ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 09/08/2022
by mohamed nizamudeen Yesterday at 6:36 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:23 am

» கருடாழ்வாரைப் பற்றி சில தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 9:23 am

» காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 6:51 am

» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Mon Aug 08, 2022 9:37 pm

» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Mon Aug 08, 2022 7:32 pm

» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Mon Aug 08, 2022 6:54 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Mon Aug 08, 2022 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Mon Aug 08, 2022 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Mon Aug 08, 2022 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Mon Aug 08, 2022 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon Aug 08, 2022 6:05 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )

3 posters

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )

Post by Dr.S.Soundarapandian Thu Sep 09, 2021 12:32 pm

First topic message reminder :

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (37 - 39 )

37 . வாங்க, ஆட்டோவில் போகலாம்!

நம்ம முத்து மக்களே!
ஆட்டோ நண்பர் வந்தாரே!
கூப்பிட்ட உடனே
வீட்டின்முன் நிற்பாரே!
பள்ளிக்கூடம் கொண்டுபோய்
நம்மையும் சேர்ப்பாரே!
பள்ளி முடிந்து வீட்டுக்கும்
கொண்டுவந்து சேர்ப்பாரே!
ஆட்டோ நண்பரே!
நம்ம ஆட்டோ நண்பரே!

38 .வருதே இரயிலு!

வருதே இரயிலு!
வருதே இரயிலு!
இருப்புப் பாதையில்
வருதே இரயிலு!
சனங்கள் நிரம்பிய
அழகிய இரயிலு இது!
புகையை உமிழும்
நல்ல இரயிலு இது!
மக்கள் மெச்சும்
அழகான இரயில் இது!
மக்கள் விரும்பும்
உன்னத இரயில் இது!
கூகூ…. என்று
கூவும் இரயில் இது!
மக்கள் மெச்சும்
அழகு இரயில் இது!
வருதே இரயிலு!
வருதே இரயிலு!

39 . அழகு வண்ணங்கள் !

அழகு அழகான வண்ணங்கள்!
வாவா அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்!
காக்கையின் நிறம்பார் அதுவே
கறுப்பு கறுப்பு!
கோழியின் நிறமே சிவப்பு!
சிவப்பு! அது சிவப்பு!
மரங்கள் செடிகள் இவற்றின் நிறம்
பச்சை ! அது பச்சை!
மேகத்தின் நிறம் என்ன?
வெள்ளை! அது வெள்ளை!
பூக்களின் நிறமே மஞ்சள்!
மஞ்சள் ! அது மஞ்சள்!
ஆரஞ்சுப் பழத்தின் நிறத்தைப் பார்!
ஆரஞ்சு! அது ஆரஞ்சு!
வானத்தின் நிறம்தான் நீலம்
நீலம் ! அது நீலம்!
காமன் வில்லின் நிறம் பார்!
ஏழுவண்ணம்! அது ஏழுவண்ணம்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் :
infobells.com & KidsTVKannada)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down


request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (76 - 78 )

Post by Dr.S.Soundarapandian Tue Sep 28, 2021 12:06 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (76 - 78 )

76 . மாட்டு வண்டி !

கடமட கடமட வண்டி !
இது எருது இழுக்கும் வண்டி !
கடமட கடமட வண்டி !
கற்களில் ஏறும் வண்டி!
கடமட கடமட வண்டி !
பாதையில் போகும் வண்டி!
கடகட குடுகுடு வண்டி!
உறுதி யான வண்டி!
நம் வினைஞர் செய்த வண்டி!
கடகட கடமட குடுகுடு வண்டி!
எருது இழுக்கும் வண்டி!

77 . குழந்தையின் முதல் சித்திரம் !

சின்னக் குழந்தை ! அது
சுவற்றில் இரு வட்டம் போட்டதே !
நடுவே இரண்டு சின்ன வட்டமே
கீழே ஒரு கோடு போட்டு
அதன்கீழே வளைவுக் கோடு ஒன்று!
இரண்டு சித்திரம் கண்ட தாயும்
சிரித்தபடி வந்தாளே!
ஆசையாய்க் கையில் தூக்கி
‘என்ன படம்?’ என்றாளே!
பெரிய படம் நீங்களே!
சின்னப் படம் நானே!
என்றே குழந்தையும் கூறியது தானே!

78 . அண்ணன் தம்பி சண்டை!

அண்ணன் தம்பி இருவரிடையே
சண்டைதானே எப்போதுமே !
இரச குல்லா உண்பதிலே
இருவருக்கும் சண்டை ஆனதே!
அம்மா வந்தார் சண்டை தீர்க்க !
‘ஆளுக் கொன்று தின்பீரே!’
ஆளுக் கொன்று கொடுத்தாரே!
‘சண்டை கூடாது எப்போதும்
என்றென்றும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும்!’
எண்றாள் அம்மா ஆனாலும்
மீண்டும் சோபாவில் அமர்வதில் சண்டை!
அப்பா வந்தார் சோபாவில் அமர்ந்தார்!
இருவரையும் அழைத்து இருதொடையில் அமர்த்திச்
சொன்னாரே அப்பாவும்
‘சண்டை கூடாது சண்டை கூடாது!
என்றென்றும் ஒற்றுமையாய் இருந்திடுக!’
என்று புத்திமதியும் சொன்னாரே!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்.
கன்னடக் காட்சி ஒலி மூலம் : infobells.com)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (79 - 81 )

Post by Dr.S.Soundarapandian Tue Sep 28, 2021 10:38 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (79 - 81 )

79 . கிறிஸ்துமஸ் !

ஹேப்பி கிறிஸ்துமஸ் !
ஹேப்பி கிறிஸ்துமஸ் !
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
வண்ண வண்ண விளக்குகளே!
நட்சத்திர வடிவ விளக்குகளே!
கிறிஸ்துமஸ் மரம் ஒளிர்கிறதே!
கிறிஸ்துமஸ் ! கிறிஸ்துமஸ்!
நமக்காகாவே கிறிஸ்துமஸ்!
இனிப்புகள் கேக்குகள் எல்லாமே
நம் வாயில் இருக்கிறதே கிறிஸ்துமஸ்!
கிறிஸ்துமஸ் தாத்தா வந்தாரே!
விதவிதமான பரிசுகள் தந்தாரே!
புத்தாடை பொருட்கள் எல்லாமே
ம்கிழ்ச்சியாகத் தந்தரே!
புத்தாடைகளில் பிள்ளைகள்!
தேவா லயத்தில் தொழுதோமே!
கிறிஸ்துமஸ்! கிறிஸ்துமஸ்!

80 . சுத்தமாய் வைத்திருப்போம் !

தூய்மைப் படுத்துவோம் - நாம்
தூய்மைப் படுத்துவோம் !
குப்பைத் தொட்டியில் போடாது
தெருவில் குப்பையை வீசாதே!
தெருவில் கிடக்கும் குப்பைகளைக்
குப்பை யள்ளும் அண்ணா வந்து
பொறுக்கிக் கொண்டு போகணுமே!
அவரும் நம் போல மனிதரன்றோ!
தேசத்தில் எங்கும் குப்பை இல்லாது
பார்த்துக் கொள்வோம் நமே !

81 . புலியப்பா !

புலியப்பா! புலியப்பா!
நம்ம ஊரு எது அப்பா?
நம்ம ஊரு ஆசியா மகனே!
நம்ம வீடு எங்கே உளதப்பா?
பெரிய காடே நம்ம வீடப்பா!
நம்ம இனத்தில் ஒன்பது வகையப்பா!
மூன்று வகை மட்டுமே
இப்போ உள்ளதப்பா!
புலி ஒரு கம்பீரமான பிராணி ஆகும்!
புலி நமது தேசிய விலங்காகும்!
அதைக் காப்பது நமது கடமையாகும்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்.
கன்னடக் காட்சி ஒலி மூலம் : infobells.com)

***

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (82 - 84 )

Post by Dr.S.Soundarapandian Sat Oct 02, 2021 1:11 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (82 - 84 )

82 . நாணயம் !

ஜன ! ஜன! ஜன!
பை நிறையப் பணம்!
மேலே சுண்டி விட்டால்
கீழே வந்து உருளுமே!
டண்! டண்! டண்!
நதியில் ஒரு கொக்கு!
முகத்தைக் கீழே வளைத்தபடியே
ஒரு காலைத் தூக்கி
நடனம் ஆடுமே!
தையத் தக்கா தையா!
சுற்றிலும் பச்சை வனம்!
நடுவே பசுக்கள் மேய்ந்தபடி!
இடையன் குழலை ஊதியே
தனனா! தனனா! தனனா!

83 . பெரிய விமானம் !

எவ்வளவு பெரிய விமானம்!
எப்படிப் பறக்கிறது பார்!
விமானத்தை ஓட்டுவது யாரு?
விமானத்தை ஓட்டுவது விமானி!
யூனிஃபார்ம் அணிந்து இருப்பாரே!
கஷ்டப்பட்டு விமானம் ஓட்டுவாரே!
ஆழமான கடல் எல்லாம்
பயமில்லாமல் கடப்பாரே!
பாதுகாப்பாக நம்மை எல்லாம்
கொண்டு போய்ச் சேர்ப்பாரே!
கண்டம் விட்டுக் கண்டம் பறப்பாரே!
முயற்சி செய்தால் விமானிஆக முடியுமே!

84 . வானவில் !

வான வில்லு! வான வில்லு !
எவ்வளவு அழகான வில்லு!
கண்ணுக்கு அழகான வில்லு!
ஏழு வண்ணங்கள் கொண்ட வில்லு!
பழங்கள் பூக்கள் நிறத்தைக்
கொண்ட வில்லு!
வானத்தையும் பூமியையும்
சேர்க்கும் வில்லு!
- (கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி மூலம் :
infobells.com& YouTube.com/user/APPUSERI)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (85 - 87 )

Post by Dr.S.Soundarapandian Sat Oct 02, 2021 5:37 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (85 - 87 )

85 . பள்ளிக்குப் போகலாம் வா !

பள்ளிக்குப் போகலாம் வா !
முத்துப் பையா போகலாம் வா !
பள்ளிக்குப் போனால்தான்
பாடங்கள் படிக்கலாம்!
பாடத்தில் பயிற்சி கொண்டாலே
நல்ல வேலை கிடைக்கும் பையா!
வேலை கிடைத்தால்தான் – நல்ல
ஆளாக வரமுடியுமே!
நல்ல ஆளாக இருந்தால்தான்
தேசத்தைக் காக்க முடியுமே!
மக்கள் நம்மைப் புகழுவார்களே!

86 . கர்ர்ர் …காகம் !

கர்ரென்று கத்திக் கொண்டு
சர்ரென்று மேலே பறந்து
கிர்ரென்று குப்புற விழுந்ததே
பர்ரென்று இறக்கையில் காயம் வந்ததே !

87 . ஆனை ராஜன் !

ஆனை ராஜன் ஒன்று !
குளத்தில் சுகமாய்க் குளித்ததே
துதிக்கையால் நீரைச் சுற்றிலுமே
பீச்சித் தெளித்ததுவே!
ஆனை தெளித்த நீரால்
செடிகொடி பூக்கள்
மரங்கள் பழங்கள் உண்டாயினவே!
கரடி சிங்கம் இளைப்பாற
நிழல் மரங்கள் தோன்றினவே!
பறவை கூடு கட்டவுமே
மரங்கள் பலவும் முளைத்தனவே!
எல்லோரும் இன்பமாய் இருந்தனரே!

-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி மூலம் :
infobells.com)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )

Post by ayyasamy ram Sat Oct 02, 2021 8:53 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 ) - Page 2 103459460 கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 ) - Page 2 3838410834
-
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 ) - Page 2 Image-73
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77072
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

request Re: கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )

Post by Dr.S.Soundarapandian Sun Oct 03, 2021 10:00 pm

நன்றி சிவா அவர்களே!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (88 - 90 )

Post by Dr.S.Soundarapandian Mon Oct 04, 2021 1:50 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (88 - 90 )

88 . விரல் குடும்பம் !

அம்மா விரலே அப்பா விரலே !
எங்கே இருக்கீங்க?
நானு இங்கே இருக்கேன்! (கட்டை விரல்)
நீங்க எப்படி இருக்கீங்க?
அம்மா விரலே அப்பா விரலே!
எங்கே இருக்கீங்க?
நானு இங்கே இருக்கேன்!
நீங்க எப்படி இருக்கீங்க? (ஆள்காட்டி விரல்)
அண்ணா விரலே அண்ணா விரலே
எப்படி இருக்கீங்க?
நானு இங்கே இருக்கேன்!
நீங்க எப்படி இருக்கீங்க? (நடு விரல்)
தங்கை விரலே தங்கை விரலே!
எப்படி இருக்கீங்க?
நானு இங்கே இருக்கேன் !(மோதிர விரல்)
நீங்க எப்படி இருக்கீங்க?
பப்பு விரலே பப்பு விரலே!
எப்படி இருக்கீங்க?
நானு இங்கே இருக்கேன்!(சுண்டு விரல்)
நீங்க எப்படி இருக்கீங்க?
நாங்கள் எல்லோரும்
இங்கே இருக்கோம்! (ஐந்து விரல்களும்)
நீங்க எப்படி இருக்கீங்க?

89 . சங்கீத வாத்தியங்கள் !

சங்கீத வாத்தியங்கள் !
சங்கீத வாத்தியங்கள்!
சின்னப் பையன் பாட்டுப் பாட
காலால் தம்தம் தாளம் போடச்
சங்கீத வாத்தியங்கள்!
சங்கீத வாத்தியங்கள்!
பியானோ அழுத்தினால் –அது
புஸ்புஸ் என்று ஒலிக்குமே!
கிடார்க் கம்பியை மீட்டினால்- அது
டொய்ங்டொய்ங் சத்தம் எழுப்புமே!
சங்கீத வாத்தியங்கள்!
சங்கீத வாத்தியங்கள்!
டிரம்ஸை அடித்தால் – அது
டம்டம் ஓசையை எழுப்புமே!
நம்ம சங்கீத வாத்தியங்கள்! – அவை
விதவிதச் சத்தங்கள் எழுப்புமே!
ஆஹா ஓஹோ என்றே நானும்
பாடுவேனே ! ஆடுவேனே!
சங்கீத வாத்தியங்கள்!
சங்கீத வாத்தியங்கள்!

90 . இது கோடைக் காலம் !

மின்விசிறி இது மின்விசிறி!
குளிர்க்காற்றுத் தருமே இதுவே!
இளைப்பாறக் காற்றுத் தருமே!
தூக்கம் வரக் காற்றுத் தருமே!
மின்விசிறி ! இது மின்விசிறி!
எல்லா வீட்டிலும் இருக்குமே!
கோடைக் காலம் வந்தால்
வீடுகளில் இருக்கும் இதுவே
வெயிலு காலம் வருகிற போது
எல்லாரு வீடுகளிலும்
இருப்பதே மின்விசிறி!

-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி மூலம் :
infobells.com&Shemarookids.com)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (91 - 93 )

Post by Dr.S.Soundarapandian Thu Oct 07, 2021 5:30 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (91 - 93 )

91 . குவா குவா வாத்து !

குவா குவா வாத்து !
மெல்ல நடக்கும் வாத்து !
ஜோராக நடக்கும் வாத்து!
மேலே கீழே பார்த்துக்
குவாகுவா கத்தும் வாத்து!
குவா குவா வாத்தே நீ
நீரில் நீந்திச் செல்வாய்
பின்தொடர்ந்தே நானும் நீச்சல் கற்பேனே!
குவா குவா வாத்து!

92 . தின்னும் ஓசைகள் !

சப்பாத்தி சப் சப் !
ஜிலேபி ஜும் ஜும் !
அப்பளம் கரும் கரும்!
பாலு, நீரு குடும் குடும்!
ஊறு காயி ட்லாக் ட்லாக்!

93 . முத்துப் பூனை !

முத்துப் பூனை அன்பான பூனை !
மியாவ் மியாவ் பூனை !
சுவையான பால் உனக்கு
நான் தருவேன் ஓடிவா பூனை!
எங்கள் அன்புப் பூனையே!
மீசை வைத்த பூனையே!
மியாவ் மியாவ் பூனையே!
முத்துப் பூனையே!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி மூலம் :
infobells.com;KidstvKannada;DE KIDS)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (94 - 96 )

Post by Dr.S.Soundarapandian Thu Oct 07, 2021 10:19 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (94 - 96 )

94 . அப்பா தந்த காய்கறிகள்!

அப்பா தந்த காய்கறிகள்!
அம்மா சமைத்த காய்கறிகள்!
நல்ல ருசியான காய்கறிகள்!
குண்டாக இருக்கும் கத்தரிக்காய்!
நீளமாக இருக்கும் முருங்கைக்காய்!
பெரிசா இருக்கும் பறங்கிக்காய்!
குட்டை யான வெண்டைக்காய்!
அப்பா தந்த காய்கறிகள்!
அம்மா சமைத்த காய்கறிகள்!

95 . வாழை மரம் !

தானானே தானானே தனத் தானா!
தன்னானே தன்னானே தானனா !
வாழை மரம் வாழை மரம்!
பட்டைகள் சூழ்ந்த வாழை மரம்!
சாப்பிட இலைதரும் மரம்!
சீப்புச் சீப்பாய்ப் பழம்தரும் மரம்!
சமையலுக்கு அம்மாவுக்குக்
காய்கள் தரும் வாழை மரம்!
கல்யாண வீட்டில் கட்டப்படும்
வாழை மரம்! வாழை மரம்!

96 . வண்ணத்துப் பூச்சி !

வண்ணத்துப் பூச்சி !
வண்ணத்துப் பூச்சி!
இறக்கை விரித்தே பறந்து செல்லும்
அழகான வண்ணத்துப் பூச்சி!
எனக்கும் இரண்டு இறக்கை கொடு!
நானும் பூவுக்குப் பூ தாண்டுவேனே!
இறக்கை அடித்துப்
பறந்து பறந்து போவேனே!
வண்ணங்கள் பலகொண்ட
வண்ணத்துப் பூச்சியே!
வண்ணத்துப் பூச்சியே!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி மூலம் :
infobells.com&Magic Box Animation)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )

Post by Dr.S.Soundarapandian Mon Oct 18, 2021 9:05 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )

97 . காகிதக் கப்பல்!

இடிமழை நேரத்தில்
வீட்டுக்குள்ளே இருப்போமே!
நாங்கள் இருப்போமே!
மழை விட்டதும் வெளியே வந்து
ஒன்றாய்க் கூடுவோமே!
நாங்கள் ஒன்றாய்க் கூடுவோமே!
தம்பி தங்கைகளுடன்கூடுவோமே!
காகிதக் கப்பலைச் செய்துதானே
நீரில் விடுவோமே!
கத்திக் கப்பலும் செய்து விடுவோமே!
சேர்ந்து சேர்ந்து கப்பல் தானே
அழகாய்ச் செல்லுமே! நீரில்
அழகாய்ச் செல்லுமே!

98 . பூப்போல் சிரிக்கும் பாப்பா!

பூப்போலச் சிரிக்குமே பாப்பா!
அருமை முத்துப் பாப்பா!
அம்மா அருகே கைகூப்பிக்
கடவுளையே வணங்குமே!
சுவற்றில் கோடுகளை வரையுமே!
கை வலித்து அழும்போது
அம்மா வந்து தேற்றுவாளே!
அம்மா மடியில் படுக்க வைத்துத்
தட்டிக் கொடுத்தால் தூங்கிடுமே!
பூப்போல் சிரிக்கும் பாப்பா!

99 . பொம்மைகள் பாட்டு!

குண்டு குண்டுப் பந்து
பெரிதான குண்டுப் பந்து!
கெட்டியான சுத்தியல்
தட்டி உடைக்கும் சுத்தியல்!
சாவி கொடுத்தால் ஜோக்கர் பொம்மை
கைதட்டி நிற்குமே கைதட்டி!
சிப்பாயிப் பொம்மை நிற்குமே
ஆகா நின்று கொள்வானே!
ஊது குழலை எடுத்து ஊதினால்
ஊவ்ஊவ் ஓசை கேட்குமே!
ஆகா ஊவ்ஊவ் ஓசை கேட்குமே!
வெயிலு மழை வருவதைத்
தடுக்கப் பிடிக்கும் குடைப் பொம்மை!
ஆகா குடைப் பொம்மை!
ஊஞ்சல் பொம்மை ஆடுமே!
ஆகா ஊஞ்சல் பொம்மை ஆடுமே!

100 . பழக்க வழக்கம்!

யாருக்கும் தொல்லை தந்துவிட்டால்
அப்போ சொல்லு ‘மன்னிக்கவும்’!
அது அவங்களை மகிழ்விக்கும்!
‘மன்னிக்கவும்’, ‘மன்னிக்கவும்’
உதவி ஏதாவது வேணுமென்றால்
அப்போ சொல்லு ‘தயவு செய்து’!
அது நல்ல பலனைத் தரும்!
‘தயவு செய்து’, ‘தயவு செய்து’!
யாரும் உனக்கு உதவி செய்தால்
அப்போ சொல்லு ‘நன்றி’!
அது உதவியவருக்கு மகிழ்ச்சி தரும்!
‘நன்றி’ , ‘நன்றி’!
பெரியோரை நீ கண்டால்
அப்போ சொல்லு ‘வணக்கம்’!
பெரியோர் உன்னை மெச்சுவர்!
‘வணக்கம்’ , ‘வணக்கம்’!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி மூலம் :
infobells.com & KidsPlanetKannada)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை