ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை)

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) Empty பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை)

Post by mohamed nizamudeen Fri Dec 31, 2021 5:16 pm

ஃப்ரான்ஸிலிருந்து வெளிவரும் 'தமிழ்நெஞ்சம்' ஜனவரி 2022 மாத இதழில் வெளியாகியுள்ள எனது சிறுகதை!

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) L23JOkk

அவரவர்க்கு உரியது  (சிறுகதை)
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்
------------ --------

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து சிராஜுத்தீன் வெளியில் வந்தபோது நேரம் மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. அலுவலகக் கட்டடத்தின் வாயிலருகிலேயே இருந்த ப‌ஸ் ஸ்டாண்டுக்கு வ‌ந்து பஸ்ஸுக்காக காத்திருந்தான்.
ப‌ஸ் வரக்காணோம்.

அப்பொழுது தரையில் கிடந்த கலர் பேப்பரை எடுத்துப்பார்த்தான். அட! ரிசர்வ் பேங்க் கவர்னர் கையெழுத்துப் போட்டிருந்த 500 ரூபாய் தாள்!

சிராஜுத்தீனுடைய டூ வீலர் பழுதாகி, உதிரி பாகங்கள் மாற்ற 450 ரூபாய் ஆகும் என்று பழுது நீக்குநர் சொன்னதால் அவன் இன்று பஸ்ஸில் அலுவலகத்திற்கு வந்திருந்தான். 

கைவசம் இருப்பதோ 500 ரூபாய் மட்டிலுமே. இன்னும் இந்த மாதத்தின் ஐந்து நாட்களை ஓட்டவேண்டும். இந்த நிலையில்தான் அந்த பஸ் ஸ்டாண்டில் 500 ரூபாய் கிடக்கிறது.

சிராஜுத்தீன் சுற்றும் முற்றும் பார்த்தான். இது யாருடைய பணம்? இதை எப்படி உரியவரிடம் சேர்ப்பது? காவல் நிலையத்தில் கொடுத்தாலும் அது எங்கு போய் சேரும் என்பதை யோசித்தான்.

'சரி, இந்த பணத்தை பள்ளிவாசலின் உண்டியலில் சேர்த்துவிடுவோம்' என்ற முடிவுடன், வந்த பஸ்ஸில் ஏறினான்.

கடைத்தெரு பஸ் ஸ்டாப்பில் இறங்கி, ஐந்து வயது மகள் ஜன்னத்திற்கு மிகவும் பிடித்த மாதுளம் பழம் வாங்கிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

"அத்தா" என்று மகிழ்வோடு ஓடிவந்தவளை தூக்கி கன்னத்தில்
முத்தமிட்டு, கீழே இறக்கியபோது, "அத்தா, அத்தா, ஒரு காரு
வேகமா என்மேலே மோதவந்துச்சித்தா..." என்றாள் ஜன்னத்.

"பஸ்ஸிலே வந்து ரொம்ப களைப்பா இருக்கீங்க, இந்த டீயைக்
குடிங்க" என்று சொல்லி டீயைக் கொடுத்த அவன் மனைவி ஆபிதா,
"நம்ம ஜன்னத் சாயங்காலம் தெருவிலே விளையாடிக்கிட்டிருக்கும் போது யாரோ ஒருத்தன், என்னத்தைக் குடிச்சிருந்தான்போல... தாறுமாறாக் காரை வளைச்சி, வளைச்சி ஓட்டிட்டு வந்திருக்கான். அப்போ எதிர்வீட்டுக்கு வந்து வெயிட்டிங்ல இருந்த ஆட்டோ
டிரைவர் அபுல்ஹஸன் பாய்ஞ்சி புள்ளையைத் தூக்கிக்கிட்டு
உருண்டு சின்ன காயம்கூட படாம புள்ளயக் காப்பாத்திட்டான். ஆனால் அவனுக்குத்தான் கை, காலெல்லாம் அடி. அப்படியும் அவன் உடனே சவாரிக்குப் போயிட்டான்" என்று விளக்கமாகச்
சொல்லி முடித்தாள்.

ஆட்டோ டிரைவர் அபுல்ஹஸன் நாணயமானவன். சரியான
கட்டணம்தான் வாங்குவான். இருப்பினும் கஷ்டப்படும்
குடும்பம்தான்.

"அல்ஹம்துலில்லாஹ்!" (அல்லாஹ்வுக்கு நன்றி!) என்று கூறி எழுந்தவன், "இதோ அஞ்சி நிமிஷத்துலே வந்திடுறேன்,
ஆபிதா" என்றவண்ணம் செருப்பினுள் காலை நுழைத்தான்.

அந்த ஐனூறு ரூபாயை எங்கே, யாரிடம் கொடுக்கவேண்டும் என்பதை அவன் முடிவு செய்துவிட்டான். 'சம்பளம் வந்ததும் பள்ளிவாசல் பைத்துல்மால் உண்டியலில் முன்பு நினைத்த
ஐனூறு ரூபாயைப் போடணும்' என்று
நிய்யத் (நேர்ச்சை) செய்துகொண்டான்.
*

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) Y2f6A9e

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1771
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) Empty Re: பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை)

Post by T.N.Balasubramanian Fri Dec 31, 2021 5:37 pm

மிக்க மகிழ்ச்சியாக உள்ளது முகமது நிஜாமுதீன் அவர்களே,
அருமையான கதை. ரசித்தேன்.

வாழ்த்துகள்.

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) 364346245010211

ரமணியன்

@mohamed nizamudeen

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) Empty Re: பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை)

Post by mohamed nizamudeen Fri Dec 31, 2021 5:48 pm

@T.N.Balasubramanian...

சார்!!!
தாங்கள் இரசித்ததும் பின்னூட்டமிட்டதும் வாழ்த்தியதும் மனதிற்கு மிகுந்த மகிழ்வைத் தந்தன.
மனமார்ந்த நன்றிகள் சார்!

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) 1571444738

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1771
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) Empty அவரவர்க்கு உரியது - நிஜாம் (சிறுகதை)

Post by mohamed nizamudeen Sun Jan 16, 2022 4:50 pm

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) LWkPhkW

பிக் பாக்கெட்! (சிறுகதை)
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்

மிகுந்த கூட்டமாக இருந்த பேருந்தில் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் ஏறினார் ஒரு தாய். என்னருகே வந்து நின்று கொண்டவரிடமிருந்து அந்த குழந்தையை, உட்கார்ந்திருந்த நான் வாங்கிக் கொண்டேன்.

புன்னகை முகத்துடன் இருந்த குழந்தையின் உடலில் காது, கழுத்து, கை, கால் எங்கும் பொன்னகைகள் அலங்கரித்தன.

அந்த தாயிடம், "என்னம்மா, குழந்தையின் உடம்பு முழுதும் கவரிங் நகைகளா?" என்று சத்தமாக நான் கேட்டேன்.

"என்னது, கவரிங் நகைகளா? எல்லாம் பவுன் நகைகள்!" என்று உடனடியாக பதில் சொன்னார் அந்த தாய்.

இப்பொழுது பேருந்தில் இருந்தவர்கள் அனைவரின் பார்வைகளும் அந்த குழந்தையின் மேல் தான்.

'அப்பாடா, இனி பிக்பாக்கெட் திருடன் எவனும் குழந்தையை நெருங்க மாட்டான். நகை கீழே விழுந்து விட்டாலும் கூட நமக்கு எந்த கவலையும் இல்லை; ஏனென்றால் பஸ்ஸில் எல்லோருடைய பார்வையும் குழந்தையின் மேலேதான்' என நிம்மதியாக பயணத்தை தொடர்ந்தேன்.
*

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) VomN5Qf

திருவண்ணாமலையில் 26/12/2021 அன்று நடந்த 'தமிழக எழுத்தாளர்கள்' குழுவின் 7-ஆவது சந்திப்பில் வெளியிடப்பட்ட, குழு உறுப்பினர்களின் படைப்புகளின் தொகுப்பு நூலான 'அருணையில் பூத்த மலர்கள்' நூலில் இடம்பெற்ற எனது படைப்பு.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1771
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

ayyasamy ram and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) Empty Re: பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை)

Post by T.N.Balasubramanian Sun Jan 16, 2022 9:39 pm

மனோ தத்துவ கதையை சார்ந்ததோ!
அருமை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) Empty Re: பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை)

Post by mohamed nizamudeen Sun Jan 16, 2022 10:23 pm

@T.N.Balasubramanian

தங்கள் அன்பான கருத்துரைக்கு நன்றி சார்!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1771
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) Empty அவரவர்க்கு உரியது - நிஜாம் (சிறுகதை)

Post by mohamed nizamudeen Thu Feb 03, 2022 8:46 pm

'தமிழ்நெஞ்சம்' (ஃப்ரான்ஸ்) பிப்ரவரி 2022 மின்னிதழில் வெளியான எனது சிறுகதை!

உறவுகள் தொடரும்! (சிறுகதை)
-நீடூர் அ.முஹம்மது நிஜாமுத்தீன், பேங்காக்.

வெளியே மழை 'ஜோ'வென பெய்து கொண்டிருந்தது.

'பாண்டியன் கடை'-க்கு மளிகை சாமான்கள் வாங்கச் சென்றிருந்த மகள் மதனா இன்னும் திரும்பி வரவில்லை. 

அப்போதுதான் வாங்கவேண்டிய மளிகைப் பட்டியலில்,
'கடலைப் பருப்பு' என எழுதாதது நினைவில் வந்தது விமலாவுக்கு.
மதனாவுக்கு எப்படி தெரிவிப்பது?
கடை அண்ணாச்சிக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று பார்த்தால்,
அலைபேசியில் மின்கலத்தின் சக்தி தீர்ந்திருந்தது! வீட்டிலும் மின்சாரம் இல்லை.
மழையும் சீராக பெய்து கொண்டிருந்ததால், தானும் செல்ல இயலாமல் விமலா தவித்தாள்.

மழை விட்டு சிறிது நேரத்தில் மதனா வந்துவிட்டாள்.

பையிலிருந்து பொருட்களை எடுக்கும்போது, அதில் கடலைப் பருப்பும் இருந்தது.

"அம்மா! எனக்கு பள்ளி விடுமுறைங்கறதால, நாளைக்கு ஊரிலிருந்து ரெண்டு தாத்தாவும் ரெண்டு பாட்டியும் வர்ராங்கள்ல? தாத்தா ரெண்டு பேருக்குமே
மசாலா வடை பிடிக்கும்; கடலைப் பருப்பு தீர்ந்து போச்சி-னு நீ நேத்து அப்பாட்ட சொல்லிட்டிருந்தியே, அது ஞாபகம் வந்தது. பட்டியலில் நீ எழுத மறந்திட்டே! ஆனா, நான் வாங்கி வந்திட்டேன்! கடலைப் பருப்பைதானேம்மா நீ முதலில் எழுதியிருக்கணும்?" என்று உறவுகளை மதிக்கும் மதனா கேட்டதும் விக்கித்துப்போன விமலா, மகிழ்ச்சி மேலிட "என் செல்லக்குட்டி" என்று மதனாவை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்! •

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) W9qWk00

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1771
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) Empty Re: பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை)

Post by krishnaamma Thu Feb 03, 2022 8:54 pm

mohamed nizamudeen wrote:பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) LWkPhkW

பிக் பாக்கெட்! (சிறுகதை)
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்

மிகுந்த கூட்டமாக இருந்த பேருந்தில் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் ஏறினார் ஒரு தாய். என்னருகே வந்து நின்று கொண்டவரிடமிருந்து அந்த குழந்தையை, உட்கார்ந்திருந்த நான் வாங்கிக் கொண்டேன்.

புன்னகை முகத்துடன் இருந்த குழந்தையின் உடலில் காது, கழுத்து, கை, கால் எங்கும் பொன்னகைகள் அலங்கரித்தன.

அந்த தாயிடம், "என்னம்மா, குழந்தையின் உடம்பு முழுதும் கவரிங் நகைகளா?" என்று சத்தமாக நான் கேட்டேன்.

"என்னது, கவரிங் நகைகளா? எல்லாம் பவுன் நகைகள்!" என்று உடனடியாக பதில் சொன்னார் அந்த தாய்.

இப்பொழுது பேருந்தில் இருந்தவர்கள் அனைவரின் பார்வைகளும் அந்த குழந்தையின் மேல் தான்.

'அப்பாடா, இனி பிக்பாக்கெட் திருடன் எவனும் குழந்தையை நெருங்க மாட்டான். நகை கீழே விழுந்து விட்டாலும் கூட நமக்கு எந்த கவலையும் இல்லை; ஏனென்றால் பஸ்ஸில் எல்லோருடைய பார்வையும் குழந்தையின் மேலேதான்' என நிம்மதியாக பயணத்தை தொடர்ந்தேன்.
*

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) VomN5Qf

திருவண்ணாமலையில் 26/12/2021 அன்று நடந்த 'தமிழக எழுத்தாளர்கள்' குழுவின் 7-ஆவது சந்திப்பில் வெளியிடப்பட்ட, குழு உறுப்பினர்களின் படைப்புகளின் தொகுப்பு நூலான 'அருணையில் பூத்த மலர்கள்' நூலில் இடம்பெற்ற எனது படைப்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1356316

மிக அருமையான சிறு கதை ! புன்னகை...வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) Empty Re: பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை)

Post by krishnaamma Thu Feb 03, 2022 8:56 pm

mohamed nizamudeen wrote:'தமிழ்நெஞ்சம்' (ஃப்ரான்ஸ்) பிப்ரவரி 2022 மின்னிதழில் வெளியான எனது சிறுகதை!

உறவுகள் தொடரும்! (சிறுகதை)
-நீடூர் அ.முஹம்மது நிஜாமுத்தீன், பேங்காக்.

வெளியே மழை 'ஜோ'வென பெய்து கொண்டிருந்தது.

'பாண்டியன் கடை'-க்கு மளிகை சாமான்கள் வாங்கச் சென்றிருந்த மகள் மதனா இன்னும் திரும்பி வரவில்லை. 

அப்போதுதான் வாங்கவேண்டிய மளிகைப் பட்டியலில்,
'கடலைப் பருப்பு' என எழுதாதது நினைவில் வந்தது விமலாவுக்கு.
மதனாவுக்கு எப்படி தெரிவிப்பது?
கடை அண்ணாச்சிக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று பார்த்தால்,
அலைபேசியில் மின்கலத்தின் சக்தி தீர்ந்திருந்தது! வீட்டிலும் மின்சாரம் இல்லை.
மழையும் சீராக பெய்து கொண்டிருந்ததால், தானும் செல்ல இயலாமல் விமலா தவித்தாள்.

மழை விட்டு சிறிது நேரத்தில் மதனா வந்துவிட்டாள்.

பையிலிருந்து பொருட்களை எடுக்கும்போது, அதில் கடலைப் பருப்பும் இருந்தது.

"அம்மா! எனக்கு பள்ளி விடுமுறைங்கறதால, நாளைக்கு ஊரிலிருந்து ரெண்டு தாத்தாவும் ரெண்டு பாட்டியும் வர்ராங்கள்ல? தாத்தா ரெண்டு பேருக்குமே
மசாலா வடை பிடிக்கும்; கடலைப் பருப்பு தீர்ந்து போச்சி-னு நீ நேத்து அப்பாட்ட சொல்லிட்டிருந்தியே, அது ஞாபகம் வந்தது. பட்டியலில் நீ எழுத மறந்திட்டே! ஆனா, நான் வாங்கி வந்திட்டேன்! கடலைப் பருப்பைதானேம்மா நீ முதலில் எழுதியிருக்கணும்?" என்று உறவுகளை மதிக்கும் மதனா கேட்டதும் விக்கித்துப்போன விமலா, மகிழ்ச்சி மேலிட "என் செல்லக்குட்டி" என்று மதனாவை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்! •

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) W9qWk00
மேற்கோள் செய்த பதிவு: 1357367

சின்ன விஷயமானாலும் கவனித்து எழுத்தியுள்ளீர்கள்... அருமை அருமை ! புன்னகை....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) Empty Re: பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை)

Post by mohamed nizamudeen Thu Feb 03, 2022 9:01 pm

@krishnaamma ...

பதிவுக்கு வருகை தந்ததற்கும்
நான் எழுதிய 'பிக்பாக்கெட்' எனும் கதையைப் படித்ததற்கும்
கருத்தினை பதிந்தமைக்கும்
வாழ்த்துகள் வழங்கியமைக்கும் மனமார்ந்த நன்றிகள்!
...

Last edited by mohamed nizamudeen on Thu Feb 03, 2022 9:04 pm; edited 1 time in total

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1771
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

Back to top Go down

பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை) Empty Re: பஸ் சிநேகிதம் -ஒரு பக்கக் கதை)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum