ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரபாண்டியபுரம் விமர்சனம்: `நான் மகான் அல்ல', `ஜீவா' எடுத்த சுசீந்திரனுக்கு என்னாச்சு?

Go down

வீரபாண்டியபுரம் விமர்சனம்: `நான் மகான் அல்ல', `ஜீவா' எடுத்த சுசீந்திரனுக்கு என்னாச்சு? Empty வீரபாண்டியபுரம் விமர்சனம்: `நான் மகான் அல்ல', `ஜீவா' எடுத்த சுசீந்திரனுக்கு என்னாச்சு?

Post by ayyasamy ram Fri 25 Mar 2022 - 23:43

வீரபாண்டியபுரம் விமர்சனம்: `நான் மகான் அல்ல', `ஜீவா' எடுத்த சுசீந்திரனுக்கு என்னாச்சு? Vikatan%2F2022-02%2F4fe552f6-35d8-44db-bf0c-b95a71f67dc3%2FVeerapandiyapuram_Movie_Stills_Jai_Meenakshi_Govindarajan_31c238e.jpeg?rect=0%2C0%2C1000%2C563&auto=format%2Ccompress&w=700&dpr=1
-
இரு கிராமங்களுக்கு இடையே நடக்கும் ரத்த மோதலில்,
ஜெய் எப்படித் தனக்கான பழிவாங்கலைச் சாதிக்கிறார்
என்பதுதான் சுசீந்திரன் இயக்கியிருக்கும் 'வீரபாண்டியபுரம்'.

கணக்கன்பட்டிக்கும், நெய்க்காரப்பட்டிக்கும் இடையே அரசியல்
தகராறில் கொலைகள் தொடர்கின்றன. அதில் ஒரு சிறுமி
காணாமல் போவதில் ஆரம்பிக்கும் கதை அப்படியே நூல்
பிடித்து ஜெய், மீனாக்‌ஷி கோவிந்தராஜன் கோயில்
திருமணத்தில் வந்து முடிகிறது.

ஆனால், திருமணம் செய்யாமல், கிரிக்கெட் வீரர் தோனி போல
"But I had other ideas" என ஜெய்க்கு வேறு சில
யோசனைகள் வருகின்றன. மீனாக்‌ஷியின் தந்தையிடமே
சென்று மீனாக்ஷியை ஒப்படைக்கிறார்.

ஒப்படைத்தால் மட்டும் வெத்தலை பாக்கு வைத்து பாராட்டவா
போகிறார்கள் என்பது நம்மைப் போலவே ஜெய்க்கும் தெரிந்தே
இருக்க, அடுத்து என்ன நடக்கிறது யார் யாரைக் கொல்கிறார்கள்,
ஏன் கொல்கிறார்கள், எதற்குக் கொல்கிறார்கள் என்பதை அதிக
நேரம் எடுத்துக்கொள்ளாமல் இரண்டு மணி நேரத்தில் சொல்லி
முடித்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
-
வீரபாண்டியபுரம் விமர்சனம்: `நான் மகான் அல்ல', `ஜீவா' எடுத்த சுசீந்திரனுக்கு என்னாச்சு? Vikatan%2F2022-02%2F15b91fc8-578d-4dd3-84e6-0452b7f06b98%2FVeerapandiyapuram_Movie_Download.jpeg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
'சிவ சிவ' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்துக்கு
'வீரபாண்டியபுரம்' எனக் கடைசி நேரத்தில் மாற்றியிருக்கிறார்கள்.
'சுப்ரமணியபுரம்' போல 'வீரபாண்டியபுரம்' என
விநியோகஸ்தர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தலைப்பை
மாற்றியதாக சுசீந்திரனே தெரித்திருந்தார்.

ஆனால், இந்தத் தலைப்புக்கான மெனக்கெடல் கூட இந்த
சினிமாவுக்குப் போடப்பட்டதாகத் தெரியவில்லை. ஜெய்யை
எடுத்துவிட்டு அப்படியே படத்தில் 'ஈஸ்வரன்' கெட்டப்பில் இருக்கும்
சிம்புவைப் போட்டுவிடலாம்.

'ஈஸ்வரன்', அடுத்து 'சிவ சிவ' என ஒரே மாதிரி டைட்டில் என்றுகூட
யோசித்திருக்கலாம். ஏனென்றால், 'ஈஸ்வரன்' படத்தில் வரும்
வீட்டு செட்டப்பைக்கூட மாற்றாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள்.
இல்லை அதே மாதிரியான வீட்டைத் தேடிப் பிடித்தார்களா
தெரியவில்லை.

பாலசரவணனையும், காளி வெங்கட்டையும் அதே ஊரில் அப்படியே
சுசீந்திரன் இருக்கச் சொல்லிவிட்டார் போல. கெட்டப் மட்டும்
மாற்றிவிட்டு வந்திருக்கிறார்கள். வில்லனின் தந்தையும் வெள்ளை
முடி வைத்த வில்லனே!


Last edited by ayyasamy ram on Fri 25 Mar 2022 - 23:44; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83923
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீரபாண்டியபுரம் விமர்சனம்: `நான் மகான் அல்ல', `ஜீவா' எடுத்த சுசீந்திரனுக்கு என்னாச்சு? Empty Re: வீரபாண்டியபுரம் விமர்சனம்: `நான் மகான் அல்ல', `ஜீவா' எடுத்த சுசீந்திரனுக்கு என்னாச்சு?

Post by ayyasamy ram Fri 25 Mar 2022 - 23:43

ஆம், வில்லனில் அப்பா - மகன் டபுள் ஆக்ட் என்னும் புதுமையைச்
செய்திருக்கிறார்கள். முழு படத்திலும் பால சரவணன் ஒரு இடத்தில்
மட்டும் சிரிக்க வைத்து, தனக்கான பணியை நிறைவு செய்து
விடுகிறார். பிறகு காணாமலும் போய்விடுகிறார்.

மீனாக்‌ஷி கோவிந்தராஜனும், அகான்ஷாவும் கதைக்குத் தேவையான
நடிப்பைத் தந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான காட்சிகளோ
ஒரு பாடலும், சில தூரம் நடப்பதும்தான் என்பதால் அவர்களுக்கும்
பெரிய வேலையில்லை. நடிப்பதோடு சேர்த்து இந்தப் படத்தில்
ஜெய்க்கு இசையமைப்பாளராக இன்னுமொரு பணி.

வைரமுத்து வரிகளில் 'காட முட்டை' பாடல் மட்டும் ஓக்கே ரகம்.
ஜெய்யின் இசையும் அந்தப் பாடலில் தாளம் போட வைக்கிறது.
ஆனால், அந்தப் பாடலைத் தவிர மற்ற பாடல்கள் ஏன் வருகின்றன,
எதற்கு வருகின்றன ரகம்தான்.
-
வீரபாண்டியபுரம் விமர்சனம்: `நான் மகான் அல்ல', `ஜீவா' எடுத்த சுசீந்திரனுக்கு என்னாச்சு? Vikatan%2F2022-02%2F192a80ef-8a8b-40e5-98b9-cb590007e0e8%2FVeerapandiyapuram_Movie_Stills_Jai_Meenakshi_Govindarajan_28d3546.jpeg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
ஒரு காட்சியின் வீரியத்தை பார்வையாளனுக்கு உணர்த்த வன்முறை
காட்சிகள் என்பது அவசியம்தான். ஆனால், ஏன் என்றே தெரியாமல்
எல்லோருமே சட்டையில் சிவப்பு மையை பூசியபடியே திரிகிறார்கள்.

'நீங்க ஏன் சும்மா போறீங்க, வாங்க உங்க சட்டையில இன்க் அடிச்சு
விடுறோம்' என ஸ்கூல் பசங்க கணக்காக காமெடி செய்திருக்கிறார்கள்.
கால் தனியாக அறுபட்டு அந்தரத்தில் நிற்பது, நிர்வாணமாக்கப்பட்டு
கொலை எனப் படத்தில் எதற்கென்றே தெரியாமல் அத்தனை
வன்முறை காட்சிகள். ரத்தம், வன்மம், பகை, க்ரோதம் என விநோதமான
பின்னணி இசையும் நம்மைச் சேர்த்து சோதிக்கிறது.

'நான் மகான் அல்ல', 'வெண்ணிலா கபடிக் குழு', 'அழகர்சாமியின் குதிரை',
'ஜீவா', 'மாவீரன் கிட்டு' போன்ற படைப்புகளைக் கொடுத்த சுசீந்திரன்
எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.
சமீபத்தில் வெளியாகிக்கொண்டிருக்கும் சுசீந்திரன்
படைப்புகளில் மற்றுமொரு சுமார் ரக படைப்பாகத் தன்னைச்
சுருக்கிக்கொள்கிறது 'வீரபாண்டியபுரம்'.

நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83923
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum