புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_lcapகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_voting_barகன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடச் சிறுவர் கதைகள் (50)


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 02, 2022 6:50 pm

First topic message reminder :

கன்னடச் சிறுவர் கதைகள் (1)

தூங்கிக் காலத்தைக் கழிக்காதே !

“பிள்ளைங்களா! சீக்கிரம் எழுந்திருங்கள்! எழுந்திருந்து பல்லை விளக்கிச், சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்புங்க!” எனத் தாய் அதட்டினாள். “சீக்கிரம்! நேற்று லேட்டா போனதுமாதிரி இன்றும் போகக் கூடாது!” என்று துரிதப் படுத்தினாள்!

“சரி! வாங்க கூட்டிட்டுப் போறேன்! பள்ளிக்கு நடந்து போகக் கொஞ்சம் நேரம் ஆகும்! அதுவரை ஒரு கதை சொல்கிறேன்!” என்று தாய் கூறச், “சொல்லுங்க சொல்லுங்க” என்றனர் பிள்ளைகள்.
தாய் கதை சொன்னாள்.

ஒரு காட்டில் சில முயல்கள்! அவைகளுக்குள் ஒரு தலைவன்!

ஒரு நாள் தலைவன் முயல், பிற முயல்களைக் கூட்டியது; ஒரு முயல் மட்டும் வரவில்லை! கூப்பிடப் போன முயலிடம், ‘எனக்குத் தூக்கம் தூக்கமா வருது!என்னைத் தொந்தரவு செய்யாதே! போ!’ என்றது தூங்கும் முயல். “இல்லை! நம் தலைவர் நல்ல விஷயங்களைக் கூறவுள்ளார்! அவர் அனுபவசாலி! நீ இப்படித் தூங்காதே! ” என்றது கூப்பிடப் போன முயல். அதற்கும் தூங்கும் முயல் மசியவில்லை!

முயல் கூட்டத்தில், தலைவன் முயல், “கேளுங்க முயல்களே! மழைக்காலம் வரப்போகுது! காரட்டுகளை எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலம் பார்த்து நரிகள் நம்மைத் தாக்கும்! பாதுகாப்பாக நாம் வேறு இடம் சென்று தப்பித்துக் கொள்ள வேண்டும்; இங்கு இருக்கக் கூடாது!” என்றது.

தலைவன் முயல் சொன்னது போலவே சில நரிகள் வந்தன! நரிகள், “ அட! ஒரு முயலையும் காணோமே! எல்லாம் போய்விட்டனவே! இன்று நாம் பட்டினிதான்! என்று புலம்பின!
அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அந்த முயல், “ஹாவ்! … தூக்கம் தூக்கமா வருது!...எங்கே யாரையும் காணலை? ” என்று விழிக்கவே, நரிகள் அதைப் பார்த்துவிட்டன! அவை அத் தூங்குமூஞ்சி முயல் மீது பாய்ந்து கொன்று, தின்றன!

“பிள்ளைகளே! கேட்டீர்களா? இதிலிருந்து என்ன தெரிகிறது? சோம்பல் பட்டுக்கொண்டு , எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது என்பது புரிகிறதா?” எனத் தாய் கூறவும், பிள்ளைகள், “புரிகிறது! புரிகிறது!என்று உரக்கத் தலையாட்டிக் கூறினர்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 27, 2022 2:00 pm

ஒற்றுமைக்கு நிகர் ஏதுமில்லை . கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 1571444738 கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 103459460 கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 3838410834


@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 27, 2022 9:05 pm

நன்றி இரமணியன் அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 27, 2022 9:07 pm


கன்னடச் சிறுவர் கதைகள் (34)

யானைக் குட்டியும் புலிக் குட்டியும் !

ஒரு நாள் அத்தையம்மா யானை ஒன்றையும் புலிக்குட்டி ஒன்றையும் கூட்டிக்கொண்டு , ஒரு புல் அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றாள்!

கூடாரம் அடித்து, அங்கு தின்பண்டங்களைச் சாப்பிட்டனர்!

இரவில் புல் வெளியில் படுத்தனர்! “ஆகாயத்தில் உள்ள செவ்வாய்க் கிரகத்துக்கு நான் போவேனே!” என்று புலி சொன்னது.பிறகு அனைவரும் தூங்கலாயினர். அப்போது, புலிக்குட்டிக்கு, ஒரு கனவு!

காண்டா மிருக அத்தை ஒருத்தி, இருவரையும் ராக்கெட் ஒன்றில் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்புகிறாள்.
செவ்வாய்க் கிரகத்தில் யானை மற்றும் புலிக்குட்டி இருவரும் இறங்கி ஆசையாக நடந்தன! அங்குமிங்கும் சென்று சென்று பார்த்தன!

யானைக் குட்டி அங்கிருந்த கற்களைப் பொறுக்கி ஒரு பையில் போட்டுக்கொண்டது!
புலி திடீரென்று, “ஒளிந்து கொள்! ஒளிந்து கொள்! ஒரு பலமான சத்தம் வருது!”எனக் கத்தியது!

யானைக் குட்டி, “ஹா ஹா! யாரும் வரவில்லை! அது என் வயிர்றிலிருந்து வரும் சத்தம்! எனக்குப் பசிக்கிறது!” என்றது!

“சரி! வா திரும்பலாம் ராக்கெட்டுக்கு” என்று புலி கூற, இருவரும் ராக்கெட்டுக்குத் திரும்பினர்!

திரும்பும் முன், செவ்வாய்க் கிரகத்தில், தங்கள் அடையாளமாக ஒரு கொடியை நட்டு வைத்தனர்!

இருவரும் செவ்வாய்க் கிரகத்திலிருந்து பூமி வந்து ஒரு கடலில், படகு வடிவ ராக்கெட்டின் பகுதிக்குள் மிதந்தனர்!

அப்போது, யானைக் குட்டியின் கையில் ஒரு கொடி இருந்தது!

“இது ஏது கொடி? கொடியைக் கொடு! கொடியைக் கொடு!” என்று புலி கொடியைப் பறிக்க, கனவு களைந்துவிட்டது!

அவர்கள் செயலுக்காக அத்தையம்மா சிரித்தாள் கைகொட்டி!
தைரியமான நினைப்புகள் சிறார்க்குத் தேவை!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 28, 2022 11:16 am

கன்னடச் சிறுவர் கதைகள் (35)

சுட்டிப் பையன் !

ஒரு அம்மாவுக்கு ஒரு சேட்டைப் பையன் இருந்தான்!

அவன் முரட்டுத் தனமாகவும் நடப்பவன்!அம்மா சொல்வதைக் கேட்கவே மாட்டான்!
ஒரு நாள் அவன் வீட்டுக் கதவைச் சிலர் தட்டினர்! அம்மா கதவைத் திறந்து , “யார் நிங்கள்?”எனக் கேட்டாள்.

“பாருங்க! உங்க பையன் என் மகனை அடித்துவிட்டான்!”என்றாள் ஒரு பெண்மணி. “இத பாருங்க! உங்க பையன் ஒரு கம்பால் என் மகனை அடித்துவிட்டான்!” என்றாள் ஒருத்தி.
“உன் பையன் என் மகனுடன் சண்டை போட்டுள்ளான்!” என்றாள் இன்னொருத்தி.
இப்படி ஆளுக்கொரு புகாராகக் கூறினர்!

“சரி! நான் பார்த்துக்கொள்கிறேன்; போய்வாருங்கள்”என்று கூறி அவர்களை அனுப்பிய அம்மா , தன் மகனிடம், “டேய்! என்னடா இது? எப்போதும் இப்படியே சுட்டித்தனம் செய்து கொண்டிருந்தால் எப்படி? ஊரார் எல்லாம் நமக்கு கெட்டபெயர் ஏற்படுத்துகிறார்கள்! நீ செய்வது அப்படி!” என்று கண்டித்தாள்.

“சரி! வா சாப்பிடு! சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்குப் போ! இந்தா உன் சீருடை” என்று கூறி, அவனுடைய சீருடைய முன் வைத்தாள் அம்மா.

அந்தச் சீருடை அழுக்காக இருந்தது!


“என்னம்மா? உடை அழுக்காக இருக்கிறதே?” என்று சொல்லிவிட்டுச் சாப்பிட அமர்ந்தான் மகன். தட்டில் வைக்கப்பட்டிருந்த ரொட்டியில் மண் காணப்பட்டது! “என்னம்மா?ரொட்டியில் மண்?” எனக் கேட்டான் அவன்.

அப்போது அம்மா சொன்னாள்,”தெரியுதா? உன் ஆடையிலும் உணவிலும் கேடு ஏற்பட்டால் எப்படி இருக்கு?” இதே போலத்தானே உன் நடத்தையிலும் கேடு எற்பட்டால் இருகும்? ஆடை அழுக்கும் , உணவு மண்ணும் உன் நடவடிக்கைகளைக் குறிக்கிறது!”.
இவ்வாறு மகனைத் திருத்தினாள் தாய்!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 28, 2022 7:51 pm


கன்னடச் சிறுவர் கதைகள் (36)

சோம்பேறி மகன் !

ஒரு தாய்க்குச் சோம்பேறி மகன் இருந்தான்! அவனது வேலைகளை அவன் ஒழுங்காகச் செய்வதில்லை!

“மகனே ! நீ ரொம்பச் சோம்பேறி! ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்வதில்லை! நேரத்தின் அருமை உனக்குத் தெரியவில்லை! எனக்குக் கவலையாக உள்ளது உன்னால்! ” என்று திட்டினாள்.

“சரி! உன் வீட்டுப் பாடத்தை ஒழுங்காக எழுதினாயா?” என்ரு கேட்டாள் அவள்.

“இதோ எழுதுகிறேன் அம்மா! நேரம் நிறைய இருக்கிறது! என்னை விளையாட விடு!” என்று சொல்லிவிட்டு விளையாடப் போனான்!

“இதோ பள்ளி போகும் பஸ்ஸும் வந்துவிட்டது!வீட்டுப் பாடம் முடித்தாயா?’’ தாய் சத்தம் போட்டாள்.

“இதோ அம்மா, கடைசி வினாவுக்கு விடை எழுதுகிறேன்” என்றான் மகன்.

“சோம்பேறி! கடைசி நேரத்தில் ஒரு காரியம் வைத்துக்கொள்ளாதே என்று எத்தனை தடவை சொல்வது? கிளம்பு,கிளம்பு! சரி,தச்சர் மாமாவுக்குப் போன் பண்ணச் சொன்னேனே செய்தாயா?” என்று கேட்டாள் தாய்.

“இல்லையம்மா! மறந்தேவிட்டேன்! இன்று போன் செய்துவிடுகிறேன்!’’ எனக் கூறிப் பள்ளிக்குக் கிளம்பினான். கிளம்பும்போது, “அம்மா அடுத்த வாரம் எனது பிறந்தநாள் வருகிரது! மறந்துவிடாதே!”என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

பள்ளியிலிருந்து திரும்பும் போது, “ஏம்பா, தச்சர் மாமாவை வரச் சொன்னாயா? சில மர வேலைகள் உள்ளன” எனக் கேட்டாள் அம்மா. “ஐயோ ! மறந்துவிட்டேனா! இதோ இப்போ கூப்பிடறேன்” என்றான்.

“உன் பிறந்த நாளுக்கு உன் நண்பர்களை வரச்சொல்லிச் சொன்னாயா? அப்படியே தச்சர் மாமாவையும் வரச் சொல்!” என்றாள் அம்மா.

பிறந்த நாளும் வந்தது!

நண்பர்கள் வீட்டில் கூடினார்கள்!

“இதோ அம்மா கேக் தருவாங்க! இந்தச் சோபாவில் உட்காருங்க!” என்றாஅன் நண்பர்களிடம் மகன்.

“சரி!”என்று பையனின் நண்பர்கள் அந்தச் சோபாவில் உட்கார்ந்தனர்!

அந்தச் சோபா ‘சடக்’கென்று உடைந்துவிட்டது! நண்பர்கள் கீழே விழுந்தார்கள்!
அப்போது, அம்மா, “பார்த்தாயா? இதைச் சரி செய்யத்தான் தச்சர் மாமாவை வரச் சொன்னேன்! நீ கேட்கவே இல்லை! இப்போ பார், உன் நண்பர்கள் விழுந்துவிட்டனர்!” என்றாள் அம்மா.

“சரி!சரி! நாங்கள் போகிறோமப்பா ! உன் வீட்டில் , உட்கார இடமே இல்லை! நாங்கள் என்ன பண்றது?” எனக் கோபமாக, பிறந்தநாளுக்கு வந்த நண்பர்கள் கிளம்பலாயினர்!
பையனுக்கு அவனது தவறுகள் புரிய வந்தன!

சோம்பேறித்தனமும் காலந் தவறுவதையும் மாணவர்கள் கைவிட வேண்டும்!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 29, 2022 2:00 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (37)

மனிதனும் புலியும் நண்பர்கள் !

ஒரு காட்டில் , ஒரு மனிதனும் புலியும் நன்பர்களாக இருந்தனர்!

எப்படி மனிதனும் மிருகமும் நண்பர்களாக இருக்க முடியும்?

அந்தக் கதையைக் கேட்போம்!

ஒரு காட்டில் ஒரு புலி இருந்தது. ஒரு நாள், அப் புலி அங்கும் இங்கும் உலாவும்போது, ஒரிடத்தில், காலில் பெரிய முள் குத்திவிட்டது! வலியால் துடித்த புலி, அங்கேயே படுத்துக்கொண்டு கத்திக் கொண்டிருந்தது!

வலியால் கத்தும் சத்தத்தை அவ் வழியே பொகும் ஒருவன் கேட்டான்! அருகே வந்து பார்த்தால், அது புலி!
“ஆ!புலி! இதனருகே நாம் போய் உதவினால் ஆபத்தே?” என அவன் நினைத்தான். ஆனால் அவன் மனம் கேட்கவிலை! மெதுவாகப் புலி அருகே சென்று , காலிலிருந்து முள்ளை எடுத்துவிட்டான்!

முள்ளை எடுத்ததும், புலி அம் மனிதனருகே வாஞ்சையாய்ச் சென்று, அவனை நக்கிக் கொடுத்தது! பிறகு காட்டுக்குள் ஓடிவிட்டது!

அப் பகுதியில் சில விலங்குகளைப் பிடித்துக் கூண்டுக்குள் விட்டு, மனிதனுடன் அவை சண்டை போடுவது போலச் சிலர் வித்தை காட்டிவந்தனர்!

ஒரு நாள் , நாம் முன்பு புலிக்கு முள் எடுத்த அந்த ஆளைப் பிடித்துக் கூண்டுக்குள் விட்டு, ஒரு புலியையும் உடன் அடைத்துவிட்டனர்!

கூண்டுக்குள்,அப் புலி அவனைக் கடித்துக் குதற நெருங்கியது!

புலி, கூண்டுக்குள் இருந்த அம் மனிதனை உற்றுப் பார்த்தது! “நமக்கு முள் எடுத்துவிட்ட அதே வாள் இவர்!” எனக் கண்டுபிடித்தது! உடனே , சீற்றம் தணிந்து, அவனருகே சென்று , அவனை நக்கிக் கொடுத்தது !

பார்த்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்!

“நாம் முன்பு உதவி செய்ததால், புலிக்கு நம் மேல் அன்பு இருக்கிறது!” என நினைத்து அவன் மகிழ்ந்தான்!

அன்பின் எல்லை இது!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 29, 2022 6:51 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (38)

யானையும் நாய்க் குட்டியும் !

ஒரு அரண்மனையில் ஒரு யானை இருந்தது!

அந்த யானை அருகேயிருந்த நாய்க் குட்டியுடன் அன்புடன் பழகியது!
அந்த நாய்க் குட்டியும் யானை அருகே விளையாடி மகிழ்ந்தது!

நாயைப் பார்த்த ஒருவன்,ஒரு நாள், “அந்த நாயை எனக்குக் கொடுங்கள்! நான் பணம் தருகிறேன்!”என்று அரண்மனைச் சேவகர்களிடம் கூறினான்!

காவலர்களும் பணத்தை வாங்கிக் கொண்டு, நாய்க் குட்டியை அவனுக்குக் கொடுத்துவிட்டனர்!

அடுத்த நாளிலிருந்து அந்த யானை உணவு உண்ண மறுத்துவிட்டது! காவலர்களையும்முட்டி, முட்டித் தள்ளியது!
காவலர்கள் இருவரும் அரசனிடம் சென்று, “அரசே! நம் யானை உடல் நலம் இல்லாது இருக்கிறது! உணவு உண்ண மறுக்கிறது!” என்று கூறினர்.

“மந்திரி! போய்க் கவனியுங்கள்! யானைக்கு என்னாயிற்று?”என்று மந்திரியை அனுப்பினார் அரசன்.

மந்திரி யானை அருகே சென்று பார்த்தார்.

அப்போது காவலர்கள் நாய் பற்றிக் கூறினர்.

“ஓ! அதுவா சங்கதி?” எனத் தெரிந்துகொண்ட மந்திரி, அரசனிடம் போய் விவரத்தைக் கூறினார்!

மந்திரி, “எனக்கு ஒரு உபாயம் தோன்றுகிறது!’’ என்றார்.

அரசன் , “சொல்லுங்கள்”என்றார்.

“நாம் ஊரில் ஒரு தண்டோராப் போடலாம்! அரண்மனையிலிருந்து நாயை எடுத்து வந்தவர்கள் யாராக இருந்தாலும் உடனே அரண்மனைக்குக் கொண்டு வந்து தந்துவிட வேண்டும்!” என்று தண்டோராப் போடலாம் என்றார் மந்திரி!
ஊரில் தண்டோராவும் போடப்பட்டது.

அரண்மனையிலிருந்து நாயைப் பெற்றுவந்த அந்த ஆள் , “ஐயோ! நான் இப்போதே நாயை விட்டுவிடுகிறேன்! யாருக்கு வேண்டும் நாய்? எனக்குத் தண்டனையா? ” என்று நாயை விட்டுவிட்டான்!

நாயானது நேரே அரண்மனைக்குப் போய், யானை முன் நின்று கும்மாளம் போட்டது!
யானை மகிழ்ந்தது!

அன்பின் ஒரு வடிவம் இது!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 30, 2022 1:25 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (39)

தொடர்வண்டி எஞ்சின்!

ஒரு ஊரில் ஒரு வாழைப்பழம் ஒன்று , இன்னொரு வாழைப்பழத்திடம், “ ஏய்! நீ சாலையில் கிடந்து மற்றவர் வழுக்கி விழுவதுதான் எனக்குப் பிடிக்கும்! அப்படியே செய்!” என்றது.
இன்னொரு வாழைப்பழம், “அவன் சொல்வதைக் கேட்காதே!” எனக் கூறிற்று.

“ஐயோ! யார் சொல்வதைக் கேட்பது? என்று அந்த முதல் வாழைப்பழம் உட்கார்ந்திருந்த போது, ஒரு சிறுமி வந்து , “என்ன காரணம்? ஏன் கவலைப்படுகிறாய்?” எனக் கேட்டாள். மேலும் அவள், “நான் உனக்கு உதவி செய்கிறேன்! அந்தப் பச்சைத் தொடர்வண்டி எஞ்சின் உதவி செய்ததது போல!” என்றாள்.அந்த எஞ்சின் என்ன உதவி உதவி செய்தது?என வாழைப்பழம் கேட்க, அச் சிறுமி ஒரு கதை கூறினாள்! அக் கதை:-

ஓர் ஊரில், ஊதா வண்ணத் தொடர்வண்டி எஞ்சின் ஒன்று தன் பெட்டிகளை இழுத்துக்கொண்டு , மகிவாகப், பாடிக்கொண்டு, தண்டவாளத்தில் சென்றது! அப்போது, வழியில் ஒரு பெரிய மேடு! அதன் மேலே ஏற முடியவில்லை! எஞ்சின் நின்றுவிட்டது! “ஐயோ! எப்படி மேலேறுவோம்?” எனப் இணைப்புப் பெட்டிகள் வருந்தின!
“ஊதா எஞ்சின், “கவலைப் படாதீர்கள்? நான் வேறு யாரையாவது உதவிக்குக் கூட்டிவருகிறேன்!” எனக் கிளம்பிற்று!

முதலில் ஒரு வயதான எஞ்சினைப் பார்த்தது; அந்த எஞ்சினிடம் உதவி கேட்டது! அந்த வயதான எஞ்சின், “என்னால் ஆகாதப்பா! பார்! என் காலில் கட்டுப் போட்டுள்ளேன்!” என்றது.
அடுத்து ஒரு முரட்டு எஞ்சினின் உதவியைக் கேட்டது! அதற்கு அந்த முரட்டு எஞ்சின், “இன்று என் வேலை முடிந்துவிட்டது! நான் எந்த வேலையையும் இன்று செய்ய மாட்டேன்!” என்றது!

“சரி!” எனக் கூறி, வேறு ஆளைத் தேடியது அந்த ஊதா எஞ்சின்!

கடைசியில் தன்னைப் போன்ற சிறிய ஒரு பச்சை எஞ்சினைப் பார்த்தது !
அப் பச்சை எஞ்சினிடம்,தன் நிலையைக் கூறியது! “நான் உதவுகிறேன்!”என்றது அந்தச் சிறிய பச்சை எஞ்சின்!

“நீ சின்னதா இருக்கிறாய்! எப்படி உதவுவாய்?’’ எனக் கேட்டது ஊதா எஞ்சின்.
“இல்லை!இல்லை! நாம் இருவரும் சேர்ந்தால் உன் பெட்டிகளை மேட்டின் மேலே இழுத்துப் போகலாம்!” என்றது பச்சை எஞ்சின்!

“சரி” என்று கூட்டிச் சென்றது ஊதா எஞ்சின்!

“நான் முன்னே இழுக்கிறேன்; நீ பின்னே இருந்து தள்ளு!” என்று, ரயில் பெட்டிகளை இழுக்கும் வேலையை ஆரம்பித்தன!

மேட்டின்மீது போகும்போது, ரயில் பெட்டிகள், “வேகமாய்ப் போ ஐலசா! மேலே போகுது ஐலசா! தள்ளுவோமே ஐலசா!” என்று முழக்கமிட்டன!

ஒருவழியாக, பெட்டிகள் மேட்டைக் கடந்துவிட்டன!

ஊதா எஞ்சினும் பெட்டிகளும் சிறிய அந்தப் பச்சை எஞ்சினுக்கு நன்றி கூரின!
உருவத்தைப் பார்த்து மதிப்புப் போடக்கூடாது!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 31, 2022 11:56 am


கன்னடச் சிறுவர் கதைகள் (40)

சோம்பேறி விவசாயி!

ஓர் ஊரில் ஒரு விவசாயி இருந்தார்!

அவர் எப்போதும் சோம்பலாகவே உட்கார்ந்திருப்பார்! வயல் வேலை எதுவும் செய்ய மாட்டார்!

நாளுக்கு நாள் அவரின் குடும்பம் துன்பத்துக்கு ஆளானது!
வறுமை வாட்டலாயிற்று!

அவரின் மனைவி இதனை மாற்ற விரும்பினாள்.

“ஒரு நாள் , “நானும் உங்களோடே இன்று வயலுக்கு வருகிறேன்!” என்றாள்.”
“நீயா? நீ எதற்கு?”என்றாள் அந்த விவசாயி!

“சும்மா பார்க்கத்தான் ! வருகிறேன்!’ எனக் கூறிய அவரின் மனைவி, அடுத்த நாள் கணவனுடன் வயலுக்குப் புறப்பட்டாள்!

வயலுக்குச் சென்று பார்த்தால்! அவள் ஆச்சிரியத்தில் மூழ்கலானாள்!

“என்ன இது? வயலா இது? அப்படியே தரிசாகக் கிடக்கிறதே? எந்த வேலையையும் நீங்க செய்யவில்லையா?” என்று பதறினாள்!

“சரி!வாங்க கடப்பாரையால் குழி தோண்டலாம்!”என்று வேலையை ஆரம்பித்தாள்! சோம்பேறிக் கணவனான அந்த விவசாயியும் குழி வெட்ட ஆரம்பித்தான்; பல குழிகளை வெட்டினர்.

அப்போது, அவ்வழியே ஒரு முனிவர் வந்தார்!

அவர் களைப்பாக இருந்தார்; அவரின் களைப்பைப் போக்க விவசாயியும் அவர் மனைவியும் முன்வந்தனர்; ரொட்டி, சட்டினி,நீர் எல்லாம் கொடுத்தனர்!

மகிழ்ந்த முனிவர், “சரி! நான் போகிறேன்! ஏதாவது கேளுங்கள்! நான் தருகிறேன்!’’ என்றார்.
அதற்கு அந்தச் சோம்பேறி விவசாயி, “எனக்கு ஒரு வேலைக்காரன் வேண்டும் அவன் எனக்கு எல்லா வேலைகளையும் செய்யவேண்டும்!”எனக் கேட்டான்!

“சரி!அப்படியே ஆகட்டும்!”என்று கூறிவிட்டு அகன்றார் முனிவர்.

முனிவரால் அனுப்பப்பட்டவர், ஒரு அரக்கன்!

அந்த அரக்கன், “எஜமானரே! எனக்கு வேலை தாருங்கள்! வேலை தராவிட்டால், உங்களைத் தின்றுவிடுவேன்!” என்றான்.

“இதென்ன வம்பு?”என்ற அதிர்ந்த விவசாயி , வேலை சொல்ல ஆரம்பித்தான்!
“நான் வெட்டிய குழிகளில் விதைகளைப் போடு! விதைகள் அங்கே இருக்கின்றன ’’ என்றார். ஒரு நிமிடத்தில் அதைச் செய்து முடித்த அரசன், “ம்ம்….வேறு என்ன வேலை..?” என்று யோசித்த அந்த விவசாயி, “அதற்குள் முடித்துவிட்டாயா?.... சரி! அந்த மரத்தைப் பாதிதான் நான் வெட்டினேன்; மீதியை நீ வெட்டிவா!”என்று, இன்னொரு வேலை கொடுத்தான் அரக்கனுக்கு.

அதையும் உடனே செய்து முடித்தான் அரக்கன்!

மீண்டும் வேலை கேட்டான்!

“ஏதுடா இது வம்பு? ” என யோசித்த விவசாயியின் மனைவி, ஒரு தந்திரம் செய்தாள்!

“சரி! ஒரு வேலை சொல்கிறேன்! இந்த ஊர்க் கோடியில் ஒரு நாய் உள்ளது! அதன் வால் வளைந்து இருக்கும்! அந்த வாலை நீ நிமிர்த்திவிட்டு வா!” என்றாள் அவள்.

“சரி!” எனப் புறப்பட்ட அரக்கன் திரும்பவே இல்லை!

“நல்ல வேளை! அரக்கனிடமிருந்து நாம் தப்பித்துவிட்டோம்!” என்று அந்தச் சோம்பல் விவசாயி நிம்மதி அடைந்தார்!

அப்போது அவருக்குப் புரிந்தது - அவரவர் வேலையை அவரவரே சுறுசுறுப்பாகச் செய்யவேண்டும்! சோம்பல் கூடாது என்று!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 31, 2022 2:48 pm

நாயின் வாலை நிமிர்த்தமுடியாது என்பதற்கு சரியான கதை இதுதான்.

அருமை. கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 103459460 கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 6 1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக