புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_m10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_m10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_m10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_m10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_m10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_m10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_m10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_m10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_m10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_m10மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 20, 2010 12:03 pm

பெண் விடுதலை, பெண் விடுதலை என்ற பெண்ணூரிமை மீட்டெடுப்பு போராட்டத்தின் விளைவாக தற்போது பெண்கள் மிகப்பரவலாக அனைத்து துறைகளிலும் காணப்படுகின்றனர். ஆணுக்கு பெண் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும் வண்ணமாகவும் செயல்படுகின்றனர்.ஆனால், இப்படி செயல்படும் பெண்களில் பெரும்பான்மையானவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது?

ஆண்களைப்போல உடை உடுத்துவதும், நெஞ்சை நிமித்தி நடப்பதும் தான், பெண் சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர் போலும். மகாபாரத பாஞ்சாலியைப்போல எல்லா நேரத்திலும் கூந்தலை முடியாதே வருகின்றனர். கிராமத்துப் பெண்களைக் காட்டிலும் நகரத்து பெண்களிடம்தான் இந்தப்போக்கு மிதமிஞ்சி இருக்கிறது.எதனை வலியுறுத்த இவர்கள் இப்படி செயல்படுகின்றனர்?

தற்போது, குறிப்பாக படித்த கல்யாணமாகாத பெண்களிடம் அதிக மாற்றங்கள் காணப்படுகின்றன. இவர்கள் தங்களது கணவர் எப்படி இருக்க வேண்டும், திருமணத்திற்குப் பிறகு எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும், வீட்டு அலுவல்களை எப்படியெல்லாம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஒரு நீண்ட பட்டியலையே முன்வைக்கின்றனர். இதனை பட்டியல் என்று கூறாது ஷரத்துக்கள் என்று கூறுவது தான் மிகச்சரியாக இருக்கும். திருமண வணிக ஒப்பந்த ஷரத்துக்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு அதன்படியே வாழ்க்கை நடத்துவதும் ஒரு வாழ்க்கையா? திருமண பந்தத்தையே கொச்சைப்படுத்தும் இத்தகைய ஷரத்துக்களை வெளிப்படையாகவும்,பொதுப்படையாகவும் பேசுவது தான் ‘பாரதி கண்ட புதுமைப்பெண்' என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

“இதயங்கள் வேண்டுமானால் இரண்டாக இருக்கலாம்;ஆனால் துடிப்பு ஒன்றாக இருப்பதை உறுதி செய்வதுதான் திருமணம்”
என்பதை புரிந்தகொள்ளாமல், மேற்கத்திய பாணியில் கணவரை தேர்ந்தெடுத்து பின் விவாகரத்துக்கு முந்தியடிக்கின்றனர்.

தன் எண்ணோட்டத்திற்கு தகுந்தவராக இருக்க வேண்டும், தன் மனநிலையை புரிந்து நடப்பவராக இருக்க வேண்டும் என்ற அடிப்படை எதிர்பார்ப்புகள் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை.ஆனால், எதனையும் முன் ஒத்துக்கொள்ளப்பட்ட ஷரத்துக்களில் இருப்பதைப் போன்றுதான் நடந்துகொள்ள வேண்டும் என்பது அருவருக்கத்தக்கது. உதாரணமாக, தற்போது பெண்கள் அதிகம் வலியுறுத்துவது, “ நானும் சம்பாதிக்கிறேன், அதனால் வீட்டு வேலைகளை அவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்பதுதான். மேலோட்டமான பார்வையில் இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியாது, ஆனால், உற்றுநோக்கும் போதுதான் இதிலுள்ள கடுமை புரியும். யார் எந்த வேலையை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானித்து செயல்படுவதற்கு பெயர் திருமணமா?

தன் அன்பு மனைவி கஷ்டப்படுவதை எந்த கணவன்தான் பொறுத்துக்கொள்வான்? இதனை ஏன் இவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? அப்படியே அவர் புரிந்துகொள்ளாவிட்டாலும், உங்கள் அதீத அன்பில் அவர் வழிக்குவந்து விடுவாரன்றோ! அதைவிடுத்து திருமணத்திற்கு முன்பே ஷரத்துக்களை முன்மொழிவது ஏனோ?

மாட்டின் பல்லைப்பிடித்துப்பார்ப்பதைப் போல பார்க்கின்றனர். பலர் மத்தியில் காட்சிப்பொருளைப் போல நிற்கவைத்து பார்க்கின்றனர் என்று கூப்பாடு போட்டார்களே, இவர்கள் எத்தகைய மணமகனை எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா? இதோ அந்த பட்டியல்.

* உயர்கல்வி நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும். முதுநிலை படித்திருந்தால் முன்னுரிமை.
* தன்னைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டும்
* தங்கள் ஊரிலேயே/மாநிலத்திலேயே இருக்க வேண்டும்
* அழகான, நகைச்சுவைமிக்க மற்றும் கடவுள் பக்தியுடையவராக இருக்க வேண்டும்.
* பயனுள்ள பொழுதுபோக்கு கொண்டவராக, எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவராக இருக்க வேண்டும்
* வீட்டு வேலைகளை பங்கீட்டுக்கொள்பராக இருக்க வேண்டும்
* இரண்டு அல்லது மூன்று வயது மட்டுமே வித்தியாசம் இருக்க வேண்டும்......

இப்படி அந்த பட்டியல் ஒரு முடிவிலியாக சென்றுகொண்டே இருக்கிறது. மேற்கூறிய பட்டியலை பார்க்கும்போது, இவர்கள் யாவரும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியைதான் எதிர்பார்க்கின்றனர்.ஆனால், இவர்களுக்கெல்லாம் ஒன்றை ஞாபகப்படுத்துவது நம் கடமை. அந்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கூட, தன் மனைவியை சந்தேகித்து, கர்ப்பிணி பெண்ணான அவளை தனியே காட்டிலிட்டு வந்தவன்.ஆனால் நாங்கள் அப்படியல்ல. இதயத்தில் வைத்து தாங்குபவர்கள்.உயிராகிவிட்டவளை உள்ளளவும் வைத்து போற்றுபவர்கள்.

பொதுவாகவே, “திருமணம் என்பது பெண்களுக்கு அன்பையும், பாதுகாப்பையும் அளிப்பது, அதேபோல ஆண்களுக்கு இன்னொரு தாயினை அடையாளம் காட்டுவது” என்று காலம்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், படித்த பெண்களில் பலர், தங்களுக்கு பணப்பாதுகாப்பு அளிப்பவருக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். பணத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது கல்லைக்கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதற்கு சமம்.

பெருவாரியான பெண்கள் இப்படி மாறிவிட்டிருந்தாலும், ஆண்கள் இன்னமும் அதே இருபதாம் நூற்றாண்டு ஆண்களாகவே தொடருகின்றனர். குடும்பபாங்கான பெண்ணாக இருக்க வேண்டும், காலை எழுந்தவுடன் வாசலில் கோலமிட்டு தன்னை வரவேற்க வேண்டும், வருமானத்தை அறிந்து அதற்கேற்ப குடும்பத்தை நடத்திச் செல்பவளாக, நல்ல மருமகளாக, தன் தேவையறிந்து நடந்துகொள்பவளாக........ என்று இன்னமும் அதே பழைய பஞ்சாங்கமாகவே இருக்கின்றனர். ஆண்களே, அவர்கள் ஒளியின் வேகத்தில் பயணிக்கிறார்களாம்.

நாம், அவ்வளவு வேகமாக பயணிக்க வேண்டியதில்லை.ஆயினும், குறைந்தபட்சம் இருபத்தோராம் நூற்றாண்டுக்காவது வருவோமாக.



மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Jan 20, 2010 12:07 pm

இவர்கள் யாவரும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியைதான்
எதிர்பார்க்கின்றனர்.ஆனால், இவர்களுக்கெல்லாம் ஒன்றை
மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 677196 மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 677196 ஞாபகப்படுத்துவது நம்
கடமை. அந்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கூட, தன் மனைவியை சந்தேகித்து,
கர்ப்பிணி பெண்ணான அவளை தனியே காட்டிலிட்டு வந்தவன்.ஆனால் நாங்கள்
அப்படியல்ல. இதயத்தில் வைத்து தாங்குபவர்கள்.உயிராகிவிட்டவளை உள்ளளவும்
வைத்து போற்றுபவர்கள்.
மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 838572 மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 838572
சிவா அண்ணா அருமையான பதிவு வாழ்த்துக்கள் மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 678642



மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 20, 2010 12:57 pm

நாங்க ஆண்களிடம் எதிர்பார்க்கும் இந்த தகுதி எல்லாமே நல்லதுக்கு தானே சிவா.இத தப்புன்னு சொல்றீங்களா. நாங்க எதிர்பாக்குற இந்த தகுதிகள் இல்லை என்றாலும் பெண்கள் கல்யாணம் பண்ணிக்கிறோமே. ஆனால் ஆண்கள் அப்படி இல்லை சிவா.நீங்க எதிர்பார்க்குற தகுதி ஒன்று இல்லை என்றாலும் யாராவது ஏத்துக்கொள்கீறீங்களா?



மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Uமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Dமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Aமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Yமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Aமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Sமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Uமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Dமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Hமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 20, 2010 1:01 pm

UDAYASUDHA wrote:நாங்க ஆண்களிடம் எதிர்பார்க்கும் இந்த தகுதி எல்லாமே நல்லதுக்கு தானே சிவா.இத தப்புன்னு சொல்றீங்களா. நாங்க எதிர்பாக்குற இந்த தகுதிகள் இல்லை என்றாலும் பெண்கள் கல்யாணம் பண்ணிக்கிறோமே. ஆனால் ஆண்கள் அப்படி இல்லை சிவா.நீங்க எதிர்பார்க்குற தகுதி ஒன்று இல்லை என்றாலும் யாராவது ஏத்துக்கொள்கீறீங்களா?

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை எங்கு நிறைந்துள்ளதோ அங்குதான் மகிழ்ச்சியும் குடியிருக்க விரும்புகிறது!!!



மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Jan 20, 2010 1:10 pm

அனைவருக்கும் என் இனிய வணக்கம், எல்லாவற்றிலும் விட்டு கொடுக்க முடியாது
சிவா அண்ணா



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 20, 2010 1:12 pm

எப்படி இப்படியல்லாம் கலகுரிங்க தல

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 20, 2010 1:13 pm

சிவா wrote:
UDAYASUDHA wrote:நாங்க ஆண்களிடம் எதிர்பார்க்கும் இந்த தகுதி எல்லாமே நல்லதுக்கு தானே சிவா.இத தப்புன்னு சொல்றீங்களா. நாங்க எதிர்பாக்குற இந்த தகுதிகள் இல்லை என்றாலும் பெண்கள் கல்யாணம் பண்ணிக்கிறோமே. ஆனால் ஆண்கள் அப்படி இல்லை சிவா.நீங்க எதிர்பார்க்குற தகுதி ஒன்று இல்லை என்றாலும் யாராவது ஏத்துக்கொள்கீறீங்களா?

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை எங்கு நிறைந்துள்ளதோ அங்குதான் மகிழ்ச்சியும் குடியிருக்க விரும்புகிறது!!!
நீங்க சொன்னது போல பெண்கள் விட்டு கொடுக்கிறதால தான் ஆண்கள் எல்லாரும் நிம்மதியா இருக்கீங்க.பெண்கள், ஆண்கள்கிட்ட நாங்க எதிர்பார்க்குற தகுதி இல்லை என்றாலும் கல்யாணத்துக்கு பிறகு அதை பெரிது படுத்துவதில்லை.ஆனால் எந்த தகுதியுமே இல்லாத எத்தனை ஆண்கள்,தகுதி உள்ள‌ பெண்களை குத்திக் காட்டுவதும் அடிமை படுத்துவதும் இன்றும் நடந்துக்கிட்டுதான இருக்கு. அப்பவும் பெண்கள் விட்டு கொடுப்பதால் தான் குடும்பம் அமைதியா போயிட்டிருக்கு.இந்த விசயத்தில ஆண்கள் 20ம் நூற்றாண்டுக்கு வந்தால் எத்தனை பெண்கள் பயனடைவார்கள்.



மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Uமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Dமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Aமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Yமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Aமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Sமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Uமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Dமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Hமாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் A
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 20, 2010 1:52 pm

எனக்கு பிடித்த வரிகள் மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 68516 மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 68516

üஇதயங்கள் வேண்டுமானால் இரண்டாக இருக்கலாம்;

ஆனால் துடிப்பு ஒன்றாக இருப்பதை உறுதி செய்வதுதான் - திருமணம்

ü தன் எண்ணோட்டத்திற்கு தகுந்தவராக இருக்க வேண்டும், தன் மனநிலையை புரிந்து நடப்பவராக இருக்க வேண்டும் என்ற அடிப்படை எதிர்பார்ப்புகள் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை.

ü தன் அன்பு மனைவி கஷ்டப்படுவதை எந்த கணவன்தான் பொறுத்துக்கொள்வான்? இதனை ஏன் இவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? அப்படியே அவர் புரிந்துகொள்ளாவிட்டாலும், உங்கள் அதீத அன்பில் அவர் வழிக்குவந்து விடுவாரன்றோ!

ü அந்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கூட, தன் மனைவியை சந்தேகித்து, கர்ப்பிணி பெண்ணான அவளை தனியே காட்டிலிட்டு வந்தவன்.ஆனால் நாங்கள் அப்படியல்ல. இதயத்தில் வைத்து தாங்குபவர்கள்.உயிராகிவிட்டவளை உள்ளளவும் வைத்து போற்றுபவர்கள்.

ü திருமணம் என்பது பெண்களுக்கு அன்பையும், பாதுகாப்பையும் அளிப்பது, அதேபோல ஆண்களுக்கு இன்னொரு தாயினை அடையாளம் காட்டுவது

ü குடும்பபாங்கான பெண்ணாக இருக்க வேண்டும், காலை எழுந்தவுடன் வாசலில் கோலமிட்டு தன்னை வரவேற்க வேண்டும், வருமானத்தை அறிந்து அதற்கேற்ப குடும்பத்தை நடத்திச் செல்பவளாக, நல்ல மருமகளாக, தன் தேவையறிந்து நடந்துகொள்பவளாக........ என்று இன்னமும் அதே பழைய பஞ்சாங்கமாகவே இருக்கின்றனர்.

சிவா அண்ணா தங்களது கருத்துக்கள் மிகவும் உண்மை. மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Icon_smile நான் அதை வழிமொழிகிறேன். இருப்பினும் என்னால் அதை முழுவதுமாய் ஏற்றுக்கொள்ள இயலவில்லை மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 865843

* உயர்கல்வி நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும். முதுநிலை படித்திருந்தால் முன்னுரிமை.
* தன்னைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டும்
* தங்கள் ஊரிலேயே/மாநிலத்திலேயே இருக்க வேண்டும்
*அழகான, நகைச்சுவைமிக்க மற்றும் கடவுள் பக்தியுடையவராக இருக்க வேண்டும்.
* பயனுள்ள பொழுதுபோக்கு கொண்டவராக, எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவராக இருக்க வேண்டும்
* வீட்டு வேலைகளை பங்கீட்டுக் கொள்பராக இருக்க வேண்டும்
* இரண்டு அல்லது மூன்றுவயது மட்டுமே வித்தியாசம் இருக்க வேண்டும்......

அண்ணா இதோ இந்த பட்டியலை போல ஆண்களும் தங்களது வருங்கால மனைவிக்கு ஏராளமான ஷரத்துக்களை தங்கள் மனதில் வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் எங்களை போல வெளியில் சொல்வதில்லை மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Icon_eek மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் Icon_eek .

இதில் பணத்தை மட்டும் குறிப்பார்த்து நடக்கும் திருமணங்கள் பொதுவாய் மாப்பிள்ளை வீட்டார் தரப்பிலே நடக்கின்றன. என்னதான் நாம் பல நூற்றாண்டுகளை கடந்தாலும் இன்றும் வரதட்சணை என்பது நம்மில் மறவாமல் இல்லை. நடைமுறை வாழ்க்கையில் பணம் தான் அனைவருக்கும் மூலதனம். அதனால் தான் திருமணங்கள் இன்று காய்கறி வியாபரம் போல் ஆகிவிட்டது மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 502589 மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 502589 .


தன்னை மணப்பவர் என்றும் நல்லவராக இருக்க வேண்டும் என்பது தவறா?

தன்னை அதிகமாய் நேசிக்க வேண்டும் என்பது தவறா?

எந்த பெண்ணும் தன் கணவன் தன்னை நேசிப்பவராக இருக்க வேண்டும் என்பதையே அதிகம் விரும்புவாள்- பணம், பட்டம்,..........என எல்லாவற்றையும் தவிர..... மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 733974 மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 733974 மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 733974


என் மனதில் உள்ள, கருத்துக்களையே நான் எழுதியுள்ளேன். பிழையிருப்பின் மன்னிக்கவும். மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 678642 மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 678642 மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 678642

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Jan 20, 2010 1:58 pm

மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் P2

எல்லாம் சரிதான் யுவா கணவன் தனியாக மாட்டும் போது அடிக்காமல் இருந்தால்..!



யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 20, 2010 2:06 pm

மனைவிதானே அடிக்கிறாள் வாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 211781 மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 211781 மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள் 211781

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக