புதிய பதிவுகள்
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
171 Posts - 80%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
3 Posts - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
1 Post - 0%
Pampu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
336 Posts - 79%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
8 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 57 of 60 Previous  1 ... 30 ... 56, 57, 58, 59, 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Sep 08, 2023 4:43 pm

08.09.2023  

07.09.2023              மம்முட்டி பிறந்த நாள்       [1951]  

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 IjVBgPc                  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 BzFdE9p

மலையாள சூப்பர் ஸ்டார். நடிகர் & தயாரிப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். ஃபேஷன் உணர்வு உள்ளவர். ஒரு ஆய்வில் மம்முட்டி மிகவும் கவர்ச்சியான நடிகராக செலெக்ட் செஞ்சாங்க.

இவரோட அப்பா வியாபாரம், நெல் சாகுபடி செஞ்சார். மம்முட்டி சட்டம் படிச்சு, ரெண்டு வருஷம் வக்கீலா வேல செஞ்சார்.

மலையாள படங்கள்ல நெறைய நடிச்சிருக்கார். ஒரு மலையாள படம் சர்வதேச விழால ரிலீஸ் ஆனபோது, வெனிஸ் நகரம் முதல் கிட்டத்தட்ட 40 சர்வதேச சினிமா விழால ரிலீஸ் செஞ்சாங்க. டாக்ட்டர் பாபாசாகேப் அம்பேத்கார் என்ற படம் 2000ல ஹிந்திலயும், இங்கிலீஷ்லயும் ரிலீஸ் ஆச்சு. TV சீரியல்கள்ல நடிச்சார். காலேஜ் படிக்கும்போது 1971ல மலையாள படத்தில நடிக்க ஆரம்பிச்சார். மம்முட்டி தமிழ்ல நடிச்ச முதல் படம் 1990ல மௌனம் சம்மதம்.

மலையாள படங்கள்ல பாட்டு பாடியிருக்கார். மலையாள படங்களின் வெற்றி நாயகன். இவருக்கு சொந்தமா மலையாள TVசேனல்களை நடத்தும் குழுவின் தலைவர் பொறுப்பில் இருக்கார். விநியோக நிறுவனங்கள் இருக்கு.

மத்தவங்களுக்கு உதவும் குணம் இவருக்கு உண்டு. கேரளால மனித நேயம் சம்பந்தமான செயல்களை செய்றார். ஏழைகள் மறுவாழ்வு திட்டங்களில் மூலமா வேலை செய்றார். குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, பிச்சை எடுக்கிறதை ஒழிப்பது, ஏழைகள் மறுவாழ்வு இவற்றுக்காக வேலை செய்ற அமைப்புகள் கூட சேந்து இவரும் வேல செய்றார். இவரோட ரசிகர் மன்றம் மூலமா இலவச கண் பாதுகாப்பு, சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுது. இதே மாதிரி உதவி தேவைப்படும் ஜனங்களுக்கு நிறைய செய்றார். குழந்தைகள் நலனை பாதுகாக்கும் ஒரு இந்திய இயக்கத்தில நல்லெண்ண தூதராக இருக்கார்.

விருதுகள் :
பத்மஸ்ரீ 1998, கௌரவ டாக்ட்டர் பட்டம் 2010, கேரளா பிரபா 2022

ஃபிலிம்ஃபேர் விருதுகள் :
சிறந்த நடிகர் - மலையாள படங்கள்

இன்னும் நெறைய விருதுகள்

53வது கேரள மாநில சினிமா விருதுகள் லிஸ்ட்ல  சிறந்த படமாக 2023ல மம்முட்டி நடிச்ச நண்பகல் நேரத்து மயக்கம் மலையாள படத்தையும், சிறந்த நடிகராக மம்முட்டியையும் செலெக்ட்  செஞ்சிருக்காங்க.

நன்றி :  விக்கி, hindutamil, cinema.vikatan, magicbricks, thamizhstars

ஒரு ராஜா வந்தானாம் எனக்கொரு ரோஜா தந்தானாம் அடி வாடி ராசாத்தி

மௌனம் சம்மதம்      1990

மேலூரு மாமன் மேலாக பாக்குறான் வேலூரு ராமன் ஏதேதோ கேக்குறான்

மக்கள் ஆட்சி     1995  

பூத்திருக்கும் வனமே வனமே பூப்பறிக்க இது தான் தினமே நான் பறித்திடும் முன்னமே

புதையல்      1997

பேபி  மீண்டும் சந்திப்போம்  

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 09, 2023 2:20 am

09.09.2023  

08.09.2023                 ஆஷா போஸ்லே பிறந்த நாள்           [1933]  
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 36C2AzF                            பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 CEp85OX

முன்னணி ஹிந்தி பின்னணி பாடகி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மராத்தி, குஜராத்தி, ஒரியா, பஞ்சாபி மொழிகள்ல பின்னணி, அஸ்ஸாமி, போஜ்புரி, ரஷ்யன் மொழிகள்ல தனி பாடல்கள், பல வகை பாடல்கள் பாடியிருக்கார். இந்தியாலயும், கனடா, துபாய், அமேரிக்கா, லண்டன் போன்ற வெளிநாடுகள்லயும் ஏகப்பட்ட தனி இசை நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டார்.

பிரபல ஹிந்தி பின்னணி பாடகிகள் லதா மங்கேஷ்கர், உஷா மங்கேஷ்கர் ஆஷாவின் சகோதரிகள்.  அக்காவும், தங்கச்சியும் குடும்பத்துக்காக சினிமால நடிக்கவும், பாடவும் ஆரம்பிச்சாங்க. லதாவும், ஆஷாவும் சேந்தும் ஹிந்தியில பின்னணி பாடினாங்க. அப்பா மராத்திய இசை, கர்னாடக இசை மேதை, மேடை நாடக நடிகர். அவரோட பொண்ணுங்களுக்கு அவரே பாட கத்துகொடுத்தார்.

1950கள்ல மற்ற பாலிவுட் பின்னணி பாடகர்களைவிட ஆஷா போஸ்லே அதிக பாட்டுக்கள் பாடினார். தமிழ்ல இளையராஜா, RD பர்மன், SA ராஜ்குமார், தேவா, AR ரஹ்மான், வித்யாசாகர் மியூஸிக்ல பாடியிருக்கார். தமிழ்ல பாடின முதல் பாட்டு 1987ல இளையராஜா மியூஸிக்ல எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில "ஷெண்பகமே செண்பகமே" பாட்டு. ஹிட்டோ ஹிட்டு பாட்டு. பட்டி தொட்டீலலாம் இவருக்கு ரசிகர்கள்.

ஆஷா போஸ்லே நல்லா சமைப்பார். ஹிந்தி சினிமா உலகத்தில பல சினிமா ப்ரபலங்கள் அவங்களுக்கு பிடிச்சத சமச்சு குடுக்க சொன்னா இவரும் அன்பா சமச்சு கொடுத்தார்.


விருதுகள் :
தாதாசாகேப் பால்கே விருது 2000, பத்ம விபூஷண், லதா மங்கேஷ்கர் விருது, ஸ்வராலய ஜேசுதாஸ் விருது

2011ல இவரோட பேர் கின்னஸ் புத்தகத்துல சேக்கப்பட்டிருக்கு.

ஃபிலிம்ஃபேர் விருதுகள் :
சிறந்த பின்னணி பாடகி - ஃபிலிம்ஃபேர் சிறப்பு விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, தேசிய விருதுகள், மகாராஷ்ட்ரா மாநில சினிமா விருதுகள் - ஹிந்தி படங்கள்

ஹிந்தி படங்களுக்காக இன்னும் ஏகப்பட்ட, ஏராளமான விருதுகளும், பட்டங்களும்.

நன்றி  விக்கி, hindutamil,

செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா  சம்மதமே

எங்க ஊரு பாட்டுக்காரன்          1987


அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன் அது கலைந்திடாமல்   கையில் என்னைச் சேர்த்தேன்

நான் சொன்னதே சட்டம்            1988

இப்போ சாத்து நடை சாத்து குளிர் காத்து காப்பாத்து கைய கோர்த்து கைய கோர்த்து இடம் பார்த்து கொடியேத்து

சேதுபதி I.P.S                             1994

பேபி  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 3838410834  

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 10, 2023 5:08 pm

10.09.2023 

ஜெயம் ரவி பிறந்த  நாள்            [1980]   

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 G7BmfQ1

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 SlWjhpE

கோலிவுட் சாக்லேட் பாய் ஹீரோக்கள்ல ஒருத்தர். மூர்த்தி வெண்ணிற ஆடை படத்தில நடிச்சுவெண்ணிற ஆடை மூர்த்தி ஆனாரோ அதே மாதிரி 2003ல ஜெயம் படத்தில மொதல்ல ஹீரோவா நடிச்சு ஜெயம் ரவி ஆயிட்டார். இவரோட அப்பா சினிமா எடிட்டர்.  டைரக்ட்டர் மோகன் ராஜா ரவியோட அண்ணன். இவங்க தயாரிச்சு டைரக்ட்டின படம் ஜெயம். மோகன்ராஜா டைரக்ட்டின சில படங்கள்ல ரவி நடிச்சார். எல்லாமே தெலுங்குல ஓஹோன்னு ஓடிய படங்களின் ரீமேக். நடிகர்கள் ஜீவா, ஆர்யா ரவிக்கு நல்ல நண்பர்கள். 

அப்பா மோகன் 1989ல தயாரிச்ச ஒரு தொட்டில் சபதம் படத்திலயும், அப்புறமா தெலுங்கு படங்கள்ல குட்டி பையனா நடிச்சார். ரவி 12 வயசிலேயே பரதநாட்டியம் கத்துக்கிட்டு அரங்கேற்றம் செஞ்சார். இவர் விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சதால சினிமாவுக்கு வந்துட்டார். மும்பைல நடிப்பு கத்துக்கிட்டார். ஜெயம் படத்தில நடிக்கிறதுக்கு முன்னால 2001ல ஆளவந்தான் படத்தில டைரக்ட்டர் சுரேஷ் கிருஷ்ணாவின் உதவி டைரக்ட்டரா வேல செஞ்சார். 

2015ல தனி ஒருவன் படத்தில நடிச்சார். இந்த படம் ரவியின் கேரியர்ல மிக பெரிய வெற்றிப்படம்.  இப்போ தனி ஒருவன் 2ல, இன்னும் சில படங்கள்ல  நடிச்சிட்ருக்கார். ஒரு விழால அவர்ட்ட கேட்டாங்க, "20 வருஷங்களை திரும்பி பார்த்தால் எப்படி இருக்கு?" அதுக்கு ரவி, "அப்டீல்லாம் பார்த்தா அப்டியே நின்னுருவேன். அதனால திரும்பியே பாக்குறதில்ல. நல்ல படங்கள்ல நடிக்கணும்ங்கிறதுதான் என்னோட லட்சியம். ரசிகர்களின் அன்பு என்னை இவ்ளோ தூரம் கொண்டு வந்திருக்குது"னு சொன்னார். நடிப்பு, நடனம், உடலமைப்பு, ஆக் ஷன் ஹீரோ, காமெடி ஸீன், ரொமான்ஸ்னு எல்லாத்துலயும் ரவிக்கு நல்ல பேர் கெடச்சுது. முக்கியமா டான்ஸ் ஆடும் திறமை, உயரம் இதெல்லாம் அவரை ஹீரோவா நிலைநிறுத்துச்சு. 

ஒரு கட்டத்தில் ரவிக்கு காதல் - காமெடி செட்டானதால நடிச்ச படம் 2008ல சந்தோஷ் சுப்பிரமணியம். படம் மாஸ் ஹிட் ஆனதால அவருக்கு சினிமா மார்க்கெட் உயர்ந்துச்சு. 2013ல ஆதி பகவன் படத்தில ஹீரோ - வில்லன்னு ரெண்டு ரோல்ல நடிச்சு அசத்தினார். சில ஹீரோயின்கள் ரவியோடு நடிக்க ஆசப்படுவாங்க.அவரோடு நடிச்சா தங்களுக்கு நெறைய நடிக்க சான்ஸ் கிடைக்கும்னு அவங்களுக்கு ஒரு நம்பிக்கை. ஸ்போர்ட்ஸ், பாக்ஸர், போலீஸ் சம்பந்தமான படங்களுக்கு ரவியைத்தான் தேடி வர்றாங்க. ரவியும் அந்த மாதிரி படங்கள்ல விரும்பி நடிக்கிறார். ரவி சினிமாக்கு வர்றதுக்கு முன்னாலே சண்டை, குதிரை சவாரி, டான்ஸ் கத்துக்கிட்டார். 

வேற மொழிகள்ல நடிக்க நெறைய சான்ஸ் கெடச்சும் ரவி நடிக்கல. ஏன்னா பிடிக்கல. தமிழ்ல மட்டும்தான்  நடிக்கணும்னு உறுதியாயிருக்கார். ரவி கார்களின் காதலன். ஒரு கார் அவருக்கு பிடிச்சுப்போச்சுன்னா அந்த கார் ரவியின் வாசல்ல வந்து நிக்கும். வருஷத்துக்கு ஒரு தடவையாவது வெளிநாட்டு ட்ரிப் கண்டிப்பா உண்டு. எங்க போகணும்னு தீர்மானம் செய்றது மனைவியும், மகனும். சினிமால தான் வேரூன்ற காரணமாயிருந்த அப்பா மேல ரவீக்கு தனி பாசம் உண்டு. அப்பா பற்றி பேசும்போது பெருமையா பேசுவார். 

விருதுகள்
1. தமிழ்நாடு மாநில விருது [1]- சிறந்த நடிகர் - M.குமரன் SON OF MAHALAKSHMI ௨௦௦௪
2. எடிசன் விருதுகள் [2]- சிறந்த நடிகர் - பேராண்மை 2009 & தனி ஒருவன் 2015
3. சைமா விருதுகள் [3] - தென்னிந்திய சிறந்த ரொமான்டிக் நட்சத்திரம் -  ரோமியோ ஜூலியட் 2015 \  
சிறந்த நடிகர் - தனி ஒருவன் 2015 / அடங்க மறு 2018
4. IIFA உத்சவம் [1] [சர்வதேச இந்திய சினிமா அகடமி விருது] - சிறந்த ஹீரோ - தனி ஒருவன் 2015
5. ஃபிலிம்ஃபேர் விருதுகள் [1] - சிறந்த நடிகர் - தனி ஒருவன் 2015
6. விகடன் விருது [1]- சிறந்த நடிகர் - பூலோகம் 2015

நன்றி  : விக்கி, tamil.hindustantimes, hindutamil, zeenews.india, cinema.vikatan

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி இதயமே தெரியுமா உனக்காகவே நானடி

ஜெயம்       2003

தப்பே இல்ல தொட்டுக்கோ தப்பே இல்ல தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல

மழை             2005

அடியே அடியே இவளே அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே அடியே அடியே அழகே என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே

ரோமியோ ஜூலியட்         2015


பேபி   மீண்டும் சந்திப்போம்  

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Sep 11, 2023 12:15 pm

11.09.2023 

10.09.2023      ரமேஷ் அரவிந்த் பிறந்த நாள்            [1964]   

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 XKtofah                                பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 A5LuHpy

என்ஜினியரிங் படிச்சார். இவர் அப்பா தன்னோட மூணு மகன்களையும் என்ஜினியராக்கணும்னு நெனச்சார். ரமேஷுக்கு சின்ன வயசிலிருந்தே கலை, நாடகம்னு ஆசை இருந்துச்சு. ஸ்கூல்ல பேச்சுப்போட்டியிலயும், நாடகங்கள்லயும் நல்ல பேர் வாங்கினார். ஆனா ரமேஷ் சினிமா துறைக்கு போவார்னு யாருமே நினைக்கல. காலேஜ்ல படிச்சிட்ருக்கும்போதே TV நிகழ்ச்சிகளை நடத்த ஸ்டூடியோக்கு போயி வந்தார். ஒரு கன்னட நிகழ்ச்சியை TVல தொகுத்து குடுத்துட்டு இருக்கும்போதுதான் டைரக்ட்டர் K பாலசந்தர்  ரமேஷின் திரை மொழி கேட்டு அசந்துட்டார். உடனே 1986ல தன்னோட கன்னட படத்தில நடிக்க வச்சார். இந்த படத்துக்கு ஆடிஷன் பண்ணும்போது, ரமேஷின் கண்கள் பாலசந்தருக்கு பிடிச்சிருந்துச்சு. ரமேஷ் சினிமாவுக்கு வந்த முதல் படம். தமிழ்ல முதல் படம் 1987ல  K பாலசந்தரின் மனதில் உறுதி வேண்டும். 

ரவி கன்னட நடிகர், டைரக்ட்டர், டைரக்ட்டர் & எழுத்தாளர். TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல கொஞ்சமா நடிச்சார். சில கன்னட படங்களை  டைரக்ட்டி இருக்கார். தமிழ்லயும் சூப்பர் ஹிட் படங்கள்ல நடிச்சு ஜனங்கள் மனசுல இடம் பிடிச்சிருக்கார். கமலஹாசனின் நெருங்கிய நண்பர். அவர்கூட சில படங்கள்ல நடிச்சது மட்டுமில்லாம, 2015ல கமல் நடிச்ச உத்தம வில்லன் தமிழ் படத்தை டைரக்ட்டியிருக்கார். இவர் நடிச்ச படங்கள் மூலமா அகில இந்திய அளவுல பேர் வாங்கினார். 

1997ல ஒரு  கன்னட படத்தில ரமேஷ் பெண் வேஷத்தில் நடிச்சார். 2021ல அந்த போட்டோவை தன் ஒரிஜினல் போட்டோகூட சமூக வலைதளத்தில ரவி போட்டிருக்கார். 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 HeEM1vb

ரவி நடிச்ச சில கன்னட படங்கள் 100 நாளுக்கு மேல ஓடியிருக்கு. கன்னடத்தில புத்தகங்கள் எழுதினார். 

விருதுகள்
கன்னட படங்கள்ல சிறந்த நடிகர், சிறந்த டைரக்ட்டர், சிறந்த கதைக்காக கர்னாடக மாநில சினிமா விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஸ்க்ரீன் விருது, சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது
இன்னும் சில விருதுகளும், 2022ல கௌரவ டாக்ட்டர் பட்டமும் வாங்கினார். 

நன்றி  : விக்கி, hindutamil, kalkionline, ramesharavind

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்

டூயட்            1994

தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும் உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்

கேளடி கண்மணி         1990

தை மாசம் பங்குனி போயி சித்திர மாசம் அப்பப்பா குப்பத்தில் எங்கும் நெத்திலி வாசம் 
வசந்த கால பறவை        1991


பேபி   ஜாலி  

சிவா, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 13, 2023 8:41 pm

13.09.2023  

  கார்த்திக்  பிறந்த நாள்                       [1960]  

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 K1TzXW6 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 5ni8vyM

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 B68bEO0

சொந்த பேர் முரளி கார்த்திகேயன். வாரிசு நடிகர். நவரச திலகம் நடிகர் முத்துராமனின் மகன். அப்பாவை போல இவரும் நவரச நாயகன்னு பட்டம் வாங்கியிருக்கார். சினிமால பாட்டும் பாடியிருக்கார். நடிகர் கௌதம் கார்த்திக்கின் மூத்த மகன்.

கார்த்திக் தமிழ், அப்பப்போ தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். ஆம்பளைங்களே லவ்வும் ஆணழகன். ஆரம்பத்தில அமுல் பேபியாயிருந்து, சாக்லேட் பாய் ஆனார். அப்புறம் ஆக் ஷன் ஹீரோவானார். பாரதிராஜா ஒரு தடவ கார்ல போயிட்டு இருக்கும்போது குட்டி பையன் கார்ல மோதி கீழ விழுந்துட்டான். சின்ன காயம். பாரதிராஜா அவனை கார்ல ஆஸ்பத்திரிக்கு அனுப்பிட்டு ஒரு மரத்தடியில நின்னுட்டு இருந்தார். பக்கத்தில ஒரு வீட்டு போர்ட்டிகோ. அங்க வெளயாடிட்டு இருந்த பையனை பாத்தார். அடுத்த நாள் ஷூட்டிங் ஆரம்பிக்கும் புது படத்துக்கு ஹீரோ மட்டும் கிடைக்கல. அந்த விளையாட்டு பையன பாத்து உற்சாகமாயிட்டார் பாரதிராஜா. விசாரிச்சதுல நடிகர் முத்துராமனின் மகன்னு  தெரிஞ்சுது. அன்னிக்கி ராத்திரியே பேசி ஓக்கே செஞ்சுட்டார். இதத்தான் நடிக்க வந்தது ஒரு விபத்துன்னு சொல்றாங்களோ? அடுத்த நாள் காலைல குமரி மாவட்டத்துக்கு வரச்சொன்னார் பாரதிராஜா. முரளி கார்த்திக் ஆனார். அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு ஹீரோவானார்.  அப்போ 1981ல சினிமால அடிக்க ஆரம்பிச்ச அலை ஓயவேயில்ல. அவருக்கு முதல் படம்னு தெரியாத அளவுக்கு ப்ரம்ம்ம்மாதமா நடிச்சிருந்தார். அந்த சமயத்தில காலேஜ்ல படிச்சிட்ருந்த நேரம்.

எந்த கேரக்ட்டராயிருந்தாலும் கார்த்திக் பொருந்திப்போவார். எந்த ஹீரோயின்கூட நடிச்சாலும் பொருத்தமான ஜோடினு ரசிகர்கள் கொண்டாடினாங்க. அவர் நடை, பேசுற பாவனை, முகத்துல  மாறி மாறி வரும் ரியாக் ஷன், துறுதுறுத்தனம் எல்லாமே ரசிகர்களை ரொம்பவே ரசிக்க வச்சுது.  நெஜந்தானேங்க? அவரோட காமெடிக்காகவே ரசிகர்கள் ஏராளம்.

1980கள்ல  ஆரம்பிச்ச சினிமா வாழ்க்கைல நெறைய 100 நாள் படங்கள், வெள்ளிவிழா படங்கள், வெற்றி படங்கள். அந்த கால கட்டத்தில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். குறிப்பா பெண் ரசிகர்கள். கார்த்திக் நடிச்சது வெரைட்டி, ப்யூட்டி கேரக்ட்டர்கள். அவரை மாதிரியே அவரோட ஹேர்ஸ்டைலும் அழகு. சலூனுக்கு போயி கார்த்திக் ஹேர்ஸ்டைல் மாதிரி முடி ஸ்டைல் செஞ்சுக்கிட்ட ரசிகர்களும் உண்டு. ரசிகர்கள் கார்த்திக்கை காதல் நாயகன்னு கூப்ட்டாங்க.

முதல் படத்தின் வெற்றிக்கு அப்புறம் சரியான கதை செலெக்ட்  செய்ய முடியாததால,  கொஞ்சம் டல்லடிச்சு போய்ட்டார். இந்த நிலைல 1986ல மௌனராகம் படத்தில கெஸ்ட் ரோல்ல நடிச்சிருந்தாலும், அதை பாத்துட்டு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானாங்க. மார்க்கெட் கெடச்சு மறுபடியும் ப்ரபலமானார் கார்த்திக். 1988ல உரிமை கீதம் கார்த்திக்கு திருப்புமுனை படம். அப்புறமா குணசித்திர ரோல், வில்லன் ரோல்லயும்  நடிச்சார். 2015ல அனேகன் படத்தில நெகட்டிவ் ரோல்ல நடிச்சார். 2000துக்கப்புறம் நடிக்கும் சான்ஸ் கொறஞ்சதால, கௌரவ ரோல்ல நடிச்சார். நவரச நாயகன் பட்டத்துக்கு ஏத்தமாதிரி அட்டகாசமா நடிச்சார். இவரோட  தனித்துவமான குரலுக்கும் ரசிகர்கள் உண்டு.  

1988ல சோலைக்குயில் படத்தில  ஹீரோயினியா ராகினி என்ற நடிகை கூட  ஹீரோவா நடிச்சு, அவரையே லவ்வி 1988ல கல்யாணம் செஞ்சுக்கிட்டார். அப்புறமா 1992ல ராகினியின் தங்கச்சியையும் கல்யாணம் செஞ்சுக்கிட்டார். கார்த்திக் சினிமால முதல்ல பாடிய பாட்டு அமரன் படத்தில "வெத்தல போட்ட சோக்குல" பாட்டு. லட்சலட்சமா சம்பாதிச்சாலும், தனக்குனு எதையும் வச்சுக்காம சொந்தக்காரங்களுக்கு பிரிச்சு கொடுத்துட்டு ஜாலியா இருந்தார். திரும்ப வருமா வராதான்னு யோசிக்காமலேயே சக நடிகர்களுக்கும் நெறைய குடுத்து உதவினார். அவர்கூட இருந்தவங்க இதை சொன்னாங்க.

கார்த்திக் ஹீரோவா வலம் வந்த காலத்தில அநேகமா பல ஹீரோயினிகூட நடிச்சார். ஆனா சிம்ரன்கூட நடிச்சாரான்னா இல்ல. அது ஒரு குறையா இருக்கலாமோ, கூடாதுல்ல. இத்தன வருஷமா இவங்க சேந்து நடிக்காம இப்ப அந்தகன் படத்தில நடிக்க இருக்கிறதா தகவல். கார்த்திக் முக்கியமான ரோல்ல நடிக்க அவருக்கு ஜோடியா சிம்ரன் நடிக்க போறார். இந்த படம் எடுக்கிறதுல ஏகப்பட்ட ப்ரச்னைகள். எப்போ ரிலீஸ்னுதான் தெரீல. ப்ரசாந்த் ஹீரோ. அவர் அப்பா த்யாகராஜன் டைரக் ஷன். சிம்ரன் ப்ரசாந்தின் அம்மாவா நடிப்பாரோ? அதிகாரப்பூரவமான தகவல் சீக்கிரமா வரும்போல.

இந்தியன், ஜென்ட்ல்மேன் ரெண்டு படத்தின் கதையையும் கார்த்திக்கை மனசுல வச்சு எழுதினதுன்னு டைரக்ட்டர் சொல்வார்.

விருதுகள் :
ஃபிலிம்ஃபேர் விருதுகள் :
சிறந்த நடிகர் - அக்னி நட்சத்திரம் 1988 ; வருஷம் பதினாறு 1989 ; கிழக்கு வாசல் 1990 ; பொன்னுமணி 1993

தமிழ்நாடு மாநில விருதுகள் :
சிறந்த அறிமுக நடிகர் - அலைகள் ஓய்வதில்லை 1981 ;
சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது - அக்னி நட்சத்திரம் 1988 ;
சிறந்த நடிகர் - கிழக்கு வாசல் 1990 ;
சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது - பூவேலி 1998 ; உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் 1998 ;
கலைமாமணி விருது

சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது : சிறந்த நடிகர் -  உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் 1998

நந்தி விருது

நன்றி : விக்கி, hindutamil, cineulagam, tamilminutes, etvbharat, tamil.oneindia, tamil360newz, tamil.filmibeat

மாலை சூட கண்ணே ராதா நாள் வராதா கைகள் தோள் தொடாதா

இளஞ்சோடிகள்                                  1982

வெத்தல போட்டு ஷோக்குல நா கப்புனு குத்தினே மூக்குல அட வந்தது பாரு ரெத்தம்

அமரன்                                                1992

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா

பொன்னுமணி                                    1993

பேபி   மீண்டும் சந்திப்போம்

சிவா, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 13, 2023 9:13 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 90s-actor-karthik
-
இளம்பெண்களின் சாக்லேட் பாயாகவும்,
நவரச நாயகனாகவும் திகழ்ந்த கார்த்திக்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 14, 2023 11:51 pm

14.09.2023   

ப்ரியாராமன் பிறந்த நாள்                         [1974]   

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 D97j1nT

சினிமா நடிகை, TV சீரியல் நடிகை, TV சீரியல் தயாரிப்பாளர், TV நிகழ்ச்சி தொகுப்பாளர்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ், மலையாள படங்கள்ல நிறைய நடிச்சார். சீரியல்கள்ல நடிச்சிருக்கார், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ரியாலிட்டி ஷோக்கள்ல ஜட்ஜா, கெஸ்ட்டா கலந்துக்கிட்டார். 

1993ல ரஜினிகாந்த் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரிச்சு நடிச்ச படம் வள்ளி. ப்ரியாராமன் இந்த படத்தில முதல்ல நடிக்க ஆரம்பிச்சார். 1999ல நேசம் புதுசு படத்தில ரஞ்சித் கூட நடிச்சு, லவ்வி கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 2014வரை ஒண்ணா வாழ்ந்தாங்க. ஏதோ ரெண்டு பேருக்கும் இடைல லடாய். விவாகரத்து வாங்கிட்டாங்க. 2 பிள்ளைங்கள அம்மா கூட்டிட்டு போய்ட்டாங்க. செய்தியாளர்ட்ட பேசிய போது அவங்க ரெண்டு பேருக்கும் இடைல கணவன் மனைவி உறவு இல்லேன்னாலும், எப்பவுமே நண்பர்களா இருக்க போவதா சொன்னாங்க. ரஞ்சித் ரெண்டாவது கல்யாணம் பண்றதுல தனக்கு கவல இல்லேன்னு ப்ரியா சொன்னார். தான் ரெண்டாவது கல்யாணமா செஞ்சுக்க மாட்டார்னும் ப்ரியா சொன்னார். 

ப்ரியா TV நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிட்ருந்தார். அப்புறமா சீரியல்ல நடிச்சார். ரஞ்சித்தும் சீரியல்ல நடிச்சார். செந்தூரப்பூவே சீரியல்ல ப்ரியாராமனும், ரஞ்சித்தும் கணவன் மனைவியா நடிச்சாங்க. 

ப்ரியாராமன் ஹீரோயின், குணச்சித்திரம் ரோல்ல நடிச்சு நல்ல பேர் எடுத்தார். மலையாள படங்கள்ல இவருக்கு நல்ல மவுசு. 

இதுல ப்யூட்டி என்னான்னா, 7 வருஷம் கழிச்சு 2021ல ப்ரியாராமனும், ரஞ்சித்தும் சேந்து கல்யாண நாளை கொண்டாடி, போட்டால்லாம் எடுத்து, செல்ஃபீல்லாம்தான், அதைல்லாம் தங்களோட வலைத்தளத்ல ஷேர் செஞ்சிருக்காங்க. ரசிகர்கள் வாழ்த்து சொல்லியிருக்காங்க. ப்ரியாவும் லைக் போட்டிருக்கார். அதே மாதிரி ப்ரியாவும் தன்னோட இன்ஸ்ட்ராக்ராம் பேஜ்ல போட்டா போட்டிருக்கார். விவாகரத்துக்கு அப்புறம் சேர்ந்த இவங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்து சொன்னாங்க. 


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 TpBQcNx


நன்றி  : விக்கி, tamil.filmibeat, tamil360newz 

விருதுகள்
சினிமா எக்ஸ்பிரஸ் விருது - சிறந்த அறிமுக நடிகை - வள்ளி 1993

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ  

சூரியவம்சம்            1993

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ 

வள்ளி                     1993

பட்டாம்பூச்சி சிறகடித்து கூட்டை விட்டு பறக்கிறதா 

பொன்மனம்                 1998


பேபி    சூப்பருங்க  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 17, 2023 11:44 pm

17.09.2023

நடிகவேள் MR ராதா அவர்கள் நினைவு நாள்        
[1907 - 1979]


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 A1AJrYc                            பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 ZDObTeA

மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன். மேடை நாடகம், சினிமா நடிகர். 10 வயசிலிருந்தே சின்ன சின்ன வேஷங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். சின்ன வயசிலேயே அப்பா இல்லாம போனதால வீட்டுக்கு அடங்காம, படிக்காம ஊர் சுத்திட்டு இருந்தார். மூணாப்பு வரைதான் படிச்சார். அப்புறம் அம்மாட்ட கோவிச்ச்சுகிட்டு  சென்னைக்கு வந்துட்டார். பொழைக்க வழி? சென்னை சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷன்ல மூட்ட தூக்கி சம்பாதிச்சார். அந்த சமயத்துலதான் ஆலந்தூர் பாய்ஸ் கம்பெனி ஓனர், ராதா ஒரே நேரத்தில 3 சூட்கேஸ் தூக்கிட்டு போன ஸ்டைல பாத்தார். தன்னோட நாடக கம்பெனீல சேர சொன்னார். ராதா சேந்துட்டார். ராதாவின் துறுதுறுப்பு, சுறுசுறுப்பு பாத்த கம்பெனி ஓனர் நாடகங்கள்ல நடிக்க சொன்னார். நல்லதங்காள் நாடகத்தில நல்லதங்காளின் பிள்ளைங்கள்ல ஒருத்தரா நடிச்சு நடிப்பு வாழ்க்கையை  ஆரம்பிச்சார். இவரோட நடிப்பை ஜனங்கள் ரசிச்சாங்க. ராதாவுக்காகவே நாடக கதைகள் எழுதப்பட்டுச்சு. 

அப்புறமா மதுரை பாய்ஸ் நாடக கம்பெனி மாதிரி பல நாடக கம்பெனீங்கள்ல வேல செஞ்சார். நாடக வாழ்க்கைல செட்டில் ஆவருதுக்குள்ள பலபல போராட்டங்களை சந்திச்சார். இப்படீல்லாம் கஷ்ட்டப்பட்டு நாடகம், சினிமா வாழ்க்கைல நெலச்சு நின்னார். அவருக்குன்னு தனி அடையாளம் தானாவே வந்துச்சு. அந்த காலத்தில ராதா நடிக்காத படமே  இல்லேன்னு  சொல்றமாதிரி நடிச்சார். சினிமால காமெடியனாவும், வில்லனாவும் நடிச்சார். வில்லனா நடிச்சு தனி பாதையை போட்டுக்கிட்டவர் ராதா. வில்லனா நடிச்சாலும் அதுலயும் கொஞ்சம் காமெடி இருந்துச்சு. 

CS ஜெயராமன், K சாரங்கபாணி, PD சம்பந்தம் இவங்கல்லாம் ராதாகூட நாடகங்கள்ல நடிச்சவங்கள்ல சிலர். ராதா நடிப்பு மட்டும் கத்துக்கிடல. கார் ட்ரைவர், மெக்கானிக், எலக்ட்ரிஷியன் வேலைகளையும் கத்துக்கிட்டார். அப்புறமா சொந்தமா நாடக கம்பெனி ஆரம்பிச்சார். நூத்துக்கணக்கான நாடகங்கள் நடத்தினார். 

இவர் நடிச்ச நாடகங்கள்ல ஜனங்கள் ஓஹோன்னு பேசியது ரத்தக்கண்ணீர் நாடகம்.  ஆயிரக்கணக்கான தடவ நடத்தப்பட்டுச்சு. "அடியே காந்தா" மறக்கக்கூடிய வசனமா? இந்த நாடகம் படமா எடுத்தபோது ராதா சில கண்டிஷன்கள் போட்டார். சினிமால நடிச்சாலும் நாடகங்கள் நடத்துறத விடமுடியாது, நாடகம் முடிஞ்சபிறகுதான்  ஷூட்டிங் வைக்கணும். இதை விட வேற கண்டிஷன் ஒண்ணு போட்டார். KB சுந்தராம்பாள்  நடிச்சபோது ஒரு லட்சம் ரூபா சம்பளம் வாங்கினார். இப்ப தனக்கு அதைவிட ரூ. 25,000 \ - அதிக சம்பளம் வேணும்னு  ஹைலைட்    கண்டிஷன். எல்லாத்துக்கும் தயாரிப்பாளர் உம் கொட்டிட்டார். 

அந்த குரல்ல ஏற்ற, இறக்கம், திடீர்னு குரல் கீழ இறங்கி கெக்கலிக்கும் மாடுலேஷன், குரல்ல இருந்த மாய வித்தைகளை முகத்தில பாவனைகள் மூலமா காட்ட தெரிஞ்ச ஒரே நடிகர்  ராதாதான்.  இதைலாம் யாரும் அவருக்கு சொல்லி கொடுத்ததில்ல. அவரோட சொந்த கண்டுபிடிப்புகள். ஒரே ஸீன்ல ஓவராக்ட்டிங், கரெக்ட்டான நடிப்பு, நவீன நடிப்பு, குறும்பு தெறிக்கும் நடிப்பு, பகுத்தறிவு பளீரிடும் வசனம், அசாத்திய உச்சரிப்புனு எல்லாவகை  நடிப்பாலும் ஜனங்களை கவர்ந்தவர். ஆனா நிஜ வாழ்க்கைல நடிப்புங்கிறது கொஞ்சங்கூட இல்லாம வாழ்ந்தார். 

அவரோட வசனங்களுக்காகவே கூட்டம் சேந்துச்சு. அதுக்காகவே நெறைய தடவ அவரோட  நாடகங்களை பாத்தாங்க. இவ்ளத்துக்கும், மேடைல ஸீன் செட்டிங், அலங்காரம் எதுவும் கெடயாது. காடு வரஞ்ச ஒரு நீல நிற படுதா. ஸீன் மாறும், வீடு வரஞ்ச படுதா இறங்கும். பொது இடம்னு பச்சை நிற படுதா. ஒரு கருப்பு ஸ்க்ரீன், ஒரு வெள்ளை ஸ்க்ரீன், அவ்ளோதான் மேடைல இருந்துச்சு. அவர் நடிப்பை  மட்டுமே ஜனங்களை சுண்டி இழுத்துச்சு. செட்டிங்கை இல்ல. 

ஒரு தடவ ராதாவுக்கு பொன்னாடை போத்துற விழா நடந்துச்சு. காமராஜர்தான் தனக்கு பொன்னாடை போத்தணும்னு ராதா சொன்னார். ராதாவுக்கு காமராஜர் மேல மதிப்பும் மரியாதையும் நெறைய இருந்துச்சு. அவர் ஆசைப்படியே காமராஜர் வந்து ராதாவுக்கு பொன்னாடை போத்தினார். 

நன்றி : விக்கி, patrikai, makkalathikaram, tamil.hindustantimes      

தொடரும்


பேபி   பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 3838410834  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 17, 2023 11:52 pm

17.09.2023

நடிகவேள் MR ராதா அவர்களின் நினைவு நாள் - தொடர்ச்சி

ராதா நாடகங்கள்ல கொடி கட்டி பறந்துட்டு இருந்த அந்த காலகட்டத்தில 1937ல  ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி என்ற படத்தில நடிக்க ஆரம்பிச்சார். 1942வரை சினிமால நடிச்சிட்டு மறுபடியும் நாடகங்கள்ல நடிக்க போய்ட்டார். அதுக்கப்புறம் 1954ல நடிக்க வந்ததுதான் ரத்தக்கண்ணீர் படத்தில. இந்த படத்துக்கு அப்புறமா சூப்பரா ப்ரபலமானார். அந்த கேரக்டராவே  வாழ்ந்தார். அதுக்கப்புறம் நாடகங்கள் மாதிரியில் சினிமாலையும் ஜொலிக்க ஆரம்பிச்சார். இந்த படத்தின் பல வசனங்கள் நல்ல ட்ரெண்ட்.  ஆரம்பத்தில ஹீரோவா  நடிச்சதெல்லாம் வில்லனாவும், காமெடியனாவும். இவர் நடிச்ச  நாடகங்கள்ல பேர் வாங்கினது 'இழந்த காதல்' நாடகம். 

பெரியாரும், அவரோட கொள்கைகளும் ராதாவுக்கு ரொம்ப பிடிக்கும். போர்வாள் நாடகத்தை  ராதா நடத்தினார். அப்போ பெரியார் முன்னிலைல பட்டுக்கோட்டை அழகிரிசாமி ராதாவுக்கு கொடுத்த பட்டம்தான் நடிகவேள். அந்த காலத்தில பேர் வாங்கின கார் இம்ப்பாலா. அந்த கார்ல ராதா வைக்கல கட்டி எடுத்துட்டு போனார். இது பற்றி கேட்டதுக்கு, "கார்ங்கிறது பெயிண்ட் அடிச்ச வெறும் தகர டப்பாதான்"னு சொன்னார். 

தன்னோட நாடக குழுலயிருந்து வெளிய போனவங்களுக்கு, அவங்க நெனச்சு பாக்காத அளவுக்கு பணத்தை கொடுத்து வழியனுப்பி வைக்கிறது அவரோட பழக்கம். நாடக உலகத்தில கால் பதிச்சு, சினிமா உலகத்துக்கு வந்து கலக்கோ கலக்குனு கலக்கி நடிச்ச  தனிப்பெருமை கலைஞன். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை தனது நாடகங்கள், சினிமா மூலமா ஜனங்களுக்கு சொல்லி விழிப்புணர்வு செஞ்சார். எதுக்கும் பயப்படமாட்டார்,  எதுக்கும் பதில் சொல்ல தயங்கியதில்ல. 

ராதிகா, நிரோஷா, MRR வாசு, ராதாரவி இவங்கல்லாம் சினிமால நடிச்சதால நமக்கு தெரிஞ்சு ராதாவின் பிள்ளைங்க. நமக்கு தெரியாத மோகன் ராதா சினிமா தயாரிப்பாளர். 

2020ல ராதாவின் நினைவு நாள்ல பொண்ணு ராதிகா ஒரு போட்டோவ தன்னோட ட்விட்டர் பேஜ்ல போட்டார். அதுல அப்பாவும் குட்டி பொண்ணு ராதிகாவும் சேந்து எடுத்துக்கிட்டது.

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 8hSxz2J

இவரோட நாடக வாழ்க்கைல இவரை பற்றி சொல்லணும்னா அப்பப்பா அவ்ளோ......................... இருக்கு.


MR ராதா டான்ஸ் ஸீன் 

சித்தி                          1966

சாவித்திரி, MR ராதா ஸீன்

கை  கொடுத்த தெய்வம்            1964 


நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்து தாயாகி வந்தவன்

பலே பாண்டியா            1962

MN ராஜம் & குஷ்ட்டரோகி MR ராதா ஸீன் 

ரத்தக்கண்ணீர்                 1954

பேபி  மகிழ்ச்சி

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 19, 2023 1:39 pm

19.09.2023

18.09.2023      பண்டரிபாய் அவர்கள் பிறந்த நாள்  [1928 - 2003] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 57 QnKsxYE

கர்னாடக மாநிலத்தில் பிறந்தார். கன்னட சினிமால முன்னணி நடிகை. தமிழ், தெலுங்கு, அப்பப்போ ஹிந்தி படங்கள்லயும் நடிச்சார். 14வயசில நடிக்க ஆரம்பிச்சார். நடிகர் திலகம் நடிச்ச முதல் படம் பராசக்தில பண்டரிபாய் அவருக்கு முதல் ஜோடியா நடிச்ச பெருமை பண்டரிபாய்க்கு உண்டு. அப்புறமா அவருக்கு தங்கச்சி, அக்கா, அண்ணி, அம்மானு நடிகர் திலகம் கூட எல்லா ரோல்லயும் நடிச்சார். 

நாடக கம்பெனி நடத்திட்டு இருந்த பண்டரிபாயின் அப்பா, பண்டரிபாய்க்கு கதாகாலட்சேபம் சொல்லி கொடுத்தார். 10 வயசில பண்டரிபாய்  கன்னடம் மராத்தி மொழிகள்ல கதாகாலட்சேபம் நடத்தும் திறமை இருந்துச்சு. இவ்ளோ நல்லா காலட்சேபம் நடத்துற அக்கா சினிமால நடிச்சா நல்லா இருக்குமேன்னு பண்டரிபாயின் தம்பி நெனைச்சார். தம்பியின் முயற்சியால அக்கா 1943ல கன்னட படத்தில நடிக்க ஆரம்பிச்சுட்டார். அடுத்தாப்புல 1944ல த்யாகராஜ பாகவதர் நடிச்ச ஹரிதாஸ் தமிழ் படத்தில சின்ன ரோல்ல பண்டரிபாய் நடிச்சார். தமிழ்ல முதல் படம். 

1949ல வாழ்க்கை தமிழ் படத்தில நடிக்க பண்டரிபாய்க்கு சான்ஸ் கெடச்சுது. அவருக்கு தமிழ் சரியா பேச வராததால் அந்த படம் அவருக்கு மிஸ் ஆயிருச்சு. அதனால அவருக்கு தமிழ் சொல்லி கொடுக்க PD சம்பந்தம் என்ற நடிகரை AVM நிறுவனம் ஏற்பாடு செஞ்சுச்சு. ஆனா சம்பந்தம்  கன்னடம் கத்துக்கிட்டதுதான் மிச்சம். பண்டரிபாய் வாய்ல தமிழ் வரமாட்டேன்னுருச்சு. அப்புறமா சகஸ்ரநாமம்கிட்ட தமிழ் கத்துக்கிட்டார். தமிழ்ல சூப்பரா தமிழ் வசனங்களை பேச முடிஞ்சுது. 

MGR நடிச்ச அடிமைப்பெண் படத்தில அடிமைப்பெண்ணாக நடிச்சவர் பண்டரிபாய். MGRஇன் அம்மா. "தாயில்லாமல் நானில்லை'. சிவாஜி நடிச்ச தெய்வமகன் படத்தில பண்டரிபாய் அம்மாவா நடிச்சார். "கண்களால் பேசுதம்மா பாசத்தின் அழைப்பு". இவர் அம்மாவா நடிச்சிட்ருந்த காலத்தில கண்ணாம்பாவும், MV ராஜம்மாவும் போட்டி போட்டுக்கிட்டு அம்மாவா நடிச்சிட்டுருந்தாங்க. இவங்க ரெண்டு பெரும் ரெஸ்ட் எடுக்க போய்ட்ட பிறகு, அம்மா ரோல்னா பண்டரிபாய்தான். சிவாஜி கணேசன் ஒரு தடவ "மிக சிறந்த நடிகை பண்டரிபாய்"னு மனம் நிறைந்து பாராட்டினார். "இந்த படத்தில யார் சார் அம்மா? பண்டரிபாயையே போட்ருங்க. நல்லாருக்கும்"னு சொன்னார். பண்டரிபாய்க்கு அம்மா மார்க்கெட் ஏறினதும், அந்தந்த அம்மா கேரக்ட்டருக்கு ஏத்தமாதிரி, தன் உடல்மொழியை  மாத்திகிட்டார். வசனங்களுக்கு உயிர் கொடுத்தார்.  நிறைய பட விமர்சனங்கள்ல  பண்டரிபாயின் நடிப்பும், அவரோட தமிழும் ரொம்பவே பாராட்டப்பட்டன. சொந்த குரலிலேயே தப்பில்லாம பேசி நடிச்சார். 

தமிழ்ல சிவாஜி கணேசன், கன்னடத்தில  ராஜ்குமார்கூட நிறைய படங்கள்ல ஹீரோயினா நடிச்சார். 

நடிகை மைனாவதி பண்டரிபாயின் தங்கச்சி.

நன்றி : விக்கி, cinemapluz, nakarajan.ப்லாக்ஸ்பாட்

விருதுகள் : கலைமாமணி விருது தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது - வாழ்நாள் சாதனையாளர் விருது 2001டாக்டர் ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது 1994 - 1995 [கர்னாடக அரசு]கன்னட படங்களுக்கு கர்னாடக மாநில சினிமா விருதுகள்

கர்னாடக மாநில பள்ளிக்கூடங்கள்ல ஒம்பதாப்பூ கன்னட புத்தகத்துல 'குணசாகரி பண்டரிபாய்' னு ஒரு பாடமே இருக்காமே.


கண்களால் பேசுதம்மா பாசத்தின் அழைப்பு பெண்ணோடு பேசுதம்மா பெற்றெடுத்த வயிறு

தெய்வமகன்                  1969

ஆவன்னா டூனா ஆடு அறிவு கெட்ட கதைகளுக்கும் அதுக்கும் இதுக்கும் எல்லாத்துக்கும் ஆடுபோல தலையை ஆட்டக்கூடாது

திரும்பிப்பார்            1953

புது பெண்ணின் மனச தொட்டு போன்றவரே உங்க எண்ணத்த சொல்லிவிட்டு போங்க

பராசக்தி                     1952

பேபி   மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 57 of 60 Previous  1 ... 30 ... 56, 57, 58, 59, 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக