உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சினி துளிகள் ( தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» ஓம் சரவண பவ
by ayyasamy ram Yesterday at 9:46 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:44 am
» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 30/06/2022
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Yesterday at 6:31 am
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Yesterday at 6:08 am
» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm
» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm
» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm
» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm
» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm
» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm
» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm
» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm
» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm
» பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரிக்கு தடை
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:18 pm
» படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் கமல்ஹாசன்
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:14 pm
» உலகில் பெரிய தைரியசாலி!
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:11 pm
» சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:02 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 5:22 pm
» புள்ளத்தாச்சி மரம்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:37 pm
» ஒரே படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:36 pm
» மாயோன் – சினிமா விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:35 pm
» மலையாளத்திலும் இனி மாஸ் படங்கள்
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:33 pm
» ஜோதிகா இடத்தில் த்ரிஷா
by ayyasamy ram Wed Jun 29, 2022 4:32 pm
» செந்தில் மகன் நடிக்க வருகிறார்
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 1:48 pm
» ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 12:08 pm
» பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரின் அழகான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 11:53 am
» ஆன்மீக அருளுரை
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:26 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:25 am
» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:15 am
» சாணக்கியன் சொல்
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:13 am
» 1/4 நிமிடத்தில் படித்த ஒரு "ஒரு நிமிட கதை."
by ayyasamy ram Wed Jun 29, 2022 10:12 am
» உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆஞ்சினா மார்பு வலி வரப்போகுதுனு அர்த்தமாம்... உஷார்!
by ayyasamy ram Wed Jun 29, 2022 9:59 am
» அடப்பாவிகளா.. இங்க இருந்த டயர காணோம்?
by T.N.Balasubramanian Wed Jun 29, 2022 9:01 am
» ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?
by ayyasamy ram Wed Jun 29, 2022 5:19 am
» கட்டம் தன் கடமையைச் செய்யும்!
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:44 pm
» வலை வீச்சு
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:36 pm
» மிளகாய் செடிக்கு மோர் ஊத்தறா…
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:35 pm
» புதிய தொழிலில் ஈடுபடும் ராஷ்மிகா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:33 pm
» நிபந்தனைகள் விதிக்கும் நயன்தாரா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm
» அல்லு அர்ஜூன் படத்தில் மீண்டும் சமந்தா நடனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm
» போலாமா ஊர்கோலம் - விமர்சனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:31 pm
» நடிகர்’ பூ’ ராம் மரணம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:30 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
sncivil57 |
| |||
கண்ணன் |
| |||
மாணிக்கம் நடேசன் |
|
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொல்காப்பிய இலக்கணம் (619)
2 posters
Page 4 of 4 •
1, 2, 3, 4

தொல்காப்பிய இலக்கணம் (619)
First topic message reminder :
தொல்காப்பிய இலக்கணம் (570)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அடுத்ததாகத் தொல்காப்பியர் இடைச்சொற்களைப் பாகுபடுத்திக் காட்டுகிறார்:-
அவைதாம்
புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுநவும்
வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
அசைநிலைக் கிளவி யாகி வருநவும்
இசைநிறைக் கிளவி யாகி வருநவும்
தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்
ஒப்பில் வழியாற் பொருசெய் குநவுமென்று
அப்பண் பினவே நுவலுங் காலை (இடையியல் 2)
‘புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக் குதவுநவும்’ – இரு சொற்கள் புணரும்போது, இடையே ஏதேனும் ஒரு பொருளுக்காக வருவனவும்,
‘வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும்’ – வினைச் சொல்லில் காலம் , பால்,இடம் காட்டுபவைகளும்,
‘வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்’- வேற்றுமைப் பொருளைத் தரும் உருபுகளாக நிற்பவையும்,
‘அசைநிலைக் கிளவி யாகி வருநவும்’ – தனக்கெனப் பொருள் இலாது, தான் சார்ந்த பெயர் வினைகளோடு ஒட்டிநின்று அவற்றைச் சிறப்பிக்க உதவுவனவும்,
‘இசைநிறைக் கிளவி யாகி வருநவும்’ – செய்யுளில் இசையை நிறைக்க வருபவைகளும்,
‘தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்’ – கூறுபவர்களின் குறிப்புப் பொருளை வெளிப்படுத்த நிற்பவைகளும்,
‘ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும் என்று’ – வெவ்வேறு பொருட்களாக இருந்தாலும், ஏதோ ஒரு ஒப்புமையால் ஒன்றுபட்டு நிற்க உதவுபவைகளும்,
‘அப்பண் பினவே நுவலுங் காலை’ – ஆகத் திகழ்வதே இடைச்சொற்களாம்,உரைக்கப் புகின்!
இப்படி நடக்கும் இடைச்சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
1 . ’ புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுந’
பாட்டு +இன் + இனிமை = பாட்டின் இனிமை
இதில், ‘இன்’ எனும் சாரியை இடைச்சொல் , நடுவே வந்து , பொருளைத் தருகிறது; ‘பாட்டு’, ‘இனிமை’ என்று தனித் தனியாக நின்றால் பொருள் திரளாது என்பதைக் கவனிக்க!
2 . ‘வினைசெயன் மருங்கிற் காலமொடு வருந’
வாழ்+ வ்+ஆன் = வாழ்வான்
இங்கே, ’வ்’எனும் இடைச்சொல்லாகிய எதிர்கால இடைநிலை வந்ததால்தான் ‘வாழ்வான்’ என்ற வினைச்சொல்லுக்குப் பொருளே ஏற்படுவதைக் காண்கிறோம்.
3 . ‘வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுந’
குமணனை வாழ்த்தினான் – இங்கே, ‘ஐ’ எனும் இடைச்சொல்லாகிய வேற்றுமை உருபுதான் தொடர்ப் பொருளையே நல்குவதைக் காணலாம்; இல்லையேல், ‘குமணன் வாழ்த்தினான’ என நின்று , வாழ்த்தியவன் குமணன் எனும் தவறான பொருள் அல்லவா ஏற்படும்?
4 . ‘அசைநிலைக் கிளவி யாகி வருந’
சேனாவரையரின் விளக்கம்- “அசைத்தல் – சார்த்துதல். பொருளுணர்த்தாது பெயரொடும் வினையொடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்றலின் அசைநிலை யாயிற்று.அவை ‘அந்தில்’ முதலாயின. ‘புகழ்ந்திகு மல்லரோ பெரிதே’, ‘உரைத்திசினோரே’ எனச் சார்ந்த மொழியை வேறுபடுத்து நிற்றலின்,அசைநிலைச் சொல்லாயின என்பாரு முளர்”
இங்கே ஒன்றை நான் தெளிவுபடுத்த வேண்டும்!
‘அசைநிலை’ வேறு, ‘அசைச் சொல்’ வேறா?
உரையாசிரியர் சிலரின் நடை இந்த ஐயத்தை நமக்குத் தோற்றுவிக்கிறது!
அசைநிலை வேறு, அசைச் சொல் வேறு எனத் தொல்காப்பியர் கருதியிருந்தால், இடைச் சொற்களைப் பாகுபடுத்திக் கூறும் அவரின் பட்டியலில், இரண்டும் அல்லவா இடம் பெற்றிருக்க வேண்டும்?பட்டியலில் ‘அசைநிலைக் கிளவி’ என்ற ஒன்று மட்டும்தானே உள்ளது?
‘மா’ எனும் சொல், வியங்கோளை அடுத்துவரும் ‘அசைச் சொல்’ எனத் தொல்காப்பியர்(இடை.25) கூறச் ,சேனாவரையர், “அது வியங்கோளைச் சார்ந்து, ‘அசைநிலையாய் வரும்’’என்றார்.
இதனால், அசைநிலையும் அசைச் சொல்லும் ஒன்றுதான் என்பது தெளிவாகிற தல்லவா?
ஆகவே,
அசைநிலைக் கிளவி =அசைநிலைச் சொல் = அசைநிலை= அசைச் சொல் !
மேற் சேனாவரையர் உரையிற் கண்ட இரு அசைநிலைகளை வருமாறு பார்க்கலாம்-
புகழ்ந்திகு மல்லரோ பெரிதே – இதில், ‘இகும்’ என்ற அசைநிலை இடைச்சொல் உள்ளது.
உரைத்திசினோரே - இதில், ‘இசின்’ என்ற அசைநிலை இடைச்சொல் உள்ளது.
5 . ‘ இசைநிறைக் கிளவி யாகி வருந ’
இசையை நிறைக்க வரும் சொல் , இசைநிறை இடைச்சொல் எனப்படும்.
இசையை நிறைக்க – யாப்புக் குறையைப் போக்க
‘கடாஅக் களிற்றின்மேல்’ – இந்த இரு சீர்களில், முதற்சீரிலுள்ள ‘அ’வை எடுத்துவிட்டால், ‘கடாக்’ என்று ஒரே ஒரு நிரைஅசையாக மட்டும் நிற்கும்; சீர் கிடைக்காது;யாப்பிலக்கணம் பிழையாகும். ஆகவே சீர் ஏற்பட்டு, யாப்பிலக்கணம் செம்மையாக, ‘அ’ சேர்க்கப்படுகிறது; இதுவே இசை நிறைக்கப்படுதல்.
இங்கே ‘அ’ , இசைநிறைக்கும் இடைச்சொல்.
இன்னோர் எடுத்துக்காட்டு:
‘காடிறந் தோரே’ – இதில், இரண்டாம் சீரின் ஈற்றில் உள்ள ஏகாரமே இசைநிறைக்க வந்த இடைச்சொல். ஏன்?
ஈற்று ஏகாரத்தை எடுத்துவிட்டால், ‘தோர்’ என்பது மட்டுமே மிஞ்சும்; இஃது ஓர் அசைதானே தவிரச் சீர் ஆகாது; சீர் ஆக்கவேண்டும் என்பதற்காகவே ஈற்றில், ‘ஏ’ சேர்க்கப்படுகிறது; அஃதாவது, யாப்பியல் நோக்கில் சேர்க்கப்படுகிறது; இதனால்தான் ‘இசை நிறை’ எனப்படுகிறது.
6 . தத்தங் குறிப்பிற் பொருள்செய்குந
‘சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே’ (புறம்235)- இதில், ‘மன்’ எனும் இடைச்சொல் வந்துள்ளது. ‘சிறு அளவிலான கள் இருந்தால் அவன் எனக்குத் தந்துவிடுவான்! அப்படிப்பட்ட அரசன் அவன் ! அது ஒரு காலம்!’ எனக் கடந்துபோன (கழிந்துபோன) செயலைக் குறிப்பது எது? ‘மன்’அல்லவா? இதனால், ‘மன்’ எனும் இடைச்சொல், கழிவுப் பொருளைக் குறிப்பால் தருகிறது என்கிறோம்!
7 . ‘ஒப்பில் வழியாற் பொருசெய்குந’
இதற்கும் உரையாசிரியரிடையே வேறுபட்டு கருத்துகள் உண்டு!
நம் விளக்கத்தை வருமாறு வைக்கலாம்.
காளை மாடும் மணி என்ற மனிதனும் ஒன்றா?
வேறு வேறுதானே?
இரண்டையும் ஒன்று எனக் கூற முடியாது என்பதே , ‘ஒப்பில் வழி’!
ஆனால், இப்படிப்பட்ட ‘ஒப்பில்வழி’யாக இருப்பினும் , சில உருபுகளைப் போட்டுப் நாம் விரும்பிய பொருளை வெளிப்படுத்துகிறோம்! இந்த உருபுகளை நாம் உவம உருபுகள் என்கிறோம்! இவைகள் இடைச்சொற்களே!
காளை அன்ன மணி – இங்கே , ‘காளை’ , ‘மணி’ ஆகியன ஒப்பில்வழிச் சொற்கள்; ஆனால், ‘அன்ன’ எனும் இடைச்சொல்லால், நம்மால் ஓர் ஒப்பீட்டைத் தர முடிந்துள்ளது!இதைத்தான் தொல்காப்பியர் தன் நூற்பாவில் குறித்துள்ளார்!
***

தொல்காப்பிய இலக்கணம் (609)
தொல்காப்பிய இலக்கணம் (609)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது நான்கு குறிப்புப் பொருள் தரும் உரிச்சொற்கள் – ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய்.
ஓய்த லாய்த நிழத்தல் சாஅ
யாவயி னான்கு முள்ளத னுணுக்கம் (உரி.33)
உள்ளதன் நுணுக்கம் – ஒரு பொருளுக்குள்ள அளவின் நுணுக்கம்.
ஓய்தல் (பெயர்ச்சொல்) – ஓய்வில் இருத்தல்
ஓய்தல் (உரிச்சொல்) – உள்ளதன் நுணுக்கம்
‘ஓய்கலை ஒருத்தல் என்றக்கால், நுணுகிய கலை யொருத்தல் என்பதாம்’ – இளம்பூரணர்.
கலை ஒருத்தல் – நுணுகிய கலைமான்
’ஓய்’ என்பதே ‘ஓய்தல்’ என்ற நூற்பாச் சொல்லின் உரி அடி என்பதைக் கவனிக்க.
‘கையும் மெய்யும் ஆய்ந்திருந்தார் என்றக்கால், சுருங்கியிருந்தார் என்பதாம்’ – இளம்பூரணர்.
ஆய்தல் (பெயர்ச்சொல்) – ஆராய்தல்
ஆய்தல் (உரிச்சொல்) – சுருங்குதல்
நிழத்த யானை (மதுரைக். 303) – மெலிந்து நுணுகிய யானை (இளம்பூரணர்)
கடும்புனற் சாஅய் (நெடுநல். 18) – மிகு நீர் சுருங்கி (இளம்பூரணர்)
சாய்தல் (பெயர்ச்சொல்) – சாய்ந்திருத்தல்
சாய்தல் (உரிச்சொல்) - சுருங்குதல்
சாஅய் – சுருங்கி
உரிசொல்லான ‘சாய்’ , அளபெடை பெற்று வந்ததைக் கவனிக்க.
சாய் + தல் = சாய்தல்
சாய்- பகுதி(உரிச்சொல்)
தல் – தொழிற்பெயர் விகுதி
இப்போது ‘புலம்பு’.
உங்களைப் புலம்பச் சொல்லவில்லை ; இதுதான் நாம் பார்க்கப்போகும் உரிச்சொல்!
புலம்பே தனிமை (உரி. 34)
தனிமை என்பது குறிப்புப் பொருள் உணர்த்துவது.
புலம்பு (முன்னிலை வினை) – ‘அழுது புலம்பு’
புலம்பு (உரிச்சொல்) – தனிமை
‘புலம்புவிட் டிருந்தார்’(மலைபடு.) – இளம்பூரணர் தந்த மேற்கோள்.
புலம்பு விட்டிருந்தார் – தனிமையைத் தவிர்த்திருந்தார்.
புலிப்பல் கோத்த புலிம்புமணித் தாலி (அகநா. 7:18) (சேனாவரையர் மேற்கோள்).
புலிப்பல் கோத்த புலிம்புமணித் தாலி – புலிப்பல்லைக் கோத்த , தனிமணித் தாலி.
மணி – கிணுகிணுக்கும் மணி அல்ல; முத்து, பவளம், நீலம் முதலியவை ‘மணி’ என்றே குறிக்கப்பெறும்.
அடுத்த உரிச்சொல் ‘துவன்று’.
துவன்று நிறைவாகும் (உரி. 35)
துவன்று (உரிச்சொல்) – நிறைவு ; குறிப்பொருள் பயப்ப்பது.
‘இளையரும் முதியருங் கிளையுடன் துவன்றி (பெரும்பாண். 268)
இளையோரும் முதியோரும் உறவுகளுடன் நிறைந்து – என்பது பொருள்.
‘துவன்று’ என்பதை உரிச்சொல்லாகத் தொல்காப்பியம் அறிமுகப்படுத்த, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி(லெக்சிகன்) ‘பெயர்ச்சொல்’ எனக் குறிப்பிடுகிறது. குறிப்பிட்டுத், தொல்காப்பயர் தந்த அதே பொருளையே தந்து, உடன் தொல்காப்பிய உரியியல் நூற்பாவையும் (உரி. 35) மேற்கோள் காட்டுகிறது.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியும், ‘துவன்று’ என்பதற்குத் தொல்காப்பியர் தந்த பொருளையே கொடுத்துப் , ‘பெயர்ச்சொல்’ எனக் குறிக்கிறது; தொல்காப்பியரின் உரியியல் நூற்பாவையே(உரி. 35) மேற்கோளும் காட்டுகிறது.
சங்க இலக்கியங்களில் பயின்ற ‘துவன்று’ , தொல்காப்பியர் உரிச்சொல்லுக்குத் தந்த அதே பொருளைத் தந்ததும், பெயர்ச்சொல்போல அங்கெல்லாம் வந்ததும் இதற்குக் காரணம் எனலாம்.
இவ்வாறு,தொல்காப்பியர் வகுத்த ‘உரிச்சொற்கள்’ என்ற சொல் வகையையே இல்லாமல் செய்துள்ளன தமிழ் அகராதிகள் – செ.ப.த.பே. அகராதி உட்பட.
‘முரஞ்சன்’ – இது யாருடைய பெயரும் அல்ல; குறிப்புப் பொருண்மை கொண்ட அடுத்த உரிச்சொல்.
முரஞ்சன் முதிர்வே (உரி. 36)
இளம்பூரணர் மேற்கோள்- ‘கோடுபல முரஞ்சிய கோளி யாலம்’ (மலைபடு. 268)
கோடுபல முரஞ்சிய கோளி யாலம்- கிளைகள் பல முதிர்ந்த பெரிய ஆலமரம்.
முதிர்வு – குறிப்புப் பொருள் கொண்டது.

T.N.Balasubramanian likes this post
தொல்காப்பிய இலக்கணம் (610)
தொல்காப்பிய இலக்கணம் (610)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது – உரிச்சொல், ‘வெம்மை’.
வெம்மை வேண்டல் (உரி. 37)
வெம்மை (பெயர்ச்சொல்) – வெப்பம்
வெம்மை (உரிச்சொல்) – வேண்டல்; விரும்பல் (desire)
‘வெம்மை’ எனும் உரிச்சொல்லுக்கு ‘வேண்டல்’ பொருள் இருப்பதற்கு இளம்பூரணர் கொடுத்த தொடர் - ‘நீ வெம்மையள்’ என்றக்கால், ‘நீ வேண்டப்படுபவள்’ என்பதாம்.
இதற்குச் சேனாவரையர் தந்த மேற்கோள் – ‘வெங்காமம்’ (அகம். 15)
வெங்காமம் – விரும்பும் காமம்
இந்த உரிச்சொல்லானது , விரும்புதலாகிய பண்பு உணர்த்தும் என்றார் சேனாவரையர்.
இப்போது, உரிச்சொல் – ‘பொற்பு’.
பொற்பே பொலிவு (உரி. 38)
‘பொற்பு’ எனும் உரிச்சொல், ‘பொலிவு’ எனும் குறிப்புப் பொருள் பயக்கும்.
‘அணிகலம் பொற்ப’ என்றக்கால், பொலிய என்பதாம் – இளம்பூரணர் உரை.
‘பொற்பு’ என்றால், பொன்னால் ஏற்பட்ட ஒன்று என்பது போல்தான் பொருள் வரும் என்பது நம் எதிர்பார்ப்பு; ஆனால், முற்றிலும் வேறானதாகப் ‘பொலிவு’ என்ற பொருள் , பாடல்களில், விழைந்துள்ளதால், ‘பொற்’பை நாம் உரிச்சொல் என்கிறோம்.
குறிப்புப் பொருள்தரும் அடுத்த உரிச்சொல், ‘வறிது’.
வறிது சிறிதாகும் (உரி. 39)
வறிது (பெயர்ச்சொல்) – உள்ளீடற்ற; ‘வறிதாகின்றென் மடங்கெழு நெஞ்சே’ (ஐங்குறுநூறு 17)
வறிது (உரிச்சொல்) – சிறிது
‘வறிது நெறி யொரீஇ’ என்றக்கால், சிறிது நெறி ஒரீஇ என்பதாம் – இளம்பூரணர் உரை.
ஒரீஇ – நீங்கி
‘வறிது வடக்கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி’(பதிற். 24)- நச்சர் உரை.
வறிது வடக்கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி – சிறிது வடக்கே தாழ்ந்த சீருடைய வெள்ளிக் கோள்.
அடுத்த குறிப்புப் பொருள் தரும் உரிச்சொல் - ‘ஏற்றம்’
ஏற்ற நினைவுந் துணிவு மாகும் (உரி. 40)
ஏற்றம் (உரிச்சொல்) – நினைவு (குறிப்புப் பொருண்மை); துணிவு (குறிப்புப் பொருண்மை)
ஏற்றத் திருந்தார் என்றக்கால், நினைத்திருந்தார் என்பதூஉம், துணிந்திருந்தார் என்பதூஉம் ஆம் – இளம்பூரணர் உரை.
ஏற்றம் (பெயர்ச்சொல்) – கிணற்றில் நீர் அள்ளப் பயன்படும் நீள் கழி.‘வயலில் ஏற்றம் இறைத்தார்’
ஏற்றம் (உரிச்சொல்) – நினைவு; துணிவு
சேர்ப்பன் கொடுமை யேற்றி (குறுந். 145)- நச்சர் உரையில் மேற்கோள்.
சேர்ப்பன் கொடுமை யேற்றி- நெய்தல் நிலத் தலைவனின் கொடுமையை நினைத்து.
எற்றமி லாட்டியென ஏமுற்றாள் (கலி. 144) - நச்சர் உரை மேற்கோள்.
எற்றமி லாட்டியென் ஏமுற்றாள் - துணிவு இல்லாதவளாகப் பித்துப்பிடித்தவள் ஆனாள்.
எற்றம் + இலாட்டி = எற்றமிலாட்டி
இல் + ஆட்டி = இலாட்டி ; இல் – இல்லாத ; ஆட்டி = பெண்
கலித்தொகையில் , ‘ஆண்’ என்பதற்கு நேர்ப் பெண்பால் ‘ஆட்டி’ என அறியக்கிடக்கிறது.
’ஆளன்’ என்பதற்குப் பெண்பாலும் ‘ஆட்டி’தான்.
மணவாளன் -ஆண்பால்
மணவாட்டி - பெண்பால்
நச்சர், ’ஏற்றி’ என்ற எடுத்துக்காட்டைத் (குறுந். 145) தரும்போது, அவர் உரிச்சொல்லின் வடிவத்தை ‘ஏற்றம்’ எனக் கருதியமை புலனாகிறது; ஆனால், ‘எற்றம்’ என்ற எடுத்துக்காட்டைக் (கலி. 144) காட்டும்போது , அவர் ‘எற்றம்’ என்பதே உரிச்சொல் வடிவம் எனக் கருதியமையும் தெரியவருகிறது.
தொல்காப்பியர் ‘ஏற்றம்’ என்ற உரிச்சொல்லைக் காட்டினாலும் , அது ‘எற்றம்’ எனத் திரியலாம் என்று நச்சர் கருதியிருக்கலாம்.
ஆனால், சுவடியியல் (manuscriptology) நோக்கில் கூறுவதானால், ஓலைகளில் ‘எ’ என்றுதான் அந்தக் காலத்தில் எழுதுவார்கள்; படிப்பவரே இடத்துக்கு ஏற்றாற்போல குறில் நெடில் வேறுபாட்டை அமைத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சூழல் காரணமாகவும் நச்சரின் இருவேறு நோக்குகள் ஏற்பட்டிருக்கலாம்.

தொல்காப்பிய இலக்கணம் (611)
தொல்காப்பிய இலக்கணம் (611)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது உரிச்சொல் – ‘பெட்பு’
பிணையும் பேணும் பெட்பின் பொருள (உரி. 41)
இதற்குச் சேனாவரையர் உரை – ‘….பிணையும் பேணும் , பெட்பின் பொருளாகிய புறந்தருதல் என்னும் குறிப்புணர்த்தும்’.
பெட்பு (உரிச்சொல்) – புறந்தருதல் ; பேணி வளர்த்தல் ; ‘ஈன்று புறந்தருதல்’ என்ற அடி சான்று.
இளம்பூரணர் உரை- ‘பெட்டல் என்பது புறந்தருதல்’
பெட்பு (பெயர்ச்சொல்) – விருப்பம் (சூடாமணி நிகண்டு)
பெட்பு (உரிச்சொல்) - புறந்தருதல் ; பிணைதல் ; பேணல்
பிணை என்பதற்கு எடுத்துக்காட்டு -
‘அரும்பிணை அகற்றி வேட்ட ஞாட்பினும்’ – சேனாவரையர் மேற்கோள்
அரும்பிணை அகற்றி வேட்ட ஞாட்பினும் – அரிய புறந்தருதலை (பாதுகாவலை) நீக்கி, வேள்வி செய்த காலத்திலும்.
பேண் என்பதற்கு எடுத்துக்காட்டு –
‘பேணினன் அல்லனோ மகிழ்ந’ (அகம். 16) – இளம்பூரணர் மேற்கோள்.
பேணினன் அல்லனோ மகிழ்ந – புறந்தந்தேன் அல்லவோ மருதநிலத் தலைவனே.
‘அமரர்ப் பேணி’ (புறம். 99) – சேனாவரையர் மேற்கோள்.
அமரர்ப் பேணி – வானோரைப் பாதுகாத்து
நூற்பாச் சொல்லான ‘பெட்பு’ என்பதற்குப் ‘பெட்டல்’ என்றொரு வடிவத்தைக் காட்டினாரா இளம்பூரணர்? நச்சர் , ‘பெட்டு’ என்ற இன்னொரு வடிவத்தைக் காட்டுகிறார் – ‘பெட்பின் பகுதியாகிய பெட்டு என்னும் உரிச்சொல்லை….’. மூன்று வடிவங்களுமே உரிச்சொல் வடிவங்களே.
அடுத்த உரிச்சொல் – ‘பணை’
குறிப்புப் பொருள் உணர்த்தும் இவ் வுரிச்சொல் பற்றிய நூற்பா:
பணையே பிழைத்தல் பெருப்பு மாகும் (உரி. 42)
பணை (பெயர்ச்சொல்) – மூங்கில்
பணை (உரிச்சொல்) – பிழைத்தல் ; பெருப்பு
பிழைத்தல் – தவறுதல்
பெருப்பு - பெருத்தல் ; பருத்தல்
’பணைத்துப்போய் வீழ்ந்தது’ என்றக்கால், பிழைத்துப்போய் வீழ்ந்தது என்பதாம்- இளம்பூரணர் உரை.
பிழைத்துப்போய் – தவறிப்போய்
‘பணைத்தோள்’ என்றக்கால், பெருந்தோள் என்பதாம் – இளம்பூரணர் உரை.
இப்போது வரும் உரிச்சொல் – ‘படர்’:
படரே யுள்ளல் செலவு மாகும் (உரி. 43)
படர் (பெயர்ச்சொல்) – வருத்தம் ; ‘படர் கூர’ (கலித்.30)- வருத்தம் மேலிட.
படர் (உரிச்சொல்) – உள்ளல் ; செலவு
உள்ளல் – நினைத்தல் (thinking)
செலவு – செல்லுதல் (moving away)
‘படர்மலி வெற்பர்’ என்றக்கால், உள்ளல்மலி வெற்பர் என்பதாம் – இளம்பூரணர்.
உள்ளல்மலி வெற்பர் – நினைப்பு மேலிட்ட மலைநாடன்.
‘ஆறு படர்ந்தார்’ என்றக்கால், சென்றார் என்பதாம் – இளம்பூரணர்.
படர்ந்தார் – சென்றார்
படர் – குறிப்புப் பொருள் உணர்த்திற்று.

தொல்காப்பிய இலக்கணம் (612)
தொல்காப்பிய இலக்கணம் (612)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உரியியலில் இப்போது , உரிச்சொற்கள் – ‘பையுள்’; ‘சிறுமை’:-
பையுளும் சிறுமையும் நோயின் பொருள (உரி. 44)
பையுள் (பெயர்ச்சொல்) – வறுமை (சூடாமணி நிகண்டு)
பையுள் (உரிச்சொல்) – நோய்; துன்பம்
‘பையுள் நல்யாழ்’ என்றக்கால், நோய்செய்யும் நல்யாழ் என்பதாம் – இளம்பூரணர்.
‘பையுள் மாலை’ (குறுந். 195) – சேனாவரையர்.
பையுள் மாலை – துன்பம் தரும் மாலைப் பொழுது.
பையுள் – குறிப்பொருள் உணர்த்துவது.
சிறுமை (பெயர்ச்சொல்) – சின்னது; சிறியதாயிருத்தல்
சிறுமை (உரிச்சொல்) – நோய்; துன்பம்
‘சிறுமை யுறுபவோ செய்பறி யலரே’ (நற். 1) - (பிரிதல் எனும்) துன்பம் தரும் செயலைச் செய்ய நினைப்பாரோ? அவ்வாறு செய்யத் தெரியாதவர் அவர்!
சிறுமை – குறிப்பொருள் நல்குவது.
இனி, ‘எய்யாமை’ எனும் உரிச்சொல்!
‘எய்யாமை’ என்றதும், நாம் என்ன நினைப்போம்?
ஏதோ ‘அம்பு எய்யாமை’ பற்றியது போல – என்றுதானே நினைப்போம்?
‘அது சரிதான்! ஆனால், வேறு ஒரு பொருளும் இருக்கிறது; இதுவே உரிப்பொருள்’ – என்று கூறவருகிறார் தொல்காப்பியர்:
எய்யாமையே அறியாமையே (உரி. 45)
எய்யாமை (பெயர்ச்சொல்) – அம்பு எய்யாதிருத்தல்
எய்யாமை (உரிச்சொல்) – அறியாமை (ignorance)
எய்யா மையலை (குறிஞ்சிப். 8) என்றக்கால், அறியா மையலை என்றவாறாம்- இளம்பூரணர்.
’எய்யாமை’ எனும் உரிச்சொல், ‘அறியாமை’ எனும் குறிப்புப் பொருள் உணர்த்தியது.
’இது நன்று’ என்கிறீர்களா?
இந்த ‘நன்று’க்கும் ஓர் உரிப்பொருளைக் கண்டுபிடித்துக் கூறுகிறார் தொல்காப்பியர்!:
நன்று பெரிதாகும் (உரி. 46)
நன்றும் அரிதுற்றனையாற் பெரும (அகம் 10)- உரையாசிரியர்தம் மேற்கோள்.
பதிப்புக்குப் பதிப்பு இந்த அடி வேறுபடுகிறது; ‘அரிது உற்றனையால்’ என்றும், ‘அரிது துற்றனையால்’ எனவும் , ‘அரிதுற்றனையால்’ என்றும் அச்சிடப்பட்டுள்ளன.
செம்பதிப்பு நோக்கில் (Critical Edition) இவ்விடம் நோக்கற்பாலது.
நன்றும் அரிது துற்றனையாற் பெரும - நன்றானதும் அருமையானதுமானதை மேற்கொண்டாய் பெருமானே!
அரிது துற்றனை – அரியதை மேற்கொண்டு நடந்தாய்
துற்றுதல் – மேற்கொண்டு நடத்தல் (லெக்சிகன்)
‘நன்று என்பது வினையெச்சமாதல் கொள்க’ – சேனாவரையர் உரை.
‘நல்லது என்னும் பொருள்படும் குறிப்பு வினைமுற்றன்று இது. ‘பெரிதாக’ என வினையெச்சப் பொருளில் வரும் உரிச்சொல் இது’ – சிவலிங்கனார் ‘நன்று’ எனும் உரிச்சொல் பற்றி.
‘பெருமை என்னாது பெரிது என்றதனான் , நன்று என்பது வினையெச்சம் ஆயிற்று’ – நச்சர் விளக்கம்.
நன்று (குறிப்பு வினைமுற்று) – நல்லது
நன்று (உரிச்சொல்) – பெரிது; பெரிதாக
நன்று – குறிப்புப் பொருளுணர்த்தும் உரிச்சொல்.

தொல்காப்பிய இலக்கணம் (613)
தொல்காப்பிய இலக்கணம் (613)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இனி, உரிச்சொல் – ‘தெவு’:-
தெவுக் கொளற் பொருட்டே (உரி. 41)
தெவு (உரிச்சொல்) – கொளல்; கொள்ளுதல்(receiving)
நீர்த்தெவு நிரைத்தொழுவர் (மதுரைக். 89)
நீர்த்தெவு – நீர் மொள்ளும் ; நிரைத்தொழுவர் – வரிசையாக நிற்கும் பணியாளர்கள்.
இறைகூடையால் (இடாவால்) நீரை முகந்து (மொண்டு) வரிசையாக ஆட்கள் நின்றுகொண்டு வேறிடம் சேர்ப்பர்.
தெவு – குறிப்புப் பொருள் நல்குவது.
அடுத்த உரிச்சொல்லை நாம் முகப்போம்:
தாவே வலியும் வருத்தமு மாகும்(உரி. 48)
இங்கே உரிச்சொல்- ‘தா’
தா (முன்னிலை வினை) – கொடு
தா (உரிச்சொல்) – 1.வலி 2.வருத்தம்
‘வலி’, ‘வருத்தம்’ – இரண்டும் குறிப்புப் பொருள் உடையன.
‘தா – வலி’ என்பதற்கு எடுத்துக்காட்டு:
தாவில் நன்பொன் (அகம். 212) – இளம்பூரணர்
தாவில் நன்பொன் - வன்மையில்லாது நெகிழும் தன்மையுடைய சிறந்த பொன் (பொ.வே.சோமசுந்தரனார் உரை)
வலி – வலிமை; மூட்டுவலி அல்ல!
‘தா – வருத்தம்’ என்பதற்குக் காட்டு:
கருங்கட் டாக்கலை (குறுந். 69) – இளம்பூரணர் உரை.
கருமை+ கண்+ தா+ கலை = கருங்கட் டாக்கலை
கருங்கட் டாக்கலை – கருமையான கண்களையும் வருத்தத்தையும் உடைய கலைமான்.
பார்க்கப்போகும் உரிச்சொல் – ‘தெவ்வு’ (இது குறிப்புப் பொருள் கொண்டது)
தெவ்வுப் பகையாகும் (உரி. 49)
தெவ்வு (உரிச்சொல்) – பகை
தெவ்வுப் புலம் – பகைப் புலம் ; பகைவர் நிலம்
தொடரும் உரிச்சொற்கள் மூன்று – 1. ‘ விறப்பு’ 2. ‘உறப்பு’ 3. ‘வெறுப்பு’
விறப்பு முறப்பும் வெறுப்புஞ் செறிவே (உரி. 50)
விறப்பு, உறப்பு, வெறுப்பு – இம் மூன்று உரிச்சொற்களும் ‘செறிவு’ எனும் ஒரே பொருளையே தருவன. மூன்றுமே குறிப்புப் பொருளையே நல்குவன.
விறப்பு (பெயர்ச்சொல்) – திமிர் ; ‘உன் விறப்பை என்னிடம் காட்டாதே’
விறப்பு (உரிச்சொல்) – செறிவு
உறப்பு (பெயர்ச்சொல்) – பிளப்பு (லெக்சிகன்)
உறப்பு (உரிச்சொல்) – செறிவு
வெறுப்பு (பெயர்ச்சொல்) – விருப்பின்மை ; ‘முதியோரை வீட்டில் வெறுக்கிறார்கள்’
வெறுப்பு (உரிச்சொல்) - செறிவு
உரிச்சொல் ‘விறப்பு’க்கு எடுத்துக்காட்டு :
‘விறந்த காப்பொடு என்றக்கால் செறிந்த காப்பொடு என்பதாம்’ – இளம்பூரணர்.
உரிச்சொல் ‘உறப்பு’க்கு எடுத்துக்காட்டு :
‘உறந்த விஞ்சி யுயர்நிலை மாடம் என்புழி, செறிந்த இஞ்சி என்பதாம்’ – இளம்பூரணர்.
உறந்த + இஞ்சி = உறந்த விஞ்சி
இஞ்சி – மதில் (wall);தேநீரில் போடும் இஞ்சி அல்ல!
உறந்த விஞ்சி – செறிந்த சுவர்
உரிச்சொல் ‘வெறுப்பு’க்கு எடுத்துக்காட்டு :
‘வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் (புறம். 53) – சேனாவரையர் மேற்கோள்.
வெறுத்த கேள்வி – செறிவான கேள்வியறிவு

Re: தொல்காப்பிய இலக்கணம் (619)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32573
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12039
தொல்காப்பிய இலக்கணம் (614)
தொல்காப்பிய இலக்கணம் (614)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘விறப்பு’ என்ற உரிச்சொல்லைச் சற்றுமுன்பு பார்த்தோம்!
‘விறப்பு’ என்ற அந்த உரிச்சொல்லுக்கு வேறு பொருளும் இருப்பதை இப்போது தெரிவிக்கிறார் ஆசிரியர்:
அவற்றுள்
விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும் (உரி. 51)
விறப்பு (உரிச்சொல்) – வெரூஉதல் ; வெருவுதல்; அஞ்சுதல்
‘அஞ்சுதல்’ பொருளில் ‘விறப்பு’எனும் உரிச்சொல் வந்ததற்கு இளம்பூரணர் தந்த மேற்கோள்-
‘கோடு முற்றி யளந்த காரொடு விறந்தே’ என்றக்கால், வெரீஇ என்பதாம்.
கோடு – கொம்பு ; அளந்த – அமைந்த ; கார் – கரிய காளை; வெரீஇ- அஞ்சி.
கோடு முற்றி யளந்த காரொடு விறந்தே – கொம்பானது முதிர்ச்சியடைந்து அமைந்த கரியநிறக் காளைக்கு அஞ்சி.
‘அஞ்சுதல்’ பொருளில் ‘விறப்பு’எனும் உரிச்சொல் பயின்றதற்குச் சேனாவரையர் தந்த மேற்கோள்-
“அவலெறி யுலக்கைப் பாடு விறந்தயல (பெரும்பாண். 226) என விறப்பு என்பது செறிவே யன்றி வெருவுதற் குறிப்பும் உணர்த்தும் என்றவாறு”.
அவல் – நெற்பொரி இடியல் ; ‘வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்தால் எந்தமட்டு?’
உலக்கைப் பாடு – உலக்கையால் இடிபடும் ஓசை
அயல – அகல; நீங்க
அடுத்து , ஒரே மூச்சில் நான்கு இசைப்பொருண்மை உரிச்சொற்களக் காட்டுகிறார் தொல்காப்பியர்:
கம்பலை சும்மை கலியே யழுங்க
லென்றிவை நான்கு மரவப் பொருள (உரி. 52)
’அரவம்’ எனும் பொருள்தரும் நான்கு உரிச்சொற்கள் 1.கம்பலை 2.சும்மை 3.கலி 4.அழுங்கல்
அரவம் – சத்தம் (noise); ‘ஆள் அரவமே இல்லாமல் திருடிக்கொண்டு போய்விட்டான்’.
கம்பலை (பெயர்ச்சொல்) – அழுகை
கம்பலை (உரிச்சொல்) – ஆரவாரம்
சும்மை (பெயர்ச்சொல்) – சுமை (பிங்.நி.)
சும்மை (உரிச்சொல்) – ஆரவாரம்
கலி (பெயர்ச்சொல்) – சனிக் கோள்
கலி (உரிச்சொல்) – ஆரவாரம்
அழுங்கல் (பெயர்ச்சொல்) – உழல்தல் ; ‘கடனில் அழுந்துகிறான்!’
அழுங்கல் (உரிச்சொல்) - ஆரவாரம்
‘கம்பலை’ எனும் உரிச்சொல்லுக்கு, ‘அரவ’ப் பொருள் இருப்பதற்கு இளம்பூரணர் காட்டும் மேற்கோள்-
‘ஊர் கம்பலை யுடைத்து’ என்றக்கால், அரவம் உடைத்து என்பதாம்.
‘சும்மை’ எனும் உரிச்சொல், ‘அரவ’ப் பொருள் தருவதற்கு இளம்பூரணர் தரும் மேற்கோள்-
‘ஊர் சும்மை யுடைத்து’ என்பதும் அது.
‘கலி’, ‘அழுங்கல்’ அகிய உரிச்சொற்களுக்கு, ‘அரவ’ப் பொருள் இருப்பதற்கு இளம்பூரணர் காட்டும் மேற்கோள்-
‘கலிகெழு மூதூர்’ (அகம். 11), ‘அழுங்கல் மூதூர்’ (நற். 203) என்பனவும் ஒக்கும்.
‘அழுங்கல்’ உரிச்சொற் பொருளை இப்போது பார்த்தோமல்லவா? இதே உரிச்சொல்லுக்கு ‘இரக்கம்’ , ‘கேடு’ எனும் வேறு இரு பொருட்களும் இருப்பதை இப்போது வரைகிறார் ஆசிரியர்:
அவற்று
ளழுங்கல் லிரக்கமுங் கேடு மாகும் (உரி. 53)
‘அழுங்கல்’ உரிச்சொல்லுக்கான இரு கூடுதற் பொருட்கள் 1. இரக்கம் 2.கேடு
இரண்டுமே குறிப்புப் பொருண்மை நல்குவன.
‘அழுங்கல்’ எனும் உரிச்சொல், இரக்கப் பொருளில் வந்தமைக்கு இளம்பூரணரின் மேற்கோள் –
‘மகனை யிழந் தழுங்கினார்’ என்றக்கால், இரங்கினார் என்பதாம்.
‘அழுங்கல்’ எனும் உரிச்சொல், ‘கேடு’எனும் பொருளில் வந்தமைக்கு இளம்பூரணர் காட்டிய மேற்கோள் –
‘செல வழுங்கினார்’ என்றக்கால், செலவு கெடுத்தார் என்பதாம்.
செலவு – செல்லுகை; புறப்படுதல். வரவு செலவு அல்ல!
செலவு கெடுத்தார் – செல்லுதலைத் தடுத்தார்.
தொடர்வது, ‘கழும்’ எனும் குறிப்புப் பொருள் தரும் உரிச்சொல்!:
கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும் (உரி. 54)
கழும் (உரிச்சொல்) – மயங்கல்; கலத்தல்; ஒன்றுடன் ஒன்று சேர்தல்
‘கழும்’எனும் உரிச்சொல், மயக்கப் பொருள் தருவதற்கு இளம்பூரணரின் மேற்கோள் –
‘கழுமிய ஞாட்பினுள் மைந்திகழ்ந்தார் இட்ட’ (களவழி. 11 ) என்றக்கால், மயங்கிய ஞாட்பு என்பதாம்.
கழுமிய ஞாட்பினுள் மைந்திகழ்ந்தார் இட்ட – வீரர் பலர் ஒருவரோடு ஒருவர் கலந்து இட்ட போரில், வலிமையை இழந்தவர்கள் அஞ்சி, விட்டுச்சென்ற .
ஞாட்பு – போர் ; மைந்து – வலிமை ; இட்ட – விட்டுச்சென்ற.
‘கழும்’ என்பதே தொல்காப்பிய உரிச்சொல் எனச் சேனாவரையர் கூறக், ‘கழுமு’ என்பதே உரிச்சொல் வடிவம் என்றார் நச்சினார்க்கினியர்; எனினும் இரு வடிவங்களுக்கும் பொருள் ஒன்றே.

தொல்காப்பிய இலக்கணம் (615)
தொல்காப்பிய இலக்கணம் (615)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது, ‘செழுமை’ எனும் உரிச்சொல்!:
செழுமை வளனுங் கொழுப்பு மாகும் (உரி. 55)
செழுமை (பெயர்ச்சொல்) – மாட்சிமை (பிங்.நி.); ‘சட்ட திட்டங்கள் திருத்தப்பட்டு செழுமைப் படுத்தப்பட்டன’.
செழுமை (உரிச்சொல்) – 1. வளன் 2. கொழுப்பு
வளன் – வளம் (fertility)
வளமும் கொழுப்பும் கண்ணாற் காணக் கூடியவை ஆதலால், ‘செழுமை’, பண்புப் பொருல் உணர்த்தும் உரிச்சொல் ஆகும்.
‘செழுமை’ எனும் உரிச்சொல், வளத்தைக் குறிப்பதற்கு இளம்பூரணரின் எடுத்துக்காட்டு –
‘செழுஞ் செந்நெல் என்றக்கால், வளஞ் செந்நெல் என்பதாம்’.
‘செழுமை’ என்னும் உரிச்சொல், கொழுப்பைக் குறிப்பதற்கு இளம்பூரணரின் சான்று –
‘கொழுந்தடி தின்ற செந்நாய் ஏற்றை என்பது, கொழுந்தடி தின்ற என்பதாம்; கொழுப்பு என்பது ஊன் பற்றிய நிணம்’.
செந்நாய் ஏற்றை – ஆண் செந்நாய்
ஊன் – இறைச்சி ( ‘ஊண்’ அல்ல)
கொழுந்தடி – கொழுப்புள்ள தசை
தொடரும் உரிச்சொல் ‘விழுமம்’:
விழுமஞ் சீர்மையும் சிறப்பும் இடும்பையுமாம் (உரி. 56)
இந் நூற்பா , சேனாவரையர் கொண்ட பாடம்; ‘விழுமஞ் சீர்மையு மிடும்பையுஞ் செய்யும்’ என்பது இளம்பூரணர் பாடம். சேனாவரையர் பாடத்தையே தெய்வச்சிலையாரும் நச்சினார்க்கினியரும் கொண்டனர்.
வேறு ஒன்றுமில்லை! ‘விழுமம்’ எனும் உரிச்சொல்லுக்குச், ‘சிறப்பு’ என்ற பொருளைச் சேர்க்கவில்லை இளம்பூரணர்; அவ்வளவுதான்!
நூற்பா ஓசையானது, இளம்பூரணர் பாடத்திற்கே மிகப் பொருந்துவதாக உள்ளது.
தொல்காப்பிய உரையாசிரியர்களிற் காலத்தால் முற்பட்டவர் இளம்பூரணர் (கி.பி. 12 ஆம் நூ.ஆ.); ஆகவே , அவருக்குப் பின்னெழுந்த இலக்கியங்களிற் பயின்ற உரிச்சொற்களைப் பிந்தைய உரையாசிரியர்கள் , மாணவர்களுக்காகத்,த ஓலைச் சுவடி ஓரத்தில் சேர்க்க விழைந்திருக்க சிறு வாய்ப்பும் இல்லாமலில்லை. கால அடைவில் , அச் சுவடியைப் படிக்கும் மாணவர்கள் அச் சொல்லை மூலமாகக் கருதியிருக்கலாம். சுவடியியல் நோக்கில் (manuscriptology) இவ்வாறு ஆயச் சிறிது இடம் உண்டு.
‘விழு’ – இவ் வடிக்கு , ‘விழுதல்’என்பது போன்ற பொருள்களையே நாம் எதிர்பார்க்கலாம்; ஆனால், முற்றிலும் எதிர்பாரா வகையில், ‘சீர்மை’ப் பொருள் வந்துள்ளதால், ‘விழுமம்’ உரிச்சொல்லாயிற்று!
‘விழுமம்’ எனும் உரிச்சொல், ‘சீர்மை’ப் பொருள் தருவதற்கு இளம்பூரணர் வாக்கு –
‘விழுமியர் என்றக்கால், சீரியர் என்பதாம்’
சீரியர் – மேன்மையர் (the great)
‘விழுமம்’ என்னும் உரிச்சொல், ‘இடும்பை’ப் பொருள் நல்குவதற்கு இளம்பூரணர் காட்டு –
’விழும முற்றிருந்தார் என்றக்கால், இடும்பையுற் றிருந்தார் என்பதாம்’.
இடும்பை – துன்பம் (affliction)
‘விழுமம்’ எனும் உரிச்சொல், ‘சிறப்பு’ப் பொருள் தருவதற்குச் சேனாவரையர் காட்டு –
‘வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து’ (புறம். 27)
வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து – வேறுபாடில்லாத சிறப்பான குலத்திற் பிறந்து.
வேற்றுமை – சாதி வேற்றுமை; உயர் சாதி தாழ்ந்த சாதி என்ற வேறுபாடு.
உரைவேந்தர் ஔவை துரைசாமியார் , “வேற்றுமை யில்லா விழுத்திணை என்பது, வேற்றுமை மலிந்த இக்காலத் தமிழ் மக்கள் குறிக்கொண்டு போற்றத் தக்கதாகும்” என மனம் நொந்து, தமிழர்க்கு அறிவுரை நல்கியிருப்பது அறியத் தக்கது!

தொல்காப்பிய இலக்கணம் (616)
தொல்காப்பிய இலக்கணம் (616)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘கருவி’ , நமக்குத் தெரியும்; ஆனால், இதே சொல்லுக்குத் ‘தொகுதி’ என்ற மருட்டும் பொருளும் உண்டு என்கிறது தொல்காப்பியம்!:
கருவி தொகுதி (உரி. 57)
கருவி (பெயர்ச்சொல்) – தொழில் செய்யப் பயன்படுத்தும் பொருள்(tool)
கருவி (உரிச்சொல்) – தொகுதி (collection)
இதற்கு இளம்பூரணரின் மேற்கோள் –
‘கருவி வானம் கதழுறை சிதறி (அகம். 4) என்றக்கால், ஈண்டு மின்னும் முழக்கும் காற்றும் என இத் தொடக்கத்தன வாயிற்று’.
கருவி வானம் கதழுறை சிதறி – மின்னல் , இடி, காற்று ஆகியன சேர்ந்து, மேகத்தின் நீரை வேகமாகக் கீழே சிதறி.
கதழ் – வேகமாக ; உறை – நீர்த்துளி
‘கருவி, தொகுதியாகிய குறிப்பு உணர்த்தும்’ – நச்சினார்க்கினியர்.
இப்போது உரிச்சொல் – ‘கமம்’:
கம நிறைந் தியலும் (உரி. 58)
கமம் – உரிச்சொல்லாகும் போது , நிறைவைக் குறிக்கும்; குறிப்புப் பொருளில் வந்துள்ளது.
கமம் – நிறைவு (fulness)
கமம் – பெயர்ச்சொல்லாகும் போது, வயலைக் குறிக்கும்.
‘கமம்’ , நிறைவைக் குறிக்கும் எடுத்துக்காட்டு –
கமஞ்சூழ் மாமழை (திருமுருகு. 7) – சேனாவரையரின் எடுத்துக்காட்டு.
கமஞ் சூல் – நிறைந்த சூல் ; சூல் – நீர் நிரம்பி யிருத்தல்.
அடுத்த உரிச்சொல் – ‘அரி’ :
அரியே ஐம்மை (உரி. 59)
ஐம்மை – மென்மை
அரி (பெயர்ச்சொல்) – நெல் ; அரிசி
அரி (உரிச்சொல்) – மென்மை ; குறிப்புப் பொருள் நல்கியது.
‘அரி’எனும் உரிச்சொல்லானது, மென்மையைக் குறிக்கும் என்பதற்கு இளம்பூரணரின் எடுத்துக்காட்டு –
‘அரிமயிர்த் திரள் முன்கை’ (புறம். 11)
அரிமயிர்த் திரள் முன்கை – மென்மையான உரோமத் திரள் கொண்ட முன்கை.
இப்போது வரும் உரிச்சொல் – ‘கவவு’:-
கவ வகத்திடுமே (உரி. 60)
அகத்திடுதல் – தழுவுதல்; குறிப்புப் பொருள்
பூண் கவைஇய கோல மார்பு – இளம்பூரணரின் காட்டு.
பூண் கவைஇய கோல மார்பு – பூணால் தழுவப்பட்ட அழகு மார்பு.
கழூஉ விளங்காரம் கவைஇ மார்ப – சேனாவரையரின் காட்டு.
கழூஉ விளங்காரம் கவைஇ மார்ப – கழுவப்பட்ட , விளங்கித் தோன்றும் மாலையால் தழுவப்பட்ட மார்பனே.
‘கவவு’ என்றதும் , ஏதோ ‘கவட்டை’ அல்லது ‘வாயால் கவ்வுதல்’ என்பது போன்ற ஒரு பொருள் இருக்கலாம் என்றால், இதற்கு ஓர் அரிய உரிப்பொருள் இருப்பது மேல் தொல்காப்பிய நூற்பாவால்தான் தெரிந்தது!

தொல்காப்பிய இலக்கணம் (617)
தொல்காப்பிய இலக்கணம் (617)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மேலே குறிப்புப் பொருள் உணர்த்தும் சில உரிச்சொற்களைத்தானே பார்த்தோம்?
இப்போது ஒரே நூற்பாவில் நான்கு இசைப்பொருள் உணர்த்தும் உரிச்சொற்களை அறிமுகப்படுத்துகிறார் தொல்காப்பியர்!:-
துவைத்தலுஞ் சிலைத்தலு மியம்பலு மிரங்கலு
மிசைப்பொருட் கிளவி யென்மனார் புலவர் (உரி. 61)
‘துவைத்தல்’, ‘சிலைத்தல்’, ‘இயம்பல்’, ‘இரங்கல்’ – இந்த நான்கு உரிச்சொற்களுக்கும் ’ஒலித்தல்’ என்பதே பொருள்; ஆனால் நான்கும் ஒரே ஒலியைக் குறிப்பனவல்ல! தொடரில் சுட்டப்படும் ஒலியைத்தான் குறிக்கும்!
இந் நான்கு உரிச்சொற்களையும் காண்போம்!
1. ‘துவைத்தல்’
‘துவைத்தல்’ என்றால் நமக்குத் துணி துவைப்பதுதான் தெரியும்! ஆனால், இதற்கு நுட்பமான ஒலிப்பொருள் (இதுவே ‘இசைப்பொருள்’) ஒன்று இருப்பதைத் தொல்காப்பியரின் உரியியல் காட்டுகிறது!
‘துவைத்த’லுக்கு ஓசைப்பொருள் இருப்பதற்கு இளம்பூரணரின் எடுத்துக்காட்டு –
‘வரிவளை துவைப்ப என்றக்கால், சங்கு இசைப்ப என்பதாம்’.
வரிவளை – சங்கு
2 . ‘சிலைத்தல்’
‘சிலைத்தல்’ என்றால், ஏதோ சிலை செய்யும் சிற்ப ஆச்சாரி பணி என்பதுபோலத்தான் நாம் நினைப்போம்! ஆனால், இதற்கும் ’ஒலிக்கும்’ எனும் ஓர் உரிப்பொருள் இருப்பதை மேல் தொல்காப்பியர் நூற்பாவிற் பார்த்தோம்!
‘சிலைத்தல்’ எனும் உரிச்சொல்லுக்கு ஓசைப்பொருள் இருப்பதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டு –
‘கலையி னிரலை சிலைப்ப என்றக்கால், அதனது குரலிசைப்பச் சொல்லிற்றாம்’.
கலை – ஆண் மான் ; இரலை – புல்வாய் (மான் வகை)
3 . ‘இயம்பல்’
‘இயம்பல்’ என்றால் ‘சொல்லுதல்’ என்ற பொருள் நாமறிந்தது; ‘தமிழறிஞர் எடுத்தியம்பினார்’ .
இதற்கு ஒலிப்பொருண்மை ஒன்று இருப்பதற்கு இளம்பூரணர் எடுத்துக்காட்டு _
‘இயமரம் இயம்பும் எனவே ஒலிக்கும் என்பதாம்.’
இயமரம் - வாத்தியம்
4 . ‘இரங்கல்’
’இரங்கல்’ என்றால் , இரக்கப்படுதல் என்பது நாம் அறிந்தது!
‘இரங்கல்’ , உரிச்சொல்லாகும் போது, ஓசைப்பொருண்மை கொண்டு வரும்; இதற்கு இளம்பூரணர் எடுத்துக்காட்டு –
‘முரஞ்சிரங்கு முற்றம் என்றக்கால், இசைக்கும் என்பதாம்’ .
முரஞ்சிரங்கு முற்றம் – முரஞ்சு ஒலிக்கும் முற்றம்
இதே உரிச்சொல்லுக்கு நச்சினார்க்கினியரின் எடுத்துக்காட்டு –
‘கடிமனை இயம்ப’ (புறம். 36)
கடிமனை இயம்ப – அரண்மனையில் ஒலிக்க
அடுத்த நூற்பாவில் , இதே உரிச்சொல்லான ‘இரங்கல்’ என்பதற்கு ‘கழிவு’ப் பொருளும் உண்டு என்கிறார் தொல்காப்பியர்:
அவற்று
ளிரங்கல் கழிந்த பொருட்டு மாகும் (உரி. 62)
இதற்குச் சேனாவரையர் எடுத்துக்காட்டு –
‘செய்திரங்கா வினை’ (புறம். 10)
செய்திரங்கா வினை -ஒரு தீய செயலைச் செய்துவிட்டு , ‘அடடா ! தவறு செய்துவிட்டோமே’என்றெல்லாம் பின்னே வருந்தாத செய்கை.
‘இரங்கல்’ எனும் உரிச்சொல்லானது ‘கழிவு’ப் பொருளை உணர்த்தும்போது, இசைப்பொருண்மை சுட்டாது; குறிப்புப் பொருண்மையே சுட்டும்.
அடுத்ததாக , ‘இலம்பாடு’, ‘ஒற்கம்’ எனும் இரு உரிச்சொற்கள்!:-
இலம்பா டொற்க மாயிரண்டும் வறுமை (உரி. 63)
‘இலம்பாடு’, ‘ஒற்கம்’ – இரண்டுமே ‘வறுமை’ எனும் பொருளன. இரண்டுமே குறிப்புப் பொருள் உணர்த்துவன.
‘இலம்பாடு’ எனும் சொல்லானது, ‘இல்லை’ என்பது போன்ற பொருளைத் தருவது என்றுதான் நாம் நினைக்கிறோம்;ஆனால், இஃது ஓர் உரிச்சொல் என்றும் , இதன் பொருள் ‘வறுமை’ எனவும் நவில்கிறார் தொல்காப்பியர்! இதற்கு இளம்பூரணரின் மேற்கோள் –
‘இலம்படு புலவர்’ (மலைபடு. 576) என்றக்கால், வறுமைப்படும் புலவர் என்பதாம்.
திருக்குறள் (414) மூலமாக , ‘ஒற்கம்’ என்றால், ‘தளர்ச்சி’ என்பதை நாம் அறிந்துள்ளோம் ; ஆனால், ‘வறுமை’ப் பொருளையும் தருகிறது இச் சொல் என்று மேலை நூற்பாவில் தொல்காப்பியர் நவின்றுள்ளார்.
ஒற்கம் (பெயர்ச்சொல்) – தளர்ச்சி
ஒற்கம் (உரிச்சொல்) – வறுமை
‘ஒற்கம்’ , வறுமையைக் குறிக்க இளம்பூரணரின் எடுத்துக்காட்டு –
‘ஊரை ஒற்கம் தீர்க்கும் என்றக்கால், வறுமை தீர்க்கும் என்பதாம்.
தீர்க்கும் – அழிக்கும்

துவைத்தல்’, ‘சிலைத்தல்’, ‘இயம்பல்’, ‘இரங்கல்’ – இந்த நான்கு உரிச்சொற்களுக்கும் ’ஒலித்தல்’ என்பதே பொருள்; ஆனால் நான்கும் ஒரே ஒலியைக் குறிப்பனவல்ல! தொடரில் சுட்டப்படும் ஒலியைத்தான் குறிக்கும்!
உதாரணங்களுடன் விளக்கியதற்கு

[You must be registered and logged in to see this link.]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32573
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12039
Dr.S.Soundarapandian likes this post
Re: தொல்காப்பிய இலக்கணம் (619)
நன்றி இரமணியன் அவர்களே!
புரிந்துகொள்ளும் உங்கள் திறன் அபாரம்! மற்றவர்களுக்கு முன்மாதிரி!

தொல்காப்பிய இலக்கணம் (618)
தொல்காப்பிய இலக்கணம் (618)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அடுத்த உரியியல் நூற்பா:
ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள (உரி. 64)
நூற்பா குறிக்கும் உரிச்சொற்கள் , 1. ஞெமிர்தல் 2. பாய்தல்
இரண்டு உரிச்சொற்களுக்கும் பொருள் - ‘பரத்தல்’ (spreading)
ஞெமிர்தல் (பெயர்ச்சொல்) – ஒடிதல் (செ.ப.த.பே. அகராதி)
ஞெமிர்தல் (உரிச்சொல்) – பரத்தல்
‘ஞெமிர்த’லுக்குப் ‘பரத்தல்’ எனும் பொருள் இருப்பதை இளம்பூரணர் இப்படிக் கூறுகிறார்-
தண்பெரும் பந்தர்த் தருமணன் ஞெமிரிய (நற். 143) என்றக்கால், பரப்பிய என்பதாம்.
தண்பெரும் – குளிர்ந்த பெரிய
பந்தர் – பந்தல்
தருமணல் – கொண்டுவந்து சேர்த்த மணல் (மணல் + ஞெமிரிய = மணன் ஞெமிரிய)
ஞெமிரிய – பரப்பிய
இப்போது – ‘பாய்தல்’
‘பாய்தல்’ என்றதும், புலியின் பாய்ச்சல் நமக்கு நினைவுக்கு வருகிறது!
ஆனால், இதே ‘பாய்த’லுக்குப் பரத்தற் பொருள் இருப்பதை மேல் நூற்பாவிற் கண்டோம்.இதற்கான இளம்பூரணர் விளக்கத் தொடர்-
‘புண்ணுமிழ் குருதிப் புனல் பாய்ந்து என்றக்கால், பரந்து என்பதாம்’ .
‘இரத்தப் பெருக்கு, புண்ணிலிருந்து வந்து பரவியது’ என்பது பொருள்.
‘ஞெமிர்தல்’, ‘பாய்தல்’ – இரண்டும் குறிப்புப் பொருள் உணர்த்துவன.
தொடரும் உரிச்சொல், ‘கவர்வு’.:-
கவர்வு விருப்பாகும் (உரி. 65)
‘கவர்வு’ என்றதும், பொருளைக் கவர்ந்துகொள்ளலே நினைவுக்கு வருகிறது! ஆனால் , இதற்கு ‘விருப்பு’ எனும் ஓர் உரிப்பொருள் உள்ளது என மேலை நூற்பா தெரிவிக்கிறது!
‘கவர்வு’ , விருப்புப் பொருள் தருவதற்கு இளம்பூரணர் காட்டிய எடுத்துக்காட்டு-
‘கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்’ (அகம். 3) என்றக்கால்,விரும்பும் என்பதாம்.
கொள்ளை மாந்தர் – கள்வர் ; ஆனாது - ஒழியாது
‘கவர்வு’ , விருப்புப் பொருள் தருவதற்குத் தெய்வச்சிலையார் தந்த எடுத்துக்காட்டு-
‘கவர்நடைப் புரவி’ (அகம்.130)
கவர்நடைப் புரவி – விருப்பத்தைத் தருகிற நடையை உடைய குதிரை
கவர்வு – குறிப்புப் பொருள் நல்கிற்று.
தொடரும் உரிச்சொல் – ‘சேர்’:
சேரே திரட்சி (உரி. 66)
சேர் + ஏ = சேரே
சேர் – உரிச்சொல்; ஏ - இடைச்சொல்
‘சேர்’ என்றதும் ‘அங்குபோய்ச் சேர்’, ‘பள்ளியிற் சேர்’ என்பன போன்ற பொருண்மைகளே நாம் அறிந்தது!
ஆனால், ‘சேர்’ எனும் உரிச்சொல்லுக்குத் ‘திரட்சி’ எனும் பொருள் இருப்பதை மேல் நூற்பா வழிக் கண்டோம்!
‘சேர்’ எனும் உரிச்சொல்லுக்குத் ‘திரட்சி’ எனும் குறிப்புப் பொருள் இருப்பதை வரும் இளம்பூரணரின் எடுத்துக்காட்டால் தெளியலாம்:
‘சேர்ந்து செறிகுறங்கு (நற். 170) என்றக்கால், திரண்டு செறிகுறங்கு என்பதாம்’.
சேர்ந்து – திரண்டு ; செறி – செறிந்த ; குறங்கு – தொடை

அடுத்த உரிச்சொல் – ‘வியல்’:
வியலென் கிளவி யகலப் பொருட்டே (உரி. 67)
வியல் – உரிச்சொல் ; இதன் பொருள் – அகலம் ; இது குறிப்புப் பொருள்.
‘வியல்’ எனும் உரிச்சொல்லுக்கு ‘அகலம்’ எனும் உரிப்பொருள் இருப்பதற்கு இளம்பூரணர் கொடுத்த எடுத்துக்காட்டுத் தொடர்:
‘வியலிரு வானம் என்றக்கால், அகலிருவானம் என்பதாம்’.
இருவானம் = இரு + வானம்
இரு - பெரிய
‘வியல்’ எனும் உரிச்சொல்ல்லுக்கு ‘அகலம்’ எனும் உரிப்பொருள் இருப்பதற்குத் தெய்வச்சிலையார் கொடுத்த சான்று: ‘வியலுகம்’
வியலுலகம் – அகன்ற உலகம்
தொடரும் உரிச்சொற்கள் மூன்று- ‘பே’, ‘நாம்’, ‘உரும்’ :
பேநா முருமென வரூஉங் கிளவி
யாமுறை மூன்று மச்சப் பொருள (உரி. 68)
மேற் சொன்ன மூன்று உரிச்சொற்களும் ‘அச்சம்’ எனும் பொருள் நல்குவன;
மூன்றும் அச்சமாகிய குறிப்புப்பொருள் கொடுப்பன.
‘பே’ எனும் உரிச்சொல்லுக்கு ‘அச்ச’ப் பொருள் இருப்பதற்கு இளம்பூரணரின்
எடுத்துக்காட்டுத் தொடர் –
‘மன்ற மராஅத்த பேமுதிர் கடவுள் (குறுந்.87) என்பது அச்சம் முதிர் கடவுள் என்பதாம்.
மன்ற மராஅத்த பேமுதிர் கடவுள் – ஊரிலுள்ள பொது மன்றத்தில் உள்ள மராமரத்தின் கீழே உள்ள அச்சம் தரும் கடவுள்.
‘நாம்’ எனும் உரிச்சொல்லுக்கு ‘அச்சம்’ என்ற பொருள் இருப்பதற்கு இளம்பூரணர் காட்டிய தொடர்-
‘நாம்வருந் துறை சேர்ந்து என்பது அச்சமுடைய துறை போந்து என்பதாம்.’
போந்து – சேர்ந்து
‘உரும்’ என்னும் உரிச்சொல்லுக்கு ‘அச்ச’ப் பொருள் இருப்பதற்கு இளம்பூரணர் காட்டிய தொடர்-
’உருமில் சுற்றம்’ (பெரும்பாண். 447) என்பது அச்சமில் சுற்றம் என்பதாம்.
சுற்றம் – உறவினர்
சுவடியியல் (manuscriptology)நோக்கில் , இங்கே சிறிது ஆய இடம் உள்ளது.
பே – இளம்பூரணர் , சேனாவரையர் கொண்ட பாடம்
பேஎ – தெய்வச்சிலையார் கொண்ட பாடம்
பேம் – நச்சர் கொண்ட பாடம்
செய்யுளில் இசை இன்பத்திற்காக ‘எ’ எனும் அளபெடை சேர்த்தது(குறுந். 87), உரிச்சொல்லின் பாடமாகவும் ஆகியுள்ளது!
தொடரும் உரிச்சொல் – ‘வய’:-
வய வலியாகும் (உரி. 69)
வய (உரிச்சொல்) – வலிமை
‘வய’ என்றதும், ஏதோ வயப்படுத்துவது (வசப்படுத்துவது) தொடர்பான பொருள் இருக்கும் என்று நினைத்தோம்! ஆனால், இதற்கு ‘வலிமை’ என்றொரு உரிப்பொருள் இருப்பதைத் தொல்காப்பியம் கூறுகிறது!
‘வய’வுக்கு ‘வலிமை’ப் பொருள் இருப்பதை , இளம்பூரணர் வருமாறு காட்டுகிறார்:
’வாள்வரி வேங்கை வயப்புலி (அகம். 69) என்பது, வலியுள்ள புலி என்பதாம்’.
வாள்வரி – ஒளியுள்ள கோடுகள்
வேங்கை – புலியில் ஒரு வகை (Felis tigris)
வலிமை – குறிப்புப் பொருள்

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|