ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

3 posters

Page 48 of 60 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 54 ... 60  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Jul 12, 2023 2:25 pm

12.07.2023

பாடலாசிரியர் நா முத்துக்குமார் பிறந்த நாள் [1975 - 2016]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 J7t6sZQ

சின்ன வயசிலிருந்தே புத்தங்கள் படிக்க ஆரம்பிச்சார். தமிழ் இலக்கியம் முதுகலை பட்டதாரி. MA படிக்கும்போது சில வார இதழ்களுக்கு கவிதைகள் எழுதி அனுப்பினார். அப்டி அனுப்பிய கவிதைகள்ல இலக்கிய துறைல பிரபலமானது 'தூர்' என்ற கவிதை. வாழ்க்கையின் திருப்புமுனை. பல புத்தகங்கள், சில கவிதை தொகுப்புகள் எழுதினார்.

கணையாழினு ஒரு ஆண்டு இதழ். இதுல அந்த தூர் கவிதை வெளியாச்சு. கணையாழி ஆண்டு  இதழை வெளியீடு செய்றதுக்கு விழா நடத்தினாங்க. சினிமா துறை, இலக்கிய துறை சேந்தவங்க இந்த விழாவுக்கு வந்திருந்தாங்க. நிறைய பேர் பேசினாங்க. அவங்கள்ல எழுத்தாளர் சுஜாதாவும் ஒருத்தர். அவர் பேசும்போது, "நா வாசிச்ச 25 கவிதைகள்ல இந்த கணையாழி இதழ்ல வந்திருக்கும் தூர் கவிதையையும் சேத்துக்குறேன்"னு சொன்னார். முத்துக்குமாரின் வாழ்க்கையில வெளிச்சம் கொடுத்துச்சு இந்த நிகழ்ச்சி.
  
இந்த கவிதையை எழுதியது யார்னு சுஜாதா கேட்டு, முத்துகுமாரை மேடைக்கு கூப்ட்டு, ஆயிரம் ரூபாய் கொடுத்தார். முத்துகுமார் அதை வாங்கி அதுல 500 ரூபாயை கணையாழி இதழுக்கு  கொடுத்தார். கவிஞர் அறிவுமதி முத்துகுமாரின் கவிதைகளை தொகுத்து, சாரல் பதிப்பகத்தின் மூலமா வெளியிட முன்வந்தார். 
'தமிழ் திரைப்பட பாடல்கள் 1990 முதல் 2000 வரை' என்ற தலைப்பில் ஆய்வு செஞ்சு முனைவர் பட்டம் வாங்கினார். 'பட்டாம்பூச்சி பதிப்பகம்' இவருக்கு சொந்தமானது. 

ஆரம்பத்தில தமிழ்நாடு சினிமா காலேஜ்ல டைரக்ட்டருக்கு படிக்க நெனைச்சார். ஆனா சீட்  கிடைக்கல.  அதனால டைரக்ட்டர் பாலு மகேந்திராகிட்ட 4 வருஷம் உதவியாளராக வேல  செஞ்சார். சினிமால பாட்டு எழுதினது மட்டுமில்லாம, சில படங்களுக்கு வசனம் எழுதினார். யுவன் சங்கர் ராஜாவின் நெறைய படங்களுக்கு பாட்டு எழுதினார். 

விருதுகள் :
சிறந்த பாடலாசிரியர் : 
தமிழ்நாடு மாநில சினிமா விருது - கஜினி 2005, தங்க மீன்கள் 2013, சைவம் 2014 இன்னும் நெறைய படங்கள் 
ஃபிலிம்ஃபேர் விருது - வெயில் 2006, அயன் 2009  
விஜய் விருது - Sivaji The Boss 2007, சிவா மனசுல சக்தி 2009, வெப்பம் 2011, கேடி பில்லா கில்லாடி ரங்கா 2013 - தெய்வங்கள் எல்லாம் 
SIIMA விருது - எங்கேயும் எப்போதும் 2011 - உன் பேர தெரியாதா   
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது & SIIMA விருது - தங்க மீன்கள் 2013 - ஆனந்த யாழை மீட்டுகிறாய் 
தேசிய விருது & தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது - சைவம் 2014 - அழகே அழகே எதுவும் அழகே 


ஸலாம் குலாமு குலாமு ஸலாம் குலாமு என்னை சைட்டடிக்கிற ஷாலினிக்கொரு ஸலாம் குலாமு கண்ணில் டைவ் அடிக்கிற டால்ஃபினுக்கொரு ஸலாம் குலாமு 
ஹலோ 1999 \ தேவா \ நா முத்துகுமார்    

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் - ஸ்ரீராம் பார்த்தசாரதி 

தங்க மீன்கள் 2013 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துகுமார்   

ஏ பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா   திருச்சிக்கா  திருத்தனிக்கா ஏ பல்லேலக்கா பல்லேலக்கா ஒட்டுமொத்த மக்களுக்கா - AR ரெய்ஹானா, SPB & பென்னி தயாள் 
சிவாஜி The boss 2007 / AR ரஹ்மான் \ நா முத்துகுமார்    

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே தனியாக பேசிடும்  சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே அடி இதுபோல் மழைகாலம் - கார்த்திக் 
அயன் 2009 \ ஹாரிஸ் ஜெயராஜ் \ நா முத்துகுமார்    

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் அப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறையில்லை அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை

அங்காடித் தெரு 2010 / விஜய் ஆண்டனி \ நா முத்துக்குமார்    

பேபி மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Jul 12, 2023 2:34 pm

12.07.2023

டைரக்ட்டர் வசந்தபாலன் பிறந்த நாள் [1966]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 AonqdLT

டைரக்டர் & திரைக்கதை எழுத்தாளர். சினிமா துறைல அசிஸ்டன்ட் எடிட்டராக வேலைய ஆரம்பிச்சார். அப்புறம் டைரக்ட்டர் சங்கர்கிட்ட 1993ல ஜென்டில்மேன் படத்தில அசிஸ்டன்ட் டைரக்ட்டர்கள்ல ஒருத்தரா இருந்தார். சங்கர்கூட  ஒரு சில படங்கள்ல வேல செஞ்சார். தனியா டைரக்ட்டின முதல் படம் 2002ல ஆல்பம்.  

விருதுகள் :
தேசிய சினிமா விருது, தமிழ்நாடு மாநில சினிமா விருது - வெயில் 2006 - சிறந்த தமிழ் படம் 
ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த டைரக்ட்டர் - வெயில் 2006 
விஜய் விருது, ஃபிலிம்ஃபேர்  விருது, தமிழ்நாடு மாநில சினிமா விருது - அங்காடித் தெரு 2010 -
சிறந்த டைரக்ட்டர் 
ஆனந்த விகடன் சினிமா விருது - அங்காடித் தெரு 2010 - சிறந்த கதை 
நார்வே தமிழ் சினிமா விழா - காவியத் தலைவன் 2014 - சிறந்த டைரக்ட்டர் 


வெயில் - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - வசந்தபாலன்
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே நண்டூரும் நரியுரும் கருவேலங் காட்டோரம் தட்டானை

வெயில் 2006 / GV ப்ரகாஷ்குமார் \ நா முத்துக்குமார்     

காவியத் தலைவன் - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - வசந்தபாலன்வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க பச்சை மஞ்ச செவப்பு வெள்ளை ஊதா - ஹரிசரண் & Dr நாராயணன்

காவியத் தலைவன் 2014 AR ரஹ்மான் / நா முத்துகுமார்    

பேபி மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Jul 14, 2023 2:05 am

14.07.2023

13.07.2023 - கவியரசு வைரமுத்து பிறந்த நாள் [1953] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 LMg91yu                                                
                                                                                                               
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 OYK3b2X                                                    
2014ல கவியரசு வைரமுத்து பத்மபூஷண் விருது வாங்கினார். கொடுத்தவர் முன்னாள் பிரசிடெண்ட் ப்ரணாப் முகர்ஜி. 


பாடலாசிரியர், எழுத்தாளர், கவிஞர். அண்ணா, கலைஞர், பெரியார் இவங்க எழுதியதையும், அவங்க தமிழையும் படிச்சுதான் இவரும் எழுதலாம்னு ஆசப்பட்டார். பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன்  கவிதைகளையும், தமிழையும் படிச்சார். 10 வயசிலேயே கவிதை எழுத ஆரம்பிச்சுட்டார். 14 வயசில இலக்கிய, இலக்கணங்களை, குறிப்பா திருக்குறள் படிச்சு வெண்பா எழுத கத்துக்கிட்டார். ஸ்கூல்ல பேச்சு போட்டிகள்ல  கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கினார். மதுரை மாவட்டத்தில முதல் மார்க் வாங்கி, வெள்ளி பதக்கம் வாங்கினார். காலேஜ்லயும் பேச்சு போட்டிகள்ல ஏகப்பட்ட பரிசுகள் வாங்கினார்.

கவியரசு பட்டம் 1986ல தமிழ் வளர்ச்சி மன்றம் கொடுத்தது. 1998ல வைரமுத்து இந்த பட்டம் வேணான்னுட்டார். அப்புறமா கலைஞர் கருணாநிதி இவரோட 'பெய்யென பெய்யும் மழை' ங்கிற புத்தகத்தை ரிலீஸ் செஞ்சார். அப்பத்தான் கலைஞர் இவருக்கு கவிப்பேரரசு பட்டத்தை கொடுத்தார். 

தமிழ் இலக்கிய பேரவைனு ஒரு அமைப்பின் மூலமா தமிழ் கவிஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் ஊக்கம் கொடுத்துட்டு இருக்கார். சில வெளிநாடுகள்ல இவரை கூப்ட்டு  பாராட்டியும் இருக்காங்க. தமிழ் இலக்கியம் படிச்சவர். 'இதுவரை நான்' னு சுய சரிதை  எழுதியிருக்கார். கவிதை தொகுப்புகள், ஹைக்கூ கவிதைகள், நாவல்கள், கட்டுரைகளும் எழுதினார். இவரது படைப்புகள் ஹிந்தி, இங்கிலீஷ், வேற சில தென்னிந்திய  மொழிகள்ல ட்ரான்ஸ்லேட் ஆச்சு. பாடலாசிரியர்கள் மதன்கார்க்கியும், கபிலனும் வைரமுத்துவின் பிள்ளைங்க. 

சினிமாக்கு வைரமுத்து எழுதிய முதல் பாட்டு 1980ல நிழல்கள் படத்தில "இது ஒரு பொன்மாலை பொழுது" பாட்டு. இளையராஜா, AR ரஹ்மான் மியூஸிக்ல இவர் எழுதிய பாட்டுக்கள்  எல்லாமே  தூள்தான். 1986ல புன்னகை மன்னன் படத்துக்கப்புறம் வைரமுத்து இளையராஜா ம்யூஸிக் போட்ட படங்களுக்கு பாட்டு எழுதல. 
ஒவ்வொரு ரசிகனுக்கும் பாட்டு, கவிதை, ஹைக்கூன்னாலே ஞாபகத்துக்கு வர்றவர் கவிப்பேரரசுதான். 

கவியரசு கதை, வசனம் எழுதிய படங்கள் :
நட்பு 1986 - கதை, வசனம் & பாட்டு  
துளசி 1987, அன்று பெய்த மழையில் 1989, வணக்கம் வாத்தியாரே 1991, கேப்டன் 1994 - வசனம் & பாட்டு
வண்ண கனவுகள் 1987 - வசனம் 

பட்டங்கள் :  
கவி சாம்ராட் - முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயி கொடுத்தது 
காப்பிய கவிஞர் - முன்னாள் இந்திய ப்ரெசிடெண்ட் அப்துல் கலாம் 
கவிப்பேரரசு - கலைஞர் கருணாநிதி 

கௌரவ டாக்ட்டர் பட்டங்கள்
தமிழ்நாடு ஓப்பன் யூனிவர்ஸிட்டி, மதுரை காமராஜ் யூனிவர்ஸிட்டி, பாரதியார் யூனிவர்ஸிட்டி 
 
விருதுகள் :
கலைமாமணி விருது 1990 & பாவேந்தர் 1990

தேசிய விருதுகள் :
முதல் மரியாதை 1985 - எல்லா பாட்டுக்களுக்கும் 
ரோஜா 1992 - சின்ன சின்ன ஆசை 
கருத்தம்மா 1994 - போறாளே பொன்னுத்தாயி ; பவித்ரா 1994 - உயிரும் நீயே உடலும் 
சங்கமம் 1999 - முதல் முறை கிள்ளிப் பார்த்தேன் 
கன்னத்தில் முத்தமிட்டால் 2002 - ஒரு தெய்வம் தந்த பூவே 
தென்மேற்கு பருவக்காற்று 2010 - கள்ளிக்காட்டில் பிறந்த தாயே 
தர்மதுரை 2010 - எந்த பக்கம் காணும்போதும் 

ஃபிலிம்ஃபேர் விருதுகள் : 
அந்நியன் 2005 - ஓ சுகுமாரி ஓ சிங்காரி 
வாகை சூட வா 2011 - சரசர சாரக்காத்து வீசும்போது 
காற்று வெளியிடை 2017 - வான் வருவான் வருவான் வருவான் 
சில பாட்டுகளுக்கு நாமினேட் ஆனார்.

தமிழ்நாடு மாநில சினிமா விருது :  
அலைகள் ஓய்வதில்லை 1981 - விழியில் விழுந்து இதயம் & காதல் ஓவியம் பாடும் 
கருத்தம்மா 1994 - போறாளே பொன்னுத்தாயி 
முத்து 1995 - ஒருவன் ஒருவன் முதலாளி 
பம்பாய் 1995 - கண்ணாளனே எனது கண்ணை 
சங்கமம் 1999 - முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்  
அந்நியன் 2005 - ஓ சுகுமாரி ஓ சிங்காரி & அய்யங்காரு வீட்டு அழகே 
பெரியார் 2007 - எல்லா பாட்டுக்களும் 

SIIMA விருதுகள் : 
ஓ காதல் கண்மணி 2015 - மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை 
சில பாட்டுகளுக்கு நாமினேட் ஆனார்.

விஜய் விருதுகள் :  
எந்திரன் 2010 - அரிமா அரிமா நானோ ஆயிரம் 
தென்மேற்கு பருவக்காற்று 2010 - கள்ளிக்காட்டில் பிறந்த தாயே 
வாகை சூட வா 2011 - சரசர சாரக்காத்து வீசும்போது

இலக்கிய சேவை & நாவல்களுக்கு  : 
பத்மஸ்ரீ 2003, பத்மபூஷன் 2014 & வேறு சில விருதுகளும்
 

வெட்டிவேரு வாசம் வெடல புள்ள நேசம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு வேருக்கும் வாசம் வந்ததுண்டோ மானே - ஜானகி & மலேசியா வாசுதேவன்

முதல் மரியாதை 1985 \ இளையராஜா \ வைரமுத்து 

போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனச தொட்டு தர பாக்கும் புல்லபோல வெக்கப்பட்டு - சுஜாதா மோகன் & உன்னிமேனன்

கருத்தம்மா 1994 / AR ரஹ்மான் \ வைரமுத்து 

ஓ சுகுமாரி ஓ சிங்காரி ஏ அலங்காரி நீ ஓ சுகுமாரி ஓ சுகுமாரி ஓ சிங்காரி ஏ குமாரி ஏ குமாரி நீ குமாரி குமாரி என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது - ஹரிணி & சங்கர் மகாதேவன் 
அந்நியன் 2005 / ஹாரிஸ் ஜெயராஜ் \ வைரமுத்து   

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி  பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு - SPB

முத்து 1995 / AR ரஹ்மான் \ வைரமுத்து   

முதல் முறை கிள்ளி பார்த்தேன் முதல் முறை கண்ணில் வேர்த்தேன் எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறு முறை உயிர் கொண்டேன் உன்னால் இருமுறை - சுஜாதா மோகன் & ஸ்ரீனிவாஸ்
சங்கமம் 1999 / AR ரஹ்மான் \ வைரமுத்து  

பேபி மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Jul 14, 2023 2:11 am

14.07.2023

13.07.2023 - நடிகர் அருண்பாண்டியன் பிறந்த நாள் [1958]
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 GZwzxpH    பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 07sgguv

நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் & டைரக்ட்டர். ஐங்கரன் இன்ட்டர்நேஷனல்  என்கிற தயாரிப்பு நிறுவனத்துக்கு தலைமை தயாரிப்பாளர் அதிகாரியா இருந்தார். அப்புறம் சொந்தமா A & P என்ற தயாரிப்பு & விநியோக நிறுவனத்தை ஆரம்பிச்சார். தென்னிந்திய சினிமா நிதியாளர் சங்கத்தின் செயலாளராவும், தென்னிந்திய சினிமா ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராவும்  இருக்கார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல 1985ல சிதம்பர ரகசியம் படத்தில நடிக்க ஆரம்பிச்சார். 1986ல ஊமை விழிகள் படத்தில நடிச்சி ப்ரபலமானார். 

2021ல அன்பிற்கினியாள் படத்தில தன் மகள் கீர்த்திக்கு அப்பாவா நடிச்சார். 

"இனி நான் வயசுக்கேத்த மாதிரி நடிப்பேன். என் தோற்றத்துக்கு ஏத்த மாதிரி ஷேவ் பண்றது, மீச வக்கிறது  இப்டி மட்டும் செஞ்சுக்குவேன். லிப்ஸ்டிக், மேக்கப், விக் வச்சு நடிக்கமாட்டேன்"னு வெளிப்படையா சொல்லியிருக்கார்.


அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு தங்க மகன் வரவை கேட்டு தந்தை உள்ளம் பாடும் பாட்டு - SPB & ஜெயசந்திரன்

இணைந்த கைகள் 1990 / கியான் வர்மா \ ஆபாவாணன்    

புருஷன் வீட்டில் புகுந்த நேரம் பொறந்த வீடு மறந்து போகும் தானே தானே உன் அரசன் பேச்ச எடுக்கும்போது அண்ணன் பேச்சு எடுபடாது மானே மானே - சுவர்ணலதா & மனோ 

அதிகாரி 1991 / கங்கை அமரன் \ வாலி    

 தாலாட்டும் காற்றே தாய் சொன்ன பாட்டே என் வானில் சந்திரனும் சூரியனும் நீயே  குங்குமப் பூவே குளிர் மஞ்சள் நிலவே நெஞ்சுக்குள் ஆடி வரும் தங்கமணித் தேரே - சுஜாதா & ஹரிஹரன்
தேவன் 2002 இளையராஜா \ பழனிபாரதி   

விகடன் - கதை, திரைக்கதை, தயாரிப்பு & டைரக் ஷன் - அருண்பாண்டியன்
யார் இவளோ யார் இவளோ தினந்தோறும் தேடினேன் யார் இவளோ யார் இவளோ உயிர் பூவை சூடினேன் அவள் கூந்தல் ஏறி சேர மலர் காடே கூடி வா - ஹரிஷ் ராகவேந்திரா
விகடன் 2003 \ ஜெரோம் புஷ்பராஜ்    

பேபி மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Jul 14, 2023 2:15 am

14.07.2023

13.07.2023 - நடிகை சீதா பிறந்த நாள் [1967]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 EZuDxzO          பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 GHfTVgM

சாய் ரந்தரி நிஜ பேர். அம்லு செல்ல பேர். நடிகர் & டைரக்ட்டர் R பார்த்திபனின் முன்னாள் மனைவி. சீதா தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்லயும், TV சீரியல்கள்லயும்  நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 1985ல ஆண்பாவம். 1992ல சுகமான சுமைகள் படத்தை தயாரிச்சார். 

இவர் ஒரு நாளைக்கு 3 ஷிஃப்ட் கூட நடிச்சார். பல படங்கள்ல நடிக்க நேரம் கெடக்காமயும் இருந்துச்சு. 1989ல புதிய பாதை படத்ல ஒண்ணா நடிச்சபோதுதான் சீதாவும், பார்த்திபனும் லவ்வி கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. 1992 வரை சீதா நடிச்சார். அப்புறம் சினிமாவுக்கு ஒரு நீண்ட  ஸ்ட்டாப். 2002லதான் திரும்பவும் நடிக்க வந்தார். 

ஒரு தடவ நடிகர் பாண்டியராஜ் சீதாவை பாத்தார். அவர் நடிப்பாரான்னு சீதாவின் அப்பாகிட்ட பாண்டியராஜ் கேட்டார். அப்பா ஊம் சொன்னதால சீதா பாண்டியராஜின் ஆண் பாவம் படத்தில நடிக்க ஆரம்பிச்சார். இந்த படத்தில சீதா  நடிச்சபோது, ஒவ்வொரு சீனுக்கும் நெறய டேக் எடுத்தாங்க. அதனால சினிமால நடிக்க அலுத்துகிட்டார் சீதா. அப்பாதான் என்கரேஜ் செஞ்சு சீதா நடிப்பை  கட்டினியூ செஞ்சார். சம்பளம் வாங்காமலேயே இந்த படத்தில நடிச்சார். படம் எடுத்து முடிச்சபிறகு படத்தின் டைரக்ட்டர் பாண்டியராஜும், தயாரிப்பாளரும் சேந்து சீதாவுக்கு கார் பரிசாக கொடுத்தாங்க. அதுக்கப்புறம் சினிமால பிஸி நடிகை ஆயிட்டார் சீதா. 

2005ல ரைட்டா தப்பா படத்தில துணை நடிகரா நடிச்சதுக்கு தமிழ்நாடு மாநில சினிமா விருது வாங்கினார்.


குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே ஒனக்காகத்தான் பூத்தாடுதே வா - சித்ரா & மலேசியா வாசுதேவன்

ஆண் பாவம் 1985 இளையராஜா \ குருவிகரம்பை சண்முகம்      

அன்பே இது காதல் உயில் உன்னை நான் பார்த்திராவிட்டால் என் கவிதை நோட்டு வெள்ளையாக இருந்திருக்கும் உன்னை நான் தீண்டியிராவிட்டால் - சித்ரா & SPB

துளசி 1987 \ சம்பத் செல்வம் / வைரமுத்து \   

மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதை கேட்டு இது பூபாளம் புது ஆலோலம் விழி பூவும் மலரும் காலை நேரம் - சுசீலா & SPB

தாயம் ஒண்ணு 1988 / இளையராஜா \ கங்கை அமரன்   

பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம் இந்த மீசை வச்ச கொழந்தக்கி என் பாட்டு போதுமா பிள்ளையே பிள்ளையே உன் மனம் வெள்ளையே கள்ளம் கபடம் இல்லையே - வாணி ஜெயராம் & SPB 

புதிய பாதை 1989 / சந்திரபோஸ் / வைரமுத்து   

ஒன்ன பாத்த நேரத்தில ஒலகம் மறந்து போனதடி கண்ண பாத்த வேகத்தில என்ன மறந்து போனதடி தாளம் தெரியல அம்மாடி நேரம் தெரியல - உமா ரமணன் & மலேசியா வாசுதேவன்

மல்லு வெட்டி மைனர் 1990 / இளையராஜா \ கங்கை அமரன்      

பேபி மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jul 15, 2023 5:28 pm

15.07.2023

14.07.2023 - சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பிறந்த நாள் [1954]  
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 MOLkx7C                          பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 MgGWXSX

நடிகை ராதிகாவின் கணவர். பொண்ணு வரலட்சுமி நடிகை. சரத்குமார் TV ஷோக்கள்ல  கலந்துக்கிட்ருக்கார். அப்டி ராதிகாவின் பொழுதுபோக்கு தயாரிப்பு நிறுவனம் ராடான் மீடியா ஒர்க்ஸ் சன் டீவீல நடத்திய கோடீஸ்வரன் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டார் சரத்குமார். அப்போதான் இவருக்கு ராதிகாகூட பழக்கம் ஏற்பட்டுச்சு. 2001ல கண்ணாலம் கட்டிக்கினாங்க. நம்ம அண்ணாச்சி, சூரியவம்சம் படங்கள்ல ரெண்டு பேரும் சேந்து நடிச்சாங்க.  
தென்னிந்திய சினிமா கலைஞர்கள் சங்க தலைவராக இருந்தார். நடிக்க வர்றதுக்கு முன்னால பத்திரிகையாளராக இருந்தார். சரத்குமார் ஆரம்பத்தில  வில்லன், சப்போட்டிங்   ரோல்ல  நடிச்சார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். இவருக்கு  ரஷ்ய மொழியும் தெரியும். தமிழ்ல சுப்ரீம் ஸ்டாராய்  வலம் வந்தார். நடிக்க ஆரம்பிச்சது 1986ல தெலுங்கு படத்தில. 


1987ல சின்ன பூவே மெல்ல பேசு படத்தில சரத்குமாரை ஹீரோவா போடலாம்னு சொன்னார் டைரக்ட்டர் ராபர்ட் ராஜசேகர். அந்த படத்தின் தயாரிப்பாளர் ஊஹும்ன்னுட்டார். எல்லாருக்கும்  நல்லா தெரிஞ்ச நடிகரைத்தான் போடணும்னு சொல்லி ப்ரபுவை ஹீரோவா போட்டாங்க. சரத்குமார் அறிமுகமான தமிழ் படம் 1988ல கண் சிமிட்டும் நேரம். இணை தயாரிப்பும் செஞ்சார். 1990ல புலன் விசாரணை படத்தில வில்லனா நடிச்சு பேர் வாங்கினார். 

சின்ன வயசிலேயே உடற்பயிற்சி செஞ்சு உடம்பை கட்டுக்கோப்பா வச்சிருக்கார். 20 வயசில  மிஸ்டர் மெட்றாஸ் போட்டீல கலந்துக்கிட்டு ஜெயிச்சார். ஸ்கூல் படிப்பு முடிச்ச பிறகு வீடு வீடா நியூஸ்பேப்பர் போட்ற வேல செஞ்சார். அப்புறம் ரிப்போர்ட்டர் ஆனார். 

விருதுகள் :  
கலைமாமணி 1993

தமிழ்நாடு மாநில சினிமா விருதுகள் : 
நாட்டாமை 1994, நட்புக்காக 1998, சிம்மராசி 1998 - சிறந்த நடிகர் 
MGR விருது 

தென்னிந்தியா ஃபிலிம்ஃபேர் விருதுகள்
நாட்டாமை 1994, சூர்யவம்சம் 1997 & நட்புக்காக 1998 - சிறந்த நடிகர்

சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் 
புலன் விசாரணை 1990 - சிறந்த வில்லன் 
சூரியன் 1992 சிறப்பு விருது - சிறந்த நடிகர் 
நாட்டாமை 1994, சூர்யவம்சம் 1997 - சிறந்த நடிகர் 

தினகரன் சினிமா விருது, சினிமா ரசிகர்கள் விருது - சூரியவம்சம் 1997 - சிறந்த நடிகர் 
ஏசியாநெட் சினிமா சிறப்பு ஜூரி விருது - பழசிராஜா 2009
வனிதா சினிமா விருது - பழசிராஜா 2009 - சிறந்த துணை நடிகர் 
இன்னும் சில விருதுகள்
 

உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா மருவும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திட வா சிறுக சிறுக உன்னில் என்னை 

பச்சைக்கிளி முத்துச்சரம் 2007 / ஹாரிஸ் ஜெயராஜ் \ ரோகினி  

ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன் இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன் மணமால  ஒண்ண பூபூவா கோா்த்திருந்தேன் - சாதனா சர்கம் & KK

ஐயா 2005 / பரத்வாஜ் \ பா விஜய்  

கிச்சிலி சம்பா குத்தி எடுத்தேன் மொச்சக் கொழம்பும் வச்சி எடுத்தேன் மாமாவே உனக்காகத்தான் உச்சி மலைக் காத்துல உச்சந்தலை வேர்க்குது - சித்ரா & SPB 

ஊர் மரியாதை 1992 \ தேவா \ காளிதாசன்  

கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலயும் போட்டா வாய் செவக்கும் மச்சா நீயும்மச்சினி நானும் தொட்டா தூள் பறக்கும் ஹே நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும் - ஜானகி & மனோ 

நாட்டாமை 1994 \ சிற்பி \ வைரமுத்து  

சின்ன சின்ன முந்திரியா தோட்டத்த தொட்டவன் மந்திரியா கண்ணடிக்கும் சுந்தரியாகாதலில் ராஜ தந்திரியா வெத்தல போட்டும் சிவக்கலயே நாக்கு - சித்ரா & மனோ 

நட்புக்காக 1998 / தேவா \ காளிதாசன்  

 பேபி மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jul 15, 2023 5:34 pm

15.07.2023

14.07.2023 - நடிகை கனகா பிறந்த நாள் [1973]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 KbvNfuh                                 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 PsywH0k

நடிகை தேவிகாவின் மகள். தமிழ், தெலுங்கு மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். வாழ்க்கைல ஏகப்பட்ட ப்ரச்னைகள். 2000 வரைக்கும் நடிச்சார். அப்புறம் காணல. 

நடிச்ச முதல் தமிழ் படம் கரகாட்டக்காரன் 1989. அதனால செல்லமா இவர கரகாட்டக்காரன் கனகானு  சொன்னாங்க. பாடகியாகணும்னு சான்ஸ் தேடி அலைஞ்சப்போ, நடிகை ஆயிட்டார். கங்கை அமரனின்  பக்கத்து வீட்லதான் கனகா வீடு. அவரோட மனைவி ஒரு தடவை கனகாவை பாத்தார். 

"இந்த பொண்ணு அழகா இருக்கா. கரகாட்டக்காரன் படம் எடுக்கப் போறதா சொன்னீங்களே, அந்த படத்தில  இந்த பொண்ண நடிக்க வச்சுக்கோங்க"ன்னு  கங்கை அமரனின் மனைவி சொல்ல, அவரும் மனைவி சொன்னபடி செஞ்சுட்டார். கனகாவுக்கு அடிச்சது யோகம். படமும் ஓஹோன்னு ஓடுச்சு. 


இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து தான் சிந்து பாடும் சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே - சித்ரா & இளையராஜா 

கரகாட்டக்காரன் 1989 \ இளையராஜா \ கங்கை அமரன்     

பூத்து பூத்து குலுங்குதடி பூவு அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்  ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோய் .. - உமா ரமணன் & SPB 

கும்பக்கரை தங்கையா 1991 / இளையராஜா \ கங்கை அமரன்      

வண்ணச் சிந்து வந்து விளையாடும் சொந்தம் தேடும் வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும் வலை போடும் மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில் - ஜானகி & மனோ

கோயில் காளை 1993 \ இளையராஜா \ கங்கை அமரன்      

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே வளயல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே - சுவர்ணலதா & அருண்மொழி 

சக்திவேல் 1994 \ இளையராஜா \ காமகோடியன்      


உச்சிமலை மேகங்கள் தூறல்கள் போட சுற்றி வரும் பூங்காற்று தெம்மாங்கு பாட காவினில் பூவினில் தேனீக்கள் கவிதைகள் பாடிடும் நேரம் - சித்ரா

வெள்ளைய தேவன் 1990 / இளையராஜா / வாலி      

பேபி மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jul 15, 2023 5:39 pm

15.07.2023

14.07.2023 - நடிகை கீதா பிறந்த நாள்  [1962]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 N02nYFu பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Geetha11

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Geetha10

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல, TV சீரியல்கள்ல  நடிச்சிருக்கார். TV ஷோக்கள்லயும் கலந்துக்கிட்டார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 1978ல பைரவி, ரஜினியின் தங்கச்சியா. 1997ல கல்யாணத்துக்கப்புறம் நடிக்கிறதுக்கு கொஞ்ச வருஷம் இடைவெளி விட்டு, 2000க்கு அப்புறமா அம்மா ரோல்ல நடிக்க வந்தார். 

இவர் பாலசந்தர் டைரக் ஷன் நடிச்ச முதல் படத்தில திட்டு வாங்கினாராம். 

"பாலசந்தர் சார் டோன் அதிகாரமாத்தான் இருக்கும். ஆனா நல்லா வேல வாங்குவார்" னு கீதா சொல்லியிருக்கார். 

இவர் நடிகர் விஜய், ஜெயம் ரவி இவங்களுக்கு அம்மாவா நடிச்சார். வீட்டை விட்டு இவர் வெளிய  போனா, விஜய் அம்மா, ஜெயம் ரவி அம்மானு சொன்னாங்க. கீதை இதை கேட்டு பெருமைப்பட்டார்.   


இசை பாடும் பறவை இதோ இந்த மேடை என் கூடு தமிழ் பாடல் என் வாழ்வு என் சந்தோஷம் சங்கீதமே - வாணி ஜெயராம்
சுமங்கலி 1983 \ MS விஸ்வநாதன் \ வாலி 

தென்றல் வரும் முன்னே முன்னே தெம்மாங்கு வரும் பின்னே பின்னே தங்கமே வைரமே அன்புடனே தினம் தாலாட்டு பாட மின்மினி & அருண்மொழி

தர்மசீலன் 1993 / இளையராஜா \ வாலி  

கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே - சுசீலா

கேளடி கண்மணி 1990 / இளையராஜா \ மு மேத்தா  

அமுதூறும் தேன் பிறையே ஆராரோ வான் பிறையே அமுதூறும் தேன் பிறையேஆராரோ வான் பிறையே நீ தூங்கத் தான் சிங்காரமே - ஜானகி & ஷைலஜா 

உறுதி மொழி 1990 / இளையராஜா \ RV உதயகுமார்  

பேபி மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Jul 16, 2023 10:52 pm

16.07.2023

15.07.2023 - நடிகை அனுஹாசன் பிறந்த நாள்  [1970]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 V7GRy0a     பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 0Bkni8C

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். டப்பிங் கலைஞர். சொந்த பேர் அனுராதா சந்திரஹாசன். சந்திரஹாசன் கமலஹாசனின் அண்ணன். 

விஜய் ட்டீவீல 'காபி வித் அனு' நிகழ்ச்சியில பிரபலங்களை மூணு சீசனா 4  வருஷத்துக்கு மேலா இன்டர்வ்யூ செஞ்சது இவர்தான். வேற நிகழ்ச்சிகள்லயும் கலந்துக்கிட்டார். தமிழ், மலையாள சீரியல்கள்ல நடிச்சார். 

நடிகை சுஹாசினி இவரை சினிமால இன்ட்ரோ செஞ்சு வச்சது  1995ல அவர் டைரக்ட் செஞ்ச இந்திரா படத்துல. இதுக்கப்புறமா  இவர் சப்போட்டிங் ரோல்ல நடிச்சார். சிறந்த துணை நடிகைக்கான தமிழ்நாடு மாநில சினிமா விருது 2002ல ரன் படத்தில நடிச்சதுக்காக வாங்கினார். 


அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே காலம் மாறி போச்சு நம் கண்ணீர் மாறி போச்சு

இந்திரா 1995 \ AR ரஹ்மான் \ வைரமுத்து

பேபி மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Jul 16, 2023 11:30 pm

16.07.2023

டைரக்ட்டர் TR சுந்தரம் அவர்கள் பிறந்த நாள் [1907 - 1963]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 0cEWZBp                பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 U9rWDZr

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 QYZ2aKr     பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 LZY3rNv

சேலத்துல இருக்கும் மிக பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் சொந்தக்காரர். மாடர்ன் தியேட்டர்ஸ். வேற வேற மொழிகள்ல குறுகிய காலத்தில புதுசா தொழில் நுட்பங்களை வச்சு படங்களை தயாரிச்சு, தென்னிந்தியா சினிமாதுறைல  முன்னோடியாக  வாழ்ந்தவர். 

டைரக்ட்டர், தயாரிப்பாளர், நடிகர். நூற்பு ஆலை, நூல் வியாபாரம் செஞ்ச நல்ல வசதியான குடும்பத்தில  பிறந்தவர். ஸ்கூல் படிப்பு அங்க முடிச்சிட்டு சென்னை வந்து பட்டப்படிப்பு பிடிச்சார். அப்புறம் இங்கிலாந்து போயி,  நூல்களுக்கு கலர் சேர்க்கும் கலை படிச்சு பட்டம் வாங்கினார். லண்டன் பொண்ண லவ்வி கல்யாணம் செஞ்சுகிட்டு இந்தியா வந்த பிறகு, குடும்ப தொழிலை பாக்காம, சினிமா துறைக்கு போய்ட்டார். 

சேலத்துல ஏஞ்சல் ஃபிலிம்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் இருந்துச்சு. ஆரம்பத்தில இதுல சேந்து படங்களை  தயாரிக்க ஆரம்பிச்சார். அந்த காலத்தில பம்பாய், கல்கத்தானு வட இந்தியால பல இடங்களுக்கு போயி ஷூட்டிங் எடுத்தாங்க. சுந்தரம் & குழு கல்கத்தால ரெண்டு படம் எடுத்தாங்க. 

சுந்தரம் யோசிச்சார். ஏன் இங்க ஒரு பெரிய ஸ்டூடியோ, தயாரிப்பு நிறுவனம் தொடங்கினா  என்ன?  ஒரு முடிவுக்கு வந்தார். சேலம் ஏற்காடு மலையடிவாரத்ல  அப்பவே 10 ஏக்கர் நிலத்துல மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை 1935ல ஆரம்பிச்சார். முழு படமும் அங்கேயே  தயாரிக்கிற மாதிரி வசதிகளோட ஷூட்டிங் ஸ்பாட், பாட்டு ரெக்காடிங் செய்றதுக்கான இடம், முடிச்ச படத்தை போட்டு பாக்க ப்ரீவ்யூ தியேட்டர்னு எல்லா, எல்லா வசதிகளும் இருந்துச்சு . தென்னிந்தியால முதல் கலர் படம், ரெட்டை வேடம் படம், ஏராளமான செலவுல எடுத்த படம்னு சாதனைகள் செஞ்சவர். 

இப்போ என்னான்னா மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த எடத்துல அது இல்ல. 'சுந்தரம் கார்டன்ஸ்' ங்ற பேர்ல  அப்பார்ட்மெண்ட் இருக்கு. ஆனா அந்த நிறுவனத்தின் என்ட்ரன்ஸ்  மட்டும் இருக்கு. ஒரு சில பட நிறுவனங்கள் அங்க போயி, முதல் ஷூட்டிங் செய்ற வழக்கம் இருந்துச்சு. 

இந்த  என்ட்ரன்ஸை பாக்கிறதுக்கு  சினிமா கலைஞர்கள் போயிருந்தாங்க. அப்போ சிலர் போட்டோ  எடுத்துகிட்டாங்க.

காமெடி நடிகர்கள் காளி ரத்தினம், துரைராஜ், ஏழுமலை, A கருணாநிதி இவங்களையும் சேத்து 250 பேர் மாடர்ன் தியேட்டர்ஸ்ல வேல செஞ்சாங்க. ஸ்ட்ரிக்ட்டான கண்டிஷன்லாம் போட்டார் சுந்தரம்.  இவர் அறிமுகப்படுத்தி நடிக்க வச்சவங்கல்ல MR ராதா, ரங்காராவ், அஞ்சலிதேவி முக்கியமானவங்க. 

இவர் எடுத்த படங்கள் தொழில் நுட்பத்தில் சூப்பரா இருக்கணும்னு நெனைச்சார். ஜெர்மெனில இருந்து ரெண்டு ஒளிப்பதிவாளர்களை வரவழச்சார். இவங்ககிட்ட ட்ரைனிங் எடுத்துகிட்டவங்க  பிற்காலத்துல சிறந்த ஒளிப்பதிவாளர்களாக ஆனாங்க.  

சுந்தரம் ரெண்டு தடவ தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் தலைவராக இருந்தார். இந்த சபையின் வளாகத்தில 2000ல  ஒரு சிலையும், சேலம் TR சுந்தரம் கல்யாண மண்டபத்துல இவரோட முழு உருவ சிலையும் வைக்கப்பட்டிருக்கு.

சாதனைகள் : 
தமிழ் சினிமா நிறுவனங்கள்ல மாடர்ன் தியேட்டர்ஸ்த்தான் 1960கள்ல 100 படங்களுக்கும் மேல எடுத்த  நிறுவனம். 
முதல் மலையாள படம், சிங்கள படம் எடுத்தவர். 
மாடர்ன் தியேட்டர்ஸும், அமெரிக்க சினிமா நிறுவனமும் சேந்து 1952ல தமிழ்நாட்டுல எடுத்த முதல் இங்கிலீஷ் படம் தி ஜங்கிள். 
தமிழ்ல முதல் ரெட்டை வேஷ படம் 1940ல உத்தமபுத்திரன் படத்தை எடுத்தார். 
தமிழ்ல முதல் கலர் படம் 1956ல அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்த தயாரிச்சு  டைரக்ட்டினார். 1961ல இதே படத்த மலையாளத்துல தயாரிச்சார். 

MN நம்பியார் 10 வேஷங்கள்ல நடிச்ச திகம்பர சாமியார் படத்த 1950ல தயாரிச்சு டைரக்ட்டினார். 
வேற சில சாதனைகளும் உண்டு. 

இவரை பற்றி முழுசா தெரிஞ்சுக்கனும்னா இங்க போய் பாருங்க. கொஞ்சநஞ்ச வெவரமில்ல. 
https://archive.org/details/tr-sundaram-mudaliar-salem-modern-theatred/page/5/mode/1up?q
சுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு. அறந்தை மணியன் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம்னு புத்தகம் 2020ல எழுதினார்.


சர்வாதிகாரி - தயாரிப்பு & டைரக் ஷன் - TR சுந்தரம்
கடை சரக்கும் காட்டு சரக்கும் கலந்து செய்ததுங்க மனம் உவந்து செய்ததுங்க பதம் தெரிந்து செய்ததுங்க குடகு முதல் இமயம் வரை கும்முனு அடிக்குங்க வாசம் ஜம்முனு இருக்குங்க - PA பெரியநாயகி & S தட்சிணாமூர்த்தி

சர்வாதிகாரி 1951 \ S தட்சிணாமூர்த்தி \ KP காமாட்சிசுந்தரம்  

ஓ..................... வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ ஆ.............. அன்பு கணவனின் முன்னாலே மனைவி அழகாக சிரிக்கும் புன்சிரிப்பு - சுசீலா & சீர்காழியார்
எங்கள் குலதேவி 1959 / KV மகாதேவன் \ மருதகாசி
   
மாமா மாமா மாமா ஏமா ஏமா ஏமா சிட்டுப்போல பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா தாலி கட்டும் முன்னே கையும் மேல படலாமா - ஜமுனாராணி & TMS
குமுதம் 1961 \ KV மகாதேவன் \ மருதகாசி  
 
பறக்கும் பறவைகள் நீயே படரும் கொடிகளும் நீயே சிரிக்கும் மலர்களும் நீயே சித்திரம் போல வந்தாயே - ஜமுனாராணி & PB ஸ்ரீனிவாஸ்

கவிதா 1962 / கே வி மகாதேவன் \ கண்ணதாசன்  

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜெகத்திலே - சுசீலா

வண்ணக்கிளி 1959 / KV மகாதேவன் \ மருதகாசி  

பேபி மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4936
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 48 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 48 of 60 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 54 ... 60  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum