by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
ஓணம் பண்டிகை வரலாறு
#ஓணம்_பண்டிகை எனும் வாமண அவதார திருநாளை கொண்டாடும் நேரம் அந்த பண்டிகைக்கான காரணத்தையும் அது சொல்லும் கருத்துக்களை அறிய வேண்டியதும் இந்துக்களின் பிரதான கடமை. அந்த ஓணம் பண்டிகையின் மூலம் இப்படித்தான் தொடங்குகின்றது.
ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமான #சிவன் கோவிலில் ஒரு எலி புகுந்தது அங்கும் இங்கும் ஓடிகொண்டிருந்ததது, ஆளில்லா நேரம் அங்குமிங்கும் ஓடுவதும் குதிப்பதுமாக இருந்தது. அந்த எலி கொஞ்சம் விஷேஷமான எலியாகவும் இருந்தது.
யாருமற்ற நேரத்தில் தீபத்தின் திரி பாதி எரிந்து கருகும் சமயத்திற்கு வந்ததால் அந்த எலி தன் தலையால் திரியினை முன் தள்ளி எரியவைக்கும். இதை அந்த எலி மிக சரியாக செய்து வந்தது.
எலியின் வாழ்நாள் குறுகியது என்பதால் அந்த எலியும் மரித்தது, சிவன் அந்த எலிக்கு மிகப்பெரிய வரத்தினை வழங்கினார். அடுத்த ஜென்மத்தில் அது மிகபெரிய இடத்தில் பிறக்க அருள்பாலித்தார். அது #பிரகலாதன் வம்சத்தில் பேரனாக பிறந்தது.
ஆம், இரணியனின் மகனான அந்த பிரகலாதனின் பேரனாக அந்த பலி பிறந்திருந்தது.
என்னதான் பிரகலதனின் பேரன் என்றாலும் அசுரனுக்குரிய இயல்பும் அவனிடம் இருந்தது, அவனை அசுர கூட்டம் வளைத்தும் இருந்தது, குறிப்பாக அசுரகுரு #சுக்கிராச்சாரியார் அவனை மிகபெரும் பிம்பமாக வளர்த்தெடுத்து கொண்டார்.
குருபக்தியில் மிக மிக உன்னதமான அவன், குருவிடம் தன்னை ஒப்புக்கொடுத்த அவன் அவர் மேல் அவ்வளவு மரியாதை வைத்திருந்தான். அந்த மரியாதையினை கொண்டே பலியினை ஆட்டுவித்தார் சுக்கிராச்சாரியார்.
அந்த பலி அசுர இயல்பும் பிரகலாதனின் பக்தியும் நிரம்ப கொண்டிருந்தான். அவன் பக்திமான், நல்ல மனம் கொண்டவன் ஆனால் குருவுக்கு கட்டுபட்ட மாணவனும் அசுர குலத்து பாசமும் கொண்டவனாய் இருந்தான்.
ஒரு கட்டத்தில் சுக்கிராச்சாரியாரின் ஆலோசனைப்படி மிகப்பெரும் யாகங்களும் அதன் பலன்களும் பலியினை சக்திமிக்கவனாக்கின. தவம் பெற்ற முனிவர்கள் கூட அவனை அசைக்க முடியவில்லை.
யோகிகளும், முனிவர்களும் இல்லாத இடத்தில் அதர்மம் அதிகரிக்கும். தர்மத்தின் வடிவான அவர்கள் இருக்கும் வரை அதர்மம் அங்கு காலூன்ற முடியாது, இதனால் அவர்களை குறிவைத்து அடித்தார் சுக்கிராச்சாரியார். அதை செய்வ்வனே செய்தான் பலி.
சில முனிகளும் யோகிகளும் இது தவறு, அதர்மம் எனச் சீறியபொழுது "இது என் குருநாதர் உத்தரவு" என எதிர்த்தான் #மகாபலி.
தவத்தில் சிறந்த ஒரு முனி "எந்த குருவால் நீ பலமடைந்தாயோ, அந்த குருவினை நீ மீறும் நாளில் அழிவாய்" என சாபமிட்டு சென்றார், அதை பிரபஞ்சம் குறித்து கொண்டது.
சுக்கிராச்சாரியார் விக்ரஜித் என மிகபெரும் யாகம் செய்தார், அந்த யாகத்தின் விளைவால் பறக்கும் ரதம் வெல்லமுடியாத ஆயுதம் என பல பலிக்கு கிடைத்தன. அதில் ஏறி விண்ணகம் சென்ற பலி வானலோகத்தையும் பிடித்து தேவர்களை விரட்டி அடித்தான்.
எங்கும் அசுர ஆட்சி நடந்தது, தர்மம் இல்லை. ஒரே ஒரு அசுர சக்தியாக பேயாட்டம் ஆடி கொண்டிருந்தது பலி கோஷ்டி. மூவுலகுக்கும் அவனே சக்கரவர்த்தி. யாராலும் வெல்லமுடியாத அவன் மகாபலி என்றானான்.
அவன் அசுரனே தவிர மனதால் நல்லவன், தர்மத்தை தவிர எல்லாம் வாழட்டும் எனும் அளவு நல்லவன். அவன் குடிகளுக்கு நல்லவன் தன் நாட்டு மக்களுக்கு பொற்கால ஆட்சி வழங்கி கொண்டிருந்தான்.
எல்லா அசுரனுக்கும் சுயநலமும் சுய குடும்ப நலமும் தன் மக்கள் நலனும் ஓங்கியிருக்கும். அது ராவணனுக்கு இருந்தது, சூரபத்மனுக்கு இருந்தது அப்படித்தான் மகாபலிக்கும் இருந்தது.
அதில் அவன் நாடு நலமாகவும் அவன் மக்கள் மகிழ்வாகவும் இருந்தனர், மற்ற உலகம் அழுதாலும் தன் உலகை நன்றாக வைத்து கொண்டான்.
தன் சக்திக்கு மீறி ஈரேழு உலகையும் ஆள மிகப்பெரும் யாகங்களை செய்ய ஆரம்பித்தான். அந்த மாபெரும் யாகம் முடிந்தால் அவன் சக்தி பெறுவதை தடுக்க முடியாது என உணர்ந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர்.
தர்மத்தைக் காக்க அவதாரம் எடுத்தார் #விஷ்ணு, குள்ள வாமணனாக உருவெடுத்தார். ஒரு அந்தண வடிவில் குடையும் கையில் கமண்டலமும் கொண்ட அந்தணராக 3 அடி உருவில் வந்து நின்றார்.
யாகத்தின் முழு பலன் என்பது அவன் தானம் கொடுத்து முடிவதில்தான் கிடைக்கும்.
ஆம், யாகம் செய்வது மட்டும் பலனளிக்காது. யாகம் முடிந்ததும் பல அந்தணர்களுக்கும் இன்னும் பலருக்கும் அவன் தானம் செய்யவேண்டும், அந்த தானத்தில் அவர்கள் அவனை வாழ்த்த வேண்டும், அந்த வாழ்த்தே யாகத்தை முழுமை அடைய செய்யும்.
அந்தணர்களின் வாழ்த்தே வெற்றிகரமான பலனை கொடுக்கும். அந்தணருக்கு தானம் கொடுக்கா யாகம் முழுமை அடையாது.
தானத்துக்கும் தர்மத்துக்கும் வித்தியாசம் உண்டு. தானம் என்பது பலனை எதிர்பார்த்து செய்வது, தர்மம் என்பது பலன் கருதாதமல் செய்வது.
கன்னிகா தானம் என்பார்கள் அல்லவா, கன்னியினை தானம் செய்தால் தன் சந்ததி வளரும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அப்படி சொல்லபட்டது.
அப்படி #மகாபலி தானம் செய்யும்பொழுது வாமணனும் கடைசி வரிசையில் வந்து நின்றார். அவர் வரும்பொழுது மன்னனிடம் தானம் செய்ய ஏதுமில்லை, ஆனால் யாக தத்துவப்படி கடைசி ஆளுக்கும் தானம் செய்தாக வேண்டும்.
குள்ள வாமணன் மெல்ல வணங்கி கையேந்தி நின்றான், மகாபலிக்கு சிக்கலான நிலை, #அந்தணன் கையேந்திவிட்டான் ஏதாவது கொடுத்தாக வேண்டும், ஆனால் எல்லாம் முடிந்துவிட்டது.
வாமணன் மெல்ல சொன்னான் "மன்னா நானோ குள்ளன், என் கால்களோ சிறியவை. நானும் எல்லோரையும் போலத்தான் வந்தேன் ஆனால் 6 அடி மனிதரோடு என்னால் போட்டி போட்டு ஓட முடியவில்லை, நான் என்ன செய்வேன்?" என கலங்கினான்.
கலங்கிய வாமணனை கண்ட மகாபலி என்ன கேட்டாலும் தருவதாக வாக்களிக்க, மன்னா என் காலுக்கு 3 அடி நிலம் தாருங்கள், நான் அதில் இருந்து தியானம் செய்வேன்" என மருகி நின்றான் அந்தணன்.
தள்ளி இருந்த சுக்கிராச்சாரிக்கு சந்தேகம் உண்டாயிற்று, இந்த வாமணன் தவம் இருக்க போகின்றானா, அதுவும் இந்த நாட்டிலா? என குழம்பியபடியே அருகில் வந்தார்.
வாமணின் கண்கள் காட்டிய தீர்க்கமும், புன்னகையும், தந்திரம் காட்டிய முகமும் அவன் சாதாரணமானவன் இல்லை என்பதை சுக்கிராச்சாரிக்கு சொன்னது, மகாபலியினை எச்சரித்தார் சுக்கிராச்சாரி.
ஆனால் தானம் கொடுக்கும் ஆசையில் , தன் யாகம் வெல்லும் ஆசையில் இருந்த மகாபலி அவரை மீறினான். ஆம், குருவினை மீறினால் நீ அழிவாய் என முனிவன் சாபமிட்டது அந்த இடத்தில் வேலை காட்ட ஆரம்பித்தது, கமண்டலத்தை எடுத்து 3 அடி நிலம் தாரைவார்க்க முனைந்தான் மகாபலி.
ஆனால் அப்பொழுதும் வண்டாக மாறி கமண்டல துளையினை அடைத்து தடுத்தார் சுக்கிராச்சாரி, ஒரு குச்சி வைத்து வண்டை தள்ளி நீரை வார்த்து 3 அடி உமக்கு சொந்தம் என வாக்களித்தான் மகாபலி.
அவன் வாக்களித்து முடிக்கவும் அந்த 3 அடி குள்ள வாமணன் 3 உலகுக்கும் விஸ்வரூபமாய் எழுந்து நின்றார். ஒரு காலால் விண்ணை அளந்தார் இன்னொரு காலால் பூமியினை அளந்தார், இன்னொரு கால் வைக்க எங்கே இடம் என மகாபலியிடம் கேட்டார்.
மகாபலிக்கு எல்லாம் புரிந்து போயிற்று, பிரகலாதனுக்காக நரசிம்மமாக வந்த #பகவான் இப்பொழுது வாமணனாக வந்து #விஸ்வரூபம் காட்டி தன் முன் தன்னை பலி கேட்கின்றார் என்பது புரிந்தது.
பகவானே ஒரு காலை என் தலையில் வையுங்கள் என இடம் கொடுத்தான் பலி, அவனை பாதாளத்தில் அழுத்தும் முன் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என கேட்டார் பகவான்.
இந்நாடும் மக்களும் வளமாக வாழவேண்டும், ஆவணி மாதம் ஓண நட்சத்திரத்தின் பொழுது நான் இங்கு வந்து அவர்கள் ஆனந்தமாக வாழ்வதை காணவேண்டும் என கேட்டபடி பகவானின் பாதத்தை தாங்கினான் மகாபலி.
அப்படியே ஆகட்டும் என சொல்லி அவன் தலைமேல் கால்வைத்து அழுத்தினார் விஷ்ணு, அவன் பாதாளத்தில் இறங்கினான்.
பகவான் வாக்களித்தபடி வருடத்தின் ஆவணிமாதம் #திருவோணம் அன்று அவன் வருவான் , தன் மக்களை பார்க்க வருவான். அதைத்தான் திருவோண பண்டிகை என கேரள மக்கள் கொண்டாடுகின்றார்கள்.
மகாபலியின் ஆணவத்தை பகவான் அடக்கிய இடத்தில் வாமணனுக்கு #பரசுராமர் ஒரு கோவில் எழுப்பினார், இன்றும் அந்த கோவில் உண்டு, திருகாட்கரை காட்கரையப்பன் எனும் பெயரில் கேரளாவில் உண்டு. 108 வைணவ தலங்களில் அது 68ம் தலமாக போற்றபடுகின்றது, அங்கு மகாபலி தீர்த்தமெடுத்த கபில தீர்த்தம் இன்றும் உண்டு.
திருவோணம் ஒரு காலத்தில் இந்தியா முழுக்க கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்தது, பின் தென்னகத்துக்கு சுருங்கிற்று, அதுவும் சமண புத்த காலங்களில் இங்கு அது வழக்கற்றுப் போய்விட்டது.
பரசுராமனின் காவலோ என்னமோ #புத்தம் #சமணம் ஆப்கானியர் பாதிப்பில்லா கேரளாவுக்கு மட்டும் அந்த திருவோண பாரம்பரியம் தொடர்ந்தது. திருவோணத்தன்று கேரள மக்களை மட்டும் மகாபலி பார்க்க வருவான் என்பதல்ல விஷயம், அவன் ஆண்ட இந்த மொத்த மண்ணையும் காணவருவான், அப்படித்தான் அக்கால கொண்டாட்டம் இருந்தது.
ஆனால் இந்து துவேஷ மதங்களின் ஆட்சியில் அக்கொண்டாட்டம் களையப்பட்டது. கேரளா பெரும்பாலும் அடுத்த இனத்தின் ஆட்சியில் சிக்கவில்லை என்பதும், வாமணன் விஸ்வரூபமெடுத்த அந்த இடம் இன்று திருகாட்கரை ஆலயமாக கொச்சி அருகே நிற்பதும், அங்கு வாமண சிலை நிற்பதும் அந்த பண்டிகை கேரளாவில் தொடர்ந்து வர ஒரு காரணம்.
மற்றபடி எல்லா இந்து மக்களும் கொண்டாட வேண்டிய பண்டிகை ஓணம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகாபலியின் வாழ்வும் வீழ்ச்சியும் சொல்வது என்ன?
சிவனுக்கு செய்யும் தொண்டு வீணாகாது, இந்த ஜென்மத்தில் இல்லையென்றாலும் அடுத்த பிறவியில் அது மாபெரும் கிரீடமாய் சிவனால் கொடுக்கப்படும்.
ஒருவன் எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் சேருமிடம் மிகச் சரியாக இருக்க வேண்டும், சேர கூடாதவர்களை சேர்ந்து அடாதன செய்தான் மகாபலி, அதர்மம் அவனால் வளர்ந்தது அதற்கு துணை சென்றான், ஒரு காலமும் அதர்மக்காரர் பக்கம் இருக்கவே கூடாது இருந்தால் அழிவு நிச்சயம்.
ஒருவன் எவ்வளவு அதர்மக்காரனாய் இருந்தாலும் அவன் செய்யும் தானம் அவன் கர்மத்தையும் பாவத்தையும் குறைத்து அவனுக்கு மன்னிப்பும் விடுதலையும் கொடுக்கும்.
எக்காலமும் உலகில் முழு பலமானவன் என யாருமில்லை, ஒவ்வொரு பலசாலிக்கும் ஒரு பலவீனம் இருக்கும், தர்மம் அதில் தன்னை மீட்டெடுக்கும்.
அடுத்து குருவின் கட்டளையினை மீறுதல் பெரும் பாவம், எக்காரணம் கொண்டு குருவினை மீறல் கூடாது மீறினால் அழிவு.
ஆணவம் ஆசையினை கொடுக்கும், அந்த ஆசை எல்லை மீறிச் சென்று கொண்டே இருக்கும், பகவானின் காலடியினை சரணடைந்து அதை தலையால் ஏற்றாலே அகங்காரம் ஒழிந்து, ஞானம் பிறக்கும்.
மகாபலியின் அகங்காரம் பகவான் பாதத்தினை தாங்கியதால் உடைந்து அழிந்தது. இந்த மகாபலியின் வாழ்வு கர்ணனின் வாழ்வினை சார்ந்தது, இருவருமே நல்லவர்கள், கொடையாளிகள், ஆனால் சேரக்கூடாத இடம் சேர்ந்து அழிந்தார்கள். இருவருமே தானத்துக்கு வாக்கு கொடுத்து தானத்தால் அழிந்தார்கள். தானமும் தர்மமும் அவர்களின் பாவகர்மாவினை குறைத்து அவர்கள் நல்வழியில் வாழ்வினை முடிக்க வழிகாட்டிற்று.
இதனால்தான் யாருக்கும் கிடைக்கா விஸ்வரூப தரிசனத்தை பகவான் இவர்களுக்கு அருளினார். இருவர் மேலும் அவருக்கு இரக்கம் இருந்தது ஆனால் அதர்மம் பக்கம் இருக்கும் அவர்களை அகற்றாமலும் இருக்க முடியாது இதனால் அவர்களின் கொடைகளுக்கும் தான தர்மங்களுக்கும் ஏற்ப தன் தரிசனம் காட்டி தன்னோடு சேர்த்தும் கொண்டார்.
வாமண அவதாரம் என்பதும் மகாபலி வதம் என்பதும் என்றோ நடந்துவிட்ட ஒன்றல்ல, ஓணம் பண்டிகையோடு மட்டும் நினைவுக்கு வரும் ஒன்றல்ல. ஒவ்வொருவரின் மனமும் அனுதினமும் நன்மைக்கும் தீமைக்கும் இடையே அப்போராட்டத்தை ஒவ்வொரு நொடியும் நிகழ்த்துகின்றது. அதில் பல நேரம் அகங்காரம், ஆணவம், ஆசை போன்றவையே ஆள்கின்றன.
அதில் மனிதன் மிருகமாகின்றான், #அசுரகுணம் கொண்டு மற்ற எல்லோரையும் வதைக்கின்றான். இந்த #சுக்கிராச்சாரி என்பது மனதின் மாயை, இல்லாத ஒன்றை இருப்பதாக கருதி மாயை செய்யும் காட்சி அது. அந்த பேராசை மாயையே மனதை தூண்டி மனதின் தீய பக்கத்தை தூண்டி மண், பொன், பெண், பணம், புகழ் என அவனுக்கு வழிகாட்டி அவனை வீழ்த்துகின்றது.
ஆனால் எல்லா மனிதனுக்குள்ளும் மனசாட்சி உண்டு அல்லது ஏதோ ஒரு நல்ல குணம் சிறிதளவு தர்மம் உறங்கி கொண்டிருக்கும். அவன் அதில் மாயையினை மீறி, அதாவது சுக்காராச்சாரி வண்டாக மாறி தடுத்தும் அதை தாண்டி வாமணனை நெருங்கிய #மகாபலி போல பகவானை சரண்டைந்தால் போதும்.
அந்த மிக சிறிய தர்ம குணம், நல்ல குணம் விஸ்வரூபமாய் நம் மனதை ஆக்கிரமிக்கும். அதில் அந்த ஆசை, கோபம், காமம், மயக்கம் போன்ற மாயைகள் விலகி மனம் கோவிலாகும், ஆத்மா புனிதமாகும்
மாயையினை வென்ற மனம் கடவுளாகும், அந்த மனிதனை ஒவ்வொருவரும் கோலமிட்டு வரவேற்பர், பொன்னூஞ்சலில் ஆட்டுவர்.
ஆம், மாயையினை வென்றவனை, இறைவனின் பாதம் சரண்டைந்தவனை, அகந்தையினை அழித்தவனை உலகம் கொண்டாடும். இந்த தத்துவத்தைத்தான் மகாபலியின் ஓணம் போதிக்கின்றது.
இது இந்திய தத்துவ விழா, ஞான மரபின் கொண்டாட்ட விழா, பகவான் நம் ஒவ்வொருவரையும் அகந்தை அழித்து காக்க வேண்டும் என வேண்ட வேண்டிய விழா. இந்த விழா ஒவ்வொருவரும் மாயையினை வெல்ல வேண்டும் என்றும், மனிதனுக்கு அரசமுடி தேவையில்லை, அவன் தலையில் சுமக்க வேண்டியது பகவானின் பாதங்களையே என்பதை சொல்லும் விழா.
மகாபலியின் வாழ்வினை #கர்ணன் வாழ்வில் காணலாம், நாயன்மாரில் கூற்றுவ நாயனாரில் காணலாம்
அகந்தை ஒழிப்பே ஞானத்தின் தொடக்கம், தெளிவின் முதல் படி, ஆத்மாவின் தெளிவு என்பதை சொல்லும் காட்சிகள் இவை.
ஆம், மலையாளிகள் மட்டுமல்ல இத்தேசத்தின் தெய்வீக ஞானமரபினை, இந்த மண் சொல்லிய மிகபெரிய தத்துவத்தை, அராஜகம் அத்துமீறினால் தெய்வம் இறங்கிவந்து அதை சரிசெய்யும் எனும் மாபெரும் நம்பிக்கையினை கொடுக்கும் இந்த விழாவினை ஒவ்வொரு இந்தியனும் கொண்டாடலாம்
அதனை கொண்டாடும் எல்லோருக்கும் இனிய ஓண பண்டிகை வாழ்த்துக்கள்..
ஸ்டான்லிராஜனின் முகநூல் பதிவு
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் விதம் :
ஓணம் பண்டிகை கேரளாவில் மலையாள மக்களால் மிகப்பெரிய திருவிழாக்களில் மிக முக்கியமானது. இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என தொடர்ச்சியாக வரும் 10 நட்சத்திர தினங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
தமிழர்களை இதை எளிதாக நினைவில் கொள்ள வேண்டுமெனில், ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
ஓணம் கொண்டாடும் முறை :
10 நாள் திருவிழா :
இந்த ஓணம் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமாகி, பெண்கள் கசவு எனும் வெள்ளை நிற புடவையை உடுத்துவது வழக்கம்.
அஸ்தம், சித்திரை, சுவாதி ஆகிய மூன்று நட்சத்திர தினத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக்கொள்வர்.
4வது நட்சத்திரமான விசாகத்தில் ஒன்பது சுவை உணவுகளை தயார் செய்து உற்றார், உறவினர் என அனைவரும் கூடி உண்டு மகிழ்கின்றனர். குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகைகள் இந்த பட்டியலில் இடம்பெறுவது வழக்கம். இந்த உணவை சாத்யா என அழைக்கின்றனர்.
அனுஷன் எனும் 5ம் நாள் அனிளம் என அழைக்கின்றனர். இந்த நாளில் பாரம்பரிய படகுப் போட்டி நடத்தப்படுகின்றது. இந்த படகுப் போட்டியில் பங்குபெறுவோர் வஞ்சிப்பாட்டு எனும் பாடலைப் பாடிக்கொண்டே உற்சாகத்துடன் படகை விரைவாக செலுத்துவது வழக்கம்.
குரு பகவான் ஆலயம்: அருள்மிகு சதாசிவ மூர்த்தி திருக்கோயில் புளியரை
ஆறாவது நாளில் திருக்கேட்டை, ஏழாம் நாள் மூலம், 8வது நாள் பூராடம், அடுத்து உத்திராடம் என அழைக்கப்படுவதோடு, 10ம் நாள் திருவோணம் என மிகச் சிறப்பாக ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துடன் முடிவடைகிறது.
10வது நாளில் மக்கள் ஆலயங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.
ஓணம் கொண்டாட்ட நாட்கள்:
2020ம் ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கி செப்டம்பர் 2ம் தேதி வரை என 10 நாட்கள் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய ஓணம் தினமாக ஆகஸ்ட் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.
அத்தப்பூ கோலம் :
அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் ஓணம் பண்டிகை வண்ண அத்தப் பூக்களால் கோலம் போட்டு தொடங்கப்படுவது வழக்கம்.
இந்த 10 நாட்களிலும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக மக்கள் அத்தப்பூ கோலமிட்டு வீட்டைப் பொழிவாக வைப்பது வழக்கம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
.
தமிழகத்தில் நவராத்ரி /தீபாவளி/பொங்கல் போல்
மகாராஷ்டிரா/கர்நாடக பிள்ளையார் சதுர்த்தி போல்
கேரளத்தில் ஓணம் மிக முக்கியமான பண்டிகை.
இதை ஒட்டி நடக்கும் படகு போட்டியை பார்க்கும்போது
இவர்களை முறையாக பயிற்சி கொடுத்து ஒலிம்பிக்கிற்கு தயார் பண்ணலாம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
சங்க இலக்கியத்தில் ஓணம் பண்டிகை!
மக்களை ஒன்றிணைக்கும் பாலமாகவே பண்டிகைகள் கொண்டாடப் பெறுகின்றன. பண்டிகைகள் பலவற்றுள் 'ஓணம்' பண்டிகையும் ஒன்று. கேரளாவில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பெறும் இவ்வோணம் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்த(ஹஸ்த) நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரம் வரை பத்து நாள்களும் நடைபெறுகிறது. இன்று கேரளாவில் மட்டும் மிகச் சிறப்பாக நடைபெறும் இவ்வோணம் பண்டிகை, பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டில் குறிப்பாக, மதுரையில் நடைபெற்றுள்ள செய்தியை சங்க இலக்கியம் சுட்டுகிறது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையை ஆண்டபோது, அங்கு திருவோணத் திருவிழா நடைபெற்ற செய்தியை மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விரிவாகப் பாடியுள்ளார். ஆவணி மாதம் நிறைமதி நன்னாளான திருவோணத்தன்று திருமால் பிறந்ததாகவும், அதனை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி விழாக் கொண்டாடியதாகவும் குறிப்பிடுகிறார். இதனை,
"கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நல் நாள்,
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை,
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப் படு நெற்றி,
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர'' (ம.கா.590-599)
என்ற மதுரைக்காஞ்சி பாடலடிகள் மெய்பிக்கின்றன. ஓண நன்னாளன்று காய்கறி, கனி முதலிய உணவுப் பொருள்களை விருந்தினருக்குக் கொடுத்து மகிழ்ந்திருந்தனர். வீரர்கள் "சேரிப்போர்' என்னும் வீர விளையாட்டை நிகழ்த்தினர் என்றும், வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பசுக்களைப் பாண்டிய மன்னன் வழங்கினான் என்றும் மதுரையில் நடைபெற்ற ஓணம் பண்டிகையை விளக்கியுள்ளார் மாங்குடி மருதனார்.
இறையனார் களவியல் உரைக்காரர் நக்கீரர், தமிழ்நாட்டில் நடைபெற்ற திருவிழாக்களைக் கூறுமிடத்து ""மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப் பங்குனி உத்திரமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும்'' என்று குறிப்பிடுகிறார். இவர் குறிப்பிடும் மதுரை ஆவணி அவிட்டம், திருவோணத் திருவிழாவையே குறிப்பதாக மு.இராகவையங்கார் கருதுகிறார்.
தமிழ் நாட்டில் நடைபெற்ற ஓணம் பண்டிகையைப் பெரியாழ்வாரும் திருஞானசம்பந்தரும் குறிப்பிடுகிறார்கள். திருமாலுக்கு உரிய நாள் திருவோணம் என்ற போதிலும், சென்னை - மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் திருவோண விழா நடைபெற்ற செய்தியை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார்.
தமிழகத்தில் பண்டைக் காலத்தில் சிறப்பாக நடைபெற்ற இந்த ஓணம் பண்டிகை, பின்னர் ஏனோ வழக்கொழிந்து போயிற்று. ஆனால், இன்று ஓணம் பண்டிகை கேரளா முழுவதும் விழாக் கோலம் பூண்டு இன்பத் திருவிழாவாகக் கொண்டாடப்பெற்று வருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கானம் விற்றாவது ஓணம் உண்
தமிழ்நாட்டில் சித்திரைத் திருநாள் போலவே, கேரளத்தில் (நம்முடைய ஆவணி மாதத்தை) சிங்கம் என்பார்கள். சிங்கம் மாதம்தான் முதல் மாதமாகவும் இருக்கிறது. சாதி, மதம், மொழி கடந்து கேரளத்தில் இருக்கும் அத்தனை மக்களாலும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் வண்ணமிகுப் பண்டிகைதான் ஓணம் பண்டிகையாகும். நம்மூர் தீபாவளி போலத்தான் ஓணம் பண்டிகையையும் கொண்டாடப்படுகிறது.
"கானம் விற்றாவது ஓணம் உண்" (கானம் - நிலம்) என்ற பழமொழி ஓணம் பண்டிகைக்காக இருக்கிறது. ஒணம் பண்டிகை எதனால், எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாற்றை முதன் முதலில் தெரிந்துகொள்வோம்.
ஓணம் திருவிழாவில், அத்தப்பூக் கோலம் கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டின் முன்பும் போடுவார்கள். அத்தப்பூக் கோலம், மகாபலி மன்னனை வரவேற்கத்தான் அந்த அத்தப்பூக் கோலம் போடப்படுவதாக ஐதீகம். ஆவணி மாதத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும். அதனால், ஓணம் பண்டிகையை பூக்களின் திருவிழாவாகவும் கொண்டாடுகிறார்கள். மேலும், ஒவ்வொரு வீட்டின் ஆண் மகனும், அத்தப் பூவைப் பறித்துக் கொண்டு வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் அத்தப் பூவைத்தான், கோலத்தின் நடுவில் வைக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.
இதில், இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. முதல் நாள் ஒரே கலரில்தான் பூக்கள் வைக்கப்படும். இரண்டாவது நாள் இரண்டு கலரில், மூன்றாவது நாள் மூன்று கலர், நான்காவது நாள் நான்கு கலர் என 10 நாட்களும் 10 வகையில் பூக்கள் வைக்கப்படும். 10 ஆவது நாள் 10 விதமான பூக்களையும் வைப்பார்கள்.
சிவன் கோயில் ஒன்றில் விளக்கு அணையும் நிலையில் இருந்துள்ளது. அப்போது கோயிலுக்குள் எலி ஒன்று நுழைந்துள்ளது. அந்த எலி அங்கிருந்த விளக்கின் மீது ஏறி, அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்துள்ளது. அப்போது எலியின் வால், திரியின் மீது பட்டு தூண்டப்பட்டது. இதனால், அந்த விளக்கு மிகவும் பிரகாசமாக எரியத் தொடங்கியுள்ளது. தன்னையும் அறியாமல் செய்த இந்த நற்காரியத்திற்காக அந்த எலியை, அடுத்தப் பிறவியில் சக்கரவர்த்தியாகப் பிறக்க சிவபெருமான் அருள் புரிந்தார். தெரியாமல் செய்யும் நல்வினைக்கும் கடவுளின் அருள் மிகப் பெரியதாக அமையும் என்பதையே இந்தப் புராணம் உணர்த்துகிறது.
சக்கரவர்த்தியாகப் பிறந்து நாடு போற்றும் அளவுக்கு இருந்த அந்த சக்கரவர்த்தியைத்தான், மஹா விஷ்ணு ஆட்கொண்டு அருள் புரிந்து உலகம் போற்றும் விதமாக அந்த நாளையே, கேரள மக்கள் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். சிங்கம் மாதத்தின் அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் தொடர்ச்சியாக இந்த திருவிழா கேரள மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஓணம் பண்டிகைக்கு ஆறு சுவைகளில் கசப்புத் தவிர மற்ற சுவைகளில் 64 வகையான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வார்கள். அதில், புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன்,பால் பாயாசம், அரிசி சாதம், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய், அவல் பாயாசம், மாவு பாயாசம் என ஏராளமான உணவு வகைகளைச் செய்வார்கள். எல்லா உணவுகளிலும் தேங்காய் நிச்சயமாக சேர்க்கப்பட்டு இருக்கும். சாப்பிடப்படும் உணவுகள் செரிப்பதற்காக இஞ்சிப்புளி, இஞ்சிக்கறி சேர்க்கப்படுகிறது.
பருவ மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமையும், செழுமையும் நிறைந்து காணப்படும் சிங்கம் மாதத்தை கேரள மக்கள் "அறுவடைத் திருநாள்" என்றும் போற்றி வழிபடுகிறார்கள். முந்தையக் காலங்களில் ஓணம் பண்டிகை தினம் அறுவடைத் திருநாளாகவே கொண்டாடப்பட்டு வந்துள்ளதாகவும் வரலாற்றுச் சிறப்புகள் தெரியப்படுத்துகின்றது. ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் விடியற்காலையில் எழுந்து குளித்து வழிபாடு செய்வார்கள். அன்றைய நாள் கசவு என்று சொல்லக் கூடிய சுத்தமான வெள்ளை நிற ஆடையைத்தான் உடுத்துவார்கள்.
மேலும், பெண்கள் அனைவரும் வீட்டின் முன்பு பல வகையான பூக்களைக் கொண்டு அழகழகான கோலங்களைப் போடுவார்கள். சின்னக் குழந்தைகள் ஊஞ்சல் கட்டி ஆடுவார்கள். ஓணம் பண்டிகையின் போது கேரளத்தில் படகுப் போட்டிகள் நடத்துவர். இந்தப் படகுப் போட்டி விசேஷமாக இருக்கும். ஓணம் பண்டிகையின் போது பல்வேறு விதமான வகைகளில் உணவுகள் தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுத்து மகிழ்ச்சி அடைவார்கள்.
உணவு வகைகளில் பாயாசத்தின் வகையே 10 விதமாக இருக்கும். ஓணம் பண்டிகை கொண்டாடி, பெருமாளை வணங்கினால், பணிவும் குணமும் வளரும். செல்வமும் செழித்து உயர்வடைவார்கள்.
கேரளத்தில் உள்ள திருக்காட்கரை என்ற இடத்தில்தான் ஓணம் பண்டிகையுடன் தொடர்புடைய கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலில் மஹாவிஷ்ணு, வாமன அம்சமாக எழுந்தருளியிருக்கிறார். அவர் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களுடன், சங்கு, சங்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றை ஏந்தியபடி நிற்கும் இந்தப் பெருமாளை "திருக்காட்க்கரை அப்பன்" என்று அழைப்பார்கள். பெருஞ்செல்வநாயகி, வாத்சல்யவல்லி என்பதுதான் தாயாரின் திருநாமங்களாகும்.
மேலும், இந்தக் கோயிலில் சாஸ்தாவிற்கும், மஹாலெஷ்மிக்கும் தனித்தனியாக சன்னதிகள் இருக்கிறது. கேரளப் பகுதியில் அதிகமாக விளையும் அதிக சுவையுள்ளது நேந்திரம் வாழைப்பழம். நேந்திரம் வாழைக்கும், திருக்காட்க்கரை கோயிலுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அப்பகுதியின் விவசாயி ஒருவர் தனது வயலில் வாழை மரங்கள் பயிரிட்டு வந்துள்ளார். ஆனால், அந்த மரங்கள் வளர்ந்ததும் எந்தப் பலனையும் தரவில்லை. அழிந்தும் போய் விட்டது. இதுபோல் பல முறை நடந்து விட்டதால் அந்த விவசாயி மனம் உடைந்தார். உடனே அந்தப் பக்தர் தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு வாழைக்குலையை திருக்காட்க்கரை அப்பனுக்குச் சார்த்தினார். தனது குறையைச் சொல்லியும் அழுதுள்ளார்.
பக்தரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பெருமாள், அருட்பார்வையை வாழை மரத்தின் மீது செலுத்தினார். அதன்பிறகு, வாழை மரங்களில் குலை குலையாக காய்த்துத்தள்ளியது. பெருமானின் நேந்திரங்களின் (நேந்திரம் என்றால், கண் பார்வை என்று அர்த்தம்) அருட்பார்வை பெற்று செழித்து வளர்ந்த வாழைக் குலைகள், அன்று முதல் ''நேந்திரம் வாழை" எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டது. காலப்போக்கில் நேந்திரம் என அழைக்கப்பட்டு வருகிறது.
பெருமாளை நேர்ந்து கொண்டு இந்த நேந்திரம் வாழைப்பழத்தை படைத்தால் நேர்ந்தது நேர்ந்த படியாக நடக்கும். கேரள விழாக்களில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை யானைகளுக்கு என தனி இடம் இருக்கிறது. ஓணம் திருவிழாவில் யானைத் திருவிழா என்றே ஒரு நாள் திருவிழா நடத்தப்படுகிறது. 10 ஆம் நாளான திருவோணம் அன்று, விலை உயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன கவசங்களாலும், பூ தோரணங்களாலும் யானைகள் அலங்காரம் செய்து, வரிசையாக நகரத்தின் வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு வருவார்கள். மேலும், கேரளத்தின் பாரம்பரிய விளையாட்டுக்களான கயிறு இழுத்தல், களறி, படகுப் போட்டிகள் என 10 நாட்களும் பல்வேறு விதமான போட்டிகளும் நடத்தப்படும்.
படகுப் போட்டியில் அனைவரும் மலையாளப் பாடலைப் பாடிக் கொண்டே துடுப்பை முன்னும், பின்னும் செலுத்துவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் நிச்சயமாக ஒரு தடவையாவது ஓணம் பண்டிகையின் போது 10 நாள்கள் கேர்ளத்தில் தங்கி, ஓணம் திருவிழாவைப் பார்க்க வேண்டும். கேரள மக்கள் உட்பட ஓணம் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் ஓணம் திருவிழா நல்வாழ்த்துக்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்