புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 2 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 2 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 2 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 2 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 2 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 2 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 2 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 2 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடச் சிறுவர் கதைகள் (50)


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 02, 2022 6:50 pm

First topic message reminder :

கன்னடச் சிறுவர் கதைகள் (1)

தூங்கிக் காலத்தைக் கழிக்காதே !

“பிள்ளைங்களா! சீக்கிரம் எழுந்திருங்கள்! எழுந்திருந்து பல்லை விளக்கிச், சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்புங்க!” எனத் தாய் அதட்டினாள். “சீக்கிரம்! நேற்று லேட்டா போனதுமாதிரி இன்றும் போகக் கூடாது!” என்று துரிதப் படுத்தினாள்!

“சரி! வாங்க கூட்டிட்டுப் போறேன்! பள்ளிக்கு நடந்து போகக் கொஞ்சம் நேரம் ஆகும்! அதுவரை ஒரு கதை சொல்கிறேன்!” என்று தாய் கூறச், “சொல்லுங்க சொல்லுங்க” என்றனர் பிள்ளைகள்.
தாய் கதை சொன்னாள்.

ஒரு காட்டில் சில முயல்கள்! அவைகளுக்குள் ஒரு தலைவன்!

ஒரு நாள் தலைவன் முயல், பிற முயல்களைக் கூட்டியது; ஒரு முயல் மட்டும் வரவில்லை! கூப்பிடப் போன முயலிடம், ‘எனக்குத் தூக்கம் தூக்கமா வருது!என்னைத் தொந்தரவு செய்யாதே! போ!’ என்றது தூங்கும் முயல். “இல்லை! நம் தலைவர் நல்ல விஷயங்களைக் கூறவுள்ளார்! அவர் அனுபவசாலி! நீ இப்படித் தூங்காதே! ” என்றது கூப்பிடப் போன முயல். அதற்கும் தூங்கும் முயல் மசியவில்லை!

முயல் கூட்டத்தில், தலைவன் முயல், “கேளுங்க முயல்களே! மழைக்காலம் வரப்போகுது! காரட்டுகளை எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலம் பார்த்து நரிகள் நம்மைத் தாக்கும்! பாதுகாப்பாக நாம் வேறு இடம் சென்று தப்பித்துக் கொள்ள வேண்டும்; இங்கு இருக்கக் கூடாது!” என்றது.

தலைவன் முயல் சொன்னது போலவே சில நரிகள் வந்தன! நரிகள், “ அட! ஒரு முயலையும் காணோமே! எல்லாம் போய்விட்டனவே! இன்று நாம் பட்டினிதான்! என்று புலம்பின!
அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அந்த முயல், “ஹாவ்! … தூக்கம் தூக்கமா வருது!...எங்கே யாரையும் காணலை? ” என்று விழிக்கவே, நரிகள் அதைப் பார்த்துவிட்டன! அவை அத் தூங்குமூஞ்சி முயல் மீது பாய்ந்து கொன்று, தின்றன!

“பிள்ளைகளே! கேட்டீர்களா? இதிலிருந்து என்ன தெரிகிறது? சோம்பல் பட்டுக்கொண்டு , எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது என்பது புரிகிறதா?” எனத் தாய் கூறவும், பிள்ளைகள், “புரிகிறது! புரிகிறது!என்று உரக்கத் தலையாட்டிக் கூறினர்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 08, 2022 6:07 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (6)

சிங்கமும் சுண்டெலியும் !

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது!

ஒரு நாள் அது தூங்கிக் கொண்டிருந்த போது, ஒரு சுண்டெலி, சிங்கத்தின் முதுகின்மேல் ஏரி விளையாடத் தொடங்கியது!

விழித்த சிங்கம், “ஏய் சுண்டெலி! உன்னைத்ன் தின்றுவிடுகிறேன் பார்! என் முதுகில் ஏறி, என் தூக்கத்தைக் கெடுத்துவிட்டாய்!” எனக் கத்தியது!

“மன்னியுங்கள் சிங்க ராஜா! நான் தப்பித்துப் போனால், உமக்கு ஒரு நாள் உதவி செய்வேன்” என்று கெஞ்சியது!

“ஹாஹா! நீ எனக்கு உதவி செய்வியா? ஹாஹா…” என ஏளனமாகச் சிரித்த சிங்கம், “சரி! இந்த முறை தப்பித்துப் போ!” என்று விட்டுவிட்டது!

சில நாட்கள் கழிந்து ஒரு நாள், சிங்கம் திடீரென்று அலறியது!

“யாராவது காப்பாற்றுங்கள்! நான் வலையில் மாட்டிக்கொண்டேன்! காப்பாற்றுங்கள்! ” எனக் கத்தியது!

இதைப் பார்த்த சுண்டெலி, அருகில் போய், வலையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பல்லால் கடித்து வெட்டியது!

சிங்கம் வலையிலிருந்து விடுபட்டது!

“நான் இனிமேல் யாரையும் ஏளனமாகப் பேச மாட்டேன்!” என்று சிங்கம் அப்போது சுண்டெலியிடம் கூறியது!

யாரும் மட்டமானவர்கள் அல்ல! அவரவர் சிறப்பு அவரவரிடம் இருக்கத்தான் செய்யும்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 08, 2022 8:30 pm

சிறு வயதில் படித்தது.
இப்பொழுதும் பள்ளிகளில் இவை உலா வருகின்றனவா ?

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 09, 2022 6:31 pm


கன்னடச் சிறுவர் கதைகள் (7)

மரமும் பறவையும் !

ஒரு காட்டில், ஒரு பறவை தன் இனப் பறவைகளுடன் வாழ்ந்தது!

மழைக் காலம் வரத் தொடங்கியது!

“இனி மழைதான்! காற்றும் பலமாய் வீசும்! நாம் வலுவான ஒரு கூட்டை நல்ல மரத்தில் கட்ட வேண்டும்!” என்று நினைத்த அப் பறவை, ஒவ்வொரு மரமாகப் போய்க் கேட்டது!
உயர்ந்த வேப்ப மரத்திடம் போய், “வேப்ப மரமே! நான் உன் கிளையில் கூடு கட்டிக்கொள்ளவா? என் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும்!” என்று கேட்டது!

“முடியாது! நான் அனுமதிக்க முடியாது! வேறு இடம் பார்!” என்றது வேப்ப மரம்!

“சரி!” என்று வேறு மரங்களைக் கேட்கத் தொடங்கியது அப் பறவை.

ஒரு மா மரத்திடம் போய், “உன் கிளையில் கூடு கட்டிக் கொள்ளவா?” எனக் கேட்டது!
மா மரம், “சரி! நன்றாகக் கட்டிக்கொள்! நான் உனக்கு உதவிகள் செய்கிறேன்! உன்னையும் உன் குழந்தைகளையும் காப்பாற்றுவேன்!”என்றது!

“சரி!”என்று அப் பறவை, அந்த மா மரத்தில் கூடு கட்டியது.

எதிர்பார்த்தது போலவே, பலத்த மழையும் காற்றுமாக வரவே, தனக்கு முன்பு அனுமதி மறுத்த அந்த வேப்ப மரம் சாய்ந்து, அருகிலிருந்த ஆற்றில் விழுந்து மிதக்க ஆரம்பித்தது! நீரில் அடித்து வரப்பட்ட அந்த வேப்ப மரம், மா மரத்தின் அருகே வரவும், மா மரத்தில் கூடு கட்டியிருந்த அப் பறவை, “ஏ வேப்ப மரமே! பார்த்தாயா? எனக்கு அனுமதி கொடுக்காத உன் கதியை!” என்று கேலி பேசியது!

அதற்கு அந்த வேப்ப மரம், “பறவையே! நான் உனக்கு ஏன் கூடு கட்ட அனுமதி தரவில்லை தெரியுமா? நான் வயதானவன் ! என் வேர்கள் பலகீனமானவை! என் கிளையில் கூடு கட்டினால், உனக்குப் பாதுகாப்பு இருக்காது! உனக்குச் சொன்னது போலவே வேறு சில பறவைகளுக்கும் நான் அனுமதி தரவில்லை! ஆனால். நான் வலுவாக இருந்தபோது எத்தனையோ பறவைகளுக்குக் கூடு கட்ட இடம் தந்துள்ளேன்! சரி! மா மரத்தில் நீ ஜாக்கிரதையாக இரு!பக்கத்து ஊரார்கள் மோசமானவர்கள்! மாம்பழம் பறிக்க வரும்போது உன் கூட்டையும் சிதைத்து விடுவார்கள்! நீ எச்சரிக்கையாக வாழ்ந்துகொள்! ” என்றது!

பறவை வெட்கம் அடைந்தது! தன் தவற்றை உணர்ந்தது!

ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நோக்கத்துடன் இருப்பது! ஏதோ நாம் அவற்றில் காணும் ஒரு குறைக்காக அதனை மட்டமாக நினைத்து வெறுக்கக் கூடாது!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் - Eco Kannada)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 10, 2022 11:25 am

கன்னடச் சிறுவர் கதைகள் (8)

பறவைகளும் ஆந்தைகளும்!

ஒரு காட்டில் ஒரு மரம் இருந்தது!

அந்த மரத்தில் அநேகப் பறவைகள் இருந்தன!

அதற்கு எதிர்த்த திசையில் ஒரு குகை இருந்தது! அந்தக் குகையில் பல ஆந்தைகள் வாழ்ந்தன!

ஆந்தைகள், இரவு நேரத்தில், பறவைக் கூடுகளைக் கலைப்பதும், பறவைக்குக் காயம் ஏற்படுத்துவதுமாகத் தொல்லை கொடுத்தன!

இதைத் தடுக்க நினைத்த பறவைகள், ஒரு கூட்டம் போட்டன! “ஆந்தைகளை நாம் விரட்டவேண்டும்; ஆந்தைகளை அடித்துத், தொல்லை வராமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்!” எனப் பேசின. அப்போது, ஒரு முதிர்ந்த காக்கை, “புத்தியால் ஆந்தைகளை வெல்லவேண்டும்! அடித்துத் துரத்த நமக்குச் சக்தி போதாது!”என்றது. ஆனால், பிற பறவைகள் கேட்காது, “இல்லை! சக்தியால்தான் ஆந்தைகளை வெல்லவேண்டும்! புத்தியால் முடியாது!”என்று தீர்மானித்தன!

இரவு வந்தது! வழக்கம்போல ஆந்தைகள், பறவைகள் இருக்கும் மரத்தை நோக்கி வந்தன! இதை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பறவைகள், “தாக்குங்கள்!” என்று கத்திக்கொண்டே, ஆந்தைகள் மீது பாய்ந்தன!

ஆனால் ஆந்தைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை!இரவில் ஆந்தைகளுக்குக் கண் நன்றாகத் தெரியும்; மற்ற பறவைகளுக்கு அவ்வளவாகக் கண் தெரியாது!
ஆந்தைகளால் காயம் பட்டதுதான் மிச்சம்!

அப்போது அந்த வயதான காக்கை சொன்னது, “நான்தான் சொன்னேனே! புத்தியால்தான் ஆந்தைகளை வெல்ல வேண்டும்!”

“சரி! நீயே ஒரு யுக்தி சொல்!” என்றன பறவைகள்.

வயதான அக் காக்கை தனது யுக்தியைக் கூறியது!

அந்த யுக்திப் படியே , பிற பறவைகள், அந்த காகத்தைத் தாக்கிக் காயமும் செய்தன!
காயத்துடன் சென்ற வயதான காகம், நேரே ஆந்தைகளின் தலைவரைப் பார்த்தது!

“ஆந்தைத் தலைவரே! என்னைக் காப்பாற்றுங்கள்! பறவைகள் என்னைக் கொல்லப் பார்க்கின்றன! நீரே நல்லவர்! நீதான் பலசாலி! எனக்கு அடைக்கலம் தாரீர்!” என்றது!
புகழ்ச்சியில் மயங்கிய ஆந்தைத் தலைவர், “சரி! உன்னை நான் காப்பாற்றுகிறேன்! நீ இங்கேயே இரு!”என்றது!

“நான் குகைக்கு வெளியே ஒரு கூடு கட்டி, அதில் இருக்கிறேன்!”என்று அதற்கு அனுமதியும் வாங்கியது, அந்த வயதான காகம்!

குகைக்கு வெளியே கூடுகட்டி வாழ்ந்த காக்கை, பகலில் அதன் பழைய நட்புப் பறவைகளை வந்து வந்து பார்த்து, ஆலோசனைகளைக் கூறி வந்தது!

வயதான அக் காக்கையின் திட்டப்படி, குறித்த நாளில், எல்லாப் பறவைகளும் சிறுசிறு குச்சிகளைக் குகைக்குள் போடவே, இரு கற்களைத் தட்டி நெருப்பை உண்டாக்கி, அக் குச்சிகளின் மீது பற்றவைத்தது அந்த வயதான காக்கை!

குகைக்குளே மாட்டிக்கொண்டன ஆந்தைகள்! குகை வாசலில்தான் நெருப்பு எரிகிறதே?

ஒரு வழியாக எல்லா ஆந்தைகளும் தீயில் கருகிச் செத்தன!

அதற்குத்தான் யுக்தியை உபயோகித்துக் காரியங்களைச் செய்ய வேண்டும் என்பது!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் - Eco Kannada)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 11, 2022 9:39 am

கன்னடச் சிறுவர் கதைகள் (9)

புத்திசாலிப் பசு!

ஒரு கிராமத்தில் சிவய்யாவும் , அவன் மனைவி பார்வதியும் வாழ்ந்துவந்தனர்!

சிவய்யா ஒரு பசுவை வாங்கி வந்தான்!

“நீ வாங்கினாயா? பசு நன்றாக இருக்கிறதே! சரி! நான் நாளை வந்து விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்!” என்றான் சிவய்யாவிடம் ஒரு கசாப்புக் கடைக்காரன்!

இதைக் கேட்ட பசு, “ஐயோ! ஆபத்தாயிற்றே? நாம் ஒரு தந்திரம் செய்யவேண்டும்!” என நினைத்தது!

பசு, சிவய்யாவிடம், “எஜமானரே! நான் சில மாதங்களில் தங்கச் சாணி போடுவேன்! நான் ஒரு மாயப் பசு!” என்றது!

“அப்படியா?” என்ற சிவய்யா, தன் மனைவியிடம் இதைக் கூறினார்!

அடுத்த நாள் வந்த கசாப்புக் கடைக்காரரிடம், “நான் பசுவை விற்பதாக இல்லை!”எனக் கூறித் திருப்பி அனுப்பிவிட்டார் சிவய்யா!

அதன்பின், அந்த வீட்டுக்குச் சில உதவிகளைச் செய்தது அப் பசு!
வீட்டுக்குத் தண்ணீர் கொண்டுவந்து சேர்த்தது! முதுகில் இருபுறமும் இரு குடங்களைத் தொங்கவிட்டுத் தினமும் தொலைவிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தது!
சில நாட்கள் கழிந்தன!

அப் பசு அழகான கன்று ஒன்றை ஈன்றது!

அதன்பின் நிறையப் பாலைத் தரலாயிற்று அப் பசு! அதனை விற்றுப் பணம் சம்பாதித்தார் சிவய்யா!

“இந்தப் பசு வந்ததிலிருந்து நம்ம வீட்டில் எல்லாம் நன்றாகவே நடக்கிறது! என்று சிவய்யாவும் பார்வதியும் பேசிக்கொண்டனர்!”

ஒருநாள் இரவில், ஒரு திருடன் வீட்டுக்கு வந்து, கத்தியைக் காட்டிப் பணம்,நகைகளைத் தந்துவிடுமாறு அதட்டினான்!

அதனைக் கேட்ட அப் பசு, தன் கொம்பினால் கதவை முட்டித் திறந்து அத் திருடனிடம் சென்றது!

திருடன் கத்தியால் அப் பசுவைக் கொல்ல முயன்றான்! ஆனால், அதற்குமுன் பசு, தன் கொம்புகளால் அத் திருடனைக் குத்தியது! திருடன் காயத்துடன் ஓடிவிட்டான்!

“நீ எங்களுக்கு மறு ஜென்மம் கொடுத்துவிட்டாய்!” எனப் பசுவைப் புகழ்ந்தனர் சிவய்யாவும் பார்வதியும்!

“நாம் நம்மை மாயப் பசு என்று இவர்களிடம் பொய் சொல்லிவிட்டோமே? உண்மையைச் சொல்லிவிடலாம்!” என்று பசு முடிவுக்கு வந்தது!

சிவய்யா - பார்வதியிடம், அப் பசு, “”நான் மாயப் பசு அல்ல! எனது வயிற்றிலிருந்த என் கன்றைப் பாதுகாக்கவே அப்படிச் சொன்னேன்! என்னை மன்னித்துவிடுங்கள்!” என்றது!
சிவய்யாவும் அவரது மனைவியும் இதைக் கேட்டு , “அப்படியா? நீ நல்ல பசு!எங்களுக்கு உன்னால் பணம் உட்பட எல்லாம் கிடைக்கிறது! நாங்கள் உன்னை யாருக்கும் விற்க மாட்டோம்!” என்றார்கள்!

பசு மிகவும் மகிழ்ந்தது!

புத்திசாலித்தனம் வாழ்வில் வேண்டும்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – Chandvika TV Kannada)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 11, 2022 3:17 pm

அருமை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 12, 2022 9:43 am

நன்றி இரமணியன் ! நன்றி ஐயாசாமி ராம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 12, 2022 9:44 am

கன்னடச் சிறுவர் கதைகள் (10)

நீர் யானையும் குரங்கும் !

நீர் யானை பருத்த உடல் கொண்டது!ஒரு நாள் அது, நீரிலிருந்து வெளிவந்தது!

அப்போது, ஒரு முயல் வந்து, “ஏ நீர் யானையே! நீ ஏன் இப்படிப் பருத்து இருக்கிறாய்? சோம்பேறி நீ! நீ ஏன் நடந்து நடந்து உடலை இளைக்கச் செய்யக் கூடாது?’’ எனக் கேட்டது.

“அதுவா? நானும் நடந்து பார்த்தேன்! நான் காட்டில் நடந்தால், எல்லாப் பிராணிகளும், ஓடி ஒளிகின்றனவே? புதருக்குப் பின்னால் மறைகின்றனவே?” என்றது நீர் யானை.
ஒரு குரங்கு வந்து, “ஏ நீர் யானை! நீ வெயிலில் நின்று உடலைக் காய வை! உன் கொழுப்புக் குறைந்து இளைத்துவிடுவாய்!” என்றது.

நீர் யானையும் வெயிலில் வந்து உடலைக் காய வைத்தது!

உடல் சற்று இளைக்கவே, நீர் யானை ஜாலியாக ஆடிக்கொண்டு வந்தது! நேரே அதன் அம்மா முன்னே போய் நின்றது!

அந்த நிலையில் நீர் யானையைப் பார்த்த அதன் அம்மா , “ஏய் குட்டி! நீ உடம்பை எல்லாம் குறைக்கவேண்டாம்! பழைய உடம்பில்தான் நீ நன்றாக இருக்கிறாய்! அது மட்டுமல்ல , தண்ணீரில் உலவுவதற்கும் வாழ்வதற்கும் இந்தப் பருத்த உடம்புதான் தோது!” என்று உண்மையை விளக்கியது!

எதுவும் அதனதன் சூழலில் , அதனதன் உடல் அமைப்பில், வாழ்வதுதான் சிறந்தது!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – infobells)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 13, 2022 4:22 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (11)

உழைப்புக் கேற்ற பலன் !

ஒரு கோழி தன் பிள்ளைகளுக்காக ஒரு நாள் கேக் செய்ய நினைத்தது!

பிள்ளைகளில் இளைய பிள்ளை பெண் கோழி; மூத்த பிள்ளை ஆண் கோழி!ஆண் கோழி சோம்பேறி!சிறிய பெண் கோழி சுறுசுறுப்பானது!

தாய்க்கோழி கேக் செய்வதற்குச் சாமான்கள் வாங்கப் போனது!அதன் பின்னே, மகள் கோழியும், “நானும் வருகிறேன்” எனத் தொடர்ந்தது!

பிறகு, அம்மாக் கோழி கேக் செய்யும்போது, மகள் கோழி, தாய்க்கு உதவி செய்தது! பால் , சர்க்கரை முதலியவற்றை எடுத்துக் கொடுத்தது!

கேக் தயார்!

“வாங்க கேக் சாப்பிடுங்கள்” என்று இரு பிள்ளைகளையும் அழைத்தது தாய்க் கோழி.
மகள் கோழிக்குப் பெரிய துண்டுக் கேக்கையும், மகன் கோழிக்குச் சிறிய துண்டுக் கேக்கையும் சாப்பிடக் கொடுத்தது தாய்க்கோழி!

“ஏன்? எனக்கு மட்டும் சிறியது? இவளுக்கு மட்டும் பெரியது?” – கேட்டது மகன் கோழி!

“அதுவா? அவள் உழைப்புக்காரி! என்னோடு கடைக்கு வந்தாள்! கேக் செய்யப் பல உதவிகள் செய்தாள்! ஆனால், நீ? நீ கட்டிலில் படுத்துத் தூங்கியபடியே இருந்தாய்! யார் உழைக்கிறார்களோ அவர்களுக்கு அதன் பலனும் கூடுதலாகக் கிடைக்கும்!” என விளக்கியது தாய்க்கோழி!

உழைப்பிற் கேற்றவாறே பலன்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் –KooKooTV)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 13, 2022 4:32 pm

உழைப்பிற்கேற்ற பலன். சரிதான்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக