புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாட்டில் மருத்துவம் படிக்க அழைக்கும் கவர்ச்சி விளம்பரங்கள்.. உண்மை என்ன?
Page 1 of 1 •
https://t.me/c/1463757727/117335, [03-03-2022 16:22]
Article from Vikatan.
__
ஆனந்த விகடனில் பிரசுரமான கட்டுரை (டெலிகிராம்-மூலமாக)
-
ரஷ்யா, சைனா, ஜார்ஜியா, உக்ரைன், பிலிப்பைன்ஸ், செயின்ட் லூசியா,
கயானா, நேபாளம், கஜகஸ்தான், பங்களாதேஷ், கிர்கிஸ்தான்,
ஆர்மேனியா போன்ற நாடுகளுக்குத்தான்
அதிகபட்சமான தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்கச் செல்கிறார்கள்.
இந்த நாடுகளில் எல்லாம் வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து
ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் முளைத்திருக்கின்றன.
அக்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு
மாநிலங்களில் தங்களுக்கான முகவர்களை நியமித்திருக்கிறார்கள்.
பள்ளி ஆசிரியர்கள் கூட இதற்கு இப்போது முகவர்களாக உள்ளனர்.
ஒரு மாணவனுக்கு அவர்களுக்கு சுமார் ஒரு லக்ஷம் வரை
கமிஷன் கிடைக்கிறது!
பெரும்பாலான அந்நாட்டு மருத்துவ மற்றும் இதர கல்வி நிறுவனங்களில்
மாணவர் சேர்க்கைக்கு பெரிய அளவில் விதிமுறைகள் கிடையாது.
சிக்கினால் போதும்.
பெரும்பாலும் முகவர்களே நேர்காணல் செய்து மாணவர் சேர்க்கை
நடைமுறைகளை முடித்து விடுகிறார்கள்!!
ஏராளமான வாக்குறுதிகள் தருவார்கள். அரசியல் வாதிகள் வாக்குறுதிகள்
இதன் முன் ஒன்றுமே இல்லை என்றாகிவிடும்!!
தமிழகத்தை விட சிறந்த பாடத்திட்டம், உலகத் தர கல்வி நிறுவனம்,
இந்திய உதவியாளர்களுடன் கூடிய ஹாஸ்டல் வசதி, படிப்பை முடித்ததும்
வேலைவாய்ப்புக்கு உதவி என்றெல்லாம் கலர் கலராக பேசுவார்கள்.
20 லட்ச ரூபாய்க்குள் படிப்பை முடித்து விடலாம் என்பார்கள். இப்படி
வகைவகையாகப் பேசுபவர்கள் இரண்டு முக்கியமான விஷயங்களைப்
பற்றி மட்டும் பேசுவதேயில்லை.
படிப்பை முடித்துவிட்டு ஒரு நாள் கூட அந்த நாட்டில் இருக்கவும் முடியாது.
இந்தியாவுக்குத்தான் திரும்பியாக வேண்டும்.
இந்தியா வந்து இங்கேயும் நேரடியாக மருத்துவராக பணி செய்ய முடியாது.
இங்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் FMGE
(Foreign Medical Graduates Examination) என்ற தகுதித்தேர்வை
எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.
ஆனால், அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவ்வளவு எளிதல்ல
மருத்துவப் படிப்பு என்பது பிற படிப்புகளைப் போன்றதல்ல.
பிறர் உயிர்காக்கும் படிப்பு. ஏகப்பட்ட பொறுப்புகளை உள்ளடக்கியது.
நோய்களைப் பொறுத்தவரை, தட்பவெப்பங்களைப் பொறுத்து பகுதிக்குப்
பகுதி மாறும்.
ஒரு நாட்டில் டெங்கு கொள்ளை நோயாக இருக்கும். ஐரோப்பாவில் இருக்கும்
ஒரு நாடு அப்படியான ஒரு நோயை அறிந்தே இருக்காது.
அறிவியலோ, கணிதமோ உலகெங்கும் ஒரேமாதிரிதான் இருக்கும்.
ஆனால், மருத்துவம் அப்படியல்ல. செயிண்ட் லூசியாவின் பாடத்திட்டத்தில்
மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருகிற ஒரு மாணவன், இங்குள்ள
தட்பவெப்பத்துக்கும், வாழ்க்கை முறைக்கும். சூழ்நிலைக்கும் ஏற்றவாறு
சிகிச்சையளிப்பது என்பது சிக்கலானாது.
சில முகவர்கள், அங்கீகாரமே இல்லாத கல்லூரிகளில் எல்லாம்
மாணவர்களைச் சேர்த்து விட்டுவிடுகிறார்கள்.
பல கல்லூரிகளில் போதிய லேப் வசதி கூட இருப்பதில்லை.
முக்கியமாக, மேற்கண்ட நாடுகளில் ஆங்கிலம் முதல் மொழியாக
இல்லாததால், பெரும்பாலும் ஆசிரியர்களே உள்ளூர் மொழி
அறிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அதனால், மாணவர்கள் பாடங்களை
புரிந்து கொள்வதே சிரமம்.
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் சொல்வோரின் எண்ணிக்கை
அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்திய மருத்துவக் கவுன்சில் 2002 ஆம் ஆண்டு
முதல் FMGE தகுதித்தேர்வை நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
இத்தேர்வு வெளிநாட்டில் மருத்துவம் படிப்பை முடிக்கும் மாணவர்களின்
நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விட்டது.
" FMGE தேர்வு, வருடத்துக்கு இரண்டு முறை நடக்கும்.
மொத்தம் 300 வினாக்களுக்கு தேர்வு நடத்தப்படும். காலையில்
150 மதிப்பெண்கள், மாலையில் 150 மதிப்பெண்கள். இரண்டு பிரிவாக தேர்வு
நடக்கும். மொத்தம் 300 மதிப்பெண்கள். 5 மணி நேரம் தரப்படும்.
இந்தத் தேர்வை மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவும், தேசிய தேர்வு
வாரியமும் சேர்ந்து நடத்துகின்றன. கேள்விகள் சரியான விடையைத் தேர்வு
செய்யும் வகையில் இருக்கும். கேள்வித்தாளை வெளியில் கொண்டு செல்ல
அனுமதி இல்லை. மறுமதிப்பீடு செய்ய முடியாது.
அண்மையில் நடந்த நீட் தேர்வில் கடைபிடித்ததை விடவும் பல மடங்கு
கடுமையான நடைமுறைகள் இந்தத் தேர்வில் கடைபிடிக்கப்படும்.
சென்னை, திருச்சி, கோவையில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும் உடனடியாக பிராக்டிஸ் செய்ய முடியாது.
ஒரு பல்கலைக்கழகம் அல்லது மருத்துவமனையில் ஓராண்டு இன்டர்ன்ஷிப்
செய்ய வேண்டும். அதன்பிறகுதான் சிகிச்சை அளிக்கமுடியும்..." என்று FMGE
தேர்வு நடைமுறைகளை விவரிக்கிறார் வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்
ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க அழைக்கும் கவர்ச்சி விளம்பரங்கள்..
உண்மை என்ன?

ஒன்று, நீங்கள் மேற்கண்ட எந்த நாட்டில் மருத்துவம் படித்தாலும் அந்த
நாட்டில் மருத்துவராக வேலை செய்ய முடியாது.

, [03-03-2022 16:22]
2012-13ல் 13,953 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினார்கள். அதில் 28.3 சதவிகித மாணவர்களால்தான் தேர்ச்சி பெற முடிந்தது.
2013-14ல் 6395 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 16.7 சதவிகிதம் பேர் தான்.
2014-15-ல் தேர்வு எழுதியவர்கள் 12,494 பேர். அதில் தேறியவர்கள் 13.1 சதவிகிதம் பேர்.
2015-16 ஜூன் மாதம் நடந்த தேர்வை 5863 பேர் எழுதினார்கள். அதில் தேறியவர்கள் 10.4 சதவிகிதம் பேர்.
ஒரு மாணவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.
வெளிநாட்டில் 5 ஆண்டுகாலம் தட்பவெப்பம் தாங்கி, மொழிச் சிக்கல் கடந்து மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வரும் பெரும்பாலான மாணவர்கள், FMGE தேர்வு எழுதுவதிலேயே தங்கள் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள்.
கரூரில் இந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறாமல் சிகிச்சையளித்த ஒருவர் போலி மருத்துவர் என்று கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.
இந்த தேர்வுக்கென பயிற்சி மையங்களும் முளைக்க ஆரம்பித்துள்ளன. டெல்லியில் உள்ள ஒரு பயிற்சி மையம் இந்த தேர்வுக்குப் பயிற்சி அளிக்க 1 லட்ச ரூபாய்க்கு மேல் கட்டணம் வாங்குகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளில் மாணவர் தேர்வு, பாடத்திட்டம் போன்றவை தரமாக இருப்பதால் அந்நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவுக்கு வந்து மருத்துவம் செய்ய இந்த FMGEதேர்வை எழுதத் தேவையில்லை.
வெளிநாட்டு மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை அனுப்பும் பெரும்பாலான நிறுவனங்கள் இந்தத் தேர்வைப் பற்றி மாணவர்களிடம் பேசுவதேயில்லை.
சிலர் மேலோட்டமாக, ’ஒரு தேர்வு’ என்ற அளவில் சொல்லிவிட்டு அதன் கடினத்தன்மையை மறைத்து விடுகிறார்கள்.
சில நிறுவனங்கள், மாணவர்கள் மருத்துவப் படிப்பை படிக்கும் காலத்திலேயே FMGE தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சியை வழங்குவதாகச் சொல்கின்றன. கடினமான இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி எந்த அளவுக்கு பயனளிக்கும் என்று சொல்வதற்கில்லை.
”இவ்வளவு சிக்கல்கள் இருந்தும் தமிழகத்தில் இருந்து அண்மைக்காலமாக ஆண்டுக்கு இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்கப் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்.
மாணவர்களை வளைக்க, வெளிநாட்டுக் கல்வி முகவர்கள், ஒரு வித்தியாசமான யுத்தியைக் கடைபிடிக்கின்றனர். தங்களிடம் சேரும் மாணவர்களின் பெற்றோரையே ஆள்சேர்க்கும் பணிக்கு நியமிக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு மாணவருக்கு இவ்வளவு என்று கமிஷன் வழங்குகிறார்கள். “என் பையன் வெளிநாட்டுலதான் படிக்கிறான். உங்கள் பையனையும் சேருங்கள்” என்று அவர்கள் சொல்வதை நம்பி, மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளை சேர்க்கிறார்கள்.
இது ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டே போகிறது என்கிறார்” ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்.
இந்தியாவில் இருந்து அதிக மாணவர்கள் சைனாவுக்குத்தான் செல்கிறார்கள். பொருள்களைப் போலவே அங்கே ஏராளமான தரமற்ற கல்வி நிறுவனங்கள் உண்டு. கமிஷன் அதிகம் கிடைப்பதால், இங்குள்ள முகவர்கள் அது மாதிரி கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுப்பி வைத்து விடுகிறார்கள். சைனாவில் படித்த மாணவர்கள் தான் FMGE தேர்வில் பெருமளவு பின்தங்குகிறார்கள். 2012 முதல் 2014 வரை 11825 மாணவர்கள் சைனாவில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். அவர்களில் வெறும் 18.9 சதவிகிதம் பேர்தான் FMGE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
வெளிநாட்டுக்கு மாணவர்களை அனுப்பும் நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதே இல்லை.
குடிசைத்தொழில்போல நிறுவனங்கள் முளைத்துவிட்டன. மாணவர் சேர்க்கை, கட்டணம் உள்ளிட்ட எதுவும் கண்காணிக்கப்படுவதில்லை.
பெற்றோருக்கு விழிப்புஉணர்வூட்டும் ஏற்பாடுகளும் இல்லை.
மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு வெளிநாடு சென்று படிப்பை முடித்துத் திரும்பும் அப்பாவி மாணவர்கள் FMGE தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தங்கள் எதிர்காலம் புரியாமல் தவிக்கிறார்கள்.
எங்கள் பிள்ளை வெளிநாட்டில் படிக்கிறது என்று சொல்வது பெற்றோருக்குப் பெருமைதான். ஆனால், எங்கே படிக்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள், என்ன படிக்கிறார்கள், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றியெல்லாம் பெற்றோருக்கு விழிப்பு உணர்வு இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியம்!!!
நன்றி : விகடன்
இன்னும் பல மாணவர்கள் தவறான பல பழக்க வழக்கங்களை கற்று கொண்டு வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். பெற்றோர்கள் மிகுந்த வேதனை அடைகிறார்கள்!
திருவண்ணாமலை, தருமபுரி, கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்து செல்லும் மாணவர்கள் தான் அதிகம்!
நீட் தேர்வு ஒன்னும் ராக்கெட் சயின்ஸ் இல்லை. மருத்துவராக சேவை செய்ய விருப்பம் இருந்தால் மனம் ஒப்பி படித்தாக வேண்டும்.
பெற்றவர்கள் வற்புறுத்தலுக்கு வேண்டி மருத்துவம் படிக்காதீர்கள்!!

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சமீப காலத்தில் படித்த கட்டுரைகளிலேயே மிக சிறந்த கட்டுரை.
விகடனுக்கும் ராம் அவர்களுக்கும் நன்றி.
விகடனுக்கும் ராம் அவர்களுக்கும் நன்றி.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிகவும் அருமையான கட்டுரை, தகுந்த நேரத்தில் பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1