ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினிமா செய்திகள்

Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Thu Aug 26, 2021 6:27 am

திருமண மோசடி புகார்: போலீசுக்கு நன்றி சொன்ன ஆர்யா


-
இந்த வார சினிமா செய்திகள் 202108252357364127_Marriage-fraud-complaint-Arya-thanks-police_SECVPF
-
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும்
ஆர்யா 2019-ல் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து
கொண்டார். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் பெண்
குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் ஆர்யா தன்னிடம் பழகி திருமணம் செய்வதாக
ஏமாற்றி ரூ.70 லட்சம் மோசடி செய்து விட்டதாக ஜெர்மனியை
சேர்ந்த இலங்கை பெண் போலீசில் புகார் அளித்து பரபரப்பு
ஏற்படுத்தினார்.

ஆர்யாவுக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரித்தனர். ஜெர்மனி பெண்ணை நான் பார்த்ததே இல்லை
என்று ஆர்யா மறுத்தார். புகார் அளித்த பெண்ணிடமும் வீடியோ
காலில் விசாரிக்கப்பட்டது.

அப்போது ஆர்யாவைப்போல் பேசி ஜெர்மனி பெண்ணிடம்
2 பேர் பண மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு
அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து
போலீசாருக்கு ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“உண்மை குற்றவாளிகளை கைது செய்த சென்னை போலீஸ்
கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர், சென்னை
சைபர் கிரைம் போலீசார் ஆகியோருக்கு நன்றி.
இது என்னால் வெளிப்படுத்தாத ஒரு மன உளைச்சலாக இருந்தது.
என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி’’ என்று
கூறியுள்ளார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Thu Aug 26, 2021 6:29 am

சவுதி, கத்தார், குவைத்தில் அக்‌ஷய்குமார் படத்துக்கு தடை


-
இந்த வார சினிமா செய்திகள் 202108240055198776_Akshay-Kumar-banned-from-filming-in-Saudi-Arabia-Qatar_SECVPF
-
இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகர் அக்‌ஷய்குமார்.
இவர் தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து
இருந்தார். அக்‌ஷய்குமார் நடித்துள்ள பெல்பாட்டம் இந்தி படம்
கடந்த 19-ந்தேதி இந்தியாவிலும் அமெரிக்கா, இங்கிலாந்து,
கனடா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் திரையரங்குகளில்
வெளியானது.

இந்த படத்தில் வாணிகபூர், லாரா தத்தா, கியூமா குரோஷி
உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஞ்சித் எம்.திவாரி இயக்கி
உள்ளார். பெல்பாட்டம் படம் 1984-ல் இந்திரா காந்தி ஆட்சியில்
நடந்த பயணிகள் விமான கடத்தலை மையமாக வைத்து
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு
உள்ளது.

கடத்தல் கும்பலிடம் இருந்து பயணிகளை மீட்கும்
கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார். இந்த நிலையில்
பெல்பாட்டம் படத்துக்கு சவுதி அரேபியா, கத்தார், குவைத்
ஆகிய 3 நாடுகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

படத்தில் உண்மைக்கு புறம்பான காட்சிகள் உள்ளதால் தடை
விதித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Thu Aug 26, 2021 6:58 am

கமல் திரைக்கதையில் தேவர் மகன் 2-ம் பாகம்


-
இந்த வார சினிமா செய்திகள் 202108260029359084_Thevar-Magan-Part-2-in-Kamal-screenplay_SECVPF
சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் படம்
1992-ல் திரைக்கு வந்தது. நாசர், ரேவதி, கவுதமி ஆகியோரும்
நடித்து இருந்தனர். பரதன் இயக்கத்தில் வெளியான இந்த
படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.

படத்தில் போற்றி பாடடி பெண்ணே, வானம் தொட்டு போனா,
இஞ்சி இடுப்பழகி ஆகிய இனிமையான பாடல்களும் இடம்
பெற்று இருந்தன.

தேவர் மகன் 2-ம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்த
படத்துக்கு தலைவன் இருக்கின்றான் என்று பெயர்
வைத்துள்ளதாகவும் கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்து
இருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில்,
“மலையாள இயக்குனரும், எடிட்டருமான மகேஷ்
நாராயணனுடன் இணைந்து பணியாற்ற உள்ளேன். அவருக்காக
ஒரு திரைக்கதை எழுதி வருகிறேன்'' என்றார்.

அந்த திரைக்கதைதான் தேவர் மகன் 2-ம் பாகத்துக்கானது
என்றும், இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்க
இருப்பதாகவும் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம், இந்தியன் 2 படங்களை முடித்ததும் தேவர் மகன்
2-ம் பாகம் படத்தில் கமல் நடிக்க உள்ளார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Thu Aug 26, 2021 7:50 am

திடீரென்று சந்தித்தனர் சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணி?


-
இந்த வார சினிமா செய்திகள் 202108242321372823_Suddenly-met-Sivakarthikeyan-in-the-film-Countamani_SECVPF
-
தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் நகைச்சுவை நடிகராக
கொடி கட்டி பறந்த கவுண்டமணி சமீப காலமாக படங்களில்
நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்.

அவர் கடைசியாக நடித்த எனக்கு எங்கும் கிளைகள் கிடையாது,
வாய்மை ஆகிய படங்கள் 2016-ல் வெளிவந்தன. இந்த நிலையில்
கவுண்டமணியை நடிகர் சிவகார்த்திகேயன் திடீரென்று சந்தித்து
பேசினார்.

அப்போது கவுண்டமணியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட
புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தலை சிறந்த
நடிகரான கவுண்டமணியை சந்தித்தது இனிய தருணமாக அமைந்தது
என்றும் பதிவிட்டுள்ளார்.


இதையடுத்து சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணி நடிப்பாரா?
இது சம்பந்தமாகத்தான் இருவரும் சந்தித்து பேசினார்களா? என்ற
பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில்
நடித்து வருகிறார். அந்த படத்தில் கவுண்டமணி நடிக்கலாம் என்ற
எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

ரசிகர்களும் நீண்ட காலத்துக்கு பிறகு கவுண்டமணியை புகைப்படத்தில்
பார்த்தது சந்தோஷம் அடைந்தனர். அவர் உங்கள் படத்தில் நடிக்கிறாரா?
என்று வலைத்தளத்தில் சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பி
வருகிறார்கள்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Thu Aug 26, 2021 4:19 pm

நடிகை கோபிகா பிறந்த நாள்


-
இந்த வார சினிமா செய்திகள் 1629941961-2685
-
தமிழில் 4 ஸ்டுடென்ட் என்ற திரைப்படத்தின் மூலம்
அறிமுகமாகி அதன் பிறகு சேரன் நடித்து இயக்கிய
ஆட்டோகிராப் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில்
நடித்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை
பெற்றுக் கொடுத்தது

மேலும் கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன்,
வீராப்பு, வெள்ளித்திரை உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும்
ஏராளமான மலையாள படங்களிலும் ஒரு சில தெலுங்கு
படங்களிலும் கோபிகா நடித்துள்ளார்

நடிகை கோபிகா கடந்த 2008ஆம் ஆண்டு ஒரு மருத்துவரை
திருமணம் செய்து கொண்டார் என்பதும் தற்போது அவர்
அயர்லாந்தில் செட்டிலாகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்
தக்கது அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்

இன்றைய தினம் அவருடைய பிறந்த நாள் என்பதால்
ரசிகர்களின் வாழ்த்துக்கள் சமூகவலைதளங்களில் குவிந்து
வருகிறது.

தமிழ் வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Fri Aug 27, 2021 10:11 am

இளவரசி டயானா வாழ்க்கை படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு


-
இந்த வார சினிமா செய்திகள் Main-qimg-bebcf03f0c4be46125cac079b2ce3854
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Fri Aug 27, 2021 4:41 pm

நடிப்பில் இருந்து ஓய்வு… சமந்தா முடிவுக்குக் காரணம் என்ன?


-
இந்த வார சினிமா செய்திகள் 1630043376-7572
-
நடிகை சமந்தா நடிப்பில் இருந்து சில காலம் ஓய்வு எடுத்துக்
கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்
வருபவர் சமந்தா. திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து
நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவரை மையக் கதாபாத்திரத்தில்
வைத்து தெலுங்கில் ஒரு படம் உருவாகி வருகிறது. தமிழில்
அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம்
மட்டுமே உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில்
‘தொடர்ந்து 11 ஆண்டுகளாக நடித்து வருவதால் சிறிது காலம்
நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் ‘ என
விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Fri Aug 27, 2021 4:45 pm

ஒரு வார இடைவெளியில் விஜய் சேதுபதியின் நான்கு படங்கள் ரிலீஸ்!


-
இந்த வார சினிமா செய்திகள் 1630040087-4606
-
விஜய் சேதுபதி நடித்த துக்ளக் தர்பார், லாபம், அனபெல் சேதுபதி
மற்றும் கடைசி விவசாயி ஆகிய படங்கள் அடுத்த மாதம் 10 மற்றும்
17 ஆகிய தேதிகளில் வெளியாக உள்ளன.

இதில் லாபம் படம் மட்டும் செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில்
வெளியாகிறது. துக்ளக் தர்பார் மற்றும் கடைசி விவசாயி முறையே
செப்டம்பர் 10 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் மற்றும் சோனி லைவ் ஆகிய
தளங்களில் வெளியாகின்றன.

அனபெல் சேதுபதி திரைப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ்
ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum