புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_m10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_m10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10 
1 Post - 5%
heezulia
ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_m10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_m10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10 
1 Post - 5%
Barushree
ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_m10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_m10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_m10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_m10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_m10ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஏழை மாணவனின் ஏகாந்த வெற்றிப் பயணம்!

enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Fri Feb 08, 2019 7:39 pm

நம் பாரத தேசத்தில் உண்மையான திறமைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் ஒரு உண்மைத் திறமையைக் கவனிக்கவும், கௌரவிக்கவும் முற்படும் மனநிலைக்கு இங்கு பெரும் பஞ்சமே! சினிமாவையும், சீரியலையும், கிரிக்கெட்டையும், அரசியல் கூத்துகளையும் மட்டுமே பெரும்பாலனவர்களால் கூர்ந்து கவனிக்கவும், பேசவும், கொண்டாடவும் முடிவது நம் தேசத்தின் துரதிர்ஷ்டமே. உலகமே கவனித்துக் கொண்டாடிய பிறகும் பல இந்தியத் திறமைகள் அதிக மக்கள் கவனத்திற்கு வராமலேயே போய்விடுவதற்கு ஒரு உதாரணம் இதோ!

கர்னாடகத்தில் மாண்டியா மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் ஒரு ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்த ப்ரதாப் என்ற மாணவன் கிராமப் பள்ளிக்கூடத்திலேயே படித்து வளர்ந்தவன். விஞ்ஞானத்தில் பேரார்வம் கொண்ட அந்த மாணவன் பல போட்டிகளில் பரிசுகள் பெற்றவன். பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்ய ஆசைப்பட்ட அந்த இளைஞனுக்கு அதைச் செய்யும் அளவு பண வசதி இல்லை. பல நாட்களில் தந்தையிடம் பத்து ரூபாய் கூட இல்லை என்பதைப் பார்த்து வளர்ந்தவன் அவன். அதனால் பணமாகக் கிடைத்த பரிசுகளை வைத்து அவன் ஓரளவு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டான். மாவட்ட விஞ்ஞானக் கண்காட்சிகளில் கலந்து கொண்டு சில பரிசுகளும், வெற்றிகளும் அவன் கண்டான்.

பட்டப்படிப்புக்கு மைசூரில் ஒரு கல்லூரியில் சேர்ந்த அவன் தனக்கு விருப்பம் இருந்த விஷயங்களில் சாதித்த, எழுதிய விஞ்ஞானிகளைத் தொடர்பு கொண்டான். ஆரம்பத்தில் அவனிடம் பேசப் பெரிய ஆர்வம் காட்டாத விஞ்ஞானிகள் அந்தக் கல்லூரி மாணவனின் அறிவின் ஆழத்தைத் தெரிந்து கொண்ட பின் நன்றாகப் பேசினார்கள். அவர்களிடம் தன் ஆர்வத்தைச் சொல்லி சந்தேகங்களைக் கேட்டு அறிவைப் பெருக்கிக் கொண்டான். சில ஆராய்ச்சிகள் செய்தான். அதற்கு அவன் ஆசிரியர்கள் தங்களால் முடிந்த சிறு பண உதவிகளைச் செய்தார்கள்.

அந்தச் சமயத்தில் 2017ஆண்டு நவம்பர் 29 முதல் டிசம்பர் 2 வரை டோக்கியோவில் நடக்க இருந்த சர்வ தேச ரோபோடிக்ஸ் விஞ்ஞானக் கண்காட்சி பற்றி அவனுடைய பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார். அந்தக் கண்காட்சியில் பங்கு கொள்ள ஒரு புதிய கண்டுபிடிப்பு செய்து அது குறித்த சிறிய கட்டுரையும் வீடியோவையும் அந்தத் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ப்ரதாப் உற்சாகத்துடன் அனுப்பி வைத்தான். சுமார் ஆயிரம் நபர்களை மட்டுமே அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். ப்ரதாப்பும் ஆயிரத்தில் ஒருவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். அந்தச் சர்வதேசப் போட்டிக்கு அவன் அழைக்கப்பட்டான். ப்ரதாப் சந்தோஷப்பட்டாலும் அடுத்து ஆக வேண்டிய வேலைகள் அவனால் எளிதில் நிறைவேற்ற முடியாதவையாக இருந்தன.

முதலாவது அவன் ஒரு ஐஐடி பேராசிரியரிடம் ஒரு கடிதம் வாங்க வேண்டி இருந்தது. அடுத்தது அந்தக் கண்டுபிடிப்பைச் செய்து முடிக்க பணம் நிறைய தேவை இருந்தது. கடைசியாக ஜப்பான் போய் வர ஆகும் செலவுக்கும் அவனிடம் பணம் இல்லை.

முதலில் சென்னை சென்று ஒரு ஐஐடி பேராசிரியரைச் சந்தித்தான். அவர் அவனை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. முன்பின் தெரியாத அவனுக்குக் கையெழுத்திட்ட கடிதம் தர மறுத்து விட்டார். ப்ரதாப் கையெழுத்து வாங்காமல் மைசூர் திரும்ப மனமில்லாமல் சென்னை ப்ளாட்பாரங்களில் தங்கினான். உடுத்தி வந்த அதே உடையை தெருவோரக் குழாய்நீரில் துவைத்துப் போட்டுக் கொண்டு தினமும் சென்று அந்த ஐஐடி பேராசிரியர் வீட்டு வாசலில் நின்றான். இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் அவர் அவனைக் கவனித்தார். “ஊருக்குச் சென்று திரும்பி வந்து விட்டாயா?” என்று கேட்ட அவரிடம் ”ஊருக்கே செல்லவில்லை. இங்கேயே ப்ளாட்ஃபாரங்களில் தங்கி இருந்தேன்” என்று ப்ரதாப் சொன்னான்.

அதன் பிறகு தான் அவர் அவன் கண்டுபிடிப்பைப் பற்றியும், நோக்கம் பற்றியும் விசாரித்தார். தன் கண்டுபிடிப்பைப் பற்றிச் சொன்ன ப்ரதாப் அந்த சர்வதேசப்போட்டியில் கலந்து கொண்டு தாய்நாட்டிற்கு ஏதாவது ஒரு பதக்கம் வாங்கித் தர வேண்டும் என்று ஆசைப்படுவதாகத் தெரிவித்தான். அவன் சொன்னதில் மனம் இளகிய அவர் அவனுக்கு அவன் விரும்பியபடியே கடிதம் தந்து வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

அடுத்ததாக கண்டுபிடிப்புக்கருவி உருவாக்க ஆகும் செலவு அவன் தகுதிக்கு மீறியதாக இருந்தது. விபத்துகளின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படியான ட்ரோன் என்று சொல்லப்படும் ஒரு ஆளில்லா பறக்கும் ரோபோ கருவி உருவாக்க வேண்டியிருந்த பாகங்கள் விலை அதிகமானவை. அவன் மும்பை சென்று அங்கே மின் கழிவுகள் விற்கும் சந்தையில் தேடித் தேடி மலிவு விலைக்குக் கிடைத்த பாகங்களை வாங்கி அந்த ட்ரோன் ரோபோவை உருவாக்கினான்.

கடைசியில் விமானச் செலவுக்கான பணம் வாங்க ஒரு மடத்து சுவாமிஜியை அணுகினான். அவன் தன் கண்டுபிடிப்பின் மூலம் தாய்நாட்டுக்கு ஒரு பதக்கமாவது பெற்றுத் தர வேண்டும் என்று விரும்புவதாகச் சொன்னவுடன் அந்த சுவாமிஜி அவன் விமான டிக்கெட் செலவுக்கான தொகையைத் தந்து உதவினார்.

தன் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்தன என்று ப்ரதாப் நினைத்த போது புதிதாக ஒரு பிரச்சினை முளைத்தது. விமானத்தில் பயணம் செய்பவர் 47 கிலோ எடை லக்கேஜ் மட்டுமே கொண்டு செல்ல முடியும். ஆனால் ப்ரதாப்பின் ரோபோ கருவியே 360 கிலோ இருந்தது. அதைப் பத்து பெட்டிகளில் பிரித்து அவன் வைத்திருந்தான். அதைக் கொண்டு செல்லும் செலவு அவன் டிக்கெட் செலவை விட இருமடங்குக்கும் அதிகமாக இருந்தது. அவன் எதிர்பாராத இந்தச் செலவுக்கு என்ன செய்வது என்று வருத்தத்தில் மூழ்கிய போது அவன் தாயார் தன் கழுத்தில் இருந்த ஒரே தங்கச் சங்கிலியை அவனிடம் கழற்றிக் கொடுத்தார். அதை விற்றுத் தான் அவன் பயணம் செய்ய வேண்டி வந்தது.

பயணத்தில் ஒவ்வொரு விமான நிலையத்திலும் அவன் தன் பெட்டிகளைப் பிரித்து அவர்களுக்குக் காட்டி மறுபடி அதைக் கட்ட வேண்டி வந்தது. தனியாகப் பயணம் செய்ய வேண்டி வந்த அவனுக்கு விமானப் பயணம், விதிமுறைகள் எல்லாம் புதிது. ஹாங்காங் அர்வதேச விமானநிலையத்தில் சோதனைக்குச் சென்ற அவனுடைய உடைமைகள் கண்டெடுக்க அவன் சிரமப்பட்டுத் தேட வேண்டியதாய்ப் போயிற்று. அவன் தாய் அவனுக்காகக் கட்டிக் கொடுத்த உணவுகளையும் அங்கே பறி கொடுத்தான். ஒருவழியாக அவன் கருவியின் அத்தனை பெட்டிகளையும் காப்பாற்றி மீட்டு எடுத்துக் கொண்டு ஜப்பான் போய்ச் சேர்ந்ததில் அவனுக்கு மகிழ்ச்சி.

ஆனால் அந்த மகிழ்ச்சியும் அவனுக்கு நீடிக்கவில்லை. காரணம் விமான நிலையத்திலிருந்து டோக்கியோவின் அந்த விஞ்ஞானக் கண்காட்சி இடத்துக்குச் செல்ல ஜப்பான் புல்லட் ரயிலில் இரண்டரை மணி நேரம் தான் என்றாலும் டிக்கெட் விலை மிக மிக அதிகம். அந்த அளவு அவனிடம் பணம் இல்லை. கஷ்டப்பட்டு கூகுளில் தேடியதில் மற்ற உள்ளூர் ரயில்கள் 12 மாற்றி மாற்றிச் சென்றால் இரண்டு நாளில் அவன் அங்கே போய்ச் சேரலாம். வேறு வழியில்லாமல் அவன் அதையே தேர்ந்தெடுத்தான். ஆனால் உள்ளூர் ரயில்களில் அவனுடைய பத்து பெட்டிகள் ஏற்றி இறக்குவது அத்தனை சுலபமாக இல்லை. சில இடங்களில் அவன் முழுவதும் ஏற்றி விடுவதற்கு முன்பே ரயில் கிளம்பி விடும். அடுத்த ஸ்டேஷனில் இறங்கித் திரும்ப இன்னொரு ரயிலில் வந்து மீதமுள்ள பெட்டிகளை ஏற்றிக் கொண்டு வர வேண்டி வந்தது. ஒருவனே அந்தச் சுமைகளைச் சுமப்பதும், திரும்பத் திரும்பச் சென்று வருவதும் பெரிய கொடுமையாக ப்ரதாபுக்கு இருந்தது. ஒரு கட்டத்தில் பேசாமல் திரும்பிப் போய் விடலாமா என்று கூட அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. ஆனால் இத்தனை கனவு கண்டு, இத்தனை முயற்சி எடுத்து விட்டுத் திரும்பப் போவதா என்ற எண்ணமே அவனைத் தாக்குப் பிடிக்க வைத்தது. எப்படியோ கஷ்டப்பட்டு ஒருவழியாக அந்தப் பெட்டிகளுடன் அந்தக் கண்காட்சிக்கு முன் தினம் சென்று சேர்ந்தான். அங்கேயும் அத்தனை பெட்டிகளையும் சுமந்து கொண்டு ஏழெட்டு கிலோமீட்டர் அவன் நடக்க வேண்டி வந்தது.

அங்கே சென்று சேர்ந்த பிறகு அந்தக் கண்காட்சி ஏற்பாட்டுக் குழு அவனை நன்றாக கவனித்துக் கொண்டது. ஐந்து நாட்கள் அவன் அங்கே இருந்தான். அவனிடம் இருந்தது ஒரே நல்ல உடை. அதையே அவன் தினமும் துவைத்துப் போட்டுக் கொண்டான். ஆனால் கண்காட்சிக்கு வந்த அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் நேரத்துக்கு ஒரு சிறந்த உடை உடுத்திக் கொண்டு வந்தார்கள்.

கண்காட்சி தொடங்கியது. அங்கு முடிவில் மொத்தம் 120 பங்கேற்பாளர்கள் இருந்தார்கள். முதல் எழுபதற்குள் ஒரு இடம் கிடைத்தாலே பெரிய விஷயம், முப்பதுக்குள் வருவது பெருமை என்ற நிலைமை இருந்தது. கடைசியில் இருந்து அறிவித்துக் கொண்டே வந்தார்கள். எழுபதிலிருந்து முப்பதுக்குள் அவன் இடம் இல்லை. பின் அறிவித்த பெயர்களிலும் அவன் பெயர் இல்லை. பிறகும் இல்லை. கடைசியாக ”முதலிடம் இந்திய நாட்டைச் சேர்ந்த ப்ரதாப்” என்ற அறிவிப்பைக் கேட்ட போது அழைத்தது தன் பெயரைத் தானா என்று அவன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. ,முதலிடம் தங்கக் கோப்பை பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசு எல்லாவற்றையும் விட அவனை அழைத்து அவன் இந்திய தேசியக் கொடியைப் பிடித்துக் கொள்ள இந்திய தேசிய கீதம் பாடப்பட்டது ப்ரதாபுக்கு மிகப் பெருமையாக இருந்தது. கண்கலங்க அவன் நம் தேசியக் கொடியைப் பிடித்துக் கொண்டு நிற்க, எல்லோரும் எழுந்து நின்றது தேசத்துக்குக் கிடைத்த கௌரவமாக அவனுக்குத் தோன்றியது. பெரிதாகக் கனவு கண்டாலும் இத்தனை பேர் போட்டியிட இத்தனை கஷ்டங்களுக்குப் பிறகு இந்த மாபெரும் வெற்றி பெற்றதும், தாய்நாட்டுக்கு இந்தக் கௌரவம் வாங்கித் தந்ததும் மறக்க முடியாத அனுபவமாக அவன் மனதில் தங்கியது.

வெற்றி பெற்ற அவனை நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய விஞ்ஞானி ஒருவர் தன் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தார். ஒரு நாளைக்கு இந்தியப்பணம் பதினாறு லட்சம் சம்பாதிக்கின்ற வெற்றிகரமான விஞ்ஞானி அவர். அவர் அரை நாளை அவனுக்காக ஒதுக்கியதும், பாராட்டி விருந்தளித்ததும் அறிவுக்கும் திறமைக்கும் அந்த மனிதர் மதித்த விதத்தை அவனுக்கு உணர்த்தியது.

திரும்பி வருகையில் ஓரிடத்தில் இந்தியாவில் பூனாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர் அவனை அடையாளம் கண்டு கொண்டார்கள். அவன் பரிசு வாங்கியதைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் அவர்கள். தங்கள் நாட்டுச் சிறுவன் வெற்றியில் மனம் மகிழ்ந்த அவர்கள் அவன் நிதி நிலைமையை உணர்ந்து இந்தியப் பணம் முப்பதாயிரத்தை அவனுக்கு அன்பளிப்பாக அளித்தார்கள். உள்நாட்டில் வேறு மாநிலம் வேறு வேறுபாடுகள் என்று நிறைய இருந்தாலும் வெளிநாட்டில் இருக்கையில் என் தேசத்தவன் என்கிற எண்ணமே பிரதானமாக வருகிறது என்பதற்கு அங்கே ப்ரதாப் ஒரு நல்ல உதாரணத்தைப் பார்த்தான். அவனை டாக்சியில் ஏற்றி விமானநிலையத்திற்கு அவர்கள் தங்கள் செலவிலேயே அனுப்பி வைத்தார்கள். செல்லும் போது அந்தப் பெட்டிகளைத் தானே சுமந்து செல்ல வேண்டியிருந்ததையும் இப்போது அவர்கள் தயவில் சௌகரியமாய் செல்வதையும் எண்ணி ப்ரதாப் கண்கலங்கினான். பரிசுத் தொகை பத்தாயிரம் அமெரிக்க டாலர் அறிவிக்கப் பட்டிருந்த போதும் அது கைக்கு வர இன்னும் காலம் இருக்கிறது என்பதால் அந்தத் தம்பதியரின் பணமும், உதவியும் அவனுக்குப் பேருதவியாகவும், மனநிறைவாகவும் இருந்தது.

வெற்றியோடு திரும்பிய ப்ரதாபை இந்திய மீடியாக்கள் அதிகம் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவன் குடும்பமும், கல்லூரியும், அவனைக் கொண்டாடின. 2018 ஜூன் மாதம் ஜெர்மனியில் நடந்த விஞ்ஞானக் கண்காட்சியில் கலந்து கொண்டு அவன் அங்கும் தங்கப் பதக்கம் வாங்கினான். அங்கிருந்து இந்தியா திரும்புகையில் விமானத்தை அவன் தவற விட்டு விட்டான். ஆனால் அவன் சமீபத்தில் தங்கப்பதக்கம் வென்ற இளம் விஞ்ஞானி என்பதை அறிந்த அவன் பயணம் செய்யவிருந்த ஏர் ஃப்ரான்ஸ் ஏர்வேஸ் மேனேஜர், அவனை இன்னொரு விமானத்தில் பயணம் செய்ய அனுமதித்ததோடு அவனைச் சாதாரண வகுப்பிலிருந்து மாற்றி முதல் வகுப்பில் பயணம் செய்ய ஏற்பாடும் செய்து கொடுத்தார். இத்தனையும் செய்ததுடன் அவனுக்குப் பூங்கொத்து ஒன்றைப் பரிசளித்து அவர் கௌரவப்படுத்தியது திறமைக்கும், அறிவிற்கும் உலகமெங்கும் இருக்கும் மரியாதையைத் தெரிவிக்கிறது.

அதன் பின் ஃப்ரான்சில் நடந்த ஒரு கண்காட்சியிலும் இளம் விஞ்ஞானி என்ற விருதைப் பெற்ற ப்ரதாபுக்கு உலகமெங்கும் பல வேலை வாய்ப்புகள் இப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. வருடத்திற்குக் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அழைப்புகள் பல இருக்கின்றன. ஆனால் ப்ரதாப் தாய்நாட்டிலேயே தன் திறமையும், உழைப்பும் பயன்பட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறான். பல்வேறு சொற்பொழிவுகளுக்கு அவன் வெளிநாடுகள் சென்றாலும் வேலைக்கு அங்கே செல்லப் பிரியப்படவில்லை.

அவன் அப்துல்கலாமிடம் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறான். அவர் கண்ட கனவு அவனையும் தொட்டிருக்கிறது. இந்த நாட்டில் எத்தனையோ குறைகள் இருந்தாலும், மோசமான அனுபவங்கள் இருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தக் கூடாது, இந்த நாட்டிற்கு இனியும் பெருமை தேடித்தரவேண்டும் என்கிற எண்ணம் அவனிடம் வலிமையாக இருக்கிறது.

அவன் சகமாணவர்களுக்குச் சொல்லும் அறிவுரை இது தான்: “அதிக மதிப்பெண்கள் பெறுவதையே குறியாக இருந்து விடாதீர்கள். மார்க் ஷீட்டில் மதிப்பெண்கள் பெறுவதை விட மூளையில் மதிப்பெண் பெறுவதை முக்கியமாக நினையுங்கள். என்ன படிக்கிறீர்கள், எத்தனை படிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. என்ன உங்கள் அறிவில் உண்மையாகவே நுழைகிறது, அதில் எத்தனை உங்களுக்குப் புரிகிறது என்பது முக்கியம். கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் பாதி நேரமாவது முழு ஈடுபாட்டுடன் படியுங்கள். காலத்தை வீணாக்காதீர்கள்”

இறைவன் ஒருவனுக்கு ஒரு தனிப்பெரும் திறமை தந்திருந்தால் அந்தத் திறமையை வைத்து அவன் வெற்றி பெற உதவிகளையும் தந்து விடாமல் இருப்பதில்லை. ஆனால் அந்த உதவிகளைப் பெறுவதற்கு முன் அந்தத் திறமையாளன் அதற்காக சகலமும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். அதற்கான அக்னியும், முயற்சியும் அவன் இதயத்தில் எப்போதும் குறைந்து விடக்கூடாது. தனி ஒருவனாக நின்று உழைத்து, தாக்குப்பிடித்துச் சாதித்துக் காட்டிய பிறகே இறைவன் உதவிக்கரத்தை நீட்டுகிறான் என்பதற்கு ப்ரதாபின் வெற்றியே ஒரு நல்ல உதாரணம்!

இது போன்ற இளைஞர்களே இந்த நாட்டின் பொக்கிஷங்கள். இவர்கள் திறமையை அங்கீகரிப்பதும், கௌரவிப்பதுமே இது போன்ற பொக்கிஷங்கள் இந்த தேசத்தில் மேலும் பெருக நம்மைப் போன்ற பொதுமக்கள் செய்யக்கூடிய நல்ல காரியங்கள். ஒரு சினிமாவில் நடித்தால், ஒரு சீரியலில் நடித்தால், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்து போனால் கிடைக்கிற அங்கீகாரம் ப்ரதாப் போன்ற ஆளுமைகள் சாதித்துக் காட்டிய பின்னும் நம் நாட்டில் கிடைப்பதில்லை என்பதே வருந்த வைக்கும் உண்மை!

நாம் எப்போது திருந்துவோம்?

என்.கணேசன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 08, 2019 9:04 pm

Code:
இது போன்ற இளைஞர்களே இந்த நாட்டின் பொக்கிஷங்கள். இவர்கள் திறமையை அங்கீகரிப்பதும், கௌரவிப்பதுமே இது போன்ற பொக்கிஷங்கள் இந்த தேசத்தில் மேலும் பெருக நம்மைப் போன்ற பொதுமக்கள் செய்யக்கூடிய நல்ல காரியங்கள். ஒரு சினிமாவில் நடித்தால், ஒரு சீரியலில் நடித்தால், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்து போனால் கிடைக்கிற அங்கீகாரம் ப்ரதாப் போன்ற ஆளுமைகள் சாதித்துக் காட்டிய பின்னும் நம் நாட்டில் கிடைப்பதில்லை என்பதே வருந்த வைக்கும் உண்மை![size=17][/size]
[size=17][/size]
நாம் எப்போது திருந்துவோம்? 

உண்மைதான் அய்யா நீங்கள் கூறியது.

இந்த செய்தி எந்த ஊடகத்திலும் வரவில்லை. உங்கள் பதிவில்தான் முதல் முறையாக படிக்கிறேன்.
ஆம் எப்போது நாம் திருந்துவோம்.?

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

shivi
shivi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019

Postshivi Sat Feb 09, 2019 6:09 am

நானும் முதல் முறையாகத் தான் இந்த இளம் விஞ்ஞானியைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். படிக்கையில் கண்கலங்கியது. அரசியல்வாதிகள் செய்யும் கோமாளித்தனங்களையும், சமூகத்தில் நடக்கும் மூன்றாந்தர செயல்களையும் விலாவரியாகப் பேசும் ஊடகங்கள் இது போன்ற உயர்வான மனிதர்களையும், செயல்களையும் கண்டு கொள்வதில்லை. மக்களும் அப்படித் தான். உங்களுடைய இந்தக் கட்டுரைக்குக் கூட மக்களிடம் பாதிப்பு இருக்காது. கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டே இருப்பார்கள் என்பது தான் கசப்பான உண்மை.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

shivi
shivi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019

Postshivi Sat Feb 09, 2019 3:54 pm

ஐயா. ஈகரையிலேயே 17 வயது பையனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயதுப் பெண் என்ற செய்திக்கு 16  மறுமொழிகள் 1095 பார்வைகள் கிடைத்திருக்கிறது கண்ணில் பட்டது. உங்களுடைய இந்த உயர்ந்த கட்டுரைக்கு? ஆதங்கத்தினால் கூறுவதைத் தவறாக நினைக்காதீர்கள். இது தான் இன்றைய யதார்த்தம். நல்லது யாருக்கும் வேண்டாம். மலிவு ரசனை தான் அதிகம் இருக்கிறது

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 09, 2019 9:33 pm

shivi wrote:ஐயா. ஈகரையிலேயே 17 வயது பையனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயதுப் பெண் என்ற செய்திக்கு 16  மறுமொழிகள் 1095 பார்வைகள் கிடைத்திருக்கிறது கண்ணில் பட்டது. உங்களுடைய இந்த உயர்ந்த கட்டுரைக்கு? ஆதங்கத்தினால் கூறுவதைத் தவறாக நினைக்காதீர்கள். இது தான் இன்றைய யதார்த்தம். நல்லது யாருக்கும் வேண்டாம். மலிவு ரசனை தான் அதிகம் இருக்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1292995

மிகவும் வருந்த தக்க விஷயம்தான்.
உலகமே சென்சேஷனல் நியூஸ் பக்கம்தான் போகிறது,
ஆண்பிள்ளைகள் ஷேவிங் பிளேடுக்கும் அரைகுறை ஆடை உடுத்திய பெண் படம் போட்டால்தான் 
விற்பனை அதிகரிக்கிறது.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 11, 2019 8:24 pm

Code:

அதன் பின் ஃப்ரான்சில் நடந்த ஒரு கண்காட்சியிலும் இளம் விஞ்ஞானி என்ற விருதைப் பெற்ற ப்ரதாபுக்கு உலகமெங்கும் பல வேலை வாய்ப்புகள் இப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. வருடத்திற்குக் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அழைப்புகள் பல இருக்கின்றன. ஆனால் ப்ரதாப் தாய்நாட்டிலேயே தன் திறமையும், உழைப்பும் பயன்பட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறான். பல்வேறு சொற்பொழிவுகளுக்கு அவன் வெளிநாடுகள் சென்றாலும் வேலைக்கு அங்கே செல்லப் பிரியப்படவில்லை.

அவன் அப்துல்கலாமிடம் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறான். அவர் கண்ட கனவு அவனையும் தொட்டிருக்கிறது. இந்த நாட்டில் எத்தனையோ குறைகள் இருந்தாலும், மோசமான அனுபவங்கள் இருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தக் கூடாது, இந்த நாட்டிற்கு இனியும் பெருமை தேடித்தரவேண்டும் என்கிற எண்ணம் அவனிடம் வலிமையாக இருக்கிறது.

அவன் சகமாணவர்களுக்குச் சொல்லும் அறிவுரை இது தான்: “அதிக மதிப்பெண்கள் பெறுவதையே குறியாக இருந்து விடாதீர்கள். மார்க் ஷீட்டில் மதிப்பெண்கள் பெறுவதை விட மூளையில் மதிப்பெண் பெறுவதை முக்கியமாக நினையுங்கள். என்ன படிக்கிறீர்கள், எத்தனை படிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. என்ன உங்கள் அறிவில் உண்மையாகவே நுழைகிறது, அதில் எத்தனை உங்களுக்குப் புரிகிறது என்பது முக்கியம். கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் பாதி நேரமாவது முழு ஈடுபாட்டுடன் படியுங்கள். காலத்தை வீணாக்காதீர்கள்”

இதைப் படிக்கும் போது பிரமிப்பும் மறுபக்கம்
வேதனையையும் கடைசியில் மகிழ்ச்சியும்
சந்தோஷமும் மேலிட்டது.
இந்த மாணவனை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
திறமைசாலிக்கு இந்தியாவில் மதிப்பு இல்லை.
கண்டுகொள்ளாமல் இருப்பது போன்ற
பல பிரச்சனைகள் உள்ளது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 07, 2019 11:09 pm

:வணக்கம்:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
shivi
shivi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 03/02/2019

Postshivi Tue Jan 04, 2022 10:09 am

அந்த மாணவன் ஏமாற்றுப் பேர்வழி என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவனை நம்பி எல்லோருக்கும் அவனை அறிமுகம் செய்து வைத்த கன்னட நடிகர் ஒருவர் பின் அவன் பொய்யன் என்பதை அறிந்து அதை சமீபத்தில் பகிரங்கமாக அறிவித்து இருக்கிறார். அவன் அந்த டோக்கியோ கண்காட்சிக்குப் போனது உண்மை, அங்கே பல இடங்களில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது உண்மை என்றாலும் மற்றவை எல்லாம் பொய் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. டோக்கியோ கண்காட்சிக் குழுவினருக்கு எழுதிக் கேட்டு அது பொய் என்று ஒருவர் உறுதிப்படுத்திக் கொண்டு அந்த மின்னஞ்சலையும் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். இதை திரு.என்.கணேசன் அவர்களுக்கும் நான் மின்னஞ்சலில் தெரிவித்தேன். அவரும் அதை உறுதிப்படுத்திக் கொண்ட பின் எனக்கு நன்றி தெரிவித்து, தன் வலைப்பூவில் அவனைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையை நீக்கி விட்டார்.

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 04, 2022 2:06 pm

அதிர்ச்சிகரமாக உள்ளது.
நல்ல காரியம் செய்தீர்கள்

@shivi

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 04, 2022 2:14 pm

Code:
இந்த செய்தி எந்த ஊடகத்திலும் வரவில்லை. உங்கள் பதிவில்தான் முதல் முறையாக படிக்கிறேன்.
ஆம் எப்போது நாம் திருந்துவோம்.?

ரமணியன்

எந்தன் மறுமொழி அன்றே !

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக