ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்!

2 posters

Go down

தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Empty தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்!

Post by ayyasamy ram Fri Dec 17, 2021 9:02 pm

தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்றால் என்ன
என்பதை விளக்க முடியுமா?

அருந்தாச்செல்வி, திருமங்கலம்.
தீட்டு என்கிற சொல் புரிந்துகொள்ளப் படாமலேயே காலம்
காலமாக பெரும் பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது.
இது குறித்து தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன்
இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள்.
ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு,
பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு. இப்படிப்
பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே.

அதனால்தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர்
வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள். தீட்டுடைய
இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்?

சிந்தித்துப் பாருங்கள். இதுவல்ல உண்மையான தீட்டு.
இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்காக இறைவனின் பெயரைச்
சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுதுதான்
பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான்
இவற்றைச் சொன்னார்கள்.

தீட்டு என்பது வேறு, அவை காமம், குரோதம், லோபம், மதம்,
மாற்சரியம் என்ற ஐந்தும் ஆகும்.

முதலில் காமத்தீட்டு என்றால் என்ன என்பதைத் தெரிந்து
கொள்வோம்.
காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை
வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம்.
நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக
இருப்போம். அதற்காகவே முயற்சி செய்வதும், அலைவதுமாக
இருப்போம். அந்தப் பொருள் கிடைத்துவிட்டால், மனதில் மகிழ்ச்சி
உண்டாகும்.

இல்லையென்றால் மனதில் சதா வேதனை ஏற்படும்.
இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய
முடியாது. இதனால்தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதைத்
தீண்டாதே என்றார்கள்.

இரண்டாவதாக குரோதத் தீட்டு என்பதன் விளக்கத்தினைக்
காண்போம். குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும்
கோபம் வந்துவிட்டால், முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர்,
சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப்
பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன.
சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள்பூராகவும் துன்பம்
அனுபவிப்பார்கள், சிலர் தூக்கில் இடப்படுவார்கள்.

கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை.
கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர்.கோபம் எழும்
பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து
மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி
வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள்.
இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.
இதனால்தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே
என்பர்.

குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.

மூன்றாவதாக வருவது லோபத் தீட்டு. லோபம் என்பது சுயநலம்,
பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும்,
சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும்,
கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும்
என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய
நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே
வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப்
பற்றுடன் பாதுகாப் பதும் எல்லாம் சுயநல வேகமே.

இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய
முடியாது. அதனால்தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத்
தீண்டாதே என்பார்கள்.

இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.

அடுத்து வருவது மதத் தீட்டு. மதம் என்பது கர்வம் (ஆணவம்)
ஒருவரையும் மதிக்காது மமதையோடு இருப்பது இது. எதையும் தானே
சாதிக்க முடியும் என்ற கர்வத்தினையும் தருவது. தான் என்னும்
அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் ஆணவத்தால் யாவரையும்
துன்பப்படுத்தித் தான் மகிழ்ச்சி அடையும் குணத்தினையும் தருவது.
இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய
முடியுமா?

இதனால்தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர்.
அதைத் தீண்டாதே என்பர்.
கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு.

இறுதியாக வருவது மாற்சரியத் தீட்டு. மாற்சரியம் என்பது பொறாமை.
பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்கமுடியாமல் வேதனைப்படுவது இது.
எந்த நேரமும் நாம் நல்லபடியாக இல்லையே என்று தன்னையே நொந்து
கொள்வதும் இது. எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள்
எப்பொழுது கஷ்டப்படுவார்கள், எப்பொழுது செத்துப்போவார்கள்
என்று எண்ணத்தூண்டுவது.

தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் என்பதே இவர்கள் எண்ணம்.
பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு
விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும்
சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப்பட்ட நேரங்களில்
இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா?

இதனால்தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே
என்றனர். இதுதான் ஐந்தாவது தீட்டு. இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள்.
இவற்றைத் தொடுபவர்களே தீட்டு உடையவர்கள் ஆகிறார்கள்.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா
நன்றி- குங்குமம்-ஆன்மீகம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Empty Re: தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்!

Post by krishnaamma Fri Dec 17, 2021 9:51 pm

நல்ல பதிவு அண்ணா புன்னகை........மிக அருமை ......பகிர்வுக்கு நன்றி.....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum