ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை!

Go down

நெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை! Empty நெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை!

Post by ayyasamy ram Tue Sep 07, 2021 5:17 pm

நெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை! 1528445107-3536
-
இரும்பு சத்து அதிகம் கொண்ட நெல்லிக்காயை, ஏழைகளின்
ஆப்பிள் என அழைப்பர். இதில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும்
வைட்டமின்கள் அதிகம் உள்ளன.

ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு
சரியான தீர்வை தரவல்லது நெல்லிக்கனி.

நெல்லிக்காயில் உடல் நன்மைகள் மட்டுமின்றி, அழகு
நன்மைகளும் அதிகம் நிறைந்துள்ளது. அக உடலை மட்டுமல்ல,
கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், சருமம் நன்கு
பொலிவோடு, பளபளவென அழகாக இருக்கும். உடலில் உள்ள,
டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றிவிடுகிறது.

பொலிவிழந்த முடி போதிய கூந்தல் பராமரிப்பு இல்லாததாலும்,
அதிக மாசுபாடு காரணமாகவும், கூந்தலானது பொலிவிழந்து
விடுகிறது. எனவே இதனை சரிசெய்யவும், கூந்தலை
வலுவாக்கவும், நெல்லிக்காயை பயன்படுத்தினால், நல்ல பலன்
கிடைக்கும்.

நெல்லிக்காய் ஒரு இயற்கையான ஹேர் கண்டிஷனர்.
இதை தலைக்கு போட்டுக் குளித்தால், தலைக்கு, கண்டிஷனர்
போட்டது போன்று இருக்கும்.

தினமும் நெல்லிக்காய் எண்ணெய் கொண்டு, தலைக்கு 45 நிமிடம்
மசாஜ் செய்து, பின் தலைக்கு குளித்தால், கூந்தல் உதிர்தலைத்
தடுக்கலாம். நெல்லிக்காய் பொடியை, சீகைக்காய் பொடி மற்றும்
ஹென்னாவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு போட்டு குளித்து வந்தால்,
கூந்தல் அடர்த்தியாகும்.

மேலும், நெல்லிக்காய் எண்ணெயை பயன்படுத்தினாலும்,
கூந்தல் அடர்த்தியாகும்.

பொடுகுத் தொல்லையைப் போக்குவதற்கு நெல்லிக்காய்
அருமருந்து. இதை தொடர்ந்து பயன்படுத்தினால், தலை நன்கு
சுத்தமாகவும் பொடுகின்றியும் இருக்கும்.

மன அழுத்தம், செரிமானப் பிரச்சனை மற்றும் ஆரோக்கியமற்ற
டயட் காரணமாக, சிலருக்கு நரைமுடி, இளமையிலேயே வந்து
விடுகிறது. எனவே இதை தடுக்க, தினமும் நெல்லிக்காய் ஜூஸ்
குடிப்பது நல்லது. நெல்லிக்காய் எண்ணெய் தடவி வந்தால்,
நரைமுடிக்கு முடிவு கட்டலாம். என்றும் இளமை பொலிவுடன்
இருக்கலாம்.

தலையில் அதிகமான அரிப்பு ஏற்பட்டால், நெல்லிக்காய்
பொடியுடன், தயிர் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி, 30 நிமிடம்
ஊற வைத்து, பின், ஷாம்பு போட்டு குளித்தால், தலையில்
ஏற்படும் அரிப்புகள் நீங்கும்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் கூந்தல் வறட்சி, நிறம்
மாறுதல் போன்றவை ஏற்படுகிறது. நெல்லிக்காய் எண்ணெயை
தினமும் தடவி கூந்தலை பராமரித்தால், இந்த பிரச்னைகளில்
இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை! Empty Re: நெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை!

Post by ayyasamy ram Tue Sep 07, 2021 5:19 pm

நெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை! Nelli-juice-5-compressed-300x215

நெல்லிக்காய்- இதர மருத்துவ குணங்கள்:



ஆப்பிள் போன்று அனைத்து நன்மைகளையும் கொண்டது
நெல்லிக்காய். ஆனால், இதன் விலை மிகவும் குறைவு.
சந்தைகளில் எளிதில் கிடைக்கவல்லது. தினம் ஒரு
நெல்லிக்காய் சாப்பிட்டால், நோய்கள் தூர விலகிவிடும்.

நெல்லிக்காய் சாப்பிடுவதால், புற்றுநோய் செல்களின்
வளர்ச்சி தடைப்படும் என்று தெரிய வந்துள்ளது.

அல்சர் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில்
நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக்
குணப்படுத்தலாம்.நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில்
உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு,
உடல் எடையைக் குறைக்க உதவும்.

நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி,
மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும். நெல்லிக்காயை தினமும்
ஒன்று சாப்பிட்டு வந்தால், உயர் ரத்த அழுத்தம்
கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

மேலும் நெல்லிக்காய் மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்தும்.
அதிலும் நெல்லி பொடியை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு
வர நல்ல பலன் கிடைக்கும்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum