புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_m10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10 
62 Posts - 38%
heezulia
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_m10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10 
55 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_m10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_m10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_m10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_m10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_m10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_m10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10 
313 Posts - 50%
heezulia
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_m10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10 
193 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_m10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_m10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_m10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10 
21 Posts - 3%
prajai
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_m10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_m10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_m10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_m10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_m10தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Mon Jan 18, 2010 7:55 am

தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு
- கோவி லெனின்


முடியாட்சி காலத்திலேயே ஜனநாயகத்தின் மீதான பார்வை தமிழகத்திற்கு இருந்துள்ளது. சோழ மன்னர்கள்
ஆட்சிக்காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட குடவோலை முறை என்பது இன்றைய தேர்தல்
முறைகளுக்கு ஒரு முன் னோடியாக இருந்திருப்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.
ஐம்பெருங் குழு, எண்பேராயம் போன்ற அரசவை நிறுவனங் கள் முடியாட்சிக்குள் முளைவிட்ட
ஜனநாயகக் குருத்துகள் எனலாம்.

பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டிருந்த
காலத்தில் தமிழகம் தேர்தலை சந்தித்தது. இதில் வாக்களிக்கும் உரிமை கொண்ட
குடிமக்களாக வரிசெலுத்துவோர், பட்டம் பெற்றோர் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.
வெள்ளையர்கள் ஆட்சியில் மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் காரணமாக 1919Š-ஆம்
ஆண்டில் இரட்டையாட்சி முறை கொண்டு வரப்பட்டது. அரசியல் சட்டமாக நடை முறைக்கு
வந்தது. இதன்படி ஆளுநருக்கு மட் டுமே பதிலளிக்கக்கூடிய உயரதிகாரிகள் ஒரு பக்கம்
ஆட்சி செய்வார்கள். அதே நேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட
மன்றத்திற்குக் கட்டுப்பட்ட அமைச்சர்கள் கொண்ட அவை இன்னொரு பக்கம் ஆட்சி செய்யும் .


அப்போது நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் கிடையாது. தமிழர்கள்
வாழும் பகுதியுடன் ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றின் சில பகுதிகளும் இணைந்து சென்னை
மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. 1920-ஆம் ஆண்டு முதல் மாகாணத் தேர்தல் நடந்தது.
இரட்டையாட்சி முறையை ஏற்க வில்லை என காந்தியடிகள் அறிவித்ததால், காங்கிரஸ் கட்சி
இத்தேர்தலில் போட்டியிட வில்லை. இத்தேர்தலில் நீதிகட்சி வெற்றி பெற்றது. சென்னை
மாகாணத்திற்கான முதல் அமைச்சரவையில் ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராக (அப்போது
அதற்கு பிரிமியர் எனப் பெயர்) பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் சில நாட்களில்
சுப்பராயலு மரண மடைந்ததால், பனகல் அரசர் என அழைக்கப் பட்ட இராமராய நிங்கார்
முதலமைச்சரானார். 1923-ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் இவரே
முதல்வரானார்.

மருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) ஒரு மாணவன் படிக்க
வேண்டுமென்றால் சமஸ் கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது.
இதனை உடைத்தெறிந்த வர் பனகல் அரசர். இதன் மூலமாக பிற்படுத்தப் பட்ட-தாழ்த்தப்பட்ட
சமுதாயத்தைச் சேர்ந் தவர்களும் பெண்களும் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு
உருவானது பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப் பட்ட மிக முக்கியமான
சீர்திருத்தம், அற நிலையப் பாதுகாப்புச் சட்டம். சரியான பராமரிப்பின்றி
தனிப்பட்டவர்களால் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வந்த கோவில் சொத்து களை
இச்சட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார்.

சென்னை
மாகாணத்திற்கான மூன்றாவது தேர்தல் 1927-ஆம் ஆண்டு நடைபெற்றது. இத் தேர்தலில்
நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியடைந்தனர். அக்கட்சியின் ஆதர வுடன்
சுயேட்சைகளின் ஆட்சி நடைபெற்றது. முதலமைச்சர் சுப்பராயனுடன் எஸ்.முத்தையா
முதலியாரும் எஸ்.ஆர். சேதுரத்தினமய்யரும் அமைச்சரானார்கள். முத்தையா முதலியார்
வகுப்புவாரி பிரதிநிதித்துவ வேலைவாய்ப்பு முறையை சட்டமாகக் கொண்டு வந்தார். 1929-ல்
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒவ் வொரு சமுதாயத்தின்மக்கள்தொகையின் அடிப்படையில்
வேலையினை பங்கீட்டு அளிக்கும் சட்டமாக இது அமைந்தது. 1937 வரை நீதிக்கட்சி ஆட்சி
நீடித்தது.

1937-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்று வெற்றி
பெற்றது. ஜூலை 17-ஆம் நாள் சென்னை மாகாணத்தின் முதல மைச்சராகப் பொறுப்பேற்றார்
சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞரும் ராஜாஜி என அழைக்கப்படுவருமான ராஜாஜியின்
ஆட்சிக்காலத்தில் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதற்கான
ஆலயப் பிரவேசச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. உழவர் கடன் நிவாரணச் சட்டம், கைத்தொழில்
பாதுகாப்புச்சட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களாகும்.


தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர் களுக்கும் இந்தியைக் கட்டாயப் பாட
மாக்கினார் ராஜாஜி. இந்த மொழியாதிக் கத்தை எதிர்த்து பெரியார்-அண்ணா தலை மையில்
தமிழகத்தில் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. பலர் சிறை சென்றனர்.
இரண்டாம் உலகப்போரில் இந்தி யாவை பிரிட்டிஷ் அரசு வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதைக்
கண்டித்து காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தது.

1946-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை
மாகாண தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. டி.பிரகாசம் 1946
ஏப்ரல் 30-ஆம் நாள் முதலமைச்சரானார். இவரையடுத்து, ஓமந்தூர் ராமசாமி ரெட்டி யார்
முதல்வரானார். இந்தியா சுதந்திரமடைந்த போது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர்
ஓமந்தூரார்தான். அவர் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம்
ஆகியவற்றைக் கொண்டு வந்தார். 1949-ல் சென்னை மாகாண கவுன்சிலுக் கான தேர்தல்
நடந்தது. இதிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. குமாரசாமி ராஜா முதல்வரானார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறவரை இவரே முதல்வர் பொறுப்பினை
வகித்தார்.

இந்திய நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் 1952-ஆம்
ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், பல
கட்சி களின் ஆதரவுடன் 1952-ஆம்ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாள் சென்னை மாகாண முதல்வராக
ராஜாஜி பதவியேற்றார். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் நிலவி வந்த
உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ராஜாஜி அக்கறை செலுத்தினார். பண்ணையாள் பாது
காப்பு சட்டத்தின் மூலமாக விவசாயத் தொழி லாளர்களுக்குநலன் விளைவித்தார் ராஜாஜி.
அவருடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டம் பெரும்
சர்ச்சையையும் போராட்டத்தையும் உண்டாக் கியது. இதனால் 1954-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம்
நாள் முதல்வர் பதவியிலிருந்தும் காங் கிரஸ் கட்சியிலிருந்தும் ராஜாஜி
விலகினார்.

அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல் வராகப் பொறுப்பேற்ற காமராஜர்
1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராகப் பணி யாற்றினார் 1957, 1962
தேர்தல்களில் இவ ரது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே வெற்றி பெற்றது. இலவச கல்வி,
மதிய உணவுத் திட்டம், தமிழ் ஆட்சிமொழி சட்டம்,. வைகை நீர்த்தேக்கம், அமராவதி-
சாத்தனூர் -கிருஷ்ண கிரி -மணிமுத்தாறு-ஆரணியாறு நீர்த்தேக்கங் கள் உருவாக்கம்,
குந்தா நீர் மின்திட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் உருவானவை யாகும். மத்திய அரசுடன்
வாதாடி,நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை,
திருச்சி பாரத் மிகுமின் நிலையம், ஆவடி கனரக வாகன தொழிற் சாலை, ஊட்டி கச்சா பிலிம்
தொழிற்சாலை ஆகியவற்றைக் கொண்டுவந்தார். இவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம்
எனப்படுகிறது.

மூத்தவர்கள் பதவி விலகி, புதியவர்களுக்கு வழிவிடுவது என்ற
அவரது திட்டத்தின்படி முதல்வர் பதவியிலிருந்து காமராஜர் விலகிய தால் 1963-ல்
பக்தவத்சலம் முதல்வரானார். இவ ரது ஆட்சிக்காலத்தில் இரண்டாவது இந்தி எதிர்ப்பு
போராட்டம் தீவிரமடைந்தது. மாண வர்கள் போர்க்கோலம் பூண்டனர். இவரே காங்கிரசின் கடைசி
முதல்வர்.

1967-ஆம் ஆண்டு நடந்த நான்காவது பொதுத்தேர்லில் தி.மு.க
வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வராக அண்ணா பொறுப் பேற்றுக் கொண்டார்.
இரண்டாண்டுகளுக் கும் குறைவாகவே ஆட்சி செய்த அண்ணா, நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு
என்ற பெயரைச் சூட்டினார். சீர்திருத்த திருமணச் சட்டம், இரு மொழித் திட்டம், ஒரு
ரூபாய்க்கு ஒரு படி அரிசி, போக்குவரத்து நாட்டுடைமை, இரண் டாம் உலகத்தமிழ் மாநாடு
ஆகியவை இவரது ஆட்சியின் சாதனைகளாகும். 1969 பிப்ரவரி 3-ஆம் நாள் அண்ணா
காலமானார்.

அண்ணாவின் மறைவையடுத்து 1969-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர்
மு.கருணாநிதி, 1969-1971, 1971-76, 1989-91, 1996-2001, 2006 முதல் தற்போது வரை என
5 முறை தமிழக முதல்வராகப் பொறுப் பேற்றுள்ளார். இதில் இரண்டு முறை அவரது ஆட்சி
கலைக்கப்பட்டிருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, பெண்களுக்கு சொத்துரிமை,
சமத்துவபுரங்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழு, மிகபிற்
படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, பெண்கள் திருமண உதவித்திட்டம், குடிசை மாற்று
வாரியம், கைரிக்ஷா ஒழிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் இவரது ஆட்சிக்காலத்து சாதனை
களாகும். தொழில்வாய்ப்புகள் பலவற்றை இவர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் முதல்
முறையாக மதுவிலக்கைத் தளர்த்தியது இவரது ஆட்சியே. மாநிலத்தில் உள்ள பல பாலங்கள்,
கட்டிடங்கள் இவரது ஆட்சியில் கட்டப் பட்டவை. வள்ளுவர்கோட்டம், பூம்புகார்
கலைக்கூடம், குமரிமுனையில் வள்ளுவர் சிலை ஆகியவை இவர் படைத்த பண்பாட்டுச்
சின்னங்களாகும்.

தி.மு.கவிலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். தனது தலைமையில்
அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கினார். 1977-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று
தமிழகத்தின் முதல்வரானார். 1977-1980, 1980-1984, 1984-1987 எனத் தொடர்ச்சியாக 3
முறை வெற்றி பெற்று 11 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பை வகித்து இயற்கையெய்தும் வரை அதே
பொறுப்பில் இருந்தவர். சத்துணவுத் திட்டம், ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு, தஞ்சை
தமிழ்ப் பல்கலைக்கழகம், புகளூர் காகித தொழிற் சாலை ஆகியவை இவரது ஆட்சியின் சாதனை
களாகும். சுயநிதி தொழிற்கல்லூரிகள் இவரது ஆட்சிக்காலத்தில்தான் தோன்றின. ஏழை- எளிய
மக்களின் நலனை மனதிற்கொண்டு இவர் ஆட்சி செய்தார்.

எம்.ஜி.ஆர்
மறைவுக்குப்பின் அவரது துணைவியார் வி.என்.ஜானகி முதல்வரானார். இவரால்
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. ஆட்சி கலைக்கப் பட்டது.
1991-ல் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற, செல்வி ஜெயலலிதா
தமிழகத்தின் முதல்வரானார். 1991-96, 2001-2006 என இருமுறை முதல்வராகி 10 ஆண்டுகள்
தமிழகத்தை ஆட்சி செய் துள்ளார். இடையில், சட்டச்சிக்கல் காரண மாக இவரது பதவி
பறிபோனதால் 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக
இருந்தார். வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. அனைத்து
மகளிர் காவல்நிலையம், கோவில் களில் அன்னதானம், மழை நீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி
சீட்டு ஒழிப்பு, சென்னைக்கு வீராணம் குடிநீர் ஆகியவை இவரது ஆட்சியில் நிறைவேற்றப்
பட்ட திட்டங் களாகும். சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை, காஞ்சி சங்கராச்
சாரியார் கைது ஆகியவை ஜெயலலிதா ஆட்சியின் அதிரடி நடவடிக்கைகளாகும். பொடா சட்டத்தைப்
பயன்படுத்தி நக்கீரன் ஆசிரியர் கோபால், அரசியல் தலைவர்கள் வைகோ, நெடுமாறன் ஆகியோரை
கைது செய்தது, அரசு ஊழியர் கள் மீதான நடவடிக்கைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா
மீது ஆசிட் வீச்சு, ஆளுநர் மீது தாக்குதல், மகாமக குளத்தில் ஏற் பட்ட பலிகள்,
விவசாயிகளின் பட்டினிச் சாவு, நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்த அவலம், வளர்ப்பு
மகன் ஆடம்பரத் திரு மணம் ஆகியவை இவரது ஆட்சி மீது கடும் விமர்சனத்தை
உண்டாக்கின.

தமிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி அமைந்ததால் பல திட்டங்கள்
நிறைவேற்றப் பட்டுள்ள அதே வேளையில், காவிரி பிரச் சினை, முல்லைப்பெரியாறு
பிரச்சினை, பாலாற்று விவகாரம் , கச்சத்தீவு ஒப்பந்தம் என தமிழகத்தின் பறிக்கப்பட்ட
உரிமைகளை மீட்பது சாத்தியமற்றதாகவே உள்ளது. ஜன நாயகத்தில் ஆளுங்கட்சியின் செயல்பாடு
களுக் குத் தூண்டுகோலாக அமைவது எதிர் கட்சி களின் செயல்பாடுகளேயாகும். காங்கிரஸ்
அரசில் கொண்டுவரப்பட்ட பண்ணையாள் பாதுகாப்பு சட்டம், ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம்,
தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூலி உயர்வுச் சட்டம், நில உச்சவரம்பு சட்டம்
ஆகியவை விவசாயிகளின் நலனுக்காக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தொடர்ந்து நடத்தி வரும்
போராட்டங்களின் விளைவுகளே. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு
கிடைத்ததற்கு பாட்டாளி மக்கள் கட்சி (வன்னியர் சங்கம்) நடத்திய போராட்டங்களே
அடிப்படை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கான உரிமைகளைப் பெறுவதில் விடுதலைச்
சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட் டவை தொடர்ந்து போராடி வருகின்றன. சிறு
பான்மை அமைப்புகள், சமுதாய இயக்கங் கள் ஆகியவை நடத்தும் போராட்டங்களின் தாக்கம்
அரசின் திட்டங்களை விரைவுபடுத்து கின்றன. எனவே, ஆட்சியில் பங்கு பெற முடியா
விட்டாலும் மக்களுக்கானப் போராட்டங் களை நடத்தும் கட்சிகள் தங்கள் கொள்கை களில்
வெற்றி பெறுகின்றன.

நீதிக்கட்சி-காங்கிரஸ் - தி.மு.க- அ.தி.மு.க ஆகிய
கட்சிகள் தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்துள்ளன. இந்த ஆட்சிகளில் நிறைவேற்றப் பட்ட
திட்டங்களினால் சமூகநீதி-சமுதாய நல்லிணக்கம்- தனிநபர் வளர்ச்சி- புதிய
தொழில்நுட்பம்- ஏழைகளுக்கான நலத் திட்டங்கள்- புதிய முதலீடுகள்-பண்பாட்டு அடையாளம்
ஆகியவற்றில் தமிழகம் இந்தி யாவின் பல மாநிலங்களுக்கும் முன்னோடி யாகத் திகழ்கிறது.
பரவலான தொழில் வாய்ப்பு கள், நீராதாரங்களைப் பெருக்குதல், சிறு தொழில் வளர்ச்சி,
வேளாண் உற்பத்தி போன்ற துறைகளில் பல படிகள் முன்னேற வேண்டி யுள்ளது. சுயநலன், ஊழல்,
அரசியல் காழ்ப் புணர்ச்சி, தனிநபர் மீதான தாக்குதல் இவற் றைப் பின்தள்ளி மாநில நலனை
ஆளுங் கட்சியும் எதிர்க்கட்சிகளும் மனதில் கொண்டு செயல்பட்டால் தமிழகம் அனைத்து
துறைகளிலும் முதலிடம் பெற்ற மாநிலமாகத் திகழும்.



தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக