ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_c10 
heezulia
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_c10 
E KUMARAN
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_c10 
mohamed nizamudeen
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடச் சிறுவர் கதைகள் (50)

4 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Empty கன்னடச் சிறுவர் கதைகள் (50)

Post by Dr.S.Soundarapandian Sun Jan 02, 2022 6:50 pm

First topic message reminder :

கன்னடச் சிறுவர் கதைகள் (1)

தூங்கிக் காலத்தைக் கழிக்காதே !

“பிள்ளைங்களா! சீக்கிரம் எழுந்திருங்கள்! எழுந்திருந்து பல்லை விளக்கிச், சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்புங்க!” எனத் தாய் அதட்டினாள். “சீக்கிரம்! நேற்று லேட்டா போனதுமாதிரி இன்றும் போகக் கூடாது!” என்று துரிதப் படுத்தினாள்!

“சரி! வாங்க கூட்டிட்டுப் போறேன்! பள்ளிக்கு நடந்து போகக் கொஞ்சம் நேரம் ஆகும்! அதுவரை ஒரு கதை சொல்கிறேன்!” என்று தாய் கூறச், “சொல்லுங்க சொல்லுங்க” என்றனர் பிள்ளைகள்.
தாய் கதை சொன்னாள்.

ஒரு காட்டில் சில முயல்கள்! அவைகளுக்குள் ஒரு தலைவன்!

ஒரு நாள் தலைவன் முயல், பிற முயல்களைக் கூட்டியது; ஒரு முயல் மட்டும் வரவில்லை! கூப்பிடப் போன முயலிடம், ‘எனக்குத் தூக்கம் தூக்கமா வருது!என்னைத் தொந்தரவு செய்யாதே! போ!’ என்றது தூங்கும் முயல். “இல்லை! நம் தலைவர் நல்ல விஷயங்களைக் கூறவுள்ளார்! அவர் அனுபவசாலி! நீ இப்படித் தூங்காதே! ” என்றது கூப்பிடப் போன முயல். அதற்கும் தூங்கும் முயல் மசியவில்லை!

முயல் கூட்டத்தில், தலைவன் முயல், “கேளுங்க முயல்களே! மழைக்காலம் வரப்போகுது! காரட்டுகளை எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலம் பார்த்து நரிகள் நம்மைத் தாக்கும்! பாதுகாப்பாக நாம் வேறு இடம் சென்று தப்பித்துக் கொள்ள வேண்டும்; இங்கு இருக்கக் கூடாது!” என்றது.

தலைவன் முயல் சொன்னது போலவே சில நரிகள் வந்தன! நரிகள், “ அட! ஒரு முயலையும் காணோமே! எல்லாம் போய்விட்டனவே! இன்று நாம் பட்டினிதான்! என்று புலம்பின!
அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அந்த முயல், “ஹாவ்! … தூக்கம் தூக்கமா வருது!...எங்கே யாரையும் காணலை? ” என்று விழிக்கவே, நரிகள் அதைப் பார்த்துவிட்டன! அவை அத் தூங்குமூஞ்சி முயல் மீது பாய்ந்து கொன்று, தின்றன!

“பிள்ளைகளே! கேட்டீர்களா? இதிலிருந்து என்ன தெரிகிறது? சோம்பல் பட்டுக்கொண்டு , எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது என்பது புரிகிறதா?” எனத் தாய் கூறவும், பிள்ளைகள், “புரிகிறது! புரிகிறது!என்று உரக்கத் தலையாட்டிக் கூறினர்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKooTv)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Empty Re: கன்னடச் சிறுவர் கதைகள் (50)

Post by T.N.Balasubramanian Sat Feb 05, 2022 8:05 pm

Code:
இதற்குத்தான் சொல்வது, யாருக்கு என்ன சக்தி உள்ளதோ அதற்குத் தகுந்தாற் போலக் காரியங்களில் ஈடுபட வேண்டும்

முற்றிலும் உண்மை,நல்ல நீதி போதனை.

@Dr.S.Soundarapandian


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Empty Re: கன்னடச் சிறுவர் கதைகள் (50)

Post by Dr.S.Soundarapandian Sun Feb 06, 2022 3:12 pm

நன்றி இரமணியன் அவர்களே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Empty கன்னடச் சிறுவர் கதைகள் (48)

Post by Dr.S.Soundarapandian Sun Feb 06, 2022 3:13 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (48)

பூசாரியும் முதலையும் !

ஒரு சின்னக் குளத்தில் ஒரு முதலை இருந்தது!

அதற்கு ஓர் ஆசை வந்தது!

கங்கையில் வாழவேண்டும் என்பதே அந்த ஆசை!

அப்படி இருக்கும்போது, அந்தக் குளத்தருகே ஒரு பிராமணன் வந்துகொண்டிருந்தான்! அப்போது முதலை, “பிராமணனே! இப்படி வாரும்! என்னைக் கங்கைக் கரையில் கொண்டுபோய் விடு! உனக்குப் பெரும் புண்ணியம் வரும்! நான் கங்கை வழியே காசிக்குச் சென்று மீண்டும் பிறக்காத நிலையை அடைய வேண்டும்! அவ்வளவுதான்!” என்றது.

முதலையின் பேச்சை நம்பி அதற்கு உதவி செய்யப் பிராமணன் நினைத்தான்!
ஒரு சாக்குப் பையில் முதலையைப் போட்டுத் தோளில் சுமந்தபடி சென்று,கங்கை அருகே இறக்கி வைத்தான்! முதலையைச் சாக்கிலிருந்து விடுவித்தான்!

ஆனால் முதலை, திடீரென்று பிராமணன் காலைக் கவ்வியது! “உன்னைத் தின்னப் போகிறேன்!”என்றது!

“ஐயோ! நீ இப்படிச் செய்யலாமா? உனக்கு உதவியதற்கு எனக்கு இதுதான் பலனா? ” என்றான் பிராமணன்!

“நியாயம் பேசாதே! நானா நன்றி கெட்டவன்? வேண்டுமானால் மூன்று நியாயவாதிகளிடம் போய்ச் சொல்லலாம்! முதலை மனிதனைத் தின்பது பழக்கம்தான் என்று சொல்வார்கள்!” என்று மூன்று பேரிடம் பஞ்சாயத்திற்குச் செல்ல இருவரும் சென்றனர்!

முதலில் பிராமணனும் முதலையும் ஒரு மாமரம் அருகே சென்று , நடந்ததைக் கூறி நியாயம் கேட்டனர்!

அதற்கு மாமரம், “மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்! நான் பழம் தருவேன்! எனது நிழலில் தங்கிக் கொள்வார்கள்! ஆனால் கடைசியில் என்னையே ஒரு நாள் வெட்டிவிடுவார்கள்!” என்றது கோபமாக!

அடுத்து, ஒரு பசுவிடம் போனார்கள் நியாயம் கேட்க!

வழக்கைக் கேட்ட பசு, “மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்! நான் பால் தருவேன் தினமும்! ஆனால் எனக்கு வயதானால் என்னை இறைச்சிக்கடைக் காரனுக்குத் தள்ளிவிடுவார்கள்! ” என்றது!

மூன்றாவதாக நரியிடம் போனார்கள் நியாயம் கேட்க!

“சரி! முதலில் நீங்கள் இருவரும் குளத்திலிருந்து எப்படிக் கங்கை வரை பயணம் செய்தீர்கள்? அதைச் சொல்லுங்கள்” எனக் கேட்டது நரி!

“இதோ இப்படித்தான் முதலையைச் சாக்குக்குள் போட்டுக்கொண்டு, தோளில் தூக்கி வந்தேன்” என்ற பிராமணன், சாக்குக்குள் முதலையைப் புகவிட்டான்!

முதலை சாக்குக்குள் போனதும், நரி சட்டென்று சாக்கின் வாயைக் காலால் அழுத்தி மூடிவிட்டது!

பிராமணனும் சாக்கைக் கட்டிப் போட்டுவிட்டுத் தன் வழியே நடக்கலானான்!
நன்றியில்லாமல் யாரும் இருக்கக் கூடாது! உதவி செய்தவருகே தீங்கு செய்யக் கூடாது!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Empty Re: கன்னடச் சிறுவர் கதைகள் (50)

Post by T.N.Balasubramanian Sun Feb 06, 2022 6:40 pm

நன்றி ,அருமை.

அன்றே சொன்னார் திருவள்ளுவர் --நன்றி மறப்பது நன்றன்று.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Empty Re: கன்னடச் சிறுவர் கதைகள் (50)

Post by Dr.S.Soundarapandian Mon Feb 07, 2022 1:28 pm

நன்றி இரமணியன் அவர்களே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Empty கன்னடச் சிறுவர் கதைகள் (49)

Post by Dr.S.Soundarapandian Mon Feb 07, 2022 1:29 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (49)

மச்சக் கன்னியர் இருவர் !

கடலுக்கு அடியில் ஒரு அரண்மனை! அதன் ராஜா, ஜல ராஜா!

ஜல ராஜாவுக்கு இரு மகள்கள்-பாயல் மற்றும் பிரீத்தி!
இருவரும் இரட்டைக் குழந்தைகள்!

ஒருவரைப் போலவே இன்னொருவர் இருப்பார்! வேறுபாடு காணவே முடியாது!
பல நேரங்களில் ஜல ராஜாவே இது பாயலா? பிரீத்தியா? என்று குழம்புவார்!

பாயல் நல்லவள்! இரக்கக் குணம் கொண்டவள்!

பிரீத்தி முற்றிலும் மாறுபட்டவள்!

பிறரைத் துன்புறுத்தித் தான் மகிழ்பவள்!

ஒரு நாள் பிரீத்தி, ஆக்டோபசை வம்புகிழுத்து, அதன் கைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டிவிட்டாள்! செய்வதறியாது ஆக்டோபஸ் முழித்தது!

பிறகு, அவ் வழியே வந்த பாயல் அதனைப் பார்த்து வருத்தப்பட்டு, உடனே கட்டவிழ்த்துவிட்டாள்!
இம்மாதிரி அநேகச் சம்பவங்கள்!

ஒரு நாள் மீன்பிடிப் படகு ஒன்று வந்தது! அதன் வலையில் , பாயல் மற்றும் பிரீத்தி இருவரும் சிக்கிக்கொண்டனர்!

“காப்பாற்றுங்கள் அப்பா! காப்பாற்றுங்கள் அப்பா!” எனக் கத்தினர்.

ஜல ராஜா வந்து எவ்வளவோ முயன்றும் வலையிலிருந்து இரு மகள்களையும் விடுவிக்க இயலவில்லை!

பாயல் வலையில் சிக்கிகொண்டதைக் கண்ட ஆக்டோபஸ், நண்டுகள் முதலிய யாவும் தவித்தன! “எப்படியாவது பாயலைக் காப்பாற்ற வேண்டும்”என்று பேசிக்கொண்டன!

எல்லாக் கடல் உயிரினங்களும் ஒன்று சேர்ந்து , வலையைச் சிதைத்தன!
பாயலும் பிரீத்தியும் வெளிவந்தனர்!

இதற்குத்தான் சொல்வது – பிறரிடம் அன்பு காட்டி, அவர்களிடம் நன்மதிப்பையும் அன்பையும் பெறவேண்டும் என்று!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Empty கன்னடச் சிறுவர் கதைகள் (50)

Post by Dr.S.Soundarapandian Mon Feb 07, 2022 7:08 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (50)

மச்சக் கன்னி ஒருத்தி !

கடலுக்கு அடியில் மச்சக்கன்னி ஒருத்தி வாழ்ந்துவந்தாள்! அவள் பெரிய முத்துச் சிப்பியில் படுத்துறங்குவாள்!

ஒரு நாள் ஒரு சத்தம் கேட்டது!

“என்ன சத்தம்?” என்று கேட்டபடி, கடலுக்கு மேற் பகுதியில் வந்து பார்த்தாள்!

அப்போது, ரூபி என்ற இளைஞன் கடலில் சில பொருட்களை வீசிவிட வந்தான்!
வந்த ரூபி, மச்சக்கன்னியின் அழகைப் பார்த்து அசந்துபோனான்!

“யார் இவள்?” என்று யோசித்தபடி ,மச்சக்கன்னியிடம், “ஏ பெண்ணே! யார் நீ? கடலில் என்ன செய்கிறாய்?’’ எனக் கேட்டான்.

“நான் மச்சக்கன்னி! இங்கேயே வசிப்பவள்! நீ யார்?” என்று கேட்டாள்.
“நான் மனிதன்! ரூபி என்று பெயர்!”எனப் பதில் சொன்னான்.

“மனிதனா? மனிதன் என்றால் என்ன? உனக்கு இறக்கை இல்லையா? நீ எப்படி இங்கு வந்தாய் இறக்கை இல்லாமல்?’எனக் கேட்டாள் மச்சக்கன்னி.

“மனிதர்களுக்கு இறக்கை இல்லை!

உங்களைப் போல நீந்தத் தெரியாது! நான் ஒரு படகு மூலமாக இங்கு வந்துள்ளேன்!” – என ரூபி பதில் சொன்னான்!

“படகா? படகில் எதற்கு வருகிறீர்கள்? இங்கு என்ன வேலை உங்களுக்கு?”- மச்சக் கன்னி கேட்டாள்!
“நான் என் சிற்றப்பாவுடன் வந்துள்ளேன்! சிற்றப்பா ஒரு கடற் கொள்ளைக்காரர்! கப்பலில் வருபவர்களிடம் கொள்ளையடிப்பார்!” என்றான் ரூபி.

“அப்படியா? கொள்ளையடிப்பது நல்லதல்லவே? நீங்கள் ஏன் அதைச் செய்கிறீர்கள்?”என மச்சக்கன்னி கேட்டாள்.

“என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை! செலவுக்குப் பணம் இல்லை! அதனால் கொள்ளையடிக்கிறோம்” என்றான் ரூபி.

“ஏன்? உங்க அம்மாவுக்கு என்ன?”என்று கேட்டாள் மச்சக்கன்னி.

“நான், என் அப்பா மற்றும் சிலர் மீன் பிடித்து நன்றாக வாழ்ந்துவந்தோம்! ஒரு நாள் சுனாமி வந்து எங்களை அழித்துவிட்டது! வீடு, வாசல் இழந்தோம்! சுனாமியில் என் அப்பா இறந்தார்! என் அம்மா நோஇல் விழுந்தார்! மீன் படகு, வலைகள் நாசமாயின!

அன்றிலிருந்து என் சிற்றப்பா யோசனைப்படி, பணத்துக்காகக் கொள்ளையடிக்கிறோம்! தங்கம், வெள்ளி, நகைகள்முதலிய எல்லாவற்றையும் கொள்ளையடித்து, அவற்றை விற்றுப் பணம் பெறுவோம்!” என்றான் ரூபி.

“நகைகளை விற்றால் பணம் கிடைக்குமா? உன் அம்மா குணம் ஆவாரா?” எனக் கேட்டாள் மச்சக்கன்னி.

“ஆமாம்’’ என்றான் ரூபி.

“அப்படியானால் என்னோடு வா!’’ என்று கையைப் பிடித்து ரூபியைக் கடலுக்கு அடியில் கூட்டிச் சென்றாள் மச்சக்கன்னி.

“இதோ பார்! எல்லாம் நகைகள்! நீ வேண்டியவற்றை எடுத்துக்கொள்!”என்று நகைப் பெட்டிகளைக் காட்டினாள் மச்சக்கன்னி.

ரூபி ஒரு நகைப் பெட்டியை எடுத்துக்கொண்டான்!

இருவரும் கடலின் மேற்பகுதியில் அவர்கள் வந்த படகின் அருகில் வந்து சேர்ந்தனர்!

“இந்த நகைகளைக் கொண்டு , உன் அம்மாவைக் காப்பாற்று! மறுபடியும் இங்கு வந்தால் என்னைப் பார்!”என்று ரூபியை வழியனுப்பி வைத்தாள் மச்சக்கன்னி.
நிலப் பரப்பில் மட்டுமல்லாது, நீருக்குள்ளும் அன்பே போற்றத் தக்கதாகப் பெருமையுடன் நிற்கிறது! அன்பே,பிறரை வசப்படுத்துகிறது!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Empty Re: கன்னடச் சிறுவர் கதைகள் (50)

Post by mohamed nizamudeen Mon Feb 07, 2022 8:27 pm

தேவதைகள் என்றுமே மற்றவர்க்கு நன்மை செய்பவைதான். மச்சக்கன்னியும் ஒரு தேவதைத்தானோ?

மச்சக்கன்னிக்கும் ஒரு பெயரை வைத்திருக்கலாம்.

'ரூபி கடல் கொள்ளை தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ்ந்தான்' எனக் கடைசியில் ஒரு வரியை சேர்த்திருக்கலாம்!!!
.


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1811
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Empty Re: கன்னடச் சிறுவர் கதைகள் (50)

Post by Dr.S.Soundarapandian Mon Feb 07, 2022 9:38 pm

நன்றி நிஜாமுதீன் அவர்களே!
உன்னிப்பான தங்களின் வாசிப்பு அருமை! தாங்கள் சொல்வது சரியே! ஆனால், கன்னடத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் நான் தரமுடியும்; நானாக ஒன்றைச் சேர்க்கக் கூடாது; மொழிபெயர்ப்பு நெறி இது.


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Empty Re: கன்னடச் சிறுவர் கதைகள் (50)

Post by mohamed nizamudeen Tue Feb 08, 2022 8:42 pm

@Dr.S.Soundarapandian...

தங்களின் நெறி பற்றிய கருத்து உண்மையே!

மேலும் எனது இவ்விமர்சனம்
கன்னட மூலக் கதைக்கானதாக எடுத்துக் கொள்ளவும்!
அங்கே, பதிவிட முடியாததாகையால் இங்கு பதிவிட்டேன்!

நன்றி முனைவர் அவர்களே!


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1811
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 8 Empty Re: கன்னடச் சிறுவர் கதைகள் (50)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum