உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்by ayyasamy ram Yesterday at 5:41 pm
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» இன்றைய சிறப்பு தினங்கள்
by ayyasamy ram Yesterday at 2:54 pm
» உன்னை விட ஒரு அழகியைப் பார்த்ததில்லை! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» மௌனத்தின் அலறல் - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» பேய்களில் நம்பிக்கையில்லை…! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» இன்று உலகம் அழிகிறது! - மைக்ரோ கதைகள் (மேலும் காண்க)
by ayyasamy ram Yesterday at 2:34 pm
» கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம்…
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ‘பொய்க்கால் குதிரை’…
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» வின்னர் பாகம் 2.. இன்னும் ரகளையா இருக்கும்..! – அப்டேட் கொடுத்த பிரசாந்த்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி இன்று ரிலீஸ் ஆகிறது.
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» சுமைதாங்கி சாய்ந்தால்...
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» சுமைதாங்கி -(கவிதை) -மகேஸ்வரி பெரியசாமி
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சுமைதாங்கி - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» உன் செயினை யார் பறித்தது...
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/07/2022
by mohamed nizamudeen Yesterday at 9:28 am
» சனி திசையில் திருமணம் நடத்தலாமா…
by ayyasamy ram Yesterday at 9:27 am
» பசு தானம் செய்த பலன் கிடைக்க…
by ayyasamy ram Yesterday at 9:26 am
» எருக்கஞ்செடி வீட்டில் வளர்க்கலாமா…
by ayyasamy ram Yesterday at 9:25 am
» தேடுங்கள் …கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 9:22 am
» பிரச்சனை தீர்ந்தது…!
by ayyasamy ram Yesterday at 9:21 am
» நல்லதை நினைப்போம்
by ayyasamy ram Yesterday at 9:18 am
» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by T.N.Balasubramanian Yesterday at 8:49 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 8:41 am
» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Thu Jun 30, 2022 7:21 pm
» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Thu Jun 30, 2022 1:09 pm
» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 12:54 pm
» ஓம் சரவண பவ
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:46 am
» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:42 am
» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:53 am
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:34 am
» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:31 am
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:08 am
» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm
» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm
» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm
» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm
» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm
» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm
» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm
» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm
» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm
» பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரிக்கு தடை
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
devi ganesan.g |
| |||
Pradepa |
| |||
sncivil57 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
2 posters
Page 23 of 24 •
1 ... 13 ... 22, 23, 24 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி

heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
10.06.2022
03.06.2022 - நடிகை ராதா பிறந்த நாள் [1966]
நிஜ பேர் உதய சந்திரிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். ப்ரபல நடிகை அம்பிகாவின் தங்கச்சி ராதா. ரெண்டு பேரும் சேந்து ஒரு சில படங்கள்ல நடிச்சிருக்காங்க. ரெண்டு பேரும் சேந்து ARS ஸ்டூடியோஸ் னு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சாங்க. ஆனா இப்ப அது ரெஸ்ட்டாரண்ட்டா மாறிடுச்சு.
விஜய் TVல ஜோடி நம்பர் ஒன் டான்ஸ் போட்டி நிகழ்ச்சியில ஜட்ஜாவும், வேற சில நிகழ்ச்சிகள்லயும் கலந்துக்கிட்டார். கல்யாணத்துக்கப்புறம் நடிக்கல. மும்பைல செட்டில் ஆயிட்டார். அங்க விடுதிகளை நடித்துறார். கேரளா, இங்கிலாந்துல ராதாவுக்கு சொந்தமா நட்சத்திர ஹோட்டல் இருக்கு. இப்ப உள்ள சூழ்நிலைல அப்பப்ப வெளிநாட்டுக்கு ட்டூர் போய் வருவார்.
நடிச்ச முதல் தமிழ் படம் அலைகள் ஓய்வதில்லை [1981]. முதல் படமே ஆஹா ஓஹோதான்.
விருதுகள் :
முதல் மரியாதை 1985] - ஃபிலிம்ஃபேர் விருது
வா வா மஞ்சள் மலரே ஒண்ணு தா தா - ராஜாதி ராஜா
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு - அண்ணா நகர் முதல் தெரு
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ - சிகரம்

03.06.2022 - கலைஞர் கருணாநிதி அவர்கள் பிறந்த நாள் [1924 - 2018]
அஞ்சு தடவை தமிழக முதல்வராக இருந்தவர். தமிழ் சினிமால முக்கிய பங்கு இவருக்கு உண்டு. தமிழ் சினிமால கதை, திரைக்கதை, வசனம், பாட்டு எழுதினார். இவரோட தூக்குமேடை நாடகத்தின்போது, நடிகவேள் MR ராதா கருணாநிதி அவர்களுக்கு கலைஞர் என்ற பட்டத்தை கொடுத்தார்.
ஸ்கூல் படிக்கும்போதே நாடகம், கவிதை, இலக்கியம் இதுலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இருந்துச்சு. நாடகங்கள், நாவல்கள், சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள்னு நிறைய எழுதினார்.
தமிழ் சினிமால புராணங்கள், இலக்கியங்கள் சம்பந்தமான படங்கள் வந்துட்டு இருந்த சமயத்ல, சினிமா மூலமா சமூக கருத்துக்களை சினிமாக்கு கொண்டு வந்தவர் கலைஞர். சினிமால இவர் செஞ்ச ஒரு இன்ட்ரெஸ்ட்டிங்கான விஷயம் இருக்கு. சினிமா வசனங்கள் தமிழ் பேச்சு வழக்குல பேசுற மாதிரி செஞ்சார்.
கலைஞர் எழுதிய முதல் மேடை நாடகம் பழனியப்பன். 1947ல ராஜகுமாரி இவருக்கு முதல் படம். வசனம் எழுதுறதுல உதவி ஆசிரியராக இருந்தார். இந்த படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட்டின ASA சாமி கலைஞரின் திறமையை பார்த்து, தான் டைரக்ட்டின படங்களுக்கு கலைஞரை கதை, திரைக்கதை, வசனம் எழுத வச்சார். கலைஞர் ப்ரபலமானது அவர் திரைக்கதை, வசனம் எழுதிய பராசக்தி படத்ல. கலைஞரும், நடிகர் திலகமும் சேர்ந்த முதல் படம். கலைஞர் TVல ரெண்டு சீரியல்களுக்கு வசனம் எழுதினார்.
கலைஞர் எழுதிய பாட்டு.
இல்வாழ்வினிலே ஒளியேற்றும் தீபம் என் இதயராணி ரூபம் - பராசக்தி
கலைஞர் எழுதிய பாட்டு
காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம் - மறக்க முடியுமா

04.06.2022 - SP பாலசுப்பிரமணியம் பிறந்த நாள் [1946 - 2020]
செல்லமா பாடும் நிலா பாலு. ஆந்திரால பிறந்தார். பின்னணி பாடகர், நடிகர், ம்யூஸிக் டைரக்ட்டர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடினார். பின்னணி பாடகி SP ஷைலஜா SPBயின் தங்கச்சி. SPBயின் மகன் SPB சரணும் பின்னணி பாடகர், நடிகர், தயாரிப்பாளர். ஷைலஜாவும் அப்பப்ப படங்கள்ல நடிச்சார்.
SPB சின்ன வயசிலேயே ஆர்மோனியம், புல்லாங்குழல் வாசிக்க கத்துக்கிட்டார். என்ஜினியர் ஆகணும்னு ஆந்திரா என்ஜினியரிங் காலேஜ்ல படிச்சார். உடம்பு சரியில்லாம போனதால படிக்க முடியல. அப்புறமா சென்னைக்கு வந்து படிப்பை தொடர்ந்தார். மியூஸிக்ல இன்ட்ரெஸ்ட் இருந்ததால காலேஜ்ல நடந்த பல பாட்டு போட்டிகள்ல கலந்து பரிசும் வாங்கினார்.
ஆரம்பத்தில ம்யூஸிக் ட்ரூப் வச்சு நடத்தினார். அந்த குழூல இளையராஜாவும், அவரோட சகோதரர்கள் கங்கை அமரன், பாஸ்கர் இவங்கல்லாம் ஆர்மோனியம், கிட்டார் வாசிச்சிட்டு இருந்தாங்க. இவங்கள வச்சு SPB ம்யூஸிக் கச்சேரிகள்லயும், நாடகங்கள்லயும் பாடிட்டு இருந்தார். சினிமால சான்ஸ் தேடிட்டு இருந்தபோது, இவரை பாட சொன்ன பாட்டு PB ஸ்ரீனிவாஸ் பாடிய "நிலவே என்னிடம் நெருங்காதே" பாட்டு.
சினிமால முதல் முதலா தெலுங்கு படத்ல பாட ஆரம்பிச்சார். தமிழ்ல பாடிய முதல் பாட்டு 1969ல ஹோட்டல் ரம்பா படத்ல LR ஈஸ்வரி கூட "அத்தானோடு இப்படி இருந்து எத்தன நாளாச்சு" பாட்டு. ஆனா படமோ, பாட்டோ வெளிவரல. முதல் பாட்டு 1969ல சாந்தி நிலையம் படத்ல காதல் மன்னனுக்காக பாடிய "இயற்கை என்னும் இளைய கன்னி" பாட்டு. ஆனா இந்த படம் ரிலீஸ் ஆவுறதுக்கு முன்னால இதே வருஷம் அடிமைப் பெண் படம் ரிலீஸ் ஆயிருச்சு. இந்த படத்ல பாடியதுதான் "ஆயிரம் நிலவே வா". ஆக, SPB பாடி முதல்ல ரிலீஸ் ஆன படம் அடிமைப் பெண்.
உலகளவில் ப்ரபலமானது சங்கராபரணம் படத்ல பாடியதால. SPB முறையா கர்நாடக இசை கத்துக்கல. ஆனாலும் கேள்வி ஞானத்தை வச்சு சங்கராபரணம் படத்ல பாடி பேர் வாங்கினார். டப்பிங் குரல் அதிகமா பேசினது கமல்ஹாசனுக்கு. தமிழ், தெலுங்கு, கன்னட மொழி TV ரியாலிட்டி ஷோக்கள்ல ஜட்ஜா இருந்தார். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார்.
விருதுகள் : [தமிழ்]
பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், கலைமாமணி, கௌரவ டாக்ட்டர் விருதுகள்
தேசிய விருது - தங்க தாமரை மகளே - மின்சார கனவு 1996
ஃபிலிம்ஃபேர் விருது - கண்ணால் பேசும் பெண்ணே - மொழி 2007
தென்னிந்திய சர்வதேச சினிமா விருது - வாழ்நாள் சாதனையாளர் விருது
தமிழ்நாடு மாநில விருதுகள் - அடிமைப் பெண், சாந்தி நிலையம், நிழல்கள், கேளடி கண்மணி, ஜெயஹிந்த்
இன்னும் ஏகப்பட்ட விருதுகள்
முத்துமணி மால ஒன்ன தொட்டுத் தொட்டு தாலாட்ட - சின்ன கவுண்டர்
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு - அண்ணா நகர் முதல் தெரு
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - புது புது அர்த்தங்கள்

04.06.2022 - நடிகை ப்ரியாமணி பிறந்த நாள் [1984]
நடிகை, மாடல். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல முதல் படம் பருத்தி வீரன் [2007]. வெப் சீரீஸ்ல, விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார். TV ஷோக்கள்ல கலந்துக்கிட்டார்.
விருதுகள் :
பருத்தி வீரன் - தேசிய விருது, தமிழ்நாடு மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருது
அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி - அது ஒரு கனாக்காலம்
ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா நான் பாத்தா - மலைக்கோட்டை
அய்யய்யய்யோ ஏவுசுருக்குள்ள தீயை வச்சான் - பருத்திவீரன்

04.06.2022 - நடிகை ரஞ்சிதா பிறந்த நாள் [1975]
தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 1992ல் நாடோடி தென்றல்.
மணியே மணிக்குயிலே மாலையிளங் கதிரழகே - நாடோடி தென்றல்
வெடலப்புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு - பெரிய மருது
பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து - வால்டர் வெற்றிவேல்

12.06.2022
05.06.2022 - நடிகை ரம்பா பிறந்த நாள் [1974]
ஆந்த்ரால பிறந்தார். சொந்த பேர் விஜயலட்சுமி. சினிமாவுக்காக அம்ரிதானு மாத்தினார். அப்புறமா ரம்பா ஆயிட்டார். ஏழாங்கிளாஸ் படிக்கும்போது ஸ்கூல் ட்ராமால நடிச்சார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, போஜ்புரினு பல மொழி படங்கள்ல நடிச்சிருக்கார். ஒரு இங்கிலிஷ் படத்தில்கூட நடிச்சார். கலைஞர் TVல மானாட மயிலாட டான்ஸ் போட்டி ப்ரோக்ராம்ல ஜட்ஜா இருந்தார்.
நடிப்புனு வந்தது தெலுங்கு படத்துல. இதுல நடிச்ச கேரக்ட்டர் பேர் ரம்பா. அதனாலதான் அந்த பேரை வச்சுக்கிட்டார். தமிழ்ல முதல் படம் 1993ல உழவன். இவர் ஜோதிகா, லைலாகூட நடிச்ச த்ரீ ரோசஸ் படத்தை ரம்பா தன் சகோதரர்கூட தயாரிச்சார்.
மகத அழகரோ மாமதுர சொக்கரோ - சுந்தர புருஷன்
கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா - என்றென்றும் காதல்
காதலின் தேசம் கதவுகள் திறக்கும் - ராசி

05.06.2022 - நடிகை குட்டி பத்மினி பிறந்த நாள் [1956]
குழந்தை நட்சத்திரம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். ரெண்டு இங்கிலிஷ் படங்கள்லயும் நடிச்சார். 3 வயசிலேயே நடிக்க ஆரம்பிச்சுட்டார். தேசிய விருது வாங்கிய முதல் பெண் குழந்தை நட்சத்திர கலைஞர். முதல் குழந்தை நட்சத்திரம் கமல்.
குட்டி பத்மினிக்கு சொந்தமா வைஷ்ணவி ஃபிலிம்ஸ் என்ட்டர்ப்ரைசஸ் லிமிடெட் என்ற தொலைக்காட்சி நிறுவனம் வச்சிருக்கார். இதன் மூலம் TV சீரியல்களை தயாரிச்சார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராக இருந்தார்.
சகுந்தலானு ஒரு தெலுங்கு படம். இந்த படத்ல அபிநய சரஸ்வதி சரோஜாதேவியின் மகளாக நடிச்சார். அதுல சிங்கத்தின் மேல உக்காந்து சவாரி செய்ற ஒரு ஸீன். அதுவும் கைல ஒரு புலிக்குட்டி வச்சுக்கிட்டு. எங்க?
சிங்கம், புலீங்க இருந்த ஒரு கூண்டுக்குள்ள. அதுங்களுக்கு மத்தியில ஒரு சிங்கத்து மேல ஒரு புலிக்குட்டியுடன் உக்காந்துகிட்டு போற ஸீன் எடுத்தாங்க. குட்டியோட அம்மா இதை பாத்து பயந்துருவாங்கன்னு, அவங்கள தந்திரமா லொகேஷனை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க. ஆனா குட்டி பயமில்லாம நடிச்சார். ஏன்னா அவர் கை நிறைய சாக்லேட் கொடுத்து நடிக்க வச்சாங்க.
ஆனா இத மாதிரி ஷூட் பண்ண போறதா குட்டிக்கிட்ட சொல்லவேயில்லை. ஆனாலும் குட்டி பயப்படவேயில்லியே. கூண்டுக்கு வெளிய நின்னு ஷூட்டிங்கை பாத்தவங்க முகத்லதான் பயம் தெரிஞ்சுச்சு. கூண்டுக்குள்ள ஏதாவது அசம்பாவிதம் நடந்திருமோன்னு பயம்தான். இன்னொரு படத்ல பாம்பு கொத்துற மாதிரி ஸீன்லகூட பயமில்லாம நடிச்சார் குட்டி. தைரியமான பாப்பாதான் இல்ல?
நடிகை சௌகார்ஜானகிக்கு குட்டி பத்மினியை ரொம்ப பிடிக்கும். தன் மகளாவே நெனைச்சார்.
குட்டி பத்மினி 15 வயசுக்கு மேல கதக், குச்சிப்புடி நடனங்களை கத்துக்கிட்டார். மேடை நாடகங்கள்ல ஹீரோயினா நடிச்சார். மவுலி, SV சேகர், YG மகேந்திரன், விசு இவங்க நாடக குழூல நடிச்சார். வருஷா வருஷம் சிறந்த நாடக நடிகைன்னு மயிலை ஆர்ட்ஸ் அகாடமிலயிருந்து விருதுகள் வாங்கினார். இப்டி தொடர்ந்து நாடகங்கள்ல நடிச்சதால சினிமால ஹீரோயினா நடிக்கும் சான்ஸ் மிஸ் ஆச்சு.
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி - வாழ்க்கை வாழ்வதற்கே
குழந்தையும் தெய்வமும் 1965 - ஸீன்
திருவருட்ச்செல்வர் 1967 - ஸீன்

05.06.2022 - பழம்பெரும் பாடலாசிரியர் தஞ்சை N ராமையாதாஸ் அவர்கள் பிறந்த நாள் [1914 - 1965]
கவிஞர், பாடலாசிரியர் & வசனகர்த்தா. புலவர் பட்டம் வாங்கினார். ஸ்கூல் டீச்சரா வேல செஞ்சார். டீச்சரா வேல செஞ்சுக்கிட்டே சுதர்சன கான சபா நாடக நிறுவனத்தில் நாடக ஆசிரியராக இருந்தார். சொந்தமா ஜெயலட்சுமி கான சபா ஆரம்பிச்சு, நாடகங்களை எழுதி, பல இடங்கள்ல மேடையேற்றினார். அந்த சமயத்ல அறிஞர் அண்ணாவும் நாடகங்களை நடத்திட்டு இருந்தார். தன்னோட நாடகம் முடிஞ்சவுடன், தஞ்சையார் நாடகங்களை அண்ணா பார்த்து ரசிச்சாராம்.
தஞ்சையாரின் இவரோட சில நாடகங்கள் சினிமாவாக எடுக்கப்பட்டன. பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். 1962ல திருக்குறள் இசை அமுதம்னு ஒரு புத்தகம் எழுதி, புரட்சி நடிகர் MGR அந்த புத்தகத்தை வெளியிட்டார். நாடகமாக்கப்பட்ட தஞ்சையார் எழுதிய பகடை பன்னிரண்டு கதை 1955ல MGR நடிச்ச குலேபகாவலி படமாச்சு. இந்த படத்ல இவர் எழுதிய சொக்கா போட்ட நவாபு, மயக்கும் மாலை பொழுதே நீ போ போ பாட்டுக்கள் ப்ரபலம். தஞ்சையார் பாட்டு எழுதுற ஸ்பீடை பார்த்த MGR, அவரை எக்ஸ்ப்ரஸ் கவிஞர்னு கூப்ட்டு மகிழ்ந்தார். க்ராமத்து வீட்டு கல்யாணங்கள்ல தவறாம பாட்ற பாட்டு "புருஷன் வீட்டில் வாழ போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே". தஞ்சையார் எழுதியதுதான்.
அமரதீபம் படத்துக்கு டைரக்ட்டர் ஸ்ரீதர் கதை வசனம் எழுதினார். இணை தயாரிப்பும் இவரே. இந்த படத்துக்கு பாட்டு எழுதி வாங்க தஞ்சையார்கிட்ட வந்தார் ஸ்ரீதர்.
"நம்பினா நம்புங்க நம்பாகாட்டி போங்க". தஞ்சையார் எழுதிய பல்லவி. ஆடி போய்ட்டார் ஸ்ரீதர். "என்ன வாத்தியாரய்யா, இப்டி பாட்டை எழுதினீங்கன்னா, படத்தை யாரும் வாங்காம போயிருவாங்களே. ஜாலியான ஒரு பாட்டு எழுதி குடுங்க" னு சொன்னார். அப்போ எழுதியதுதான்,
"ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா"
இதுக்கு என்ன அர்த்தம்னு ஸ்ரீதர் கேட்டார். அதுக்கு தஞ்சையார் என்ன பதில் சொன்னார் தெரீமோ?
"கதைபடி குறவன் குறத்தி பாட்ற பாட்டு. குறவர் பாஷை எனக்கும் தெரியாது, உனக்கும் தெரியாது. தைரியமா பாட்டை ரெக்கார்ட் பண்ணு. படம் ஆஹா ஓஹோன்னு ஓடும்"னு சொல்லி அனுப்பினார் தஞ்சையார். அதே மாதிரி படமும் அட்டகாசம்தானே. ட்யூனுக்கு ஏத்தமாதிரி பாட்டு எழுதுறதுல வல்லவர். வரிகள்ல அர்த்தமில்லாம கூட இருக்கும். ஜிகினா வார்த்தைகள் யூஸ் செஞ்சார்.
இதனால தஞ்சையாருக்கு டப்பாங்குத்து பாடலாசிரியர்னு செல்ல பேர் வேற கெடச்சுதாமே. ஆனா தஞ்சையார் டோன்ட் கேர் மாஸ்ட்டர். அதைல்லாம் கண்டுக்கல. அவர்பாட்டுக்கு அவர் பாணிலியே பாட்டு எழுதினார்.
1950 - 1960 வரை விஜயா ப்ரொடக் ஷன்ஸ் நிறுவனத்தின் படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார் தஞ்சையார். ஆரூர்தாஸை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி வச்சது தஞ்சையார்.
இவரோட கலைப்படைப்புகள் 2010, ஜூலைல நாட்டுடமையாக்கப்பட்டு, அவரோட வாரிசுகளுக்கு ஆறு லட்சம் பணம் கொடுக்கப்பட்டுச்சு.
ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா - அமரதீபம்
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு - தெய்வப்பிறவி
அறியா பருவமடா மலர் அம்பையே வீசாதடா மதனா - மிஸ்ஸியம்மா

15.06.2022
06.06.2022 - நடிகை பாவனா பிறந்த நாள் [1986]
மலையாள நடிகை. தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்லயும் நடிச்சிருக்கார். 2017 வரை நடிச்சிட்டு, மலையாளத்துல நடிக்க சான்ஸ் இல்லாம கன்னட படங்கள்ல நடிச்சார். இப்ப ஒரு மலையாள படத்ல நடிச்சிட்ருக்கார். 5 வயசிலேயே நடிகை அமலா நடிச்ச மலையாள படங்களை பாத்து, கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு, அமலா மாதிரியே நடிச்சு பாப்பாராம்.
16 வயசில நம்மள் என்ற மலையாள படத்தில நடிக்க ஆரம்பிச்சார். இந்த படத்துக்காக கேரளா மாநில ஸ்பெஷல் ஜூரி விருது வாங்கினார்.
முதல் முதலா 2006ல சித்திரம் பேசுதடி தமிழ் படத்ல நடிச்சார். இந்த படத்துக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.
காதல் நெருப்பின் நடனம் உயிரை உருக்கி தொலையும் - வெயில்
இடம் பொருள் பார்த்து இதயத்தை மாத்து - சித்திரம் பேசுதடி

07.06.2022 - நடிகை சரிதா பிறந்த நாள் [1960]
நடிப்பு ராட்சசி சரிதா. இவரோட நடிப்புல ஜனங்கள் ரசிச்சது முகபாவம், நடிப்பு. நடிப்புல தனி முத்திரை பதிச்சார். வசனம் சொல்ல வேண்டியதை சரிதாவின் கண்கள் பாதி சொல்லிரும். வசனம் பேசும் கண்கள். மீதியை பாடி லாங்க்வேஜ் சொல்லும். மெச்சூரிட்டி, இன்னொசென்ட் சேர்ந்த கலவையான குரல்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். தமிழ் சினிமால சிறந்த நடிகைகள்ல ஒருத்தர். டப்பிங் கலைஞரும்கூட. TV சீரியல்கள்லயும் நடிச்சார். 1978ல மரோசரித்திரா தெலுங்கு படத்ல இயக்குனர் சிகரம் K பாலசந்தர் இன்ட்ரோ செஞ்சு வச்சார். இந்த பட ஹீரோயினுக்கு கிட்டத்தட்ட 150 பேருக்கு டெஸ்ட் வச்சதுல சரிதாதான் பாஸானார்.
தமிழ்ல முதல் படம் 1978ல அவள் அப்படித்தான். பாலசந்தரின் முக்கிய கதாநாயகி சரிதா. தன்னோட நிறைய படங்கள்ல சரிதாவ நடிக்க வச்சார்.
துணை, கீழ்வானம் சிவக்கும் போன்ற படங்கள்ல நடிகர் திலகத்துக்கு ஈக்வலா போட்டி போட்டு நடிச்சார். ஒரு கட்டத்தில நடிக்கிறத கொறச்சுக்கிட்டாலும், குரலால நடிச்சிட்டு இருந்தார். அதாங்க டப்பிங் குரல்ல பேசினார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகள்ல சுஜாதா, நக்மா, மீனா, விஜயசாந்தி, சுஹாசினி, பானுப்ரியா இன்னும் பலருக்கும் டப்பிங் குரல் கொடுத்தார்.
விருதுகள் : [தமிழ் படங்கள்]
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - வண்டிச்சக்கரம், அச்சமில்லை அச்சமில்லை
தமிழ்நாடு மாநில விருதுகள் - கலைமாமணி விருது, ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது, அக்னி சாட்சி, பூ பூத்த நந்தவனம், அம்மன்
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா -
மௌன கீதங்கள்
சோலைக்குயிலே காலைக்கதிரே அள்ளும் அழகே துள்ளும் ராகமே - பொண்ணு ஊருக்கு புதுசு
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ காமன் மனசு - நெற்றிக்கண்

07.06.2022 - நடிகை லதா பிறந்த நாள் [1953]
சாதாரணமா இவர MGR லதானு சொல்வாங்க. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சார். தமிழ், தெலுங்கு TV சீரியல்கள்லயும் நடிச்சிருக்கார், நடிச்சிட்டும் இருக்கார். TV ஷோக்கள்ல கலந்துக்கிட்டிருக்கார். நடிகை ஸ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் சேதுபதி லதாவின் தம்பி.
லதாவின் பெரியம்மாவுக்கு குழந்தை இல்லாததால, லதாவை தன் சொந்த மகள் மாதிரி வளத்தார். வீட்லியே டீச்சர் வச்சு லதாவுக்கு கதக் சொல்லி கொடுத்தார். ஸ்கூல் கலை நிகழ்ச்சிகள்ல லதா கலந்துக்குவார். ஒரு தடவ கலைநிகழ்ச்சியை படமெடுக்க வந்தவர், நடிகர் மனோகரின் நாடகங்கள்ல படம் எடுத்தவர். எல்லா போட்டாவையும் பாத்த மனோகர், லதாவின் முகத்தை பார்த்து, MGR இன் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு புதுமுகம் தேடறத தெரிஞ்சு, MGRகிட்ட லதாவின் போட்டாவை காட்டினார். அப்டி MGR செலெக்ட் செஞ்சவர்தான் லதா.
லதாவின் அம்மாகிட்ட சம்மதம் வாங்க ஆளை அனுப்பியபோது, அம்மாவுக்கு லதா நடிக்கிறதுல இஷ்டமில்லேன்னு சொல்லிட்டார். ஏன்னா அப்போ லதா ஒம்பதாங்க்ளாஸ் படிச்சிட்டு இருந்தார். ஆனா லதாவுக்கு நடிக்க விருப்பம். எப்டியோ அம்மாகிட்ட சம்மதம் வாங்கிட்டார் MGR. டெய்லி ஸ்கூலுக்கு போற மாதிரி நடிப்பு பயிற்சி எடுக்க போனார் லதா. வசனம் பேச சொல்லி கொடுத்தவர் நடிகை G சகுந்தலா. டான்ஸ் சொல்லி கொடுத்தவர் புலியூர் சரோஜா. அப்டீ இப்டீன்னு நடிக்க ஆரம்பிச்சுட்டார்.
சொந்த பேர் நளினி. MGR சினிமாவுக்காக லதானு பேர் மாத்திட்டார். லதா நடிச்ச முதல் தமிழ் படம் MGR கூட, உலகம் சுற்றும் வாலிபன் [1973]. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஜப்பான்னு நல்லாவே உலகம் சுத்திட்டு வந்தார்.
லதா கலைமாமணி விருது வாங்கினார்.
நேரம் பௌர்ணமி நேரம் உறவு எனும் சிறு நடனம் - மீனவ நண்பன்
ஓரிடம் உன்னிடம் என் தேவையை நான் கேட்பது வேறாரிடம் - வீட்டுக்கு வந்த மருமகள்
காதலென்னும் காவியம் கன்னி நெஞ்சின் ஓவியம் - வட்டத்துக்குள் சதுரம்

07.06.2022 - டைரக்ட்டர் பாண்டிராஜ் பிறந்த நாள் [1976]
டைரக்ட்டர், தயாரிப்பாளர், கதை, திரைக்கதை, வசனம் எழுத்தாளர். முதல் படம் பசங்க [2009]. இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், டைரக் ஷன் இவரே.
டைரக்ட்டர் பாக்யராஜ்கிட்ட உதவியாளராக இருந்தார். பாக்கியராஜின் வார இதழ் பாக்யால பாண்டிராஜ் ஆரம்பத்தில நிறைய சிறு கதைகள் எழுதினார். கொஞ்சம் கொஞ்சமா சினிமா டைரக் ஷன் மேல ஆச வந்துச்சு. டைரக்ட்டர்கள் சேரன், தங்கர்பச்சான், சிம்புதேவன்கிட்ட உதவி டைரக்ட்டரா வேல செஞ்சார்.
சொந்தமா பசங்க ப்ரொடக் ஷன்னு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சார். தயாரிச்ச முதல் படம் மெரினா. டைரக் ஷனும் இவரே.
விருதுகள் :
பசங்க 2009 - ஆனந்த விகடன் விருது, சர்வதேச குழந்தைகள் சினிமா விழா விருது, தேசிய விருது, விஜய் விருது
மெரினா - தமிழ்நாடு மாநில விருது
கடைக்குட்டி சிங்கம் - தென்னிந்திய சர்வதேச சினிமா விருது
ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே - பசங்க
ஒரு பொறம்போக்கு முதல் முதலா சரக்கடிக்க கத்து தந்தான் - கேடி பில்லா கில்லாடி ரங்கா

17.06.2022
08.06.2022 - பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பிறந்த நாள் [1975]
நடிகை, தயாரிப்பாளர், டான்ஸர், மாடல். தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்லயும் நடிச்சிருக்கார். மாடலிங் செஞ்சார். இவருக்கு மராத்தி, குஜராத்தி, உருது போன்ற மொழிகளும் பேச தெரியும். பரதநாட்டிய கலைஞர். ஸ்கூல் படிக்கும்போது கைப்பந்து விளையாட்டு க்ரூப் லீடரா இருந்தார். கராத்தேல கருப்பு பெல்ட் வாங்கியிருக்கார்.
டைரக்ட்டர் மணிரத்தினத்தின் நேற்று இன்று நாளை என்ற ஒரு மேடை நிகழ்ச்சியில ஷில்பா கலந்துக்கிட்டார். செலிப்ரிட்டி பதிப்புகள்ல பங்கு பெற்ற முதல் இந்திய ப்ரபலம் ஷில்பா. எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டார். மிருகங்களை சர்க்கஸ்ல உபயோகபத்துவதற்கு எதிரான ப்ரச்சாரங்கள்ல ஈடுபட்டார்.
மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே - Mr ரோமியோ
மேக்கோரீனா மேக்கோரீனா விசிலடிக்கும் நிலவுதானா - குஷி

08.06.2022 - நடிகை பல்லவி பிறந்த நாள் [1965]
சினிமா, TV சீரியல் நடிகை. தமிழ், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். முதல் தமிழ் படம் ப்ரபு கூட அறுவடை நாள் படம் [1986].
தென்றல் வரும் தெரு எது அது நீதானே - சிறையில் சில ராகங்கள்
பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன் - அன்புக்கட்டளை
மாமாவே நீ கண்ண வச்சா கைய வச்சா பூமேனி எங்கும் புல்லரிக்கும் - தர்ம தேவதை

09.06.2022 - நடிகை மோகினி பிறந்த நாள் [1978]
பூனை கண்ணழகியாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். மலையாள படங்கள்ல நல்ல வரவேற்பு கெடச்சுது. நடிச்ச முதல் தமிழ் படம் ஈரமான ரோஜாவே [1991]. இதே வருஷம் ஒரு ஹிந்தி படத்தில நடிச்சார். 1999ல கல்யாணம் செஞ்சுகிட்டு அமெரிக்கால செட்டில் ஆயிட்டார். அதுக்கப்புறம் 2004ல மலையாள படத்தில நடிக்க வந்தார். தமிழ், மலையாள சீரியல்கள்ல நடிச்சார்.
பெட்டிக்குள்ள யாருமில்ல கட்டிப்பிடி - பட்டுகோட்டை பெரியப்பா
சிறகடிக்குது குருவி குஞ்சுகளே யய்யாயய்யா - வனஜா கிரிஜா
உன்னை எதிர்பார்த்தேன் தென்றலிடம் கேட்டேன் - வனஜா கிரிஜா

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|