Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்!
2 posters
Page 1 of 1
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்!
![பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Th-1_1295](https://image.nakkheeran.in/cdn/farfuture/EZ17J4XpYbJ3SEQXRnvGq3_CMLhQcQ2GIKIXSVdjzXE/1626081831/sites/default/files/inline-images/th-1_1295.jpg)
-
தசாப்தங்களைக் கடந்தாலும் நம்மை நொடி பொழுதில் கரைய வைக்கும் ஆற்றலும் அலாதியும் பாடல்களுக்கு இருக்கிறது என்றால் மிகையல்ல. பாடல்கள் என்றாலே ஓர் பரவசம்தான். அதில், மூழ்கித் திளைத்து முத்துக்களை எடுக்கிறோமோ இல்லையோ, மூச்சுத் திணறும்படியான நினைவுகளையும், உணர்ச்சிப் பெருக்குகளையும் அள்ளிச்சென்று வருகிறோம்.
கவிதை என்பது குடிக்கக் குடிக்க அதன் போதையில் தள்ளாட முடியும். அந்த துணிகரமான அனுபவம் வாய்க்க வரம் பெற்றவர்களே நாம். ஆனால், பாடலும் இசையும் சுண்டி இழுக்கும் ஐந்து நிமிட போதை. அப்படியே, ஆயிரம் முறை கேட்டாலும் அதே சுவை, அதே காதல், அதே சுகம், அதே இன்பம், அதே போதை என கொஞ்சம் கூட உருமாறாமல் நம்மை தொந்தரவு செய்யும் பாடல் நா. முத்துக்குமாரின் ‘பூக்கள் பூக்கும் தருணம்…’ பாடல்.
அதிகாலை நேரங்களில் பக்திப் பாடல்களைவிட இன்று காதல் பாடல்கள் புலறாத வீடுகள் இல்லை. அந்த விடியலை இந்த நூற்றாண்டுகளில் நா முத்துக்குமா
“பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே
பார்த்தது யாரும் இல்லையே”
என்று பூக்கள் பூக்கும் தருணத்தை, அந்தக் கணத்தைப் பார்க்கச் சொல்லிவிடுகிறார். பூக்கள் என்றாலே ஓர் அழகுதான். அழகு என்ற சொல்லே பூக்களில் இருந்துதான் உருவானது என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்லிச் சொல்லி சிலாகிக்க வைத்துள்ளார். ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பே பூ பூத்துவிடுகிறது.
ஒரு மனிதன் இறந்த பின்பும் பூ அவன் மேல் பூத்துவிடுகிறது. பூக்கள் மட்டுமே மனிதர்களுக்கு எல்லா நேரங்களிலும் அழகு சேர்க்கிறது. அந்த பூ பூக்கும் நேரத்தை யார்தான் பார்திருக்கிறார்கள் என்றால், அதன் மர்மத்தை நா. முத்துக்குமார் பாடலில் முடிச்சவிழ்க்கிறார். இயற்கையின் மர்மங்களை தேடிச் செல்வது ஆத்மார்த்த அழகல்லவா!
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்!
![பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Th-2_319](https://image.nakkheeran.in/cdn/farfuture/e8-ewfZ9kf5txniJr9NrBxVfukD06I8YQiOZkNVQrsg/1626081901/sites/default/files/inline-images/th-2_319.jpg)
-
இரவும் விடியவில்லையே
அது முடிந்தால்
பகலும் முடியவில்லையே
பூந்தளிரே!!!”
என்று இசையின் ஆரோகணத்தில் சொல்லிச் செல்லும் முத்துக்குமார், எத்தனை எத்தனை மேலதிக சிந்தனைக்கு இட்டுச் செல்கிறார். ஒரு பூ பூக்கும் நேரம் என்பது இரவு பகலைப் பிரசவிக்கும் நேரம். நிலவு சூரியனுக்கு வாசல் திறந்துகொண்டிருக்கும் நேரம். அப்படியென்றால் அது இரவா? பகலா? ஆனால், இந்த வரிகளில் பகலும் முடியவில்லை, இரவும் விடியவில்லை, ஆனால் பூக்கள் புன்னகைத்துவிட்டதே அவர் சொல்லியது போலவே! என்ன புதுமை.
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. வார்த்தைகள் இல்லாத ஒரு மொழியைப் பாருங்கள்,
“வார்த்தை தேவையில்லை
வாழும் காலம்வரை
பாவை பார்வை மொழி
பேசுமே…
நேற்று தேவையில்லை
நாளை தேவையில்லை
இன்று
இந்த நொடி போதுமே”
![பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Th-2_320](https://image.nakkheeran.in/cdn/farfuture/w53MzqxDhWIBgxDzbnLcXxY7pFoUDBwiEdY-dO4SUyg/1626083049/sites/default/files/inline-images/th-2_320.jpg)
-
பெண் என்பவள் பேசினாள்தான் மொழி விளங்குமா? பெண்களின் வசீகரத்தை, அழகியலை பல்வேறு கோணங்களில் ரசித்திருந்தாலும், பேசவே வேண்டாம் என்பதும், அதைக் காலத்தோடு ஒப்பிட்டு நொடிகளின் விளிம்பில் கசியும் கால இறப்பின் ஏக்கத்தை எவ்வளவு ஆத்மார்த்தமாய் ‘இந்த நொடி போதுமே’ என்றாலும் கேட்க கேட்க போதை போதவில்லையே. பார்வையின் மொழியை, மொழியின் அகழ்வாய்வை கவிஞர்கள் ஆராய்ச்சி செய்வது நாகரிகம் பிறந்த காலத்தைவிட நம்மை பின்னோக்கி கூட்டிச் சென்றுவிடுவர்.
மேகம் என்பது ஒரு நிலையாமை. மனித வாழ்வே நிலையாமைதான். ஆனாலும், ஏதோ ஒரு நிலையான உறவு வேண்டும் என்ற மனிதனின் பயணம் முடிவதில்லை. அதற்காக மனிதன் படும் பாடு பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையே மேற்கொள்ளும் மூர்ச்சைகொண்டிருக்கும் தவம் என்பதே எதார்த்தம். அப்படியே, நீளும் ஒரு உறவை முத்துக்குமார்
“எந்த மேகம் இது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே
எந்த உறவு இது
எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே…”
கேட்கும்போது நீண்டுகொண்டுதானல்லவா இருக்கிறது.
“பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே
பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம்
முடிவதில்லையே”
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்!
![பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Th-6_9](https://image.nakkheeran.in/cdn/farfuture/fp3JR6EP_aXMHwKfFTbGUC8kCVRB3mpL6viFgIOh9Tg/1626083066/sites/default/files/inline-images/th-6_9.jpg)
-
ஒரு ஜென் தத்துவ பார்வையை விதைத்துச் சென்றுள்ளார். பாதை, பயணம் இரண்டிற்கும் இடையே உள்ளே உறவு என்பது பூக்களுக்கும் கொடிகளுக்கும் இடையே உள்ள தொடர்பாகவே கருதுகிறேன். ஒரு கொடியில் பூ பூத்து உதிர்ந்தாலும் கொடிகள் பூப்பதை நிறுத்திக்கொள்வதில்லை. பயணமும் அப்படியே…
காற்றில் பறக்கும் இலையை நடனம் என்பவர், அது சருகுகளான பின்பும் காற்றில் சலங்கை கட்டி ஆடுவதை நிறுத்திக்கொள்வதில்லை. வாழ்வில் உயிர் ஆடும் ஆட்டம் ஒருநாள் மரணத்தில் முற்றுப்பெறுகிறது. இலைகளின் நடனத்திற்கு மரணம் உண்டா?
“மரணத்தில் அழுகிறீர்கள்.
பூக்களை மட்டும்
ஏன்
புன்னகையுடன் சூட்டுகிறீர்கள்.”
என்று எனது ‘உயிராடல்’ கவிதைத் தொகுப்பில் சொன்னதும், நா. முத்துக்குமார் மரணத்தில் தமிழ் உலகம் அழுதாலும், அவர் சொல்லிச் சென்ற பூக்கள் பூக்கும் தருணத்தை நாம் புன்னகையுடன் சூட்டிக்கொண்டுதானே இருக்கிறோம்.
கட்டுரை-சாக்லா (நக்கீரன்)
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்!
திறமையானவர்களுக்கு மட்டும் ஏன் அற்ப ஆயுளாக உள்ளது என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது.
நா.முத்துகுமார் பாடல்களின் தீவிர ரசிகன் நான்.
நா.முத்துகுமார் பாடல்களின் தீவிர ரசிகன் நான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முள்ளிலும் பூக்கும் பூக்கள்…
» நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி
» பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை
» நீ நடந்தால் புல்லிலும் பூக்கள் பூக்கும்..!
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» நான் ரசித்த கவிதைகள் -ந.கார்த்தி
» பூக்கள் பூக்கும் தமிழர் வாழ்க்கை
» நீ நடந்தால் புல்லிலும் பூக்கள் பூக்கும்..!
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|