ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 )

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 Empty கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 )

Post by Dr.S.Soundarapandian Tue Aug 24, 2021 12:36 pm

First topic message reminder :

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (1 -3 )

1 . ஒன்று ,இரண்டு !

ஒன்று இரண்டு
வாழை இலை போடு !
மூன்று நான்கு
அன்னம் போடு
ஐந்து ஆறு
குழம்பு ஊற்று
ஏழு எட்டு
வெஞ்சனம் கூட்டு
ஒன்பது பத்து
உண்ட இலையை மூடு !

2. நாட் கடன் !

தினமும் வேகமா எழவேண்டும்
பல்லைச் சுத்தமாத் துலக்க வேண்டும்
முகத்தை நன்றாய்க் கழுவ வேண்டும்
தினமும் குளித்து முடிக்க வேண்டும்
தேவனையே நன்கு கும்பிட வேண்டும்
காலை உணவை உன்ண வேண்டும்
ஆசிரிய ருக்கு வணக்கம் சொல்லிப்
பள்ளிக் கூடத்தில் கற்க வேண்டும்!

3 . மழை இராசா !

வாவா மழை இராசா
மழை இராசா வாவாவா
வாவாவா மழை இராசா
வராமல் இருக்காதே மழைராசா
மேகத்தில் ஆடும் மழைராசா
தேன்துளி தேன்துளி மழைராசா
வா வா மழைராசா !

- (கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர்
சு. சௌந்தரபாண்டியன்.
கன்னட ஒலி மூலம் : infobells.com)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 Empty கன்னடக் குழந்தைப் பாடல்கள் (13 - 15 )

Post by Dr.S.Soundarapandian Sun Aug 29, 2021 9:04 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (13 - 15 )

13 . குரங்கு இராயன் !
மாமா வீட்டுக்குப் போனானே
குரங்கு இராயன் !
அந்த வீட்டுச் சாப்பாட்டு
மேசை முன்னே அமர்ந்து
பலகாரம் தின்னத் தொடங்கிவிட் டானே!
அவன் காதைப் பிடித்துத் திருகியேதான்
கண்டித்தாளே அத்தை!:
‘முதலில் வீட்டிலுள்ள பெரியோர்களுக்கு
வணக்கம் சொன்ன பின்னாலே நீ
தின்னத் தொடங்கு!’ என்றாளே
குரங்கு இராயன் வணக்கமும் சொன்னானே
சொன்ன பின்னே அத்தையுமே
பலகாரங்கள் எல்லாம் கொடுத்தாளே!
வயிறு முட்டத் தின்றானே
குரங்கு இராயன்!

14 . பாட்டி ! பாட்டி!

பாட்டி ! பாட்டி!
நம்ம முத்துப் பாட்டி !
எல்லோரும் விரும்பும் நம்ம பாட்டி!
குழந்தைகளின் பெருமையே
நம்ம பாட்டி!
பாட்டி! பாட்டி!
நாள்தோறும் கதைகள் கூறித்
தூங்க வைப்பாள் பாட்டி!
வீடுகளுக்கு வைத்தியராய்
நோய் நீக்கும் பாட்டி!
பாட்டி ! பாட்டி !பாட்டி!
நம்ம முத்துப் பாட்டி!

15 . வார நாட்கள் ஏழு !

வரத்துக்கு ஏழே ஏழு நாள்!
ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள்
திங்கட் கிழமை கிட்டிப்புள் ஆட்டம்
செவ்வாய்க் கிழமை வாலி பாலு
புதன் கிழமை துள்ளிவிளை யாட்டு
உடற் பயிற்சி வீட்டினுள் வியாழக் கிழமை
வெள்ளிக் கிழமை பம்பரம் விடுவோம்
சனிக் கிழமை கிரிக்கெட் ஆட்டம்!
வாரத்துக்கு ஏழே ஏழு நாட்கள்!
விளையாடப் போதாது விடுமுறை நாட்கள்!

- (கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் : infobells.com)


***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 Empty கன்னடக் குழந்தைப் பாடல்கள் (16 - 18 )

Post by Dr.S.Soundarapandian Mon Aug 30, 2021 7:14 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (16 - 18 )

16 . நான் விரும்பும் வண்டி !

வண்டி இது வண்டி இது
நல்ல வண்டி இது
சின்ன வண்டி இது
எங்கு விட்டாலும் ஓடுவது
வேகமாய் ஓடும் வண்டி இது
நான் விரும்பும் வண்டி இது
வண்டி இது வண்டி இது
சிவப்பு வண்ண வண்டி இது
சாவி கொடுத்தால் ஓடும் வண்டி!
அழகான வண்டி இது
நான் விரும்பும் வண்டி இது!

17 . நாங்கள் போவது சந்தைக்கு!
வண்டியின் சக்கரம் சுழல்கிறது
நாங்கள் போவது சந்தைக்கே
டுர் … டுர் …டுர்ரார்
அப்பா வாயில் மாடு விரட்டுறார்
நாங்கள் போவது சந்தைக்கே
அம்மா கொடுத்த முறுக்கு
ருசியோ ருசி !
நாங்கள் போவது சந்தைக்கே
வண்டி கல்லுப் பாதையிலே
நாங்கள் போவது சந்தைக்கே
பக்கத்தில் போகும் சைக்கிள் பையா
வழிவிடு வழிவிடு!
நாங்கள் போவது சந்தைக்கே!

18 . பம்பரம்!

குர்ரு குர்ருனு சுத்தும் பம்பரம்
கயிற்றையும் சுற்றிக் கையை உயர்த்தித்
தரையில் வீசினால் சுத்தும் பம்பரம் !
உள்ளங் கையிலும் சுற்றும் பம்பரம் !
ஆகாயத்துக் காமன் வில்லைப்
பூமிக்குக் கொண்டுவரும் வண்ணப் பம்பரம் !
குர்ரு குர்ருனு சுத்தும் பம்பரம் !

-(கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் : infobells.com)

**


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 Empty கன்னடக் குழந்தைப் பாடல்கள் (19 - 21 )

Post by Dr.S.Soundarapandian Wed Sep 01, 2021 3:53 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (19 - 21 )

19 . பப்புவின் பிறந்த நாள்!
பப்புவின் பிரந்த நாளன்றுமே
வந்தார்களே நண்பர்கள் ஜோராகவே
கன்று வந்து பப்புவிடம்
மாவ் … ..மாவ் என்றது!
வாத்தொன்று வந்துமே பப்புவிடம்
குவாக் … குவாக்…. என்றதுவே!
சேவலும் பப்பருகே பாசத்துடனே
கொக்கரக்கோ கொக்கரக்கோ என்றது!
பூனையும் தானே ஓடிவந்து
மியாவ் ….. மியாவ் என்றதே!
நாயொன்றும் பப்புவிடம்
பாசமாய் லொள்லொள் என்றதே!
பால்கொடுக்கும் பசுவும் வந்து
அம்மா….அம்மா…என்றது!
அழகான ஆடொன்றும் வந்து
மேய்…மேய்.. என்றதே!

20 . ரொட்டிக் கடைக் கிட்டப்பா!

ரொட்டிக் கடைக் கட்டப்பா! - எனக்கு
ரொட்டி வேண்டும் தட்டப்பா!
ஒன்பது காசு இருக்கப்பா
இரண்டு ரொட்டி தட்டப்பா!
சின்ன ரொட்டி இரண்டப்பா
ரொட்டிக் கடைக் கிட்டப்பா!
இந்த ரொட்டி வேண்டாம்பா
கருகிப்போய் உள்ளதப்பா!
வேறே ரொட்டி தட்டப்பா
ரொட்டிக் கடைக் கிட்டப்பா!
நன்றாய்த் தின்றோம் நாமப்பா!

21 . குட்டிப் பையன் பாபு !

பத்துச் சிறுவர்கள் ஒரு கட்டிலில்
தூங்கு வதற்குப் படுத்திருந் தார்கள்
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி ஒன்பது பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி எட்டுப் பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி ஏழு பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி ஆறு பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி ஆறு பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி ஐந்து பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி நான்கு பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி மூன்று பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி இரண்டு பேர்!
குட்டிப் பையன் சொல்ல லானான்:
‘என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!
என்னை நெருக்காதீர் கொஞ்சம் தள்ளுங்கள்!’
ஒவ்வொரு ராகத் தள்ளவே
கீழே விழுந்தான் ஒரு சிறுவன்!
மீதி பாபு!
‘கட்டிலில் நான்மட்டும் மிஞ்சிவிட் டேனே
கட்டிலில் மிஞ்சியது நானே!
கீழே விழுந்த சிறுவர்கள் சொன்னது:
‘குட்டிப் பாபு, நீதான் இங்கு
துட்டப் பாபு ! துட்டப் பாபு!’

-(கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் : infobells.com & ChuChuTV)

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 Empty கன்னடக் குழந்தைப் பாடல்கள் (22 - 24 )

Post by Dr.S.Soundarapandian Thu Sep 02, 2021 12:19 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (22 - 24 )

22 . உண்டாடிக் குண்டன்!

உண்டாடிக் குண்டன் ஒருநாள்
கல்யாண விருந்தில் உட்கார்ந்தான்!
பத்து இலட்டுத் தின்றுவிட்டு
இன்னும் வேண்டும் என்றான்!
அம்மாவும் இனிப்பொன்றைத்
தட்டில் வைத்துப் போனாளே!
அப்பா வந்து பார்த்தவர் உடனே
பிரம்பை எடுத்து முன்னே காட்டி,
‘கை கட்டு! வாய் மூடு!
போதும் எழுந்திரு’ என்றாரே!
உண்டாடிக் குண்டப்பன் எழுந்திருந்து
வீடு சென்றானே!

23 . கரடி வேட்டை!

கரடி ஒன்று வேட்டைக்குப்
புறப்பட்டது இரு குட்டிகளுடனே!
கரடி வேட்டைக்குப் போனது!
அங்கும் இங்கும் பார்த்தது!
கரடி மரங்களை நோட்ட மிட்டுப்
பலா மரத்தில் ஏறியே
பலாப் பழத்தைக் கொணர்ந்தது!
தானும் பழத்தைத் தின்று
குட்டிகளுக்கும் கொடுத்ததே!
கரடி வேட்டைக்குப் போனது!
கரடி வேட்டைக்குப் போனது!

24 . இது குளியல் நேரம் !

இந்தப் பொம்மைப் பாப்பாவுக்கு
அம்மாவைப் போல நானும் தானே!
குளிப்பாட்டி விடுவேனே!
ஷாம்பூ தலையில் தேய்த்து
நீரால் நன்றாய்க் கழுவுவேனே!
சோப்பை உடம்பில் தேய்த்து
நன்றாய்க் குளிப்பாட்டு வேனே !
குளிப்பாட்டி முடித்த பின்னே
துணியால் உடலைத் துடைப்பேனே!
உடம்பில் பௌடர் போட்டு
சட்டையை மாட்டி விடுவேனே!
பாலைக் குடிக்கவும் தருவேனே
கட்டிலில் என்னோடு உன்னையும்தானே
படுக்க வைப்பேனே!
ஹாஹா….ஹாஹா !
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னட ஒலி மூலம் : infobells.com & KidsTVIndia)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 Empty Re: கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 )

Post by T.N.Balasubramanian Thu Sep 02, 2021 5:49 pm

பதிவு #14ம் #15ம் ஒன்றென்பதால் 

#15 நீக்கப்படுகிறது


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 Empty Re: கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 )

Post by Dr.S.Soundarapandian Sat Sep 04, 2021 12:53 pm

நன்றி இரமணியன் அவர்களே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 Empty கன்னடக் குழந்தைப் பாடல்கள் (25 - 27 )

Post by Dr.S.Soundarapandian Sat Sep 04, 2021 1:50 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (25 - 27 )

25 . பகிர்ந்து கொள்வது!

பகிர்ந்து கொள்வதே நல்லது!
பகிர்ந்து கொள்வதே ஆனந்தம்!
எல்லோ ருக்கும்
பகிர்ந்து கொடுப்பதே ஆனந்தம்!
பகிர்ந்து கொள்வதே ஆனந்தம்!
இல்லா தோர்க்கே
பகிர்ந்து கொடுக்க வேண்டும்!
எல்லோ ருடனும் அன்பாகவே
பகிர்ந்து கொள்ள வேண்டும்!
மேலும் கீழும் பாராமல்
உயர்வு தாழ்வு பார்க்காமல்
பகிர்ந்து கொள்ள வேண்டும்!

26 . காய்கறி வேண்டுமா காய்கறி!

காய்கறி வேண்டுமா?
காய்கறி வேண்டுமா?
பலவகை யான காய்கறிகள்!
விரல் போன்ற வெண்டைக் காயி
பாம்பு போன்ற புடலங் காயி
காய்கறி வேண்டுமா?
காய்கறி வேண்டுமா?
விதவித மான காய்கறிகள்!
பஜ்ஜிக்கு ஏற்ற கத்தரிக்காய்!
நீர்குடிக்க வைக்கும் பச்சை மிளகாய்!
கோலைப் போன்ற முருங்கைக் காய்!
முண்டுத் தோலின் பாகற்காய்!
வரிவரியாய் இருக்கும் பீர்க்கங்காய்!
காய்கறி வேண்டுமா?
காய்கறி வேண்டுமா?

[/b]27 . அணிலே ! அணிலே![b]

அணிலே ! அணிலே!
வாவா அணிலே!
மரத்தில் இருந்து இறங்கித் தானே
வாவா அணிலே!
சர்க்கரைப் பொங்கல் தருவேன் அணிலே!
இறங்கி வந்தால் தருவேனே!
இல்லாவிட்டால் நானே உண்பேனே!
அணிலே! அணிலே!
வாவா அணிலே!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம்
: infobells.com & KidsTVKannada)

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 Empty கன்னடக் குழந்தைப் பாடல்கள் (28 - 30 )

Post by Dr.S.Soundarapandian Sun Sep 05, 2021 12:38 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (28 - 30 )

28 . ஆனை வந்தது!

ஆனை வந்தது ஒன்று!
ஆனை வந்தது ஒன்று!
எந்த ஊரு ஆனை?
பிஜப்பூரின் ஆனை!
இங்கு எப்படி வந்தது?
வழி தப்பி வந்ததோ?
ஆனை வந்தது ஒன்று!
தேங்காய் வெல்லம் தின்ற பின்னே
திரும்பிப் போனது ஆனை!

29 . இரகசியம்!

இரகசியம் ! இரகசியம்!
இதை எப்படிச் சொல்லவேண்டும்?
பிறந்த நாள் கொண்டாட் டத்தில்
அனைவரும் சேர்ந்தே மகிழ வேண்டும்!
இது அவசியம்! அவசியம்!
ஆட்டத்தில் தப்பாட்டம் கூடாது!
இது அவசியம்! அவசியம்!
உதவி வேண்டு வோர்க்கு
உதவுவது அவசியம்! அவசியம்!

30 . கோழியம்மா!

தாய்க் கோழி-
‘முதலாம் குஞ்சு ஓடி வா!
உனக்கு மஞ்சள் பந்து
நான் தருவேன்!’
‘பந்தின் நிறம் என்ன?’
‘சூரியகாந்திப் பூவின்
மஞ்சள் வண்ணம்!’
‘இரண்டாம் குஞ்சு ஓடி வா!
உனக்குப் பச்சை பந்து
நான் தருவேன்!’
‘பந்தின் நிறம் என்ன?’
‘இலைகளின் பச்சை வண்ணம்!’
‘மூன்றாம் குஞ்சு ஓடி வா!
உனக்கு வெள்ளைப் பந்து
நான் தருவேன்!’
‘பந்தின் நிறம் என்ன?’
‘தும்பைப் பூவின் வெள்ளை வண்ணம்!’
‘நான்காம் குஞ்சு ஓடி வா!
உனக்குச் சிவப்புப் பந்து
நான் தருவேன்!’
‘பந்தின் நிறம் என்ன?’
‘பருத்திப் பூவின் சிவப்பு வண்ணம்!’
‘ஐந்தாம் குஞ்சு ஓடி வா!
உனக்கு நீலப் பந்து
நான் தருவேன்!’
‘பந்தின் நிறம் என்ன?’
‘ஆகா யத்தின் நீல வண்ணம்!’
‘ஆட்டம் ஆடுங்கள் ஜாக்ரதை!’

-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னட ஒலி மூலம் :
infobells.com ; theteamscifi;Sargam Kids Kannada)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 Empty கன்னடக் குழந்தைப் பாடல்கள் (31 - 33 )

Post by Dr.S.Soundarapandian Sun Sep 05, 2021 3:43 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (31 - 33 )

31 . அஞ்சல் அண்ணா !

அஞ்சல் அண்ணா வந்தார்!
அஞ்சல் அண்ணா வந்தார்!
எனக்கு அஞ்சல் ஒன்று தந்தார்!
திருமண அழைப் பொன்றைத் தந்தார்!
அஞ்சல் அண்ணா வந்தார்!
தூர ஊரில் இருக்கும் எங்கள்
அண்ணன் வருவதைச் சொன்னார்!
அஞ்சல் அண்ணா வந்தார்!

32 . கிளியே வாவா !

கிளியே கிளியே!
வண்ணக் கிளியே!
வா … வா…வா!
ஆட்டம் ஆடலாம் வா கிளியே!
பச்சை நிறக் கிளியே
வா…வா…வா!
பழம் தருவேன் வாகிளியே!
பால் கொடுப்பேன்!
நீர் கொடுப்பேன்!
வாவா கிளியே!
வண்ணக் கிளியே!
வாவா வாவா கிளியே!

33 . நான் இராணுவத்தில் சேருவேன் !

நானு இராணுவத்தில் சேருவேன்!
யூனிபார்ம் போட்டுக்கொள்வேன்!
காலில் பூட்சும் அணிவேனே!
நானு இராணுவத்தில் சேருவேன்!
தலையில் தொப்பி அணிவேன்!
கையினில் துப்பாக்கி தூக்குவேன்!
லெப்ட் ..ரைட்.. லெப்ட்..ரைட்!
நானு இராணுவத்தில் சேருவேன்!
நாட்டையுமே பாதுகாப்பேன்!
வீரப் பதக்கம் வாங்குவேன்!

-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னட ஒலி மூலம் :
infobells.com )

***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 Empty கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 )

Post by Dr.S.Soundarapandian Mon Sep 06, 2021 7:19 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 )

34 . கள்ளப் பூனை!

கள்ளப் பூனை வந்தது!
அங்கும் இங்கும் பார்த்தது
அப்புறம் இப்புறம் நோட்டமிட்டது!
அடுப்படிக் குள்ளே சென்றது!
பாலுச் சட்டியைக் கண்டறிந்து
பாலை நக்கிநக்கிக் குடித்தது!
அம்மா வந்து பார்த்தாளே!
கோலை எடுத்துப் படார்படார் !
கள்ளப் பூனையை அடித்தளே!
பசியுடன் பூனையும் ஓட்டம் பிடித்தது!
திருடுவது தப்பு என்றே நினைத்தது!
கள்ளப் பூனை வந்தது!

35 . கடலைப் பொரி!

குட்டியே ! குட்டியே !
நாய்க் குட்டியே!
தேங்காயைத் துருவிக்
கொட்டலாம் கொட்டலாம்!
கடலை இங்கே இருக்கு!
அடுப்பில் வைத்துப் பொரி! பொரி!
அதனுடன் தக்க பண்டம் சேர்த்தால்
கடலைப் பொரி! கடலைப் பொரி!
குட்டியே குட்டியே!
நாய்க் குட்டியே!

36 . உருளைக் கிழங்கின் விளையாட்டு!

இரண்டு உருளைக் கிழங்குகள்!
அண்ணனும் தங்கையும் அவர்களாம்!
இரண்டு பேருக்கும் பொம்மையொன்று கிடைத்தது!
பொம்மையைத் தூக்கியே மேலே போட்டு
இரு கிழங்குகளும் விளையாடின!
பொம்மை சட்டென்று உடைந்து போனது!
அழத் தொடங்கினவே!
இரு கிழங்குகளுமே!
அப்பாக் கிழங்கு அங்கே வந்தது!
உடைந்த பொம்மையை ஒட்டிக் கொடுத்தது!
பொம்மை ஆட்டத்தைத் தொடங்கினவே!
இரண்டு உருளைக் கிழங்குகளுமே!

-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னட ஒலி மூலம் :
infobells.com&KidsTVKannada )
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 ) - Page 2 Empty Re: கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» பட்டுக்கோட்டையாரின் காதல் பாடல்கள், கற்பனைப் பாடல்கள் வேண்டும்
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum