புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_rcap 
89 Posts - 77%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_rcap 
254 Posts - 77%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_lcapபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_voting_barபிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 53 of 60 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 56 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 12, 2023 10:58 am

12.08.2023

ம்யூஸிக் டைரக்ட்டர் ஜிப்ரான் பிறந்த நாள்     [1980] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 HDiw4f2                                       பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 G7wIDro

தமிழ், அப்பப்ப தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களுக்கு, நிறைய விளம்பரங்களுக்கு  ம்யூஸிக் போட்டார். 

எட்டு வயசில பியானோ ம்யூஸிக் பிடிச்சிருந்துச்சு. பத்தாப்பு படிக்கும்போது, கோவைல இருந்து சென்னைக்கு வந்தார். ம்யூஸிக் க்ளாஸ்ல சேந்துட்டார். கீபோர்ட் வாசிக்க கத்துக்கிட்டார். ம்யூஸிக் கத்துக்கிட்டு 2000ல  சொந்தமா ஸ்டூடியோ ஆரம்பிச்சு  ஏகப்பட்ட விளம்பரங்களுக்கு ம்யூஸிக் போட ஆரம்பிச்சார். TV விளம்பரங்களுக்கும் ம்யூஸிக் போட்டார். 

அப்புறம் படிக்கிறதுக்கு சிங்கப்பூர் யூனிவர்ஸிட்டீல சேந்தார். அங்க உள்ள ம்யூஸிக் குழுல  பார்ட் டைம்ல வேல செஞ்சார். அங்க வருமானம் போதாம இந்தியாவுக்கு வந்தார். ஆனா அந்த சமயத்தில அவர் விளம்பரங்களுக்கு ம்யூஸிக் போட்டுட்டு இருந்த வேல கொறஞ்சுபோச்சு. 

தமிழ்ல ம்யூஸிக் போட்ட முதல் படம் 2011ல வாகை சூட வா. நிறைய ம்யூஸிக் வீடியோவையும் ரிலீஸ் செஞ்சார். 

விருதுகள்
வாகை சூட வா 2011 : விஜய் விருது, மிர்ச்சி ம்யூஸிக் விருது, விஜய் ம்யூஸிக் விருது
திருமணம் எனும் நிக்காஹ் - மிர்ச்சி ம்யூஸிக் விருது, Zee தெலுங்கு சந்தோஷம் விருது 
உத்தம வில்லன் 2015 & ராட்சசன் 2018 படங்களுக்கு பல விருதுகள்
 

சரசர சாரக்காத்து வீசும் போது சார பாத்து பேசும்போது சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே 

வாகை சூட வா  2011 \ ஜிப்ரான் \ வைரமுத்து     

ஏயா என் கோட்டிக்காரா அட வாயா ஏவேட்டக்காரா குத்தால சாரல் போல்தல தட்டும் சேட்டக்காரா

பாபநாசம் 2015 \ ஜிப்ரான் \ நா முத்துகுமார்

பேபி மகிழ்ச்சி


சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 12, 2023 11:47 am

12.08.2023

டைரக்ட்டர் வசந்த் பிறந்த நாள்      [1965] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 AKWD46o                            பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 WtrTfIV

பத்திரிகையாளராவும், சிறுகதை எழுதிட்டும் இருந்தார். இயக்குனர் சிகரம் K பாலசந்தர்கிட்ட உதவி டைரக்ட்டரா வேல செஞ்சார். 1990ல முதல் முதலா டைரக்ட்டின படம் SPB நடிச்ச கேளடி கண்மணி. வெற்றிகரமா, அட்டகாசமா ஓடிய படம்.

2000ல அப்பு படத்தில ப்ரகாஷ்ராஜ் திருநங்கையா நடிச்சார். பாராட்டு கெடச்சுது. 1997ல நேருக்கு நேர் படத்தில சூர்யாவை இன்ட்ரோ செஞ்சார். ஜோதிகாவும், சூரியாவும்  முதல் முதலா ஜோடியா நடிச்ச படம் 1999ல பூவெல்லாம் கேட்டுப்பார். தன் இதயத்துக்கு நெருக்கமான படம் 2000ல தான் டைரக்ட்டின ரிதம் படம் என்று வசந்த் சொன்னார். 

ஏய் ! நீ ரொம்ப அழகா இருக்கே ! - திரைக்கதை, வசனம் & டைரக் ஷன். இந்த படத்தில அஞ்சு பாட்டு. ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு ம்யூஸிக் டைரக்ட்டரை வசந்த் இன்ட்ரோ செஞ்சு வச்சார். குறும்படங்கள், ஆவணப் படங்கள், விளம்பரங்கள் டைரக்ட்டியிருக்கார். மாணவர்களுக்காக சினிமா டெக்னாலஜி சம்பந்தமான பயிற்சி பட்டறைகளை நடத்துறார். 

விருதுகள்
தமிழ்நாடு மாநில சினிமா விருது:
கேளடி கண்மணி 1990 - சிறந்த படம்
ஆசை 1995 - சிறந்த டைரக்ட்டர்
சத்தம் போடாதே 2007 - சிறந்த கதாசிரியர் 

தேசிய சினிமா விருது
தக்கையின் மீது நான்கு கண்கள் 2005 - சிறந்த குறும்படம் 
சனத் 2016 - சிறந்த சமூக விழிப்புணர்வு குறும்படம் 
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் 2021 - சிறந்த படம்
 

கேளடி கண்மணி - கதை திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - வஸந்த்
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றிஏழு ஸ்வரந்தான் பாடுமோ 

கேளடி கண்மணி 1990 / இளையராஜா / பாவலர் வரதராஜன் 

அப்பு - திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - வசந்த்
 இடம் தருவாயா மனசுக்குள்ளே இடம் தருவாயா தரமாட்டேன் தரமாட்டேன் இடம் தரமாட்டேன் - பாப் ஷாலினி & உன்னிகிருஷ்ணன்

அப்பு  2000 / தேவா / வைரமுத்து     

பூவெல்லாம் கேட்டுப்பார் - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - வசந்த் சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என்மீது காதல் வந்தது எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
பூவெல்லாம் கேட்டுப்பார் 1999 \ யுவன் சங்கர் ராஜா \ பழநிபாரதி

ரிதம் - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - வசந்த்
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஒன்றா இரண்டாகாரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே

ரிதம்  2000 \ AR ரஹ்மான் \ வைரமுத்து

ஆசை - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - வசந்த்
ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ திலோத்தமா இருதயம் உந்தன்பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ திலோத்தமா

ஆசை  1995 \ தேவா \ வைரமுத்து
 

பேபி  சூப்பருங்க  

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 12, 2023 6:32 pm

12.08.2023

பின்னணி பாடகி மின்மினி பிறந்த நாள்    [1970]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 AYWMzoH                         பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 PHQR0Lf

ஸ்கூல்ல இவர் பேர் PJ ரோஸிலி மினி. மலையாளி. 5 வயசில கலாபவன் ம்யூஸிக் ட்ரூப்ல சேந்தார். 10 வயசில அங்க பாடகி ஆகிட்டார். மாநில அளவிலான பல பரிசுகள் வாங்கினார். மேடை நிகழ்ச்சிகள்லயும் பாடினார். பக்தி பாடல்களை பாடி கேசட்டில் பதிவு செஞ்சார். இதன் மூலம் அப்பவே ப்ரபலமடைய ஆரம்பிச்சுட்டார். மேடை நிகழ்ச்சிகளுக்கும், பாட்டு ரெக்காடிங்க்கும்  பக்கத்தில இருந்த ஊராட்சி ஒன்றியத்திலிருந்து போன் வரும். ஏன்னா வீட்ல போன் வசதி இல்ல. சம்பளம் கொறச்சலா இருந்தாலும் விடாம பாடிட்டு இருந்தார். 

சின்ன வயசிலேயே பாட்டு போட்டிகள்ல கலந்துக்கிட்டு ஏராளமான பரிசு வாங்கினார். இளைஞர் திருவிழாக்கள்ல நடந்த போட்டிகள்ல மின்மினி கலந்துக்கிட்டு பரிசு வாங்கினார். அதுக்கப்புறம்தான் ம்யூஸிக் கத்துக்கிட்டார். அதனால படிப்பை தொடர முடியாம  போச்சு. ஆனா ஸ்வரங்கள், ராகங்கள் எதுவும் தெரியாமலேயே சினிமால பாடினார். அவ்ளோ திறமை. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரியா, படகா மொழிகளில்  சினிமால பாடியிருக்கார். தமிழ்லதான் நெறைய பாடினார். பாட ஆரம்பிச்சது மலையாள படத்தில. தமிழ்ல மொதல்ல பாடியது 1992ல மீரா படத்தில, "லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ண ஸ்டவ்வு".  இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்ட இளையராஜாதான் அவருக்கு மின்மினினு பேர் வச்சார். இளையராஜா, AR ரஹ்மான் மியூஸிக்ல பாடினார். ஓஹோன்னு  ப்ரபலமானது ரோஜா படத்தில பாடிய "சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை" பாட்ல. ஒரு அதிசயம் என்னான்னா இந்த பாட்டை உலக அளவுல ரசிச்சாங்க. அமெரிக்கர்களும், சீனர்களும்கூட  அவங்களுக்கு  தெரிஞ்சமாதிரி இந்த பாட்டை பாடி சந்தோஷப்பட்டுக்கிட்டாங்களாமே. இந்த பாட்டு நல்ல பேர் வாங்கினதுக்கப்புறமா  இவரோட பாட்டு ஒரு நாளைக்கு 8ல இருந்து 12 பாட்டு வரை ரெக்காட் ஆச்சு.  ஜேசுதாஸ், SPB, ஜெயசந்திரன் கூடல்லாம் மேடை நிகழ்ச்சிகள்ல  பாடியிருக்கார். 

1993ல லண்டன்ல நடந்த ஒரு மேடை நிகழ்ச்சியில இவரோட குரல் பாதிப்படைஞ்சுது. சில வருஷங்கள் பேசக்கூட முடியாத நிலை. சிகிச்சை செஞ்சு மறுபடியும் குரல் வந்துச்சு. ஆனா பாட சான்ஸ் கெடைக்கல. அதனால கொச்சினுக்கே போய்ட்டார். அங்க  ஒரு ம்யூஸிக் ஸ்கூல் ஆரம்பிச்சார். 

விருதுகள் :
சின்ன சின்ன ஆசை [ரோஜா] - தமிழ்நாடு மாநில சினிமா விருது - சிறந்த பின்னணி பாடகி  
சிங்கப்பூர் மாநில அரசு விருது, ஃபிலிம்ஃபேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது இன்னும் சில விருதுகள். 

இவரைப்பற்றி சுருக்கமாத்தான் எழுதியிருக்கேன்.
 


சின்ன சின்ன ஆசை சிறகடிககும் ஆசை முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை

ரோஜா  1992 / AR ரஹ்மான் \ வைரமுத்து   

 லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ண ஸ்டவ்வு ஒரு உள்ளத்த கவ்வு வானத்தில் தவ்வு முதுவட்டம் எல்லாம் முடியாம வாட

மீரா  1992 / இளையராஜா \ வாலி   

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு யாரிடத்தில் உம்மனசு போச்சு நூலபோல உன்னுடம்பு ஆச்சு

அரண்மனை கிளி    1993 / இளையராஜா \ வாலி   

 மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி மகராணி உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதடி

எங்க தம்பி    1993 / இளையராஜா \ முத்துலிங்கம்   

ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே இள மானைக் கண்டிட கானம் பாடுது மன்மத ராகத்திலே

உன்னை வாழ்த்தி பாடுகிறேன்  1992 \ இளையராஜா \ நா காமராசன்
 

பேபி மீண்டும் சந்திப்போம்

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Aug 13, 2023 6:28 pm

13.08.2023

வைஜயந்திமாலா அவர்கள் பிறந்த நாள்     [1933] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 HqEDJsT                                       பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 WlceHYZ

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 NlNlpLF

"கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே" 
"ஜிலுஜிலுஜிலுஜிலுவென்று நானே ஜெகத்தை மயக்கிடுவேனே"

ஞாபகம் வந்தூர்ச்சா. அவரேதான் இவரு. 

நடிகை, நாட்டிய தாரகை கர்னாடக சங்கீத கலைஞர். அம்மா வசுந்தராதேவியும் நடிகை. அதனால வைஜயந்திமாலாவுக்கு சின்ன வயசிலேயே பரதம், கர்னாடக சங்கீதம் மேல ஆசை வந்து எல்லாத்தையும் கத்துக்கிட்டார். 13 வயசிலேயே அரங்கேற்றம் செஞ்சார். இவர் பொறந்த சமயத்தில அம்மா நடிப்புல பிஸியா இருந்ததால  அப்பாவுக்கும், பாட்டியும்தான்  வைஜயந்தியை வளத்தாங்க. 

தமிழ், தெலுங்கு, நெறைய ஹிந்தி படங்கள்ல நடிச்சார். ஹிந்தி பட ரசிகர்களுக்கு இவர் நம்பர் ஒன் நடிகை. ஹிந்தில ரெண்டு படங்களுக்கு டான்ஸ் மாஸ்ட்டரா இருந்தார். 

சென்னைல இவரின் பரத கச்சேரியை பார்த்த டைரக்ட்டர் MV ராமன் 1949ல வாழ்க்கை படத்ல நடிக்க வச்சார். வைஜயந்திக்கு முதல் படம். படம் ப்ரமாதமோ பிரமாதம். அந்த ஆண்டுல அதிக வசூல் படமாச்சு. இந்த படம் 1950ல தெலுங்குலயும், 1951ல ஹிந்தியிலயும்  ரீமேக் ஆச்சு. ஆரம்பமே வெற்றிகரமாச்சு. ஹிந்திலயும், தெலுங்குலயும் நடிக்கும் சான்ஸ் வந்துச்சு. ஹிந்தி படங்கள்ல நடிச்ச, இந்தியா முழுசுலயும் புகழ் பெற்ற  முதல் தென்னிந்திய  நடிகை. 1958ல ஹிந்தியில  நடிச்சிட்டு இருக்கும்போதுதான் வஞ்சிக்கோட்டை வாலிபன் படம் கெடச்சுது. மறுபடியும் தமிழ் படத்தில  நடிக்க ஆரம்பிச்சார். 1961ல ஹிந்திக்கு போய்ட்டார். 1970 வரை நடிச்சார். அவ்ளோதான். 

1960ல இரும்புத்திரை படத்தில வைஜயந்திமாலாவும், அவங்க அம்மா வசுந்தராதேவியும் அம்மா  மகளாவே நடிச்சாங்க. 

அப்போ அதிக சம்பளம் வாங்கிய நடிகை. இந்திய சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார்,  மெகாஸ்டார். 

விருதுகள்
கலைமாமணி விருது 1979, பத்மஸ்ரீ விருது 1968, பத்மபூஷண் விருது 2011, கௌரவ டாக்ட்டர் பட்டம் 1995, சிவாஜி கணேசன் விருதுகள் 2006,  B சரோஜாதேவி தேசிய விருது 2011 
தமிழ்நாடு மாநில விருது - தியாகராஜ பாகவதர் விருது 2001, அக்கினேனி நாகேஸ்வரராவ் தேசிய விருது 2008
ஹிந்தி படங்கள்ல நடிச்சதுக்கான சிறப்பு விருது  1961, 1968, 2012
ஹிந்தி படங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது 2005
இன்னும் ஹிந்தி படங்களுக்கு நிறைய விருது வாங்கியிருக்கார். 

பரதநாட்டியத்துக்கு ஏகப்பட்ட விருதுகள், தேசிய & சர்வதேச விருதுகள், இன்னும் பலப்பல விருதுகள்
 

சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

தேன் நிலவு  1961 \ AM ராஜா / கண்ணதாசன்    

வார்த்தையில் அடங்காது வர்ணிக்க முடியாது வனிதை போல் நீயே வேறேது

சித்தூர் ராணி பத்மினி  1963 \ G ராமநாதன் \ உடுமலையார்  

இரும்புத்திரை படத்தில ஒரு ஸீன்


கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே

வஞ்சிக்கோட்டை வாலிபன்  1958 / C ராமச்சந்திரா \ கொத்தமங்கலம் சுப்பு  

கண்ணாலே நான் கண்டா கனவு புது காதல் கொண்டதென் மனமே இது முன்னாளில் உண்டான முகமோ இதன் முடிவு எங்கோ எதுவோ 

பார்த்திபன் கனவு  1960  / வேதா \ மருதகாசி  
 

பேபிஅருமையிருக்கு 

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 14, 2023 12:21 pm

14.08.2023

13.08.2023 - நடிகை ஸ்ரீதேவி பிறந்த நாள்  [1963 - 2018]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 V5uBBfP                                    பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 2HAHgcC

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 MCu54Jh

குழந்தை நட்சத்திரம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல  நடிச்சார். 1967ல தமிழ்ல கந்தன் கருணை தமிழ் படத்தில குட்டி பொண்ணா, 1976ல மூன்று முடிச்சு படத்தில ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார். அதுவும் ரஜினியின் அப்பாவை கல்யாணம் செஞ்சுகிட்டு, ரஜினியின் சித்தியா நடிச்சார். சவாலான கேரக்ட்டர். 

ஸ்ரீதேவி அமைதியான குணமுடையவராக இருந்தார். ஆனா படங்கள்ல அட்டகாசம் செஞ்சு சூப்பரா நடிச்சார். வசீகர அழகு. 1977ல நடிச்ச மயிலு கேரக்ட்டரை மறக்க முடியுமா? இந்திய சினிமாவின் மயிலு. "ஆத்தா நா பாஸாயிட்டேன்"னு சொல்லிட்டு ஓடி வந்தார். அதே மாதிரி எல்லா படங்கள்லயும் ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸானார். ரஜினி, கமல்கூட நெறைய படங்கள்ல நடிச்சார். தமிழ்ல முன்னணி ஹீரோயின் ஆனார். மத்த மொழிகள்லயும் எல்லா முன்னணி நடிகர்கள்கூடவும் ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்ச பிறகு நல்ல பேர். அங்க முன்னணி டைரக்ட்டர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எல்லாரும் ஸ்ரீதேவியின் கால்ஷீட்டுக்காக தவம் கெடந்தாங்க. 

ஜெயலலிதா, சிவாஜி, MGR கூடல்லாம் நடிச்சார். ஜானி படத்தில ரஜினிகூட நடிச்சார். பாடகி. ரஜினி சொன்னார், "என்னப்பா அந்த பொண்ணு இப்டி நடிக்குது. ஒரு நிமிஷம்  அப்டியே  நின்னுட்டேன்" 

"ஷூட்டிங் இண்டர்வெல்ல ஸ்ரீதேவி அவங்க அம்மா மடியில படுத்திருக்கிறதை பார்க்க ஆச்சரியமா இருக்கும். அம்மா ஊட்டிவிட்டாதான் சாப்பிடுவாங்க. எப்படிப்பட்ட ஹெவி கேரக்ட்டரா இருந்தாலும் ஈஸியா நடிக்கிற அவர் வீட்ல கொழந்தையாவே இருப்பார். நாங்க ரெண்டு பேரும்  லவ் பண்றதா பல செய்திகள் வந்துச்சு. ஆனா எங்களுக்குள்ள அப்டி ஒரு எண்ணமே  இருந்ததேயில்ல" - இது கமல் சொன்னது. 

1996ல ஹிந்தி பட தயாரிப்பாளர் போனி கபூரை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். அப்புறமா 2004 - 2005ல ஒரே ஒரு TV சீரியல்ல நடிச்சு, TV நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டார். 2015ல விஜய் நடிச்ச புலி படத்தில நடிச்சார். 

இவரோட இந்த 60வது பிறந்த நாளுக்கு கூகுள் நிறுவனம் டூடுல் போட்டு கௌரவிச்சிருக்கு. மும்பையை சேர்ந்த பூமிகா முகர்ஜி இதை தயார் செஞ்சார். 
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 FayL9ra

விருதுகள் :
பத்மஸ்ரீ விருது 2013 
கேரள மாநில சினிமா விருது 1971 - சிறந்த குழந்தை நட்சத்திரம் 
16 வயதினிலே 1977 - சிறப்பு விருது 
தமிழ்நாடு மாநில சினிமா விருது - சிறந்த நடிகை - மூன்றாம் பிறை 1981
தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த நடிகை - மீண்டும் கோகிலா 1982
பல ஹிந்தி படங்களுக்கும், ஒரு சில தெலுங்கு படங்களுக்கும் நிறைய விருதுகள், சிறப்பு விருதுகள் நெறைய வாங்கினார்.
 

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே

நம் நாடு  1969 \ MS விஸ்வநாதன் / வாலி     

ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம் கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்

மூன்று முடிச்சு    1976 \ MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்    
 
ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேலே அம்பாரி ராஜாவோட கூட வந்தா ராணி பொண்ணு சிங்காரி

யானை வளர்த்த வானம்பாடி மகன்  1971 \ KV மகாதேவன் \ கண்ணதாசன்    

உலகம் ஒரு நாள் பிறந்தது அது ஊமையாகவே இருந்தது மொழியே விழியால் நடந்தது அதில் அழகும் சுகமும் இருந்தது

திருமாங்கல்யம்  1974 \ MS விஸ்வநாதன் / கண்ணதாசன்    

வா வா இதயமே என் ஆகாயமே உன்னை நாளும் பிரியுமோ இப்பூ மேகமே கடல் கூட வற்றி போகும் கங்கை ஆறும் பாதை மாறும்

நான் அடிமை இல்லை 1986 \ விஜய் ஆனந்த் \ வாலி
 

பேபி சிரி 

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Aug 14, 2023 10:47 pm

14.08.2023

13.08.2023 -   நடிகர் ப்ரதாப் போத்தன் பிறந்த நாள்    [1952 - 2022 ] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 Cbpv96i   பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 KZLrYlR

நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர், எழுத்தாளர் & விளம்பர டைரக்ட்டர். தமிழ், மலையாளம், ஒண்ரெண்டு  தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சார், டைரக்ட்டினார். 

கேரளால பிறந்தார். ஸ்கூல்  படிப்பு ஊட்டீல, காலேஜ் படிப்பு சென்னைல படிச்சார்.  பிரதாப்புக்கு பெயிண்ட்டிங் பிடிக்கும். காலேஜ்ல படிக்கும்போது காலேஜ் மேடை நாடகங்கள்ல நடிச்சார். அதனால பெயிண்டிங்கை விட நடிப்புல ஆச வந்துச்சு. 

காலேஜ் படிச்சு முடிச்சிட்டு மும்பைல ஒரு ஏஜென்ஸீல காப்பிரைட்டாரா வேல செஞ்சார். அப்புறமா விளம்பர நிறுவனங்கள்ல  வேல  செஞ்சார். ஒரு நாடக குழூல சேந்து நடிச்சார். அங்க ஒரு ஷேக்ஸ்பியர் நாடகத்தில நடிக்கும்போது, மலையாள டைரக்ட்டர் பரதன் பாத்து, தன்னோட மலையாள படத்தில 1978ல ப்ரதாப்பை நடிக்க வச்சார். ப்ரதாப்புக்கு முதல் படம். தமிழ்ல நடிச்ச முதல் படம் அழியாத கோலங்கள் 1979. சின்ன ரோல்தான். ஆனாலும் ஜனங்கள் மனசில  நின்னுட்டார்.  

1997 வரை நடிச்சிட்டு நடிப்புக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தார் அதுக்கப்புறம் 2005ல நடிக்க வந்தார். குணசித்திர ரோல்ல நடிச்சார். அப்புறமா க்ரீன் ஆப்பிள் விளம்பர  நிறுவனத்தை நடத்தினார். 

நடிகை ராதிகா இவரோட முன்னாள் மனைவி. ப்ரதாப் தயாரிச்சு, டைரக்ட்டின முதல் படம் 1985ல மீண்டும் ஒரு காதல் கதை. ராதிகா இவருக்கு ஹீரோயின். ரெண்டு பேருமே மனநிலை சரியில்லாதவங்களா நடிச்சாங்க. அப்பதான் லவ்வ  ஆரம்பிச்சு  1985ல கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. 1986ல டைவோ..................ர்ஸ். 

விருதுகள்
தேசிய விருது - சிறந்த படம் - மீண்டும் ஒரு காதல் கதை 1985
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - மலையாள படங்கள் - சிறந்த நடிகர், சிறந்த டைரக்ட்டர் & சிறந்த துணை நடிகர் 
கேரள மாநில விருது 2014 - சிறப்பு ஜூரி விருது  
தென்னிந்திய சர்வதேச சினிமா விருது 2012 - மலையாள படம் - சிறந்த வில்லன்   
வனிதா சினிமா விருது 2012, ஏசியாநெட் சினிமா விருது 2013 - மலையாள படங்கள்



ஏரியிலே எலந்த மரம் தங்கச்சி வச்ச மரம் வச்ச மரம் தங்கச்சி வச்ச மரம் ஒரு காயுமில்ல பூவுமில்ல உன் தங்கச்சி வச்ச மரம்

கரையெல்லாம் செண்பகப்பூ    1981 / இளையராஜா \ பஞ்சு அருணாசலம்     

கைராசியே நம்ம ராசி நம் வாழ்க்கையோ ரொம்ப ஈசி தொட்டால் தொட்டது தங்கமாகும் அடடட்டா  கைப்பட்டால் பட்டது சொந்தமாகும்

மது மலர்    1981 / கங்கை அமரன் / வாலி  

வெற்றி விழா A -  திரைக்கதை & டைரக் ஷன் - ப்ரதாப் போத்தன்
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே
இன்று தீர்த்தக்கரை ஓரத்திலே தேன் சிட்டுகள் உள்ளத்திலே  


வெற்றி விழா   1989 \ இளையராஜா \ வாலி   

மீண்டும் ஒரு காதல் கதை - நடிப்பு, தயாரிப்பு & டைரக் ஷன் - ப்ரதாப் போத்தன்
அதிகாலை நேரமே புதிதான ராகம எங்கெங்கிலும் ஆலாபனை கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

மீண்டும் ஒரு காதல் கதை  1985 / இளையராஜா \ கங்கை அமரன்  

சீவலப்பேரி பாண்டி - டைரக் ஷன் - பிரதாப் போத்தன்
கெழக்கு செவக்கயிலே கீர அறுக்கையிலே அந்த கரும்பு கடிக்கயிலே நான் பழச நெனக்கயிலே பல் அருவா பட்டிருச்சே

சீவலப்பேரி பாண்டி 1994 /
 

பேபி குதூகலம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Aug 15, 2023 2:24 pm

15.08.2023

13.08.2023 -   S வரலட்சுமி அவர்கள் பிறந்த நாள்      
[1927 - 2009]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 03R0gOQ          பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 2Rs60oR

தெலுங்கு நடிகை & பாடகி. 1937ல தெலுங்குலயும், 1938ல தமிழ்லயும் நடிக்க ஆரம்பிச்சுட்டார். தயாரிப்பாளர் AL  சீனிவாசன் இவரோட கணவர். இவர் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் அண்ணன். கல்யாணத்துக்கப்புறமும் வரலட்சுமி நடிச்சார். இவர் நடிச்ச படங்கள்ல சொந்த குரல்ல பேசினார், பாடினார். 

வரலட்சுமியின் பெரியப்பாதான் அவரை  கான குயிலாக வளத்தார். பெத்தவங்க வரலட்சுமியை பெரியப்பாகிட்ட தத்து கொடுத்துட்டாங்க. காலைல நாலு மணிக்கு எந்திரிச்சு சங்கீத பயிற்சி செய்யலேன்னா பெரியப்பா வரலட்சுமியின் காது மடல் செவந்து கன்னிப்போற அளவுக்கு பிடிச்சு திருகுவார். கொஞ்சமும்  கருணை காட்டமாட்டார்னு வரலட்சுமியே சொன்னார். 

விருதுகள்
கலைமாமணி விருது, கலை வித்தகர் விருது, கவிஞர் கண்ணதாசன் விருத்தி 2004, சிவாஜி கணேசன் நினைவு பரிசு 2007 [சிவாஜி கணேசன் குடும்பத்தார் கொடுத்தது]
  

தனிமை நேர்ந்ததோ இதயம் வெந்ததோ அமைதி நாடி வந்தாயோ சருகு போலவே புயலில் ஆடியே உறவு தேடி வந்தாயோசிவகங்கை சீமை 1959 \ விஸ்வநாதன் - ராமமூர்த்தி \ கண்ணதாசன்     

தாமதம் செய்யாதே தோழி நல்ல தருணத்தை இழக்காதே சொன்னதை மறக்காதே
வடிவுக்கு வளைகாப்பு  1962 \ KV மகாதேவன் \ மருதகாசி     

சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ ஓ சொல்ல வல்லாயோ கிளியேசொல்ல நீ வல்லாயோ ஓ

கவரிமான்   1979 \ இளையராஜா \ பாரதியார்
    

பேபி சூப்பருங்க

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Aug 15, 2023 5:12 pm

15.08.2023

14.08.2023   -     சுசித்ரா பிறந்த நாள்      [1982 ] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 DKbeJeu     பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 EfZPmkv

பின்னணி பாடகி. ரேடியோ ஜாக்கி [RJ] சுச்சி, மிர்ச்சி சுச்சினா ரொம்ப ப்ரபலம். ரேடியோல ஒலிபரப்பாளரா இருக்கார். ஏகப்பட்ட ரசிகர்கள் இவருக்கு. 

தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல பின்னணி  பாடியிருக்கார். டப்பிங் கலைஞர். மாளவிகா, தமன்னா, நமீதா, சிரியா இன்னும் சிலருக்கும் தமிழ் படங்கள்ல டப்பிங் குரல் கொடுத்தார். 3 தமிழ் படங்கள்ல கெஸ்ட் ரோல்ல நடிச்சார். TV ரியாலிட்டி ஷோக்கள்ல ஜட்ஜா, போட்டியாளரா, கெஸ்ட்டா இருந்திருக்கார். நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார், வீடியோ ஜாக்கி. 

சினிமால பாடி முடிச்சுட்டு மறுபடியும் ரேடியோ ஜாக்கியா போனது அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்கிறதா  சொன்னார். கார்த்திக் குமார் இவரோட முன்னாள் கணவர். 

சென்னைல பிறந்தார். பட்ட படிப்பு திருவனந்தபுரத்தில முடிச்சிட்டு, MBA படிக்க கோயம்புத்தூர் போனார். இங்க அவர் ம்யூஸிக் குழூல இருந்தார். 

விருதுகள்
சர்வதேச தமிழ் சினிமா விருது - மங்காத்தா 2011 - சிறந்த பெண் பின்னணி பாடகி 
தெலுங்கு படத்துக்கு சிறந்த பாடகிக்கான விருது
 

ஹேய் மாமா ஹேய் மாமா வரியா வரியா ஹேய் உம்மா ஹேய் உம்மா தரியா தரியா

மருதமலை  2007 / இமான் / பா விஜய்    
 

பேபி அருமையிருக்கு

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 16, 2023 4:17 pm

16.08.2023

15.08.2023  - சுஹாசினி பிறந்த நாள்     [1961]  

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 NdwEpD0      பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 KSy3tP5

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 TkeBycf

நடிகை, டைரக்ட்டர், தயாரிப்பாளர். TV நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். 2010ல ராவணன் படத்துக்கு வசனம் எழுதினார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 1980ல நெஞ்சத்தைக் கிள்ளாதே. முதல் படத்திலியே  ஓஹோன்னு பேர் வாங்கிட்டார் சுஹாசினி.

சாருஹாஸன் - அப்பா. மணிரத்தினம் - கணவர். கமலஹாசன் - சித்தப்பா. மணிரத்னம் ஒரு பக்கம் படங்களை டைரக்ட்டி  கலக்க, சுஹாசினி இன்னொரு பக்கம் நடிச்சு, படங்களுக்கு வசனம் எழுதி, கேமரா அஸிஸ்டண்ட்டாக வேல செஞ்சு, TV நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தூள் கெளப்பி அட்டகாசம் செஞ்சுட்டு இருந்தார்.

ஒரு பேட்டியில சுஹாசினி 2022ல சொன்னது :

அவருக்கு பிடிச்ச டைரக்ட்டர்கள் செல்வராகவன், கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின். மணிரத்னம் டைரக்ட்டின படங்கள்ல சுஹாசினிக்கு பிடிச்ச படம் நாயகன். பிடிக்காத படம் கீதாஞ்சலி. மணிரத்னம்கூட சேந்து சுஹாசினி முதல் முதலா வசனம் எழுதிய படம் அஞ்சலி. சோபனாவுக்கு,  ஹீராவுக்கு டப்பிங் பேசியிருக்கார். எழுத்தாளர் ஆனதுக்கு காரணம் மணிரத்னம். சுஹாசினி  கவிதைகள் நிறைய எழுதினார்.

சுஹாசினியும், மணிரத்னமும் சேந்து விதவைங்களுக்கும், கணவனால் கைவிடப்பட்டவங்களுக்கும் நாம் என்ற ஃபௌண்டேஷனை நடத்துறாங்க. சுஹாசினிக்கு இதுல ஒரு ஆத்ம திருப்தின்னு அவரே சொல்லியிருக்கார். "பெண் என்பதனால் உனக்கு கட்டுப்பாடு எதுவும் கிடையாது. நீ வானத்தை எட்ட வேண்டும்"னு  கமல் சுஹாசினிக்கு ஊக்கம் கொடுத்தார். தான் சினிமா இன்ஸ்ட்டிட்யூட்ல படிக்கிறதுக்கும், சினிமா துறைக்கு வர்றதுக்கும் கமல்தான் காரணம்னு சுஹாசினி சொன்னார்.

விருதுகள் :
தேசிய விருது - சிந்து பைரவி 1985 - சிறந்த நடிகை
தமிழ்நாடு மாநில சினிமா விருது - நெஞ்சத்தை கிள்ளாதே - சிறந்த நடிகை
தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் - 3 கன்னடம், 1 தெலுங்கு படங்களுக்கு - சிறந்த நடிகை
கேரள மாநில சினிமா விருதுகள் - ரெண்டு மலையாள படங்கள் - சிறந்த நடிகை
நந்தி விருந்துகள் - 2 தெலுங்கு படங்கள் - சிறந்த நடிகை & சிறந்த துணை நடிகை

நன்றி : விக்கி, பாண்டிமாதேவி, CINE சமூகம், tamil.filmibeat
 
 

மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே

பாலைவனச்சோலை  1981 / சங்கர் கணேஷ் \ வைரமுத்து    

உறவென்னும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் ஓடும் அலை என மனம் போகும்
கனவிலும் பபா பா பா நினைவிலும் பபா பா பா புது சுகம்


நெஞ்சத்தைக் கிள்ளாதே   1980 / இளையராஜா \ கங்கை அமரன்  

மங்கல மேடை அதில் மல்லிகை வாடை கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம்  

மருமகளே வாழ்க   1982 / சங்கர் கணேஷ் / வாலி  

ஆத்து பக்கம்  தோப்பிருக்க ஆத்திமரம் காத்தடிக்க சின்னக்கிளி ரெண்டு கை பின்னிக்கிட்டு ஆடும்  

வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன் 1983 \ இளையராஜா \ கங்கை அமரன்  

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல அதை சொல்ல தெரியவில்ல

சிந்து பைரவி   1985 \ இளையராஜா \ வைரமுத்து  


பேபி மகிழ்ச்சி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 16, 2023 11:47 pm

16.08.2023

15.08.2023   -  அர்ஜுன் பிறந்த நாள்     [1962 ]  

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 LIJtVQs                              பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 53 TxQcXjf

ஸ்ரீனிவாச சர்ஜா. நடிகர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், பட விநியோகஸ்த்தர் & டைரக்ட்டர். அர்ஜுன் என்னவோ அப்பா விருப்பப்படி போலீஸ் அதிகாரியாத்தான் ஆகணும்னு நெனச்சார். ஆனா விதி அவரை முற்றிலும் வேற பாதைக்கு கொண்டு போயிருச்சு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ் படங்கள்லதான் நெறைய நடிச்சார். அநேகமா இவர் படங்கள்ல சண்டை காட்சிகள்ல அதிரடியா நடிச்சதால ரசிகர்கள் இவருக்கு ஆக் ஷன் கிங்னு பட்டபேர் வச்சுட்டாங்க. அந்த படங்கள் க்ராமத்திலயும், சிட்டிலயும் ப்ரபலமாச்சு. 1973ல ப்ரூஸ்லீயின் படத்த பாத்து, 16 வயசுல கராத்தே கத்துக்கிட்டார். நெஜமாவே இவர் கராத்தேல கருப்பு பெல்ட் வாங்கியிருக்கார்.

இவரோட அப்பா அந்த கால கன்னட  நடிகர். அண்ணன் கன்னட பட டைரக்ட்டர். அநேகமா இவரோட குடும்பத்தில உள்ளவங்க எல்லாருமே கன்னட பட சம்பந்தப்பட்டவங்க. அர்ஜுன் முதல்ல அப்பாவின் சம்மதத்தோட கன்னட படத்தில சின்ன ரோல்ல 1981ல நடிச்சார். அந்த படத்தின் டைரக்ட்டர் சினிமாவுக்காக அர்ஜுன்னு பேர் வச்சுட்டார். 1992ல திரைக்கதை எழுதி, தயாரிச்சு, டைரக்ட்டி, நடிச்ச முதல் படம் சேவகன். அப்புறமா அதிரடி ஆக் ஷன் படங்கள கொறச்சுட்டு, சென்ட்டிமென்ட்டா கேரக்ட்டர் ரோல்ல, வில்லனா நடிச்சார். அந்த படங்களும் நல்லா ஓடுச்சு.

விருதுகள் :
தமிழ்நாடு மாநில சினிமா விருது -ஜென்டில்மேன் 1993 - சிறந்த நடிகர்
கர்நாடக மாநில சினிமா விருதுகள்  
விஜய் விருது - கடல் 2013 - சிறந்த வில்லன்
நார்வே தமிழ் சினிமா விழா விருது - ஹீரோ 2019 - சிறந்த துணை நடிகர்

நன்றி : விக்கி, tamil.filmibeat


சேவகன் - நடிப்பு, திரைக்கதை, தயாரிப்பு & டைரக் ஷன் - அர்ஜுன்  
நன்றி சொல்லிப் பாடுவேன் நாயகி நானாவேன் பாலைவனம் போலிருந்தேன் பால்மழை நீ பொழிந்தாய் பருவத்தை வாழ வைத்தாய்

சேவகன்   1992 / மரகதமணி \ வைரமுத்து    

வா வா என் தலைவா நல்வரவல்லவா மயில் தோகை மணி பாவை நிலம் அல்லவா நீ மழை அல்லவா சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா

நன்றி   1984 \ சங்கர் கணேஷ் \ வாலி  

வேதம் - நடிப்பு, கதை, திரைக்கதை, தயாரிப்பு & டைரக் ஷன் - அர்ஜுன்
கொஞ்சிக் கொஞ்சி பேசி வரும் தமிழ்போல அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல நூறு ஜென்மம் சேர்ந்திருக்க

வேதம்   2001 \ வித்யாசாகர் \ பா விஜய்    

துரை - நடிப்பு, கதை & திரைக்கதை - அர்ஜுன்
ஆயிரம் ஆயிரம் ஆசிகளை வாங்கிய வீடு இது அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசைப்படும் ஆலய தோட்டம் இது

துரை   / 2008 / இமான் / தபு சங்கர்  


பேபி மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 53 of 60 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 56 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக