ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு

3 posters

Go down

 உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு Empty உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Mar 05, 2022 9:09 pm


உக்ரைன் மீது விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்க நேட்டோ மறுப்பு!


-
 உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு 0Q4EsOO

உக்ரைன் மீது விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்க
நேட்டோ மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் உக்ரைன் கண்டனம்
தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது 10-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்ய தக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து
வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
அதில் குறிப்பாக உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர்,
பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து
வருகின்றன.

இந்நிலையில் தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை
செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று நேட்டோ
அமைப்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நேட்டோ மறுப்பு தெரிவித்துள்ளது.
நேட்டோவின் இந்த முடிவுக்கு உக்ரைன் அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேட்டோவின் இந்த முடிவு உக்ரைன் மீது மேலும் குண்டுகள் வீச ரஷ்யாவுக்கு
அனுமதி வழங்கியது போல அமைந்துவிடும் என்று தெரிவித்தார்.

-குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு Empty Re: உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Mar 05, 2022 9:12 pm

உக்ரைனிலிருந்து இதுவரை 13,000 பேர் மீட்பு


-
 உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு NSQwkdx

"உக்ரைனில் இருந்து இதுவரை சுமார் 13,300 இந்தியர்கள்
மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்
15 விமானங்கள் மூலம் சுமார் 2,900 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்"
என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்‌ஷி
தெரிவித்துள்ளார்.

மேலும், "சுமியில் மோதல் தொடர்வதால் அங்குள்ள இந்தியர்களை
மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. போர் நிறுத்தத்தை அறிவிக்க
இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" என
வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு Empty Re: உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Sat Mar 05, 2022 9:30 pm

தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என ஒரு சாரார் .
இந்தியர்களை காப்பாற்றவேண்டும் என்று மற்றொருவர் முயற்சி.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு Empty Re: உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Mar 05, 2022 9:36 pm

ரஷ்யாவின் அடுத்த இலக்கு இதுதான்... உக்ரைனை உஷார் படுத்திய எலான் மஸ்க்!


-
 உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு Elon-musk-16464623293x2
-
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில்,
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் விடுத்துள்ள எச்சரிக்கை
பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் உக்ரைனில்
ஸ்டார் லிங்க் சேவை செயல்பட்டு வரும் நிலையில், அவை ரஷ்யாவின்
இலக்காக மாறலாம் என ஆராய்ச்சியாளர் ஏற்கனவே எச்சரிக்கை
விடுத்திருந்தார்.

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில்,
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் விடுத்துள்ள எச்சரிக்கை
பரபரப்பை கிளப்பியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தீவிரமடைந்து வருகிறது.
தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ஏவுகணை
மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி ரஷ்யா முற்றிலும்
சேதப்படுத்தியுள்ளது. ரஷ்ய தாக்குதலால் லட்சக்கணக்கான மக்கள்
உக்ரைனை விட்டு வெளியேறி, அகதிகளாக அண்டை நாடுகளில்
தஞ்சம் அடைந்துள்ளனர்.

போர் மட்டுமல்லாது, ரஷ்யா இணைய வழியாகவும் ஹேக்கர்களை
பயன்படுத்தி உக்ரைனின் இணைய சேவையை முடக்கி வருவதாக
கூறப்பட்டது. இதனையடுத்து உக்ரைனில் இணைய சேவை கடுமையாக
பாதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உக்ரைனுக்கு ஸ்டார் லிங்க் சேவையை வழங்கும் படி
அந்நாட்டு அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ் கோரிக்கை
விடுத்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்டார் எலான் மஸ்க். கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி
அன்று, உக்ரைனில் ஸ்டார் லிங்க் சேவை தொடங்கப்பட்டு, பல்வேறு
முனையங்களில் வழியாக சேவை வழங்கப்பட்டு வருவதாக அறிவித்திருந்தார்.

உக்ரைனின் முக்கிய நகரங்களில் உள்ள அரசு சார்ந்த கட்டிடங்களை
ரஷ்ய ராணுவம் தாக்கி, அழித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின்
அடுத்த இலக்கு ஸ்டார் லிங்க் சேவையை அழிப்பதாக தான் இருக்கும்
என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க்
“முக்கிய எச்சரிக்கை: உக்ரைனின் சில பகுதிகளில் இன்னும் ரஷ்யா அல்லாத
தகவல் தொடர்பு அமைப்பாக ஸ்டார்லிங்க் மட்டுமே இயங்குகிறது,
எனவே அதனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புள்ளது.
எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும் தேவைப்படும்போது மட்டுமே ஸ்டார்லிங்கை இயக்குவது நல்லது
என்றும், குறிப்பாக பொதுமக்களிடம் இருந்து வெகு தொலைவில் இருக்கும்
படி ஆண்டனாவை வைக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தாக்குதல் கருவிகளின் விஷுவல் இமேஜில் சிக்காத வண்ணம் ஆண்டனாக்களை
பாதுகாக்க ஒளி உருமறைப்பை பயன்படுத்தும் படியும் அறிவுறுத்தியுள்ளார்.

-நியூஸ் 18

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு Empty Re: உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Mar 05, 2022 9:59 pm

``ஜெலன்ஸ்கி ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் மோதலைத் தூண்டிவிடப் பார்க்கிறார்" - ரஷ்யா குற்றச்சாட்டு


-
 உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு Vikatan%2F2022-02%2F66d8a52a-83db-4b24-9f6d-1c36700cd7aa%2FAP22048541695621.jpg?rect=0%2C0%2C3905%2C2197&auto=format%2Ccompress&format=webp&dpr=1
-
`உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுக்கும், நேட்டோவுக்கும் இடையே
மோதலை தூண்டிவிடப்பார்க்கிறார்" என்று ரஷ்யா குற்றம் சுமத்தியிருக்கிறது.

உக்ரைனில் கடந்த 9 நாள்களாக ரஷ்யப் படையினர், உக்ரைன் ராணுவத்துடன்
போர்புரிந்துவந்த நிலையில், தற்காலிகமாக உக்ரைனின் இரண்டு மாகாணங்களில்
மட்டும் போரை நிறுத்திவைப்பதாக ரஷ்ய ராணுவம் இன்று அறிவித்திருந்தது.
மேலும் முன்னதாக, உக்ரைனில் இருக்கும் வெளிநாட்டவர்களை உக்ரைன் ராணுவம்
மனித கேடயங்களாக பயன்படுத்துகின்றன என்றும் ரஷ்யா கூறியிருந்தது.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையில் இருந்து தற்போது அறிக்கை ஒன்று
வெளிவந்துள்ளது.
-
 உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு Vikatan%2F2022-03%2Fd317bb32-0d96-4130-b8ad-1790751ee8bc%2F6221a076f0aee.jpg?auto=format%2Ccompress&format=webp&dpr=1
-
அந்த அறிக்கையில்,
``உக்ரைனின் கார்கிவ் நகரில் இருக்கும் வெளிநாட்டவர்களை மீட்க
ரஷ்யா 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளுடன் எல்லையில் காத்துக்
கொண்டிருக்கிறது. ஆனால் உக்ரைன் ராணுவம், நாங்கள் அவர்களை
மீட்பதை தடுக்கிறது.

மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும்
இடையே மோதலை தூண்டிவிடப்பார்க்கிறார்.
அதுதான் அவரது எண்ணமும் கூட. அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா,
கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆகியவை ரஷ்யா மீது
பொருளாதாரத் தடைகள் விதித்தாலும் ரஷ்யாவை தனிமைப்படுத்த
முடியாது. நாங்கள் அவற்றை எதிர்கொள்வோம்" என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முன்னதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம்,
``உக்ரைனில் இருக்கக்கூடிய 2,000-க்கும் மேற்பட்ட ராணுவ
கட்டமைப்புகளை நாங்கள் அழித்துவிட்டோம். அதில் 71 தகவல்தொடர்பு
நிலையங்கள் மற்றும் 61 ரேடார் அமைப்புகளும் தகர்க்கப்பட்டுள்ளன"
எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு Empty Re: உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Mar 06, 2022 7:28 am

 உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு PdMMQQH
-
 உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு GKoKW4z
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு Empty Re: உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு

Post by Dr.S.Soundarapandian Sun Mar 06, 2022 10:25 am

"தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என ஒரு சாரார் .
இந்தியர்களை காப்பாற்றவேண்டும் என்று மற்றொருவர் முயற்சி."

- இப்படிப்பட்ட கருத்து வருவதற்கு என்ன காரணம்?

தொடர்ந்து தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு Empty Re: உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Sun Mar 06, 2022 2:10 pm

Dr.S.Soundarapandian wrote: "தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என ஒரு சாரார் .
இந்தியர்களை காப்பாற்றவேண்டும் என்று மற்றொருவர் முயற்சி."

- இப்படிப்பட்ட கருத்து வருவதற்கு என்ன காரணம்?

தொடர்ந்து தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதே!
மேற்கோள் செய்த பதிவு: 1358862

இன்று நேற்றா இந்த புலம்பல்!
நேருவில் ஆரம்பித்து இந்திராவில் தொடர்ந்து வாஜ்பாயிலிருந்து ஆரம்பித்து மோடி வரை இதே அழுகை.தென்னாடு தேய்கிறது வடநாடு வாழ்கிறது என்று ஆரம்பித்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை ஒழித்து கழக ஆட்சியை ஏற்படுத்தி இன்னமும் இதே பாடலை பாடுவது சரியாக படுகிறதா? இங்கே தாழ்த்தப்படுகிறோமோ என்ற எண்ணத்தை தூள்தூளாக்கி , தமிழக , கேரள /தெலுகு வாழ் இளைஞர்கள் அமெரிக்கா /இங்கிலாந்து /கனடா சென்று தலைமை அதிகாரிகளாக மாறி உலகையே மாற்றுகிறார்கள்.
நம் இயலாமையை மறந்து மற்றவர்களை குறை கூறுவது சரியாக படுகிறதா?
சுயநிலை ஆராய்தல் இந்த விஷயத்தில் பலன் அளிக்கும் என்றே எண்ணுகிறேன்.
எந்தன் கருத்து.....யாரையும் குறை கூறுவதாக எண்ணவேண்டாம். புன்னகை புன்னகை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு Empty Re: உக்ரேன்-ர‌ஷ்ய நிலவரம்: - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum