புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
2 Posts - 1%
prajai
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
420 Posts - 48%
heezulia
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
28 Posts - 3%
prajai
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:31 pm

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து

'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:32 pm

[You must be registered and logged in to see this image.]

"அய்யா பெரியவங்களே! ஊர்க்காரங்களே! அதாகப்பட்டது நம்ம சடையத்தேவர் மகன் கட்டையனுக்கும் பெரியமூக்கி மக கருவாச்சிக்கும் ஒரு வெவகாரம் இருப்பதனால் நாளைக்கு எட்டுப்பட்டறையும் அரசமரத்தடியில் ஒண்ணுபோல வந்து கூடணும்னு நாட்டாமசாட்டச் சொல்லீருக்காக... நாட்டாமசாட்டச் சொல்லீருக்காக...". "கிணிமிட்டி கிணிமிட்டி கிணிமிட்டி"ங்கிற சத்தத்தோட சாட்டிக்கிட்டே போறான் தலையாரி.

புத்துக்குள்ள இருக்கிற பாம்புக பொசுக்குன்னு தலையத் தூக்கிப் பாக்குற மாதிரி ஊரே அண்ணாந்து பாக்குது.

"இது என்னாங்கடி கூத்து..? கல்யாணமாகி வெள்ளியோட வெள்ளி எட்டு... சனி ஒம்போது... ஞாயிறு பத்து... திங்க பதினொண்ணு... பதினோரு நாளுக்குள்ளயா புருசன் பொண்டாட்டிக்குள்ள புத்தியழிஞ்சு போகும்?"

"இது பொருந்தாத சம்பந்தமப்பா. கட்டையன் கருவாச்சியக் கொண்டு கரை சேக்கவா போறான்? ஒரே கொடத்துக்குள்ள தவளையும் பாம்பும் தண்ணி குடிக்க முடியுமா?"

"அப்பவே எம் புத்திக்குள்ள கவுளி கத்துச்சு. சடையத் தேவன் குடும்பத் துக்கும் பெரியமூக்கி குடும்பத்துக்கும் நாப்பது வருசப் பகையாச்சே; நல்லது கெட்டதுக்கே வாரதில் லையே; தண்ணி மண்ணி பொழங்கறதில்லையே; கட்டையன் கருவாச்சி கல்யாணத்துக்குப் பெறகாவது ரெண்டு குடும்பமும் கை நனைக்கட்டு மேன்னுதான் சாதிசனமெல்லாம் நெனச்சுச்சு; சாமி என்னா நெனைக்குதுன்னு தெரியலையே!"

தண்ணிக் கெணத்துல அரச மரத்தடியில ஊர் மந்தையில ஒழவு காட்ல இதே பேச்சாவே இருக்கு. சொக்கத்தேவன்பட்டி சொக்கத்தேவன் பட்டின்னு அந்த ஊருக்குப் பேரு. அந்த ஊரு இருந்தாலும் இல்லாமப்போனா லும் இந்திய சர்க்காருக்கு ஒரு கவலையுமில்ல.

கரையான்களாக் கூடிப் புத்து கட்டிக்கிட்ட மாதிரி சனங்களாக் கூடி ஆளுக்கொரு வீடு கட்டிக்கிட்டாக. கார வீடு கூர வீடு ஓட்டு வீடு தகர வீடு குச்சு வீடு குடுசு வீடுன்னு எண்ணி நூத்தி இருவது வீடுக. அதுல தேவமாரு வீடு தொண்ணூறு. பத்தோ பன்னண்டோ நாயக்கமாரு வீடு. கவுண்டரு, ஆசாரி, வளவிக்காரச் செட்டியாரு வீடுக வகைக்கு ஒவ்வொண்ணு. சலவக்காரக் குடும்பம் ஒண்ணு; சவரக் காரக் குடும்பம் ஒண்ணு. (இந்த ரெண்டு குடும்பமும் இல்லாட்டி அந்த ஊர்ல ரொம்ப மூஞ்சிக கல்யாணம் கண்ட்ருக்காது பாத்துக்குங்க.) ஒரு கோடாங்கி வீடு; ஒரு பூசாரி வீடு. இப்படிஇன்னுஞ் சில குடும்பங்க உதிரி உதிரியா. எண்ணிக்கையில ஒரு ஐந்நூறுக்குள்ள அடங் கும் ஆணும் பொண்ணும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:33 pm

ஆடு மாடுக நாய்க கோழிக பன்னிகளோட அப்பப்ப கரட்டுலருந்து எறங்கி வந்து கெடையாட்டங் குட்டியவோ கோழிக்குஞ்சவோ துண்டாத் தூக்கிட்டு ஓடிப்போற நரிகளையுஞ் சேத்தா அந்த ஊருக்கு உரியதுன்னு முந்நூறு முந்நூத்தம்பது தேறும் சீவராசிக.

அரச மரம் ஒண்ணு புளிய மரம் ஆறு பூவரசு நாலு புங்க மரம் ரெண்டு வேர்ல தேனா ஊத்துனாலும் இதுக்கு மேல வளர என்னா லாகாதுன்னு அஞ்சடியிலேயே நின்னுபோன குட்டி மரத்தச் சேர்த்து வேப்பமரம் ஒம்போது. இதுக எல்லாம் அந்த ஊருத் "தல விருட்சங்க.' கல்லப் புழிஞ்சு கஞ்சி குடிக்கிற மக்க; மானம் மரியாதிக்கு பயந்து பொழைக்கிற சனங்க.

விவசாயந்தான்; வெள்ளாமதான்; கூலி வேலதான். பல பேருக்கு ஒரே சொத்து ஒடம்புதான். கெணத்த வெட்டித் தண்ணி உண்டாக்கி வெவசாயம் பாக்கிற அஞ்சாறு "பெருந்தனக்காரங்க"ளத் தவிர, மத்தபடி எல்லாம் மழையைக் கும்புடுற மனுசங்க.

ஊரச் சுத்தி, மேற்குத் தொடர்ச்சி மல உண்டான மிச்சத்துல பொறந்த அஞ்சாறு கரடுக. கரடுகளச் சுத்தி வறண்டுபோன வங்காடுக. எல்லா ஊர்லயும் பேஞ்சு முடிச்சு இதுக்கு மேல பேய எடமில்லேன்னு தெரிஞ்சா, கடைசியா அந்த ஊருக்கு மேல வந்து கை கழுவிட்டுப் போகும் மேகம். எச்சா மிச்சா மழ தண்ணி பேஞ்சா சோளம், கம்பு, சாம, குருதவல்லி வெளயும். மழை பத்தும் பத்தாத காலத்துல கல்லுப்பயறோ கானப்பயறோ தட்டாம்பயறோ மொச்சையோ வெதைக்க வேண்டியதுதான். வெளைஞ்சா வீட்டுக்கு; வெளையாட்டி சாமிக்கு. கூடிருச்சு பஞ்சாயத்து.

"ஏம்ப்பா கட்டையா! கல்யாண மாப்ள கை கட்டி நிக்கிறியே! என்னா வெவகாரம்? நெஞ்சுல பூசுன சந்தன வாசன நிண்ட எடத்துல நிக்கிது. ஒங் கல்யாண வீட்ல கை நனச்ச ஈரம் காயல எங்க கையில. அதுக்குள்ள என்னா ஊரக் கூட்டி ஒப்பிக்க வந்திருக்கவன்?" "எனக்கும் எம் பொண்டாட்டி கருவாச்சிக்கும்..." காள மாட்டுக்குத் தொக்கம் விழுந்து தொண்ட கட்ன மாதிரி கரகரன்னு ஒரு குரல்ல கட்டையன் ஆரம்பிச்சதும்... "நிறுத்து"ன்னு சாட பண்ணிக் கையமத்துனாரு ஊர்ப் பெருசு உருமாப் பெருமாத் தேவரு.

"கட்டையா! அஞ்சே கால் ரூவா முறி வச்சுட்டு எதாருந்தாலும் பேசப்பா."

அப்பன ஒரு பார்வ பார்த்தான் கட்டையன். கல்லு மேல குத்தவச்சு, கைக் கம்ப நாடிக்கு அட குடுத்து, தொங்கு மீசயும் பார்வையும் பூமி பாக்க ஒக்காந்திருந்த சடையத்தேவர் சட்டையத் தூக்கி, இடுப்பத் தடவி வேட்டியிலிருந்த முடிச்ச ஒரு இழு இழுத்து, இருக்குற சில்லறையில காலு அர ஒண்ணுன்னு ஒவ்வொண்ணாப் பெறக்கியெடுத்து, ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா எண்ணி "இந்தாடா மகனே"ன்னு நீட்னாரு.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:34 pm

அப்பன் கையில இருந்த காச "வெடுக்"குன்னு புடுங்கி, இடுப்புல கட்ன துண்டச் சும்மாடு மாதிரி சுருட்டி அதையும் அஞ்சே கால் ரூவாவையும் பஞ்சாயத்தார் முன்னுக்க முறிவச்சு, வேல்கம்பு ஒண்ணு மடங்காமக் கீழ விழுந்து மடங்காம எந்திரிக்கிற மாதிரி, நெட்டுக்குத்தாக் காலுக்கு விழுந்து அப்பிடியே எந்திரிச்சான் கட்டையன்.

வாய்க்குள்ள கிடந்த மீசயப் பெறங்கையில ஒதுக்கிக்கிட்டே சொன் னாரு நாட்டாம... "இப்ப ஒப்பி". "எனக்கும் எம் பொண் டாட்டி கருவாச்சிக்கும் ஒத்துப்போகல; அத்துவிட்ருங்க".

சலசலசலன்னு சலம்பலாயிருந்த பஞ்சாயத்துல அரவம் அடங்கிப்போச்சு. காத்துக்கும் அரச மர எலைகளுக்கும் நடக்கிற கைகலப்புத் தவிர, வேறொண்ணுஞ் சத்தமில்ல. நாட்டாம, காவக்காரன், தலையாரியோட பெருசுகளும் உக்காந்திருக்குதுக, அரச மரத்துப் பிள்ளையார் கோயில் கல் திட்டுல.

காடு கரைக்கும் வெளியூருக்கும் போன ஆளுகளத் தவிர, ஊரே கூடி ஒக்காந்திருக்கு தரையில துண்டுதுணி விரிச்சும் விரிக்காமலும். "கல்யாணமாகி பத்தே நாள்ல அத்துவிட்டுற அளவுக்கு என்னப்பா குத்தம் பண்ணுனா கருவாச்சி?"

"அதையும் இதையும் கேட்டு அசிங்கப் படுத்தாதீக. சிலதைச் சொல்லலாம்; சிலதைச் சொல்ல முடியாது." அவன் சத்தந் தான் கொஞ்சத் துக்குக் கொஞ்சம் தணிஞ்சிருக்கே தவிர உள்ள இருக்கிற மப்பு கொறையல.

அவன் சொல்லுக்குக் கீழ உண்மை இருக்குதான்னு அவனையே உத்துஉத்துப் பாக்குறாரு நாட்டாமக்காரரு.

பெறவியிலயே ஒரு தப்பான பெறவி கட்டையன்னு பேசுவாக ஊருக்குள்ள. அவன் மூஞ்சிக்குள்ளயே ஒரு உறுப்புக்கும் இன்னொரு உறுப்புக்கும் சம்பந்தம் இருக்காது; ஒண்ணுக்கொண்ணு சண்ட புடிக்கும். பளபளன்னு நெத்தி பாறை மாதிரி அந்தப் பாறைக்குக் கீழே ஒடுங்கி நிக்கிற நரி மாதிரி இடுங்கி நிக்கிற கண்ணு. சின்ன மூக்கு; துவாரம் ரெண்டும் பெருசு. முருங்க மரத்துல அடபுடிச்சு நிக்கிற கம்பளிப் பூச்சிக மாதிரி மீச. அரண்மனப் பூட்டெடுத்துஅஞ்சறப் பெட்டிக்குப் பூட்ன மாதிரி சின்ன வாய்க்குப் பெரிய உதடு. பெருங்கொண்ட மண்ட. அதுல பூரான்ங்க குடும்பத்தோட உள்ள புகுந்து சுருண்டுக்கிட்டு வெளியேறவே மாட் டோம்னு வெவகாரம் பண்ற மாதிரி சுருட்ட முடி. ரொம்ப உசரமில்ல கட்டையன். அதுக்காக அவன் குட்டையனுமில்ல. கருந்தேக்கங் கட்டைய எழச்சு எழச்சுப் பண்ண மாதிரி நெஞ்சுக்கூடு. எண்ணெய் அப்பி அப்பிக் கருங்கல்லுச் செலைக்குக் கடைசியா ஒரு நெறம் வரும் பாருங்க... அந்தக் கெட்டிக் கறுப்பு கட்டையன் கறுப்பு. காதுக்குக் கீழ எடது கழுத்துல ஓணான் ஒண்ணு தலைகீழாத் தொங்குற மாதிரி ஒரு தழும்பு. பதினாறு பதினேழு வயசுல திருட்டு ஆடு பங்கு பிரிச்ச தகராறுல குத்துப்பட்டது.

அவன் வேட்டிய மடிச்சுக் கட்னாத்தான் விசேசம். நடந்து போற தூணுக காலுக ரெண்டும். அதுல கட்டுவிரியங் குட்டிக சுருண்டு கிடக்குற மாதிரி முடிச்சு முடிச்சா முண்டு கட்டிக் கெடக்கும் நரம்புக. அவன் நடந்து போனா ஊரே அத வேடிக்க பாக்கும்; நண்டான் சுண்டான் கண்டா பயந்து ஓடிஒளிஞ்சு போகுங்க.

அந்த ஊர்லயே பொதுவா யாரும் சிரிக்கிறதில்ல. அதுலயும் கட்டையன் சிரிச்சு யாரும் பாத்ததில்ல. அவன் எப்பவாச்சும் சிரிச்சிருந்தாலும், அந்தச் சிரிப்ப வாங்கி வெளிய அனுப்ப வேணுங்குற வசதியில்ல மூஞ்சியில.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:36 pm

"பஞ்சாயத்தக் கூட்டச் சொன்னவன் நீயி. வெவகாரம் ஒப்பிக்க வேண்டியவன் நீயி. தீர விசாரிக்காம எப்படித் தீர்ப்புச் சொல்றது? பிரச்னை என்னான்னு பேசப்பா சபையில." "அய்யா! போனாப் போகுது பரம்பரப் பகை தீரட்டுமேன்னுதான் கருவாச்சியக் கல்யாணம் பண்ணினேன். வாழ வந்த பெறகுதான் அவ வகிசி தெரியுது. அவ கஞ்சி காச்சிறால்ல; செவக்கி அடுப்பெரிக்கத் தெரியல. கடலெண்ண ஊத்தித் தாளிக்கச் சொன்னா, வேப்பெண்ண ஊத்தி வெளாவுறா. விடிஞ்சு எந்திரிக்கிறால்ல. "மேலு வலிக்குது மேலு வலிக்குது"ன்னு பொந்துக்குள்ள போன நண்டு மாதிரி பொத்திப் பொத்திப் படுத்துக்கிறா. எத்தன நாளக்கிப் பொம்பளஇல்லாத வீட்டுல அப்பனும் மகனுமா வாசத் தெளிக்கிறது? இவள எப்பிடி வச்சுப் பொழச்சு வாழ்றது? தீத்துவிட்டுருங்க."

"ஏய் கட்டையா! ஆம்பள பேசற பேச்சா இதெல்லாம்? புதுசா வந்த பொம்பள இப்படியப்படி இருக்கத் தானப்பா செய்வா. அப்பன் ஆசப்பட்டுப் பண்ண சம்பந்தம்டா. கிருத்திரியம் பண்ணிக் கெடுத்துறாத" காவக்காரச் சக்கணன் கோளாறு சொன்னாரு.

"ஆசப்பட்டுக் கொண்டாந்த எங்கப்பனுக்கு இவ என்ன பண்ணா தெரியுமா? வெந்த கறியெல்லாம் அகப்பையில மோந்து அவளாத் திண்டுபிட்டு, பல்லுப்போன ஆளுக்கு "இந்தா கெழவா"னு எலும்பா அள்ளிப் போட்ருக்காப்பா, உண்டா இல்லையான்னு கெழவனையே கேளுங்க."

கைத்தடியில ஊன்டியிருந்த நாடிய எடுக்காமலேயே இங்கிட்டும் அங்கிட்டுமாத் தலைய ஆட்டி "ஆமா ஆமா"ன்னாரு சடையத்தேவரு.

"ஏம்ப்பா சடையத்தேவா! இதுக்கு மேல கறி திண்டு நீ கல்யாணமா முடிக்கப் போற? சின்னஞ்சிறுசுகளச் சேத்து வைக்கிறத விட்டுப்புட்டு அவன்கூடவே சேந்து நீயும் அருவாத் தீட்னா எப்பிடி?" உருமாப் பெருமாத் தேவரு உண்மையிலேயே ஒரு நீதிமான். சடையத்தேவரக் கண்டிக்கிற வயசும் யோக்யதையும் இருக்கு அவருக்கு.

"சம்பந்தம் பண்ணின நானே சொல்றேன். இது சரியா வராது; முறிச்சுவிட்ருங்க". ஏற்கெனவே தொங்கிப் போன மீசையக் கீழ்மொகமாத் தடவிக்கிட்டே சத்தமாச் சொன்னாரு சடையத்தேவர். பிள்ளையார் கோயிலுக்குப் பிம்பக்கம் அரசமரத்து அடிமரத்த ஒட்டி, பொம்பளைக ரெண்டு மூணு பேரு குசுகுசுன்னு பேசுற சத்தமும் ஒரு பொம்பள விசும்பறதும் விட்டுவிட்டுக் கேட்டுக்கிட்டேயிருக்கு.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:37 pm

[You must be registered and logged in to see this image.]

"ஏ ஆத்தா பெரியமூக்கி! சடையத்தேவன் சம்பந்தக்காரி... இப்படி வாம்மா. அஞ்சே கால் ரூவா முறியக் கட்டி ஓங் கதைய நீ ஒப்பி ஓம் பங்குக்கு." "கருவாச்சியக் கேக்காம அவ ஆத்தாளக் கேட்டா எப்படி?" நியாயமான ஒரு கேள்வியப் போட்டாரு கடப்பாரக் கவுண்டரு.

"ஆத்தாகாரியக் கேட்டுட்டு அப்பறம் கேப்போம் மகள."

முந்தானைய எடுத்து, "சர்ரு புர்"ருன்னு மூக்கச் சிந்தி, அத உருட்டிச் சுருட்டி அதுலயே கண்ணையும் தொடச்சுக்கிட்டு ஓரஞ்சாரம் சரிசெஞ்சு இழுத்து இறுக்கி முந்தானைய இடுப்புல சொருகி, ஆம்பள இல்லாத வீடாப் போனது னால அண்ணன் மகன முறி வச்சுக் காலுக்கு விழுக வச்சு கண் ணெல்லாம் கொளம் கட்ட, பேச்சு வராம நின்னா பெரியமூக்கி, முத்தி வெடிச்சுப்போன முக்காக் கெழவி; களையெடுக்கக் குனிஞ்சு குனிஞ்சு கூன் விழுந்தவ. தலைக்கு எண்ணெ தடவாம பக்குவம் பாக்காம சிக்கு விழுந்து சிறுத்துச் சிறுத்துப் பாதி மண்ட கழிஞ்சுபோனவ.

"ஏம் பிள்ள பச்ச மண்ணுங்க. நான் கைக்குள்ளயே வச்சு வளத்த கருத்த கிளி. சூதுவாது என்னான்னுகூட தெரியாத வெவரமில்லாத வெள்ளிந்திச் சிறுக்கி. நாப்பது வருசப் பக அழியட்டுமேன்னுதான் கருவாச்சியக் கட்டிக் குடுத்தேன். தட்டுல வெத்தல பாக்கு வச்சுத் தகப்பனும் மகனுமா வந்தன்னைக்குத் தட்ட முடியல. பொழச்சுக்கடி ஆத்தான்னு அனுப்பிவச்சா இன்னைக்கிப் புத்தி மாறி வந்திருக்கு எம் பொண்ணு. ஆனா ஒண்ணு... அத்துக்கிட்டுப் போயி இன்னொரு பொழப்புப் பொழைக்க எங்க திரேகத்துலயும் நெஞ்சுக்கூட்லயும் சக்தி இல்ல சாமி. கையெடுத்துக் கும்புடறேன். எம்பொண்ணத் தீத்துவிட்றாதீங்க; சேத்துவைங்க."

"இந்தக் கெட்ட சாதிப் பயலக் கெஞ்சிக் கஞ்சி குடிக்காட்டி என்னா? அவன் போக்குலயே அத்துவிட்டுட்டுப் போடி. ஆம்பளைக்கு மூஞ்சியில மீசைன்னா பொம்பளைக்கு மொழங்கால்ல மீச" பெரியமூக்கி கும்புட்டு அழுகிறதக் காணப் பொறுக்காத வைத்தியச்சி, கருவாச்சியத் தாங்கிப் பிடிச்சுக்கிட்டே கத்துறா.

"ஏ கெழவி! வாயப் பொத்தி ஒக்காரு. இல்லாட்டி ஒன்னிய அஞ்சா ஆறா மடிச்சு அடுப்புல வச்சு எரிச்சுப்புடுவோம்." கட்டையன் கையாளுக பன்னியான் பேரன், சலம்பல்பாண்டி, ஒலக்கையன் மூணு பேரும் எந்திரிச்சுக் கத்த, மொதலக்கம்பட்டியிலிருந்து வந்திருந்த பெரியமூக்கி அண்ணன் மகன்ங்க நாலுபேரும் தவ்வி எந்திரிச்சாங்க இடுப்புல சூரியத் தடவிக்கிட்டு.

"ஏலே விருதாப் பயலுகளா! அது ஆம்பளையில்லாத வீடாயிருக்கலாம். ஆனா, இது ஆம்பளையில்லாத ஊரு இல்லடா; ஒக்காருங்க." காவக்கார சக்கணன் ஒரு அமட்டு அமட்டவும் மொனங்கிக்கிட்டே ஒக்காந்தாங்க ரெண்டு தரப்பும். "ஏம்ப்பா... கட்டையன் வெவகாரத்த அவன் சொல்லிட்டான். அதுக்குக் கருவாச்சி என்ன மறு வார்த்த சொல்றானு சேக்கணுமா இல்லையா. குக்கு நோவு வந்த கோழி மாதிரி பம்மிகிட்டேயிருந்தா எப்பிடி? வரச் சொல்லுங்கப்பா."

வைத்தியச்சியும் சோட்டுக்காரி பவளமும் கைத்தாங்கலாக் கூட்டியார, ஒரு மொளப்பாரி நடந்து வாரது மாதிரி வாராய்யா கருவாச்சி. "ஒம் பொழப்பா தாயி இப்படி போச்சு"னு ஊரே உச்சுக்கொட்டிப் பாக்குது அவள. கருவாச்சி ஒண்ணும் ஓங்குசாங்கான உயரம் இல்ல; குட்டச்சிதான். ஆனா எட்டூரு எல்லையில அப்படி ஒரு அம்சமான பொம்பள இல்ல.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:38 pm

சுத்திவச்சுத் தட்டித்தட்டி ஒப்புரவு பண்ணினது மாதிரி நெத்தி... கார்த்திகை மாசம் சுட்டியில எண்ணெய நெப்பி தீபம் போடுவமா இல்லையா, அப்படி ரெண்டு கண்ணு... மினுக்கு மினுக்குன்னு. சிறுக்கி மகளுக்கு அடிச்சுவச்ச கத்தி மாதிரி செவக்கிவச்ச மூக்கு. சும்மா மதுரை மீனாச்சிக்கு இருக்கிற மாதிரி சின்ன வாயி; செப்பு உதடு. என் உடம்புக்குத் தேவையானது போக ஒரு பொட்டுச் சத எச்சா மிச்சா எங்கயுமில்ல பாத்துக்குங்கங்கிற மாதிரி வழிச்சுவிட்ட தேகம்.

நெறம் கறுப்பு. கறுப்புல பல கறுப்பு இருக்கு. அட்டக் கறுப்பு, அடிச்சட்டிக் கறுப்பு, கெட்டிக் கறுப்பு, கரிக் கறுப்பு, கார்மேகக் கறுப்பு, காக்காக் கறுப்பு, குயில் கறுப்பு... இப்படி எத்தனையோ கறுப்பு. கருவாச்சி அழகுக் கறுப்பு, அம்சமான கறுப்பு. நவ்வாப்பழத் தோல்ல மினுமினுமினுன்னு ஒரு மின்னலடிக்குமா இல்லையா... அப்பிடிக் கண்ணுக்குக் குளுச்சியா ஒரு கறுப்பு. ஆத்தா மாதிரியே கருவாச்சியும் காது வளத்தவ; லவுக்க போடாத பொம்பள; சீலையச் சுத்தி வச்ச செப்புக் கொடம். ஒச்சம் சொல் லணும்னா ஒண்ணே ஒண்ணு சொல்லலாம்.

அவ கால் ரெண்டுலயும் கட்ட வெரலும் அடுத்த வெரலும் ஒண்ண ஒண்ணு தொட்டுக்கிட்டதில்ல. இந்த சென்மத்துல ஒண்ணு சேர மாட்டோம்னு ஒண்ணு வடக்க பாத்து நிக்கும்; ஒண்ணு தெக்க பாத்து நிக்கும். ரெண்டு வெரலுக்கும் மத்தியில குருவி ஒண்ணு கூடு கட்டிக் குஞ்சும் பொரிக்கலாம்.

"கல்லு மாதிரி இருந்தவ. ஒடஞ்சு உருமாறிப் போனாளப்பா. என்ன பாடுபடுத்துனானோ அந்த ஈனப் பய." பஞ்சாயத்துல அவுகவுக வாய்க்குள்ள பேசிப் பேசி உருகுறாக. "ஏம்மா கருவாச்சி! ஒம் புருசன் கட்டையன் ஒன்னியப் பத்தி அது இதுன்னு சொல்லி அத்துவிட்ருங் கங்கறான்; ஓந் தரப்பு நியாயத்த நீ சொல்லணுமா இல்லையா... சொல்லு."

ஒரு பேச்சும் பேசல கருவாச்சி. பொல பொலபொலன்னு அழுகுறா; பூமி பாத்து நிக்கிறா. இருதயம் வெடிச்சு வார்த்த கீர்த்த வந்துருமோன்னு முந்தானையைச் சுருட்டிப் பந்தாக்கி வாய்க்குள்ள வச்சு அமுக்கிக்கிர்றா. "என்னிய ஒரு கேள்வியும் கேக்கா தீங்க"ங்கற அர்த்தத்துல கையெடுத் துக் கும்பிட்டுக் கண்ணத் தொடச்சுக்கிர்றா. ஊரே அவளப் பாத்து மனசொடிஞ்சு நிக்க, சடையத்தேவரும் கட்டையனும் மட்டும் அவளக் கண்டும் காணாம ஆகாய மார்க்கமா பெராந்து கிராந்து பறக்குதான்னு பெறாக்குப் பார்த்து நிக்கிறாங்க.

"சின்னக் கழுத பாவம்; புத்தி மாறி நிக்கிதப்பா. பெறகு பாத்துக்கிரலாம்; பதினஞ்சு நாள் கெடு வச்சுப் பஞ்சாயத்தைக் கலைங்க."

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:38 pm

"கெடுவெல்லாம் எதுக்குக் கெடுவு? இன்னைக்கே தீர்ப்புச் சொல்லித் தீத்துவிட்ருங்கய்யா" அதுவரைக்கும் பொய்யாப் பொறுமை காத்திருந்த கட்டையன் ஆகாயத்துக்கும் பூமிக்குமாத் துண்ட ஒதறி வீசிப் பெருங்கொரல்ல பேசுறான்.

"ஏலே கட்டையா. தீத்துவிடறது லேசுப்பட்ட காரியம் இல்லப்பா. ஒரு பொம்பளயத் தள்ளிவைக்க அதுக்கு உண்டான காரணம் வேணுமா இல்லையா?"

கட்டையன் தவ்வி நாலடி தள்ளிப் போயி நின்னு கையக் கால ஆட்டிக் கத்துறான்... "இப்பச் சொல்றேன் கேட்டுக்குங்க. பொம்பளையத் தள்ளி வைக்கக் காரணந்தான வேணும். அவ பொம்பளையே இல்ல. போதுமா?"

"பொம்பளையா அவ இல்லாமப் போய்ட்டாளா இல்ல ஆம்பளையா நீ இல்லாமப் போய்ட்டியாடா" மொதலக்கம்பட்டி பெரியமூக்கி வகையறா சத்தம் விடவும், கட்டையன் கையாளுக வேட்டிய மடிச்சுக் கட்டி உள்ள தவ்வவும் வாய்ச் சண்டையும் தள்ளுமுள்ளும், தகராறும், கைகலப்பும், எழுத முடியாத சொல்லுமா புழுதி கௌம்பிருச்சு அங்க. "எம் மக பொழப்புல மண்ணு விழுந்திருச்சு"ன்னு மாரடிச்சுப் பொலம்புறா பெரியமூக்கி.

ஊருக்கு வெளிய கல்லுக்குழியில கல்லொடச்சுக் கிட்டிருந்த ஆளுகளுக்கே கேக்குது அவ கொடல் குலுங்கக் கத்துற சத்தம்.

பதினஞ்சு நாள் "கெடுவு" வச்சுக் கலஞ்சு போகுது பஞ்சாயத்து.

"இந்த ஊர்ல இருக்க வேணாம்டா சாமி"ன்னு அரசங்கெளையில அங்கங்க இருந்த பறவைக எல்லாம் பயந்து பறந்து போயி, செயமங்கலம் கம்மாக்குள்ள இருக்கிற கருவேல மரத்துல "கப்புச்சிப்"புன்னு அடையுதுக!

கருவாச்சியப் பொண்ணு கேட்டு வந்தன்னைக்குச் சந்தேகப்பட முடியல சடையத்தேவர! "தங்கச்சி பெரிய மூக்கி! நாப்பது வருசத்துக்கப்புறம் ஒன் வீட்டு வாசப்படி மிதிக்கிறேன் தாயி. ஒம் புருசன் என் சொந்த மச்சினன் உசுரோட இருந்த காலத்துல உண்டான பகை நம்ம கண்ணுள்ள காலத்துலயே இல்லாமப் போகட்டும். இன்னொரு பெறவி பெறக்கப்போறமா?

சொந்தபந்தம் இல்லேன்னு போயிருமா? ஏதோ நீ ஒண்ணப் பெத்துவச்சிருக்க. நான் ஒண்ணப் பெத்துவச்சிருக்கேன். சின்னஞ்சிறுசுகள ஒண்ணு சேத்து வச்சிடலாம்னு பாக்குறேன். தட்டுல வெத்தல பாக்கு வச்சுப் பழம் தேங்காயோட சடையத்தேவன் ஒனக்கு சம்பந்தியாக வந்திருக்கேன். ஏதோ காலம் போன கடைசியில கருவாச்சி கையில கஞ்சி குடிச்சுக்கறேன்.

மருகி நிக்காதே... வாம்மா வந்து தட்ட வாங்கிக்க."

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:39 pm

கொட்டத்துல சாணி குமிச்சு அள்ளிக்கிட்டிருந்த பெரியமூக்கி சடையத்தேவரக் கண்டதும், "யாத்தே! இது யாரு"ன்னு பதறி வெளக்கமாத்தக் கீழ போட்டு, சாணிக் கைய நெஞ்சிலடிச்சு, ஓடிப் போயிக் குளுதாணியில கையக் கழுவி "வாண்ணே"ன்னு வாய் நெறையச் சொல்லிட்டு, "கோ"ன்னு அழுது முந்தானையில மூஞ்சி பொத்தி ஒரலக் கட்டிப்புடிச்சு ஒக்காந்துட்டா.

கோழிக்குச் சோளம் போட்டுக்கிட்டிருந்த கருவாச்சி விசுக்குன்னு உள்ள ஓடி ஒளிஞ்சுபோனா. "நல்லதுல கூடு; இல்ல பொல்லதுல கூடுன்னு நாம நல்லதுல கூடுவோம். எம் மகன் கட்டையனுக்கு ஒம் மக கருவாச்சிய பொண்ணு கேட்டு வந்திருக்கேன். யோசிச்சு நல்ல முடிவு சொல்லு."

சடையத்தேவர் போயிட்டாரு; தட்டும் பழமும் இருக்கு திண்ணையிலே.

என்னத்த யோசிக்கிறது! ஆம்பளையில்லாத வீடு, ஒத்த மாடு பூட்டி ஏர் உழுகிற மாதிரி கடுசாவே கழிஞ்சுபோச்சு ஏம் பொழப்பு. நாளைக்கி ஆக்கிப் போடவும் சொந்தம் வேணும்; தூக்கிப் போடவும் சொந்தம் வேணும். ஆயிரம் பகையிருந்தாலும் ஏம் புருசனுக்கு மச்சினன்தானே சடையத் தேவரு. இந்தச் சம்பந்தம் கூடி வந்தா நாப்பது வருசப் பகை தீந்ததாவுமிருக்கும்; இந்தக் கழுதையக் கரை சேத்ததாவும் இருக்கும். அவ எங்கேயோ கண்காணாத தேசத்துல வாக்கப்பட்டுக் கண்ணக் கசக்கிறதவிட உள்ளூர்லயே இருந்தா நல்லதா இல்லையா. அவளுக்கு ஒரு கஞ்சித் தண்ணின்னா நான் இருப்பேன்; எனக்கு ஒரு சுக்குத்தண்ணின்னா அவ இருப்பா. ஒண்ணுக்கொண்ணு ஆதரவு.

என்ன ஒண்ணு... மருமகன நெனச்சாத்தான் "கறுச் கறுச்"சுன்னு நெஞ்சுல முள்ளு குத்துது. நான் பொத்திப்பொத்தி வளத்த புறாக் குஞ்சுக்கு அந்தப் பெராந்துப் பய ஒத்துவருவானா? அந்தக் கோயில் மாடு கடைசி வரைக்கும் எம் மகளுக்குக் கஞ்சி ஊத்துமா? ஏதோ சாகப்போற நாளையில சடையத் தேவருக்கு நல்ல புத்தி வந்திருச்சேன்னு நாளைக்கி மால மாத்தி மறுவீடு போனாலும் எம் பிள்ளை கடைசி வரைக்கும் அங்க ஒக்காந்து ஒல வைக்குமா?

இப்படி அதையும் இதையும் நெனச்சு நெனச்சு நெஞ்சு வீங்கிப்போனா பெரியமூக்கி. அவ நெனச்சதுல தப்பு இல்ல; அர்த்தமிருக்கு!

பெரிய மனுசியாகி நாலு வருசமானாலும் கூருபாடு கெடையாது கருவாச்சிக்கு; சூதுவாது தெரியாத அப்பிராணி. பொதுவா யாருகிட்டயும் கலகலன்னு பேச மாட்டா. ஆனா மரம் மட்டை அணில் குட்டி, குயில் குஞ்சு ஆடு மாடுககூட அவளாப் பேசிச் சிரிச்சுக்கிருவா. நிலா மழைன்னா உசுரு அவளுக்கு.

மேச்சக்காடு போனாலும் தட்டாம்பூச்சி புடிச்சு வெளை யாடிக்கிட்டே ஆடு மாடுகள வெள்ளாமக் காட்டுல விட்ருவா. காவக்காரன்கிட்ட வசவு வாங்கி வகுறு வீங்கி வீடு வந்து சேருவா.

அவ சின்னப் பிள்ளையா இருந்தபோது ஒரு சம்பவம் ஆகிப்போச்சு.

கொளம் அழியுதுன்னு இவ சோட்டுப் பிள்ளை களோட இவளும் மீன் புடிக்கப் போறேன்னு போனா. போனவ சேறு சகதி யோட பாவாடைய நெஞ்சு வரைக்கும் சுருட்டி "என்னை யும் பாரு என் அழகையும் பாரு"ன்னு பொழுசாய வீடு வந்து சேந்தா. "யாத்தா! அயிர மீன அள்ளிட்டு வந்திருக்கேன். சாமச்சோறு ஆக்கிக் கொழம்பு வச்சுக் குடு"ன்னு பாவாடைய அவுத்துவிட்டா தரையில. வீடெல்லாம் கொட்டிக் குமிஞ்சுபோச்சு. என்னான்னு வந்து எட்டிப் பாத்து நெஞ்சில அடிச்சு "அடிப் பாவி மகளே!"ன்னு அடி விட்டா பெரியமூக்கி.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:42 pm

[You must be registered and logged in to see this image.]

"அயிரமீன் புடிக்கப் போறேன்னு அரட்டா வளையாப் புடிச்சுட்டு வந்திருக்கியேடி. நீ எப்பிடித்தான் பொழைக்கப் போறியோ?"

அப்ப பத்துப் பதிமூணு வயசிருக்கும் கருவாச்சிக்கு. காய் முத்திக் கனியப் போறேங்கிற பருவத்துல "ஒதப்பழமா" இருக்குமா இல்லையா... அப்படி ஒரு பருவம். "கெணத்து மேட்லயே இருடி... எங்கேயும் போயிராத"ன்னு ஒரு சோளக்கருதையும் ஒடிச்சு தின்னக் குடுத்திட்டு, காஞ்ச கத்தாழ வெட்ட கரட்டுக்குப் போயிட்டா பெரியமூக்கி.

வந்து பாத்தா கல்லுமூக்கன் மடியில உக்காந்து, அவன் நரைச்சுப்போன தொங்குமீசையில சடை பின்னிக்கிட்டிருக்கா. அந்த எடுபட்ட அரைக்கெழவன் அவள மடியில வச்சு இங்குட்டும் அங்குட்டுமா இழுகிக்கிட்டிக் கான்; இவ சோளக்கருது ஒரு கையிலயும் அவன் மீச ஒரு கையிலயுமா வெவரமறியாம வெளையாடிக்கிட்டிருக்கா.

"ஏ நாயே! எடுபட்ட நாயே! நீயெல்லாம் ஒரு மனுசனா"ன்னு கத்தாழ மட்டைய எடுத்து வெரட்டுனவதான். ஓடியே போச்சு அந்த நாயி. 'கெழவன ஆத்தா ஏன் வஞ்சா... எதுக்குவஞ்சா?'ன்னு இன்னக்கித் தேதி வரைக்கும் தெரியாது அந்தச் சின்னக் கழுதைக்கு. மழை பேஞ்சாப் போதும், தகர வீடு ஒழுகும். ஒழுகுற எடத்துல சருவச் சட்டிய வச்சுட்டு ஒறங்கப்போனா இவ மட்டும் ஒறங்க மாட்டா. சட்டியில வந்து விழுகிற மழைக்கும் இவளுக்குமா பேச்சுவார்த்த போயிக்கிட்டேயிருக்கும்.

"ஏ மழையே! நீ பூமிக்கு வாரையில அழுகிறயா சிரிக்கிறியா?"ன்னு இவ கேக்க "பூமியில விழுந்து ஒடைஞ்சுபோறனே, அத நெனச்சு அழுகுறேன்"னு மழை சொல்ல "அதுக்குத்தான ஒனக்கு சருவச்சட்டி எடுத்துத் தொட்டி(ல்) கட்டி வச்சிருக்கேன்"னு இவ சொல்லஇப்பிடி இவ ஒண்ணு பேச, மழ ஒண்ணு பேச, விடிய விடிய நிக்காது வீட்டுக்குள்ள தெருக்கூத்து. இவ கதை இப்படீன்னா அவன் கதை வேற. கிருத்திரியம் புடிச்சவன்; உருட்டுப்பெரட்டுலயே

வண்டி ஓட்ற வல்லாளகண்டன். யாரு பேச்சும் கேக்குறதில்ல. அப்பன் பேச்ச மட்டும் ஊடமாட கேட்டுக்கிருவான். பொறுமை, நிதானமெல்லாம் "பொட்டணம் என்னா வெல?'ன்னு கேப்பான்.

ஒரு வேப்பமரத்துல பல்லுக்குச்சி ஒடிக்கணும்னு வச்சுக்குங்க... நீங்களும் நானும் என்ன பண்ணுவோம்? எட்டுன கொப்புல ஒரு குச்சிய இணுங்குவோம்; இல்லாட்டி தாந்த கொப்புல ஒரு தவ்வுத் தவ்வி, சிக்குன குச்சிய ஒடிச்சு பல்லு வெளக்குவோம். இவன் அப்படியாப்பட்ட ஆளில்ல. பல்லுக்குச்சி ஒடிக்கணும்னா வேப்பமரத்துல ஏறுவான். மேல ஒரு கெளையப் புடிச்சுக்கிட்டு கீழ இருக்கிற கெளைய "நங்கு நங்கு"ன்னு மிதிப்பான். அது சரசர சரசரன்னு முறிஞ்சு கொப்பும் கொழையுமா விழுகிற வரைக்கும் மிதிச்சுக்கிட்டேயிருப்பான். "ஏலே! என்னடா பண்ற?"ன்னு யாராச்சும் கேட்டா "பல்லுக்குச்சி ஒடிக்கிறேம்"பான். "என்னமோ யான பல்லு வெளக்கத்தான் குச்சி ஒடிக்கிறான் போலிருக்கு"ன்னு கேட்ட ஆளுக கேட்டது தப்புன்னு போயிருவாக.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக