ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வோல்வோவின் புதிய காரின் விலை 43 இலட்சம் ரூபாய்!
by mohamed nizamudeen Today at 3:05 pm

» டாடா நிறுவனத்தில் பணியாற்ற ஜார்க்கண்டிலிருந்து 800 பெண்கள் வருகை!
by mohamed nizamudeen Today at 3:02 pm

» இந்திய வான்பரப்பில் ஈரான் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
by mohamed nizamudeen Today at 2:57 pm

» 45 பவுன் நகைகள் கொள்ளை!
by mohamed nizamudeen Today at 2:55 pm

» போலிகளைக் கண்டறிய, மருந்து பொருட்களில் க்யூஆர் கோட்!
by mohamed nizamudeen Today at 2:42 pm

» வீடியோவா எடுக்கிறே? ஓடு! ஓடு!!
by mohamed nizamudeen Today at 2:13 pm

» இளைஞர்களின் நேரத்தைத் திருடும் சமூக வலைதளங்கள்! - விஜய் சேதுபதி.
by mohamed nizamudeen Today at 2:01 pm

» நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் ,உதயா நீக்கம்
by mohamed nizamudeen Today at 1:59 pm

» சோளநார் பொம்மை
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» மனைவி சொல்றபடி முடிவெடுங்க...!
by Dr.S.Soundarapandian Today at 1:16 pm

» பனி இல்லாத மார்கழியா
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» சுவீடன் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 04/10/2022
by Dr.S.Soundarapandian Today at 1:13 pm

» அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூசை நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Today at 7:49 am

» குறுக்கெழுத்துப் போட்டி - (காந்தியின் பெயருக்கு முன்னால் இருக்கும் அடைமொழி)
by ayyasamy ram Today at 7:45 am

» தினம் ஒரு மூலிகை - எள்
by ayyasamy ram Today at 7:23 am

» ஹினமத்சூரி ஜப்பானிய கொலு
by ayyasamy ram Today at 12:05 am

» புதுமை கொலு
by ayyasamy ram Yesterday at 12:00 am

» தன்னம்பிக்கையை அதிகரிக்கும் புன்னகை
by ayyasamy ram Yesterday at 11:58 pm

» சொக்லேட் பொல்கோர்ன்
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» கொத்து தோசை
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» ஃப்ரூட் கஸ்டர்ட்
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» தினை அல்வா
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» சிவப்பு அவல் உப்புமா
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» நட்ஸ் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 11:51 pm

» சீஸ் சமோசா
by ayyasamy ram Yesterday at 11:50 pm

» சொன்னாங்க…சொன்னாங்க!
by ayyasamy ram Yesterday at 11:48 pm

» ஆபரேஷன் போலோ-
by ayyasamy ram Yesterday at 11:47 pm

» ஊருக்கு உபதேசம்
by ayyasamy ram Yesterday at 11:45 pm

» இதய ஆரோக்கியம்
by ayyasamy ram Yesterday at 11:44 pm

» சமையல்... சமையல்...
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» பாட்டி வைத்தியம்!
by mohamed nizamudeen Yesterday at 7:49 pm

» குழந்தைக்குள் மருத்துவர் - கவிதை
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» "வாழ்ந்தே காட்டுவோம்!!!"
by selvanrajan Yesterday at 1:16 pm

» ஆபரேஷன் காக்டஸ்: இந்தியப் படைகள் மாலத்தீவுக்குச் சென்று ஆட்சிக் கவிழ்ப்பை எவ்வாறு அடக்கியது?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:38 pm

» சமையல் டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:33 pm

» சரஸ்வதிக்கு பிடித்த ஊர்!
by ayyasamy ram Yesterday at 7:44 am

» திராவிட மாடல் என்றால் என்ன?
by sncivil57 Sun Oct 02, 2022 4:50 pm

» விஜய் & பிரபாஸ் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ்
by ayyasamy ram Sun Oct 02, 2022 2:03 pm

» ரிலாக்ஸ் – சினிமா செய்திகள்
by ayyasamy ram Sun Oct 02, 2022 2:02 pm

» கவிதைக்குள் ஓர் கதை
by ayyasamy ram Sun Oct 02, 2022 2:00 pm

» நானே வருவேன் – விமர்சனம்
by ayyasamy ram Sun Oct 02, 2022 1:56 pm

» சின்மயி பாடிய பாடல்கள்
by ayyasamy ram Sun Oct 02, 2022 12:48 pm

» வட கிழக்கு பருவ மழை 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
by Dr.S.Soundarapandian Sun Oct 02, 2022 10:01 am

» படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Sun Oct 02, 2022 10:00 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Sun Oct 02, 2022 9:58 am

» மனைவியோட சண்டை போடாதீங்க…!
by Dr.S.Soundarapandian Sun Oct 02, 2022 9:55 am

» கல்யாண வீட்டில் இரண்டு முறை சாப்பிட்டவர்…!
by Dr.S.Soundarapandian Sun Oct 02, 2022 9:54 am

» பேல்பூரி -கண்டது
by Dr.S.Soundarapandian Sun Oct 02, 2022 9:53 am

» பேல்பூரி -கேட்டது
by Dr.S.Soundarapandian Sun Oct 02, 2022 9:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

3 posters

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2720
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Aug 17, 2022 1:16 pm

17.08.2022

13.08.2022 - நாட்டிய தாரகை & நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் [1933]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். நெறைய நடிச்சது ஹிந்தி படங்கள்ல. ஹிந்தி படங்கள்ல நம்பர் ஒன் நடிகைன்னு பேர் வாங்கினவர். 

சின்ன வயசிலேயே வழுவூர் ராமையா பிள்ளைகிட்ட பரதநாட்டியமும், மனக்கல் சிவராஜா ஐயர்கிட்ட கர்னாடக சங்கீதமும் கத்துக்கிட்டார். 13 வயசில நாட்டிய அரங்கம் ஆச்சு. வைஜயந்திமாலான்னாலே இவர் பத்மினியுடன் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்ல ஆடிய "கண்ணும் கண்ணும் கலந்து" போட்டி பாட்டு ஞாபகத்துக்கு வந்துச்சா? வந்திருக்கும் வந்திருக்கும்.

சென்னைல நடந்த ஒரு பரத கச்சேரியில வைஜெயந்தியை பாத்த ஏவிஎம் செட்டியார் அவரை 1949ல தன்னோட வாழ்க்கை படத்ல நடிக்க வச்சார். அந்த கச்சேரிக்கு கூட்டிட்டு போனவர் செட்டியார்ட்ட இணை இயக்குனராக வேல செஞ்ச MV ராமன். முதல் படத்திலேயே வைஜெயந்தியின் நடிப்பையும், அவர் அழகையும், நடனத்தையும் பார்த்த எல்லாரும் பாராட்டினாங்க. செட்டியார் 5 வருஷ கான்ட்ராக்ட் போட்டுட்டார் வைஜெயந்திக்கு. வைஜெயந்தி படம்னாலே அவரோட டான்ஸ் கண்டிப்பா இருக்கும்னு ஜனங்க எதிர்பார்க்க ஆரம்பிச்சாங்க. 

1968ல கல்யாணத்துக்கப்புறம் ரெண்டு படங்கள் நடிச்சுட்டு, 1970க்கப்புறம் நடிக்கல. நடன ஆய்வு மன்றம் அமச்சு, சான்ஸ் கெடச்சப்போ சபாக்கள்ல நடனங்கள் நடித்திட்டு இருக்கார். 

இவங்க அம்மா 1940கள்ல ப்ரபல நடிகை வசுந்தராதேவி. 

சொக்குதே மனம் சுத்துதே ஜெகம் தூண்டில் மீனை - பாக்தாத் திருடன்


பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா - பார்த்திபன் கனவு


ராஜாமகள் ரோஜாமலர் நான் ராஜா மகள் - வஞ்சிக்கோட்டை வாலிபன்


நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் - இரும்புத்திரை


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2720
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Aug 17, 2022 1:26 pm

17.08.2022

13.08.2022 - நடிகர் பிரதாப் போத்தன் பிறந்த நாள் [1952 - 2022]

நடிகர், டைரக்ட்டர், எழுத்தாளர், தயாரிப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். நடிக்க வர்றதுக்கு முன்னால ஓவியம்னா அவருக்கு பிடிக்கும். அப்புறம்தான் நடிக்க வந்தார். காலேஜ் படிப்பு முடிச்சிட்டு நாடக குழூல நடிக்க ஆரம்பிச்சார். 

நடிச்ச முதல் தமிழ் படம் அழியாத கோலங்கள் [1979]. ப்ரதாப்னு டைட்டில்ல இருந்துச்சு. சின்ன ரோல்தான். ப்ரதாப் போத்தன்னு சொன்னா என்ன பாட்டு ஞாபகம் வரும்னு யோசிங்க. கிட்டார் வச்சுட்டு பாடுவாரே, ஆமாங்க நீங்க நெனச்சது சரிதான்.

"என் இனிய பொன் நிலாவே", மூடுபனி படத்லதான். இளையராஜாவின் பாட்டுக்களை காட்சியாக்கி கொடுப்பதுல சிறந்த டைரக்ட்டரா இருந்தார். 

ப்ரதாப் டைரக்ட்டின முதல் படம் மீண்டும் ஒரு காதல் கதை [1984]. இந்த படத்ல நடிகை ராதிகாகூட நடிச்சார். ரெண்டு பேரும் லவ்வி 1985ல கல்யாணம் செஞ்சு 1986ல டைவோர்ஸ் ஆயிருச்சு. ப்ரதாப் 1990ல வேற கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 

க்ரீன் ஆப்பிள் என்ற விளம்பர நிறுவனத்தை நடத்தினார். 

விருதுகள்
தேசிய விருது - மீண்டும் ஒரு காதல் கதை - சிறந்த அறிமுக டைரக்ட்டர் 

என் இனிய பொன் நிலாவே போன் நிலவில் என் கனாவே - மூடுபனி


கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே - பன்னீர் புஷ்பங்கள்


சிவப்பான சின்ன பப்பா சிலை போல மின்னுதப்பா - மகுடம் [டைரக் ஷன் & கதை]


ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம் நாதம் சுக நாதம் - நெஞ்சில் ஒரு முள்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2720
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

ayyasamy ram and heezulia like this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Aug 17, 2022 3:17 pm

17.08.2022

14.08.2022 - பின்னணி பாடகி சுசித்ரா பிறந்த நாள் [1982]

தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல பாடியிருக்கார். காலேஜ் படிக்கும்போதே இசைக்குழுவில் சேர்ந்து பாட ஆரம்பிச்சார். அப்புறமா ரேடியோ மிர்ச்சீல ரேடியோ ஜாக்கியாக வேல செஞ்சு புகழ் பெற்றார். அதுல ப்ரபலமான ப்ரோக்ராம்ல ஹலோ சென்னை ஷோவும் ஒண்ணு. ரேடியோல இவரோட குரலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாங்க. 

அதுக்கப்புறமா சினிமால பாட ஆரம்பிச்சார். இது தவிர நடிகைகள் ஷ்ரேயா, மாளவிகா, தமன்னா, லட்சுமிராய் போன்றவங்களுக்கு படங்கள்ல டப்பிங் குரல் கொடுத்திருக்கார். பல ஸ்டேஜ் ஷோக்கள், TVல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்தது வழங்கினார். இவரோட மின்னல் வேக பேச்சு, வேடிக்கையாக பேசும் பாணிதான் இவர் புகழுக்கு காரணம். 

பின்னணி பாடகர் ரஞ்சித்கூட சேந்து சொந்தமா பாட்டு எழுதி, ம்யூஸிக்கும் போட்டிருக்கார். ரெண்டு மூணு படங்கள்ல கெஸ்ட் ரோல்ல நடிச்சார். 

மொதல்ல பாடிய தமிழ் பாட்டு 2002ல லேசா லேசா படத்ல "என் போலவே காற்று இட்டு கட்டும் பாட்டு". 'Suchislife' இது இவரோட சொந்த யூட்யூப் சேனல்.  

என்னை போலவே காற்று இட்டு கட்டும் பாட்டு - லேசா லேசா


உயிரின் உயிரே உயிரின் உயிரே நதியின் மடியில் - காக்க காக்க


என்னாச மைதிலியே என்னை நீ காதலியே - மன்மதன்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2720
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Aug 19, 2022 6:36 pm

19.08.2022

நடிகை சுவலட்சுமி பிறந்த நாள் [1977]

கல்கத்தால பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காள  படங்கள்ல நடிச்சிருக்கார். அதிகமா நடிச்சது தமிழ் படங்கள். 

சின்ன வயசிலிருந்தே பாரம்பரிய நடனம், நாட்டுப்புற நடனம் மேல இன்ட்ரெஸ்ட். ஒரு மேடை நிகழ்ச்சியில இவர் நடிப்பை பார்த்த வங்காள சினிமா டைரக்ட்டர் சத்யஜித் ரே பார்த்து வங்காள படத்ல ஹீரோயின் சான்ஸ் குடுத்தார். படம் ஆஹா ஓஹோ. தமிழ்ல நடிச்ச முதல் படம் அஜீத் கூட 1995ல ஆசை. ஒரு TV சீரியல்ல நடிச்சார். 

2001ல கல்யாணத்துக்கப்புறம் வெளிநாடுகள்ல வாழ்ந்தார். 

எந்தன் குரல் கேட்டு உனை தூக்கம் தழுவாதா -கோகுலத்தில் சீதை


ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே - நீ வருவாய் என


நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் - நிலாவே வா 1998


என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு - லவ் டுடே 1997


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2720
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Aug 19, 2022 6:46 pm

19.08.2022

நடிகை பேபி சுமதி பிறந்த நாள் [1964]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கார். ரெண்டு வயசிலேயே நடிக்க ஆரம்பிச்சுட்டார். இவரோட அண்ணன் மாஸ்ட்டர் ப்ரபாகரும் சின்ன வயசிலேயே நடிகரானவர். இவரும், சுமதியும் சேந்தும் படங்கள்ல நடிச்சாங்க. சுமதி பல படங்கள்ல டப்பிங் பேசியிருக்கார்.
 
ஹீரோயினா நடிச்ச முதல் படம் பாக்யராஜின் சுவரில்லாத சித்திரங்கள் [1979]. 
சுமதி சின்ன வயசில நடிச்சப்போ ரெண்டு ரோல்ல நடிச்சது இல்லாம, பையனாவும் நடிச்சார். வளந்த பிறகு மாடலிங்கா இருந்து பல நிறுவனங்கள்ல நடிச்சார்.

கல்யாணத்துக்கப்புறம் அமெரிக்காக்கு போய்ட்டார். சிறந்த குழந்தை நட்சத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கினார். 

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா - அவன்தான் மனிதன் 


பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா - திக்குத் தெரியாத காட்டில் 


வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும் - நான் சிகப்பு மனிதன் 


காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் - சுவரில்லாத சித்திரங்கள் 


வீடு தேடி வந்தது நல்ல வாழ்வு என்பது எதிர்பார்த்தது - பெண்ணின் வாழ்க்கை 


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2720
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Aug 21, 2022 7:29 pm

21.08.2022

நடிகை பூமிகா சாவ்லா பிறந்த நாள் [1978]

டெல்லியை சேர்ந்தவர். நடிக்கிறதுக்கு முன்னால விளம்பரங்கள்ல மாடலிங் வேல செஞ்சார். ஹிந்தி ம்யூஸிக் ஆல்பங்கள்ல  நடிச்சார். ஹிந்தி TV ஷோக்கள்ல வந்தார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, ஹிந்தி படங்கள்ல  நடிச்சிருக்கார். தமிழ்ல என்ட்ரியானது பத்ரி [2001] படத்ல. தமிழ்ல அவ்ளவா  நடிக்கல. தெலுங்கு, ஹிந்தீல நிறைய நடிச்சார். 2018ல வெப் சீரீஸ்ல நடிச்சார். 

இவர் அடிக்கடி எடுக்கும் போட்டோக்களையும், வீடியோக்களையும் இன்ட்டர்நெட்ல போடுவது இவருக்கு வழக்கம். 

காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் - பத்ரி


மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே - ரோஜாக் கூட்டம்


முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா - சில்லுனு ஒரு காதல்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2720
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Aug 21, 2022 7:40 pm

21.08.2022

நடிகை ராதிகா பிறந்த நாள் [1962]

சினிமா, TV நடிகை, TV சீரியல் தயாரிப்பாளர் & நடிகை, டப்பிங் கலைஞர். Radaan Media Works (I) Limited இவரோட தயாரிப்பு நிறுவனம். இதன் மூலம் சூப்பர் சூப்பரான சீரியல்களை தயாரிச்சு நடிச்சிட்டு  இருக்கார். நடிகவேள் MR ராதாவின் மகள். சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மனைவி. நடிகை நிரோஷா ராதிகாவின் கூட பிறந்த தங்கச்சி. 

ராதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல  நடிச்சிருக்கார். அதிகமா நடிச்சது தமிழ்ல. முதல்ல நடிச்ச தமிழ் படம் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் [1978]. பாஞ்சாலி. பாரதிராஜா ராதிகாவை நடிக்க கூப்ட்டபோது, நடிக்க பிடிக்கலேன்னு நுனி நாக்கு இங்கிலீஷ்ல அனாயாசமா சொன்னாராம். அதுக்கப்புறம் பாருங்க அப்போ ரயிலேறினவர் சாட்டிலைட், டிஜிட்டல் மூலமா TV, சினிமான்னு பறந்துட்டு, மிதந்துட்டு இருக்கார். 

நடிக்க ஆரம்பிச்சு கொஞ்ச நாள்லயே நடிப்பு ராட்சசியா மாறிட்டார். டைரக்ட்டர் மனோபாலாவை ராதிகாவுக்கு பிடிக்கும். ராதிகா நடிக்கிறதா  இருந்தா அவருக்கேத்த மாதிரி காட்சிகளை திருத்திய, கதையை அங்கங்க மாத்தின கதாசிரியர்களும், டைரக்ட்டர்களும் இருக்காங்க. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் டைரக் ஷன்ல நடிக்கமுடியலேன்னு வருத்தம் ராதிகாவுக்கு உண்டாம். ஒரு படத்ல நடிக்கணும்னா அந்த படத்தை பத்தி எதுவும் கேக்காம, அதுல எப்படீல்லாம் நடிப்பை காட்டலாம்னு மட்டும் ராதிகா யோசிப்பார். 

இப்போ இளம் நடிகைகளுக்கு அம்மாவா நடிச்சிட்டு இருக்கார். ஷூட்டிங்ல இவர் நடிகர்கள்கூட எடுக்கிற போட்டோவைல்லாம் இன்ஸ்ட்டால போட்டுட்டே இருப்பார். அதிகமா சுற்றுலா போற பழக்கம் உண்டு. 

டப்பிங் குரல் :
முதல் மரியாதை - ராதா 
விக்ரம் - லிஸ்ஸி 
கடலோரக் கவிதைகள் - ரஞ்சினி 
செந்தூரப்பூவே, இணைந்த கைகள் - நிரோஷா 
கருத்தம்மா - ராஜஸ்ரீ 

விருதுகள்
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - தர்ம தேவதை, நீதிக்கு தண்டனை, கேளடி கண்மணி, தங்க மகன் 
தேசிய விருது [இந்திரா காந்தி விருது] - மீண்டும் ஒரு காதல் கதை [தயாரிப்பாளர்]
சினிமா எக்ஸ்பிரஸ் விருது - பாசப் பறவைகள், பூந்தோட்ட காவல்காரன், கிழக்கு சீமையிலே
தமிழ்நாடு மாநில விருது - பூந்தோட்டக் காவல்காரன் [சிறப்பு விருது], பசும்பொன் [சிறப்பு விருது], ராணி மகாராணி [சிறப்பு விருது], நினைவு சின்னம் 
SIIMA விருது - தங்க மகன் 2015 

மடிசாரு கட்டிண்டு வந்தாளே - வில்லாதி வில்லன்


மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான் - ஊர்க்காவலன்


மனம்போல மாங்கல்யம் வாழ்த்திடும் தம்பதி - புதுப்பட்டி பொன்னுத்தாயி


கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு - பாமா ருக்மணி


பல நாள் ஆசை திருநாளாச்சு மணநாள் காண்போம் - இன்று போய் நாளை வா


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2720
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை