புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
3 Posts - 2%
prajai
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
174 Posts - 40%
mohamed nizamudeen
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_lcapமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_voting_barமாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாசி மகத்தில் தீர்த்தங்களைப் போற்றுவோம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 11, 2022 6:30 pm

புனிதமான நீர்நிலைகள் யாவும் இறைவனின் திருமேனிகளேயாகும்.
பெருங்கடல்கள், வற்றாது ஓடும் ஜீவநதிகள், மழைக்காலத்தில்
பெருக்கெடுத்து ஓடி வரும் ஆறுகள், அருவிகள், குளங்கள், ஏரிகள்,
சுனைகள் யாவும் இறைவனின் பல்வகை வடிவங்களே ஆகும்.
இதை உணர்த்தும் வகையில் இவற்றின் கரையில் சிவபெருமான்
திருக்கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றான்.

மனித நாகரீகங்கள் யாவும் ஆற்றின் கரையிலேயே தோன்றியதாகும்.
எனவே, ஆறுகள் மானுட வாழ்வில் முக்கியமான இடத்தைப்
பெற்றுள்ளன. நாகரீகத்தில், சிறப்படைந்த மனிதன் ஆதியில் ஆற்றங்
கரைகளில் இறைவனுக்குத் திருக்கோயில்களை அமைத்து வழிபட்டான்.
இவை ஆற்றுத்தளிகள் என்று அழைக்கப்பட்டன.

ஆறுகளின் பெயரால் இறைவன் கங்காதீசர், யமுனேசுவரர், பாலீசர்,
வாருணீசுவரர், காவேரிநாதர், ஆரணீசர் முதலிய பல்வேறு பெயர்களில்
அழைக்கப்படுகிறார்.

திருவையாற்றிலுள்ள ஐயாறப்பர் ஆலயம் தேவாரத்தில் காவிரியின்
பெயரால் ‘காவிரிக்கோட்டம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆறுகள்
ஒன்றோடு ஒன்று கூடும் சங்கமத்துறைகளில் சிவபெருமான் மகிழ்வுடன்
வீற்றிருக்கின்றார்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகள் கூடும் பிரயாகை,
காவேரி, அமுதநதி, பவானி ஆகியன கூடும் (பவானி) நணா முதலிய
கூடுதுறைகளில் பெருமான் தனிச்சிறப்புடன் வீற்றிருக்கின்றார்.
இந்நிலையில், இவருக்குச் சங்கமேசுவரர் எனும் பெயர் வழங்குகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 11, 2022 6:32 pm

ஆறுகளுக்கு அடுத்த நிலையில் சிறப்புடன் போற்றப்படுபவை
திருக்குளங்கள் ஆகும். ஆற்றங்கரையில் இருந்து குடிபெயர்ந்த
மனிதன் நல்ல நீர்நிரம்பிய குளங்களின் கரையில் குடியேறினான்.

குளங்களைச்சுற்றி அமைந்த ஊர்கள் குளப்பாக்கம், குளமங்கலம்
எனப் பலவாறு அழைக்கப்பட்டன. இவ்வூர்களில், எழுந்தருளும்
பெருமான் குளந்தையப்பன், தீர்த்தபுரீசர், குளந்தையீசர் எனும்
பெயர் பெற்றார். (

குளம்+எந்தை=குளந்தை: குளமாக இருக்கும் எனது தந்தை என்பது
இதன் பொருள்) குளந்தையீசர் என்பது வடமொழியில் `தடாகபுரீசுவரர்’
என வழங்குகிறது. வடாற்காடு மாவட்டத்திலுள்ள குளத்தூரில் (மடம்)
தடாகபுரீசுவரர் ஆலயம் உள்ளது. கயம் என்பதற்குக் குளம் என்பது
பொருள்.

இதையொட்டிக் கயப்பாக்கம், கயத்தூர் முதலிய ஊர்கள் உண்டாயின.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கயப்பாக்கம் எனும் சிற்றூரும் அதில்
தீர்த்தபுரீசுவரர் ஆலயமும் உள்ளன. காலப்போக்கில் ஆலயங்களைச்
சுற்றி மேலும் பல குளங்களை அமைத்து அன்பர்கள் சிவவழிபாடு
செய்தனர். இக்குளங்கள் இவற்றை அமைத்தவர் பெயரால் சிவகங்கை,
பிரமன், விஷ்ணு, திருமகள், வாலி, சக்ரதீர்த்தம் முதலிய பல்வேறு
பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

குளங்களை விட பரப்பில் சிறிய ஆழமான நீர்நிலை கிணறு (கூபம்)
ஆகும். கிணறுகளைச் சுற்றி அமைந்த ஊர்கள் கூவத்தூர். `கூவல்’
என்று பெயர் பெற்றன. இத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமானுக்குக்
கூவல்நாதர், கூவலப்பர் என்ற பெயர்கள் வழங்குகின்றன.

தென்னகத்து ஆலயங்களில் எண்ணற்ற கிணறுகள் தீர்த்தங்களாக
உள்ளன. இவற்றின் சிறப்பு பற்றி இவற்றிற்கு அனேக பெயர்கள்
வழங்கப்படுகின்றன. சிதம்பரம் சிற்சபையை ஒட்டியுள்ள பரமானந்த
கூபம். திருக்கடவூரிலுள்ள அசுபதிதீர்த்தம், காசிநகரிலுள்ள
ஆனந்தவாபி முதலியன கிணறுவடிவிலான சிறந்த தீர்த்தங்களாகும்.

குளங்களைவிடப் பெரிய நீர்நிலைகள் ஏரிகள் எனப்பட்டன. ஏரிகளில்
இருந்து நீர் வெளியேறும் பகுதி `மதகு’ எனப்பட்டது. மதகின் அருகில்
எழுந்தருளியிருப்பதால் பெருமான் மதகீசர் என்றழைக்கப்படுகிறார்.

வடாற்காடு மாவட்ட சீயமங்கலம் தூணாண்டார் கோயில், குரங்கணி
முட்டம் கொய்யாமலரீசர் கோயில், முதலியவற்றைச் சுற்றிலும் விரிந்து
பரந்த ஏரிகள் இருக்கின்றன. மலைகளிலுள்ள சுனைகளும், அருவிகளும்
கூட புராணச் சிறப்புமிக்க தீர்த்தங்களாக விளங்குகின்றன.

திருக்குற்றாலம், பாபநாசம் முதலிய மலைத்தலங்களில் அருவிகள்
தீர்த்தங்களாக உள்ளன. திருவண்ணாமலையில் துர்கா தேவி தன் கை
வாளால் ஒரு பாறையைப் பிளந்து உண்டாக்கிய `கட்கதீர்த்தம்’ என்ற
சுனை உள்ளது. இதன் கரையில் சிவபெருமான் கட்கேசர் எனும் பெயரில்
வீற்றிருக்கின்றனர்.

திருஞானசம்பந்தர் கொடுங்குன்றத்திலிருந்த ‘குட்டாச்சுனை’ எனும் சு
னையைக் குறித்துள்ளார். இது குட்டநோயைத் தீர்க்கும் வல்லமை பெற்றது
என்று கூறுவர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 11, 2022 6:37 pm

இயற்கையாகவே, பொங்கிவரும் நீரூற்று களும் தெய்வத்தன்மை
கொண்டதாகப் போற்றப்படுகின்றன. ஊற்றுக்களின் கரையில்
வீற்றிருக்கும் சிவபெருமான் ஊற்றீசுவரர் எனப்படுகிறார்.

இமயமலைச்சாரலில் பனியின் குளிருக்கும் நடுவே கெளரிகுண்டம்,
பத்மாசுரகுண்டம், பிரம்மகுண்டம் முதலான அனேக வெந்நீர்
நீரூற்றுக்கள் உள்ளன. இவை குளிருக்கு நடுவே மக்களுக்கு இ
தத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. தொண்டை நாட்டு
இராமகிரி (காரிக்கரை)யில் கண்ணுக்குப் புலப்படாத இடத்திருந்து
வரும் நீரூற்று ஒரு நந்தியின் வாயிலிருந்து வெளிப்பட்டு ஒரு குளத்தில்
விழுந்து ஓடுகிறது. இதன் கரையில் பெருமான் `வாலீசர்’ எனும்
பெயரில் வீற்றிருக்கின்றார்.

தீர்த்தங்களில் மிகப்பெரியது சமுத்திரமாகும். சமுத்திரத்திற்கு
சாகரம் என்பதும் பெயராகும். இப்பெயரால், இறைவன்
`சப்தசாகரேசுவரர்’ என்று அழைக்கப்படுகிறார். மதுரையில்
சப்தசாகரேசுவரர் ஆலயம் உள்ளது. காசியில் நான்கு கடல்கள்
வழிபட்ட சதுரசாகரதீர்த்தமும் அதன் கரையில் நான்கு லிங்கங்களும்
உள்ளன.

கடலுக்கு நடுவில் குதிரைமுகம் கொண்ட வடவாமுகாக்கினி எனும்
பெருந்தீ உள்ளது. இதுவே கடல் பொங்கி விடாமல் பார்த்துக்
கொள்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதையொட்டி கடலுக்கு
அக்னி தீர்த்தம் என்பது பெயராயிற்று. கடற்கரையில் உள்ள அனேக
தலங்களில் இறைவன் அக்னீசர் எனும் பெயரில் வீற்றிருக்கின்றார்.

வங்கக் கடலோரம் உள்ள வெடால் எனும் ஊரில்
“வடவாமுகாக்கினீசுவரர்” எனும் பெயரில் சிவபெருமான் கோயில்
கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு கிணறு, ஏரி, சுனை, கடல் பகுதி, ஊற்றுநீர் என்ற பலவகையான
வடிவங்களில் சிறப்புமிக்க தீர்த்தங்கள் இருப்பதை மகாபுராணங்களால்
அறிகிறோம்.

தீர்த்த புராணங்கள்

தெய்வங்களின் பெருமைகளையும் அவை வீற்றிருக்கும் தலங்களின்
சிறப்புக்களையும் விளக்கத் தலபுராணங்கள் எழுந்ததைப் போலவே
திருத்தலங்களில் ஒட்டி அமைந்துள்ள தீர்த்தங்களின் பெருமைகளை
விளக்கிக்கூற சில புராணங்கள் தோன்றின. இவை ‘தீர்த்த புராணங்கள்’
என்று அழைக்கப்படுகின்றன. காவிரியின் பெருமையை விளக்க எழுந்த
நூல் ‘காவிரிப்புராண’ மாகும்.

பதினெண் மகாபுராணங்களில் ஒன்றான பிரம்மகைவர்த்த
புராணத்திலுள்ள செய்திகளை அடியொற்றித் திருமறைக்காடு
சிற்றம்பல முனிவரால், 1474 பாடல்களால் இது பாடப்பட்டதாகும்.
காவிரி வாழ்த்துடன் தொடங்கும் இந்நூல், அனவத்தை என்பவளுக்கு
அவனுடைய கணவனான நாதசன்மா என்பவர் காவிரியின்
வரலாற்றையும் சிறப்புக்களையும் விவரித்துக் கூறும் வகையில்
அமைந்துள்ளது.

இதில், அனேக துணைக் கதைகளும் இடம் பெற்றுள்ளன. மேலும்,
1939 ஆம் ஆண்டில் காஞ்சி காமகோடி பீடாபதிகளின் அருளாணையின்
வண்ணம் ‘காவேரி ரகசியம்’ எனும் நூல் தொகுத்து வெளிடப்பட்டது.

காவேரியின் உற்பத்தித்தானமாக சைய மலைகளில் தொடங்கிக்
கடலோடு கலக்குமிடமான பூம்புகார் வரையிலுள்ள சைவ திருத்தலங்கள்,
வைணவ திருப்பதிகள் ஆகியவற்றின் சிறப்புகள் புராண, இலக்கிய,
தோத்திர நூல்களிலுள்ள காவிரியைப் போற்றும் பகுதிகள், உபநதிகளின்
கரையிலுள்ள திருத்தலங்கள் காவிரி ஸ்நானம் மற்றும் காவிரி பூஜா
விதிகள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

இடையிடையே அரிய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
தென்பாண்டி நாட்டினை வளப்படுத்தும் நதியான தாமிரபரணி ஆற்றின்
பெருமைகளை விளக்க எழுந்தது ‘பொருநை புராணம் என்கிற
தாமிரபரணி மகாத்மியம்’ ஆகும்.

இது பதினெண் புராணங்களில் ஒன்றாகிய சிவபுராணத்தினை
அடியொற்றி எழுந்ததாகும். இதில் அகத்தியர் பெருமை அவர்
தாமிரபரணியை உற்பத்தி செய்தது. அதன் கரையிலுள்ள தலங்களின்
பெருமை, தீர்த்தமாடுவதின் மகிமை ஆகியன கூறப்பட்டுள்ளன.

காளஹஸ்திக்கு வடக்கிலுள்ள பிரம்மகிரி மலையில் உற்பத்தியாகி
ஆந்திரத்தை வளப்படுத்தும் பொன்முகலி ஆற்றின் பெருமையை
‘சொர்ணமுகி மகாத்மியம்’ விளக்குகிறது.

இதில், திருமால் வீற்றிருக்கும் திருப்பதி, காளத்தியில் கொலுவிருக்கும்
மணிகண்டீசர், காளத்திநாதர் முதலிய அனேக திருக்கோயில்களின்
மகிமைகள் விளக்கப்பட்டுள்ளன. தனியாக எழுந்த புராணங்களைத்
தவிர ஒவ்வொரு தலபுராணத்திலும் தீர்த்தமகிமை உரைத்தது எனும்
பகுதியில் அந்த நாட்டில், தலத்தில் உள்ள ஆறு, ஏரி, குளம் முதலிய
தீர்த்தங்களின் பெருமைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

இவ்வகையில், பெரியபுராணத்தில் காவிரி, வைகை, பாலாறு முதலான
ஆறுகளின் சிறப்புக்களும் அனேக தீர்த்தங்களின் பெருமைகளும்
விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

காஞ்சிப் புராணத்தில் கம்பா நதி, வேகவதி, சேயாறு முதலான
ஆறுகளின் சிறப்புக்களும், காஞ்சிபுரத்திலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட
தீர்த்தங்களின் சிறப்புக்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 11, 2022 6:48 pm

சிவாலயங்களில் தினமும் காலையில் நீரின் கடவுளான கங்கையை
ஆலயத்திற்கு அழைத்துவரும் திருமஞ்சனம் கொண்டு வருதல் எனும்
சடங்குடன் பூஜை தொடங்கப்பட்டு, இரவில் தீர்த்தராஜனான
பைரவரிடம் பூஜை முடிகிறது. பூஜையில் அகற்றப்படும் நிர்மால்யங்கள்
தண்ணீரில் விடப்படுகின்றன.

சிவபூஜா துரந்தரர்கள், தாங்கள் தினமும் வழிபடும் க்ஷணிக
லிங்கங்கள் பூஜை முடிந்தபின் புனிதத் தீர்த்தத்தில் கரைத்து விடுவது
வழக்கம். தினமும், ஓராயிரம் சிவலிங்கங்களை வைத்து வழிபட்ட
பாணாசுரன் பூசையின் முடிவில் அவற்றை நர்மதை ஆற்றில் போட்டுக்
கொண்டிருந்தான்.

அவன் தனது வாழ்நாள் முழுவதும் வழிபட்டு ஆற்றில் விட்ட
சிவலிங்கங்களே காலப்போக்கில் உறுதிமிக்க கல் லிங்கங்களாக
மாறிவிட்டன. அவையே இப்பொழுது கிடைக்கும் பாண லிங்கங்கள்
ஆகும்.

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியன்று,
விநாயகரைக் களிமண் அல்லது புற்று மண்ணால் செய்து
வழிபட்டபின்னர், அந்த உருவத்தை அன்று மாலையோ, மூன்றாம்
நாளிலோ ஆறு, குளம், கிணறு, ஏரி ஆகியவற்றில் விட்டு விடுகின்றனர்.

சென்னையைச் சுற்றியுள்ள ஊர்களில் விநாயகர் சதுர்த்தியை
ஒட்டிப் பெரிய விநாயகர் சிலைகள் வணங்கப்படுகின்றன. பின்னர்,
குறித்த நாளில் அந்தச் சிலைகள் அனைத்தையும் சென்னை மெரீனா
கடலில் விட்டு விடுகின்றனர்.

இதுபோன்றே மும்பையில் பெரிய அளவில் விநாயகர் சதுர்த்தி விழா
நடத்தப்பட்டு, அது முடிந்தவுடன் சிலைகள் கடலில் விடப்படுகின்றன.
இதுபோன்றே கிராமிய வழிபாட்டில் ஆண்டு தோறும் வழிபடப்படும்
மாரியம்மன், மொட்டையம்மன், கங்கையம்மன் முதலிய தெய்வ
வழிபாட்டிலும் பூசையின் இறுதியில் பூசிக்கப்பட்ட உருவங்களை நீரில்
விட்டுவிடுவது வழக்கம். கொங்கு மாவட்டத்தில், கிராமியத் தெய்வ
விழாக்களின் தொடக்கத்தில் மூன்று கிளைகளாகப் பிரியும்,
அடிமரத்தை மேள தாளத்துடன் மலையிலிருந்து வெட்டிவருகின்றனர்.

இதனை அலங்கரித்து நட்டு அதன் மீது பெரிய அகண்டத்தை வைத்து
தீ மூட்டுவர். இதற்குக் `கம்பம் போடுதல்’ என்று பெயர். விழா முடியும் வ
ரை அதில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். விழா நாட்களின்
காலையிலும், மாலையிலும் அந்த கம்பத்தைச் சுற்றிவந்து ஆடிப்பாடி,
மகிழ்வர். விழாவின் முடிவில், மேளதாளத்துடன் அந்த முக்கிளைக்
கொம்பைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு பெரிய ஊர்வலமாகச் சென்று
அருகிலுள்ள ஆற்றில் விட்டுவிடுகின்றனர்.

இவற்றின் மூலம், வழிபாடுகள் யாவும் நீரில் தொடங்கி நீரிலேயே
முடியும் வகையில் அமைந்திருப்பதை அறியமுடிகிறது. மனிதன் தாயின்
வயிற்றுக்குள் ஒரு நீர்ப்பையில் கருவாகி உருவாகிறான். அறுதியில்
உலகின் தாயான தண்ணீரின் மடியில் சாய்கிறான். இதையொட்டி
இறந்தவர்களின் உடலைக் கங்கையில் விட்டு வரும் வழக்கம் உள்ளது.

பல தெய்வங்கள் அவதாரத்தின் முடிவில் நீரில் மறைந்து விடுவதாகவே
புராணங்கள் கூறுகின்றன. இராமர் அவதாரத்தின் முடிவில்,
சரயு நதியில் மூழ்கி மறைந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

பலராம அவதாரத்தின் இறுதியில் அவர் வெண்ணிறப் பாம்பு வடிவம்
கொண்டு மேலைக் கடலின் உள்ளே சென்று மறைந்துவிட்டதாகக்
கூறப்படுகிறது.
-
நன்றி-குங்குமம் (ஆன்மிகம்)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக