில் அனுசத்யா அனுசத்யா என்று கிறுக்கிக் கொண்டிருந்தாள்.அவள் ஃபிரெண்ட் வித்யா சொன்னாள்.“அனு நீ காதல் தரும் போதையில் எந்நேரமும் மயக்கத்துல இருக்கே ... சத்யாவை நம்பி ஏமாந்துடாதே...”“சத்யா என்னிக்கும் என்னை ஏமாத்தமாட்டான்!”

“இந்த பாய்ஸ் எல்லாம் லவ் பண்ணும் போது , நீ தான் என் என் உயிர் ... நீ தான் என் மூச்சுனு உருகி உருகி வசனம் பேசுவானுங்க... அப்புறம் பாதியிலே விட்டுட்டு போயிடுவானுங்க ... நாம தான் அவன் என்ன காரணத்துக்காக விட்டுட்டு போனான்னு தெரியாம மண்டைய பிச்சுக்கிட்டு பைத்தியம் மாதிரி ஆயிடுவோம்!”“என் சத்யா அப்படி கிடையாது. அவன் என்னை உண்மையா காதலிக்கிறான்...என்னை விட்டுட்டு போக மாட்டான்...நானில்லாம அவனால் இருக்க முடியாது அதே மாதிரி அவன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது!” “ம்ம்ம் ... பாக்கத்தானே போறேன்!”அன்று காலை அனுவிற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தான் சத்யா.

இரண்டு பேரும் ஒரே ட்ரெயினில் ஏறி ஒன்றாக கல்லூரிக்கு செல்வார்கள் . அனு இன்னும் வரவில்லை. இரண்டு டிரெயின் போய் விட்டன. சத்யா அனுவிற்கு போன் பண்ணினான். ரிங் அடித்துக் கொண்டே இருந்தது. அவள் போனை எடுக்கவில்லை. சில நொடிகளில் அனுவிடம் இருந்து போன் வந்தது. “சத்யா சிரித்துக் கொண்டே, ஹாய் அனு, எங்கிருக்கே? நான் உனக்காக ரொம்ப நேரமா ஸ்டேஷனில் காத்துக்கிட்டு இருக்கேன்!”ஆனால் அனு பேசவில்லை ... பேசினது வித்யா. அவள் பதற்றத்துடன் பேசினாள்.“சத்யா , அ ... அனுவுக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு ...இன்னிக்கு காலையில ஸ்கூட்டியில் ஹெல்மெட் போடாம போய் இருக்கா...திருப்பத்தில் வேகமாய் வந்த லாரியின் மீது மோதி ...” வித்யா விக்கி விக்கி அழுதாள். “என் அனு எப்படி இருக்கா வித்யா? பயப்படமாதிரி ஏதும் இல்லையே ...”“சத்யா,உன் அனு உன்னை விட்டு போயிட்டாடா .. அனு தலையில் பலமா அடிபட்டதால ஸ்பாட்லேயே ....’’ அதற்கு மேல வித்யாவின் அழுகை சத்தம் தான் கேட்டது.

பேர் அதிர்ச்சியான செய்தியை கேட்டதும் சத்யாவின் அடிவயிற்றில் இருந்து ஒரு உணர்வு எழும்பி அவன் உடல் முழுவதையும் விறுவிறு வென தொப்பலாக நனைத்தது ....அவனது தலை கிறுகிறுத்தது.... அவன் கைகால்கள் வலுவிழந்தன.....‘அனு , என் செல்லமே ..என்னை விட்டுட்டு போய்ட்டியா ...என்னை விட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்தது... சத்யா உள்ளுக்குள் கண்ணீரோடு கதறினான்.... நீ இல்லாம நான் எப்படி அனு இருப்பேன்... இதோ நானும் வரேன்டா... என்னையும் உன் கூட கூட்டிக்கிட்டு போயிடு....

சத்யாவுக்குள் ஏதோ ஒரு சக்தியின் உந்துதலால் ஆவேசம் வந்தவனாய் எழுந்தான். தீர்மானமாய் ரயில் பாதையை நோக்கி நடந்தான்....நான் என் அனு கிட்ட போகணும் ... விறுவிறுவென நடந்தான்.இந்த வேளையில் ஒரு எக்ஸ்பிரஸ் வரும்.... தூரத்தில் அது வேகமாக வந்து கொண்டிருக்கும் சத்தம் கேட்க , அந்த சத்தத்தையும் தாண்டி பலமான ஒரு அலறல் சப்தம் கேட்ட பின் தான் பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் அங்கு நேர்ந்த விபரீதத்தை கண்டு திகைத்து போனார்கள். அடடா சத்யா செத்துட்டானே!ராஜேந்திர பிரசாத் ரோடு சுத்தமாக பளிச்சென்று இருந்தது. எல்லா வாகனங்களும் எந்த வித ஆரவாரமின்றி அமைதியாக போய்க் கொண்டிருந்தது.சாலையின் எதிர்புறம் ஒரு பழச்சாறு கடை இருந்தது.

அங்கே வித்யா கிளாஸில் பைனாபிள் ஜூஸ் குடித்துக்கொண்டிருந்தாள் . அவள் அருகே ஒரு பிளாஸ்டிக் சேரில் அனு உட்கார்ந்திருந்தாள். பைனாபிள் ஜூஸை குடிக்காமல் உட்கார்ந்திருந்தாள்.“ஜூஸை குடி அனு!”“இது தேவையா வித்யா? என்னவோ தெரியல... மனசே ஒரு மாதிரி இருக்கு...”“இதுதான் நான் உன் ஆளுக்கு வெச்ச மெகா டெஸ்ட். சத்யா உன்னை உண்மையாக காதலித்து இருந்தால் கண்ணீரோடு கதறிக் கொண்டு வரணும்... பார்ப்போம் ...”“அப்படி இல்லைன்னா?”“உன்னை காதலிக்கிற மாதிரி நடிக்கிறான் அர்த்தம் ... உன்னை பாதியிலே விட்டுட்டுப் போய்டுவானு அர்த்தம்...”தான் இறந்து போய்விட்டதாக சொன்ன செய்தியை கேட்டு சத்யா கண் கலங்கி பதற்றத்தோடு ஓடி வருவான் என எதிர்பார்த்து அவன் வருகைக்காக காத்திருந்தாள் அனு... சாலையில் எந்த பக்கம் வருகிறான் என பார்த்துக் கொண்டிருந்தாள்....

அனுவிற்காக உயிரையும் கொடுக்கும் அளவிற்கு சத்யா தன்னை உயிருக்கு உயிராய் காதலித்து இருக்கிறான் என்பது அனுவிற்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து விடும். அவன் இழப்பு ஒரு தீராத வலியாக என்றென்றும் அவள் நெஞ்சில் படிந்திருக்கும். சத்யா என்றாவது ஒருநாள் திரும்ப வருவான் என்ற பைத்தியக்காரத்தனமான எண்ணத்தோடு இருவரும் சந்தித்து கொள்ளும் இடங்களில் போய் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள் அனு... வாழ்க்கையின் மீது எந்த ஒரு உயிர்ப்பும் இல்லாமல்.

படங்கள்: ஜி.சிவக்குமார்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறுகதை-உன்னோடு நானிருப்பேன்! Empty Re: சிறுகதை-உன்னோடு நானிருப்பேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum