ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் பார்வை | யுத்த சத்தம் - இரைச்சல் மிகுந்த எழிலின் கைகூடா முயற்சி

Go down

முதல் பார்வை | யுத்த சத்தம் - இரைச்சல் மிகுந்த எழிலின் கைகூடா முயற்சி Empty முதல் பார்வை | யுத்த சத்தம் - இரைச்சல் மிகுந்த எழிலின் கைகூடா முயற்சி

Post by ayyasamy ram Sat Mar 19, 2022 6:07 am

முதல் பார்வை | யுத்த சத்தம் - இரைச்சல் மிகுந்த எழிலின் கைகூடா முயற்சி 778807
மனதை மயக்கும் இசை போதையாகினால், அதனால் ஏற்படும்
குற்றங்களும், விளைவுகளுமே 'யுத்த சத்தம்'.

ஒரு மழைப்பொழுதில் பதற்றங்கள் நிறைந்தபடி போலீஸில் புகார்
கொடுக்க வருகிறார் படத்தின் நாயகி ராகவி (சாய்பிரியா தேவா).
இன்ஸ்பெக்டர் (பார்த்திபன்) இல்லாததால் காத்திருக்கும்போது
போலீஸ் ஸ்டேஷன் வெளியிலேயே கொடூரமாக வெட்டிக் கொலை
செய்யப்படுகிறார்.

இந்தக் கொலைக்கு சாட்சியாக இருந்த ஆட்டோகாரரும் இறந்து
போக, இருந்த ஒரு துப்பும் இல்லாமல் போகிறது. இடையில், எங்கோ
சென்றுகொண்டிருக்கும் டிடெக்டிவ் நாயகன் நகுலனை
(கெளதம் கார்த்திக்) தற்செயலாக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து
வரும் பார்த்திபன், அவருடன் சேர்ந்து இந்தக் கொலையை எப்படி
கண்டுபிடிக்கிறார்,

ஏன் இந்தக் கொலை நடக்கிறது என்பதை சொல்வது தான் யுத்த
சத்தத்தின் மீதிச் சத்தம். எழுத்தாளர் ராஜேஷ்குமாரின்
'யுத்த சத்தம்' நாவலை அடிப்படையாக கொண்டு இந்தப் படத்தை எ
டுத்துள்ளார்கள்.

துப்பறிவாளன் நகுலனாக படத்தின் நாயகன் கதாபாத்திரத்தில்
கெளதம் கார்த்திக். படத்தில் இவர்தான் நாயகனா எனக் கேள்வி
எழுகிறது. இரண்டாம் நாயகன் என்று வேண்டுமானால் சொல்லலாம்
போல. அந்த அளவே அவரின் காட்சிகளும், நடிப்பும்.

இறுதி சண்டைக்காட்சியில் நாயகன் அடிவாங்கி கொண்டே
இருப்பதும். இந்தச் சந்தேகத்தை வலுப்பெறச் செய்கிறது. அந்த
அளவுக்கு அவரின் பாத்திரம் மனதில் நிற்கத் தவறுகிறது.
ஒரு வரியில் சொன்னால்; எழிலை நம்பி அவர் கொடுத்த காட்சிகளில்
தோன்றிச் சென்றுள்ளார் கெளதம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் பார்வை | யுத்த சத்தம் - இரைச்சல் மிகுந்த எழிலின் கைகூடா முயற்சி Empty Re: முதல் பார்வை | யுத்த சத்தம் - இரைச்சல் மிகுந்த எழிலின் கைகூடா முயற்சி

Post by ayyasamy ram Sat Mar 19, 2022 6:09 am

முதல் பார்வை | யுத்த சத்தம் - இரைச்சல் மிகுந்த எழிலின் கைகூடா முயற்சி 16476085983060
-


உண்மையில், இதில் நாயகன் பாத்திரம் எதுவென்றால் நடிகர்
பார்த்திபனின் இன்ஸ்பெக்டர் கேரக்டரே. யூனிபார்ம் இல்லாத
இன்ஸ்பெக்டராக படம் முழுக்க பார்த்திபனே வருகிறார். எனினும்,
அவரின் வழக்கமான பேச்சு இந்தப் படத்தில் எரிச்சலை
ஏற்படுத்துகிறது. காமெடி என ரைமிங், டைமிங்காக வழக்கம்
போல் பேசி கதையின் ஓட்டத்தையும், ரசிகர்களையும்
சோதிக்கிறார்.

ரோபோ ஷங்கரும் இதையே தான் செய்கிறார்.
'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் எழில் -
ரோபோ ஷங்கர் காம்பினேஷன் ஓரளவுக்காவது சிரிப்பை
ஏற்படுத்தும். ஆனால், இதில் கோபத்தை தான் வரவழைக்கிறது.

ரோபோ ஷங்கர் தனது பாணியை மாற்ற வேண்டிய நேரம்
என்பதை புரிந்துகொண்டால் நல்லது. நாயகியாக சாய்பிரியா
தேவா. அவருக்கு இது நிறைய ஸ்கோப் உள்ள கேரக்டராக
இருந்தும் பார்வையாளர்களுக்கும் கதைக்கும் ஏனோ ஒட்ட
மறுக்கிறது.

மனோ பாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஸ்வின் என தனது
ஆஸ்தான படையை களமிறக்கி வழக்கம் போல் செய்துள்ளார்
இயக்குநர் எழில்.

கிரைம் த்ரில்லர் கதையில் ஒளிப்பதிவுக்கு நிறைய
எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த
ஆர்பி குருதேவ், பாடல்கள் உள்ளிட்ட சில இடங்களில் அதை
பூர்த்தி செய்கிறார்.

இசை இமான். பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையும்
அதே ரகம்தான். படத்துக்கு தீம் மியூசிக் தேவைதான். அதற்காக
நடந்தாலும், காரில் சென்றாலும் என எதற்கெடுத்தலுமா தீம்
மியூசிக் போட வேண்டும்... என்ன இமான் இதெல்லாம்?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் பார்வை | யுத்த சத்தம் - இரைச்சல் மிகுந்த எழிலின் கைகூடா முயற்சி Empty Re: முதல் பார்வை | யுத்த சத்தம் - இரைச்சல் மிகுந்த எழிலின் கைகூடா முயற்சி

Post by ayyasamy ram Sat Mar 19, 2022 6:10 am



சமீபகாலங்களில் காமெடி படங்களாக எடுத்த இயக்குநர் எழில்,
தன்மீதான காமெடி முத்திரையைப் போக்க இந்தப் படத்தை
எடுத்துள்ளார் என்பது தெளிவாகிறது. ஆனால், அதைப் பூர்த்தி
செய்வதற்கு, அவர் எழுதிய திரைக்கதை அவரின் நோக்கத்துக்கு
தடையாக உள்ளது.

காட்சிகளில் பல லாஜிக் ஓட்டைகளை தாண்டி திரைக்
கதையிலேயே பல ஓட்டைகள். கதாபாத்திரங்களுடைய தன்மையும்,
வசனங்களும் கூட இந்தப் படத்தை காப்பாற்ற தவறுகின்றன.

படத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரே புதுமையான விஷயம் டிஜிட்டல்
போதைப்பொருள்தான். வித்தியாசமான இதனைக்கூட
முழுமையாக சொல்லியிருந்தால் படம் வேறுமாதிரியாக
இருந்திருக்கும். ஆனால் அதிலும் கோட்டைவிட்டுள்ளார் இயக்குநர்
எழில்.

போதாதற்கு தேவையில்லாத காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள்,
பெண்கள் குறித்த முகம்சுளிக்கும் வசனங்கள்... இவற்றால்
ராஜேஷ்குமாரின் நாவலை குத்துயிரும், கொலையிருமாக படத்தின்
நாயகி முதல் சீனில் காண்பிப்பது போலவே காண்பித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் 'யுத்த சத்தம்' இரைச்சல் சத்தமாக பார்வையாளனை
கவரத் தவறுகிறது.

-மலையரசு
-இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் பார்வை | யுத்த சத்தம் - இரைச்சல் மிகுந்த எழிலின் கைகூடா முயற்சி Empty Re: முதல் பார்வை | யுத்த சத்தம் - இரைச்சல் மிகுந்த எழிலின் கைகூடா முயற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum