புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
2 Posts - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
441 Posts - 47%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
30 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 43 of 60 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 51 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jun 15, 2023 6:52 pm

15.06.2023

நடிகர் நகுல் பிறந்த நாள் [1984]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Nakul10

நடிகர் & பின்னணி பாடகர். நடிகை தேவயானியின் கூட பிறந்த தம்பி. 2003ல பாய்ஸ் படத்ல முதல் முதலா நடிக்க ஆரம்பிச்சார். ஹீரோவா நடிச்ச முதல் படம் 2008ல காதலில் விழுந்தேன். ஹீரோவா நடிக்கிறதுக்கு 20 கிலோ எடையை கொறச்சார். அந்த கேரக்டருக்கு பொருந்தணுமாம். 

நகுல் தன் மனைவி கூட சேந்து பாட்டு பாடி வீடியோ எடுத்து இன்ஸ்ட்டாக்ராமில் போட்டிருக்கார். மிருகங்கள் பிடிக்கும். அதனால நிறைய பூனைகளும், நாய்களும் வளக்கிறார்.
 


தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே மடிமீது தூங்க சொல்கிறாய் தோள்மீது சாய்ந்து கொள்கிறாய்  நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய் ஓஹோஹோ பெண்ணே 

காதலில் விழுந்தேன் 2008 \  விஜய் ஆன்டனி \ PV ப்ரசாத் 

டோரா டோரா அன்பே டோரா உனக்கு என்ன அழகே ஊரா நீ என்ன பூக்களின் தேசமா டோரா டோரா அன்பே டோரா மனசும் மனசும் பேசுது ஜோரா நீ என்ன என்னுயிர் சுவாசமா - சின்மயி & பல்ராம் 

மாசிலாமணி 2009 \ D இமான் \ பா விஜய் 

எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும் அவனை நெருங்க மனம் சிறகடிக்கும் இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும் ராஜா ராஜா பக்கத்திலே நெருங்கி வெட்கம் எடுப்பான் 

நான் ராஜாவாகப் போகிறேன் 2013 / GV ப்ரகாஷ்குமார் \ மதன்கார்க்கி 

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jun 15, 2023 7:36 pm

15.06.2023

பழம்பெரும் நடிகர் CL ஆனந்தன் பிறந்த நாள் [1933 - 1989]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 FfSNVDT

டான்ஸர் டிஸ்க்கோ சாந்தியின் அப்பா. இன்னொரு மகள் நடிகை லலிதாகுமாரி நடிகர்  ப்ரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி. 

ஆனந்தன் 1953ல தந்தை படத்தில சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். ஹீரோவா நடிச்ச முதல் படம் 1960ல விஜயபுரி வீரன். ஹீரோ. வாள்சண்டை, குதிரை சவாரி  எல்லாம் சூப்பரா, ஈஸியா நடிச்சார். வில்லனாவும் நடிச்சார். 1966ல காட்டு மல்லிகைனு படத்தில அவரே புலி கூட சண்டை போட்டு  நடிச்சார். டூப்லாம் போடல. வேற படங்கள்லயும் காட்டு மிருகங்கள் கூட டூப் இல்லாமயே  நடிச்சார். 

தனிப்பிறவி, நீரும் நெருப்பும் படங்கள்ல MGR கூட நடிச்சார்.  MGRஇன் தீவிர ரசிகர். ஆனந்தன் மூவீஸ்னு தயாரிப்பு நிறுவனததை நண்பர்க கூட சேந்து ஆரம்பிச்சார். 1964ல நானும் மனிதன்தான் படத்தை தயாரிச்சார். சில மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். 


வெத்தல போட்ட பத்தினி பொண்ணு சுத்துது முன்னால வெட்டுது கண்ணு சொக்குது பொண்ணு கட்டிக்க மாப்பிள்ளே பட்டு புடவே சுத்தி இருக்கு பாத்துக்க கண்ணாலே - TM சௌந்தரராஜன் & சதன் 

வீரத் திருமகன் 1962 \ விஸ்வநாதன்-ராமமூர்த்தி \ கண்ணதாசன் 

சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும் தென்றலும் புயலாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே - TM சௌந்தரராஜன்

செங்கமலத்  தீவு 1962 \ KV மகாதேவன் \ திருச்சி தியாகராஜன்  

அம்மா வேண்டுமா அம்மா வேண்டுமா உனக்கோர் அம்மா வேண்டுமா அந்தி பகல்  துணையிருக்க அள்ளி அள்ளி அமுதளிக்க அம்மா வேண்டுமா - TM சௌந்தரராஜன்

குபேரத் தீவு 1963 / CN பாண்டுரங்கன் \ கண்ணதாசன்

நானே வரலாமா வீரா நீயே வருவாயா - K ஜமுனாராணி

குபேரத் தீவு 1963 / CN பாண்டுரங்கன் \ திருச்சி தியாகராஜன்


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jun 17, 2023 11:59 am

17.06.2023

16.06.2023 - நடிகை அஞ்சலி பிறந்த நாள் [1986]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 BwZCuwU

ஆந்திரால பிறந்தார். ஸ்கூல் படிப்பை அங்க முடிச்சுட்டு சென்னைக்கு வந்து காலேஜ் படிப்பை முடிச்சார். அப்புறமா குறும்படங்கள்ல நடிக்க தொடங்கினார். விளம்பரங்கள்ல நடிச்சார். அதனால  சினிமால  நடிக்க வழி கெடச்சுது. 2 தெலுங்கு படங்கள்ல நடிச்ச பிறகு 2007ல கற்றது தமிழ் படத்தில நடிச்சார். தமிழ்ல முதல் படம். 

விருதுகள்
கற்றது தமிழ் 2007
தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த அறிமுக நடிகை 
விஜய் விருது - சிறந்த அறிமுக நடிகை 
அங்காடி தெரு 2020 :
தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த நடிகை 
தமிழ்நாடு மாநில விருது - சிறப்பு விருது 
விஜய் விருது - சிறந்த நடிகை 
விகடன் சினிமா விருது - சிறந்த நடிகை 
ஜெயா TV விருது - சிறந்த நடிகை 
சர்வதேச இந்திய சினிமா உற்சவம் விருது - சிறந்த நடிகை 
நார்வே தமிழ் சினிமா விழா விருது - சிறந்த நடிகை 
எங்கேயும் எப்போதும் 2011
தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த நடிகை 
தென்னிந்திய சர்வதேச சினிமா விருது - சிறந்த நடிகை 
விஜய் விருது - சிறந்த நடிகை  
விகடன் சினிமா விருது - சிறந்த நடிகை
ஜெயா TV விருது - சிறந்த நடிகை 
சந்தோஷம் விருது - சிறந்த தமிழ் நடிகை 
IFTA விருது - சிறந்த நடிகை


உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது உன் துயரம் சாய என் தோள் உள்ளது முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை யார் என்ன சொன்னால் என்ன அன்பே உன்னோடு நானும் வருவேன் - யுவன் சங்கர் ராஜா 

கற்றது தமிழ் 2007 \ யுவன் சங்கர் ராஜா \ நா முத்துகுமார் 

மூணு காசு முட்டாயி டூரிங் டாக்கீஸ் கொட்டாயி கள்ளன் வீட்டு ஒறவா நீ என் ஒறக்கம் திருடின களவாணி தட்ட காட்டு விட்டில் போல தாவுதடி ஏமனசு பட்டிக்காட்டு பஸ்ஸபோல 

ஆயுதம் செய்வோம் 2008 \ ஸ்ரீகாந்த் \ உதயன் 

கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள் என் தூக்கம் போனதே அன்பே பனி பெய்யும் இரவிலே பல நாட்கள் கனவிலே உன் தோளில் தூங்கினேன் அன்பே - சின்மயி & ஹரிஹரன் 

தூங்கா நகரம் 2011 / சுந்தர் C பாபு / தாமரை 


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jun 17, 2023 12:14 pm

17.06.2023

16.06.2023 - பழம்பெரும் நடிகர் TR மகாலிங்கம் பிறந்த நாள் [1924 - 1978]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 GQ2X1Ab

நடிகர், பாடகர், ம்யூஸிக் டைரக்ட்டர், தயாரிப்பாளர் 

ஹை பிச்ல அட்டகாசமா பாடினார். ஜனங்கள் அதிகமா ரசிச்சது இதைத்தான். மிருதங்கம் வாசிக்கவும், பாட்டு பாடவும் கத்துக்கிட்டார். 5 வயசிலிருந்தே மேடை நாடகங்கள்ல நடிச்சார், பாடினார். மடங்கள்லயும், கோவில்கள்லயும்  பஜனை பாடும் சான்ஸ் கெடச்சுது. பின்னணி பாடகர் SC கிருஷ்ணன் நெருங்கிய நண்பர். 12 வயசில குட்டி பையன் மகாலிங்கம் ஒரு நாடக மேடைல பாடியதை கேட்ட தீரர் சத்தியமூர்த்தி அசந்து போயி, அவருக்கு தங்க மோதிரம் பரிசாக கொடுத்தார். 

அந்த காலத்ல ஸ்பீக்கர் அவ்ளவா இல்லாததால, மேடைல சத்தமா பாட வேண்டியதிருந்துச்சு. அதுக்கேத்த மாதிரி குரலை அட்ஜஸ்ட் செஞ்சுக்கிட்டாங்க. அந்த காலத்து பாடகர்கள் SG கிட்டப்பா, மகாலிங்கம், SC கிருஷ்ணன், த்யாகராஜ பாகவதர், TM சௌந்தரராஜன் இவங்கல்லாம் அப்டித்தான் பாடினாங்க.  

பாய்ஸ் நாடக கம்பெனில மகாலிங்கம் SG கிட்டப்பாவின் வாரிசூன்னு பேர் வாங்கினார். நாடக கலைக்கு ஒரு கிட்டப்பான்னா, சினிமா கலைக்கு மகாலிங்கம், கிட்டப்பாவின் மறு அவதாரம்னு சொன்னாங்க. ஜூனியர் கிட்டப்பானுகூட சொன்னாங்க. 

அப்பாவுக்கு இஷ்ட்டம் இல்லேன்னாலும் பிடிவாதமா அந்த காலத்தில ப்ரபல நாடக கம்பெனி பாலமோகன  சபால சேந்துட்டார். அங்க ஒரு நாடகத்தில மகாலிங்கம் பாடினதை கேட்டுத்தான் தயாரிப்பாளர் மெய்யப்ப செட்டியார் மகாலிங்கத்தை தான் தயாரிச்ச படத்தில அறிமுகம் செஞ்சு வச்சார். கிருஷ்ணனாக நடிச்ச மகா கலைஞன் மகாலிங்கம் 13 வயசிலேயே 1937ல நந்தகுமார் படத்ல நடிச்சு "யுகதர்ம முறையே" பாட்டு பாடினார். அவர் நடிச்ச முதல் படம், பாடிய முதல் பாட்டு.

சினிமால நடிக்க ஆரம்பிச்சிருந்தாலும், நாடகங்கள்லயும் தொடர்ந்து நடிச்சார். மகன் பேர்ல ஸ்ரீ சுகுமார்  ப்ரொடக் ஷன்ஸ்னு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சு, படங்களை தயாரிச்சு, தானும் நடிச்சார். ஆனா தயாரிப்பாளராக முன்னேற முடியல. நஷ்ட்டம் வந்து வறுமை நிலைக்கு வந்துட்டார். அந்த சமயத்தில கை பிடிச்சு தூக்கி விட்டவர் கவிஞர் கண்ணதாசன்தான். 1958ல தான் தயாரிச்ச மாலையிட்ட மங்கை படத்தில நடிக்கவச்சார். அந்த படத்தில மகாலிங்கம் பாடிய பாட்டுக்கள்ல ஒண்ணுதான் "செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென" பாட்டு. இன்னிக்கி  வரைக்கும் ஜனங்கள் மனசுல நிலைச்சு நிக்குது. 

ஹை பிச்சுல பாடிட்டு இருந்தவரை மென்மையா பாட வச்சவங்க விஸ்வநாதன் ராமமூர்த்தி. மாலையிட்ட மங்கை படத்தில "நானன்றி யார் வருவார் அன்பே" பாட்டு. நஷ்ட்டத்தில் விழுந்த மகாலிங்கத்தை எந்திரிக்க வச்சது இந்த மாலையிட்ட மங்கை படம். இவரோட ஸ்பெஷாலிட்டி என்னான்னா, யாருக்கும் பின்னணி குரல் கொடுப்பதில்லைனு வைராக்யத்தில இருந்தார். 

1948ல ஆதித்தன் கனவு னு ஒரு படம். ஆதித்தன் மகாலிங்கம் மேல கல்லெறியுற ஸீன். கல்லெறியுறதுக்கு துணை நடிகர்கள் வந்தாங்க. அதுல ஒருத்தருக்கு மகாலிங்கத்தை ரொம்ப பிடிக்கும். அவர் மட்டும் கல் எறியல. டைரக்ட்டர் சுந்தரம்கிட்ட நல்லா திட்டு வாங்கினார். திட்டு வாங்கின அந்த துணை நடிகர் யார்னு தெரீமோ? அதாங்க வெண்கல குரலோன். அவரேதாங்க. சீர்காழி கோவிந்தராஜன். 


படிக்க படிக்க நெஞ்சில் இனிக்கும் பருவம் என்ற காவியம் பார்க்க பார்க்க வளருமே காதலின்ப ஓவியம் - S ஜானகி & TR மகாலிங்கம் 

இரத்னபுரி இளவரசி 1960 / விஸ்வநாதன்-ராமமூர்த்தி / பட்டுக்கோட்டையார் 

ஆசை கொண்டேன் அமுதமே என் அன்பே ஆடும் தெய்வமே 

ஆட வந்த தெய்வம் 1960 / KV மகாதேவன் / மருதகாசி 

ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள் காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ - P சுசீலா & TR மகாலிங்கம் 

அமுதவல்லி 1959 \ விஸ்வநாதன்-ராமமூர்த்தி \ பட்டுக்கோட்டையார் 

செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் - TR மகாலிங்கம் 

மாலையிட்ட மங்கை 1958 / விஸ்வநாதன்-ராமமூர்த்தி / கண்ணதாசன் 


பேபி  மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jun 17, 2023 12:40 pm

17.06.2023

16.06.2023 - டைரக்ட்டர் சரண் பிறந்த நாள் [1966]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 AmCJOKa

இயக்குனர் சிகரம் K பாலசந்தர்கிட்ட உதவியாளராக இருந்தார். எல்லா டைரக்ட்டர்களையும்விட  சரணுக்கு இயக்குனர் சிகரம் ரொம்ப பிடிக்கும். சரண் சொந்தமா ஜெமினி ப்ரொடக் ஷன்ஸ்னு  தயாரிப்பு நிறுவனம் வச்சிருக்கார். 

ஆனந்த விகடன் வார இதழுக்கு கார்ட்டூன் வரைவாளரா  இருந்தார். மிச்ச நேரத்தில K பாலசந்தர் கூட வேல செஞ்சார். போக போக நேரம் போதாம கார்ட்டூன் வரஞ்ச வேலைய விட்டுட்டார். 

டைரக்ட்டின முதல் படம் காதல் மன்னன் 1998. இவருக்கு மட்டுமில்ல. MS விஸ்வநாதன் நடிச்ச முதல் படம். ஒரு பாட்டுக்கு ம்யூஸிக்கும் போட்டார். ம்யூஸிக் டைரக்ட்டர் பரத்வாஜ் ம்யூஸிக் போட்ட முதல் படம். 1999ல அஜீத் நடிச்ச அமர்க்களம் படம் ஓஹோன்னு ஓடினதுக்காக அந்த படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி டைரக்ட்டின சரணுக்கு நன்றி சொல்லும் வகைல அஜீத் ஒரு கார் வாங்கி கொடுத்தார். 

2006ல இதய திருடன் படத்தை K பாலசந்தர் தயாரிச்சார். 1998ல சரண் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட்டின படம் காதல் மன்னன் பட டைட்டில்ல இப்டி போட்டிருக்கார். 
சமர்ப்பணம் 
'அ' கற்றுக்கொடுத்த
ஆசான் கே.பாலசந்தர் அவர்களுக்கு... _சரண்
 


காதல் மன்னன் - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - சரண் 
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா ஓமனசுக்குள்  வண்டு சத்தம் என்னப்பா காதல் ஒண்ணும் தப்பு தண்டா இல்லப்பா - தேவா 

காதல் மன்னன் 1998 / பரத்வாஜ் \ வைரமுத்து 

பார்த்தேன் ரசித்தேன் - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - சரண்
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன் - ரேஷ்மி & யுகேந்திரன் 

பார்த்தேன் ரசித்தேன் 2000 \ பரத்வாஜ் / வைரமுத்து 

ஜெமினி - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - சரண்
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா தீவானா தீவானா நெஞ்சை பிழிந்தவன் நீதானா என் வீட்டு கோலத்தின் புள்ளிக்குள் ஒழிந்து தன் காதல் சொல்லும் மாயக்கண்ணனா - சாதனா சர்கம் 

ஜெமினி 2002 \ பரத்வாஜ் / வைரமுத்து


பேபி  மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jun 17, 2023 12:56 pm

17.06.2023

16.06.2023 - பரத கலைஞர் குமாரி கமலா பிறந்த நாள் [1934]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 K0VbaCn                                            பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 RqtDJbF

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 PuA3FZf

பரத நாட்டிய கலைஞர் & நடிகை. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். 3 வயசில இவரோட குடும்பம் பம்பாய்க்கு போனாங்க. அங்க கமலா கதக் நாட்டியம் கத்துக்கிட்டார். அங்க மூணரை வயசுல பம்பாய் ஆஸ்திக சாமாஜத்தில நடன மேதை ருக்குமணி முன்னால ஆடினார். ருக்மணி கமலாவும் மால போட்டு பாராட்டினார். ஹைதராபாத்ல சரோஜினி நாயுடு முன்னால ஆடி அவரும் வாழ்த்தினார். இரண்டாம் உலகப்போர் காரணமாக கமலாவின் குடும்பம் சொந்த ஊர் மயிலாடுதுறைக்கு  வந்துட்டாங்க. இங்கதான் கமலா பாரத நாட்டியம் கத்துக்க ஆரம்பிச்சார். மாயவரத்தில அரங்கேற்றம். 
1938ல வாலிபர் சங்கம் என்ற படத்தில குருட்டு பெண்ணாக டான்ஸ் ஆடி நடிச்சார். சின்ன ரோல்ல நடிச்சார். இந்த படத்தில கமலாவின் டான்ஸை பாத்த ஹிந்தி படகாரங்க நாலஞ்சு ஹிந்தி படத்ல நடிக்க வச்சாங்க. அதுக்கப்புறம் ம்யூஸிக் அக்கடமில இருந்து எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழா வரை கமலாவின் டான்ஸ் இல்லாத இடமே இல்லேன்னு சொல்லலாம். 

1944ல ஜகதலப்ரதாபன் படத்தில இவர் ஆடிய பாம்பு டான்ஸ் ஆஹா ஓஹோதான். அதுக்கப்புறம் அவர் சினிமால ஆடிய டான்ஸ் எல்லாமே கமலாவுக்கு புகழ் வாங்கி கொடுத்துச்சு. சில படங்கள்ல டான்ஸ் மாஸ்ட்டரா வேல செஞ்சார். AV மெய்யப்ப செட்டியாரின் தயாரிப்பு படங்கள்ல கமலாவின் டான்ஸ் கண்டிப்பா இருந்துச்சு. குறிப்பா சொல்லணும்னா 1947ல நாம் இருவர் படத்தில  "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" பாட்டுல ரெண்டு கமலா  ஆடினாங்க. 

கமலாவுக்கு டான்ஸ்ல திறமை இருந்த அளவுக்கு நடிப்புல இல்ல. இதை அவரே ஒத்துக்கிட்டார். "நீள நீளமா வசனம் பேசும்போது, கொஞ்சம் தடுமாறினாலும்  மொதல்ல இருந்து பேசணும். இப்போ இருக்கிறமாதிரி அப்போ டப்பிங் குரல்லாம் கெடயாது. இந்த டென்ஷன்லாம்  வேண்டாம்னுதான், நமக்கு நல்லா தெரிஞ்ச டான்ஸ் மட்டுமே ஆடிக்கலாம்னு முடிவு செஞ்சேன்" 
நடிப்புக்கும், டான்ஸுக்கும் முழுக்கு போட்டு, 1981ல ந்யூயார்க் போய்ட்டார். அங்க ஸ்ரீ பரத கலாலயானு டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிச்சு பரத கலை சொல்லி கொடுத்தார். 

விருதுகள்
கலைமாமணி விருது - 1967 ;  சங்கீத நாடக அகாடமி விருது - 1968 ; பத்மபூஷண் - 1970 ; சென்னை ம்யூஸிக் அகாடமியின் பவள விழா விருது - 2002 ; சூர்ய வாழ்நாள் சாதனையாளர் விருது - 2012


ஓ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் - MS ராஜேஸ்வரி 

பராசக்தி 1952 \ R சுதர்சனம் \ KP காமாட்சிசுந்தரம்
 
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் நம் காதல் கனிந்து வர கனவு கண்டேன் -
TS பகவதி & TMS 


சிவகெங்கைச் சீமை 1959 / விஸ்வநாதன்-ராமமூர்த்தி \ கண்ணதாசன் 


பேபி  மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jun 18, 2023 1:53 pm

18.06.2023

நடிகர் அரவிந்த்சாமி பிறந்த நாள் [1970]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 1KrBrX0    பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 Bm3Ambm

நடிகர், டப்பிங் கலைஞர். TV, சினிமா நடிகர் டெல்லி குமாரின் மகன். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 

சென்னைல பட்ட படிப்பை முடிச்சுட்டு, அமெரிக்கால மீதி படிப்பை முடிச்சார். அம்மாவுக்கு உடம்பு சரியில்லேன்னு இந்தியாவுக்கு வந்தார். டாக்ட்டராகணும்னு நெனைச்சார். செலவுக்கு  பணமில்லேன்னு  விளம்பரங்கள்ல கொஞ்ச நாள் நடிச்சார். ஒரு விளம்பரத்துல அவரை பாத்து பேச்சு வார்த்தை நடத்த கூப்ட்டார். டைரக்ட்டர் சந்தோஷ் சிவன் கூட சேந்து சினிமா விஷயங்களை அர்விந்த்சாமிகிட்ட பேசினார். 

நடிச்ச முதல் தமிழ் படம் 1991ல தளபதி. கலெக்ட்டரா நடிச்சார். ஹீரோவா நடிச்ச முதல் தமிழ் படம் ரோஜா 1992. அப்புறம் பம்பாய் படத்ல நடிச்சு முன்னேறினார். 1994ல The Lion King இங்கிலிஷ் படத்துல சிங்கத்துக்கு டப்பிங் குரல் கொடுத்தார். வேற படங்கள்லயும் டப்பிங் பேசியிருக்கார். 2015ல தனி ஒருவன் படத்தில வில்லனா நடிச்சு பேர் வாங்கினார்.  

2000 வரை ஆக்ட்டிங் குடுத்துட்டு அவரை தத்தெடுத்த அப்பா VD சுவாமியின் இன்ட்டர்நெஷனல்  வேலைகளை  பாக்க போய்ட்டார். 2006ல ஒரு ஆக்ஸிடென்ட் நடந்தது கொஞ்சம் நடக்க முடியாம  கஷ்டப்பட்டார். நாலஞ்சு வருஷத்துக்கப்புறம் மறுபடியும் 2013ல நடிக்க வந்துட்டார். 

விருதுகள்
தனி ஒருவன் 2015 :
ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த துணை நடிகர் 
சர்வதேச இந்திய சினிமா விருது - சிறந்த துணை நடிகர்  
விகடன் விருது - சிறந்த நடிகர் 
Behindwoods award - சிறந்த நடிகர் 
செக்க சிவந்த வானம் 2018 
ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த நடிகர்
தலைவி 2021 
ஃபிலிம்ஃபேர் விருது - சிறந்த நடிகர்
SIIMA விருது - சிறந்த துணை நடிகர் 


நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளம் தென்றல் உன் மீது பண்பாடும் - SPB 

மறுபடியும் 1993 \ இளையராஜா \ வாலி 

குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும் கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும் சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவயில 

பம்பாய் 1995 / AR ரஹ்மான் / வைரமுத்து 

தங்க தாமரை மகளே வா அருகே தத்தி தாவூது  மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே - மால்குடி சுபா & SPB 

மின்சார கனவு 1997 / AR ரஹ்மான் \ வைரமுத்து 

பண்ணபுர ராசாவே கட்டின மெட்டிது ஆத்தா பட்டணத்து ரோசாவே மயக்கம் வந்துரும் கேட்டா இதில் மண்ணுக்குள்ள வாசம் இருக்கும் அத சொல்ல சொல்ல நேசம் பொறக்கும் - மலேசியா வாசுதேவன் 

தாலாட்டு 1993 / இளையராஜா \ புலமைப்பித்தன்  

அரவிந்த்சாமி பாடிய பாட்டு 
கூடு விட்டு கூடு பாஞ்சான் மேனி விட்டு மேனி மேஞ்சான் பின்னே போகன் எந்தன் நெஞ்சின்  மேலே சாஞ்சான் பச்சை த்ராட்சை தூறல் மேலே இச்சை மூட்டும் தீயோ கீழே - ஜோதி நூரான் & அரவிந்த்சாமி 

போகன் 2017 / D இமான் \ மதன்கார்க்கி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jun 18, 2023 3:06 pm

18.06.2023

பழம்பெரும் பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம் பிறந்த நாள் [1941 - 2016]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 9cJSE87         பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 YDPWW3v

பாடலாசிரியர், கவிஞர், டைரக்ட்டர், தயாரிப்பாளர், கதை வசனம் எழுத்தாளர். 

கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்தார். கவிஞர் நடத்திய தென்றல் என்ற பத்திரிக்கைல அருணன் என்ற பேர்ல பஞ்சு அருணாசலம் சிறு கதைகள் எழுதினார். கவிஞர் கண்ணதாசன் கண்ணை மூடிக்கொண்டு யோசிச்சு படங்களுக்கு பாட்டு வரிகளை சொல்ல சொல்ல பஞ்சு எழுதினார். இப்டி பாட்டு எழுதி எழுதி அவருக்கு பாட்டு எழுத நல்ல வழிகாட்டியா இருந்துச்சு.  

கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் கண்ணப்பனின் மகன் பஞ்சு அருணாசலம். பஞ்சுவின் மகன் நடிகர் சுப்பு. 

ஆரம்பத்தில பஞ்சு அருணாசலம் AL ஸ்ரீநிவாசன் ஸ்டூடியோல செட் போட்றதுக்காக சாமான்களை எடுத்து கொடுப்பது, ஷூட்டிங் முடிஞ்சவுடன் சாமான்களை எல்லாம் எடுத்து வக்கிற வேல செஞ்சார். 

இசைஞானி இளையராஜாவை அன்னக்கிளி படத்தில அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாசலம். இந்த படத்தில எல்லா பாட்டையும் இவர்தான் எழுதினார். அதிகமான படங்களை தயாரிச்சது ரஜினி, கமல் படங்கள். இவரோட தயாரிப்பு நிறுவனம் பேர் PA ஆர்ட்ஸ். 

ஆரம்பத்தில பல கஷ்ட்டங்களை சந்திக்க வேண்டியதிருந்துச்சு. இவர் கதை எழுதினா, அந்த படம் பாதியில நின்றுமாம். அதனால இவருக்கு 'பாதிக்கதை பஞ்சு' ன்னே பட்டப்பேர் இருந்துச்சு. "பஞ்சு ராசியில்லாதவர்பா" னு  பேச்சு அடிபட்டிச்சு. 12 வருஷ போராட்டத்தில, எங்க திரும்பினாலும் அவமானம்தான் மிஞ்சியது. ஆனா பஞ்சு அசஞ்சு குடுக்கலியே. எப்படியோ அதுக்கப்புறம் இவர் கதை எழுதின படமெல்லாம் அட்டகாசமா ஓடுச்சு. பட வெற்றிக்கு க்யாரண்ட்டி. கதையை சீர் செய்றதுல வல்லவர். 

கொஞ்சம் கொஞ்சமா பஞ்சுவின் நிலை மாறி 'பாதிக்கதை பஞ்சு'வும் ராசியில்லா பஞ்சு'வும் பஞ்சா பறந்து காணாம போய்ட்டுது. AVM நிறுவனம் இருக்கும் வரைக்கும் பஞ்சுவின் பேரை சொல்லும். அந்த நிறுவந்த்தின் ஏகப்பட்ட படங்களுக்கு பஞ்சு கதை எழுதினார் இல்லேன்னா வசனம் எழுதினார். பாட்டு, திரைக்கதை எழுதினார். 

வாலி ஒரு தடவ சொன்னாராம், "ஏய்யா பஞ்சு, நீரே தயாரிச்சு, கதை, வசனம் எழுதுறே. பாட்டும் நீரே  எழுதினா எங்க பொழப்பு என்னாவுறது?" 

அதுக்கு பஞ்சு, " சரீண்ணே, நம்ம படத்துக்கு நீங்களே தொடர்ந்து பாட்டு எழுதுங்க. இப்ப எடுக்க போற படத்துக்கு 2 பாட்டு எழுதுங்க. 5 பாட்டுக்குரிய பணம் கொடுத்துர்றேன்". 

"ஏன் முழுஸ்ஸா தரமாட்டியா?"

"அதுக்கென்ன, எல்லா பாட்டும் நீங்களே எழுதிருங்க".  அந்த படத்துக்கு எல்லா பாட்டுமே வாலி எழுதி கொடுத்தார். மொத்த பாட்டும் தூள் கெளப்புச்சு. வைதேகி காத்திருந்தாள் 1984.

விருதுகள்
தமிழ்நாடு மாநில விருது - சிறந்த வசனகர்த்தா - எங்கேயோ கேட்ட குரல் 1982
SIIMA வாழ்நாள் சாதனையாளர் விருது
  


மணமகளே... வா - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - பஞ்சு அருணாசலம் 
டெல் மீ டெல் மீ டெல் மீ ஓ மை லவ் டு யூ லவ் மீ லவ் மீ லவ் மீ ப்ளீஸ் டெல் மீ நௌ ஜாடை கொண்டு பேசு பார்வை ஒன்று வீசு ஓ மை லவ் - அருண்மொழி 

மணமகளே... வா 1988 / இளையராஜா \ வாலி 

புதுப்பாட்டு - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - பஞ்சு அருணாசலம் 
நேத்து ஒருத்தரு ஒருத்தர பாத்தோம் பாத்து ஒருத்தர ஒருத்தரு  காத்து குளிர் காத்து கூத்து என்ன கூத்து சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது பாட்டுத்தான்  புது பாட்டுத்தான் - சித்ரா & இளையராஜா 

புதுப்பாட்டு 1990 \ இளையராஜா / கங்கை அமரன் 

மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம் பகலை முழு இரவாய் எண்ணி பார்ப்பதனாலே வெட்கம் - சுசீலா & TMS 

ஏழை பங்காளன் 1963 \ KV மகாதேவன் \ பஞ்சு அருணாசலம் 

மலரை போன்ற பருவமே மனதை மயக்கும் உருவமே வேகம் காட்டி நடப்பதோ போகும் பாதை தூரமோ - TMS 

மதறாஸ் TO பாண்டிச்சேரி 1966 \ TK ராமமூர்த்தி \ பஞ்சு அருணாசலம் 

பூ போல பூ போல பிறக்கும் பால் போல பால் போல சிரிக்கும் மான் போல மான் போல துள்ளும் தேன் போல இதயத்தை அள்ளும் - சுசீலா & TMS

நானும் ஒரு பெண் 1963 / R சுதர்சனம் \ பஞ்சு அருணாசலம்


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jun 19, 2023 10:26 am

19.06.2023

டைரக்ட்டர் கண்மணி பிறந்த நாள் [1980]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 CVqlCsW          பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 PO2VLhn

தமிழ், தெலுங்கு படங்களை டைரக்ட்டியிருக்கார். இளையராஜா ம்யூஸிக் குழூல கோரஸ் பாடகரா இருந்தார். 12 வருஷம் அவரோடேயே இருந்தார். 2002ல ஜெமினி பட தயாரிப்புல டைரக்ட்டர் சரண்கிட்ட வேலை செஞ்சார்.

டைரக்ட்டின முதல் படம் 2003ல ஆஹா எத்தனை அழகு. கதை, திரைக்கதை, வசனமும்கூட. 


ஆஹா எத்தனை அழகு ஆஹா எத்தனை அழகு பார்த்து பார்த்து பழகிய ஞாபகம் பழகி பழகி ரசித்த பூமுகம் ரசித்து ரசித்து ருசித்த புன்னகை ஆக மொத்தம் இவளே காதலி - சுஜாதா & ஸ்ரீனிவாஸ் 

ஆஹா எத்தனை அழகு 2003 / வித்யாசாகர் / பா விஜய் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jun 19, 2023 10:33 am

19.06.2023

நடிகை காஜல் அகர்வால் பிறந்த நாள் [1985]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 T9j5trr  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 43 OA1Icj3

பம்பாய்ல பஞ்சாபி குடும்பத்தில பிறந்தார். படிப்பு முடிச்சுட்டு விளம்பரங்கள்ல, TV விளம்பரங்களிலும் நடிச்சார். இவரோட தங்கச்சியும் நடிகை. காஜல் தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். 2004ல ஹிந்தி படத்தில சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். அப்புறம் தெலுங்கு படங்கள்ல நடிச்சிட்டு 2008லதான் பழனி தமிழ் படத்தில நடிக்க ஆரம்பிச்சார். 

2016ல கன்னட படத்தில ஒரு பாட்டு பாடியிருக்கார். 

விருதுகள்
SIIMA விருது, Cosmopolitan People Choice Award & CineMAA  விருது - சிறந்த நடிகை - துப்பாக்கி 2012
Youth Icon of South Indian Cinema 2013


ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு
வழிதோறும் பூக்கள் வாழ்த்து சொன்னது கைதொட்டு இது கடவுள் எழுதி காதில் பாடும் தாலாட்டு - ஷில்பா ராவ் & ஜாவேத் அலி 


நான் மகான் அல்ல 2010 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார் 

வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன் உன் ஸ்வாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன் - பாம்பே ஜெயஸ்ரீ & ஹரிஹரன் 

துப்பாக்கி 2012 / ஹாரிஸ் ஜெயராஜ் / நா முத்துகுமார் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 43 of 60 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 51 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக