புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
171 Posts - 79%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
2 Posts - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
1 Post - 0%
Pampu
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
336 Posts - 79%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
8 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 50 of 60 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 55 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 21, 2023 5:42 pm

21.07.2023

19.07.2023       டைரக்ட்டர் CS அமுதம் பிறந்த நாள் - 1977 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 TAGNcMA     பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 XhZr39U

அப்பா பேராசிரியர். அம்மா ஸ்கூல் பிரின்சிபல். 

அமுதன் டைரக்ட்டர், டப்பிங் கலைஞர் & பாடலாசிரியர். விளம்பர ஏஜன்ஸி நடத்திட்டு இருந்தார். அதன் மூலமாத்தான் சினிமாவுக்கு வர முடிஞ்சுது. தன் டீம்கூட சேந்து எழுதின ஸ்க்ரிப்ட்டை சினிமா டைரக்ட்டர்கள்கிட்ட குடுத்து டைரக்ட் செஞ்சு குடுக்க சொன்னார். இதுல டைரக்ட்டர்கள் AL விஜய் & KV ஆனந்த் முக்கியமானவங்க. ஸ்க்ரிப்ட்  எழுதுறதுலயும், அதை தன் கற்பனைல ஓடவிட்டு ரசித்து பாத்ததை டைரக்ட்டர்கள்கிட்ட அடம்புடிச்சு கேட்டு வாங்குறதுலயும் அமுதன் எக்ஸ்பர்ட். 

டைரக்ட்டின முதல் படம் தமிழ்ப் படம் 2010. தமிழ் படங்களின் காட்சிகளை கேலி செய்து எடுத்த படம். சினிமா இண்டஸ்ட்ரீயை  கலாய்த்து தள்ளிய படம். மூணே நாள்ல இந்த படத்தின் திரைக்கதையை எழுதி முடிச்சார். முதல் நாள் ஷூட்டிங்க்லதான் டைரக் ஷனை பத்தியே தெரிஞ்சுக்க ஆரம்பிச்சார். ஏன்னா எந்த டைரக்ட்டர்கிட்டயும் வேல செஞ்சதில்ல. விளம்பர ஷூட்டிங்கை ஓரமா நின்னு பாத்த அனுபவம் மட்டும்தான் இருந்துச்சு. ஆனா முதல் படத்திலேயே சினிமாவை கத்துகிட்ட தன் திறமையை காட்டிய வல்லவர் அமுதன். 
எழுதிய முதல் பாட்டு மின்னலே 2001 படத்தில "மேடி மேடி".
 

ஒரு சூறாவளி கிளம்பியதே - சங்கர் மகாதேவன்

தமிழ்ப் படம் 2010 / கண்ணன் \ K சந்துரு     

ஓ மகசீய்யா ஓ மகசீய்யா நாக்குமுக்க நாக்க ஓ ஷக்கலாக்க ஓ ரண்டாக்க - ஸ்வேதா மோகன் & ஹரிஹரன்

தமிழ்ப் படம்   2010 / கண்ணன் \ CS அமுதன்  

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 22, 2023 12:44 am

22.07.2023

20.07.2023 -  SJ சூர்யா பிறந்த நாள்  - 1977 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 U4KezL2                                   பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 CzwAP0z

சங்கரன்கோயில் கிராமத்தில பிறந்து வளந்தார். ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ் படிக்க சென்னைக்கு போனார். என்ஜினியர் படிக்க சான்ஸ் கெடச்சும், அதை வேணான்னுட்டு, தமிழ் படங்கள்ல நடிக்க சான்ஸ் கிடைக்குமான்னு  எதிர்பாத்துட்டு இருந்தார். இதுக்கிடையில ஹோட்டல்ல சர்வர் வேல செஞ்சார். எப்படியோ பாக்யராஜ்கிட்ட உதவியாளரா சேந்துட்டார். வேற டைரக்ட்டர்கள்கிட்ட உதவி டைரக்ட்டரா வேல செஞ்சதோடல்லாம, குட்டி குட்டி ரோல்ல நடிக்கவும் செஞ்சார். 

டைரக்ட்டர், தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், ம்யூஸிக் டைரக்ட்டர். இவர் 1999ல எடுத்த முதல் படமே ஆஹா ஓஹோ பேஷோ பேஷ். அஜீத் டபுள் ரோல்ல நடிச்ச வாலி படம்.  கொஞ்சம் வெவகாரமான  கதைதான். துணிச்சலோடு எடுத்து, ரசிக்கும்படி எடுத்து காட்டியிருந்தார். அஜீத், சிம்ரன், SJ சூர்யா மூணு பேருக்குமே ஒரு திருப்புமுனை. அஜீத் நடிச்ச உல்லாசம் பட ஷூட்டிங் இன்ட்டர்வெல்ல சூர்யா அஜித்கிட்ட ஒரு கதை சொன்னார். அந்த கதை அஜீத்துக்கு பிடிச்சு, நடிக்க ஒத்துக்கிட்டார். அதான் இந்த வாலி படம். 

வாலி படத்தின் ப்ரிமியர் ஷோவை பாத்த தயாரிப்பாளர் AM ரத்னம், தான் தயாரிச்ச குஷி படத்தை டைரக்ட்ட  சான்ஸ் கொடுத்தார்.  

ஹீரோவா நடிச்ச முதல் படம் 2004ல நியூ. அதுக்கப்புறம் ஹீரோக்கான சான்ஸ் கிடைக்க ஆரம்பிச்சுது.  2015ல  இசை என்ற படத்துக்கு ம்யூஸிக் போட்டு ஒரு பாட்டும் பாடியிருக்கார். ஒரு காலத்துக்கப்புறம் டைரக்ட்டர்  வேலைக்கு இஸ்ட்டாப் குடுத்துட்டு, மத்த டைரக்ட்டர்கள் படங்கள்ல நடிகராவே இருந்தார். ஒரு சில படங்கள்ல கெஸ்ட் ரோல்ல நடிச்சார். சில படங்கள்ல வில்லனாவும் நடிச்சார். 

கல்யாணம் செஞ்சுக்காததை பற்றி கேட்டதுக்கு, சினிமாவை காதலிப்பதாவும், படங்கள்தான் முக்கியம்னு சொல்லிட்டார். 

விருதுகள் :
விஜய் விருது - சிறந்த வில்லன் - ஸ்பைடர் 2015 [தமிழ்]
SIIMA விருது - சிறந்த வில்லன் - மெர்சல் 2017
 

வாலி - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - SJ சூர்யா
ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில் என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன் அது காதில் சொன்னது ஹலோ ஹலோ - ஹரிணி & உன்னிகிருஷ்ணன் 
வாலி  1999 \ தேவா / வைரமுத்து        

நியூ  -  கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, டைரக் ஷன் & நடிப்பு - SJ சூர்யா
காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொடும் தேவதை அம்மா அன்பென்றாலேஅம்மா என் தாய் போல் ஆகிடுமா - சாதனா சரகம் & உன்னிகிருஷ்ணன் 


நியூ  2004 / AR ரஹ்மான் / வாலி      

இசை - கதை, திரைக்கதை, வசனம், டைரக் ஷன், நடிப்பு, ம்யூஸிக் - SJ சூர்யா  
புத்தாண்டின் முதல் நாள் இது புதிதான இசை பூத்தது ஒலி வெள்ளம் வானத்தை தாக்குது நான் என்பது நாம் என்றானது நாம் என்பது நாடு என்றானது - SJ சூர்யா

இசை  2015 / SJ சூர்யா  / மதன்கார்க்கி      

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 22, 2023 2:51 pm

22.07.2023

21.07.2023 -    நடிகர் அருள்நிதி பிறந்த நாள்  - 1987 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 WF1RLuO            பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 KZtPhaa

கலைஞர் கருணாநிதி அவர்களின் பேரன். 2010ல வம்சம் படத்தில ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார். படம் நல்லா ஓடுச்சு. இந்த படத்துல நடிச்சதுக்காக சிறந்த நடிகருக்கான விஜய் விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டிருந்தார். 2011ல நடிச்ச மௌன குரு படம் ஹாங்காங் திரைப்பட விழால போட்டு காட்டப்பட்டிருக்கு.   

என் நெஞ்சே என் நெஞ்சே என்னென்னமோ ஆகுதே என் நெஞ்சு என் நெஞ்சு உன்னைத்தேடி ஓடுதே ஆமாங்க ஆமாங்க என்னென்னமோ ஆகுதே -

வம்சம்  2010 / தாஜ் நூர் \ நா முத்துகுமார்     

என்னயிது இது என்ன தொல்லை என் மனசு என்னிடம் இல்லை மௌனம் வந்து விழுங்குது சொல்லை ஏனோ

மௌன குரு  2011 \ S தமன் \ மதன்கார்க்கி  

திருட்டு பயபுள் திருட்டு பயபுள்ள மொரட்டு இதயத்த நீ ஒடச்சிட்டியே ஒடச்சிட்டியே

தகராறு  2013 / தரண்குமார் / கணேஷ் விநாயக்       

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 22, 2023 6:41 pm

22.07.2023

21.07.2023   - நடிகர் பரத் பிறந்த நாள்     1983

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 NIwwn6E                              பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 JYpUcUz

நடிகர் & நல்ல டான்ஸர். 11 வயசிலேயே டான்ஸ் ஸ்கூலுக்கு போயி டான்ஸ் கத்துக்கிட்டார். கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடிக்கும். 

நடிப்பு ஆரம்பிச்சது 2003ல பாய்ஸ் படத்லயிருந்து. கிட்டார் வாசிப்பவராக நடிச்சார். ம்யூஸிக் அகாடமில பரத்தின் டான்ஸ் ப்ரோக்ராமை பாத்த டைரக்ட்டர் சங்கர் பாய்ஸ் படத்தில நடிக்க வச்சார். 2006ல எம். மகன் படத்தில நடிச்சு பிரபலமானார். கமர்ஷியல் வெற்றி படம். 2013ல ஐந்து ஐந்து ஐந்து படத்ல பாடி பில்டரா சிக்ஸ் பேக் வச்சு நடிச்சு பேர் வாங்கினார். இதுல நடிச்ச இவரோட போட்டோ இணையத்துல பெருசா பேசப்பட்டுச்சு. 2004ல காதல் படத்தில இவரோட நடிப்பு அசத்தல். 2006ல பட்டியல் படத்தில ஊமை அடியாளா நடிச்சிருந்தார். 

ஒண்ரெண்டு தெலுங்கு, மலையாள படங்கள்லயும் நடிச்சார். TV டான்ஸ் ரியாலிட்டி ஷோக்கள்ல ஜட்ஜா இருந்தார். 2004ல செல்லமே படத்தில வில்லனா நடிச்சார். மகேஷ்பாபு நடிச்ச தமிழ் - தெலுங்கு படத்தில பரத் வில்லனா சின்ன ரோல்ல நடிச்சார். 

சில படங்கள் ஹிட்டடிக்காததால சோர்ந்து போயிருந்தார். 2019ல காளிதாஸ் படம் நல்லா ஓடுச்சு. உற்சாகமாயிட்டார். முதல் தடவையா போலீசா நடிச்சார். இந்த படத்தின் வெற்றி விழால பரத் சந்தோஷத்துல அழுதுட்டார். 

இப்போ லவ் என்கிற படத்தில சீரியல் நடிகை வாணி போஜன்கூட ஜோடி போட்டு நடிச்சிட்ருக்கார். தளபதி விஜய் மாதிரி சூப்பரா டான்ஸ் ஆடுற திறமை பரத்கிட்ட இருக்கிறதால, இவரை சின்ன தளபதினு அன்பா சொன்னாங்க. 
 

வெண்பஞ்சு மேகம் என்பேனா பொன் மஞ்சள் நேரம் என்பேனா கண் கொஞ்சும் கோலம் என்பேனா என் அன்பே என் அன்பே
கண்டேன் காதலை 2009 \ வித்யாசாகர் \ யுகபாரதி      

நீ எனக்கு நீ எனக்கு யாரடி யாரோ நீ எனக்கு பேரெதுக்கு பேரெதுக்கு உன் உயிருக்கு உயிருக்கு பேரெதுக்கு

திருத்தணி 2012 / ம்யூஸிக் & பாட்டு வரிகள் : பேரரசு          

ஓடி ஆடினேன் பாடி ஆடினேன் திண்ணையில ஆடினேன் தெருவில ஆடினேன்பந்து ஆடினேன் பம்பரம் ஆடினேன்

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது   2006  \ யுவன் சங்கர் ராஜா / ராஜமுருகன்          

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 22, 2023 11:44 pm

22.07.2023

21.07.2023    - டைரக்ட்டர் R கண்ணன் பிறந்த நாள்    1971

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 AVcgfiw                              பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 F7ElbLo

டைரக்ட்டர் & திரைக்கதாசிரியர். மனோபாலா, மணிரத்னம் இவங்ககிட்ட உதவி டைரக்ட்டரா வேல செஞ்சார். 

டைரக்ட்டின முதல் படம் 2008ல ஜெயம் கொண்டான். ரெண்டு படங்கள்ல நடிச்சிருக்கார். 

இப்போ ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கிறமாதிரி ஒரு சயின்ஸ் ஃபிக் ஷன் படம் ஒண்ணு எடுத்துட்டு இருக்கார். நடிகை ஹன்சிகா ஒப்பந்தமாயிருக்கார். நேத்ரா என்ற இளம் அறிவியல் விஞ்ஞானியா நடிக்கிறார். சென்னை ECR ரோட்ல ஒரு சயின்ஸ் லேப் ஒண்ணு ப்ரம்மாண்டமா உருவாக்கியிருக்காங்க. படம் ஆரம்பிக்கிறதுக்கான எல்லா ஏற்பாடும் நடந்துட்டு இருக்கு. ஹன்சிகா கூட நடிக்க போறவங்க இன்னும் செலக்ட் செய்யல. சந்தானம் ஹீரோவா வேற ஒரு படமும் எடுத்துட்டு இருக்கார். இதுலயும் சந்தானம்கூட வேற யார் நடிக்க போறாங்கன்னு தெரீல. ரெண்டு படங்கள்லயும் நடிக்கிறவங்களை தவிர வேற கலைஞர்கள் இன்னும் செலெக்ட் ஆகல.
 

ஜெயம்கொண்டான் - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - R கண்ணன்
சுற்றி வரும் பூமி என்னைக் கேட்டுத் தானே சுற்றி வர வேண்டும் ம் என் பின்னாலேகோயம்புத்தூர் குசும்பு கோவில்பட்டி திமிரு - சாதனா சர்கம் 
ஜெயம் கொண்டான்  2008 \ வித்யாசாகர் \ நா முத்துக்குமார்  


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jul 23, 2023 9:35 pm

23.07.2023

22.07.2023 -   டைரக்ட்டர் CV ஸ்ரீதர் பிறந்த நாள்    [1933 - 2008]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 AvaFwAK                  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 RobDear

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 A09yo5p                  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 QYWr4H8

ஜனங்கள் ரசிக்கும்படியான மூன்றெழுத்து ப்ரபலங்கள் சினிமாலயும் சிலர் இருக்காங்க. அண்ணா, MGR, அம்மா, சிவாஜி, ஜெமினி, SSR இப்டி ஏராளமா இருக்காங்க. இந்த மூன்றெழுத்து ரசிகர்கள் நெனச்சு நெனச்சு ரசிச்சு ரசிச்சு பாக்கிறமாதிரி ஸீன்களை எடுத்த டைரக்ட்டர்தான்  இந்த மூன்றெழுத்து ஸ்ரீதர். நவரச டைரடக்கர்.  
டைரக்ட்டர் & வசனகர்த்தா. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி படங்கள்ல வேல செஞ்சார். ஆஹா, ஓஹோனு சூப்பர் டைரடக்கர். ஸ்ரீதர கிருஷ்ணன் என்கிற பேரை ஸ்ரீதர்னு சுருக்கி வச்சுக்கிட்டார். 20 வயசிலேயே தமிழ் உரைநடைகளை எதுகை மோனையோடு எழுதி பழகிகிட்டார். ஸ்கூல் படிக்கும்போதே அங்க நடந்த கலை நிகழ்ச்சி, நாடக போட்டிகளுக்கு வசனங்களுடன் கதைகள் எழுதினார். 

சின்ன வயசில ஒரு கதை எழுதிகிட்டு, AVM நிறுவனத்துக்கு போயி, டைரக்ட்டர் ப நீலகண்டன்கிட்ட காட்டினார். அவர் அதை வாங்கி படிச்சிட்டு, "கதை ரொம்ப நல்லா இருக்கு. நீ பெரியவனா வளந்த பிறகு, இதை படமா எடுக்கலாம்"னு சொல்லிட்டார். ஸ்ரீதர் சும்மா இல்ல. சினிமால சாதிக்கணும்ங்கிற வைராக்யத்துல அதே கதைய எடுத்துட்டு, TKS நடத்திட்டு இருந்த நாடக குழூக்கு போயி, சண்முகம்கிட்ட காட்டினார். அவரும் வாசிச்சிட்டு, அதை நாடகமா நடத்திட்டு, அப்புறமா சினிமாவா எடுக்கலாம்னு  நெனைச்சார். ஸ்ரீதர்க்கிட்ட அந்த கதைல சில திருத்தங்களை செய்ய சொன்னார். ஸ்ரீதரும் சொன்னபடி செஞ்சு கொடுத்தார். நாடகமா நடத்தப்பட்டுச்சு. TKS சகோதரர்களுக்கு பேர் வாங்கி கொடுத்த ட்ராமா. ஸ்ரீதரை ஸ்டேஜுக்கு கூட்டிட்டு போயி, எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வச்சார். அப்புறமா TKS சகோதரர்கள் அதை படமாவும் ரிலீஸ் செஞ்சாங்க. என்ன படம் தெரீமோ? 

கண்டுபுடிச்சிருப்பீங்க. இருந்தாலும் நானும் சொல்லணும்ல. ஆமாங்க, நீ நெனச்சது சர்தான். 1954ல ரிலீஸ் ஆன ரத்தபாசம். ஸ்ரீதரை வசனகர்த்தாவா ஆக்கிய முதல் படம். ஸ்ரீதர் சினிமா உலகத்துல நுழைறதுக்கு அடிக்கல் நாட்டிய படம். TK சண்முகம்தான் நிறைய சான்ஸ் கொடுத்து ஸ்ரீதரின் எழுத்து பசிக்கு தீனி போட்டார். ப்ரபல ஹிந்தி டைரக்ட்டர், தயாரிப்பாளர், நடிகர் V சாந்தாராம் ஸ்ரீதருக்கு ரொம்ப பிடிக்கும். 

டைரக்ட்டின முதல் படம் 1959ல கல்யாண பரிசு. அட்டகாசமான படம், பாட்டுக்கள். கல்யாண பரிசு படம் ஜனங்களுக்கு கலையான பரிசாக அமஞ்சுது. எல்லாரும் சென்ட்டிமென்ட் பாக்குறமாதிரி ஸ்ரீதரும் அதில் சிக்கினார். முதல் டைரக் ஷன் ஆச்சே. படம் பேர் *கல்யாணப்  பரிசு*னு இருந்தா எட்டு எழுத்து வரவேணாம்னு சொல்லி *கல்யாண பரிசு*னு பேர் வச்சார்.

முதல்முதலா காஷ்மீர்ல ஷூட்டிங் எடுத்த படம் 1961ல தேன்நிலவு. 1961ல சொந்தமா சித்ராயலயா சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சார். "அலை கடலில் சிறிய தோணி, கலையுலகில் எங்கள் புதிய பாணி" என்ற வரிகள்  இந்த நிறுவனத்துக்கு சொந்தமான வரிகள். வீனஸ் தயாரிப்பு நிறுவனத்தில் ஸ்ரீதர் பங்குதாரர். தன் நண்பர்கள்கூட சேந்து உருவாக்கினார். இந்த நிறுவனத்துல எடுத்த முதல் படம் 1956ல அமர தீபம். மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் போன்ற ப்ரபல டைரக்ட்டர்களுடன் பழக்கமாகி இவரும் டைரக்ட்டராக  அவதாரம் எடுத்தார். 

மொத்த படத்தையும் ஒரு ஆஸ்பத்திரிக்குள்ளேயே எடுத்திருப்பாரே. அதுவும் ஒரு வாரத்துக்குள்ள முடிச்ச படம்னு சொன்னாங்க. அப்டியா? சரியான வசூல் படம். ஈஸ்ட்மென்ட் கலர்ல   வெளிநாடுகள்ல எடுக்கப்பட்ட முதல் படம் சிவந்த மண் 1969. நாகேஷ்னாலே சட்டுனு ஞாபகத்துக்கு வர்ற படம் காதலிக்க நேரமில்லை 1964. மனசை உருக்கும் படத்தை எடுத்துட்டு இருந்த ஸ்ரீதருக்கு காமெடி படமும் தரமுடியும்னு  நிரூபிச்ச படம். ஸ்ரீதரின் படம் எடுத்த பாணி MGRக்கு ஒத்து வராததால, அவரை வச்சு அவ்ளவா  படம் எடுக்கல. ஆனா 1970கள்ல ஸ்ரீதருக்கு கொஞ்சம் பண கஷ்ட்டம் வந்தபோது, கை கொடுத்தது 1974ல உரிமைக்குரல். 

அண்ணா நீ என் தெய்வம் படத்தில நடிச்சிட்டு இருக்கும்போது 1977ல MGR முதல்வராயிட்டார். பிறகு நடிக்கிறதை விட்டுட்டார். அந்த படத்தில ஸ்ரீதர் எடுத்த ஸீன்களதான் 1990ல பாக்யராஜ் டைரக்ட்டி, நடிச்ச அவரச போலீஸ் 100 படத்தில சேத்துக்கிட்டார். அந்த சீன்களுக்கு சூட் ஆகிறமாதிரி பாக்கியராஜ் கதை எழுதியிருந்தார். 

AM ராஜால இருந்து SPB வரைக்கும், MSVல இருந்து இளையராஜா வரை ஸ்ரீதர் படங்களுக்கு ம்யூஸிக் போட்டாங்க. 40 வருஷமா படத்தில நடிச்சவங்க இருந்திருக்காங்க. ஆனா ஸ்ரீதர் 35 வருஷத்துக்கும் மேலான காலம் திரைக்கதை, டைரக் ஷன் செஞ்சு, ஹிந்திலயும் கோலோச்சி நின்னவர் ஸ்ரீதர் மட்டுமே. 

அப்புறமா வந்த டைரக்ட்டர்களுக்கு ஸ்ரீதரின் படங்கள்தான் பாடங்கள். கலையுலகின் மேல அளவில்லாத மோகம் வச்சிருந்த ஸ்ரீதர் என்னும் கலைத்தோணி பல கலைஞர்களின் ஏணி. என்ன சரிதானே. பழங்காலத்தில சினிமா நிறுவனங்கள் பேரை சொன்னாங்க,  ஏவிஎம்,மாடர்ன் தியேட்டர்ஸ்னு. அப்புறமா நடிகர்கள், MKT, PU சின்னப்பா, கிட்டப்பா. இத்துனூண்டு Boatஐ  வச்சுக்கிட்டு ஜனங்களின் மனசை டைரக்ட்டர் பக்கம் திருப்பிய கலங்கரை விளக்கம் ஸ்ரீதர். 

இன்னும் பலப்பல விஷயங்கள், ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கு. 

விருதுகள் :
தகுதி சான்றிதழ் 1959 - கல்யாண பரிசு - சிறந்த தமிழ் படம் 
ஜனாதியின் வெள்ளி பதக்கம் 1962 - நெஞ்சில் ஓர் ஆலயம் - சிறந்த தமிழ் படம் 
கலைமாமணி விருது & அறிஞர் அண்ணா விருது 1997
ஃபிலிம்ஃபேர் விருது 1961 - ஒரு ஹிந்தி படம் - சிறந்த கதை 

சிறந்த டைரக்ட்டர் - ஃபிலிம்ஃபேர் விருதுக்கு செலெக்ட் ஆன படங்கள் :
உரிமைக்குரல், இளமை ஊஞ்சலாடுகிறது & ஒரு ஓடை நதியாகிறது. 

அவசர போலீஸ் 100 பட டைட்டில்ல இப்டி. 
 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 9h7R5E7

நெஞ்சில் ஓர் ஆலயம் - கதை, வசனம், டைரக் ஷன் & தயாரிப்பு - ஸ்ரீதர்
வேற வேற கோணங்கள்ல 60 ஷாட்ல எடுக்கப்பட்ட பாட்டு.சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே சம்மதம்தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே - சுசீலா

நெஞ்சில் ஓர் ஆலயம் 1962 \ விஸ்வநாதன் ராமமூர்த்தி \ கண்ணதாசன்    

நெஞ்சிருக்கும் வரை - கதை, வசனம், டைரக் ஷன் & தயாரிப்பு - ஸ்ரீதர்
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கும் வாழ்ந்தே தீருவோம் எங்கே கால் போகும் போகவிடு - TMS & PBS

நெஞ்சிருக்கும் வரை 1967 \ MS விஸ்வநாதன் \ வாலி     

மீனவ நண்பன் - கதை, வசனம் & டைரக் ஷன் - ஸ்ரீதர்
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ - வாணி ஜெயராம் &  ஜேசுதாஸ்

மீனவ நண்பன் 1977 / MS விஸ்வநாதன் \ முத்துலிங்கம் 

அவளுக்கென்று ஒர் மனம் - கதை, வசனம், தயாரிப்பு & டைரக் ஷன் - ஸ்ரீதர்ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம் - SPB

அவளுக்கென்று ஓர் மனம்  1977 \ MS விஸ்வநாதன் / கண்ணதாசன்   
   
ஒரு ஓடை நதியாகிறது - கதை, வசனம், தயாரிப்பு & டைரக் ஷன் - ஸ்ரீதர்
தலையை குனியும் தாமரையே என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
ஒரு ஓடை நதியாகிறது    1983 \ இளையராஜா / வைரமுத்து

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jul 25, 2023 10:29 am

25.07.2023

22.07.2023 -    SD சுந்தரம் அவர்கள் பிறந்த நாள்     [1921 - 1979]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 JB3wMdt

நாடகாசிரியர், சினிமா வசனகர்த்தா, பாடலாசிரியர், கவிஞர், டைரக்ட்டர், நடிகர். ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், பட்டினத்தார் பாட்டுக்கள், திருவருட்பா எல்லாமே இவருக்கு மனப்பாடம். 12 வயசிலேயே நவாப் ராஜமாணிக்கம் நாடக குழூல சேந்தார். இவரோட தமிழ் புலமையை பார்த்த ராஜமாணிக்கம் அவரை திருவையாறு அரசர் காலேஜ்ல சேத்துவிட்டார். சுந்தரம் முதல் வகுப்பிலே பாஸ் ஆகி தமிழ் வித்வான் ஆனார். 1942ல சுதந்திர போராட்டத்தில கலந்துக்கிட்டு  9 மாசம் ஜெயில்ல இருந்தார். ஜெயில்ல இருக்கும்போது நாட்டு விடுதலை பற்றி கவியின் கனவுன்னு ஒரு நாடகம் எழுதினார். 

ஜெயில்ல இருந்து விடுதலை ஆன பிறகு மறுபடியும் ராஜமாணிக்கம் நாடக குழுவுக்கே வந்தார். 1945ல சக்தி கிருஷ்ணசாமிகூட சேந்து சக்தி நாடக சபாவை ஆரம்பிச்சு கவியின் கனவு நாடகத்தை அரங்கேற்றினாங்க. இதுகூட பெருசில்ல. இந்த நாடகத்தில சிவாஜி கணேசன், நம்பியார், SV சுப்பையா இவங்கல்லாம் முக்கிய கேரக்ட்டர்ல நடிச்சதுதான் ஸ்பெஷாலிட்டி. 1500 தடவைக்கு மேல் மேடைஏறுச்சு கவியின் கனவு நாடகம். இன்னொரு முக்கிய விஷயமும் இருக்கு. இந்த நாடகம் நாகப்பட்டினத்தில நடத்தப்பட்டபோது, ரயில்வே துறை 'கவியின் கனவு ஸ்பெஷல்'னு பேர்ல ஒரு ரயில் வண்டி திருச்சீல இருந்து நாகப்பட்டினம் போக ஏற்பாடு செஞ்சுச்சு. 

1946ல MGR & VN ஜானகி முதல்முதலா ஜோடியா நடிச்ச மோகினி படத்துக்கு முதல் முதலா வசனம் எழுதினார். 1953ல மனிதனும், மிருகமும் படத்த வேம்புகூட சேந்து டைரக்ட்டினார். ஒரு சில படங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். 1962ல இந்தியா - சீனா போரின்போது 'சிங்கநாதம் கேட்குது சீனநாகம் ஓடுது' னு ஆல்பத்தை சொந்த செலவுல எடுத்து ரிலீஸ் செஞ்சார். சிவாஜி கணேசன் உட்பட முக்கியமானவங்க நடிச்சாங்க. 1968 - 1976 வரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளராக இருந்தார். கவிதை தொகுப்புகள் எழுதினார் .  

விருதுகள் :
சிறந்த வசனகர்த்தா 1965 - தமிழ்நாடு மாநில இசை & நாடக மன்றம் கொடுத்துச்சு. 
சிறந்த வசனகர்த்தா 1975 - ஜனாதிபதி விருது - மத்திய இசை & நாடக மன்றம் கொடுத்துச்சு. 
 
    
 பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jul 25, 2023 12:05 pm

25.07.2023

22.07.2023    நடிகர் யோகிபாபு பிறந்த நாள்    1985

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 PANY2Uq                பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Se91q9Y

காமெடி நடிகர். அப்பா பட்டாளத்துக்காரர். அதனால யோகி ஜம்மூல படிச்சார். விஜய் TVல நடந்த லொள்ளுசபா காமெடி ஷோல அசிஸ்டன்ட் டைரக்ட்டரா இருந்தார். நடிச்ச முதல் படம் 2009ல யோகி. அதனால யோகி பாபு. நாலஞ்சு படங்கள்ல ஹீரோவா நடிச்சிருக்கார். இப்ப ஏழெட்டு படங்கள்ல நடிச்சிட்ருக்கார். 4 படங்கள்ல நடிச்சு முடிச்சிருக்கார். சீக்கிரமா ரிலீஸ் ஆகும். 

சினிமா வாழ்க்கைய காமெடி ரோல்ல நடிச்சு பேர் வாங்கி முன்னணி நடிகர்கள் ஆனவங்கள்ல  இவரும் ஒருத்தர். ஒண்ரெண்டு ஹிந்தி, தெலுங்கு படங்கள்லயும் நடிச்சிருக்கார்.

விருதுகள்
SIIMA விருது & விகடன் விருது - ஆண்டவன் கட்டளை 2016 - சிறந்த காமெடியன் 
SIIMA விருது & விகடன் விருது - கோலமாவு கோகிலா 2018 - சிறந்த காமெடியன்
விகடன் விருது - பரியேறும் பெருமாள் - சிறந்த காமெடியன் 
ZEE Cine விருது - கோமாளி 2019 - சிறந்த காமெடியன்
 

அவ முன்னால நிக்குறேன் அவ கண்ணால சொக்குறேன் நான் தன்னாலே சிக்குறேன் பின்னால சுத்துறேன் - அனிரூத் ரவிசந்திரன் 

கோலமாவு கோகிலா  2009 / அனிரூத் \ சிவகார்த்திகேயன்
  

 பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jul 26, 2023 7:55 pm

26.07.2023

23.07.2023 -      நடிகர் சூர்யா பிறந்த நாள்         1975

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 APUHGqj                         பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 AgUUhtk

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 DW42jJf                                  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 QzVeIlf

சொந்த பேர் சரவணன். நடிகர் சிவகுமாரின் மகன். நடிகர் கார்த்திக்கின் அண்ணன். நடிகை ஜோதிகாவின் கணவர்.  நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்த்தர், டப்பிங் கலைஞர். நாள் முழுசும்  மாங்குமாங்குனு உழைக்கிறவங்களை பார்த்து சூர்யா ஆச்சரியப்பட்டார்.  

ஆரம்பத்தில நடிக்க பயப்பட்டார். அப்புறம்தான் எதற்கும் துணிந்தவனா மாறினார். அப்பா சிவகுமார் நடிகரா இருந்தாலும், படிக்கும்போது தன்னை நடிகரின் மகன்னு  யார்கிட்டயும் சொல்லல. நடிகராகணும்னு சூர்யா ஆசப்படல. கார்மெண்ட்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கணும்னு  பெரிய கனவு. பி.காம். படிப்பை முடிச்சிட்டு துணி கடைல வேல செஞ்சார். வ்யாபார நுணுக்கங்களை தெரிஞ்சுக்கிட்டார். அவர் பெரிய தொழிலதிபராவார்ன்னு எல்லாரும் நெனச்சங்க.

ஆறு மாசம் துணி கடைல வேல செஞ்சார். 1995ல வசந்த் டைரக்ட்டி, மணிரத்னம் தயாரிச்ச ஆசை படத்தில நடிக்க சூர்யாகிட்ட பேசினாங்க. ஆனா நடிக்க விருப்பமில்லாம சூர்யா ஊஹும்ன்னுட்டார். அவர்தான் கார்மெண்ட்ஸ் கனவுல இருந்தாரே. அதுக்கப்புறமும் திடீர்னு டைரக்ட்டர் மணிரத்னம்கிட்ட இருந்து சூர்யாவுக்கு, இல்ல இல்ல சரவணனுக்கு போன் வந்துச்சு. அவர் 1997ல தயாரிச்ச நேருக்கு நேர் படத்துல நடிக்க வைக்கலாம்னு நெனச்சு போன் செஞ்சார்.  சரவணன்கிட்ட நேர்ல பேசி, அந்த படத்தில ரெண்டாவது ஹீரோவா நடிக்க வச்சார். ஏற்கனவே சரவணன்னு ஒரு நடிகர் இருந்ததால, தனக்கு பிடிச்ச சூர்யாங்கற பேர் வச்சுட்டார் மணிரத்னம்.

விஜய், விஷ்ணுவர்த்தன், யுவன் சங்கர் ராஜா, கார்த்திக்ராஜா இவங்கல்லாம் சூர்யாவின் காலேஜ் நண்பர்கள். சூர்யாவுக்கு சொந்தமான  சினிமா தயாரிப்பு நிறுவனம் பேர் 2D எண்ட்டர்டெயின்மென்ட்.

ஆரம்பத்தில தன்மேல நம்பிக்கை இல்லாமை, ஞாபக சக்தி குறைச்சல், சண்டை, டான்ஸ் தெரியாம இருந்தது இந்த இல்லாமைங்களால ரொம்ப போராடினார். சூர்யாவின் வழிகாட்டி நடிகர் ரகுவரன். இவர்தான் சூர்யாவுக்கு நம்பிக்கைய கொடுத்து, சூர்யாவின் மன போராட்டத்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். அதுக்கப்புறம் சூர்யா தன் நடிப்புக்கு மெருகேற்றி நடிச்சார் பாருங்க, மைல்கல் படம் 2003ல காக்க காக்க படம். முதல் சூப்பர் டூப்பர் ப்ளாக்பஸ்ட்டர் படம்.

விஜய் TVல நடந்த 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை  தொகுத்து கொடுத்தார்.   இந்திய பிரபலங்களின் வருமானத்த அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா  பிரபலங்கள் 100 லிஸ்ட்ல சூர்யா ஆறு தடவ சேர்க்கப்பட்டிருக்கார்.

அகரம் என்ற ஒரு தொண்டு நிறுவனத்த நடத்தி  வர்றார். படிப்பை பாதியில விட்ட ஏழை பிள்ளைங்க, ஆதரவற்ற பிள்ளைங்களின் படிப்புக்காக இந்த  நிறுவனம் மூலம் சூர்யா தொடர்ந்து உதவி செஞ்சுட்டு இருக்கார். TB நோயாளிகளுக்கு இலவச ட்ரீட்மெண்ட் செய்றார்.  எய்ட்ஸ் விழிப்புணர்வு சம்பந்தமான ஒரு குறும்படத்தில நடிச்சார். சில விளம்பரங்களுக்கு பின்னணி பேசியிருக்கார்.

விருதுகள் :
தேசிய சினிமா விருது :
சிறந்த நடிகர் & சிறந்த படம் - சூரரைப் போற்று 2020 [இணை தயாரிப்பு சூர்யா]

தமிழ்நாடு மாநில விருதுகள் :
சிறந்த நடிகர் - நந்தா 2001
சிறப்பு விருதுகள் - கஜினி 2005 & வாரணம் ஆயிரம் 2008

கலைமாமணி விருது 2005

CineMAA விருது - சிறந்த தமிழ் நடிகர் - மாற்றான் 2013

சினிமா எக்ஸ்ப்ரஸ் விருதுகள் :
சிறந்த அறிமுக நடிகர் விருது - நேருக்கு நேர் 1997
ப்ரபல தமிழ் ஹீரோ - நந்தா 2002

எடிசன் விருது - சிறந்த ஹீரோ & சிறந்த வில்லன் - 24 \ 2017 - சூர்யா 3 ரோல்ல நடிச்சார்.

தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் :
சிறந்த துணை நடிகர் - பிதாமகன் 2004
சிறந்த தமிழ் நடிகர் - பேரழகன் 2005, வாரணம் ஆயிரம் 2009, சூரரைப் போற்று 2022
சிறந்த விமர்சன நடிகர் - 24 \ 2017
சிறந்த படம் - ஜெய் பீம் 2022 [ஜோதிகா & சூர்யா தயாரிப்பு

சர்வதேச தமிழ் சினிமா விருது - காக்க காக்க 2004

தென்னிந்திய சர்வதேச சினிமா விருதுகள் :
சிறந்த தமிழ் நடிகர் & சிறந்த படம் - சூரரை போற்று 2020 [இணை தயாரிப்பு சூர்யா]

விஜய் விருதுகள் :
2008ன் ஐகான் நடிகர்
சிறந்த நடிகர் - வாரணம் ஆயிரம் 2009
2010இன் என்ட்டர்டைனர் - அயன் & ஆதவன்
சிறந்த சேவையாளர் 2010 - அகரம் தொண்டு நிறுவனம்
2011இன் என்ட்டர்டைனர் - சிங்கம்

வேற விருதுகள் :
தினகரன் விருது 1998- சிறந்த அறிமுக நடிகர் - நேருக்கு நேர்
2008க்கான ஸ்டைல் ஐகான்
அமிர்தா மாத்ருபூமி விருது 2010 - ஆதவன் & அயன் - சிறந்த நடிகர்
மீரா இசையருவி தமிழ் இசை விருது 2010 - ஆதவன் படத்தில சூர்யா டமக்கு டமக்கு பாட்டுக்கு ஆடியதுக்கு.  
Behindwoods தங்க பதக்கம் 2016 - 36 வயதினிலே - சூர்யாவின் முதல் தயாரிப்பு
கோலிவுட் சினிமா விருது, Filmibeat விருது 2017 - 24 \ சிறந்த தமிழ் வில்லன் நடிகர்
நார்வே தமிழ் சினிமா விழா விருது / கலைசிகரம் விருது 2020 - நடிகர், தயாரிப்பாளர், அகரம் தொண்டு நிறுவனம்
சூரரை போற்று 2020 படத்துக்கு சிறந்த தயாரிப்பாளர், சிறந்த நடிகருக்கான விருதுகள்
ஜெய் பீம் 2021 படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதுகள்


இந்த படத்தில சூர்யா ஆடின ஆட்டத்துக்கு விருது வாங்கினார்
டமக் டமக் டம் டம்மா நான் தில்லாலங்கடி ஆமாம் மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா ஜமக் ஜமக்கு ஜம்மா என் ஜோலி ஜாலிதாம்மா - பென்னி தயாள்

ஆதவன்   2010 / ஹாரிஸ் ஜெயராஜ் \ நா முத்துக்குமார்

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என்மீது காதல் வந்தது எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா நீ சொல்வாயா நீ சொல்வாயா - சாதனா சர்கம் & ஹரிஹரன்

பூவெல்லாம் கேட்டுப்பார் 1999 \ யுவன் சங்கர் ராஜா \ பழனிபாரதி  

யாா் இந்த தேவதை யாா் இந்த தேவதை  ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா - ஹரிஹரன்


உன்னை நினைத்து 2002 / சிற்பி \ பா விஜய்  

சிறகுகள் நீளுதே பறவைகள் போலவே விண்வெளி தாண்டியே துள்ளி துள்ளி போகுதே
புதுவித அனுபவம் நொடியினில் பெருகிடும் - பாப் ஷாலினி, திப்பு & டிம்மி


காக்க காக்க   2003 \ ஹாரிஸ் ஜெயராஜ் \ தாமரை  

சுற்றும் விழி சுடரே சுற்றும் விழி சுடரே என் உலகம் உன்னை சுற்றுதே சட்டை பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச - பாம்பே ஜெயஸ்ரீ & ஸ்ரீராம் பார்த்தசாரதி  

கஜினி   2005 / ஹாரிஸ் ஜெயராஜ் \ நா முத்துகுமார்          

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jul 26, 2023 8:29 pm

26.07.2023

24.07.2023 -   நடிகை  ஸ்ரீவித்யா பிறந்த நாள்   [1953 - 2006]    
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 DQodHwH                               பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 P9F1LFV

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 TWaeYlf                                    

கண்களால் கதை பேசிய நடிகை. காலங்கள் கடந்தாலும் நினைவில் நிற்கும் நடிகைகளில்  இவரும் ஒருத்தர். இவரோட கண்களுக்கு சினிமா நட்சத்திரங்கள்லியே  நிறைய ரசிகர்கள் இருக்காங்க. கமல்ஹாசன் சொன்னது "பொண்ணுக்கு தங்க மனசு பொங்குது சின்ன மனசு கண்ணுக்கு நூறு வயசு"

கர்னாடக பாடகி ML வசந்தகுமாரியின் மகள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். கடேசி வரைக்கும் திருவனந்தபுரத்தில  இருந்து மலையாள படங்கள்ல நடிச்சார். கேரளாவின் மகளாவே வாழ்ந்தார். அமரன் படத்தில ஒரு பாட்டு பாடினார். மலையாளத்துல  சில படங்கள்ல பாடினார். கர்னாடக பாடகியாவும் இருந்தார். அம்மாகிட்ட பாட கத்துக்கிட்டார். பரதநாட்டிய  கலைஞரும்கூட. டப்பிங் இல்லாம சொந்த குரல்ல பேசி நடிச்சார். விழாக்கள்ல மேடைல பாட்டு பாடினார். பல மலையாளம், சில தமிழ் சீரியல்கள்ல நடிச்சார். கல்யாண வாழ்க்கைதான் சரியில்லாம போச்சுங்கிறது கசப்பான உண்மை. இருந்தாலும் கேமரா முன்னால நின்னபோது எல்லாத்தையும் மறந்து நடிச்சார்.

ஸ்ரீவித்யாவின் அப்பா கிருஷ்ணமூர்த்தி அப்போ மலையாள படங்கள்ல காமெடி ஆக்ட்டரா  நடிச்சிட்டு இருந்தார். இவர் பிறந்தப்போ அப்பாவுக்கு ஏதோ வியாதி வந்து நடிக்க முடியாம  இருந்தார். குடும்பத்தில  பணக்கஷ்டத்துலதான் ஸ்ரீவித்யா வளந்தார். அம்மா ரொம்ப நேரம் வேல செய்ய வேண்டியதிருந்துச்சு.

1966ல சிவாஜி கணேசன் நடிச்ச திருவருட்ச்செல்வர்  படத்தில குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். பெருசா நடிக்க ஆரம்பிச்சது 1971ல  நூற்றுக்கு நூறு படத்தில. காலேஜ்ல படிச்சுக்கிட்டு வாத்தியார லவ்வுற கேரக்ட்டர். ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சது 1972ல டெல்லி டு மெட்ராஸ் படத்தில ஜெய்சங்கருக்கு ஜோடியா. மலையாளத்துல 1969ல நடிக்க ஆரம்பிச்சார். MGR படத்துல நடிக்கிற சான்ஸ் கெடச்சமாதிரி  இருந்துச்சு. ஆனா ஸ்ரீவித்யா மூஞ்சீல வயதுக்கேத்த முதிர்ச்சி இல்லேனு அந்த சான்ஸ் விட்டுப்போச்சுனு பின்னால பேச்சு அடிபட்டிச்சு.  

இவரை விமர்சனம் செஞ்சவங்களுக்கு இவர் சொன்னது, "என்னிக்குமே நா புகழுக்காகவோ, பணத்துக்காகவோ, விருதுக்காகவோ நடிச்சது இல்ல. நா யார்னு நிரூபிக்க ஆசப்பட்டேன். அதன் பல சிரமங்களுக்கும் இடையே தொடர்ந்து நடிச்சேன்".

விருதுகள் :
கேரள மாநில விருதுகள் :
சிறந்த நடிகை 1979, 1983 & 1992
சிறந்த நடிகை 2வது இடம் 1985 & 1986

கேரள மாநில டெலிவிஷன் விருது 2004 - சிறந்த நடிகை

கேரள சினிமா விமர்சகர்கள் விருதுகள் :
சிறந்த நடிகை 1979
சலசித்ரா ப்ரதிபா விருது  2005

தமிழ்நாடு மாநில சினிமா விருதுகள் :
சிறப்பு விருது 1977 - மதுரகீதம்
MGR விருது 1992

தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள் :
சிறப்பு விருது 1975 - அபூர்வ ராகங்கள்
சிறந்த நடிகை 1979 & 1980 - மலையாள படம்

சினிமா எக்ஸ்பிரஸ் விருது :
சிறந்த குணசித்திர நடிகை 1991 - தளபதி

கலைமாமணி 1977


ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே பாச பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே - ஜேசுதாஸ்

ஆனந்தம்   2001 / SA ராஜ்குமார் / கலைகுமார்    

பூங்காவியம் பேசும் ஓவியம் ஆணிப் பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ - சுசீலா, சித்ரா & ஜேசுதாஸ்

கற்பூர முல்லை   1991 \ இளையராஜா \ வாலி    

என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள்  சொல்ல - சுசீலா & TMS

அதிர்ஷ்டம் அழைக்கிறது   1976 \ V குமார் \ வாலி    

கங்கை யமுனை இங்குதான் சங்கமம் ராகம் தாளம் மோகனம் மங்களம் அங்கயற்கண் மங்கல நாயகி பூப்போல் மெல்ல சிரித்தாள் - வாணி ஜெயராம் & ஜேசுதாஸ்

இமயம்    1979 \ MS விஸ்வநாதன் / கண்ணதாசன்    

புன்னகையோ பூமழையோ பொங்கி வரும்  தாமரையோ மானினமோ நாடகமோ மாதரசி யார் உறவோ - சுசீலா & TMS

டெல்லி TO மெட்ராஸ் 1972 / V குமார் / மாயவனாதன்    

கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு பதிலேதைய்யா இல்லாத மேடையொன்றில்  எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் - வாணி ஜெயராம் & சசிரேகா

அபூர்வ ராகங்கள்   1975 \ MS விஸ்வநாதன் \ கண்ணதாசன்

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 50 of 60 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 55 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக